நீ எனக்கு தந்த காதல் – 14.
தமிழ் நிலாவின் காதல் திருமணத்தில் முடிந்த நாள்.
தமிழ் நிலா இருவரும் ஒரு வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்.
Advertisement
இனி,
தமிழ் அம்மா, அப்பா இருவரும் முறைப்படி நிலா வீட்டுக்கு சென்று பொண்ணு கேட்க, அவர்களும் சம்மதம் சொல்ல திருமண நாள் முடிவு பண்ணினர்.
Advertisement
Advertisement
திருமண பத்திரிக்கை அடிக்கப் பட்டு தமிழ் நிலா இருவரும் சேர்ந்தே சென்று தங்கள் பத்திரிக்கையை அனைவருக்கும் கொடுத்தனர்.
‘சரி சார் ரொம்ப லேட்டாச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன். மீதியை நாளைக்கு பாத்துக்கலாம். ரொம்ப டயர்டா இருக்கு’, என நிலா சொல்ல,
Advertisement
‘ஆமா நீங்க ஏன் இன்னும் என்னை சார்னு கூப்டறீங்க. தமிழ்னே கூப்டலாமே’, என்றான் தமிழ்.
‘இல்ல பர்ஸ்ட்ல இருந்து அப்டியே கூப்டு பழகிட்டனா. அதான் விட முடியல’, என நிலா சொல்ல,
‘அப்புறம் போதைல இருந்தப்ப மட்டும் தமிழ், வாடா, போடா ன்னு சொன்னீங்க ‘ என தமிழ் கேட்க,
‘அப்டியா ரொம்ப சாரிங்க. ஏதோ போதைல மனசில இருக்கறத பேசிருப்பேன். அத எதுவும் மனசுல வச்சுக்காதீங்க. ப்ளீஸ்’, என நிலா சொல்ல,
‘அதான் நீங்களே சொல்லிட்டீங்களே மனசில இருந்ததுன்னு அப்புறம் என்ன. நீங்க தாராளமா அப்டியே கூப்டலாம்’, என்றான் தமிழ்.
‘அது வந்து நீங்க மட்டும் என்னை வாங்க போங்க ன்னு கூப்டறீங்க.’, என நிலா கேட்க,
‘அப்டியா சரி டி நிலா இனிமே உன்னை என் பொண்டாட்டிய எப்டி கூப்டுனும்னு ஆசை படறனோ அப்டியே கூப்டறேன். ஓகேவாடி’, என திடீரென தமிழ் கேட்க,
‘ம் ஓகேடா தமிழ் நான் வரட்டா’ என்று சிரித்தபடி சொல்லி விட்டு அங்கிருந்து நிலா கிளம்ப,
‘இரு நான் கொண்டு வந்து விடறேன்’ என்று சொல்லி நிலாவை கொண்டு போய் காரில் அவள் வீட்டில் இறக்கி விட்டு வந்தான் தமிழ்.
கவின் யாழினி இருவரும் தமிழுக்கு போன் செய்தனர்.
‘என்னடா பண்ற கல்யாண வேலை எல்லாம் எப்டி போயிட்டு இருக்கு. எதாவது ஹெல்ப் வேனுமா’ என கவின் கேட்க,
‘ம் இப்ப தான் பத்திரிக்கை வேலை முடிய போகுது. ஒவ்வொன்னா பாத்துக்கிட்டு இருக்கோம். ஆமா உனக்கு பத்திரிக்கை வைக்க வந்தப்ப நீ வெளில போயிருக்கறதா யாழினி சொன்னா. மறக்காம வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துரு. அதே மாதிரி யாழினி வீட்லயும் பத்திரிக்கை வச்சிட்டேன். அவங்களுக்கு ஞாபகப்படுத்தி கூட்டிட்டு வந்திரு. சரியா.’ என தமிழ் சொல்ல,
‘டேய் சரிடா கண்டிப்பா எல்லாரும் வந்தறோம். அப்புறம் உன் ஹனிமூன் கிஃப்ட் ஐடியாவே சூப்பரா இருந்துது. அதனால அதே மாதிரி உனக்கும் செஞ்சரலாம்னு யாழினி சொன்னா. நீ என்ன பண்ற நிலா கூட சேர்ந்து ப்ளேஸ், டேட் செலக்ட் பண்ணி எங்களுக்கு அனுப்பு. சரியா’ என்றான் கவின்.
‘டேய் அதுக்கு என்ன அவசரம் இப்ப. எல்லாம் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம்’, என தமிழ் சொல்ல,
‘டேய் சொல்றது செய்டா. நாளைக்கு ப்ளேஸ், டேட் அனுப்புற. இல்ல நேர்ல வந்து என்ன பண்ணுவேனு சொல்லுவேன்’ என யாழினி சொல்ல,
‘சரிடி ராட்சசி அனுப்புறேன் . அப்புறம் எப்டி போகுது வாழ்க்கை. கவின் நல்ல புருஷனா உன்ன பாத்துக்கறானா இல்ல இன்னும் ப்ரெண்டா தான் நடந்துக்கறானா’ என தமிழ் கேட்க,
‘நீ வேறடா அந்நியன் மாதிரி அப்பப்ப இவ்ளோ நாள் தனக்குள்ள தேக்கி வச்சிருந்த காதல அள்ளி கொட்டுவான். சில நேரம் ப்ரெண்டா மாறி எங்கிட்ட சண்டை போட்டு வம்பு பண்ணுவான். ப்ரெண்ட் கவின் நல்லா தெரியும் இப்டி தான்னு. ஆனா லவ்வர் கவின் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கான். அது சரி உங்க கத எப்டி போகுது’ என யாழினி கேட்க,
‘உங்க அளவுக்கு இல்ல. இப்ப தான் சார்ல இருந்து தமிழ் வரைக்கும் வந்திருக்குனா நீயே பாத்துக்க. ஆனா அவ கூட இருக்கறப்ப எனக்கு என்னமோ இந்த உலகமே என் பக்கத்துல இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது. எதையோ பெரிசா சாதிச்ச மாதிரி தோனுது. இது போதும் வேற எதுவும் தேவையில்லன்ற மாதிரி இருக்கு’, என தமிழ் சொல்லிக் கொண்டே போக,
‘அப்பா சாமி. ஆள விடு. நீயே தனியா ஃபீல் பண்ணிக்கோ. இல்லைன்னா நிலாவுக்கு கூப்டு ரெண்டு பேரும் சேர்ந்து ஃபீல் பண்ணுங்க. எங்கள ஆள விடு’, என்று சொல்லி கவின் போனை வைக்க,
‘பொறாமை டா உனக்கு’ என சொல்லி தமிழும் போனை வைத்தான்.
அடுத்த நாள் ஆபீஸ்க்கு சென்று தமிழும் நிலாவும் அனைவருக்கும் பத்திரிக்கை வைத்தனர்.
‘எனக்கு தான் முன்னவே தெரியுமே. எப்டியோ இப்பவாவது ரெண்டு பேரும் ஒத்து கிட்டீங்களே. அது வரைக்கும் சந்தோஷம். ‘ என்று பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு நந்தினி சொல்ல இருவரும் சிரித்தனர்.
‘சரி கண்டிப்பா வந்துருங்க நந்தினி’ என தமிழ் சொல்ல,
‘நீங்க வேற அவ கண்டிப்பா வந்துருவா. இல்லைன்னா என்ன நடக்கும்னு அவளுக்கே தெரியும். அப்டிதான நந்தினி’ என்றாள் நிலா.
‘கவலையே படாதீங்க ஜமாய்ச்சிடலாம்.’ என்றாள் நந்தினி.
‘சரி நந்தினி நாங்க கிளம்பறோம். வீட்ல எல்லாரையும் மறக்காம கூட்டிட்டு வந்துரு.’ என சொல்லி விட்டு இருவரும் கிளம்பினர்.
கல்யாண ஜவுளி எடுப்பது, மாங்கல்யம் வாங்குவது, மண்டபம் புக் செய்வது என ஓரளவுக்கு இரு குடும்பங்களும் சேர்ந்து செய்தனர்.
தமிழின் வீட்டில் நிலா குடும்பமும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
‘அப்புறம் சம்பந்தி ரிசப்ஷனுக்கும், கல்யாணத்துக்கும் என்ன மெனுன்னு சொல்லிட்டிங்கன்னா நம்ம ஹோட்டல்லயே ரெடி பண்ணிடலாம்’ என நிலா அம்மா கேட்க,
‘இதெல்லாம் போய் எங்க கிட்ட கேக்கனுமா. நீங்களே முடிவு பண்ணிருங்க.’ என தமிழ் அம்மா சொல்ல,
‘சரிங்க. குத்து மதிப்பா எத்தன பேருக்கு ரெடி பண்றதுன்னு கண்டிப்பா நீங்க தான் சொல்லனும். எங்க சைடு ஒரு இருநூறு பேர் வருவாங்க.’ என நிலா அம்மா கேட்க,
‘ம் எங்க சைடு இருநூறு பேரு வச்சுக்குங்க. தமிழ் நிலா உங்க ரெண்டு பேர் ப்ரெண்ட்ஸ் எத்தன பேர் வருவாங்க ‘ என தமிழ் அம்மா கேட்க,
‘ஒரு ஐம்பது பேர் வருவாங்க ராஜி’, என தமிழ் சொல்ல,
‘அப்டின்னா நானூத்தைம்பது வருது’ என தமிழ் அப்பா கணக்கு போட,
‘மாமா எல்லாரும் சேர்ந்து என்ன மறந்துட்டீங்க. ‘ என நிலா தம்பி கேட்க,
‘அதான்ன சாரிப்பா எல்லாரும் உன்ன சின்ன பையன்னு நினச்சு விட்டுட்டாங்க. சரி சொல்லு உன் ப்ரெண்ட்ஸ் எத்தன பேர் வருவாங்க ‘ என தமிழ் அப்பா கேட்க,
‘ஒரு இருபத்தைஞ்சு பேர் வருவாங்க ‘ என்றான் நிலா தம்பி.
‘அப்டீனா ஐநூறு பேர் கணக்கு வச்சுக்கலாம். ஓகே வா ‘ என தமிழ் அப்பா கேட்க,
‘சரிங்க சம்பந்தி அதான் கரெக்டா இருக்கும். அப்டியே பண்ணிடலாம்’ என நிலா அம்மா சொல்ல அனைவரும் பேசிக் கொண்டிருக்க தமிழ் நிலாவை நைசாக யாருக்கும் தெரியாமல் தன் ரூமுக்கு கூட்டிச் சென்றான்.
‘ஆமா சார் இப்ப எதுக்கு என்னை தனியா கூட்டிட்டு வந்தீங்க ‘ , என நிலா கேட்க,
‘ம் சாமி கும்பிட. லவ் பண்ணதான் கூட்டிட்டு வந்தேன் என் மக்கு பொண்டாட்டி’ என தமிழ் சொல்ல,
‘இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு வெய்ட் பண்ணுங்க. அப்புறம் எப்ப வேனா எப்டி வேனா லவ் பண்ணிக்கலாம்’ என நிலா கூற,
‘அடிப்பாவி அவனவன் எப்டி லவ் பண்ணி கிட்டு இருக்கான் தெரியுமா உனக்கு. இப்டி தனியா பேச கூட்டிட்டு வந்ததுக்கே இப்டி சொல்ற.’ என்றான் தமிழ்.
‘ச்சே தனியா பேச தான் கூட்டிட்டு வந்தீங்களா. நான் கூட வேற என்னவோ நினச்சுட்டேன். அப்டினா ஓகே’ என நிலா சொல்ல,
‘யே நிலா . என்னைய விட நீ ரொம்ப ஏக்கமா இருக்க போல. என்ன பண்றது நீ சொன்னத தான் நான் உனக்கு சொல்றேன் . இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ‘ என்றான் தமிழ்.
‘ஆமா அதே தான் நாங்களும் சொல்றோம். கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அது வரைக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் அவசரப்படாம இருக்கீங்களா’ என தமிழ் அம்மா அப்பா, நிலா அம்மா, தம்பி எல்லோரும் சேர்ந்து கோரசாக கதவோரத்தில் நின்று கொண்டு சொல்ல தமிழும் நிலாவும் வெட்கப்பட்டு வேறு வேறு திசையில் ஓட அனைவரும் சிரித்தனர்.
அப்டி இப்டின்னு தமிழ் நிலாவின் திருமண நாளும் வந்தது.
ஒரு பக்கம் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய், பேரழகனாய் அருகில் உட்கார்ந்திருந்த தமிழை கண்கொட்டாமல் நிலா பார்க்க,
மறுபக்கம் சிவப்பு நிற கூறப் புடவையில் தேவதையாய் தெரிந்த நிலாவை பார்த்து மனதாற ரசித்துக் கொண்டிருந்தான் தமிழ்.
‘டேய் தமிழ் ஜொல்லு விட்டது போதும் அய்யர் தாலிய நீட்றாரு வாங்கி கட்டு’ , என கவின் சொல்ல தமிழ் நிலாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்,
தமிழ் நிலா திருமணம், பந்தி, செய்முறை, ஃபோட்டோ சூட் என எல்லாம் இனிதே முடிந்தது.
நிலா வீட்டில் முதலிரவு அறையில் தமிழ், ‘நிலா ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கலாமா’ , என கேட்க,
‘ரொம்ப தேங்க்ஸ். நானும் அதே தான் சொல்ல வந்தேன். குட் நைட்’ என்று சொல்லி நிலா படுக்க தமிழும் லைட்டை ஆஃப் செய்து விட்டு படுத்தான்.
‘நிலா, தமிழ்’, என இருவரையும் காலையில் நிலா அம்மா கூப்பிட இருவரும் எழுந்து முகம் கழுவி விட்டு வந்தனர்.
‘இந்தாங்க காபி எடுத்துக்குங்க ‘, என இருவருக்கும் நிலா அம்மா குடுக்க,
‘நிலாம்மா காபி சூப்பரா இருக்கு. நான் ரொம்ப லக்கி. ஏன்னா ராஜி, நீங்க, அப்புறம் நிலா நீங்க மூனு பேரும் சூப்பரா சமைக்கறவங்களா எனக்கு கிடைச்சிருக்கீங்க. ‘ என தமிழ் சொல்ல,
‘நீங்க மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு நாங்க தான் லக்கி தமிழ் தம்பி’ , என்றார் நிலா அம்மா.
‘ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும் . அம்மா எப்பவும் இப்டி தான் . நீங்க போய் குளிச்சிட்டு வாங்க நானும் வந்தறேன் நம்ம எல்லாம் சேர்ந்து சாப்டலாம். ஆமா தம்பி எங்கம்மா’ என நிலா கேட்க,
‘அவன் சீக்கிரமே கிளம்பி ஹோட்டலுக்கு போய்ட்டான். என்ன இங்க உங்கள பாத்து கவனிச்சிக்க சொன்னான்.’, என நிலா அம்மா கூற,
‘அம்மா நெஜமாவே தம்பி பெரிய மனுசனாயிட்டான் மா.’ என நிலா கிண்டல் அடிக்க,
‘ஆனா நீ மட்டும் இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க நிலா. காலைல சீக்கிரமா எந்திரிச்சு, குளிச்சிட்டு சமையலறைல எல்லா வேலையும் முடிச்சிட்டு, வீட்ட சுத்தம் பண்ணிட்டு , பெரியவங்களுக்கு வேனுங்கறத செஞ்சு குடுத்துட்டு வேலைக்கு கிளம்பனும்’, என நிலா அம்மா அடுக்கிக் கொண்டே போக,
‘நிலாம்மா உங்க வீட்ல எப்டி இருந்தாளோ அதே மாதிரி என் ராஜி நிலாவ பாத்துக்குவா. கவலைப்படாதீங்க. நீங்க வேனா பாருங்க கொஞ்ச நாள்ல நிலாவும், ராஜியும் சேர்ந்து கிட்டு நம்மள விரட்ட போறாங்க ‘, என தமிழ் சொல்ல நிலாவும், நிலா அம்மாவும் சிரித்தனர்.
இருவரும் குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து தமிழ் வீட்டுக்கு கிளம்பினர்.
ஒரு வாரம் விருந்துக்காக ஊர் ஊராக சுற்றினர் தமிழும், நிலாவும். இதில் இடையில் ஆபீஸையும் பார்த்துக் கொண்டனர். அசதி கொஞ்சம். காதல் அதிகமுமாய் காலம் கடந்தது.
கவினிடமிருந்து தமிழுக்கு போன் வர தமிழ் அட்டெண்ட் பண்ணி பேசினான்.
‘டேய் புது மாப்ள எப்டி இருக்க’, என கவின் கேட்க,
‘என் நிலா கூட ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு இன்னும் கனவு மாதிரி தான் இருக்கு. எவ்ளோ கஷ்டத்துக்கு பிறகு எனக்கு நிலா கிடைச்சிருக்கா. ஆனா அதெல்லாம் இப்ப தூசி மாதிரி இருக்குடா. இந்த நிமிஷம் இந்த உலகத்துல ரொம்ப ஹேப்பியஸ்ட் மேன் நான் தான்’ , என தமிழ் சொல்ல,
‘டேய் நீயே கண்ணு வச்சுராத. அப்புறம் நாளைக்கு ஹனிமூனுக்கு ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டீங்களா. எல்லா திங்ஸ்ம் மறக்காம எடுத்துக்குங்க. முக்கியமா போன அங்க போனதும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிரு’, என கவின் சொல்ல,
‘சரிடா ஒவ்வொன்னா நிலா எடுத்து வச்சிகிட்டு இருக்கா. நான் ஆபீஸ்ல இருக்கேன். இனிமே தான் கிளம்பனும். நான் நாளைக்கு ரீச் ஆகிட்டு கூப்டறேன்’, என தமிழ் சொல்ல,
‘ஓகே என்ஜாய் த ஹனிமூன்’, என சொல்லி போனை வைத்தான் கவின்.
உடனே தமிழ் நிலாக்கு போன் பண்ணி, ‘மைடியர் வைஃப் எல்லாம் ரெடி பண்ணிட்டியா. எதுவும் வாங்கிட்டு வரனுமா’, என கேட்க,
‘மைடியர் ஹஸ்பண்ட் எல்லாம் ரெடி உன்ன தவிர. அவசரப்படாம வேலய முடிச்சிட்டு வந்து சேரு. சரியா’, என சொல்லி போனை வைத்தாள் நிலா.
‘அம்மா நிலா எல்லாத்தையும் மறக்காம எடுத்து வச்சுக்குங்க. அப்புறம் அங்க போய் கஷ்ட படாதீங்க. தமிழ் எப்போ வரேன்னு சொன்னான் ‘, என தமிழ் அம்மா கேட்க,
‘கொஞ்ச நேரத்துல வந்தறேன்னு சொன்னாரு ஆன்டி. ஓரளவுக்கு எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். தமிழ் பாத்துட்டு எதுவும் மிஸ் ஆகுதுன்னு சொன்னா எடுத்துக்கலாம்’, என நிலா சொன்னாள்,
இரவு தமிழ் வருகைக்காக வாசலிலேயே நிலா காத்துக் கொண்டிருக்க,
தமிழிடம் இருந்து போன் வந்தது.
தமிழ், நிலா வாழ்க்கையில் அடுத்து நடக்க போவது என்ன?
தேனிலவு சென்றார்களா?
தொடரும்…
