Neeyindri Vaazhvaeno 22 2
மெல்ல அவளைக் கீழே இறக்கி விட்டவனின் முகம் முதலில் மலர்ந்தாலும், உடனே சுருங்கிவிட்டது. தான் செய்ய இருந்த காரியத்தை நினைத்து வந்திருந்த கலக்கம் அது. ஆனால் சாதனா அதைத் தவறாகப் புரிந்து கொண்டாள். அவனுக்குக் குழந்தை வந்தது பிடிக்கவில்லையோ என நினைத்து விட்டாள்.
“பிரக்னென்டா இருக்கியா… உனக்கு எப்ப தெரியும்?”
“நான் லண்டன் வர்றதுக்கு முன்னாடியே டாக்டரை போய்ப் பார்த்துக் கன்பார்ம் பண்ணிட்டு தான் வந்தேன்.”
“அப்ப குழந்தை வயித்துல இருக்குன்னு தெரிஞ்சும், அங்க இருந்து இவ்வளவு தூரம் ப்ளைட்ல வந்திருக்க… உனக்குக் குழந்தையை விட ஊர் சுத்துறது முக்கியமா போய்டுச்சு…” ரிஷி மிகக் கடுமையாகப் பேச….
Advertisement
அவனின் கடுமையைப் பார்த்து சாதனாவிற்கு ம் கோபம் வந்து விட்டது.
“நான்னா ஒன்னும் வரலை… நீங்க தான் வர சொன்னீங்க.”
“உன் வயித்துல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சிருந்தா… நான் வர சொல்லி இருக்க மாட்டேன்டி. முதல்ல நீ எனக்கு இதுக்குப் பதில் சொல்லு. என்கிட்டே நீ ஏன் இந்த விஷயத்தைச் சொல்லலை?”
Advertisement
“உங்களை நேர்ல பார்த்து சொல்லலாம்னு நினைச்சேன்.”
Advertisement
“நீ இங்க வந்து ஒருவாரம் ஆனதா எனக்கு நியாபகம்.”
“மெதுவா சொல்லலாம்னு இருந்தேன்.”
“எப்ப குழந்தை பிறந்த பிறகா?”
Advertisement
ரிஷியின் கேள்விக்குச் சாதனா பதில் சொல்லவில்லை… அமைதியாக இருந்தாள்.
“நீ ஒரு டாக்டர் தான… இந்த நேரத்தில எப்படி இருக்கனும்னு தெரியாது.”
“ரொம்பப் பேசுறீங்க ரிஷி. என் குழந்தை மேல என்னை விட வேற யாருக்கும் அக்கறை இருக்க முடியாது.”
“அது உன்னோட குழந்தை மட்டும் இல்லை என்னோடதும் தான். அதை என்கிட்டே இருந்து ஏன் மறைச்சேன்னு தான் கேட்கிறேன்?”
“திடிர்ன்னு குழந்தையைப் பத்தி சொன்னா… நீங்க எப்படி எடுத்துபீங்கன்னு தெரியலை….”
“உன்னோட சேர்ந்தா குழந்தை வரும்னு எனக்குத் தெரியாதா… அது கூடத் தெரியாமலா இருப்பேன். எப்பவாவது உன்கிட்ட நான் குழந்தை இப்ப வேண்டாம்னு சொல்லி இருக்கேன்னா…”
ரிஷி அவளை நிற்க வைத்துக் கேள்வி மேல் கேள்வி கேட்க… சாதனாவிற்கு க் கால்கள் சோர்ந்து போய்விட்டது. அவள் அங்கிருந்த இருக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டாள். அவள் சோர்வாக இருப்பதை உணர்ந்தவன், உள்ளே சென்று அவளுக்குக் குடிக்கப் பால் கொண்டு வந்தான்.
இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை என்று நினைத்த சாதனா அதை வாங்கிக் குடித்தாள்.
[the_ad id=”6605″]
அவள் குடித்து முடித்ததும் திரும்ப ரிஷி பேச்சை ஆரம்பிக்க…. “போதும் ரிஷி என்னை விட்டுடுங்க. இங்க வந்த இந்த ஒரு வாரமா தான் நாம நல்லா பேசிக்கிறோம். எனக்கு உண்மையாவே நீங்க என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க? என்னை உங்க மனசுல எந்த இடத்தில வச்சிருகீங்கன்னு எல்லாம் அப்ப தெரியலை….”
“நாம சேர்ந்து இருக்கும் போது… உங்ககிட்ட குழந்தையைப் பத்தி சொல்லனும்னு நினைச்சேன். இங்க வந்ததும் சொல்லி இருக்கணும் தப்பு தான். சாரி.” என்றாள்.
“நீ என்கிட்டே குழந்தையைப் பத்தி சொல்லி இருந்தா… நான் உன்னைப் பார்க்க உடனே கிளம்பி வந்திருப்பேன். நீ இப்படி அலையை வேண்டியது இருந்திருக்காது.”
ரிஷிக்கு சாதனா மனதில் இருக்கும் வலி புரியாது. சாதனா ரிஷியை மிகவும் விரும்பி திருமணம் செய்து கொண்டாள். ஆனால் ரிஷி அப்படியில்லை…. வேண்டா வெறுப்பாக அவளை மணந்தவன். அது சாதனா மனதில் ஒரு பெரிய உறுத்தலாக இருந்தது.
குடும்பத்திற்காக, குழந்தைக்காக என்று இல்லாமல் தனக்காகவே தன்னை அவனுக்குப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் இதையெல்லாம் ரிஷியிடம் சொல்ல… அவளுக்கு விருப்பம் இல்லை….காதலை யாசிக்கக் கூடாது அது தானாகவே வரவேண்டும் என்று நினைத்தாள்.
ரிஷி அப்போதைக்கு அந்தப் பேச்சை விட்டு விட்டான். ஆனால் கோபம் குறையாமல் தான் இருந்தான். சாதனா மாடிக்கு சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
தான் அவனுக்காக எது செய்தாலும் அது கடைசியில் ரிஷியின் பார்வையில் தவறாகவே முடிவதை நினைக்க அவளுக்கு அழுகையாக வந்தது.
முதலில் ரிஷியை காப்பற்றவே அவள் வந்தாள். ஆனால் அது ரிஷிக்கு விருப்பம் இல்லாத திருமணத்தில் போய் நின்றது. இப்போது குழந்தை விஷயத்திலும் அப்படியே ஆகிவிட்டது.
அவளைப் பார்த்து எப்படிச் சொல்லிவிட்டான். அவள் எதோ ஊர் சுத்துவதற்காக வந்ததாகச் சொல்லிவிட்டானே என நினைத்து அதற்கு வேறு ஒரு மூச்சு அழுதாள்.
பிறகு யோசிக்கும் போது… ரிஷி குழந்தை மீது உள்ள அக்கரையிலேயே அப்படிப் பேசியது புரிந்தது. அவன் குழந்தை வரவை விரும்பமாட்டானோ என எவ்வளவு கவலைப்பட்டோம். ஆனால் தன் குழந்தை மீது எவ்வளவு உரிமை காட்டி பேசினான் என இப்போது நினைக்கும் போது… மனதிற்குச் சந்தோஷமாகவே இருந்தது.
குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ற அச்சத்தில்
தானே தன் மீது கூடக் கோபத்தைக் காட்டினான் என அவளே அவளைச் சமாதானமும் செய்து கொண்டாள்.
ரிஷி அறைக்கு வருவான் எனச் சாதனா எதிர்பார்த்திருக்க… அவன் அறைக்கே வரவில்லை… எவ்வளவு நேரம் சும்மா படுத்திருப்பது என நினைத்தவள் எழுந்து கீழே சென்றாள்.
ரிஷி மடி கணினியில் எதோ பார்த்துக் கொண்டு இருந்தான். சாதனா சென்று பழங்களை எடுத்துக்கொண்டு வந்தவள், அவன் அருகில் சென்று உட்கார… அவன் அப்போதும் அவளைத் திரும்பி பார்க்கவில்லை…
சாதனா டிவி பார்த்துக்கொண்டிருக்க… சிறிது நேரத்தில் ரிஷி எழுந்து சமையல் அறைக்குச் சென்றான். அவன் சென்றதும் இவ்வளவு நேரம் அப்படி என்ன பார்த்தான் என நினைத்தவள், அவன் மடி கணினியை எட்டி பார்க்க… அதில் குழந்தை உண்டாகி இருக்கும் போது… விமானப்பயணம் செய்யலாமா எனப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.
[the_ad id=”6605″]
சாதனா தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள். பரவாயில்லை குழந்தை மீது இப்பவே இவ்வளவு பாசமா… தன் குழந்தை மிகவும் அதிர்ஷ்ட்டஷாலி என நினைத்தவள், குழந்தை மட்டும் இல்லை தானும் தான் என்று நினைத்துக்கொண்டாள்.
அவன் விருப்பதிற்காக எப்போதோ ஒருமுறை சமைத்தவன், சாதனாவிற்காகத் தினமும் சமைத்தான். இந்த ஒரு வார காலமாக ரிஷி தான் அவளுக்குக் காலை உணவை செய்து கொடுத்தான். இரவு வெகு நேரம் கழித்து உறங்கினாலும், காலையில் சாதனாவிற்கு ச் சீக்கிரமே பசித்து விடும்.
காலையில் எழுந்து சாப்பிட எதாவது இருக்கிறதா என அவள் பிராண்டுவதைப் பார்த்தவன், தினமும் அவனே தான் அவளுக்குச் செய்து கொடுத்தான். ஆனால் செய்து கொடுத்து விட்டு உடனே சென்று திரும்பப் படுத்து விடுவான்.
இதெல்லாம் இங்கே வந்ததினால் தான். இதே அவர்கள் ஊரில் அவர்களுக்கு இந்தத் தனிமை கிடைத்திருக்காது. ரிஷி அவளுக்கு நிறையக் காய்கறிகள் மற்றும் முட்டை சேர்த்துப் பிரைட் ரைஸ் செய்தவன், அதைக் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்து விட்டு…. அவன் மடி கனியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் சாதனா சாப்பிட உட்கார்ந்தாள். நிறைய மிளகு போட்டுக் காரசாரமாகச் செய்திருந்தான். சாப்பிட நன்றாக இருந்தது. மதியம் வேறு சரியாகச் சாப்பிடாததால்…. இப்போது நிறையவே சாப்பிட்டாள்.
சாப்பிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவள், கதவெல்லாம் பூட்டிவிட்டு மாடிக்கு செல்ல… அங்கே ரிஷி கட்டிலில் மடி கணினியுடன் உட்கார்ந்து இருக்க… அவனைத் தொந்தரவு செய்யாமல்… சாதனா சென்று படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் சென்று மடிக்கணினியில் இருந்து பார்வையைத் திருப்பிய ரிஷி, சாதனா உறங்கிவிட்டது தெரிந்து அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
இப்போதும் அவனுக்குக் கோபம் போகவில்லை…. அவளைத் தூக்கி தான் தண்ணீரில் போட்டு இருந்தால்… என்ன ஆகி இருக்கும்? அதை இப்போது நினைத்தாலும் நடுக்கமாக இருந்தது.
எவ்வளவு பெரிய விஷயம் மறைத்திருகிறாள். இங்க வந்த பிறகாவது சொல்லி இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அவளை மட்டும் ஏன் குறை சொல்ற? நீ அவளோட குடும்பம் நடத்தின லட்ச்சணம் அப்படி…. பாவம் அவளும் வேற என்ன செய்வா? என அவன் மனமே அவனைச் சாட…
[the_ad id=”6605″]
ஆமாம் ஆரம்பத்தில் இருந்து அவகிட்ட எப்ப அன்பா பேசி இருக்கோம்? எப்போதும் சண்டை தான போட்டிருக்கோம். அங்கேயே இருந்திருந்திருந்தா கூட… ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு இருப்போமா தெரியாது. இங்க வந்த பிறகு தான் இருவருக்குமான நெருக்கம் அதிகமானது.
இப்போது ஒவ்வொன்றாக யோசிக்கும் போது… ரிஷிக்கு சாதனாவின் தரப்பு நியாயமும் புரிந்தது. சாதனா எப்போதும் கவனமாகத்தான் இருந்தாள். முடிந்தவரை அவள் வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்தாள். அதிர்ந்து கூட நடக்காமல் மெதுவாகத்தான் நடப்பாள். ரிஷியே அதற்கு அவளைக் கேலி செய்திருக்கிறான்.
முன்பு உணவு பற்றி அவள் அவ்வளவு அக்கறை காட்டியது இல்லை… ஆனால் இப்போது சரியான நேரத்திற்குச் சாப்பிட்டாள். அதெல்லாம் ஏன் என்று அவனுக்கு இப்போது புரிந்தது. அவளே ரொம்பக் கவனமா தான் இருந்தா… நாம தான் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டோமோ… குழந்தை வந்ததைக் கொண்டாடாம… அவளையும் வதைச்சு… என்னையும் கஷ்ட்டபடுத்தி இதெல்லாம் தேவையா என நினைத்தவன், எழுந்து சென்று மடிக்கணினியை வைத்துவிட்டு வந்தான்.
சாதனா கட்டிலின் ஓரத்தில் படுத்திருக்க… அவள் அருகில் தரையில் மண்டியிட்டவன், அவள் தலையைக் கோதி விட்டு நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க…. சாதனா நல்ல உறக்கத்தில் இருந்ததாள்… அவள் அதை உணரக் கூட இல்லை.
அடுத்த அவள் வயிற்றின் மீது இருந்த அவளின் கையை எடுத்து விட்டவன், அவள் அணிந்திருந்த மேல் சட்டையைத் தூக்கிவிட்டு, அழுத்தமாக அவளது வயிற்றில் முத்தமிட்டான். அவன் குழந்தையையே முத்தமிடுவது போல் உணர்ந்தான். அவன் மீண்டும் மீண்டும் முத்தமிட… சாதனாவின் உடல் சிலிர்த்தாலும், அவள் உறக்கம் கலையவில்லை… பிறகு கட்டிலில் சென்று அவளை அணைத்தபடி படுத்துக்கொண்டான்.
நடு இரவில் சாதனாவிற்கு த் தூக்கம் களைய… அவளை இறுக்கமாக அணைத்தபடி உறங்கும் ரிஷியை பார்த்தவளின் முகத்தில் புன்னகை மலர… அவனை மேலும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு உறங்கிப்போனாள்.
வாழ்க்கையின் இனிமையான நேரத்தில் மட்டும் சேர்ந்திருப்பதில் இல்லை உண்மையான அன்பு… கடினமான நேரத்திலும் தன் துணையை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் போது தான் தெரிகிறது உண்மையான அன்பு எதுவென்று.
