Skip to content
Post Views: 5,775
அத்தியாயம் 16
பானு தன்னை பிரிந்து இருக்கமுடியவில்லை என சொன்னதைக்கேட்டு, ஏதோ உள்ளுக்குள் உருகி தடம் புரண்டதுபோல இருந்தது சங்கருக்கு.
Advertisement
நிச்சயமா… “உங்க அழகுக்கு, படிப்புக்கு, வசதிக்கு நல்ல பொண்ணாவே கிடைச்சிருக்கும். அத்தை சொன்னதால தான என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க……?”
சில சமயம் உங்களை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. நீங்க நினைச்சிருந்தா…, “என்னை கல்யாணம் பண்றதை தடுத்து இருக்கலாம் இல்ல. ஏன்? தடுக்கல………………..”
ம்ப்ச், “நடந்தத பத்தி பேச வேணாம். பாஸ்ட் இஸ் பாஸ்ட். நான் அவ்வளவு சண்டை போட்டும், பேசியும் நீ கொஞ்சம் கூட அசராம இருந்தத பார்த்து தான், முதல்ல உன் மேல இம்ப்ரஸ் ஆனேன்.
Advertisement
என்ன தைரியம் இவளுக்குன்னு எத்தனை தடவை ஆச்சர்யப்பட்டிருக்கேன், தெரியுமா….?”
Advertisement
“யாரு…., நானு தைரியமா இருந்தேனா………………..? நீங்க திட்டும் போது, சண்டை போடும் போதெல்லாம் எப்படி அழுதுகரைஞ்சேன்னு எனக்குதான் தெரியும்”.
அத்தை இருந்தப்ப…., “ஒரு முறை நீங்க சண்டை போட்டப்ப அதை நினைச்சி பீல் பண்ணியே பீவர் வந்து, ஹாஸ்பிட்டல் போற மாதிரி ஆனது எல்லாம் மறந்துடுச்சா…….?”
அவள் சொன்னதுக்கு சிரித்துகொண்டே அவளது மூக்கை பிடித்து ஆட்டியவன்….. அது ஓகே.. பட், நான் “என்ன சண்டை போட்டாலும் என்னை விட்டு போகனும்னு நினைக்கல இல்ல………”
Advertisement
“யார் சொன்னா………………..? எங்க வீட்டுக்கு பயந்து உங்ககூட இருந்தேன். அப்படியில்லனா……………….? எப்பவோ உங்ககிட்டயிருந்து எஸ்கேப் ஆகிருப்பேன்”.
“அடிப்பாவி, நான் என்ன பில்டப்லாம் குடுத்து, உன்னை மனசுல பெரிய ரேஞ்சுக்கு திங்க் பண்ணி வச்சுருக்கேன். நீ என்னனா பொசுக்குனு இப்படி சொல்லிட்டே….?”
ஹா…….. ஹா…… “அது உங்க தப்பு………………. நான் மட்டும் திரும்பி போயிருந்தா….., எங்கண்ணன் உங்களை, உங்க வீட்டு ஆளுங்கள எல்லாம் சும்மா விட்டுருக்குமா……………? கண்டிப்பா பெரிய பிரச்சினை ஆகிடும்னு தான் போகாம இருந்தேன்”.
அதுமட்டும் இல்ல. ‘திரும்ப என்னால இன்னொரு கல்யாணம் எல்லாம் ம்கூம்….. நினைச்சிகூட பார்க்க முடியாது. சோ, அட்ஜெஸ்ட் பண்ணி இங்கேயே இருந்துடுவோம்னுதான்…. நீங்க பேசறப்ப எல்லாம் கம்னு இருந்தேன்’.
“நான் உன்னை டைவர்ஸ் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்பே….?”
“பண்ண மாட்டீங்கன்ற, நம்பிக்கைதான்….”
…………………..
“என்ன பார்க்கறீங்க….? ரொம்பலாம் யோசிக்காதீங்க….. உங்க அம்மாவும் அப்பாவும் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரியும். அதுமட்டுமில்லாம எங்க வீட்டுலயும் இதுக்கு விடமாட்டாங்கன்னு நம்பினேன்……”
ஹ்ம்ம்… “எல்லாரையும் சரியாதான் புரிஞ்சு வச்சிருக்கே…” ஆமாம், அது என்ன திடீர்னு? பேங்க் வேலைக்கு போகனும்னு உனக்கு ஆசை வந்திச்சு. ஏற்கனவே அந்த ஐடியால இருந்தியா…….?
பி.ஈ. முடிச்சிட்டு எல்லாரும் ஐடி ஃபீல்டுல தான வேலை செய்யனும்னு நினைப்பாங்க…………………..
நானும் ஐடில தான் வொர்க் பண்ணனும்னு நினைச்சேன். எதிர்பாராம கல்யாணம் ஆனதால, வேலை பத்தின எந்த ஐடியாவும் இல்லாம இருந்தப்ப, என் ஃபிரண்ட் ஜனனிக்கு போன் பண்ணி பேசும் போது அவள்தான் இந்த ஐடியா குடுத்தது.
அவளும் அதுக்கு படிச்சிட்டிருந்ததால ட்ரை பண்ணலாம்னு எனக்கும் ஆசை வந்திச்சு. அவள் கோச்சிங் கிளாஸ்லாம் போய் சின்சியரா பிரிப்பேர் பண்ணதால, எனக்கும் அது மோட்டிவேஷனா இருந்துச்சு.
என்னால கிளாஸ்லாம் சேர்ந்து படிக்க முடியாதுன்னு சொன்னப்ப, அவள் எனக்கு நோட்ஸ்லாம் குடுத்து, கைட் பண்ணி மோட்டிவேட் பண்ணாள்.
எனக்கு சொல்லி குடுக்கறதால அவளுக்கும் ரிவைஸ் பண்ற மாதிரி மனசுல பதியுதுன்னு சென்னாள். நான் சந்தேகம் கேட்டப்ப எல்லாம் தயங்காம ஹெல்ப் பண்ணாள்………
அவளும் கிளியர் பண்ணிட்டா. எங்க இரண்டு பேருக்கும் வேலை கிடைச்சதுல பயங்கர ஹேப்பி அவளுக்கு.
“எனக்கும்தான்…….. என்கிட்ட சொல்லியிருந்தா உன்னையும் கோச்சிங் கிளாஸ்ல சேர்த்து விட்டிருப்பேன் இல்ல…..”
‘’உங்ககிட்டையா………..? என்னை பார்த்தாலே பிடிக்காது உங்களுக்கு. அப்புறம் எப்படி வந்து உங்ககிட்ட கேட்பேன்’’.
ம்ப்ச், அது எல்லாம் அப்ப. இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்டதான் கேட்கனும். சரியா…..
ஹ்ம்ம்……
சரி…. இங்கேயிருந்து பல்லாவரம் ரொம்ப தூரமாச்சே. தனியா போய்ட்டு வந்திடுவியா…? இல்ல, அங்கேயே பக்கத்துல வீடு பார்த்து மாத்திக்கலாமா…..?
எனக்கும் தெரியல……………., முதல்ல ஜாயின்ட் பண்றேன். வேலைக்கு போய் பழகனாதான் தெரியும். இங்கயிருந்து ரொம்ப தூரம்னு ஜனனியும் சொன்னாள். இரண்டு பஸ் பிடிச்சு போகனுமாமே …..
ஹ்ம்ம், ட்ரேய்ன் கூட இருக்கு. ஸ்கூட்டி ஓட்டுவியா…., ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கா………..?
ம்கூம். “நான் கத்துக்கறேன்னு சொன்னப்ப எல்லாம் எங்க அம்மா விடவேயில்லை. மறுத்துட்டாங்க………………..”
“நான் கத்து தரேன். லீவு நாள்ல கத்துக்கோ……………., முதல்ல ஓட்டி பழகு, அப்புறம் வண்டி வாங்கலாம்”.
நெடு நேரம் பேசிக்கொண்டே இருந்தவர்கள் அப்படியே உறங்கியிருந்தனர். முதல் நாள் வெளியே சென்றது, இரவு வெகு நேரம் முழித்திருந்தது, என வழக்கமாக எழும் நேரத்தையும் தாண்டி உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஜமுனா போன் செய்த சத்தத்தில் தான் முழித்தாள். அவளுக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியவர், திருமணத்திற்கு எப்போது வருகிறார்கள், என கேட்டு பேசிக் கொண்டிருந்தார்.
சங்கர் ஏற்கனவே எழுந்து ஜாக்கிங் சென்றிருந்தான். ஜமுனாவிடம் பேசி முடித்து குளிக்க சென்றாள். குளித்து முடித்து விளக்கேற்றி, சாமி கும்பிட்டு, காப்பி போட சென்றாள் கிட்சனுக்கு.
அதற்குள் சங்கரும் ஜாக்கிங் முடித்து வந்திருந்தான். நேராக கிட்சனிற்கு வந்தவன் “குட்மார்னிங், ஹேப்பி பர்த்டே பேபி” என்றவன், புன்னகையுடன். கையில் இருந்த பூக்கவரை அவளிடம் கொடுத்தான்.
அவளுக்கு ஆச்சர்யம், ஏது..? கடைக்கு போனீங்களா……………….?
ஹ்ம்ம், உனக்கு மல்லிப்பூன்னா பிடிக்கும் இல்ல, அதான் ஜாக்கிங் முடிச்சிட்டு, போய் வாங்கிட்டு வந்தேன்.
அவனுக்கு காப்பி சேர்த்து கொடுத்தவள், தனக்கும் டீ வைத்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தமர்ந்தாள்.
சங்கர், “நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள ரெடியாகு பானு. கோயிலுக்கு போயிட்டு வந்திடலாம்”. காலையிலேயே உன் மாமியார் போன் பண்ணி ஆர்டர் போட்டுட்டாங்க.
திருபுவனத்தில எடுத்து கொடுத்த சாப்ட் சில்க் சேரிய கட்டிக்கிறியா…………………?
ஹ்ம்ம்………………………, “நீங்க வேலைக்கு போக வேணாமா…………? ஈவ்னிங் வேணா…. போகலாமே………………”.
“ம்கூம். ஆஃபீஸ் போயிட்டா வேலை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது”. காலையிலேயே போய்ட்டு வந்துருவோம், கிளம்பு எனக் குளிக்க சென்றிருந்தான்.
கோவிவிலுக்கு அவளை அழைத்து சென்றுவந்தவன், வரும் வழியிலேயே ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். காலை உணவை இருவரும் அங்கேயே முடித்து, அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டவன், வேலைக்கு சென்றிருந்தான்.
நேயா, “என்னயிலேர்ந்து லீவு போட்டிருக்க………………….?”
பூர்ணிமா, “நாளைக்கு மறுநாள்ல இருந்து ஒரு வாரம் போட்டிருக்கேன்”.
“ஹேய், போதுமா……………..? கல்யாணம் முடிஞ்சு எங்கயும் ஹனிமூன் பிளான்லாம் இல்லயா………………..?”
தெரியல…………… அவர் அதுபத்தி எல்லாம் இதுவரைக்கும் ஏதும் பேசல. நானும் அதைப்பத்தி கேட்டுக்கல……….. என்றாள் அசிரத்தையாக.
“அடிப்பாவி அப்புறம் என்னதான் பேசுவீங்க…? இரண்டு பேரும் போனுல………”.
“எங்க? எப்பவாவதுதான் பேசறது, அதுவும் இரண்டு மூனு நிமிஷம் பேசினாலே அதிகம். வேலையிருக்குன்னு வச்சிடுவாரு. இதுல எங்க பேசறது….?” என அலுத்துக்கொண்டாள்.
செந்திலுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின், மது சில முறை போன் செய்தும் பூர்ணிமா பயத்தில் சரியாக பேசாத கோவத்தில், அவன் அவளுக்கு போன் செய்வதையே நிறுத்தியிருந்தான்.
‘’அண்ணே எப்பப்பாரு…., என் வேலைய குறை சொல்லிட்டே இருக்காரு. எப்படி செஞ்சாலும் குறை சொல்றாரு… என்னால அவர்கிட்ட வேலை செய்ய முடியாது ண்ணே……………”
“ஏன் ண்ணே…?”
“இவன் செய்யறது அப்படி தம்பி, நான் எதை சொன்னாலும், அதை காதுல வாங்கி ஒழுங்கா செய்ய மாட்டேன்றான். அவன் இஷ்டத்துக்கு தான் செஞ்சி வைக்கறான். டேஸ்ட் நல்லாயில்லன்னா…, என்னதான குறை சொல்வீங்க……..?”
‘எந்த வேலை கொடுத்தாலும் ரொம்ப ஸ்லோவா செய்யறான். சின்ன பையன்தான, சுறுசுறுப்பா இருக்க வேணாமா……….? இவனை வச்சிட்டு எனக்கும் கஷ்டமாயிருக்கு.’
மது, “வேலை செய்யற இடத்துல ஒத்துமையா இல்லாம இப்படி இரண்டு பேரும் முறுக்கிட்டு நின்னீங்கனா…………….. வேலை எப்படி நடக்கும் அண்ணே. அவன்தான் புதுசு, நீங்களாவது அவனுக்கு சொல்லிக் குடுக்கலாம்.. இல்ல”.
வேலையில கவனம் வேணும். சொல்லி குடுக்கறதயாவது ஒழுங்கா பிடிச்சுக்கனும். கத்துக்கனும்ற இன்ட்ரெஸ்டே இல்லை. இவனுக்கு. சொன்னதையே சொல்லி சொல்லி எனக்குதான் தொண்டை காயுது.
வெங்காயத்தை நல்லா நைசா கட் பண்ணுடான்னு சொல்லிக் கொடுத்தா………… போனை பாத்துகிட்டு, இவன் இஷ்டத்துக்கு பெருசும் சிறுசுமா தடிதடியா கட் பண்றான்.
இஞ்சிய தோல் மட்டும் வறண்டுடான்னா, தோல் சீவறேன்னு பாதி இஞ்சிய தோலோட சேத்து சீவி தள்ளிடறான். செய்யற வேலையில சுத்தமும் இல்ல. எது கேட்டாலும் இவ்வளவுதான் செய்ய முடியும்னு எதிர்த்து பேசறான்.
“முக்கியமா வேலை நேரத்துல தூங்கி வழியறான். இராத்திரி முழுக்க தூங்காம அந்த போனை நோன்டிட்டு இருக்கான், பகல்ல இங்க வந்து தூங்கி வழியறான். அதான் அவனால வேலைய வேகமா செய்ய முடியல. நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன், அந்த போனை நோன்டாம தூங்குடான்னு கேட்க மாட்டேன்றான்……………….”
இவர் கூற கூற அவரையே முறைத்துக் கொண்டு நின்றான் செழியன்.
மதுசூதனன் திரும்பி அவனை முறைத்தான். “உங்கம்மா கஷ்டமாயிருக்குன்னு கெஞ்சி கேட்டதால தான், உனக்கு வேலையே கொடுத்தேன். இங்க வேலை செய்ய இஷ்டம் இல்லைனா நடையகட்டு”.
இது தொழில் நடக்கற இடம். இந்த மாதிரி ஆளுலாம் எனக்கு தேவையேயில்ல.
மதுசூதனன் எங்கே வேலைய விட்டு அனுப்பிவிடுவானோ என பயம் வந்தது செழியனுக்கு.
“இல்ல ..ண்ணே…. இந்த முறை மட்டும் மன்னிச்சுடு ண்ணே…. இனிமே ஒழுங்காயிருக்கேன்….” என கெஞ்ச ஆரம்பித்துவிட்டான் செழியன்.
இதே மாதிரி “இன்னொரு முறை உன் மேல கம்ப்ளெயின்ட் வந்தது, வீட்டுக்கு மூட்டைய கட்ட வேண்டியதுதான்”. பார்த்துக்கோ….
“நான் இங்க ஜாலிக்கு தொழில் நடத்தல. வட்டிக்கு கடன் வாங்கிதான் வியாபாரம் பண்றேன். இதே மாதிரி எப்பவும் பொறுமையா இருக்க மாட்டேன். வேலை கத்துக்கனும்னு இன்ரஸ்ட் இருந்தா வேலைய பாரு, இல்லைனா நடைய கட்டு…” என்று விட்டான் கறாராக.
செழியனுக்கு அசிங்கமாக போய்விட்டது. மதுவின் பேச்சைக் கேட்டு. திரும்பி சமையல் செய்யும் வாசுவை முறைத்தான் எல்லாம் உன்னால்தான் என்று.
அது மாலை நேரமாதலால் கூட்டம் குறைவாக இருந்தது ஓட்டலில். ஆரம்பித்த இந்த சில மாதத்திலேயே நல்ல பெயரை எடுத்திருந்தான் தொழிலில்.
தரமான சுவையான சாப்பாட்டைக் கொடுத்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது அவனது ஓட்டல். அங்கு வந்து சாப்பிடுபவர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கும் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.
பக்கத்திலேயே சேர்ந்தாற் போல ஒரு கடையும் வாடகைக்கு வந்தது. அவனுக்கு அதையும் சேர்த்து எடுத்து ஸ்வீட், ஸ்னாக்ஸ் ஜூஸ் என தனியாக போட வேண்டும் என்று ஆசை. ஆனால் இன்னும் ஓட்டலுக்கு வாங்கிய கடனே முக்கால்வாசிக்கு மேல் அடையாமல் அப்படியே உள்ளதால், அதுக்கான முதலீடு அவனை யோசிக்க வைத்தது.
முதலில் திருமணம் முடியட்டும் பின்பு பார்க்கலாம் என தள்ளி வைத்திருந்தான் அந்த யோசனையை. அந்த இடத்தை லீசுக்கு எடுத்தவர் காலி செய்வதற்கு இன்னும் மூன்று மாதம் இருப்பதால் அந்த யோசனையை தள்ளி வைத்திருந்தான்.
திருமணத்திற்கு முன்னதாகவே சங்கரும் பானுவும் முட்லூருக்கு வந்துவிட்டனர். இதோ இன்று காலையில் மதுசூதனன் வீட்டில் பந்தக்கால் நடுவதற்காக பானு, சரசு, சங்கர் எல்லோரும் வந்திருந்தனர்.
ஜமுனா அக்கம் பக்கத்திலிருப்பவர்களையும் பந்தக்கால் நடுவதற்கு அழைத்திருந்தார். மாதவியையும் குமாரையும்கூட அழைத்திருந்தார்.
ஒற்றைப்படையில் கணக்கு வைத்து சுமங்கலிப் பெண்கள் எல்லாம் சேர்ந்து முகூர்த்தக் கால் நட்டார்கள். பானு வந்தவர்களுக்கு எல்லாம் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ பழம் வைத்த தாம்பூலப் பையை கொடுத்து கொண்டிருந்தாள்.
அக்கம் பக்கத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கெல்லாம் காப்பி குடுத்து, கவனித்து அனுப்பி வைத்தார் ஜமுனா.
குமாரும் மாதவியும்கூட கால் நட்ட உடனே கிளம்பிவிட்டனர்.
காலை டிபன் முடித்து சங்கரும் சரசுவும் அவர்களது வீட்டிற்கு கிளம்பியிருந்தனர். பானு சங்கரை தங்க சொல்லியும் மறுத்துவிட்டான். நான் இருந்தா என்னை கவனிக்கறேன்னு மத்த வேலைய பார்க்க முடியாது. நான் நம்ம வீட்டில இருக்கேன். நீ இங்க இருந்தா அத்தைக்கு உதவியா இருக்கும்.. என அவளை விட்டுவிட்டு கிளம்பிவிட்டான்.
கணவனின் புரிதலில்.. பானுக்கு உள்ளம் உருகியது. இருவரிடமும் ஒரளவு புரிதலும் அன்பும் ஊற்றெடுக்க ஆரம்பித்திருந்தது. மறுநாளிலிருந்து திருமணத்திற்காக உறவினர்கள் வருகை ஆரம்பித்தது.
மாப்பிள்ளைக்கு நலங்கு வைத்தல், தாலி சீலை வைத்து படைத்தல், வீட்டு தெய்வங்களுக்கு படைத்தல் என தினமும் ஏதாவது ஒரு விசேஷத்துடன், கல்யாண வீட்டிற்கான அத்தனை இலட்ணங்களுடன் வீடு களை கட்டியிருந்தது.
உறவினர்களும் வர ஆரம்பித்திருந்தனர். ஜமுனா வீட்டிலேயே சமையல்காரரை வர வைத்து கல்யாணத்திற்கான ஸ்வீட், பலகாரம் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தார்.
திருமணத்தின் போது உறவினர்களுக்கு கொடுக்க வேண்டிய பலகாரம், சம்மந்தி வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பலகாரம், வீட்டிற்காக கொஞ்சம் ஸ்வீட், கார வகைகள் என எல்லாவற்றையும் வீட்டிலேயே ஆள் வைத்து செய்து பேக் செய்தார்.
வீடு முழுக்க நெய் வாசமும், பலகார வாடையுமாக இருந்தது.
பானு மதுவை வற்புறுத்தி பார்லர் அழைத்துச் சென்று வந்தாள். கல்யாண பூரிப்புடன், பார்லர் ஆட்களின் உபயமும் சேர்ந்து, அவனது முகம் மெருகேறி பளபளப்பாக மாறியிருந்தது. முகத்தில் வாடாத சிரிப்பும்… புது மாப்பிள்ளைக்கான மெருகும் குடியேறியிருந்தது திருமண ஆர்ப்பாட்டங்களால்.
சிதம்பரத்திலேயே திருமணம் நடத்த முடிவு செய்து, அங்கேயே மண்டபம் பிடித்து, கல்யாணத்திற்கான வேலைகள் எல்லாம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. வேலைகளை இருவீட்டாரும் சேர்ந்தே செய்தனர்.
திருமணத்திற்கான செலவையும் இருவீட்டாரும் பகிர்ந்து கொண்டனர். இன்று மாலை ரிசப்ஷன், நாளை காலை திருமணம்.
திருமணத்தின் முதல் நாளான இன்று மதிய சாப்பாட்டிலிருந்து நாளை மதிய சாப்பாடு வரை மண்டபத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மது வீட்டில் காலை உணவு முடிந்ததும் எல்லோரும் மண்டபத்திற்கு புறப்படுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சங்கர் தங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு நேராக மண்டபத்திற்கே வந்து விடுவதாக கூறியிருந்ததால் பானு மட்டும் பெற்றவர்களுடன் இருந்தாள்.
பெண் வீட்டிலுருந்து மாப்பிள்ளையை அழைத்து செல்வதற்காக பாண்டியனும் தேவகியும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கு பலகாரம் கொடுத்து உபசரித்து மாப்பிள்ளையை மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். மது பானுவை தன்னுடனேயே அழைத்துச் சென்றுவிட்டான் மண்டபத்திற்கு.
அதேபோல் பூர்ணிமாவை அழைக்க ஜமுனா அவர்கள் பக்க உறவிலிருந்து ஒரு மூத்த தம்பதியை அனுப்பி வைத்திருந்தார்.
மண்டபத்தில் சங்கர் மனைவியை எதிர்பார்த்து கொண்டு வாசலியே நின்றிருந்தான். பானு காரிலிருந்து இறங்கியதும், முதலில் சங்கர்தான் கண்ணில் பட்டான். அவனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் கணவனிடம் விரைந்துவிட்டாள் விறுவிறு வென்று.
மது, “மாப்பிள்ளை, என் தங்கச்சிய இப்படி மாத்திட்டீங்களே………? உங்களை பார்த்த ஆர்வத்துல, என்னைகூட கண்டுக்காம அம்போன்னு விட்டுட்டு ஒடி வந்துட்டாள்…” என கேலி செய்தான்.
ஹா……. ஹா……… என சிரித்த சங்கர் கண்களில் பெருமையுடன் மனைவியை திரும்பி, அப்படியா என பார்த்தான்.. மனம் கனிய காதலுடன்.
அவளுக்கு மதுவின் கேலியிலும் கணவனின் சிரிப்பிலும் வெட்கம் வந்து, கணவனது தோளில் முகத்தைப் மறைத்து கொண்டாள். சங்கரும் மனைவியின் தோளில் கைபோட்டு அணைவாக பிடித்து, அவள் நெற்றியில் முட்டி நின்றான் அன்பாக.
ம்க்கும்…. ஹலோ… “இங்க ஒரு கன்னிப் பையன் நின்னுட்டிருக்கேன். இரண்டு பேருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.”
சங்கர், ஹா……. ஹா…… “அதான் உங்களோட ஆள் வந்தாச்சே…….. உள்ள போங்க, நீங்க ஏன் இங்க நின்னு எங்களை கண்ணு வைக்கறீங்க………..?”
அடப்பாவிங்களா….. இங்க புது மாப்பிள்ளை நானா…. நீங்களா….. ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க……
மதுவுக்கு தங்கையையும் அவளது கணவனையும் பார்த்து உள்ளம் பூரித்தது. திட்டமிடாமல் திடீரென நடந்த திருமணத்தினால், அவளது வாழ்க்கை என்னாகுமோ…, என பயந்திருந்தவனுக்கு அவர்களது இணக்கம் அவனை நெகிழ்ச்சியடைய செய்தது.
மூவரும் கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டே மண்டபத்திற்குள் சென்றனர்.
மாப்பிள்ளையை மண்டபத்தின் வாயிலிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். பூர்ணிமா வீட்டினர் இவர்களுக்கு முன்பேயே மண்டபத்திற்கு வந்திருந்தனர்.
மாலை ரிசப்ஷனுக்கு டிசைனர் சேரியில் அதற்கேற்ற அணிகலன்களுடன் பூரண நிலவைப் போல அழகோவியமாக நின்றிருந்தவளின் மேலிருந்து கண்களை அகற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் மதுசூதனன்.
தொடரும்.
error: Content is protected !!