Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vangi Vanthaval Naan 9 1

வரம் வாங்கி வந்தவள் நான்

                    

                       அத்தியாயம்   9

 



Advertisement

தன் சின்ன மாமாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தவள் அவர் போனை தன் தாயிடம் கொடுக்கச் சொல்ல,

 

தன் கிரான்மாவிடம் கொடுக்கவும், சொல்லுய்யா சின்னவனே …ம்ம்ம் சரிப்பு சரிப்பு..

Advertisement

 

Advertisement

தர்ஷினி தன் பார்வையை சுழற்ற தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரை பார்க்கவும் முறைத்து, கண்ணை விரித்து, மூக்கை சுருக்கி, நாக்கை வெளியில் நீட்டி அவனை அதட்ட.. அவளின் இந்த அழகில் சுந்தர் இதயம் ஒருநிமிடம் நின்று துடித்தது.. அடிப்பாவி இவ என்ன பண்றா..? இதுக்கு பேரு கோபமா..!! தந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு எதுவும் பேசவும் முடியவில்லை..கண்ணை அவளிடம் இருந்து அகற்றவும் முடியவில்லை..

 

அவர் போன் பேசி முடிக்கவும் சுந்தர் தன் தந்தையிடம், அப்பு நான் இவங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனுமே.. அப்படியே வெளியில போய் பேசிட்டு வரவா..?”

Advertisement

 

அப்பத்தாவோ எதுக்குப்பு நீ வெளியில போற..?? நாங்க இப்படியே காலார நடந்து போய் காப்பி குடிச்சிட்டு வர்றோம்.. நீங்க இங்கனயே பேசுங்கப்பு..

 

தன் பேத்தியை அருகில் இழுத்து காதில் ஏதோ சொன்னவர் அசால்டாக எழுந்து தந்தையோடு வெளியில் செல்ல சுந்தருக்கு ஆச்சர்யம்.. ஹாஸ்பிட்டல் வரும்போது கண்ணு முழிக்காம அப்படியே வீக்கா இருந்தவங்களா இவங்க..!! ஒருவேளை இதெல்லாம் நடிப்பா.. ??அப்பத்தா மீண்டும் திரும்பி வந்து,

 

சுந்தரு அவள ஏன்பு மரியாதையா பேசுற.. ஏத்தா தங்கம் உனக்கு வயசு பதினெட்டா இல்ல பத்தொன்பதா..??”

 

இல்ல கிரான்மா 20..!!”

 

பத்தியா உன்னைவிட இளையவதான் சும்மா பேர் சொல்லியே கூப்பிடு..?” அவர் வெளியில் செல்ல.

 

சுந்தரோ ஐயோ அம்மா.. இருபதா…. ரெண்டுபேருக்கும் பத்துவயசு வித்தியாசமா… அதிர்ச்சியில் அவளையே பார்ப்பதை கண்டவள்..

 

[the_ad id=”6605″]

 

 

க்கும் க்கும்”.. தொண்டையை செரும..

 

அவன் மனசாட்சியோ டேய் சோனமுத்தாஆஆஆ… கேட்க வந்தத ஒழுங்கா கேளுடா எப்ப பார்த்தாலும் அந்த பொண்ண ஈஈஈ..ன்னு பார்த்துக்கிட்டு..!! இதுக்குத்தான் காலகாலத்துல கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றது.. இப்ப பாரு இந்த பொண்ண கண்ணாலயே ஸ்கேன் பண்ணுவ போல.. நீ ஆஸ்திரேலியாவுல இருந்தப்போ கூட இப்புடி இல்லையேடா..  ரொம்ப கெட்டுப்போயிட்ட.. இன்னைக்கு எவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு.. நீ இத்தன வருசம் கட்டிக்காத்த உன் மானமே காத்துல பறந்திருக்கு.. அப்புவும் இந்த பொண்ண சைட் அடிச்சா… என்னடா நியாயம்..?  உங்க அப்பாரு இருக்க கண்டு ஏதோ கொஞ்ச நஞ்சம் உன்னை உலகம் நம்புது.. அத முழுசா காப்பாத்துடா எருமை மாடு..??’அவன் மனசாட்சியே அவனை கழுவி ஊற்ற, அதற்குள் தர்ஷினியோ..

 

ஏய் சுந்தர் என்ன மேன் என்னயே லுக் விடுற.. ஸ்டுப்பிட்.. அறிவில்ல.. அவங்க எல்லாரும் மேரேஜ் பண்ணிக்க சொன்னா உடனே நீயும் ஒத்துக்குவியா.. நான்தான் கிரான்மாக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த நியாபகத்தில் இருந்தேன்.. உனக்கு எங்கயா போச்சு அறிவு…??”

 

உண்மையிலே திடிரென நடந்த திருமணத்திற்கு மன்னிப்பு கேட்கத்தான் அவன் அவளிடம் தனியாக பேச வேண்டும் என நினைத்தது.. ஆனால் தர்ஷினி இப்படி பேசவும் அதை மறந்தவன்…அடிப்பாவி என்னடி பேசுற..??”

 

ஆஆஆ என்னமேன் என்ன டி போடுற..?” இடுப்பில் கைவைத்தவள் கோபத்தில் மூச்சு வாங்க..

 

ஆமாண்டி டால்டா..!! முதல்முதலா புருசன்கிட்ட இப்படியா பேசுவ..? உன்னைவிட பத்துவயசு பெரியவன் பேர் சொல்லி கூப்பிடுற.. பத்தாததுக்கு வாய்யா போய்யான்னு.. பல்லை பேத்துருவேன் பார்த்துக்க..?” சட்டையின் கையை மடித்துவிட்டு சண்டைக்கு வர..

 

ஏய் பட்டிக்காட்டான் ஏய்யா இப்ப சோல்டர உயத்துர.. போயா பேக்கு..?”

 

சுந்தர்தான் திகைத்துபோயிருந்தான்… நாம பார்க்கும் போதெல்லாம் சோகமா இருந்தவளா இவ இல்ல வேறாளா..??

 

அவள் கையை பிடித்து இழுத்து பின்புறம் திருப்பி இடுப்போடு இறுக அணைத்தவன் அவள் வாயை மூடி, பாவம் ரொம்ப சின்னப் பொண்ணுன்னு பார்த்தா.. என்னமா வாய் பேசுர.. எதுக்குடி என் ரூமுக்கு வந்த..? உன்னால எனக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா.. உன்னால என் பேரே கெட்டுப்போச்சுடி..??” இதுவரை யாரையும் மரியாதை இல்லாமல் பேசாதவன் தங்கைகளை கூட ஆத்தா என அடைமொழியோடு அழைப்பவன் மனைவியோடு இத்தனை நெருக்கத்தில் உரிமையோடு பேசத்துவங்கியிருந்தான்..

 

அவள் அப்படியே அதிர்ச்சியில் நிற்கவும் குரலை மென்மையாக்கி, உனக்கு என்னாச்சு?? நீ எப்படி என்னோட ரூமுக்கு வந்த..??” அவனுக்கு உள்ளுக்குள் பயம்தான் என்ன வரப்போகிறதோ என்று..

 

தன் பலத்தை கொண்டு அவன் கையை தள்ளியவள், ஸாரி.. ஸாரி.. மிஸ்டேக் எல்லாம் என்மேலதான்.. நான்தான் ரூம்நம்பர சரியா வாட்ச் பண்ணல.. அதோட அந்த அவசரத்துல ஒன்னும் தெரியவும் இல்லை.. என்னாலதான் இவ்வளவு ப்ராபளமும்… வெரி ஸாரி…

 

தர்ஷினிக்கு நேற்று நடந்தது நினைவுக்கு வர நேற்று இரவு கிரான்மாவோடு  சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்தவர்கள் அப்பத்தா எப்போதும் போடும் தூக்க மாத்திரை போட்டு படுத்துவிட்டார்.. தர்ஷினிக்கு தூக்கமே இல்லை.. ஏனோ தம்பியின் நினைவு.. திருமண மண்டபத்தில் நிறைய பையன்கள் அவன் வயதில் இருக்க தானும் அவனும் அடித்த லூட்டிகள் எல்லாம் நியாபகத்திற்கு வந்தது..

 

இருவரும் ஒருநிமிடம்கூட சும்மா இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு ஆட்டம், சேட்டை.. அவர்கள் தந்தை வீட்டு தோட்டத்தையே பிளே கிரவுண்டாக மாற்றியிருக்க இருவரும் சேர்ந்துதான் பேட்மிட்டன், புட்பால், ஓடிபிடித்து என அனைத்தும் விளையாடுவார்கள். .பலநேரம் தந்தையையும் தங்களோடு சேர்த்துக் கொள்வார்கள்..

 

[the_ad id=”6605″]

 

 

 தான் ஊஞ்சலில் அமர்ந்தால் தாத்தாவோ தம்பியோதான் ஆட்டி விடுவார்கள்.. இருவரும் அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டாலும் ஐந்து நிமிடம்தான் பின் ஒருவரை ஒருவர்விட்டு இருக்க முடியாது.. இருவரும் அப்பத்தா மடியில் படுத்துக் கொண்டு பழைய புராண கதைகளை கேட்பார்கள்..கண்ணில் நீர் வழிய அப்படியே வானத்தை வெறித்திருந்தவளுக்கு அந்த நிமிடமே மாடியில் இருந்து குதித்துவிட்டாள் என்ன என தோன்ற துவங்கியது..

 

தனியாக ஒருநிமிடம் அவள் இருந்தாலும் அடுத்த நிமிடமே அவளுக்கு இந்த நினைவுதான்..இங்கு வந்தபிறகு அந்த எண்ணங்கள் இந்த சூழ்நிலையிலும் கிரான்மாவின் பாசத்தினால் சற்று குறைந்திருந்தாலும் இன்று என்னவோ தம்பியின் நினைவுதான்.. வானை வெறித்துக் கொண்டிருக்கும்போதே அவள் பின்னால் யாரோ  மயக்க மருந்தை வைத்து அழுத்தியிருக்க மயங்கி விழுந்திருந்தாள்..

 

கண் விழிக்கும்போது ஒரு கட்டிலில் படுத்திருக்க அறை இருட்டாக இருந்தது.. மெதுவாக எழுந்தவள் அப்படியே தடவி எதாவது ஸ்விட்ச் தெரிகிறதா என பார்க்க எதுவும் தெரியவில்லை…, ப்ளிஸ் யாராவது இருக்கிங்களா… ஹலோ.. கிரான்மா…எங்கயிருக்கிங்க.. ஹெல்ப்.. ஹெல்ப்..” அவள் கத்த சட்டென அவள் வாயை யாரோ அடைத்திருந்தார்கள்..

 

மூக்கில் மயக்க மருந்து இருந்த கர்சிப்பை வைத்து அழுத்த வர இந்த முறை சுதாரித்தவள் மூச்சை இழுத்துபிடிக்க இந்த இருட்டில் அவனும் மூக்கில் சரியாக அதை வைக்கவில்லை..லேசான மயக்க மருந்து மட்டுமே உள்ளே சென்றது..

 

சற்று நேரம் பொறுத்தவன் அவளை கட்டிலில் தள்ளிவிட்டிருந்தான்.. அவனுக்கு போன்வரவும் வாங்க பாஸ்.. பொண்ணு தயாரா இருக்கு.. அவன் வெளியில் கதவை சாத்திவிட்டு சென்றான்..தர்ஷினி இழுத்திருந்த மூச்சை வெளியிட்டு தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள்..

 

ஒரு பத்துநிமிடம் கழிந்திருக்கும் யாரோ கதவை திறந்துகொண்டு உள்ளே வரும் ஒலி.. வந்தவர்கள் லைட்டை போடவில்லை.. கட்டிலுக்கு கரெக்டாக வர தர்ஷினி கட்டிலில் இல்லை.. தன் போனில் டார்ச்சை உயிர்பித்து அந்த வெளிச்சத்தில் தர்ஷினியை தேட கட்டிலுக்கு கீழாக இருப்பதை கண்டு அவளை இழுக்க அந்த உருவம் ஆண் என்பது மட்டும் தெரிந்தது.. முகம் தெளிவாக தெரியவில்லை..

 

இங்க வா…??” கட்டை குரலில் அவளை இழுக்க தர்ஷினிக்கு இந்த குரலை எங்கோ கேட்ட நியாபகம்..!! அவளை இழுத்து அவள் சேலையில் கைவைக்க மறுநிமிடம் சேலை அவன் கையில்..

 

ஏய் விடு..விடு.. அவள் கதற.. அவள் வாயை மூடியிருந்தான்.. அவனிடம் இருந்து போராடியவளோ தற்கொலை கூட செஞ்சுக்கலாம் இந்த மாதிரி அடுத்தவன்கிட்ட அசிங்கப்பட்டு சாகக்கூடாது..

 

தன் நகத்தால் அவன் முகத்தில் கீற… ஸ்ஸ்ஸ் சட்டென அவளை ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான்.. அவள் சட்டை பாவாடை என கைக்கு அகப்பட்டதை கிழிக்க ஆரம்பித்திருந்தான்.. இவன் அறைந்த அறையிலேயே தர்ஷினிக்கு மயக்கம் வரும்போல இருந்தது.. ஆனால் ஏதோ ஒரு சக்தி..

 

அந்த நேரம் வந்த பலமோ என்னவோ அவனிடம் போராட துவங்கினாள்.. தன்  உடை பாதி அவன் கையில்தான்.. இருந்தாலும் அவள் முயற்சியை விடவில்லை..தன் பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து அவன் நெஞ்சி கைவைத்து தள்ள சட்டென அவன் தலை எதிலோ அடிப்பட்ட சத்தம்.. அனேகமாக கட்டிலில் முனையாக இருக்கலாம்.. கட்டிலில் இருந்து இறங்கியவள் வெளியே ஓடப்போக எட்டி அவள் கையை பிடித்திருந்தான்..

 

[the_ad id=”6605″]

 

 

ஏய் நில்லு இன்னைக்கு நான் உன்னை விடுறதா இல்ல..??”

 

அவன் கையை கடித்தவள் மறு கையால் துழாவ நைட் லேம்போல ஏதோ தட்டுப்படவும் அதை எடுத்து அவன் மண்டையை குறிவைத்து எறிந்திருந்தாள்.. சட்டென அவன் கை தளரவும் கதவை குறிவைத்து ஓடி வந்து கதவை திறந்திருந்தாள்.. இவளும் அந்த ஹோட்டலில்தான் இருந்திருந்தாள்.. மேலிருந்து கீழே பார்க்க இவள் இரண்டாவது மாடியில் இருந்தாள் .. கீழே நல்ல வெளிச்சமாக ஆட்கள் நடமாட்டத்தோடு இருக்க அப்படியே லிப்டிற்குள் செல்லாமல் மூன்றாவது மாடியை நோக்கி படியில் ஏறத்துவங்கியிருந்தாள்..

 

மணி ஒன்றிற்கு மேலிருக்கவும் வெளியில் நடமாட்டம் இல்லை.. தர்ஷினிக்கு மயக்கம் வருவது போலிருந்தது ..எப்படியாவது கிரான்மாவிடம் செல்ல வேண்டும் என்பது மட்டும் குறியாய் இருக்க அந்த பதினைந்து படிகளை மெல்ல மெல்ல ஏறியவள் மூன்றாவது மாடியை அடைந்திருந்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!