Skip to content
Post Views: 7,736
அத்தியாயம் 36:
அடுத்த வந்த ஒரு நாளில் ஹேரி, அவனின் நண்பர்கள், தொழில் வட்டாரங்கள், கம்பெனியில் வேலை செய்பவர்கள், மதுவின் பிரண்ட்ஸ் அனைவரையும் அழைத்து பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான்.
ஹேரி ஆலிவ் கிரீனில் ஷெர்வானி அணிந்திருந்தான். மதுவின் கட்டளை. அதே கலரில் லெஹன்கா அணிந்து கோல்டில் எமரால்டு பதித்த நகைகள் அணிந்திருந்தாள் மது.
அவர்களே எல்லோரையும் வரவேற்று கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
Advertisement
ஜனனி சிட்னி வந்துவிட்டவள் இன்று பார்ட்டிக்கும் சந்தோசுடன் வந்திருந்தாள். அவனிடம் மது “சந்தோஷ். இங்க மெல்பர்னுக்கே வந்திருங்களேன். ஜனனிய நா ரொம்ப மிஸ் பண்றேன்” என்றாள். அதற்கு அவன் “ட்ரை பண்றேன் சிஸ்” என்றான். இடையில் மதுவுடன் டாண்டினாங் கோயிலுக்கு சென்று விநாயகருக்கு மனதார நன்றி சொன்னான் ஹேரி. அங்கு ஆர்யனை பார்த்தவள் பார்ட்டிக்கு அழைத்திருந்தாள். வந்தவன் மதுவிடம் “சோ இவர்தான் அவர் இல்ல” என்றவனுக்கு சிரித்து கொண்டே ஹேரியை அறிமுகப்படுத்தினாள்.
ஹேரியின் ஸ்கூல், யூனிவர்சிட்டி பிரண்ட்ஸ் அனைவரும் வந்திருந்தனர். எல்லோரும் சேர்ந்தாற்போல் கேட்டது, கடைசியில் உனக்கான பேர் கிடைச்சாச்சா என்று தான்.
ஒரு சில வம்பு பெண்கள் மதுவிடமே கேட்டனர் “எப்படி உன்ன சந்தோசப்படுத்துறானா” என்று. கோவத்தில் அவளுக்கு முகம் சிவக்க ஆரம்பித்ததை பார்த்ததுமே பக்கத்தில் வந்த ஹேரி “கேர்ள்ஸ். அடுத்த பத்து மாசத்தில என் மகளோட பார்ட்டிக்கு கூப்பிடும்போது உங்களுக்கே தெரியும்” என்று சிரித்தபடி பதில் கூறினான். அந்த பெண்களும் சிரித்து கொண்டே சென்றனர்.
Advertisement
அந்த சமயம் மியூசிக் ஒலிக்க ஆரம்பித்தது .
Advertisement
அஅஆ ….அஅஆ … ..
அஅஆ ….அஅஆ … ..
மது ஆச்சரியமாக திரும்பி பார்த்தாள். ஜனனி ஊர்வசி டோமிங் ஜான் சத்யன் பார்த்தி மதுவின் ப்ராஜெக்ட்டில் இருப்பவர்கள் இன்னும் சில பார்ட்டிக்கு வந்திருந்தவர்களும் சேர்ந்து மதுவை சுற்றி ஆட ஆரம்பித்தார்கள். இதில் மது ஷாக்கான விஷயம், ஹேரியும் ஆடினான். அழகாக ஆடினான். ப்ராக்ட்டிஸ் பண்ணியிருப்பான் போலும் இந்த கும்பலுடன் சேர்ந்து. முகம் சிவக்க சந்தோஷத்தில் சிரித்தவள் ஹேரியின் பக்கத்தில் அவளும் சேர்ந்து கொண்டாள்.
Advertisement
மனசோ இப்ப தந்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தள டும் டும்
மத்தள டும் டும்
மத்தள டும் டும்
ஆர்யனும் சேர்ந்து கொண்டவன் சூப்பராக ஆடினான். ஜனனியும் ஊர்வசியும், மீனாட்சியையும் செல்லத்துரையும் இழுத்து வந்து ஆட சொன்னார்கள். அவர்கள் வெட்கப்பட்டு ஒதுங்கிவிட்டனர். ஆனால் அப்பத்தா மதுவுடன் சேர்ந்து வெட்க படாமல் ஆடினார். அவருக்கும் டான்ஸ் தெரியும் என்பது நன்றாகவே தெரிந்தது. மதுவின் டான்ஸ் திறமை அவரிடம் இருந்துதான் வந்திருக்கும் போலும். சாதாரணமாகவே டான்ஸ் ஆடினால் சந்தோசமாகும் மது, இன்று சந்தோஷத்தில் இருக்கும்போது ஆடினால் கேட்கவா வேண்டும்.
பாதி பாடலில் அனைவரும் நிறுத்திவிட்டு அவள் டான்ஸை பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் மது விடாமல் ஹேரியையும் மற்றவர்களையும் இழுத்து கொண்டு வந்து ஆடினாள்.
மாலை டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓலை டும் டும்
ஒதுக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திகை டும் டும்
அஅஆ ….அஅஆ … ..
அஅஆ ….அஅஆ … ..
இறுதியில் ஹேரி மதுவை தூக்கி சுற்றி அணைத்து கொண்டான். பார்ட்டி முடிந்து அனைவருமே மதுவின் டான்ஸை புகழ்ந்துவிட்டு சென்றனர்.
ஆர்யன்தான் மதுவிடம் வந்து கேட்டான். “ஏன் மதுமிதா. நாங்க ஒரு டான்ஸ் ட்ரூப் வச்சிருக்கோம். இங்க நிறைய ஸ்ட்ரீட், ஸ்டேஜ் ப்ரோக்ராம்லாம் பண்ணுவோம். எங்க ட்ரூப்ல சேந்துக்கிறிங்களா. உங்களால எங்க ட்ரூப்க்கு நல்ல ஃபியூட்சர் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றதும் மது அவசரமாக மீனாட்சி எங்கு என்றுதான் பார்த்தாள்.
நல்ல வேலை அவர் தூரமாக ஊர்வசியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“பார்க்கலாம் ஆர்யன்” என்று சொல்லிவிட்டாள். இன்னும் சில ஹேரியின் தோழிகள் அவளிடம் பரத நாட்டியம் சொல்லி கொடுக்க முடியுமா என்று கேட்டனர்.
எல்லாவற்றையும் சமாளித்து விழாவை இனிதாக முடித்தனர்.
மூன்று மாதங்கள் கழிந்தது.
மது அவள் கம்பெனியில் ஊர்வசிக்கு பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். மதுவிற்கு தாலி பெருக்கி போட்டுவிட்டு நேற்றுதான் மதுவின் குடும்பம் இந்தியா சென்றனர்.
ஊர்வசிக்கு அவள் அத்தை பையனோடு நிச்சயம் நடந்திருந்தது எந்த பிரச்னையுமில்லாமல்.
ஊர்வசிதான் மதுவிடம் “என்ன மது. இந்த சத்யன் வர வர சரியாவே இல்ல. தாடி வேற வச்சுட்டு சுத்திட்ருக்கார். அடிக்கடி பார் பக்கம் போறதா வேற செய்தி வந்தது” என்றதும்
முதலில் சொன்னதை கேட்டு அலட்சியமாக இருந்த மது ஊர் பின் சொன்ன செய்தியை கேட்டு கோவத்தோடு எழுந்து சத்யனின் ரூமிற்க்கு சென்றாள்.
கதவை தட்டிவிட்டு உள்ள சென்றவளை பார்த்து திரும்பவும் லேப்டாப்பில் தலையை புதைத்து கொண்டான் சத்யன்.
“என்ன அண்ணா. நீங்கதான் நவீன தேவதாஸாமே. கேள்விப்பட்டேன்” என்று அவன் வாயை பிடுங்க ஆரம்பித்தாள்.
“ச்சு”
“ஆனா தேவதாசுக்கு காதலி இருந்தாளே. நம்ம லெட்சணத்துக்குத்தான் அப்படி யாரும் இல்லையே” என்று மது சொல்லி முடிக்கவில்லை சத்யன் “யார் சொன்னா குட்டி சாத்தான். எனக்கு அழகான காதலி இருக்கா. உன்ன விட அழகா இருப்பா”
“ஓ. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு”
“என்ன கிண்டலா. உனக்கு என் காதலிய யாருன்னே தெரியாது”
“ஓ அப்படியா. உங்க மொபைல்ல ரிங் டோன் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, உங்க காலர் ட்யூன் பூவ பூவ பூவ பூவே. அப்புறம் உங்க கைல டேபில்ல சட்டையில எப்போதும் ஒரு பூ. இதுலேந்தே உங்க காதலி பேரு பூ ன்னு நம்ம ஊர் கூட கண்டுபிடிச்சிட்டா. எனக்கு தெரியாதா”
“ஓ அப்ப என் காதலி யாருன்னு தெரியுமா உனக்கு” என்று பரபரப்பாக கேட்டவனை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தவள் “இந்த பூவ எடுத்து காதுல வச்சுக்குங்க”
என்று கிண்டலாக சொல்லிக்கொண்டே எழுந்த மது தலை சுற்றி திரும்ப சேரில் உட்கார்ந்தாள்.
அதை பார்த்து சத்யன் அவசரமாக எழுந்து அவளிடம் வந்தான் “மது என்னடா பண்ணுது” என்று தலையை தடவினான்.
அப்பொழுது மதுவின் மொபைலில் ஹேரி அழைத்ததும் சத்யன் எடுத்தவன் “மதுக்கு மயக்கம் வந்துட்டு பாஸ்” என்று மது தடுப்பதற்குள் கூறிவிட்டான்.
அவ்வளவுதான் அடுத்த பத்து நிமிடத்தில் மதுவின் முன் நின்றான் ஹேரி. அவளின் சீட்டுக்கே வந்துவிட்டவனை பார்த்து அனைவரும் கவனிக்க ஆரம்பித்ததால் அவனை அழைத்து கொண்டு சேர்மன் ரூமிற்கு சென்றாள் மது.
உள்ளே சென்றதும் அவளை அணைத்து “என்ன பேபி. உனக்கு மயக்கம்ன்னு சத்யன் சொன்னார்”
“சரி அதுக்கப்புறம் நா கால் பண்ணிட்டே இருந்தனே. ஏன் எடுக்கல”
“கால் பண்ணியா. நா பாக்கலையே” என்று மொபைலை தேடினான். அதை காணவில்லை. “அது அங்க அவசரத்துல ஹோட்டலையே விட்டுட்டேன் போல. ஜான் இருக்கான். எடுத்து வச்சிருப்பான். நீ உனக்கு இப்ப ஓகே வா. டாக்டர்ட்ட போலாமான்னு சொல்லு” என்றான். முக்கியமான கிளைன்ட் மீட்டிங்கை ஜானிடம் விட்டு விட்டு வந்தவனை என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தவள் “எனக்கு ஒன்னும் இல்ல. டாக்டர்ட்ட போகணும். அதுக்கு முன்னாடி இத பாரு கண்ணா” என்று ப்ரகனன்சி டெஸ்ட் ஸ்ட்ரிப்பை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள். அவனுக்கு சுத்தமாக புரியவில்லை. டென்ஷனாக பார்த்தவனை பார்த்து மென்மையாக சிரித்தவள் “இது ப்ரகினன்ஸி டெஸ்ட் ஸ்ட்ரிப். ரெண்டு பிங்க் கோடு வந்தால் நம்ம அப்பா அம்மா ஆக போறோம்ன்னு அர்த்தம்” என்றாள்.
அர்த்தம் புரிந்து ஸ்ட்ரிப்பை பார்த்தான். ரெண்டு பிங்க் கோடு. அவனுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஏன் மதுவுமே இன்னும் குழந்தையை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. இருவரும் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழ்ந்தார்கள். அவளுக்கு பீரியடும் எப்போதும் தள்ளி தள்ளி வருமென்பதால் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது எதிர்பாராத சந்தோசம் இருவருக்குமே.
மதுவின் வயிற்றில் கை வைத்து பார்த்தான்.
“நம்பவே முடியல பேபி. என் பேபிக்குள்ள ஒரு பேபியா” என்று அவளை மென்மையாக அணைத்து கொண்டான்.
அப்பொழுதே டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி கர்ப்பத்தை உறுதி செய்தவர்கள் அவர்களுக்கு வேண்டிய அனைவரிடமும் செய்தியை பகிர்ந்து கொண்டார்கள்.
மதுவின் குடும்பத்தார் திரும்பவும் ஆஸ்திரேலியா ட்ரிப் பிளான் செய்தார்கள்.
அன்று மாலையே சத்யன் பார்த்தி ஊர்வசி ஜான் வந்தார்கள் வீட்டிற்கு.
சத்யன் கையில் கிளுகிளுப்பையை வாங்கி தூக்கி வந்தான். அதை பார்த்த மதுவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. எல்லோருமே சிரித்து முடித்ததும் மதுதான் பார்த்தியிடம் ஆரம்பித்தாள்.
“என்னண்ணா பூக்கு மாப்பிள்ளை முடிவாகி விட்டதாமே” என்று சத்யனை பார்த்து கொண்டே கேட்டாள்
சத்யன் நெஞ்சில் கையை வைத்து கொண்டான்.
“நீங்க ஏண்ணா பீல் பண்றீங்க”
“தெய்வமே” என்று மதுவை பார்த்து கும்பிட்டான்.
போனால் போகட்டும் என்று அவனை பார்த்த மது “பார்த்தி அண்ணா. எங்க சத்யண்ணாவுக்கு உங்க தங்கச்சி பூங்குழலிய கட்டி குடுங்க. கண்கலங்காம……….. பூ சத்யண்ணாவா பாத்துக்கட்டும்” என்றவளிடம் பார்த்தி,
“குடுக்கலாம்மா. ஆனா என் தங்கச்சி லவ் சொல்லியும் உங்கண்ணன் ஒத்துக்கலையாம்ல” என்று குறையாக கேட்டான்.
ஆம் மதுவின் திருமணத்தன்று மாலையே பூ சத்யனிடம் வந்து “மிஸ்டர் சத்யன். உங்க லவ் ப்ரோபோசலுக்கு நா ஒத்துக்கிறேன். எங்கண்ணன்கிட்ட வந்து பொண்ணு கேளுங்க” என்றாள்.
“எதே. நா எப்ப ப்ரொபோஸ் பண்ணேன்”
“காலைல அலைபாயுதே ஸ்டைல்ல ப்ரொபோஸ் பண்ணிங்களே” என்றவளை “சும்மா கலாய்க்காதீங்க பூ. உங்கண்ணன் ஏற்கனவே எம்மேல கொல காண்டுல இருக்கார்” என்று நகர்ந்து விட்டான்.
ஆனால் அதற்கு பிறகு அவளின் நியாபகமே சத்யனுக்கு. இங்கு பூ, பார்த்தி மது அனைவரிடமும் சத்யனை மிகவும் பிடித்திருப்பதாக கூறி சம்மதம் வாங்கி விட்டாள். சத்யன் ட்யூப் லைட் என்றால் பூ அவள் அண்ணன் மாதிரி பிரைட். சத்யன் வீட்டிலும் மதுவே பேசி நிச்சய தேதியை கூட குறித்து விட்டார்கள்.
இதை அறிந்த சத்யன் “மச்சான்” என்று போய் பார்த்தியை கட்டி கொண்டான் .
அதை பார்த்து சிரித்தார்கள் அனைவரும்.
(வருவாள்…)
error: Content is protected !!