Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மதுவினும் இனியாள் – 27

அத்தியாயம் 27:

பத்து நிமிடம் சென்று வெளியே வந்தவள் முகத்திற்கு சிறிதளவு ஒப்பனை செய்திருந்தாள். லைட்டாக காம்பெக்ட் பவ்டர், கண்ணுக்கு காஜல், கொஞ்சமாக ரெட் கலரில் லிப்ஸ்டிக், கழுத்தில் ஜிமிக்கிக்கு மேட்சிங் நெக்லஸ் அணிந்து, முடியை சீவி நடுவில் கிளிப் மட்டும் போட்டு, பின்னாமல் முன்னாள் எடுத்து ஒரு பக்கமாக விட்டிருந்தாள்.

வெளியில் வந்து பார்த்தால் ஹேரி பால்கனியில் போன் பேசி கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் போய் நின்றவளை திரும்பி பார்த்தவன் “வாவ்” என்று விட்டு அவள் அருகில் நெருங்கினான்.

மது ஒரு அடி பின்னால் சென்று “ஏய் தள்ளி போ. வெளில நிக்கிறோம். இங்க மாதிரி பப்ளிக் பிளேஸ்ல  கட்டி பிடிக்கிறது, கிஸ் பண்றது, இதெல்லாம் என்கிட்ட பண்ணுனனு வை, அன்னையோட நீ என்ன மறந்துடனும் பாத்துக்கோ” என்று சீரியஸாக சொல்லியவளை பார்த்து “ஓகே பேபி, அத மாதிரி நா பண்ண மாட்டேன்” என்று அவனும் சீரியஸாக சொல்லியவன், சிறிது இடைவெளி விட்டு “அப்ப உள்ள போய்டலாமா பேபி” என்று குறும்பாக கேட்டான்.



Advertisement

அவன் தலையில் எக்கி ஒரு கொட்டு வைத்தாள். சிரித்தவனிடம் அவள் மொபைலை கொடுத்தாள்.

“அழகா என்ன போட்டோ எடுத்து குடு. தாய் மீனாட்சிக்கு அனுப்பனும். அவங்கதான் பொங்கலுக்காக இந்த ட்ரெஸ் கொரியர் பண்ணிவிட்ருந்தாங்க”

“மொதல்ல நம்ம செல்ஃபி எடுத்துக்கலாம் பேபி” என்றவன் அவள் பக்கத்தில் நின்று வித விதமாக நிறைய செல்ஃபி எடுத்தான். அப்பொழுதுதான் அவன் கன்னத்தை பார்த்தவள் “ஹே இது என்ன இப்படி சிவந்து போயிருக்கு” என்றாள்.

Advertisement

“கடிச்சு வச்சுட்டு இப்படி கேக்கற பேபி”

Advertisement

“ஹா ஹா லைட்டா கடிச்சதுக்கே இப்படி மார்க் இருக்கு. ஐய்யயே ஒரு அவசர ஆத்திரத்துக்கு உன்ன அடிக்க, கடிக்கலாம் முடியாது போல இருக்கே”

“நீ அவசரப்பட்டு அப்படிலாம் முடிவுக்கு வராத பேபி. இது கொஞ்ச நேரத்துல மறைஞ்சுடும். நீ கொஞ்சம் அழுத்தி கடிச்சுட்ட. அதான் இப்படி ஆயிடுச்சு. நீ இப்ப  இந்த கன்னத்துல லைட்டா கடியேன்  ஒண்ணுமே ஆகாது” என்று நல்ல பிள்ளையாக இன்னொரு கன்னத்தை காட்டினான்.

“ஆணியே புடுங்க வேணாம். உனக்கு கண்ணனு பேரு வச்சா, நீ நிஜமாவே அந்த கண்ணன் வேலையைத்தான் பாக்கிற” என்று அவன் மூக்கை பிடித்து திருகினாள்.

Advertisement

“யாரு பேபி அந்த கண்ணன்”

“அவரு இந்து மதத்துல ஒரு கடவுள். தீராத விளையாட்டு பிள்ளை. நிறைய வைஃப், எக்கச்சக்க கேர்ள் பிரண்ட் அவருக்கு”

“நோ பேபி. ஐ ஹேவ் ஒன் பொண்டாட்டி மது பேபி ஒன்லி” என்று அழுத்தமாக சொன்னவனின் நீல கண்களை பார்த்தவளுக்கு காதல் பெருகியது.

“பொண்டாட்டியா? இந்த வார்த்தையெல்லாம் எங்க இருந்து கத்துக்கிற “

“ஒரு தமிழ் டீச்சர் இருக்கார். அவர் சொல்லி தந்தார்” என்று சொல்லியவன் “என் பொண்டாட்டி என்ன முதல்  முதல்லா கடிச்சத நா போட்டோ எடுத்து வச்சிக்கிறேன் என்று விட்டு அவன் கன்னத்து சிவப்பு நன்றாக தெரியுமாறு செல்ஃபீ எடுத்து கொண்டவனை  பார்த்து “பரவால்லடா கண்ணா, ஒரு தமிழ் பொண்ணோட  கணவனுக்கான எல்லா தகுதியும் உனக்கு இருக்கு” என்று செல்லமாக அவன் முடியை களைத்து விட்டாள்.

அவள் அப்படி செய்யவும் அவளை நீல கண்கள் ஒளிர பார்த்தவன் “அப்ப நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் பேபி” என்று கேட்டான்.

“நல்ல நாள் அதுவுமா நா யோசிக்க பயப்படற கேள்வில்லாம் கேக்காத  கண்ணா” என்று ஒரு பெருமூச்சினை விட்டவளை பார்த்து “ஓகே பேபி டோன்ட் ஒர்ரி. இப்ப அழகா போஸ் கொடு” என்று அவளை நிற்க வைத்து வித விதமாக போட்டோ எடுத்து தந்தான்.

“லிப்ஸ்டிக் வேண்டாம் பேபி, உன்னோட நேச்சுரல் பிங்க் லிப்தான் நல்லாருக்கு” என்று அவள் உதட்டில் பார்வையை பதித்து கொண்டே கூறியவன், மொபைலை அவள் கையில் கொடுத்தான்,

அவனை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டே “எனக்கு பசிக்குது. நா உள்ள வர போறேன். நீ ஏதும் சேட்டை பண்ண கூடாது சரியா” என்றாள்.

சிரிப்புடன் அவளை பார்த்தவன் “நா என்ன பேபி பண்ண போறேன் உன்னை. பசிக்குதுனு சொல்லிட்டு ஏன் நிக்கிற. வா சீக்கிரம் சாப்பிடலாம்” என்றான்.

சரி என்று உள்ளே வந்து பாத்திரங்களை எடுத்து வைத்தவளுக்கு ஹேரியும் உதவி செய்தான். ஒவ்வொரு டிஷ்ஷையும் எக்ஸ்பிலைன் பண்ணிக்கொண்டே எடுத்து வைத்தாள்.

சக்கரை பொங்கல் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து கொண்டவனிடம் “என்ன ஹேரி நீ. இன்னைக்கு ஸ்பெஷலே சக்கரை பொங்கல் தான். அதையும் இவ்ளோ கம்மியா எடுத்துக்கிற” என்று கேட்டாள்.

“ஸ்வீட் எனக்கு இவ்ளோ போதும் பேபி” என்று சொல்லியவன் அவளை இழுத்து பக்கத்தில் அமர்த்தி  “நீதான பசிக்குதுன்னு சொன்ன. நீ சாப்பிடு” என்று அவளுக்கே ஊட்டி விட்டான்.

“ஒரு நாள் சாப்ட்டா உன் ஜிம் பாடிக்கு ஒன்னும் ஆகாது” என்று அவனுக்கும் அவளே திரும்ப ஊட்டி விட்டாள்.

மது கொடுத்ததால் ஹேரி எந்த கணக்கும் அதற்கு பிறகு பார்க்கவில்லை. அவள் கொடுத்தவற்றை என்னவென்று பார்க்காமலே ஆசையாக சாப்பிட்டான். இவ்வாறு இருவரும் ஒரே பிளேட்டிலேயே சாப்பிட்டு முடித்தனர். எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு சோஃபாவில் வந்து அமர்ந்தனர். மணி பத்து ஆனது. இன்னும் சத்யனை காணவில்லை.

ஹேரிதான் கேட்டான் “ஒரு டான்ஸ் ஆடலாம்ல மது”

“என்ன உன்ன நம்பி டான்ஸ் ஆடறதா. அப்புறம் நீ உன் கண்ட்ரோல்ல இல்லாம ஏதாவது பண்ணி வைப்ப. இது தேவையா எனக்கு”

“ஹா ஹா பயப்படாத பேபி. நா ஒன்னும் பண்ண மாட்டேன். ப்ளீஸ் “

அவனுக்காக ஆடலாம் என்று மது யோசித்து கொண்டிருக்கும் போது  சத்யன் வந்துவிட்டான்.

கதவு தட்டிய சத்தம் கேட்டதும் “சத்யண்ணா வந்துட்டார் போல ” என்று கதவு திறக்க போனவளை அமர வைத்து “இரு நா டோர் ஓப்பன் பண்றேன். சர்ப்ரைஸா இருக்கட்டும்” என்று போய் கதவை திறந்தவனை பார்த்து சத்யன் “பாஸ் நீங்க எப்ப வந்திங்க” என்று உண்மையிலேயே ஆச்சரியப்பட்டான்.

“உள்ள வாங்க சத்யன். நா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வந்தேன்” என்றான். பேசிக்கொண்டே உள்ளே வந்த சத்யன் “ஹாப்பி பொங்கல்டா தங்க மயிலு. பாஸ் வாராருன்னு நீ சொல்லவே இல்ல. பார்த்தி இல்லன்ன உடனே உனக்கு பயம் போயிடுச்சுல்ல குட்டி பிசாசு” என்று தமிழில் கேட்டு கொண்டே கையில் வைத்திருந்த ஃபுருட்ஸ் அடங்கிய பையை கொடுத்தான்.

பையை வாங்கி கொண்டவள் “இல்லிங்ண்ணா. நா வர சொல்லலீங்க. அவரா வந்துட்டாருங்க. வீட்டுக்கு வந்தவங்கள எப்டிங்க வெளில போக சொல்றது. உங்களுக்கும் ஹாப்பி பொங்கல்ங்கண்ணா” என்று அவன் ஊர் பாஷையில் பதில் சொல்லியவளுக்கு தலையில் கொட்டு வைத்தவன் பக்கத்தில் நின்றிருந்த ஹேரியிடம் “வர வர ரொம்ப வாய் ஆயிடுச்சு பாஸ் இவளுக்கு” என்றான்.

அதை கேட்டு சிரித்த ஹேரி அங்கு இருந்த இருக்கையில் சத்யனை அமர சொல்லிவிட்டு அவனும் அமர்ந்தவன் “என்ன சத்யன் நேத்து பார்ட்டியா. அதான் இன்னைக்கு லேட்டா வரீங்களா” என்று கேட்டான்.

அதை கேட்டு அவசரமாக திரும்பி பார்த்த சத்யன் மது பெட் ரூமிற்குள் சென்றிருந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டான். பிறகு “நேத்து இல்ல பாஸ். இன்னைக்குத்தான் பார்ட்டி. பசங்க வர சொல்லிருக்காங்க. மதுக்கு தெரியக்கூடாது. ப்ளீஸ் பாஸ்” என்று மெதுவாக அவன் காதில் கிசுகிசுத்தான்.

மது ரூமிலிருந்து வெளியே வந்தவள் “அண்ணா வாங்க சாப்பிடலாம். இப்பவே லேட்” என்றாள்.

“பாஸ் நீங்க சாப்பிட்டீங்களா” என்று ஹேரியிடம் கேட்டவாறே சாப்பிட அமர்ந்தான்.

“நா சாப்டாச்சு சத்யன். நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லிக்கொண்டே மதுவிற்கு போய் கிச்சனில் எதோ ஹெல்ப் பண்ணினான். அதை ஆச்சரியமாக பார்த்தான் சத்யன். எவ்ளோ பெரிய ஆளு. கிச்சன்ல போய் ஹெல்ப் பன்றாரே என்று பார்த்து கொண்டிருக்கும் போதே, மது ஒவ்வொரு டிஷ்ஷாக ஓவனில் சூடு பண்ணி  கொடுக்க அதை எடுத்து வந்து டேபிளில் வைத்தான் ஹேரி.

சின்ன பிள்ளையாக இருக்கும் மது சொல்வதை அவ்ளோ பெரிய ஹேரி கேட்டு  அடங்கி நடப்பதை அதிசயமாக பார்த்தான். இதுதான் காதல்  போல என்று யோசித்து கொண்டிருந்தான் சத்யன்.

பக்கத்தில் நின்ற ஹேரியின் கன்னத்தை அப்பொழுதுதான் பார்த்தவன் “என்ன பாஸ் சிவந்துருக்கு” என்று கேட்டான்.

பக்கத்தில் வந்த மதுவை நிமிர்ந்து பார்த்த ஹேரி சிரிப்புடன் “அது உங்க தங்கை…” என்று ஆரம்பித்தவனுக்கு இடையில் புகுந்த மது “அது காலையில கிச்சன்ல ஹெல்ப் பண்ணும் போது சுட்டுகிட்டான்” என்று வாய்க்கு வந்த பொய்யை அடித்து விட்டாள்.

“ஏய் குட்டி சாத்தான். அவரை போய் ஏன் வேல வாங்கற. பாவம் பாரு பழக்கமில்லாத வேலையில்ல அதான் சுட்டுருச்சு”

அதற்கு ஹேரி “ஆமா. புதுசா ட்ரை பண்ணேனா. அதான்” என்றான் மதுவை பார்த்து நமட்டு சிரிப்புடன்.

மது பல்லை கடித்தவள் “அண்ணா. நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. பேசாம சாப்புடுங்க”

“ஏன் சப்போர்ட் பண்ண கூடாது. அதெல்லாம் பண்ணுவேன். பாஸ் இந்த சில்வண்டு இருக்கே. சரியான தில்லாலங்கடி. வித விதமா பேசி தப்பிக்க பார்க்கும். ஏமாந்துராதீங்க”

“ஹா ஹா சத்யன். உண்மைதான்” என்று சொல்லியவனை பார்த்து முறைத்து விட்டு சத்யனுக்கு பரிமாறினாள்.

சாப்பிட்டவன் “ஆனாலும் தங்க மயிலு. அருமையா சமைக்கிறடா. வடைய இன்னும் எடுத்துட்டு வா” என்று வடையை ஒரு கை பார்த்தவன் “பொங்கல் திகட்டுது. நிறைய சாப்பிட முடியலடா. அதான் வருத்தமா இருக்கு” என்றவனுக்கு “மாவு இருக்கு. தோசை ஊத்தி தரவாண்ணா” என்று கேட்டு தோசை வார்த்து தந்தாள். நல்ல திருப்தியாக சாப்பிட்டவனை ஆச்சரியமாக பார்த்து அமர்ந்திருந்த ஹேரியிடம்

“என்ன பாஸ் ஆச்சரியமா பாக்கறீங்க. நான்லாம் ஊர்ல ரவுண்டு கட்டி சாப்பிடுவேன். இங்க வந்து என் சமையலை சாப்பிட்டு வெறுத்து போய்ட்டேன். மது கண்ணு வந்தப்றம்தான் அப்பப்ப நல்ல சாப்பாடு கிடைக்குது” என்று சாப்பிட்டு முடித்தவன் சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

திரும்பவும் இருவரும் ஒன்றாக டைனிங் டேபிளை சுத்தம் செய்தனர். பாத்திரங்களை மது விளக்கி கொடுக்க, ஹேரி வாஷ் பண்ணி வைத்தான். அதை பார்க்க உண்மையிலேயே சத்யனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எவ்வளவு வசதி படைத்த மனிதன் பத்து பாத்திரம் கழுவுகிறாரே. மது மேல் இருக்கும் காதலினால்தானே இது சாத்தியப்படுகிறது என்று ஒரு வகையில் நிம்மதியானான்.

வேலையை முடித்து விட்டு வந்து அமர்ந்தவர்களிடம் “ஏன் பாஸ். இப்ப மது மேல உள்ள லவ்ல இப்படி ஹெல்ப் பண்றீங்க. கல்யாணத்துக்கு பிறகும்  இப்படியே இருப்பிங்களா”

“ஏன் சத்யன் இப்படி கேக்குறீங்க. கல்யாணம் ஆனா என்ன. அப்பவும் இதே ஹேரி, இதே மதுதான இருப்போம்”

“நீங்க இருப்பிங்க. காதல் இருக்குமா. எங்க ஊர்ல நிறைய பசங்களுக்கு காதல் கைக்கூடி லவ் பண்ண பொண்ணு மனைவியா வந்தவுடனே அலுத்து போய் காதல் கசந்துடும்”

“அவங்கல்லாம் கையில இருக்க பொருளோடு மதிப்பு தெரியாதவங்க சத்யன்.  எனக்கு என் பொக்கிஷத்தோட அருமை தெரியும். அப்புறம் எனக்கு இருக்க ஒரே காதல், ஒரே உறவு, ஒரே வாழ்க்கை என் பேபி தான. அவளுக்கு செய்றதுல எனக்கு என்ன கஷ்டம்”

எப்பொழுதும்போல் அவன் காதலை பிரமிப்புடன் பார்த்த சத்யன், ஹேரியை காதலுடன் பார்த்து கொண்டிருந்த மதுவை பார்த்து “அப்புறம் மது. என்ன திடீர்ன்னு பொண்ணா மாறிட்டீங்க. பாவாடை தாவணில்லாம் போட்டு அடக்கமா இருக்கீங்களே” என்றவனை பாசமாக பார்த்தவள்,

“என் கதை இருக்கட்டும். இன்னைக்கு உங்க பிளான் என்னண்ணா. நா பெரிய பிளான் போட்டு வச்சிருக்கேன். முதல்ல என்ன பண்றீங்க. என்னை  கோயிலுக்கு கூட்டிட்டு போறீங்க. அப்புறம் சிட்டிக்கு அழைச்சுட்டு போய் இந்த தங்கச்சி கேக்கிறதெல்லாம் வாங்கி தருவீங்களாம். திரும்ப நைட் என்ன வீட்ல கொண்டுவந்து விட்டுட்டுதான் நீங்க வீட்டுக்கு போகணும்” என்றவளை பார்த்து பேய் முழி முழித்தவன்

“பொங்கல் அதுமா எதுக்கு வெளில அலையிற கண்ணு. நா இன்னொரு நாள் கூட்டிட்டு போய் என்ற சிட்டாளுக்கு என்னன்ன வேணுமோ எல்லாம் வாங்கி தருவேனாம்”

“அப்ப இங்கவே ஃ புல் டே இருங்கண்ணா. லஞ்ச் என்ன வேணுன்னு சொல்லுங்க. நா சமைக்கிறேன்” என்றவளை பரிதாபமாக பார்த்தான்.

“முழிக்காதீங்க. இன்னைக்கு உங்க பிளான் என்னன்னு எனக்கு தெரியும். ஏற்கனவே யாரும் பொண்ணு தர மாட்றாங்க. நீங்க இப்படி பப், பார்ட்டின்னு போறது தெரிஞ்சா எப்படி உங்களுக்கு கல்யாணம் நடக்கும்”

“மாசத்துல ஒரு நாள் பப் போறவன குடிகாரன் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாதடா கண்ணு. டீம்ல கீழ இருக்க சின்ன பசங்களாம் நேத்து மெல்பர்ன் வந்துட்டு என்ன ஆட்டம் போட்றானுங்க. நா அஞ்சு ஆறு  வருசமா இங்க இருந்தும் இன்னும் பால்வாடி பையன் மாதிரிதான் இருக்கேன். எல்லாரும் கிண்டல் பண்றாங்கடா கண்ணு. இன்னைக்கு ஒரு நாள் போய்ட்டு வந்துடறேன்டா ப்ளீஸ்” என்றவன் தொடர்ந்து

“என்னை சொல்ற. பாஸலாம் இங்கயே பிறந்து வளந்தவர். நாளொரு பப்பும்  பொழுதொரு பார்ட்டியுமா இருப்பார். அதெல்லாம் நீ கேக்க மாட்டியா” என்று அவன் கூறியதை கேட்டு ஹேரியை திரும்பி பார்த்தாள் மது.

அவளை பார்த்த ஹேரி “நாங்கல்லாம் இந்த ஊர் கிளைமேட்டுக்கு மருந்து மாதிரிதான் ஆல்கஹால் எடுப்போம் பேபி. அதும் தமிழ் பொண்ணுங்களுக்கு ஆல்கஹால் எடுத்தா பிடிக்காதுன்னு என் தமிழ் டீச்சர் சொன்னதால, நா இப்ப பீர், வைன் கூட எடுக்கறதில்ல பேபி” என்றவனை அன்பொழுக பார்த்தவள்  “கேட்டுக்கிட்டிங்களா. இந்த நாட்டுக்காரர் இப்படி இருக்கார். நீங்க தமிழ் நாட்டுல பொறந்து குடிக்காரனாயி, உங்க கொங்கு நாட்டுக்கே அவ பெயர் தேடி தரிங்க” என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்தவனை ஹேரிதான் காப்பாற்றி விட்டான்.

“விடு பேபி. ப்ராஜெக்ட் லீடா இருந்துட்டு டீம்ல எல்லாரும் போகும்போது அவர் போகலேன்னா நல்லாருக்காது” என்றான்.

“சரிண்ணா. ஹேரி சொல்றதால ஒத்துக்கிறேன். அடிக்கடி இப்படி போனீங்கன்னு தெரிஞ்சது நானே அம்மா நம்பருக்கு போன் போட்ருவேன்”

“தெய்வமே போதும் என்று மதுவை பார்த்து கும்பிட்டவன் ஹேரியை பார்த்து “நீங்களும் வரிங்களா பாஸ் என்னோட. உங்களுக்கு என்ன பிளான் டுடே” என்றான்.

“இல்ல சத்யன். நீங்க போங்க. நா மது பேபிய என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு நினைக்கிறேன்” என்றான்.

அதற்கு மதுவை முறைத்த சத்யனை பார்த்து எனக்கு தெரியாது என்று உதட்டை பிதுக்கினாள் மது. அதற்குள் ஹேரி “அவளுக்கு தெரியாது சத்யன் என் பிளான். இப்பதான் உங்கட்ட சொல்லும்போது தான் அவளுக்கு தெரியும். நீங்க என்ன சொல்றிங்க” என்றான்.

“நீ என்ன சொல்ற மது” என்றான் சத்யன்.

“நீங்கலாம் கிளம்பிட்டீங்கன்னா எனக்கும் போர் அடிக்கும். நேத்தே கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டேன். இப்ப அவனோட போகலாம்னு தான் தோணுது. ஆனா நீங்க எப்படி சொல்றிங்களோ அது படித்தாண்ணா நா நடப்பேன். நீங்க கிழிக்கிற கோட்ட  நா தாண்டவே மாட்டேண்ணா. இது உங்க மேல சத்” என்றவளை முடிக்க விடாமல்,

“போதும்ன்றா கண்ணு. பார்த்தி வர்ற வரை உன்ன எப்படி சமாளிக்க போறேனோ” என்று புலம்பியவன் “சரி அழைச்சிட்டு போங்க பாஸ். இருட்டறத்துக்கு முன்னாடி வீட்ல கொண்டு வந்து விட்ருங்க” என்றான்.

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!