Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 12

அத்தியாயம்                12

பானுக்கு ஒன்றும் புரியவில்லை, ‘’என்ன ஆச்சு இவனுக்கு?  ஏன் சாப்பிடல…..?’’ என புரியாமல் குழம்பியிருந்தாள்.  இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.  அதற்கு மேல் பொறுக்காதவள் அவனிடமே கேட்டுவிட்டாள், ‘’ஏன் சாப்பிட மாட்டேன்றீங்க…..?’’



Advertisement

‘’சாப்பாடு தினமும் செஞ்சு வச்சு வேஸ்டா போகுது.’’

சங்கர், ”ஓஹ்…….. சாப்பாடு வேஸ்ட்டா போகுதா………, அப்ப தூக்கி என் தலையில கொட்டு சரியாகிடும் என்றான் ஆத்திரமாக”.

”நான் ஏன் சாப்பிடலன்னு கேட்கறதுக்கே?  இரண்டு நாளாச்சு இவளுக்கு.  அப்ப நான் சாப்பிடாம இருந்தா இவளுக்கு ஒன்னுமில்லையா…….?” என்ற கோவம் அவனுக்கு.

Advertisement

‘’என்னாச்சு……?  ஏன் கத்தறான்……..?’’  மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சோ……? என விழித்தாள்.

Advertisement

‘’என்ன பார்க்கற…..?  ஒரு மனுஷன் சாப்பிடலன்னா…. ஏன்?

எதுக்குன்னு?  வந்து கேட்க கூட மாட்டியா……?  அதை கேட்கறதுக்கே உனக்கு இத்தனை நாளா….?’’

‘’என்னாச்சு…….? ஏன் கத்தறீங்க…………?’’

Advertisement

‘’கத்தாம என்னடி பண்ணுவாங்க…?  நான் சாப்பிடாம இருந்தா உனக்கு ஒன்னும் இல்லையா……….?’’  உண்மையிலேயே இரண்டு நாட்களாக அவன் உண்ணவில்லை.  ஆஃபிஸில் டீ பிஸ்கட், ஜூஸ் என குடித்து பொழுதை ஓட்டியிருந்தான்.  சரியாக உண்ணாத பசியின் கொடுமை அவனை பேச வைத்தது.

‘’எனக்கு என்ன தெரியும்?  நீங்க ஏன் சாப்பிடலன்னு…..?  சொன்னாதான தெரியும்….’’

‘’உனக்குதான், நான் இங்க ஒருத்தன் இருக்கறதே கண்ணுக்கு தெரியலையே……..?  அப்புறம் நான் சாப்பிடாதது எல்லாம் எப்படி கண்ணுல படும்.  இல்ல இவன் சாப்பிட்டா என்ன…? சாப்பிடாட்டி என்னன்னு? கண்டுக்காம விட்டிருந்தாலும் விட்டிருப்பே, யாருக்கு தெரியும்?”

ம்ப்ச், சும்மா…, ‘’நீங்களே ஏதாவது பேசக் கூடாது.  இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?’’

அவளை உற்றுப் பார்த்தவன், ‘நீ பேங்க் எக்ஸாம்ல பாஸ் பண்ணது, எங்க அம்மா சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு’.  ‘’ஏன்? நீங்க வாய திறந்து சொல்ல மாட்டீங்களோ……..?  இங்கருந்து அங்க போன் பண்ணி சொல்றவ, பக்கத்துல குத்துக்கல்லாட்டம் இருக்கறவன் கிட்ட சொல்லனும்னு தோணலயா……..?’’

நல்லா மனசாட்சிய தொட்டு சொல்லுங்க……….. ‘’என்னைப் பார்த்தாலே பிடிக்கல, எனக்கும் இவளுக்கும் மேட்ச் ஆகாது, செட் ஆகாதுன்னு பேசி திரிஞ்சது யாரு……….?  நானா ………?  நீங்களா………..?’’

ஹான்……… ‘’அ..து…. அப்ப.  இப்ப நான் உன்கிட்ட வந்து பேசதான செய்யறேன்?  நீதான் முறுக்கிட்டு போற….’’

‘’ஓஹ்……… ஸார் வந்து கட்டிக்கோன்னா……… கட்டிக்கனும், வெட்டிக்கோன்னா………. வெட்டிக்கனும், ஒட்டிக்கோன்னா…………… ஒட்டிக்கனும்…”.

”எனக்குன்னு எந்த உணர்வும் இருக்க கூடாதா…….?  எனக்குன்னு மனசு இல்லையா?’’

‘’எல்லாம் உங்க இஷ்டம் தானா………..? ”

” எனக்கு எப்படி தெரியும்?  நீங்க மனசு மாறி, என்கிட்ட பேச நினைக்கறது?  அதையாவது வெளிப்படையா என்கிட்ட சொன்னீங்களா…………?’’

”எப்பப்பாரு…., என்னை திமிர் பிடிச்சவன்னு சொல்லிட்டிருக்கீங்களே, திமிர் எனக்கா….? உங்களுக்கா………………………..?  நீங்க மனசுல நினைக்கறத கூட, உங்க கர்வத்தை விட்டு என்கிட்ட வந்து சொல்ல முடியல. ” என எகிறினாள்.

”இதுல நானே உங்களை எல்லாம் புரிஞ்சு, அறஞ்சு, தெரிஞ்சு  நடந்துக்கனுமோ……? என நக்கலாக  ராகமிழுத்து கூறினாள்.

”அவ்வா…….. என்ன வாய்டி உனக்கு?  இங்க ஒருத்தன் இரண்டு நாளா சாப்பிடாம பசியோட இருக்கானேன்னு கொஞ்சமாவது நினைச்சி பார்த்தியா……..?”

”நல்லா நீ மட்டும் புருஷனுக்கும் சேர்த்து கொட்டிக்கிட்டியா………?”

அவன் இரண்டு நாளாக சாப்பிட வில்லை என்றதும் அவளுக்கு மனதெல்லாம் பதறியது.

”நிஜமாவே…….,  நீங்க சாப்பிடலையா…………?”  நான், நீங்க  ஆஃபிஸ்ல சாப்பிட்டிருப்பீங்கன்னு நினைச்சேன்…..”

ஹ்ம்ம்… ”நல்லா நினைச்சே.  மனுஷன் பசியில வாடி போயிருக்கறது கூட தெரியாம, நிக்க வச்சு கேள்வியா கேட்டு தள்ளு……………” என சோர்ந்து போய் தளர்வாக உட்கார்ந்தான்.

அவன் உட்கார்ந்த்தைப் பார்த்து ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்து குடுத்தவள்,  ”நீங்க சாப்பிடலன்றது எனக்கு எப்படி தெரியும்?”

”நீங்க சாப்பிடலன்றதால, நான் சமைக்க கூட இல்ல”. இருங்க தோசை ஊத்தி எடுத்து வரேன், என கிட்சனுக்கு விரைந்தாள்.

பத்து நிமிடத்தில் அவனுக்குப் பிடித்த மாதிரி நெய் போட்டு முறுவலாக தோசை ஊற்றி எடுத்து வந்தவள், அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னியும், பூண்டு மிளகாய் பொடியும் எடுத்து வந்து அவன் முன் வைத்து சாப்பிடச் சொன்னாள்.

”போடி….., இரண்டு நாளா கண்டுக்கல, இன்னைக்கு மட்டும் என்ன அக்கறை….?”

ம்ப்ச்…  ”முதல்ல சாப்பிடுங்க……….”

”எனக்கு வேணாம்”…. என்று முறுக்கிக் கொண்டான்.

‘நீங்க இப்படி சாப்பிடாம இருந்தீங்கனா……. உங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லுவேன்’.

அவனுக்கு சிரிப்பாக வந்தது.  ”ஏன்டி? சின்ன பசங்க மாதிரி அம்மாகிட்ட சொல்லுவேன்.   அப்பாகிட்ட மாட்டிவிடுவேன்னு மிரட்டிட்டு இருக்க……” என சிரித்தான்.

பின்ன ‘உங்களை எப்படி சாப்பிட வைக்கறது?’

அவளை பார்த்தவன், ‘நீ சாப்பிட்டியா………. ?’

”டீயும் பிரட்டும் சாப்பிட்டேன், நீங்க சாப்பிடாம இருந்ததால நான் சமைக்கவேயில்ல…….”

”புருஷன் சாப்பிடலன்ன உடனே, வேலை மிச்சம்னு உட்கார்ந்துட்டியா……?  சமைச்சு சாப்பிடறதுக்கு என்ன….?நீயும் உட்காரு சேர்ந்து சாப்பிடலாம்……….”

நான் எனக்கு ஊத்திக்கறேன், இதுல உங்களுக்கு மட்டும் தான் இருக்கும் நீங்க சாப்பிடுங்க.

”நீயும் ஊத்தி எடுத்துட்டு வா சேர்ந்து சாப்பிடுவோம்.”

”ப்பாஹ்……, இவனோட…….  படுத்தறா….ன்..யா…   என சலித்துகொண்டவள், கிட்சனுக்கு சென்று அவளுக்கும் தோசை சுட்டு எடுத்து வந்து அவனுடன் சேர்ந்து உட்கார்ந்தாள்”, உண்பதற்காக.

பூர்ணிமாவுக்கும் மதுசூதனனுக்கும் இருவீட்டாரும் ஒன்று சேர்ந்து கல்யாணம் பேசி முடித்திருந்தனர்.

பரிசம் போட நாள் குறித்தனர் பெரியோர்கள் ஒன்று கூடி.  நிச்சயத்திற்காக ஜமுனாவும், கலிய மூர்த்தியும் நேரில் வந்து பானுவையும் சங்கரையும் அழைத்துவிட்டு சென்றிருந்தனர்

நாளை நடைபெறவிருக்கும் நிச்சயத்திற்கு பானுவும் சங்கரும் அவனது காரில் முட்லூருக்கு சென்று கொண்டிருந்தனர்.  மனைவி பேசவில்லை என்றாலும் சங்கர் அவளிடம் பேசாமல் இருப்பதில்லை.

கணவனும் மனைவியுமாக பயணிக்கும் முதல் பயணம் இது.  அதிகாலையிலேயே கிளம்பியிருந்தார்கள்.   பானு காரிலேயே தூங்கியிருந்தாள்.

மனைவி தூங்கியதை பார்த்தவன், அவள் உட்கார்ந்திருந்த சீட்டை,  படுப்பதற்கு வாகாக பின் பக்கமாக சாய்த்து விட்டான்.   தூக்கத்தில் சாயாமல் இருக்க, சீட் பெல்ட்டையும் அவளுக்கு மாட்டி விட்டிருந்தான்.

கணவனது தொடுகையை, அரைத் தூக்கத்தில் அவள் உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் கண்மூடி சாய்ந்திருந்தாள்.  சங்கர்  அவளிடம் சகஜமாக பேச முயன்றாலும், அவள் அவனிடம் நெருங்க முடியாமல் அவன் பேசிய வார்த்தைகள் முட்களாக நெஞ்சில் தைத்து கொண்டிருந்தது.

ஒன்பது மணிவாக்கில் ஹைவேசில் இருந்த ஒட்டலில் நிப்பாட்டியவன், அவளை சாப்பிடுவதற்காக எழுப்பினான்.

‘’பானு எழுந்திரு..’’ என அவள் தோள்களை தட்டி எழுப்பினான்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள், அவன் எழுப்பியதும், எழுந்து எங்கிருக்கிறோம் என சுற்றுமுற்றும் பார்த்தாள்.  அவளையே பார்த்திருந்தவன், சாப்பிடறதுக்காக நிறுத்தியிருக்கேன், ‘’வா சாப்பிடலாம்’’ என கூப்பிட்டான்.  இறங்கி அவனுடன் சாப்பிடச் சென்றாள்.

சங்கர், ‘’என்ன சாப்பிடற…….?’’

பானு, உங்களுக்கு என்ன சொல்றீங்களோ அதையே சொல்லுங்க என்றாள்.  இருவருக்கும் பூரியை ஆர்டர் செய்தான்.  சாப்பிட்டு முடித்ததும் இருவருக்கும் மாதுளை ஜுஸ் ஆர்டர் செய்து குடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்,

வழியில் டோல்கேட்டில் மல்லிகைப் பூவும், வெள்ளரிப் பிஞ்சும் விற்பதை பார்த்தவன்,  பானுவிடம் பூ வாங்கிக்கிறியா…..? என்றான்.

ஹ்ம்ம்…

பூ, வெள்ளரி இரண்டையும் வாங்கியவன் அவளிடம் நீட்டினான்.   பூவை தலையில் சூடிகொண்டவள், வெள்ளரியை எடுத்து கடித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

பானு கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வெள்ளரியை அவளிடம் இருந்து பிடுங்கினான் சாப்பிடுவதாற்காக.

அய்ய…, அது எச்சி.  இதை எடுத்துக்கோங்க….. என கவரில் இருந்து ஒரு வெள்ளரிப்பிஞ்சை எடுத்து நீட்டினாள்.

”இதுவே டேஸ்டாதான் இருக்கு” என பானுவைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தான்.

அவனது பார்வையில் வெட்கம் வந்து, குப்பென்று முகம் சூடானது.   கார் கதவு கண்ணாடி வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளை பார்த்து உல்லாசமாக சிரித்தவன் வெள்ளரியை கடித்துச் சாப்பிட்டு கொண்டே…….

”வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

கண்ணு அழகு கண்ணு…
காதலிக்க ஏத்த பொண்ணு…
சென்னை ரயிலுக்குள்ள…
சிக்கிகிட்ட ஊட்டி…..    ”பானு…”

பானு திரும்பி அவனை முறைத்து பார்க்கவும்,

ஸாரி தங்க் சிலிப்பாயிடுச்சு

‘சிக்கிகிட்ட ஊட்டி பன்னு….,

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா…

உன்ன நானும் பாத்த நேரம்…
ஆசையோட பேச வேணும்…
என்ன தேவை சின்ன பொண்ணே… கேளம்மா…’

என உல்லாசமாக பாடிக்கொண்டே டிரைவ் செய்தான்.

பானுக்கு அவனது சேஷ்டையை பார்த்து சிரிப்பு வந்தாலும், அவனிடம் காட்டாமல் முகத்தை பக்கவாட்டில் திருப்பிகொண்டு, அவன் பாடுவதை ரசித்துகொண்டு வந்தாள்.

‘உன் நினைப்பு மயக்குதடி…
பட பட பட பட வென்று…
என் மனசு துடிக்குதடி…

கண்ணு இரண்டும் அலையுதடி…
கட கட கட கடவென கட்டி…
என்னை இழுக்குதடி… ஓஓஓ…’

என சங்கர் அவளைப் பார்த்து பாடும் பொழுது, ”இதயம் முழுதும் இன்ப சாரல், தேனூற்றாக…. அவளுக்குள் ஆனந்த பரவசத்தை அள்ளி தெளித்தது”.

பாட்டும் கேலியுமாக இருவரும் மனம் முழுவதும் சந்தோஷமான  குதூகலத்துடன் முட்லூரை வந்தடைந்தனர்.

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட்டனர் பானுவும் சங்கரும்.  சரசு மகனையும் மருமகளையும் வாசலிலேயே நிற்க வைத்து, ஆரத்தி எடுத்து வரவேற்றார் சந்தோஷமாக.  ராகவனும் இவர்களுக்காக வீட்டில் இருந்தார்.

மதிய விருந்து மகன் மருமகளுக்காக தடபுடலாக தயார் செய்திருந்தார் சரசு.  திருமணமாகி முதன் முறை இருவரும் சேர்ந்து வருவதால், அதுவும் மகன் நெடுநாள் கழித்து வீட்டிற்கு வருவதால் சரசு மகிழ்ச்சியாக  இருந்தார்.

ராகவனும் இவர்களுக்காக இன்னும் சாப்பிடாமல் காத்திருந்ததால் அவரையும் இவர்களுடனேயே உட்கார வைத்து பரிமாறினார் சரசு.

சங்கர், ‘’நீங்க ஏன் ப்பா…… இன்னும் சாப்பிடாம இருக்கீங்க?’’

எங்கே சரசு அவரை சாப்பிடவிட்டார்.  மணி இரண்டுக்குமேல் ஆகியிருந்தது.  அவர் பசி தாங்கமாட்டார் என சங்கருக்கு தெரியும்.  மகன் கேட்டதும் ‘’ராகவன் மனைவியைத்தான் ஏறெடுத்து பார்த்தார்.  பேசாம சாப்பிடுங்க என கண் ஜாடை செய்தார் சரசு ராகவனை’’.

பின்னே ராகவன் பசிக்குது என கேட்டிருந்தும், மகன் மருகளுக்காக அவரையும் சாப்பிட விடாமல் காத்திருக்க வைத்திருந்தார் சரசு.  இப்ப தான் என் பையனே மனசு மாறி, ரொம்ப நாள் கழிச்சு பொண்டிய கூட்டிட்டு வீட்டுக்கு வரான்.

ஒரு நாள்,  ஒரு வேளை ,அவனுக்காக சாப்பிடாம உங்களால வெயிட் பண்ண முடியாதா….. என கேள்வி கேட்டு ராகவனை கடுப்பேத்தியிருந்தார்.

”விருந்தில் இன்று ராகவனுக்குப் பிடித்த ஐட்டமாகவே இருந்தது.  பின்னே அவையெல்லாம் மகனுக்கும் பிடிக்குமல்லவா….?  இருந்தும் மகன் வந்ததற்கு பிறகு உண்ணலாம் என அவரைக் கண்ணாலேயே பார்க்க வைத்து காக்க வைத்திருந்தார்”.

பானு சரசுடன் பிறகு உண்பதாக சொல்லியும், இல்லல்ல நீயும் உட்காரு, என அவளை வற்புறுத்தி மகனுடனேயே அமர வைத்து தன் கையாலேயே பரிமாறினார்.

‘’முதல் முறை மகனும் மருமகளும் ஒன்றாக அமர்ந்து உண்பதைப் பார்த்தவருக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்து இருந்தது’’.

மதிய உணவு முடித்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தவர்கள், பானுவின் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.  சரசுவும் அவர்களுடன் சென்றார்.

நாளைக்கு மதுசூதனனுக்கு நிச்சயம் என்பதால் ஜமுனா அவரையும் வருமாறு போனில் அழைப்பு விடுத்திருந்தார்.

பானுவின் வீட்டிலும் இவர்களை ஆரத்தி எடுத்தி உள்ளே அழைத்து சென்றனர்.   திருமணத்திற்கு பிறகு மகளும் மருமகனும் சேர்ந்து முதன் முறையாக வீட்டிற்கு வருவதால் ஜமுனாவுக்கு  சந்தோஷம் தாங்க முடியவில்லை.

”ஜமுனாவின் மகிழ்ச்சி அவரது முகத்திலேயே தெரிந்தது”.

வீட்டில் கலியமூர்த்தி, மதுசூதனன் இன்னும் சில உறவினரும் இருந்தனர்.  அவர்கள் எல்லோரும் நாளைய சுபநிகழ்ச்சிக்காக முன்கூட்டியே வந்திருந்தனர்.

சங்கர் பயந்தது போல எல்லாம் இல்லாமல் வீடு பெரியதாகவே இருந்தது.  பழைய காலத்து வீட்டை முன்பக்கம் மட்டும் இடித்து, இரண்டு பக்கமும் இரண்டு அறைகள், ஹால், பூஜை அறை, கிட்சன் என கட்டியிருந்தவர்கள், பின் பக்கம் அப்படியே பழமை மாறாமல் அதனை சீர்செய்து வைத்திருந்தனர்.

அதற்குப் பின்னே நீண்ட தோட்டம், தோட்டத்தின் ஒரு பகுதியில் மாட்டுக் கொட்டகையும், மறுபக்கம் மூங்கிலாலேயே வேலியிட்டு தோட்டமும் வைத்திருந்தனர்.   தோட்டத்தில் பூச்செடிகள், காய்கறி செடிகள் நிறைய இருந்தது.

சங்கர் இதுதான் முதல்முறை வருவதால், மதுசூதனன் அவனை அழைத்துக் கொண்டுபோய் சுற்றி காண்பித்து கொண்டிருந்தான்.   மாலை நேரமாதலால் தோட்டத்தில் நல்ல காற்று வந்தது.

அங்கிருந்த பூவரச மரத்தில் பலகையால் ஊஞ்சல் கட்டி வைத்திருந்தது.  அதனைப் பார்த்து, ‘இங்கே எந்த சின்ன குழந்தை இருக்கிறது, என ஆச்சர்யமாக மதுவைப் பார்த்தான்’, சங்கர்.

மது, சிரித்துக்கொண்டே, அது பானுக்காக கட்டியது.  அவள் வீட்டில இருந்தாள்னா…, இங்க வந்து உட்கார்ந்துப்பாள்.  இதுதான் அவளுடைய பேவரிட் இடம்.  அந்த மரத்துக்கு கீழ உட்கார்ந்துதான் படிக்கறது எல்லாம்.  அவளுக்காகவே அம்மா அந்த இடத்தை சுத்தமா க்ளீன் பண்ணி வச்சிருப்பாங்க எப்பவும்.

செவலைன்னா அவளுக்கு உயிரு.  செவலயோட எப்பவும் கொஞ்சி, விளையாடிட்டு இருப்பா……. அது பிறந்ததுல இருந்து அதை பாசமா… பானுதான் பார்த்துகிட்டது.  அதுக்கு செவலன்னு பேர் வச்சதும் அவள்தான்.  செவலயும் பானுகிட்ட ரொம்ப பாசமாயிருக்கும் என்றவன், மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்று சிவப்பு கலரில் இருந்த பசுமாட்டைக் காண்பித்து.

சங்கர், இன்ட்ரெஸ்டிங்……….. என சிரித்துகொண்டான்.

அங்கேயே நின்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.  சங்கர் மதுசூதனனின் தொழிலைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.  பேசிக்கொண்டு நின்றிருந்தவர்களை, ஜமுனா வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

ஜமுனா சரசிடம் மருமகனுக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்டு, அவனுக்கு பிடித்தமான உளுந்து வடையும் கேசரியும், வெங்காய பஜ்ஜியும் செய்திருந்தார், மாலை சிற்றுண்டிக்காக.

அவர்களை உள்ளே அழைத்து சென்றவர் சிறு சிறு சில்வர் பிளேட்டில் தான் செய்தவற்றை வைத்து கொண்டுவந்து பரிமாறினார்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், கொத்தமல்லி சட்னியும் செய்திருந்தார்.  கூடவே மருமகனுக்கு பிடித்த விதத்தில் காப்பியும், மகளுக்கான ஏலக்காய் டீயும் சேர்த்துக் கொடுத்தார்.  பானு ஜமுனாவுடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.  இரவு உணவையும் அங்கேயே முடித்தவர்கள் படுப்பதற்காக சங்கரின் வீட்டிற்கு கிளம்பினர்.

பானு, சங்கரிடம் ”நான் இங்கயே அம்மா கூட தங்கட்டுமா..?” என்றாள் தயங்கியபடியே.

சங்கர் ஒன்றும் சொல்லாமல் அவளை முறைத்துப் பார்த்தான்.  என்னடா இவன் அம்மா கூட தங்கட்டுமான்னு தான கேட்டேன், அதுக்கு எதுக்கு முறைக்கிறான் என அவனைப் பார்த்திருந்தாள்.

சங்கர், ”நாம தங்கலாமான்னு கேட்கனும், அது என்ன நான் தங்கவான்னு கேட்கறே”, என்று கடிந்தான் அவளை.

”ஓஹ்……. இதுல இப்படி ஒன்னு இருக்கா……….. ஸாரி அம்மாவோட இருக்கற ஆசையில கேட்டுட்டேன், நாம இங்க இருக்கலாமா………?”

”இன்னைக்கு நீ தங்கினாலும், நோ யூஸ்.  உங்கம்மா கூட உன்னால ஒன்னும் பேச முடியாது.  அவங்களோட டைமும் ஸ்பென்ட் பண்ண முடியாது.  எவ்வளவு பேர் வந்திருக்காங்க…….. பாரு.”

உங்கம்மா பிஸியா இருக்காங்க, இதுல நீயும் தங்கினா உன்னையும் கவனிக்கறேன்னு இன்னும் அவங்களுக்கு வேலைதான் அதிகமாகும்.

நாம நாலு நாள் இருக்கற மாதிரி தான வந்திருக்கோம், அப்புறம் வரலாம் வா, என அவளை கையோடு அழைத்துச் சென்றுவிட்டான்.

அவளது வீட்டினர் இதையெல்லாம் பார்த்திருந்தனர்.  ஜமுனாவுக்கு மகளும் மருமகனும் இணக்கமாக பேசிக் கொள்வதைப் பார்த்ததும், உள்ளம் உவகையில் பூரித்தது.  மதுவுக்கும் சந்தோஷமாக தான் இருந்தது.  இவர்களது ஒட்டாத தன்மையை அவனும் கவனித்திருந்தான் அல்லவா……?

ஜமுனாவுக்கும் மகளை தங்க சொல்லுவதற்கு மனதில் ஆசை இருந்தாலும் மருமகனது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, கட்டாயப் படுத்தாமல் விட்டுவிட்டார்.

சென்னையில் சங்கரும் பானுவும் தனி தனி அறைகளில் படுத்துறங்குவர்.  இங்கு சரசு பானுவை சங்கரின் அறைக்கே உறங்குவதற்கு அனுப்பியிருந்தார்.

”கையில் பால் டம்ளருன் உள்ளே வந்தவளைப் பார்த்தவனுக்கு நமுட்டுச் சிரிப்பு உதட்டில்”.

பால் டம்பளரை அவனிடம் கொடுத்தவள் தான் கீழே படுப்பதற்காக போர்வையை எடுத்து கீழே போட்டாள்.  கட்டிலிலிருந்து ஒரு தலையணையையும் எடுத்து போர்வையின் மேல் போட்டாள்.  அவள் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டே பாலை அருந்திக் கொண்டிருந்தான் சங்கர்.

தான் கொண்டு வந்த பையில் இருந்து மாற்றுத் துணியை எடுத்தவள், கட்டியிருந்த சேலையை மாற்றுவதற்காக பாத்ரூம் சென்றாள்.

சேலையை மாற்றி விட்டு வெளியே வந்தவள் தான் கீழே விரித்திருந்த போர்வையும், தலையணையும் கட்டிலின் மேல் இருப்பதைப் பார்த்து அவனை முறைத்தாள்.  அவன் அதற்கெல்லாம் அசராமல் படுத்திருந்தான்.  மறுபடியும் வந்து போர்வையை எடுத்து கீழே விரிக்கப் போனாள்.

கீழ வேணாம் தரை சில்லுன்னு இருக்கும் பானு, மேலேயே வந்து படுத்துக்கோ என கூப்பிட்டான்.  நான் கீழயே படுத்துக்கறேன் அதுதான் எனக்கு கம்பர்ட்டபிளா இருக்கும்.  இல்லனா தூக்கத்தில உங்க மேல என் கைகால் படும்.

ம்ப்ச், ‘’சொன்னா கேளு.  தரையில படுத்தா குளிரும்.  ஏசி வேற ஓடிட்டிருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல தரை ஐஸ் மாதிரி சில்லுன்னாகிடும்’’.

‘’பரவாயில்லை…, நான் பார்த்துக்கறேன்’’, என படுத்துவிட்டாள் கீழேயே.

நடுச்சாமத்தில் குளிரால் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டவள் குளிரால் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தாள்.

இவளது கொலுசு சத்தத்தில் தூக்கம் கலைந்த சங்கர், இவள் தூங்காமல் இருப்பதைப் பார்த்து மறுபடியும் அவளை மேலே வந்து படுக்க சொன்னான்.

அவனுடன் ஒரே கட்டிலில், அவன் பக்கத்தில், படுக்க கூச்சப்பட்டுக் கொண்டு வேண்டாம் என மறுத்து, அவனுக்கு முதுகு காட்டி திரும்ப படுத்தாள்.

சில நிமிடங்கள் அவள் அவஸ்தையைப் பார்த்தவன், எழுந்து அவளை அலேக்காக தூக்கியிருந்தான் கைகளில்.

அவனது கைகள் தனது உடலில் பட்ட கூச்சத்தில், அவனைப் பார்க்க வெட்கப்பட்டாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!