Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்….13

உன் காதல் ஒரு வரமாய்….13

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே அமிர்தாவின் மனது சரியில்லை எழந்தவுடன் தன் அன்னையின் புகைப்படத்தை கும்பிட்டுவிட்டு தன் வேலைக்கு சென்றாள்.புது சரக்குகள் வந்திறங்கியருக்க அதனை ரகம் பார்த்து அடுக்கி கொண்டிருந்தார்கள் அமிர்தா வந்திருக்கும் துணிகளின் எண்ணிக்கை கணக்கிட்டு அதற்கான பார் கோர்டை பிரின்ட் எடுத்து கொண்டிருந்தாள்.

“அமிர்தா…..கொஞ்சம் வா….”என்று மாலதி அழைத்ததாக ஒரு பெண் வந்து கூறவும் அமிர்தா அவரின் அறைக்கு சென்றாள்.

“மேடம் என்னை வர சொன்னீங்களா….”



Advertisement

“ம்ம்….ஆமா அமிர்தா….உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…”என்று கூறிக் கொண்டே தன் கணினியிலிருந்து முகத்தை எடுக்க,

“சொல்லுங்க மேடம்….” என்ற அமிர்தாவின் முகம் பயத்தை தத்தெடுத்தது.அவள் பயந்தது போல் தான் அவரின் அடுத்த பதிலும் இருந்தது.

“அமிர்தா அது…..உன்கிட்ட சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனா சொல்லி தான ஆகனும்…..அது இன்னும் ஆறு மாசத்துல இந்த கடையை நம்ம முதலாளி பையன் எடுத்து நடத்த போறாரு….அவரு இங்க நிறைய மாற்றம் கொண்டவர போறாரு….நேத்து தான் நான் மீட்டிங் அட்டென் பண்ணிட்டு வந்தேன்….அவரு சொல்லுரதெல்லாம் பார்த்தா இங்க நிறைய பேருக்கு வேலை போகும் போல இருக்கு அதுல நீயும் இருக்க…..முதலாளி இப்பவே அவங்க கிட்ட எல்லாம் சொல்லிட சொல்லிட்டாரு அதான் நான் உன்னை கூப்பிட்டேன்….”என்றவர் அவளின் முகத்தை பார்க்க அவருக்கும் பாவமாக தான் இருந்தது.

Advertisement

“அமிர்தா உனக்கு நான் என்ன சொல்லுறேன்னு புரியுது தான…..இன்னும் ஆறு மாசத்துக்குள்ள நீ வேற ஜாப் தேடிக்கோ….”என்றுவிட்டு தன் வேலையில் கவனமாகிவிட்டார்.அவரை பொறுத்தவரை அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்துவிட்டார்.அமிர்தாவிற்கு மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது ஆனால் முன்பே இதை கணித்துவிட்டதால் பெரிதாக கலங்கவில்லை.

Advertisement

“புள்ள நீ கலங்காத….நான் சொன்ன கடையில திரும்பியும் கேட்டு பார்க்குறேன்….”என்று பாரதி அறையில் கூறிக் கொண்டிருந்தாள்.

“இல்லக்கா நான் அழலாம் இல்லை….இது தான் முன்னவே தெரிஞ்ச செய்தி தான….என்ன ஆறு மாசத்துக்குள்ள நான் வேற வேலை தேடனும்….சரிக்கா தூங்குங்க….”என்று கூறிவிட்டு படுத்துவிட்டாள்.படுத்தவளுக்கு தூக்கம் தான் வரவில்லை மனதில் பல கேள்விகள் எங்கு வேலை தேடுவது,எப்படி தேடுவது அதோடு படிக்க வேறு வேண்டுமே என்ன செய்வது இவ்வாறு கேள்விகள் அணிவகுக்க எப்போதும் போல் தன் அன்னையின் படத்தை எடுத்து தன் கைகளில் அடக்கிக் கொண்டு தூங்க முயன்று வெற்றியும் பெற்றாள்.

“என்னமா அமிர்தா கோவிலுக்கு வந்தே ரொம்ப நாள் ஆச்சு….”என்று குருக்கள் கேட்க,

Advertisement

“வேலை அதிகம் சாமி….அதான் வரமுடியலை…..”

“சரிமா இன்னைக்கு சாய்ந்திரம் கொஞ்சம் வரியா….எனக்கு கொஞ்சம் உன் உதவி தேவை….”என்று கேட்க சரி என்றுவிட்டு வந்தவள் பின் ஏதோ நினைவு வந்தவளாக மீண்டும் கோவிலின் உள்ளே நுழைய சாமியின் முன் நின்றிருந்தவனைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.

அங்கே சிவா கண்களை மூடி பிராத்தனை செய்து கொண்டிருந்தான்.அவனை பார்த்த நொடி அமிர்தாவின் மனசுணக்கம் எல்லாம் காணாமல் போனது அவனிடம் பேசாதது என்று அனைத்தும் மறந்து அவனை நோக்கி ஓடி வந்தவளின் பாதங்கள் பாதியில் நின்றுவிட்டது அத்துடன் அவளின் இதயமும்.சிவாவின் நெற்றியில் ஒரு பெண் விபூதி இட அவன் பவ்வியமாக வாங்கி கொண்டான்.

அமிர்தாவின் இதயம் நின்றதற்கான காரணம் இது மட்டும் இல்லை அந்த பெண்ணின் கழுத்தில் புதிதாக தொங்கிக் கொண்டிருந்த தங்க மாங்கல்யம்.அப்போது தான் அவள் சிவாவின் உடையையும் கவனிக்க அவனும் பட்டு வேட்டியில் இருந்தான்.அமிர்தாவின் மனது தாளம் தப்பியது விம்மி வெடிக்கும் நெஞ்சை ஒரு கரத்தால் பிடித்தபடி இது உண்மையாக இருக்காது என்று தனக்குள் கூறிக் கொண்டே அவனை நெருங்க நினைக்க,

“என்னடீம்மா….இங்க நின்னுட்டு இருக்க….உள்ள வா….”என்ற மாமி உள்ளே செல்லும் போதே அவளிடம்,

“பார்த்தியா இந்த சிவா தம்பியை நமக்கு சொல்லாமலே கல்யாணத்தை முடிச்சிட்டான்….”என்று கூறிக் கொண்டே செல்ல,முன்னே வைத்த அமிர்தாவின் பாதம் தன் போல் பின்னே சென்றது.அதன் பிறகு அவள் அங்கு இருக்கவில்லை எப்படி வந்தாள் என்று தெரியாமல் அவளின் பாதங்கள் விடுதிக்கு இழுத்து செல்ல தன் போல் விடுதிக்கு வந்துவிட்டாள்.

இரண்டு நாட்களாகவே அமிர்தா சரியில்லை என்று பாரதி கணித்துவிட்டாள்.ஆனால் பாரதி கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தை கூறி அவளிடம் இருந்து நகர்ந்துவிடுவாள்.முன்பும் இப்படி தான் இருந்தாள் இப்போது அதை விடவும் மிகவும் மோசமாக இருப்பது போல் தான் இருந்தது பாரதிக்கு தோன்றியது.இன்றும் அதே போல் வானத்தை வெறித்தபடி மாடியில் அவள் அமர்ந்திருக்க,

“என்னடி என்ன தான் பிரச்சனை….சொல்லி தான் தொலையேன்…..”என்று மனது கேட்காமல் பாரதி அவளிடம் கத்திவிட,அமிர்தாவின் கண்கள் கலங்கி உதடுகள் துடித்து வெடித்து அழுதுவிட பாரதி பதறி தான் போனாள்.

“ஏய் என்ன புள்ள எதுக்கு இப்படி அழற….என்னாச்சு…..”என்று அவளின் தோள்களை தொட பாரதியின் மடியில் படுத்து தேம்பி தேம்பி அழுதாளே தவிர வேறு எதுவும் கூறவில்லை.ஆனால் பாரதிக்கு ஒன்று மட்டும் புரிந்தது விஷயம் பெரியது அதோடு அது சிவா சம்மந்தப்பட்டதும் கூட என்று புரிந்து கொண்டவள்,

“என்ன புள்ள சிவாவை பார்த்தியா??ஏதாவது பிரச்சனையா???”என்று தயக்கத்துடன் தான் கேட்டாள்.அமிர்தா சிவா சம்மந்தப்பட்ட விஷயங்களை அவளிடம் கூறுவதை நிறுத்தியதிலிருந்தே அவளிற்கு தன்னிடம் பகிர விருப்பமில்லை என்று புரிந்து கொண்டவள் அவளிடம் அதை பற்றி அதிகம் கேட்டுக் கொள்ளமாட்டாள்.ஆனால் இன்று அவள் உடைந்து அழவும் மனது கேட்காமல் கேட்டுவிட்டாள்.பாரதி கேட்டதற்கு அமிர்தா எந்த பதிலும் தரவில்லை ஆனால் அழுகை இன்னும் கூடி போனது.

இப்போது கேட்டாலும் பதிலும் வராது என்று புரிந்து போனது அவளிற்கு அதனால் அதற்கு மேல் பாரதி எதுவும் கேட்டகவில்லை அவள் அழுது ஓயட்டும் என்றுவிட்டுவிட்டாள்.அமிர்தாவின் அழுகை ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனது அதோடு அவளின் உடலும் ஓய்ந்து தான் போனது.இதற்கு மேல் தாங்குவதற்கு மனதிலும் உடலிலும் தெம்பில்லை என்று என்பது போல அவள் உடல் துவல பாரதி தான் அவளை தாங்கி பிடிக்க முயன்று தோற்று கொண்டிருந்த போது அவளின் கைகளின் மீது இன்னுமொரு கரம் விழுந்தது யார் என்று பார்க்க கீதா நின்றிருந்தாள்.

“நான் தான் தூக்கு….மயங்கிட்டா….”என்று அமிர்தாவை கை தாங்கலாக இருவரும் தூக்கி அறைக்கு வந்தனர்.அவளது படுக்கையில் படுக்க வைத்தவிட்டு நிமிர்ந்த கீதா பாரதியிடம்,

“என்ன பிரச்சனை….நீங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்….”என்று கேட்க,பாரதிக்கு கீதாவிடம் கூற தயக்கம் அதனால் யோசிக்க,

“இங்க பாரு இவளுக்கு நான் எவ்வளவு கஷட்ப்பட்டு மெம்பர்ஷிப் வாங்கி கொடுத்தேன்….இவ இப்ப ஒழுங்கா படிக்கிறது இல்லை…..தெரியுமா உனக்கு…நல்ல பொண்ணு ஏன் இப்படி இருக்கானும் கேட்கலாம்னு தான் வந்தேன்…..அம்மா அப்பா இல்லாத பொண்ணு நாம இவளுக்கு அக்கா மாதிரி தான் தைரியமா சொல்லு என்னால முடிஞ்ச உதவியை செய்யுறேன்….”என்று கீதா கூறவும் பாரதி ஒன்றுவிடாமல் அமிர்தாவை பற்றி அனைத்தையும் கூறிவிட,

“ம்ம்….நினைச்சேன்….சரி இவளை எழுப்பி சாப்பாட்டை கொடு…..நான் வந்திடுறேன் வந்து வெப்பிலை அடிக்கிறேன்…..”என்று விட்டு நகர,பாரதி பீதியாக கீதாவை பார்க்க,

“அட நீ வேற பயப்படாத….எழுப்பு வரேன்….”என்று பாரதியின் கன்னத்தை தட்டிவிட்டு சென்றுவிட்டாள்.பாரதி கீதா சொன்னதை போல் அமிர்தாவை முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி அவளிற்கு சாப்பாட்டை ஊட்டி அமர வைத்தாள்.என்ன தான் அமிர்தா எழுந்து அமர்ந்துவிட்டாலும் அவளின் நினைவு இங்கில்லை என்பது அவளின் வெறித்த பார்வையிலேயே தெரிந்தது.சற்று நேரத்திற்கு பிறகு அறைக்குள் வந்த கீதா,

“என்ன எந்திரிச்சிட்டாளா…..”என்று பாரதியிடம் கேட்டுக் கொண்டே அவளின் அருகே அமர்ந்தாள்.

“எங்க நினைவு இன்னும் இங்க வரலை அங்க தான் இருக்கு போல….இவ கிட்ட எத்தனை தடவை சொன்னேன் இந்த காதல் கன்றாவியெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் கேட்டாளா….பாரு இப்ப எப்படி உட்கார்ந்து இருக்கா….எனக்கு பயமா இருக்கு…..”என்று பாரதி பரிதவிக்க,

“ச்சு…நீ சொன்னா கேட்குறதுக்கு அவ என்ன சின்ன பிள்ளையா….அவளா பட்டு தெரிஞ்சிக்கிட்டாதான் உண்டு….விடு….”என்று பாரதியிடம் கூறிவிட்டு அமிர்தாவிடம் திரும்பி,

“என்ன அமிர்தா எப்படி இருக்க…படிப்பெல்லாம் எப்படி போகுது….”என்று கேட்க அவளிடம் எந்த அசைவும் இல்லை அதே வெறித்த பார்வை தான்.

“இந்த பரிட்சையில பெயில் ஆகிட்ட அடுத்த பரிட்சையில பாஸ் ஆகனுமில்ல….நல்லா படிக்கிறியா….”என்று வரிசையாக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்க எதற்கும் அவள் அசையவில்லை.

“என்ன கீதா இவ இப்படி இருக்கா….”என்ற பாரதி,

“அடியே அமிர்தா….இந்தா புள்ள….என்னை பாரேன்….”என்று அவளின் கவனத்தை திருப்ப பார்க்க,

“அட நீ சும்மா இரு….நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன் இல்ல…..நீ அமைதியா உட்காரு….”என்று கீதா பாரதியை அதட்ட,

“நீ சும்மா இரு….நீ கேட்குற கேள்விக்கு ஏதாவது பேசுறாளா பாரு….எங்கையோ வெறிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கா….”என்று பாரதி அதற்கும் ஆதங்கப்பட,

“அட இவ வேற ஒருத்தி இப்ப பாரு அவளை இங்க கொண்டுவரேன்…..” என்ற கீதா,

“என்ன அவன் உன்னை ஏமாத்திட்டானா…..அவன் கிடக்குறான் என்று இரண்டு தகாத வார்த்தைகளை விட,

“க்கா….அவரை எதுவும் சொல்லாதீங்க….அவரு ஒண்ணும் என்னை ஏமாத்துல…..நான் தான் அவரை காதிலிச்சேன்……அவருக்கு நான் காதிலிக்கிறதே தெரியாது…..அவரை எதுக்கும் திட்டாதீங்க….”என்று அமிர்தா தன் நீண்ட நேர மௌனத்தை கலைத்து பேசிவிட,

“அட பொண்ணு பேசிடுச்சே….ஏய் பாரதி பார்த்தியா உன் சிநேகிதி பேசிடுச்சு…”என்று எள்ளாக கீதா கூற,அமிர்தாவிற்கு கீதாவின் பேச்சு கோபத்தை கொடுத்தது.தான் ஏற்கனவே மனதுடைந்து இருக்க இவர்கள் தன்னை எள்ளி நகையாடுவதை அவளால் பொறுக்கமுடியவில்லை,

“ப்ச்…கீதாக்கா உங்களுக்கு என்ன வேணும்…எதுக்கு இங்க வந்து என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க….கிளம்புங்க முதல்ல…போங்க போய் உங்க வேலையை பாருங்க….”என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட,

“அமிர்தாஆஆஆஆ…..”என்று பாரதி கையை ஓங்கிவிட்டாள்.பாரதியின் கோபத்தில் அரண்ட அமிர்தா திகைத்து விழிக்க,

“என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க…உனக்கு உதவினு தேவைப்படும் போது நாங்க எல்லாம் வேண்டும்….இதே நாங்க உனக்கு நல்லது சொன்னா கோபம் வருதா…கீதா நீ கிளம்பு….இவ எக்கேடோ கெட்டு போகட்டும் நமக்கு என்ன வந்தது…..வா நாம போகலாம்….”என்று பாரதி கீதாவின் கைகளை பிடித்து இழுக்க,பாரதியின் பேச்சில் தான் என்ன பேசினோம் என்று உணர்ந்த அமிர்தாவிற்கு அழுகை மேலும் வெடித்தது.பாரதி எதையும் கண்டு கொள்ளவில்லை இவளுக்கு இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டவள் அமிர்தாவின் பக்கத்தில் எதுவும் நடவாததது போல் அமர்ந்திருந்த கீதாவை பார்த்து,

“கீதா நீ எழும்பு போ…..போய் உன் வேலையை பாரு…..”என்றுவிட்டு வெளியில் செல்ல எத்தனிக்க,அவளின் கால்களை கட்டிக் கொண்ட அமிர்தா,

“அய்யோ…..அக்கா….நா…நான்….என்னை…..”என்று கீதாவின் முன் கைகளை கூப்பிவிட,கீதாவோ எதுவும் பேசவும் இல்லை அந்த இடத்தை விட்டு எழவுமில்லை.ஆனால் பாரதிக்கு தான் பொறுக்கவில்லை தாங்கள் இவளின் நலனிற்காக யோசித்தால் இவள் இப்படி பேசிவிட்டாள் என்று மனது ஆரவில்லை.இது தான் நல்லதிற்கு என்றும் காலமில்லை என்று கூறுவது போல என்று நினைத்துக் கொண்டவள்,

“எம்மா போதும்மா…..நீ அழு….உன்னை விட்டு போனவனை யோசிக்கிட்டே அழு….நல்லா அழு….எங்களுக்கு என்ன வந்தது….இனி உன்னை என்னு கேட்டா பாரு….நீ இன்னும் ஏன் கீதா உட்கார்ந்திருக்க வா போகலாம்…..”என்று பாரதி கோபத்தில் எரிமலையாக வெடிக்க அமிர்தாவோ,

“க்கா….ப்ளீஸ்க்கா….என்னை மன்னிச்சிடுக்கா….நான் தப்பு தான் என்னை மன்னிச்சிடு…..நீயும் என்னை விட்டுட்டு போயிடாத…..”என்று பாரதியின் காலை கட்டிக் கொண்டு அழ,பாரதிக்கோ அமிர்தாவின் கண்ணீர் மனதை கரைத்தாலும் அவள் பேசியது மனதை மிகவும் பாதித்திருக்க மிகவும் கடினப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்…..இப்ப உனக்கு புரிஞ்சிதா…..”என்ற கீதா அமிர்தாவை இழுத்து அமர வைத்து,

“பாரதி உட்காரு….”

“இல்ல கீதா….எனக்கு கஷ்டமா இருக்கு….நான் வெளில இருக்கேன்….”என்றுவிட்டு பாரதி வெளியில் செல்ல எத்தனிக்க,

“பாரதி உன்னை உட்காருனு சொன்னேன்….”

“இல்ல…”

“நாளைக்கே இவ ஏதாவது தப்பான முடிவெடுத்தானா உன்னால தாங்க முடியுமா….”என்றுவிட,அதன் பிறகு பாரதி எதுவும் பேசவில்லை அமர்ந்துவிட்டாள்.

“என்ன நடந்துச்சு முதல்ல அதை சொல்லு அமிர்தா….நாங்க உனக்கு நல்லது தான் செய்வோம்னு நம்புனா சொல்லு இல்லைனா நீயே பார்த்துக்க நாங்க உன்னை தொந்தரவு செய்யமாட்டோம்……என்ன சொல்லுறியா இல்ல நாங்க போயிடவா….”என்று கீதா கேட்க அமிர்தா முன் போல் எந்த தயக்கமும் காட்டாமல் சிவாவிற்கும் தனக்குமான அனைத்தயையும் கூறிவிட,அனைத்தையும் கேட்ட கீதா அமிர்தாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைத்தாள்.

“கீதா….விடு….”என்று பாரதி அவளை தடுக்க,பாரதியை இழுத்து தள்ளிவிட்டவள் மீண்டும் விட்டாள் ஒரு அரை ஏற்கனவே பூஞ்சையான அமிர்தா கீதாவின் அடிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தாள்.

“அச்சோ கீதா என்ன பண்ணிருக்க பாரு மயங்கிட்டா…..”

“ஆமா மயங்கி தான் இருக்கா நான் தெளிய வைக்குறேன் எழுப்பு அவளை….”என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த தண்ணீர் குவளையில் உள்ள நீரை அமிர்தாவின் முகத்தில் விசிறியடித்தாள்.அவளிற்கு கோபமான கோபம் படித்து முன்னேறிவிடுவாள் என்று அவளின் மீது அதீத நம்பிக்கை கீதாவிற்கு தங்களில் ஒருவள் மேல் வருகிறாள் என்ற பெருமையும் கூட அதனாலே அமிர்தாவிற்கு பார்த்து பார்த்து தான் செய்தாள்.ஆனால் இன்று அனைத்தும் பொய்யானது அவளின் காதல் என்ற பெயரால் அதுவும் ஒருதலை காதலால்.

பாரதி அமிர்தாவை எழுப்பி அமர வைத்தாள் அவளின் கன்னத்தில் கீதாவின் கைதடம் பதிந்திருந்தது.

“என்ன கீதா இப்படி அடிச்சிட்ட……பாரு எப்படி கன்னம் வீங்கிட்டு பாரு….”என்று பாரதி கோபப்பட,

“ஆங்….இவ அம்மா இப்ப உயிரோட இருந்தா இதை தான் செஞ்சிருப்பாங்க….”என்ற கீதா அமிர்தாவின் பக்கத்தில் அமர்ந்து பாரதி தடவிக் கொண்டிருந்த எண்ணெயை தான் வாங்கி தடவினாள்.அமிர்தாவிற்கு ஒரு புறம் தன் காதல் இப்படி தோற்றுவிட்டதே என்ற மன அழுத்தம் அதோடு இப்படி தன் மீது அன்புள்ளவர்களை பேசிவிட்டடேனே என்ற வலி அனைத்தும் சேர்ந்து முழுதாக உடைய செய்தது.

“இந்தா பொண்ணு…..எதுக்கு இப்ப அழற….மனசு அழுத்தினா கோபம் வர தான் செய்யும் அது தப்பில்ல ஆனா அந்த கோபம் நியமானதா இருக்கனும்….”என்று  கீதா கூற அமிர்தா புரியாமல் விழித்தாள்.இப்போது இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் தான் செய்தது சரி என்கிறார்களா என்று யோசித்தவாரே விழிக்க.

“என்ன புரியலையா….”

“ம்ஹம்….”என்று அமிர்தா உதட்டை பிதுக்க,

“நீ சொல்லுறத பார்த்தா அந்த பையன் மேல தப்பில்ல….அவன் சரியா தான் இருந்திருக்கான்….நீ தான் உன் மனசை அலைபாயவிட்டுருக்க….அப்ப தப்பு உன் மேல தான்….இப்ப அவன் கல்யாணம் கட்டிக் கிட்டான் என்னை ஏமாத்திட்டான்னு அழறது எந்தவிதத்துல நியாம்….சொல்லு….”என்று கீதா கேட்க அமிர்தாவால் பதில் கூற முடியவில்லை.

“நீ படிச்சு பெரியாளாகனும் தான ஆசைப்பட்ட அப்ப நீ அதுல தான் கண்ணும் கருத்துமா இருக்கனும்….அதை விட்டுட்டு உன் மனசை அலைபாயவிட்டுட்டு இப்ப அழுதா எல்லாம் சரியாகாது….தப்பு செய்யறது இயல்பு தான் ஆனா அது தப்புனு உணர்ந்ததுக்கு அப்புறமும் நாம அதை தொடர்ந்தா நாம தான் முட்டாள் ஆவோம்…..அதனால நீ படிச்சு முன்னேற போறியா இல்லை இப்படி முட்டாளா உட்கார்ந்திருக்க போறியானு நீயே முடிவு பண்ணிக்க….”என்று அமிர்தாவின் மண்டையில் உரைக்கும்படி கூறிய கீதா,

“வா பாரதி போகலாம்…..இனி அவளே யோசிப்பா….அவ முட்டாளா இல்லை புத்திசாலியானு….”என்றுவிட்டு பாரதியையும் அழைத்து சென்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!