Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 17.

தமிழோடு நிலாவின் காதல் பயணம் மீண்டும் ஆரம்பம்.

 

தமிழ் நிலா இருவரும் பிஸ்னஸ் மீட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தனர்.

 



Advertisement

இனி,

 

‘என்னம்மா நிலா சீக்கிரம் வந்துட்டீங்க.’, என தமிழ் அம்மா கேட்க,

Advertisement

 

Advertisement

‘அதுவந்து’, என நிலா இழுக்க தமிழ் அவள் கையை பிடித்து அழுத்தி விட்டு,

 

‘மீட்டிங் முடிஞ்சிருச்சு. அதான் ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தோம்’, என சொல்ல,

Advertisement

 

”சரி போய் ரெஸ்ட் எடுங்க’, என்று சொல்லி விட்டு டிவியில் சீரியலை கண்டினியூ பண்ணினார்.

 

‘ஆன்டி அங்கிள் எங்க ‘, என நிலா கேட்க ,

 

‘ஆர்.டி. கட்ட போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போயிருக்காரு நிலா’, என்றார் தமிழ் அம்மா.

 

நன்கு தூங்கி எழுந்தான் தமிழ்.

 

‘நிலா ரொம்ப டோரடிக்குது. எங்கயாவது வெளிய போலாமா’, என தமிழ் கேட்க,

 

‘ம் .எல்லாரும் சேர்ந்து எங்கயாவது போலாம் தமிழ்’, என நிலா சொல்ல,

 

‘எல்லாருமா சரி இரு’, என சொல்லி விட்டு கவினுக்கு போன் செய்தான் தமிழ்.

 

‘டேய் சொல்றா’, என கவின் கேட்க,

 

‘அது ஒன்னுமில்ல ரொம்ப போரடிக்குது வெளிய எங்காவது போலாம்னு தோனுச்சு’ அதான் உனக்கு கூப்டேன்.’, என தமிழ் சொல்ல,

 

‘சூப்பர் டா. எங்க போலாம்னு கேக்க கூப்டியா. ம் புதுசா ஒரு படம் வந்திருக்கு. வந்து ஒரு வாரம் தான் ஆகுது. ரெண்டு டிக்கட் போட்டு கூப்டறேன்’, என கவின் சொல்ல,

 

‘டேய் இரு இரு அவசரப் படாத. சினிமா ப்ளான் ஓகே. ஆனா ரெண்டு டிக்கட் இல்ல இரு எத்தனைன்னு கேட்டுட்டு கன்பார்ம் பண்றேன்’, என தமிழ் சொல்ல,

 

‘என்ன எத்தனை பேருன்னு கேட்டுட்டு கூப்டறியா. அடப்பாவி அறிவிருக்கா டா உனக்கு. ஹனிமூன் போக முடியாம போச்சு. அட்லீஸ்ட் நீயும், நிலாவும் தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்குன்னு பாத்தா.’, என கவின் கேட்க,

 

‘நானும் அப்டி நினச்சு தான் பர்ஸ்ட் கேட்டேன். ஆனா நிலா கேட்டவுடனே ம் எல்லாரும் போலான்னு ரொம்ப சந்தோஷமா சொன்னா. அது எனக்கு புடிஞ்சிருந்துச்சு. அதான் நானும் அப்டியே ஓகே சொல்லிட்டேன். அப்புறம் உங்க ரெண்டு பேரு, உங்களோட அப்பா, அம்மா எல்லாத்தையும்  கணக்குல சேத்துக்க’, என தமிழ் சொல்ல,

 

‘நல்லா வருவிங்கடா. உனக்கு ஏத்தவ அவ, அவளுக்கு ஏத்தவ நீ. சரி நாம சேர்ந்து வெளில போயும் ரொம்ப நாளாச்சு. எத்தன பேருக்கு டிக்கட் வாங்கறதுன்னு சீக்கிரமா சொல்லு’, என கவின் சொல்லி விட்டு போனை வைக்க,

 

தமிழ் நிலாவிடம் வந்து, ‘நிலா உங்க அம்மா, தம்பி ரெண்டு பேரையும் கூப்டு’ , என சொல்ல,

 

‘நீங்களே கூப்டுங்க’, என சொல்லி விட்டு நிலா செல்ல,

 

தமிழ் நிலா தம்பிக்கு போன் செய்து, ‘நான் தமிழ் பேசறேன். இன்னிக்கு ஈவ்னிங் ஷோக்கு நீயும், அம்மாவும் வறீங்களா. ஒன்னுமில்ல எல்லாம் சேர்ந்து போனா நல்லா இருக்கும் அதான்’, என கேட்க,

 

‘கண்டிப்பா வந்தறோம் சார். எந்த தியேட்டர்னு மெசேஜ் அனுப்புங்க’, என நிலா தம்பி சொல்ல,

 

‘சார் வேணாமே மாமான்னே கூப்டு. அப்ப தான் எனக்கும் ஃபீல் ஆகும். ப்ளீஸ்’, என தமிழ் சொல்ல,

 

‘நீங்க அப்பவும் இப்பவும் இப்டி தான் மாமா ன்னு உங்கள கூப்ட சொல்லுவீங்க. இனிமே உங்கள மாமா ன்னே கூப்டறேன். ஓகே மாமா’, என நிலா தம்பி சொல்லி போனை வைத்து விட்டு தன் அம்மா விடம் நடந்ததை சொல்ல சென்றான்.

 

தமிழ் கவினுக்கு பன்னிரண்டு டிக்கட் புக் செய்ய சொல்லி மெசேஜ் அனுப்பினான்.

 

‘ராஜி, அப்பா, நிலா எல்லாம் கிளம்புங்க. ஈவ்னிங் ஷோக்கு புக் பண்ண சொல்லிருக்கேன். நானும் கிளம்பி வந்தறேன், என தமிழ் சொல்ல,

 

‘டேய் நாங்க எதுக்கு. நீங்க போய்ட்டு வாங்க ‘, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘அங்கிள் ப்ளீஸ் எல்லாரும் சேர்ந்து ஒன்னா டைம் ஸ்பெண்ட் பண்ண மாதிரி இருக்கும்’, என நிலா சொல்ல,

 

‘சரி ஓகே உனக்காக தான். ராஜி கிளம்பு போலாம்’, என தமிழ் அப்பா சொல்லி விட்டு தமிழ் அம்மாவும் அப்பாவும் தமிழை பார்த்து சிரிக்க தமிழ் அவர்களை முறைத்த படி கிளம்பச் சென்றான்.

 

அனைவரும் தியேட்டருக்கு வந்து சேர எல்லாரும் சேர்ந்து பேசிக் கொண்டே உள்ளே சென்றனர்.

 

‘எல்லோரும் அவங்க அவங்க ஜோடி கூட உட்காருங்க ‘, என கவினும், நிலா தம்பியும் ஏற்கனவே தாங்கள் ப்ளான் செய்ததை சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே ஜோடியாக உட்கார்ந்து படத்தை பார்த்தனர்.

 

மற்றவர்கள் படத்தை பார்க்க  கவினும், நிலா தம்பியும் மட்டும் தமிழையும் நிலாவையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இடைவேளை விட கவினும், நிலா தம்பியும் தமிழை கூட்டிக் கொண்டு போய்,

 

‘என்ன டா படம் நல்லா இருந்துச்சா’, என கவின் கேட்க,

 

‘பரவால்ல சுமாரா இருக்கு. செகண்ட் ஹாஃப் நல்லா இருக்கும்னு ரிவ்யூல பாத்தேன்’, என தமிழ் சொல்ல,  நிலா தம்பி சிரித்துக் கொண்டே,

 

‘மாமா நீங்க ஏன் இவ்ளோ அம்மாஞ்சியா இருக்கீங்க. அதனால தான் எங்க நிலாக்கு உங்கள புடிச்சிருக்குன்னு நினக்கறேன். ‘, என நிலா தம்பி சொல்ல,

 

‘என்ன சொல்றேனு புரியலடா’, என தமிழ் கேட்க,

 

‘ம் உனக்கு இது மட்டுமா புரியல. வா செகண்ட் ஹாஃப் நல்லா இருக்கும்னு சொன்னீல போய் பாக்கலாம்’, என கவின் சொல்ல மூவரும் அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு போய் கொடுத்தனர்.

 

படம் முடிந்ததும் அனைவரும் நைட் டின்னருக்கு ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

 

தமிழ் பேசிக் கொண்டே பார்க்காமல் காளான் கிரேவியை தன் தட்டில் போட்டு சாப்பிட போக  அதை பார்த்த நிலா  வேகமாக தடுக்க,

 

‘என்னாச்சு நிலா’, என்று தமிழ் கேட்க,

 

‘இல்ல காளான் உங்களுக்கு சேராது அதான்’ என சொல்லி விட்டு அவனது தட்டை அவள் வாங்கி கொண்டு தமிழுக்கு வேறு தட்டை தர,

 

‘தேங்க்ஸ் நிலா. நல்ல வேளை. சரி எதுக்கு வேற தட்டு. ‘, என தமிழ் கேட்க,

 

‘அப்புறம் நீங்க எதுல சாப்டுவீங்க’, என நிலா கேட்க,

 

‘நீ என் தட்ல சாப்டும் போது நான் உன் தட்ல சாப்டா தப்பில்ல’, என நிலாவின் தட்டை வாங்கி தமிழ் சாப்பிட,

 

இதை பார்த்தும் பார்க்காமல் மற்றவர்கள் பேசிக் கொண்டே சாப்பிட நிலா தம்பியும், கவினும் மட்டும்,

 

‘அப்பாடா க்ளைமேக்ஸ் ஆவது நல்லா அமைஞ்சது’, என கோரசாக மனதில் நினைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

 

ஒருவாராக எல்லாம் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து  கிளம்பினர்.

 

‘சரி நாங்க கிளம்பறோம் டா. நீங்களும் பாத்துப் போங்க’, என கவின் சொல்லி விட்டு அவர்கள் குடும்பத்தோட கிளம்ப, நிலா தம்பியும், அம்மாவும் சொல்லி விட்டு கிளம்ப,  தமிழ் வீட்டிலும் கிளம்பி வந்தனர்.

 

தமிழ் வீட்டில் தமிழ் அம்மா, ‘ஏங்க இந்த மாதிரி எல்லாரும் சேர்ந்து மாசத்துக்கு ஒரு தடவையாவது எங்கையாவது போகனும். ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு. ‘, என சொல்ல,

 

‘ஆமா ராஜி. எல்லாத்தையும் பாத்து பேச, கூட சேர்ந்து சாப்ட கொஞ்சம் ரிலாக்ஸா ஃபீல் ஆகுது’, என்று தமிழ் அப்பா சொல்லி விட்டு இருவரும் தூங்கச் சென்றனர்.

 

ரூமில், ‘ரொம்ப தேங்க்ஸ் தமிழ். நான் கேட்டதும் ஏற்பாடு பண்றதுக்கு. நான் ரொம்ப ஹேப்பி’, என நிலா சொல்ல,

 

‘நீ வேற நிலா நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும். ஆபீஸ் ஸ்ட்ரெஸ்ல இருந்து இப்ப தான் ஃப்ரீயான மாதிரி இருக்கு. எல்லார் கூடவும் சேர்ந்து நானும் ஜாலியா என்ஜாய் பண்ணேன். இது எல்லாம் உன்னால தான்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி டைமாச்சு தூங்கலாம்’, என நிலா சொல்ல இருவரும் தூங்கினர்.

 

நிலாவின் கனவில் தமிழ் ஆபத்தில் இருப்பது போல் வர பாதி கனவில் பயந்து எழுந்து தமிழை பார்க்க அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

 

தமிழின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘நீ ஏன் திடீர்னு என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியற. உன் மேல எனக்கு காதல் அதிகமாயிடுச்சோ. ஆனா உனக்கு ஏன் இன்னும் எதுவும் ஞாபகத்துக்கு வரல. ஒரு வேல எதுவும் ஞாபகத்துக்கு வரவே இல்லைன்னா என்னை விட்டு பிரிஞ்சு போயிடுவியா.  ப்ளீஸ் பா தயவு செஞ்சு அத மட்டும் செஞ்சுராத. இப்ப இருக்க மாதிரி ப்ரெண்டாவே கூட கடைசி வரைக்கும் இருந்துக்கலாம். எனக்கு உன் கூடவே இருக்கனும் அவ்ளோ தான். ‘, என அழுது கொண்டே தமிழின் தலையை வருடி விட்டு தனக்குள் நினைத்துக் கொண்டு அப்படியே  தமிழ் அருகிலேயே உட்கார்ந்த படி தூங்கிப் போனாள்.

 

சிறிது நேரத்தில் தமிழுக்கு தண்ணீர் தாகம் எடுக்க எழுந்து தண்ணீரைக் குடித்து விட்டு திரும்பிப் பார்க்க நிலா அருகில் உட்கார்ந்த படி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு மெதுவாக கீழே இறக்கி படுக்க வைத்து விட்டு அவளை பார்த்த படி அருகில் அவனும் படுத்துக் கொண்டு,

 

‘நிலா உன்னை போய் எப்படி நான் மறந்தேன்னு எனக்கு தெரியல. இப்பவே உன்னை எனக்கு இவ்ளோ புடிக்குதே அப்ப எப்படி புடிச்சிருக்கும். நீ செய்ற ஒவ்வொன்னும் என்னை உன் பக்கம் இழுக்குது.  உனக்காக நானும் எனக்காக நீயும் எவ்ளோ தூரம் தான் போவோம்னு பாக்கலாம். ஒரு வேல எதுவுமே ஞாபகத்துக்கு வராமலே போனா கூட பர்ஸ்ட்ல இருந்து திரும்ப உன்னை லவ் பண்ண எனக்கு ஒரு சான்ஸ் குடுப்பியா. அது வரைக்கும் எனக்காக எங்கூடவே இருப்பியா நிலா. என்னை விட்டு போயிர மாட்டில்ல.’, என அவள் முகத்தை பார்த்துக் கொண்டு தனக்குள் நினைத்த படி தூங்கிப் போனான் தமிழ்.

 

காலையில் முதலில் எழுந்த நிலா தான் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து விட்டு, ‘நாம எப்ப இங்க வந்தோம். ம் பாதி கனவுல எழுந்திருச்சு வந்து நடு ராத்திரில  லவ் பண்ணிகிட்டு இருந்தா இப்டி தான்’, என தனக்குள் புலம்பிய படி எழுந்து சென்றாள்.

 

தமிழுக்காக நிலா காத்திருப்பாளா?

 

தமிழுக்கு நிலா மேல் இன்று தோன்றிய ஏக்கம் காதலாக மலறுமா?

 

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!