மது வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தாள். மொபைல் அடித்தது. ஹேரிதான் கால் பண்ணியிருந்தான்.
கால் அட்டென்ட் பண்ணியவள் “என்ன ஹேரி” என்றாள்.
Advertisement
“வீட்டுக்கு கிளம்பிட்டியா ஹனி”
“ஆமா. உன்னோட ஆஃபீஸ்ங்கிறதுக்காக என்னை இங்கவே படுத்து தூங்க சொல்றியா”
“என்ன வாய் ஹனி உனக்கு. அடுத்தவங்களை பேசவே விட்றதில்ல. ஃபஸ்ட் என் நம்பரை பிளாக் லிஸ்ட்லருந்து எடு. அது என்னோட பர்சனல் நம்பர். நீ அதுல கூப்டாதான் என்ன எப்ப வேணா காண்டாக்ட் பண்ண முடியும்”
Advertisement
“ஓகே ஓகே அவ்ளோதான. வச்சிடவா”
Advertisement
“கீழ வெயிட் பண்றியா. நா வந்து ட்ராப் பண்றேன்”
“அதெல்லாம் வேண்டாம். நா ட்ரைன்லயே போறேன்”
“ஏன் பேபி. நா கொண்டு வந்து விட்றனே. உன்னோட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண மாதிரி இருக்கும். நாளைக்கெல்லாம் நா பிஸி பேபி. ஃபேக்டரி போயாகணும். திரும்ப உன்ன எப்ப மீட் பண்ணுவேன்னு தெரியல”
Advertisement
“ஒன்னும் ப்ராப்லம் இல்ல. டைம் கிடைக்கும் போது வந்து பாரு. உன்னோடலாம் தனியா வர முடியாது. அடிக்கடி என் உதட்ட வேற கடிச்சி வச்சிடற”
“ஹா ஹா நோ பேபி. நா ஏதும் பண்ண மாட்டேன். இன்னைக்கு எச்சி எச்சினு சொல்லி நீ என்ன டெம்ப்ட் பண்ணதாலதான் நா கிஸ் பண்ணிட்டேன்”
“அது சரி. நீ கிஸ் பண்ணிட்டு எப்பவும் என்னையே காரணம் சொல்லு”
“எஸ் பேபி. நீ ஏன் அவ்ளோ அழகா இருக்க. அதான் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல”
“இல்ல ஹேரி. நா உணர்ச்சி வசப்பட்டு உன்னட்ட உன்ன பிடிக்கும்னு ஒத்துக்கிட்டேன். இப்ப யோசிச்சு பாக்கும் போது, எவ்ளோ பயமா இருக்கு தெரியுமா. எங்க அம்மா அப்பா , முக்கியமா இங்க பார்த்தி அண்ணா இவங்கட்டலாம் நா சம்மதம் வாங்காம என் இஷ்டத்துக்கு உன் கூட சுத்த முடியாது”
“அதெல்லாம் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் நா உன் கூட வரேன்னு சொன்னேன் ஹனி”
“ஓகே மது. வா கிளம்பலாம்” என்று இருவரும் கிளம்பி அவரவர் வழியில் சென்றனர்.
மது பார்த்தியை சந்திக்க செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து விட்டாள். டின்னர் சாப்பிட்டு வேலையெல்லாம் முடிந்த பிறகு வந்து அமர்ந்தவளுக்கு தாய் மீனாட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது. வீடியோ கால் அட்டண்ட் செய்து அவள் அம்மாவின் முகத்தை பார்த்த மதுவிற்கு தொண்டை அடைத்தது.
“என்ன மது. என்னவோ போல் இருக்க”
“ஒண்ணுல்லம்மா. வேல கொஞ்சம் அதிகம். அதான் டையர்ட். அப்பா எங்கம்மா”
“சாப்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கிறேன்ட்டு போனாங்கடா”
இந்தியாவில் அப்பொழுது மதியம் மூன்று மணிதான் ஆகியிருக்கும் என்று யோசித்த மது , “வேறு என்னம்மா விஷேஷம்” என்று கேட்டாள்.
“விசேஷம்ன உடனே நியாபகம் வருது. இங்க வானதி பசங்களுக்கு காது குத்து தேதி முடிவு பண்ணிட்டாங்கடா. அநேகமா பார்த்தி ஊருக்கு வருவான்னு நினைக்கிறேன்”
வானதி பார்த்தியின் அக்கா. அவள் கணவர் சவுதியில் இருந்து வந்திருப்பதால் இரு குழந்தைகளுக்கும் காது குத்த முடிவு செய்திருந்தார்கள். குழந்தைகளின் அப்பா மாமா இருவருமே வெளிநாட்டில் இருப்பதால் காது குத்துவது தள்ளி போய் கொண்டே இருந்தது.
“அப்படியாம்மா. அண்ணா ஒன்னும் சொல்லலையே”
“இப்பதான் முடிவு பண்ணிருக்காங்க. இன்னுமேதான் அவனே பிளான் பண்ணுவான். அதுக்கப்புறம் உன்னட்ட சொல்லுவானா இருக்கும் மது. இன்னும் பத்து நாள்ல பொங்கல் வருது. நீயும் பார்த்தியோட வந்தீன்னா பொங்கலுக்கு இங்க இருக்கலாம்ல மது”
“தாயே மீனாட்சி. நா இங்க வந்தே 7 மாசம் தான் ஆகுது. லீவ் ரொம்ப இருக்காது. 7,8 நாள் லீவ்ல வர மாதிரி இருக்கும். இதுல ட்ராவல் பண்ற செலவு, அலைச்சல் எல்லாம் இருக்கு. தேவையா இது”
“அதுவும் சரிதான். அப்ப ஒழுங்கா நா அனுப்பி விட்ட ட்ரெஸ்ஸ போட்டுக்க மது அன்னைக்கு”
“அம்மா கிண்டல் பண்றியா. நீ என்ன டிரஸ் அனுப்பி விட்ருக்க? இந்த ஊர்ல என்னை ஹால்ப் சாரி போட சொல்றியா”
மது அதிர்ச்சி ஆகி விட்டாள். வருண் அமெரிக்காவில் இருக்கும் அவள் அத்தையின் மகன். டாக்டர்.
“என்ன மது ஷாக் ஆகிட்ட”
“இல்லம்மா. திடீர்ன்னு சொன்னியா அதான்”
“எல்லாம் உங்க அப்பத்தா பண்ற வேலையாதான் இருக்கும். எனக்கும் இந்த சம்பந்தத்துல விருப்பம் இல்ல மது”
என் வயித்துல பால வாத்திட்டியே மீனாட்சி என்று சந்தோசப்பட்ட மது “ஏம்மா” என்று கேட்டாள்.
“வருண் நல்ல பையன் தான் மது. அவன் அமெரிக்கா சிட்டிசன். இந்தியாக்கெல்லாம் வரமாட்டான். எங்களுக்கு நீ ஒரே பொண்ணு. இந்த ஒரு வருசத்துக்கே அவ்ளோ கஷ்டமா இருக்கு. இதுல உன்ன கட்டி குடுத்து எப்படி முழுசா அமெரிக்காகே அனுப்புவோம். அநேகமா அப்பாவும் அப்படிதான் யோசிப்பாங்க”
ம்க்கும். அமெரிக்காக்கு அனுப்பாதவங்க, எப்படி ஆஸ்திரேலியா அனுப்புவாங்க என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள் மது.
“சரி மது. நீ ஒன்னும் குழப்பிக்காம போய் தூங்கு. அம்மா வச்சிடறேன்” என்றவரிடம் சரி சொல்லி காலை கட் பண்ணினாள்.
படுத்தவாறு யோசித்து கொண்டிருந்தவளுக்கு ஹேரி கால் பண்ணினான்.
“ஹலோ பேபி. என்ன பண்ற”
“நைட்டாய்டுச்சு. சாப்ட்டாச்சு. அடுத்து என்ன தூங்கத்தான் போறேன்”
“ஏன் பேபி. என் நியாபகமே வரலையா உனக்கு. நான்தான் உன்ன மிஸ் பண்றேன். சாப்பிட முடியல. தூங்க முடியல. நீ என்னனா எல்லாம் முடிச்சுட்டு தூங்க போறேன்னு சொல்ற”
“என்ன! ஆஸ்திரேலியால இந்த நேரத்துல ஸ்விம் பண்றியா. நம்பவே முடியலியே”
“நம்ப முடியலைன்னா வீடியோ கால்ல வா”
மதுவுக்கும் ஆர்வம் தாங்காமல் வீடியோ கால் போட்டாள். ஹேரி உண்மையிலேயே தண்ணீருக்குள் இருந்துதான் பேசி கொண்டிருந்தான்.முகமெல்லாம் தண்ணீர் வழிய சிரித்தான். நீல கண்கள் மட்டும் இன்னும் அதிக பிரகாசமாக தெரிந்தது.
“இப்ப நம்புறியா பேபி”
“ஆமா. ஆனா குளிரலையா உனக்கு”
“ம்ஹும். உன்ன நினைக்க நினைக்க இன்னைக்கு உனக்கு முத்தம் குடுத்த நியாபகம்தான் வருது பேபி. இன்னும் இன்னும் வேணும் போல இருக்கு. அதான் தண்ணியில குதிச்சிட்டேன்”
மதுவிற்கு வெட்கம் தாங்க முடியவில்லை. மொபைலில் முகத்தை காட்டாமல் மறைத்து கொண்டாள்.
“பேபி எங்க போய்ட்ட” என்று கேட்டதற்கு
“டேய் லூசாடா நீ. இவ்ளோ வெளிப்படையா பேசுனா எனக்கு வெக்கமா வராதா” என்ற மதுவின் குரல் மட்டும் கேட்டது.
“ஐயா சாமி. உன்னோட பீலிங்ச கொஞ்ச நாளைக்கு கண்ட்ரோல் பண்ணி வச்சுக்க. இந்த நேரத்துல எங்க போய் ஸ்விம் பண்ற நீ. அலோவ் பண்ணுவாங்களா”
“பேபி. இது நம்ம வீடுதான். வீட்லயே ஸ்விம்மிங் பூல் இருக்கு”
“ஐ வீட்லேவா. ஜாலியா இருக்கும்ல. எனக்கு ஸ்விம் பண்றது ரொம்ப பிடிக்கும். சின்ன பிள்ளையில பிரண்ட்ஸோட குளத்துல போட்டி போட்டு நீந்துவோம். அப்புறம் பெரிய பிள்ளையானதுக்கு அப்புறம் அம்மா வெளில போய் குளிக்க அலோவ் பண்ணல”
அந்த வார சனி கிழமை கிளம்புவதாக இருந்ததால் பார்த்தி சத்யனிடம் கால் பண்ணி மதுவை பார்த்து கொள்ள சொன்னவன், ஆச்சரியப்படும் வகையில் ஹேரிக்கும் கால் செய்தான்.
போன் எடுத்து நலம் விசாரித்த ஹேரியிடம் “நா நல்லாருக்கேன் ஹேரி. நா ஒன் மந்த் இண்டியா போறேன். அதான் மதுவை நீங்களும் கொஞ்சம் பாத்துக்கிட்டா நல்லாருக்கும்” என்றான்.
“பாத்துக்குங்க. அதே சமயம் நீங்களும் அவள ஏதும் டிஸ்டர்ப் பண்ண கூடாது”
அதற்கு சிரித்த ஹேரி “நா இதுவரையிலும் டிஸ்டர்ப் பண்ணிருக்கதா மது உங்கட்ட சொல்லிருக்காளா பார்த்தி. இனிமேலும் சொல்ல மாட்டா. நீங்க பயப்படாம போங்க” என்றவனுக்கு நன்றி சொல்லி வைத்த பார்த்தி அந்த சனிக்கிழமை விமானம் ஏறி இந்தியாவும் வந்து இறங்கி விட்டான்.