Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 19

அத்தியாயம்           19

மதுவுக்கு மனைவியின் கோவம் புரிந்தது.  அவளை சமாதானபடுத்த எண்ணிதான் வீட்டிற்கு எப்போதும் வரும் நேரத்தைவிட முன்னதாகவே வந்திருந்தான்.  இருந்தும் அவள், அவன் மேலிருந்த கடுப்பில், அவனை தவிர்த்தாள்.

அவளை ஒட்டி அணைவாகப் படுத்தவன், அவளது தோளில் கைப் போட்டு இறுக்கிக் கொண்டான்.



Advertisement

“ம்ப்ச், நகர்ந்து படுங்க.  இரண்டு நாளா கண்ணுக்கு தெரியல.  இப்பதான் உங்களுக்கு தெரியறேனா……………?”

“கோவப்படாதடா….. உங்க பெரியம்மா கிட்ட, நானே போன் பண்ணி பேசிட்டேன் பூர்ணி…… அவங்களே ஒன்னும் பெரிசா கோச்சுக்கல………”

அவனை திரும்ப வியப்பாக பார்த்தவள், “நீங்க…, பேசினீங்களா……………….. எங்க பெரியம்மா கிட்ட…………?” என்றாள் வியப்புடன்.

Advertisement

“ஹ்ம்ம்.  பொண்டாட்டிக்காக இதுகூட செய்ய மாட்டேனா…………….?”

Advertisement

“ம்க்கும்.  ரொம்பதான் பொண்டாட்டி மேல கரிசனம் உங்களுக்கு”, என்று நொடித்துகொண்டாள்.

“ம்ப்ச், உங்க பெரியம்மாகிட்ட பேசினதுக்கு சந்தோஷப்படுவன்னு பார்த்தா………  நீ அதைக் கண்டுக்காம, என்னையே கிண்டல் பண்றே….” என்று குறைபடித்தான்.

“உங்களுக்கு, அவங்க போன் நம்பர் எப்படி தெரியும்…..?”

Advertisement

“உங்க அக்கா தான் கொடுத்தாங்க..”

“அவங்ககிட்டயும் பேசினீங்களா……………?” என்றாள் எழுந்து அமர்ந்து வாய்பிளந்து.

“ஹ்ம்ம்………… அவங்ககிட்ட பேசிதான், உங்க பெரியம்மா நம்பர் வாங்கி, அவங்ககிட்டயும் பேசினேன்”.

“பெரியம்மா என்ன சொன்னாங்க? கோச்சுக்கிட்டாங்களா…………..? நாம அங்க வரலன்னு, வருத்தப்பட்டாங்களா…………………..?”

“இரண்டுமே இல்ல, அங்க வர முடியலன்ற சூழ்நிலைய எடுத்து சொன்னதும்.  அதனால என்ன மாப்பிள்ளை, அடுத்த தடவை கண்டிப்பா ஏமாத்தாம வந்திடுங்கன்னாங்க”.

“நிஜமாவா………….!   வருத்தமா… ஏதும் பேசினாங்களா……..?”

“ம்கூம் இல்லை, சாதாரணமாதான் பேசினாங்க.  நாங்க அங்க வரதாயிருந்தோம், ஒரே நாள்ல இரண்டு இடமும் வந்து வரது அலைச்சலாயிடும்னு, வந்திட்டோம்னு… சொன்னேன்”.

“அதுவுமில்லாம, இங்க எனக்கு வேலையிருந்ததால வந்துட்டோம்.  பூர்ணி  அங்க வந்து உங்களை பார்த்துட்டுதான் வரனும்னு, ரொம்ப ஆசைப்பட்டா. என்னாலதான் அழைச்சிட்டு வர முடியல” என்று, அவரிடம் பேசியிருந்தான்.  அதைதான் சொல்லிக் கொண்டிருந்தான் மனைவியிடத்தில்.

கணவன் தன் வீட்டில் பேசியிருந்ததை எண்ணி அவளுக்கு ஆசுவாசமானது

நேற்றிலிருந்து அதையே நினைத்து மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு இருந்தவளுக்கு,  கணவன் தன் வீட்டிலிருப்பவர்களிடம் பேசியதைக் கேட்டதும்,  அவனுக்கு தன் மேலிருக்கும் அக்கறையை காட்டியது.

பூர்ணியின் முகத்தில் புன்னகையைக் கண்டவன், அவளை இழுத்து மார்பில் சாய்த்து இறுக்கிக்கொண்டு, நிம்மதியாக கண்மூடி உறங்க ஆரம்பித்தான்.  அவளும் அவன் நெஞ்சில் தலை வைத்து உறங்கத் தொடங்கினாள்.

பானு வேலையிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு அன்று நேரமானது.  அவளுக்கு முன்னதாகவே சங்கர் வீட்டிற்கு வந்திருந்தான்.  வந்தவன் பிரஷாகி பால்கனியில் வந்து நின்றிருந்தான் மனைவியை எதிர்பார்த்து கொண்டு.  அங்கிருந்து பார்த்தால் வெளியே கேட் தெரியுமாதலால் அங்கே வந்து நின்று பார்த்திருந்தான்.

அவளுக்கு போன் செய்தாலும் ரிங் போய்கொண்டே இருந்தது.  போன் எடுக்கவில்லை.  டிராபிக்கில் மாட்டியிருப்பாள்.  சத்தத்தில் காதில் ரிங் டோன் விழாது என காத்திருந்தான்.

அடுத்த பத்து நிமிடத்திலேயே, பானு பைக்கில் ஒரு அந்நிய ஆடவனுடன் வந்து இறங்கினாள்.  இறங்கியவள் அவனிடம் என்னவோ பேசினாள்.  அவன் மறுத்து தலையசைத்துவிட்டு, பைக்கை எடுத்துகொண்டு கிளம்பியிருந்தான்.  பானு அப்பார்ட்மென்டின் உள்ளே நுழைந்தாள்.

சங்கர் அவள் வேறொரு ஆடவனுடன் வந்து இறங்கியதைப் பார்த்தவன், புருவங்களை சுருக்கி கேள்வியாக அவளைப் பார்த்து நின்றான்.

சில நிமிடங்களில் பானு வீட்டின் உள்ளே நழைந்தாள்.  இவனைப் பார்த்ததும், கண்களை விரித்து “சீக்கிரம் வந்தீட்டீங்களா………….” என கேட்டுக் கொண்டே அறையினுள் நுழைந்தாள்.

அவளே ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தவனுக்கு, அவள் ஏதும் சொல்லாமல் அறையினுள் சென்றது ஏமாற்றமாக இருந்தது.  பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவள், “காப்பி குடிச்சீங்களா…….., போடவா” என கேட்டுக் கொண்டே கிட்சனுக்குள் நுழைந்தாள்.

அவள் பின்னாடியே சென்றவன், “ஏன் போன் அட்டென்ட் பண்ணல…?” என்றான்.

பானு, “போன் பண்ணீங்களா………….?” என அறைக்கு சென்று தனது போனை எடுத்து வந்து கால் லாகில் அவனது அழைப்பை பார்த்து, தலையில் தட்டிக் கொண்டு, அவனைப் பார்த்து சிரித்தாள்.

“ஸாரி……………. சத்தமே கேட்கல ட்ராபிக்ல, அதான் எடுக்கல……..”

“காப்பி குடிச்சீங்களா………………..?”

இல்லை என தலையசைத்தான்.

அவனுக்கு காப்பி சேர்த்து கொடுத்தவள், தனக்கும் டீப்போட்டு எடுத்துக் கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.  அவளுடனேயே வந்து எதிரில் அமர்ந்தவன், அவளைப் பார்த்துக் கொண்டே மிடறு மிடறாக காப்பியை பருகினான்.

“என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்திட்டீங்க…………………”

“தலைவலியா இருந்தது, அதான் சீக்கிரம் வந்துட்டேன்”.  உண்மையும் அதுதான்.  அன்று மதியத்திலிருந்தே அவனுக்கு தலைவலி அதிகமாக இருந்தது.  மாலை காப்பியுடன் ஒரு மாத்திரையை போட்டவனுக்கு தலைவலி கொஞ்சம் மட்டுபட்டிருந்தாலும், வேலையில் கவனம் பதிக்க இயலாமல் வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தான்.

“டேப்லெட் போட்டீங்களா………………?  இப்ப எப்படி இருக்கு……..?”

“ஹ்ம்ம்………… பரவாயில்லை”.

“நீங்க கொஞ்ச நேரம் படுக்கறீங்களா………….?  நான் டிபன் முடிச்சிட்டு எழுப்பறேன்………..”

அந்த ஐடியாவில்தான் அவன் வீட்டுக்கு வந்ததும்.  அவன் வந்த நேரத்துக்கு மனைவி வீட்டில் இருந்திருந்தால் இந்நேரம் படுத்திருப்பான்.

ஆனால் இன்று பானு வேலையிலிருந்து வருவதற்கு லேட்டானதால் படுக்கவில்லை.

“இருக்கட்டும்.  ஏன் லேட்………..?” அப்பொழுதாவது அந்நிய ஆடவனுடன் வந்ததைப் பற்றி சொல்வாள் என எதிர்பார்த்தான்.

“அதை ஏன் கேட்கறீங்க……?  இன்னைக்கு ஒரு அர்ஜென்ட் வொர்க் முடிச்சி குடுத்துட்டு போங்கன்னு, மேனேஜர் சொல்லிட்டாரு.  நானும் வேற வழியில்லாம் உட்கார்ந்து முடிச்சட்டு வர வேண்டியதாகிடுச்சு”.

“அப்படி என்ன அவசரமான வேலை……., நாளைக்கு வந்து முடிக்கறேன்னு சொல்லிட்டு வரவேண்டியது தான……”

“ஹம்ம்………, நானும் கேட்டுப் பார்த்தேன் மேனேஜர்கிட்ட, அவர் அவசரம்னு சொன்னதால இருந்து செஞ்சு குடுத்திட்டு கிளம்பினேன்”.

“எப்படி வந்த…………?  பஸ்சுலையா…………..?”

“ம்கூம்……………, இன்னைக்கு என்கூட வேலை பார்க்கிற தரணி கொண்டு வந்து விட்டுட்டு போனார்.  நான் வேலைய முடிக்கற வரைக்கும் என்கூடவே இருந்து வெயிட் பண்ணி, அவரோட பைக்ல கொண்டு வந்து வீட்ல விட்டுட்டு போனார்”.

“வீட்டுக்கு வந்துட்டு போங்கன்னு கூப்பிட்டேன்….., லேட்டாயிடுச்சு, இன்னொரு நாள் வரேன்னு கிளம்பிட்டாரு……”

“ஓஹ்….. அதான் இறங்கி நின்னு பேசிட்டிருந்தாளா…………..?  லேட்டாச்சுன்னா…, கேப் புக் பண்ணி வந்திருக்கலாம் இல்ல…………”

“ம்ப்ச், நானும் அப்படிதான் நினைச்சேன்., அவர் தான் கம்பல் பண்ணி அழைச்சிட்டு வந்தார்.  யு நோ……., ரொம்ப நல்ல மனுஷன்.  நான் ஜாயின்ட் பண்ண புதுசுல வேலை தெரியாம திண்டாடுனப்ப எல்லாம் அவர் தான் எனக்கு ஹெல்ப் பண்ணுவாரு.  ரொம்ப ஸ்மார்ட் தெரியுமா……. என அவனைப் பார்த்து சிரித்தாள்”.

அவனுக்கு உள்ளுக்குள் காந்தியது.  “என்னை ஒரு நாளாவது இது மாதிரி ஏதாவது வாயைத் திறந்து புகழ்ந்திருக்காளா…………..? ராச்சஷி” என உள்ளுள் புகைந்தது.

“இனி லேட் ஆச்சுன்னா……. கேப் பிடிச்சு வந்திரு.  இப்படி ஊர் பேர் தெரியாதவனோட எல்லாம் வராத……” என்றான் அவள் மீதிருந்த எரிச்சலில்.

அவனது பேச்சு த்வனியின் மாற்றம் அவளை, அவனை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

“ஏன்…….?”

“என்ன, ஏன்……..?  யார்னே தெரியாதவனோட எல்லாம் வருவியா………..?”

“அவர் என்னோட வேலை பார்க்கிறவர்…., யாரோ இல்ல……..,  இரண்டாவது…., நான் தினமும் இப்படி வரல.  இதுதான் ஃபர்ஸ்ட் டைம் வரது.  நான் மறுத்தும் அவர் வற்புறுத்தி அழைச்சதால தான் வரவேண்டியதா போயிடுச்சி”.

எல்லாரும் கிளம்பியும்கூட, என்னை தனியா விடாம, அவர் எனக்கு துணையா, நான் வேலை முடிக்கற வரைக்கும், என்னோடவே இருந்து கூட்டிட்டு வந்தார்.  நான் மறுத்துகூட, நான் அந்த வழியாதான் போறேன் வாங்க ட்ராப் பண்ணிடறேன், இனி நீங்க கேப்லயோ, இல்ல பஸ்சுலயோ போகனும்னா, இருக்கற ட்ராபிக்குக்கு வீட்டுக்கு போய் சேர ரொம்ப லேட்டாகிடும்னு சொன்னதால தான், அவர்கூடவே வந்தேன்.

“அவர் அவ்வளவு சொல்லியும் நான் மறுத்தேனா……. அது திமிர் காட்டற மாதிரி இருக்கும்னு வந்திட்டேன்”.

சங்கருக்கும் தெரியும்.  இந்த நேர சென்னை ட்ராப்பிக் எப்படி இருக்கும் என……., இருந்தும் “அவள் அந்நிய ஆடவனுடன் வந்ததை அவன் மனம் ரசிக்கவில்லை”.

எனவே, “இனி வராதன்னு தான் சொன்னேன், அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய விளக்கம்”.

“அதுதான் ஏன்னு கேட்டேன்…..?”

“ம்ப்ச், எனக்கு பிடிக்கலை…ன்னா விடேன்.”

“என்ன பிடிக்கலையாம்……..?  அப்ப நீங்க என்னை …………….”

“ஹேய்…. நான் ஒன்னு சொன்னா… நீ ஒன்னு புரிஞ்சுப்பியா……………  லூசாடி நீ.  எனக்கு என் பொண்டாட்டி, என்னைத் தவிர வேற ஒருத்தரோட இப்படி பைக்ல உட்கார்ந்து வரது பிடிக்கல………… அதை தான் சொன்னேன்.  அதுக்கு நீ சொல்ற அர்த்தம் இல்ல”.

“ஏன்? எங்க அண்ணனோடவும் தான் பைக்ல போயிருக்கேன்….”

“சம்பந்தம் இல்லாம பேசாத பானு.  பார்க்கறவன் எல்லாம் உன் அண்ணனாகிட முடியாது, புருஷனோட பீலிங்கஸ புரிஞ்சுக்க முடியாது, இவளாம் படிச்சு கிழிச்சு வேலைக்கு போறாளாம்……. மரமண்டை……., மரமண்டை……..” என கோவமாக அங்கிருந்து சென்று விட்டான்.

அவளுக்கும் அவனது வார்த்தைகளில் கோவம் வந்திருந்தது.  “அது என்ன?  எல்லாம் இவன் இஷ்டமா…….?”  நான் என்ன தினமுமா…….. வந்திட்டிருக் கேன், ஏதோ லேட்டாச்சுன்னு, அவர் கூப்பிட்டதால வந்தேன்,  என அவளும் முறுக்கிக் கொண்டாள்.

அதன் பிறகு  இரண்டு பேரும் பேசவேயில்லை.  இட்லி அவித்து, சட்னி அரைத்து டேபிளில் கொண்டு வைத்து அவனுக்காக காத்திருந்தாள் சாப்பிடுவதற்காக.

அவன் வரவில்லை எனவும் அவளும் சாப்பிடாமல் சென்று படுத்துவிட்டாள் அவன் வந்து சாப்பிட்டதும் சாப்பிடலாம் என எண்ணி.  வந்து படுத்தவள் அன்றைய வேலையின் அசதியில் படுத்தவுடன் தூங்கிவிட்டாள்.

மனைவி தன்னை வந்து சாப்பிட அழைப்பாள் என எதிர்பார்த்திருந்தவன், அவள் அழைக்காமல் வந்து படுத்துக் கொண்டதைப் பார்த்ததும் கோவம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு

பசியிருந்தாலும் அவள் வந்து கூப்பிடாமல் சாப்பிட மனம் வரவில்லை.  பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவள் வந்து தன்னை அழைக்கவில்லை எனவும் அப்படியே தூங்க முயற்சித்தான்.

ஏற்கனவே, தலைவலியால் மதியமே சரியாக சாப்பிடவில்லை.  இரவும் சாப்பிடாமல் இருந்ததால் பசி கொன்றது.  பசியில் தூக்கமும் வரவில்லை.

பசியில் வயிறெல்லாம் பிரட்டியும், வரட்டு பிடிவாதத்தால், மனைவியின் மேல் இருந்த கடுப்பால் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து வந்து பார்த்தவள், கணவன் உண்ணாததைப் பார்த்து கோவம் வந்தது.  எதுவும் பேசாமல் கெட்டுப் போயிருந்த சட்னியை எடுத்து சிங்கில் கொட்டி விட்டு, இட்லியை எடுத்து உதிர்த்து இட்லி உப்புமா செய்து கொண்டு வந்து டேபிளில் வைத்தாள்.

மதியத்திற்கென இருவருக்கும் எலுமிச்சை சாதமும் உருளைகிழங்கு வருவலும் செய்து, லன்ச் இருவருக்குமாக பேக் செய்து கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு, குளிப்பதற்கு சென்றாள்.

காலையில் எழுந்தவன் எப்பொழுதும் போல், வெளியே வந்து நியூஸ் பேப்பருடன் அமர்ந்து கொண்டான், ஏதும் பேசாமல்.

குளித்து முடித்து அவசர அவசரமாக கிளம்பியவள், அவன் எழுந்ததைப் பார்த்து, அவனுக்கு காஃப்பி சேர்த்து கொண்டு வந்து அவனுக்கு எதிரில் இருந்த டீபாயில் வைத்து விட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

கையில கூட குடுக்கமாட்டாளாமா… என காப்பியை எடுக்காமல் பிகு செய்யதவனுக்கு, “பசியின் மயக்கமும், காப்பியின் நறுமணமும் சேர்ந்து இம்சை செய்தது அவனை, காப்பியை எடுத்து பருகத் சொல்லி”.

அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் காப்பியை எடுத்து பருக ஆரம்பித்தான்.  எப்பொழுதும் இவனுக்கு முன்னரே அவள் கிளம்பி விடுவாள் வேலைக்கு.  நுங்கம்பாக்கத்திலிருந்து பல்லாவரம் செல்ல வேண்டும் என்பதால் முன்னமே கிளம்பி விடுவாள்.

ட்ரெயினில் செல்வதால் பெரும்பாலான நேரங்களில் சங்கரே நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறக்கி விடுவான்.  இல்லை என்றால் ஆட்டோ பிடித்து செல்வாள், ரெயில்வே ஸ்டேஷனுக்கு.   வேலை முடிந்து  வரும் போது பஸ்ஸில் வந்து விடுவாள்.

இன்று கணவன் மீது கோவம் இருந்ததால் அவனை எதிர்பாராமல் அவளே கிளம்பிவிட்டாள்.  அவள் கிளம்பும் வரை அவளையே ஓரக் கண்ணால் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தவன், கிளம்பியதும் எழுந்து பால்கனிக்கு சென்று நின்று பார்த்தான் அவள் செல்வதை.

மனைவி தன்னிடம் சொல்லாமல் சென்றது, வருத்தத்தையும் கோவத்தையும் ஒருங்கே கொடுத்தது.  “நான் கோச்சுகிட்டு பேசலனா இவள் பேசமாட்டாளா…………..?  என்னை சமாதானப் படுத்தமாட்டாளா…?” என வீம்பு வந்தது அவனுக்கு.

பால்கனியில் நின்று அவள் செல்லும் வரை பார்த்தவன், உள்ளே வந்து டைனிங் டேபிளில் என்ன செய்து வைத்திருக்கிறாள் என திறந்து பார்த்தான்.  இட்லி உப்புமாவைப் பார்த்ததும் அவனுக்கு கோவமாக வந்தது.

“என்ன நினைச்சிட்டுருக்கா மனசுல, எனக்கு இட்லி உப்புமா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அதை செஞ்சு வைச்சிட்டு போயிருக்கான்னா…… என்ன திமிர் இவளுக்கு”, என மனதில் கறுவிக் கொண்டாள்.

காலையில் எழுந்து வந்து பார்த்தவள் கணவன் சாப்பிடாமல் இருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு கோவம் வந்திருந்தது.  எவ்வளவு கஷ்டப்பட்டு மாவு அரைச்சு இட்லி செஞ்சா, சாப்பிடாம வேஸ்ட் பண்ணுவாரா என கோவம் வந்தது அவளுக்கு.

அதை வேஸ்ட் பண்ணாமல் உதிர்த்து, நிறைய வெங்காயம், பச்சமிளமாய், இஞ்சி, கருவேப்பிலை, பச்ச கொத்தமல்லி எல்லாம் சேர்த்து, நெய்யுடன் இட்லி பொடியையும் தூவி செய்து வைத்திருந்தாள்.

அவளுக்கும் தெரியும் அவனுக்கு பிடிக்காது என்று, ஆனால் மொத்தமாக தொடவே மாட்டேன் என்ற அளவுக்கு எல்லாம் பிடிக்காத டிஷ் இல்லை.  எப்பவாவது சாப்பிடுவான்.  இன்று கோவத்திலும், நல்ல பசியிலும் இருந்தவனுக்கு அதை சாப்பிட பிடிக்கவில்லை.

அவனும் குளித்து முடித்து காலை உணவாக செய்து வைத்திருந்த இட்லி உப்புமாவை சாப்பிடாமல் கிளம்பிவிட்டான் வேலைக்கு.   இட்லி உப்புமா செய்திருந்ததால் ஏற்பட்டிருந்த கோவத்தால், அவள் செய்து வச்சிருந்த லன்சையும் எடுக்காமல் சென்றுவிட்டான்.

அன்று மாலை வந்து பார்த்தவளுக்கு அவள் செய்து வைத்திருந்த உணவை அவன் சாப்பிடாமல், லன்சையும் எடுக்காமல் சென்றது கோவத்தைக் கொடுத்தது.  அதையே அவளது நைட் டின்னராக சாப்பிட்டவள், சென்று படுத்துவிட்டாள்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் வந்தவன் சாப்பாடு எதுவும் செய்து வைத்திருக்கவில்லை என்பதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது.  அட்லீஸ்ட் மனைவியின் முகத்தையாவது பார்க்கலாம் என்றால், அதற்கும் வழியில்லாமல் முகத்தை இழுத்து மூடி படுத்திருந்தவளைப் பார்த்ததும் அவனுக்கு கடுப்பானது.

காலையிலும் மதியமும் வெளியில் சாப்பிட்டிருந்தவன் இரவு மனைவியோடு வீட்டில் சாப்பிடலாம் என வந்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

காலையில் அவள் செய்த சாப்பாட்டை எடுக்காமல், சாப்பிடாமல் சென்றது எல்லாம் அவனுக்கு கருத்தில் பதியவேயில்லை.

இப்பொழுது மனைவி சமைத்து வைக்காததைப் பார்த்து கோவம் தலைகேறியது.  எதிரில் அவள் இருந்திருந்தால் கேட்கலாம்.

அவள்தான் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்குகிறாளே ராட்சஷி என கடிந்தவன்…………. ஸிவிக்கியில் ஆர்டர் செய்து சாப்பிட்டு, சென்று படுத்தான்.

இப்படி இருவருக்கும் இடையே மீளாப்போர் நடந்து கொண்டிருந்தது இரண்டு நாட்களாக.  அன்று சங்கர் இரவு வருவதற்கு மணி பனிரெண்டு மணிக்கு மேல் ஆனது.

கூட வேலை செய்யும் பிரண்டுக்கு பர்த்டே பார்ட்டி என சென்றிருந்தவன் டிரிங்க்ஸ் எடுத்து வந்திருந்தான்.  இரவு நேரம் சென்று வந்ததால் உடைகளை கூட மாற்றாமல், அப்படியே படுத்துவிட்டான்.

“பக்கத்தில் பானு படுத்திருந்ததைப் பார்த்தவனுக்கு, அவனது நாடி நரம்புகள் எல்லாம் அவளை அள்ளி அணைக்க சொல்லி தூண்டியது.  இரவின் விளக்கொளியில் நிர்மலமாக முகத்தை வைத்துகொண்டு உறங்குபவளைப் பார்த்ததும், ராச்சஷி என்னை பாடாபடுத்திட்டு, எப்படி தூங்கறா பாரு…………….” என மனதில் ஓடியது.

அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளுடைய நெருக்கத்திற்காக ஏங்கிய மனதை அடக்க வழியில்லாமல், “அவளை கொஞ்சம்… கொஞ்சமாக நெருங்கி படுத்தவன், அவளது புருவம், மூக்கு, உதடு என தனது ஆட்காட்டி விரலால் மென்மையாக வருடிக் கொடுத்தான்”.

இவனது தொடுதலில் விழித்தவள் கணவன் நெருக்கத்தை உணர்ந்து அவனிடம் இருந்து விலக முயன்றாள்.

சங்கர், “ம்ப்ச், கம்னு படுடி……, இப்ப என்ன பண்ணிட்டேன் உன்னை?”

அவன் வாயிலிருந்து வந்த மதுவின் வாடையில், அவன் குடித்திருப்பதை உணர்ந்தவள், அவனை விட்டு விலக முயன்றாள் அழுத்தமாக.

அவன் இவளை விலக விடாமல் இறுக்கி அணைத்தான்.

இவள் விலக விலக அவனது பிடி மேலும் இறுகியது.

பானு, “விடுங்க என்னை……….., குடிச்சிருக்கீங்களா………..நீங்க…..?”

………………….

“குடிச்சிட்டு வந்து, என்ன இது அட்டகாசம், மேலயிருந்து முதல்ல கையை எடுங்க”.

“முடியாது, என் பொண்டாட்டி, நான் கையை போடுவேன், காலை போடுவேன் என காலையும் எடுத்து அவள் மேல் போட்டு இன்னும் இறுக்கிக் கொண்டான்”.

மதுவின் வாடையை தாங்க முடியாமல், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

இவளது முகம் பிடித்தமின்மையால் சுருங்கியதைப் பார்த்தவன், வீம்புக்கென்றே அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்து உரச… பானுக்கு இன்னும் மூச்சு முட்டியது.

அவனது அழிச்சாட்டியத்தில் கண்கள் கலங்கியது.  அவள் அவனிடம் இருந்த விலக முனைய.. முனைய.. அவனது இறுக்கமும்… நெருக்கமும்… அதிகமானது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!