Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்….9

உன் காதல் ஒரு வரமாய்….9

இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது அமிர்தா சிவாவிடம் டியூஷன் சேர்ந்து.ஞாயிறு காலையிலிருந்து மதியம் வரை அவளிற்கு சொல்லிக்கொடுப்பான் அதன் பின் தனது தேர்விற்கு படிப்பான்.

“ஏய் அடுத்தவாரம் வரும் போது ஒழுங்கா டியூஷன் பீஸ் எடுத்துட்டுவர….”என்று எப்போதும் போல் சிவா கேட்க,

“பீஸ் தானா அடுத்தவாரம் எடுத்துட்டு வரேன்….பை….”என்றுவிட்டு அவள் கிளம்ப,அவளின் கைபிடித்த சிவா,



Advertisement

“ஓய்…என்ன இப்பெல்லாம் ரொம்ப பேசுற…..ஒழுங்கா இரு….”என்று மிரட்டல் போல கூற அதை உணரும் நிலையில் தான் மேடம் இல்லையே அவள் தான் அவன் கரம் பட்டவுடன் பிரம்மை பிடித்தது போல் நின்றுவிட்டாளே.

“ஓய்….”என்று அவன் கத்தவும் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆஆஆ…ஏன் கத்துறீங்க….கையை முதல்ல விடுங்க….”என்றதும் தான் சிவாவிற்கு தான் செய்தது புரிந்து கையை விட்டவன்,

Advertisement

“சாரி….”என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.அமிர்தாவிற்குமே அவன் கை பட்ட இடம் இன்னும் அழுத்துவது போல இருக்க,இருவருமே சற்று நேரம் பேசவில்லை.

Advertisement

“நீ கிளம்பு…..”என்றவன் தானும் கிளம்ப,

“என்ன நீங்களும் கிளம்பிட்டீங்க….”

“வேலையிருக்கு….இனி நான் கூப்பிடும் போது வா….நான் வெளியூர் போறேன்….”என்றுவிட அமிர்தாவிற்கு எழுந்த உற்சாகம் அனைத்தும் வடிந்துவிட,

Advertisement

“எங்க போறீங்க….”என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.கடுவான் குதறிவிடுவானே என்ன தான் அமிர்தாவிடம் அவன் சகஜமாக பேசினலும் சில நேரங்களில் கோபம் கொண்டு கத்தியும் விடுவான்.

“வேலைனு சொன்னேனே…நீ ஒழுங்கா படி….நேரத்தை வீணாக்காத….”என்றுவிட்டு அவன் செல்ல,

“எப்போ வருவீங்க….”

“எப்படியும் இரண்டு வாரம் ஆகும்….”என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.அமிர்தாவிற்கு தான் மனது என்னவோ போல் ஆனது ஆனாலும் வேலையாக செல்பவனிடம் என்ன கேட்க முடியும் இல்லை கேட்கும் உரிமை தான் அவளிற்கு இல்லையே.அவன் சென்ற பிறகு ஏதோ மீண்டும் வெறுமையான உணர்வு.

அமிர்தாவிற்குள் காதல் நுழைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது ஆனால் அதை அவனிடம் வெளிப்படுத்த பயம் அவன் இல்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது தன் மனது அதை தாங்குமா என்ற பயமும் அவளை அவ்வபோது வாட்டி வதைக்கிறது தான் இருந்தாலும் நல்லதே நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருக்கிறாள்.ஆனால் கடவுள் இவள் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டுமே.

சிவா இல்லாமல் இரண்டு வாரங்கள் இரண்டு யுகம் கடந்தது போல் இருந்தது.இதில் வேலை வேறு அவளுக்கு அதிகமாக சரியாக படிக்கவும் முடியாமல் போனது.சரியாக இரண்டு வாரங்கள் கழித்து அமிர்தா அவனிற்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை இதே போல் மேலும் இரண்டு வாரங்கள் கடந்தது.அமிர்தா அவனிற்கு அழைத்து அழைத்து சோர்ந்து போனாள்.

அன்றும் காலை ஒரு முறை அழைத்து பார்த்துவிட்டு தான் பார்க்கிற்கு வந்தாள்.அமிர்தா எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்து படிக்க தொடங்க ஏதோ உள்ளுணர்வு யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்ற சுற்றி முற்றி பார்க்க யாரும் இல்லை என்றவுடன் மீண்டும் படிக்க தொடங்க மீண்டும் அதே உணர்வு சுற்றி பார்வையிட்டவாரே எழுந்தவள் பார்வை ஒரு இடத்தில் நிலைத்துவிட்டது.தூரத்தில் பேசியில் யாருடனோ பேசியபடி வந்து கொண்டிருந்தான் சிவா.

“வந்துட்டாரா….என்கிட்ட சொல்லவேயில்ல….”என்று குறைபட்டு கொண்டவள் வரட்டும் நாம படிக்கிறது போல உட்கார்ந்துடுவோம் அவரா வரட்டும் என்று நினைத்துக் கொண்டு அமிர்தா தன் இடத்தில் அமர்ந்து படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருக்க ஆள் வந்தபாடில்லை.என்னதிது இந்நேரம் வந்திருக்கனுமே ஏன் வரலை ஒருவேளை வெளிய போயிட்டாரா என்று தனக்குள் கூறிக் கொண்டு எழுந்து சுற்று முற்றும் பார்க்க பக்கத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

“இப்ப கூட எனக்கு பேசனும்னு தோணலை பாரேன்….”என்று நினைத்தவள் தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவன் இருக்கும் இடம் நோக்கி சென்றாள்.

“எப்ப வந்தீங்க….ஏன் எனக்கு போன் பண்ணல…நான் உங்களுக்கு எத்தனை தடவை போன் பண்ணனேன் ஏன் எடுக்கலை….”என்று வருசையாக அமிர்தா ஓடி வந்து சிவாவிடம் கேள்வி கேட்க,

“நீ என்ன பண்ணுற இங்க…”என்று தன் நெற்றியை ஒற்றை விரலால் தேய்த்துக் கொண்டே அவன் கேட்க,அமிர்தாவிற்கு கோபம் தலைக்கேறியது,

“நான் கேள்வி கேட்டேன்….”

“நானும் கேள்வி தான் கேட்டேன்….பதில் சொல்லு….”என்று சிவாவும் அழுத்தமாக கேட்க,

“நான் படிக்க வந்தேன்…..”என்று கூறிவிட்டு அவனின் அருகில் அமர,சிவா தன் போல் அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்தவன்,

“இங்க எதுக்கு வந்த ஹாஸ்ட்டல்ல தான உன்னை படிக்க சொன்னேன்….அறிவு இருக்கா உனக்கு….”என்று பல்லிடுக்கில் அவளை திட்ட,அமிர்தாவிற்கு முனுக்கென்று கண்ணீர் வந்தது.அவள் அதை அவனிடம் காட்டாமல் மறைக்க,அதை சரியாக கண்டு கொண்டவன்,

“அழாத….உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டு போனேன்….இப்படி தனியா வந்து படிக்க உட்காரதனு….சொல்லுறத கேட்கலனா திட்ட தான் செய்வாங்க….”என்று அதற்கும் திட்ட,

“அதான் நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்லிட்டேனே….இப்ப நீங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க….”என்று கண்களை துடைத்துக் கொண்டு அவள் கேட்க,சிவாவிற்கு ஆச்சிரியமாக போனது எப்போதும் கோபபட்டால் அழ ஆரம்பிப்பவள் இன்று அதையும் துடைத்துக் கொண்டு அவனிடம் வாயாட அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவனின் பார்வை உணர்ந்து,

“என்ன பதில் கேட்டா என்னை பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”என்று அமிர்தா சிவந்த முகத்துடன் கேட்க,சிவா தன் பார்வையை அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டான்.அமிர்தா மேலும் பேச ஆரம்பிக்கும் முன் சிவாவின் கைபேசி அழைக்க,திரையில் ஒளிர்ந்த எண்ணை பார்த்தவுடன் சிவாவின் முகமும் ஒளிர்ந்தது,உற்சாகத்துடன் பேசியை

“ஹலோ….”என்று இவன் அழைத்த நொடி,

“டேய்…..எப்படிடா இருக்க….”என்று உற்சாக ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் எங்கோ இருந்த அமிர்தாவின் கவனம் அவனிடம் திரும்பியது.என்ன ஏதோ பொண்ணு குரல் மாதிரி இருக்கு என்று அவளிள் ஒருவித பதட்டம் ஒரு தவிப்பு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க நினைக்க,

“ம்ம்….நான் நல்லா இருக்கேன்….நீ நல்லா இருக்கியா….ம்ம்ம்…..”என்று சிவா கேட்க அந்த பக்கம் ஏதோ பெண்ணின் குரல் தான் ஆனால் அது சரியாக அமிர்தாவிற்கு கேட்கவில்லை.ஆனால் அதற்கு சிவாவின் முகத்தில் வந்து போன மலர்ச்சி மனதை ஏதேதோ செய்தது.சிறிது நேரத்திற்குள் அமிர்தாவின் மனது நடுக்கம் கொள்ள அவளை மேலும் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தானோ என்னவோ,

“சரி நான் வேலையா இருக்கேன் நைட் பேசுறேன்…..”என்று கூறிவிட்டு வைத்துவிட,

“யாரு…..”என்று வேகமாக வந்தது அடுத்த கேள்வி,

“யாரு????”

“அது போன்ல யாருனு கேட்டேன்…..”என்று கேட்டவளை கண்களை சுருக்கி பார்த்தவன்,

“உனக்கு எதுக்கு அது….நீ வந்த வேலையை பாரு….என்னோட தனிப்பட்ட விஷயங்கள்ல நீ தலையிடாத….”என்று காட்டமாக கூற அமிர்தாவின் மனது நொருங்கியது.இதற்கு மேல் இங்கு இருந்தால் உடைந்து விடுவோம் என்று நினைத்தவள் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.சிவாவும் அவளை போகாதே என்று கூறவில்லை.

ஆகிற்று இரண்டு வாரங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு அதன் பிறகு அமிர்தா அவனை அழைக்கவில்லை.மனதெல்லாம் வலி என்னவென்று தெரியாத வலி இதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை.கடையிலும் இப்போதெல்லாம் வேலைகள் அதிகமாக இவளின் தலையில் விழ திண்டாடி தான் போனாள்.அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் கோவிலுக்கு வந்திருந்தாள்.

“என்னமா அமிர்தா….எப்படி இருக்க….”என்று குருக்கள் கேட்க,

“நல்லா இருக்கேன் சாமி….”என்றவள் திருநீர் எடுத்து வைத்துக் கொள்ள அப்போது சரியாக அவளின் எதிரில் வந்து நின்றான் சிவா.

“என்னப்பா சிவா…எப்படி இருக்க….”

“நல்லாயிருக்கேன்…..”என்றவன் பரிகாரம் சுற்ற சென்றுவிட்டான்.எதிரில் இருந்தவளை கண்டுகொண்டானில்லை.அவனது செயலில் அமிர்தாவிற்கு தான் மனது இன்னும் காயம் கொண்டது.அவன் தன்னை வேண்டும் என்று தவிர்ப்பதாக ஒரு எண்ணம் பிறந்தது.அவளின் எண்ணம் தான் சரியென்பதை போல் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து அவளை நிலைகுலைய செய்தன.

அமிர்தா பரிகாரத்தை சுற்றி விட்டு வெளிவந்தவள் கால்கள் தன் போல் பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு செல்ல அவர்கள் எப்போதும் அமரும் மரத்தடியில் அமர,

“இங்க என்ன செய்ற….”என்று கேட்டபடி வந்தான் சிவா.

“சும்மா…”

“ம்ம்….படிச்சியா…..அடுத்த மாசம் உனக்கு எக்ஸாம்…..”என்று கூற,

“தெரியும்….”

“ம்ம்….நல்லா எழுத டிரை பண்ணு….”என்று கூற அவனை திரும்பி பார்த்தவளுக்கு ஏனோ அவனை தவிர்க்க முடியவில்லை,

“என்னால படிக்கமுடியல….வேலை அதிகமா இருக்கு….ரொம்ப கஷ்டமா இருக்கு….முன்னாடி படிச்சது கூட இப்ப மறந்து போனது போல இருக்கு….”என்று படபடவென்று அவள் கூற அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“அப்புறம் எதுக்கு பொய் சொன்ன…”என்று நிதானமாக கேட்க,

“அது….எனக்கு உங்க மேல கோபம்…..”என்று மனதில் அழுத்தியதை உடைத்துவிட,

“அதுக்கு நான் என்ன பண்ண….”என்று அவன் அசராமல் கேட்க,

“என்ன இப்படி பேசுறீங்க…..அன்னைக்கு எப்படி பேசுனீங்க….எனக்கு எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா….”என்று மூக்கு விடைக்க அவள் கேட்க,

“என்ன சொன்னேன் என்னோட பர்சனல் விஷயத்துல உள்ள வராதனு சொன்னேன்….இதுல என்ன இருக்கு….”

“என்ன பர்சனல் கேட்டாங்க….போன்ல யாருனு கேட்டா அது பர்சனாலா…..”

“அதை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ணபோற….”

“அது…நான்….சும்மா….”என்று திக்கி திணற,

“ம்ம்….சரி அதை விடு….இப்ப என்ன செய்ய போற….அடுத்த மாசம் எக்ஸாம்….அதுக்கும் அடுத்த மாசம் எனக்கு எக்ஸாம் இருக்கு….அதனால அடுத்த வாரம் காலை பத்து மணி….”என்று நேரத்தை காட்டிவிட்டு அவன் எழ,அதுவரை அழுது வடிந்த அவளின் முகம் அவனின் பேச்சில் விசிககிக்க,

“அப்புறம் படிக்க மட்டும் தான் வரனும்….இல்ல வராத….தேவையில்லாத டிஸ்ட்ராக்‌ஷன் நல்லதுக்கு இல்ல….இப்பெல்லாம் அடிக்கடி ஆகுற….”

“இல்ல அப்படியெல்லாம் இல்ல…..அது நான் சாதாரணமா தான் கேட்டேன்….”என்றவளுக்கு மனதின் தவிப்பு அதிகரித்து விட்டது அவன் தன்னை கண்டு கொண்டானோ என்று.மனதில் காதல் புகுந்தால் திருட்டுத்தனமும் சேர்ந்துவிடுகிறது.

“உன் வாய் தான் அப்படி சொல்லுது….இங்க பாரு அமிர்தா நம்மல மாதிரி வாழ்வாதாரமே இல்லாதவங்களுக்கு நல்ல வேலை கிடைச்சா தான் வாழவே முடியும்….இது உன்னோட வாழ்க்கை இதுல மட்டும் நீ ஜெயிச்சிட்ட உன்னோட வாழ்க்கையே மாறிடும்….. அதனால கவனமா இரு….”என்று எச்சரிப்பது போல கூற அமிர்தாவிற்கு நெஞ்சம் கனத்து போனது.அவன் கூறுவது நிஜம் தானே நான் படிப்பதற்கு தானே அவனிடம் வந்தேன் ஆனால் அதை மறந்து இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்….இது தப்பு….ரொம்ப தப்பு….என்று மூளை கூற,மனதோ வேறு ஒன்றை கூறியது,அது அவனை கண்ட நொடி அவன் பால் சாய்ந்துவிடுகிறது.என்ன முயன்றும் அதை தடுக்க முடியவில்லை.

“என்ன யோசனை பலமா இருக்கு….”என்று சிவாவின் குரலில் சிந்தனை கலைந்தவள்,

“ஆங் ஒண்ணுமில்ல….”

“சரி அப்ப அடுத்த வாரம் பார்க்கலாம்….இப்ப போய் படி….சும்மா எதையாவது யோசிக்கிட்டு இருக்காத….புரியுதா…..போ கிளம்பு”என்று கட்டளை இட,

“ஏன் நான் இங்க இருக்க கூடாத…”என்று மீண்டும் துளிர் விட்ட துடுக்கு தனத்தில் அவள் கேட்க திரும்பி அவன் முறைத்த முறைப்பில் அமைதியாக தனது விடுதிக்கு கிளம்பிவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!