Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-10

அத்தியாயம்-10

அவன் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டை அடியாய் வந்து விழுந்தது..நிற்க வைத்து கேள்வி கேட்பது என்பது இது தான் போல..

“சொல்லு,இங்க வந்துட்டு, நீ சுடிதார் தவிர வேற ட்ரஸ் போட்டு பார்க்கல..வீட்டை விட்டு வெளிய சுத்தி பார்க்க போனும்னு சொல்லல,அம்மா கூட சமையல் அறையில இருந்து சமையல் கத்துக்குற..பொறுப்பா. அதுவும் எனக்கு பிடிச்சதை, பார்த்து பார்த்து செய்யுற..நான் எங்க போனாலும்,உன் பார்வை என்னையே சுத்துது ஏன்??”

‘அவன் கேட்பது நியாயம் தானே,அவன் காட்டிய புகைப்படம் ஒன்றில் கூட, அவள் முழு உடையில் இல்லை..போதா குறைக்கு, பல ஆண்களுடன், நெருக்கமாய் வேறு இருக்கிறாள்..



Advertisement

இத்தனையும் பார்த்த பிறகு,அவள் இப்பொழுது நடந்து கொள்வதை எப்படி நம்புவான்.இத்தனை நாள், அவன் அவளை நடத்திய விதம்,பார்வை,கேள்விகள்,பேச்சு, அனைத்திற்கும் அர்த்தம் புரிந்தது.கடைசி இரு நாட்கள் அவளோடு நன்றாய் பேசியதற்கும் கூட..அவளை, அவனுடன் வர வைப்பதற்கு….??’

செயல் அற்ற நிலையில் நின்றாள் மது..

“சொல்லு டி.. பதிலுக்கு பதில் பேசுன, இப்போ, வாய் அடைச்சு போய் நிற்குற.. இப்போ சொல்லு,வினோத் மட்டும் எனக்கு தெரியும்..மீதி பேர் பேராவது உனக்கு தெரியுமா??இல்ல அவங்களையும், கை கழுவுன கையோட மறந்துட்டியா..??”

Advertisement

தன் காதுகளை, இரு கரங்களால் மூடியவள்..

Advertisement

“போதும்,ப்ளீஸ்..”

“என்னடி ப்ளீஸ்..??இதுக்கு பதில் சொல்லு..இப்போ  என் கிட்ட என்ன எதிர் பார்க்கிற??நிச்சயம் மனசு இல்லை.. உன்னை பொறுத்த வரை, மனசுக்கு மதிப்பு இல்லைன்னு, நான் பார்த்த போட்டோவே சொல்லுதே.வேற என்ன தேவை சொல்லு..”

“ப்ளீஸ் ராஜா..”

Advertisement

“ஏய்,பேரை சொன்ன, பல்லை உடைச்சுடுவேன்..”

“அப்போ மாமான்னு கூப்பிடவா..??”

“அதுக்கு கூட, உனக்கு தகுதி இல்லை.. இப்போ சொல்லு, என்ன தேவை உனக்கு..??”

“எனக்கு நீங்க தான் வேணும்..”

ஒரு வேகத்தில்  கத்தி விட்டாள்..

“நினைச்சேன்,உனக்கு என்ன தேவைன்னு தெரியும். அதை உன் வாயால கேட்கணும்ன்னு  தான், இவ்ளோ நேரம் எதிர் பார்த்தேன்..
எனக்கும், உன்னை பிடிச்சிருக்கு..”

ஒரு நொடி முகம் மலர்ந்தாள்.

“நீயும் அழகா தான் இருக்க..எனக்கும் இதுல எந்த ஆட்சேபனையும் இல்ல..மத்த ஆண்கள் மாதிரி..
என்னை கழட்டி விட, நீ கஷ்ட பட தேவையில்லை..நானே பை சொல்லிடுவேன்..
என்ன சரியா??”

 

[the_ad id=”6605″]

 

கூறிய படி, அவள் தோளில் கை வைத்தான்..

அவன் பேசி முடிக்கும் வரை, என்ன பேசுகிறான் என புரியாமல் விழித்தவள், இவள் தோளில் அவன் கை வைத்ததும், அவன் கூற வருவது புரிந்து,
வேகமாய் கையை தட்டி விட்டாள்..

“என்ன மா..நான் வேண்டாமா உனக்கு..??”
ஏளனமாய் கேட்டான்..

“இங்க பாருங்க,நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க..நான் சொன்ன அர்த்தம் வேற..நீங்க அப்படின்னா, உங்க மனசு,உங்க காதல்,உங்க அன்பு,உங்க பாசம் இப்படி எல்லாம்..நீங்களும் நானும் காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கனும்..அதான், நீங்க அப்படின்னு  நான்
சொன்னதுக்கு அர்த்தம்..”

கேலியாய் புன்னகைத்தவன்,
“இதை, என்ன நம்ப சொல்லுறியா??”

“நீங்க நம்புனாலும், நம்பாட்டியும், இதான் நிஜம்..நான் உங்களை விரும்புறேன்..உங்களை மட்டும் தான் விரும்புறேன்..விரும்புவேன்..இதுல, எந்த காலத்திலும் மாற்றம் இல்லை..”

“அப்போ  அந்த போட்டோஸ்,வெறும் தோழமையா??அவ்ளோ நெருங்கிய தோழமையோ..??இல்லைன்னா, ஒரு வேளை  அதெல்லாம் கிராபிக்ஸ், அப்படின்னு சொல்ல போறியா??கம்ப்யூட்டர் படிச்சவளாச்சே..சொன்னாலும் சொல்லுவ..எதுக்கு  நீ சிரம படனுமுன்னு, நானே சொல்லிட்டேன்..”

பதில் பேசாமல், மௌனியாய் இருந்தாள்..

“பதில் சொல்லுடி..”

அவன் கத்தலில், உடல் தூக்கி போட,
“நான் யாரையும் காதலிக்கல,ஏமாத்தலை..”

ஓங்கி அறைந்தான் அவளை,அதில் தடுமாறி, கீழே விழுந்தாள்..“திரும்ப,திரும்ப பொய் சொல்லுற..உன் கிட்ட பழகுனவுங்க மாதிரி, ஏமாளின்னு நினைச்சியா??என்னை..எல்லாம் பண்ணிட்டு,கடைசில பிரெண்ட்ஸ்ன்னு சொல்லி, கழட்டி விட..தொலைச்சுடுவேன் ராஸ்கல்..

உண்மையை ஒத்துக்கிட்டு, ஆமா நான் தான் செஞ்சேன்னு  சொல்லி இருந்தா கூட, திமிர் பிடிச்சவன்னு சொல்லி, தொலைஞ்சு போன்னு விட்ருவேன்.. நீ பொய் சொல்லுற..

எனக்கு அறவே பிடிக்காத  ரெண்டு விஷயம், ஒன்னு பொய், இன்னொன்னு  நம்பிக்கை துரோகம்..யார் பண்ணாலும்  எனக்கு பிடிக்காது..”

கண்ணில் பயத்துடன்  அவனை பார்த்தாள்..

“உன்னால, என் பிரெண்ட்  மென்டல் ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கான்.நீ  அவனை தெரியாதுன்னு சொல்லுற..”

“அச்சோ, என்ன ஆச்சு அவருக்கு..??”

அவள் கூந்தலை பிடித்து தூக்கியவன்,
“அவனை பத்தி  உனக்கு என்ன கவலை??விட்டுட்டு போய்ட்டு.. இப்போ மட்டும் விசாரிக்கிற.. இப்போ தெரியுதா அவனை..??”

கண்களை மூடித் திறந்தவள்,
“இப்போவும் சொல்லுறேன்..நான் யாரையும் காதலிக்கல,உங்களை தவிர..”

“திரும்ப திரும்ப, பொய் சொல்லுற..”
கண்கள் சிவக்க, பல்லை கடித்தவன்..

வேகமாய்  அவள் ஷாலை உருவினான்..
அவன் நோக்கம் புரிந்து, வேகமாய் ஓடினாள்..

 

[the_ad id=”6605″]

 

அவனும், அவளை துரத்தினான்..
அவன் வேகத்துக்கு, அவளால் ஓட முடியவில்லை..முடிந்த வரை ஓடியவள், கல் இடறி விழுந்தாள்..

அதற்குள்  அவளை அடைந்தவன், கண்கள் ஜொலிக்க,
“எதுக்கு  இவ்ளோ சீன் போடுற.??.ஓடி பிடிச்சு விளையாடி,இதெல்லாம் உனக்கு புதுசா என்ன??என் கிட்ட நல்ல பேர் வாங்க  இப்படி செய்யிறியா??அப்படின்னா, டூ வேஸ்ட்..எனக்கு உன்னை பத்தி, நீ வரும் முன்னவே தெரியும்..என் கிட்ட  இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்க தேவை இல்லை..

இப்போ  ஓகே வா.. நீ ரெடியா.??.இந்த கேம் அஹ் முடிச்சுகுவோம்..
உனக்கு நான் தேவை, எனக்கு நீ.. அவ்ளோ தான்.”
தோள்களை குலுக்கினான்..

“வேண்டாம்..நீங்க நினைக்குறது எல்லாம் தப்பு..ஒரு நாள்  உங்களுக்கே புரியும்..அப்போ வருத்தப்படுவீங்க..”

“அப்போ பார்த்துக்கலாம்..அதை..”

“உங்களை  என் மனசுல  ரொம்ப உயர்வா நினைச்சுருக்கேன்..அதை நீங்களே  தாழ்த்திக்காதிங்க..”

“உன் மனசுல, நான் எப்படி இருந்தா என்ன??என் மனசுல  நீ மட்டமா பதிஞ்சு, பல நாள் ஆச்சு…”

கண்ணில் நீர் வர, இவனிடம் என்ன சொல்லி தப்பிப்பது என மூளை மரத்து போன நிலையில், சிந்திக்க மறந்து இருந்தவள் மேல், பாய்ந்தான் ராஜா..

அப்பொழுது தான்,தன்  உணர்விற்கு வந்த மது, தன் பலம் கொண்ட மட்டும் அவனை தள்ள முயன்றாள்..இம்மியும் அசைக்க முடியவில்லை..
அவனை தாக்கவும்,  அவள் காதல் கொண்ட மனம்  இடம் தரவில்லை.

‘மது, இப்பொழுது நீ நெகிழ்ந்தாள், தோற்று விடுவாய்..பிறகு  உன் வாழ்நாள் முழுவதும், உன் காதலில் ஜெயிக்க முடியாது..முறை இல்லாமல் உன்னை தொட அனுமதிக்காதே.. விலகு, அவனை விலக்கு.. ஏதாவது சொல்லி விலக்கு..’

மனதின் அச்சுறுத்தலில், வேகமாய் யோசித்து,

“நான், தப்பானவளாவே இருந்துட்டு போறேன்..நீங்க உத்தமரா..??”

அவள் கேள்வியில், ஒரு நிமிடம் செயல் அற்று இருந்தான்..

அதை பயன்படுத்திக் கொண்டு,
“சொல்லுங்க. நீங்க உத்தமரா??”

“ஆமாம் டி.. நான் உத்தமன் தான்.. அதிலே என்ன சந்தேகம்..??இதுவரை என் நிழல் கூட, எந்த பொண்ணு மேலேயும் பட்டதில்லை..”

அவன் பதிலில் மனம் குளிர்ந்தாலும்,

“அப்போ,நீங்க இப்போ பண்ணுறதுக்கு பேர் என்ன??இப்படி தான்  உங்க அம்மா, உங்களை வளர்த்தாங்களா??”
அவள் கேள்வியில், கண்ணில் கனல் பறக்க,

“ஏய்,யாரை பத்தி பேசுறோம்னு, யோசிச்சு பேசு..என் அம்மாவை பத்தி, பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத..”

“ஓ..உங்க அம்மா உங்களுக்கு உயர்வு..அது போல தானே  மத்த பொண்ணுங்களும்.. இப்போ  என் கிட்ட  இப்படி நடந்துக்கிட்டேன்னு,உங்க அம்மா கிட்ட சொல்ல முடியுமா??இல்லை, உங்க வருங்கால மனைவி கிட்ட சொல்ல முடியுமா??இது அவளுக்கு செய்யுற துரோகம் இல்லியா??”

வேகமாய்  அவளை விட்டு விலகி எழுந்தான்..அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்..

‘என்ன காரியம் செய்ய இருந்தேன்..ஒரு நொடியில், என் அன்னையின் வளர்ப்பை  பாழ் படுத்தி இருப்பேன்..அப்படி செய்து விட்டு, பிறகு எப்படி  அவர் முகத்தில்,  எந்த குற்ற உணர்வும் இன்றி விழிப்பேன்..

இவளிடம் கூறிய காரணம் போல, அவரிடம் கூற முடியுமா??இவளுக்கு தண்டனை கொடுக்க  அப்படி செய்தேன் என்று கூறினால்,அதற்கு உனக்கு என்ன உரிமை என்று, என் முகத்தில்  காறி உமிழ்வார்கள்..நீ செய்த தவறிற்கு..நியாயம் கற்பிக்கிறாயா?? என கேட்பார்கள்..

இனி வாழ்நாள் முழுவதும், என் முகத்தில் கூட விழிக்க மாட்டார்கள்..
அன்று  அவளை அறைந்ததற்கே, அவ்வளவு கோப பட்டவர்கள்..

இன்று  இது வரை நடந்ததை கூறினாலே, அவன் முகத்தில்  விழிப்பது கூட சந்தேகம் தான்…
அவளை குறை கூறி விட்டு, அதே தப்பை  நான் செய்தால், நியாயம் ஆகி விடுமா??’

மனம் சற்று தெளிந்தவன், நிமிர்ந்து பார்த்தான். அங்கு  மதுவை காணவில்லை..

சுற்றிலும் பார்த்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  அவளை காணவில்லை..

‘எங்கு போனாள்??இந்த காட்டு பகுதியில்  அவளை தேடுவது கடினம்..அதோடு, போன் சிக்னல் வேறு  சரியாய் கிடைக்காது..அவள் கையில் மொபைல் கூட  கொண்டு வர வில்லை..காரில் வைத்து விட்டு இறங்கி விட்டாள்..’

மூளை வேகமாய் சிந்திக்க..
‘அவளை  இங்கு கூட்டி வந்ததே தவறு..பிடிக்கவில்லை எனில்,  ஒதுங்கி போய் இருக்கலாம்..இப்படி நடந்து கொண்டு..’
தலையில் அடித்துக் கொண்டவன்..

“மது,மது எங்க இருக்க??மது, எதுவும் செய்ய மாட்டேன். வந்துடு ப்ளீஸ்..”
கத்தி கொண்டே ,அந்த காட்டுக்குள் சுற்றினான்..

ஒரு நிலைக்கு மேல்  நம்பிக்கை இழந்து,அப்படியே  தரையில் மண்டியிட்டு  அமர்ந்தான்..

அவளை,  இவ்வாறு செய்ய வேண்டும் என்று நினைத்து, கூட்டி வரவில்லை அவன்..சற்று மிரட்டி விட்டு, சீக்கிரம் அவளை, அவள் ஊருக்கு  அனுப்பி விடும் எண்ணத்தில், கூட்டி வந்தான்..

ஒரு நிலையில், அவன் கோபம் எல்லையை கடக்க,அவன் ஆழ் மனதில்  அவள் மேல் இருந்த ஈர்ப்பு.மாமன் மகள் என்னும் உரிமை உணர்வு.இவ்வாறு நடந்து கொள்ள வைத்து விட்டது..இப்பொழுது
செய்வது அறியாமல், செயல் அற்று அப்படியே அமர்ந்திருந்தான்..

 

[the_ad id=”6605″]

 

‘அம்மாவுக்கு  என்ன பதில் சொல்வேன்..??அவள் இல்லாமல் எப்படி இங்கிருந்து செல்வேன்..??வந்து விடு மது, ப்ளீஸ்..இனி இவ்வாறு செய்ய மாட்டேன்..’

திருவிழாவில் குழந்தையை தொலைத்த  தாயின் மனநிலையில்,
மனதோடு புலம்பியவன்.இரு கைகளிலும் தலையை தாங்கி, கை முட்டியை கால் தொடையில் ஊன்றி, மண்டி போட்டு அமர்ந்திருந்தான்..

சில நிமிடங்களில், அவள் தோளில் யாரோ  தொடும் உணர்வு.வேகமாய் நிமிர்ந்து பார்த்தான்.. மது நின்றிருந்தாள்..

வேகமாய் எழுந்தவன்,
“மது,மது எங்கடி போன??”
அவள் இரு பக்க தோள்களையும் பிடித்து  உளுக்கினான்..

அவன் கண்களில் கண்ணீர்.அவள் கண்களும்  கலங்கி இருந்தது..

“வீட்டுக்கு போலாமா??”

அவள் கேள்வியில், சுற்று புறம் பார்த்தான்..இருட்ட ஆரம்பித்து இருந்தது..

“வா போலாம்..”
அவள் கையை பிடித்து  அழைத்து சென்றான்..காரை நெருங்கியதும், அவளை திரும்பி பார்த்தவன்..வேறு புறம் பார்த்தவாறு,

“டிரஸ் மாத்திக்கோ..”

அவன் கூறிய பின் தான் குனிந்து, தன் உடையை பார்த்தாள்.. தோள் பகுதி கிழிந்து போய், அங்கு அங்கு சேரு சகதி எல்லாம் ஒட்டி, பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது..

இங்கு வரும் போது, ஓடையில் குளித்தால்   உடை ஈரமாகி விடும்.வேறு உடை கொண்டு செல் என,  மரகதம் கூறி இருந்த படியால்,இன்னொரு உடை  கொண்டு வந்திருந்தாள்..

காரை திறந்து  அதை எடுத்தவள்,எங்கு மாற்றுவது என தயங்கி நின்றாள்..

“அந்த பாறைக்கு பின்னாடி போய் மாத்து.. ரொம்ப உள்ள போகாத..இருட்டி போயிடுச்சு..பூச்சி பொட்டு ஏதும் இருக்கும்..”

இன்னும் போகாமல், அவனை பார்த்த படி நின்றாள்..

அவள் எண்ணம் புரிந்து,
“இனி  உன் அனுமதி இல்லாம,என் நகம் கூட  உன் மேல படாது.. போ..”

கூறிவிட்டு, வேகமாய் காரின் உள்ளே, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

அதன் பின்,  அவன் கூறிய படி  உடை மாற்றி வந்தவள்,மறுபக்கம் அமர்ந்தாள்..

அவளை திரும்பி பார்த்தான்..
இன்னும்  கார் சொல்லவில்லையே என, இவளும் அவனை திரும்பி பார்த்தாள்..

அவள் இடது கன்னம்  சிவந்து வீங்கி இருந்தது..
ஒரு ஆய்ன்மெண்டை எடுத்து  அவளிடம் கொடுத்தவன்..

“இதை போடு கன்னத்துல..”

ஆச்சர்யமாய்,  அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
பார்வையை  வேறு புறம் திருப்பியவன்,

“அம்மா பார்த்தா, எப்படி ஆச்சுன்னு கேட்பாங்க..”

அதற்கு தான் தருகிறேன்  என்னும் வார்த்தைகள்,  அதில் தொக்கி நின்றது..

ஒன்றும் கூறாமல்  அதை வாங்கியவள், போட்டுக் கொண்டாள்..
இன்னும்  கார் செல்லாமல் நின்றது..

‘இன்னும் என்ன??’
கேள்வியோடு, அவன் முகம் பார்த்தாள்..

தொண்டையை செருமியவன், வேறு புறம் பார்த்துக் கொண்டே,
“அம்மா கிட்ட, இங்க நடந்ததெல்லாம் சொல்ல வேண்டாம்..எதைன்னு புரியும்னு நினைக்கிறன்..”

‘ஏன், அதையும் நீயே சொல்லேன்..இந்த கெத்துக்கு ஒன்னும்  குறைச்சல் இல்லை.செய்யறதையும் செஞ்சுட்டு…’

“உங்களுக்கு தான்  பொய் சொன்னா பிடிக்காதே..”

அவள் பதிலில், திரும்பி அவளை முறைத்தான்..அவன் பார்வையை, கண் இமைக்காமல் எதிர் கொண்டாள்…. அவன் தான், பார்வையை திருப்பிக் கொள்ளும் படி ஆனது..

“ஓ..உங்க கிட்ட தான்  யாரும் சொல்ல கூடாதா??வேறு யார் கிட்ட வேணா சொல்லிக்கலாமா??”

வேகமாய் காரை எடுத்தான்.அவன் கோபம், அவன் காரை எடுத்த வேகத்தில் தெரிந்தது..

சீட் பெல்ட்  போட்டு இருந்த படியால், எங்கும் முட்டாமல் தப்பித்தாள்..

தலை விண் விண் என தெரித்தது..கன்னத்தின் வீக்கம், உடல் வலி, களைப்பு, அனைத்தும் சேர்ந்து, அவளை துயிலில் ஆழ்த்தியது..

நடு நிசியில் தான், வீடு வந்து சேர்ந்தார்கள்..

 

[the_ad id=”6605″]

 

வண்டி நின்றதும்,சில நொடியில் விழித்தாள் மது..
ராஜா இறங்கி சென்று, தன்னிடம் உள்ள சாவியில்,  கதவை திறந்து கொண்டிருந்தான்..

‘எழுப்பினா குறைஞ்சுடுவானா??’

மெதுவாய் எழுந்து, வீட்டினுள் சென்றாள்.. இவள் வந்ததும் கதவை பூட்டியவன்.. மாடிக்கு  வேகமாய் சென்று விட்டான்..
இவளும், இவள் அறைக்கு சென்று படுத்தாள்..

மறுநாள் எழுந்து வந்த ராஜாவிடம்,
“ஏலே ராசா, எப்போ வந்தீக?? ரெண்டு பேரும்..எனக்கு முழிக்க முடியல..அதான் தூங்கிட்டேன்..”

“நடுசாமம் ஆகிடுச்சு ம்மா..”

“வெள்ளனவே  கிளம்பி இருக்க கூடாதா..??பொட்டை பிள்ளையை கூட்டிட்டு  அவ்ளோ தூரம் தனியா போற..சீக்கிரம் வரதில்லையா??”

பதில் கூற முடியாமல், அமைதியாய் நின்றான்..

“விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு..இன்னும்  மது கண்ணு எழுந்திரிக்கலையே..”

“நைட் லேட்டா ஆகிடுச்சு ம்மா..அதான் தூங்குறா போல..”

“ஹ்ம்ம்..சரி,சரி..நீ சாப்பிட வா..”

அவன் சாப்பிட்டு கிளம்பி சென்றான்..பன்னிரண்டு மணி போல, அவன் மில்லில் இருக்கும் நேரம்,அவன் அலைபேசி இசைத்தது..

வீட்டு தொலைபேசியில் இருந்து அழைப்பு.வேகமாய் எடுத்து,

“ஹலோ..”

“ஏலே ராசா.. விரசா நம்ம மருத்துவச்சியை கூட்டிகிட்டு வா லே..”

“என்னாச்சு ம்மா.. யாருக்கு என்ன ஆச்சு..”
பதட்டதோடு கேட்டான்..

“நம்ம மது கண்ணுக்கு தான், உடம்பு நெருப்பாட்டம் கொதிக்கிது..இவ்ளோ நேரம் வரலைன்னு  பேச்சியை பார்க்க சொன்னேன்..தூக்கத்துலேயே  உளருது.. உடம்பு கொதிக்கிது..சீக்கிரம் வா கண்ணு..”

மனதில் பய பந்து உருள, வேகமாய் மில்லில் இருந்து கிளம்பினான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!