Skip to content
Post Views: 5,070
அத்தியாயம் 23
சங்கரும் அவனுக்கு அருகில் சென்று குனிந்து முதலில் அவனது சுவாசத்தை ஆராய்ந்தான்.
ம்ப்ச், எதுக்கு அழற சும்மாயிரு….., என அதட்டினான்.
Advertisement
வாயை கைகளால் பொத்தி அழுகையை அடக்க முயன்றாள்.
தரணி, மண்டையில அடிச்சதுல மயங்கியிருப்பார்னு நினைக்கிறேன். ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிடலாம். மண்டை வீங்கி லைட்டா பிளட் வந்திருக்கு. லேட் பண்ணாம ஹாஸ்பிட்டல் போயிடலாம்.
சங்கருக்கும் அவன் சொல்வதே சரி எனப் பட்டது. மேனேஜரை அடித்து துவம்சம் செய்யும் ஆத்திரத்தில் உள்ளே நுழைந்தவன், அவன் பேச்சு மூச்சில்லாமல் மயங்கியிருப்பதை பார்த்ததும், கோவத்தை அடக்கிக் கொண்டு ஆக வேண்டியதைப் பார்த்தான்.
Advertisement
காரில் மேனேஜரை தூக்கிக் போட்டுக் கொண்டு, பக்கத்தில் என்ன ஹாஸ்பிட்டல் இருக்கிறது என விசாரித்து, அங்கே கொண்டு போய் சேர்த்தனர்.
Advertisement
காரில் ஏற்றிவிட்டு, அவர்களுக்கு பின்னாலேயே தரணியும் தனது பைக்கில் ஹாஸ்பிட்டலுக்கு வந்து விட்டான். மருத்துவமனையில் மயங்கி தரையில் விழுந்து தலையில் அடிப்பட்டதாக கூறியிருந்தனர்.
நல்லா ஆழமா அடிபட்டிருக்கே…..? தரையில் விழுந்தார்னு சொல்றீங்க……… அவர் விழுந்த இடத்துல ஏதாவது இருந்துதா…?”
“இருக்கலாம் டாக்டர். விழுந்த ஃபோர்சுல டேபிள் கார்னர்ல அடிபட்டிருக்கலாம். நாங்க இவரை ஹாஸ்பிட்டல் கொண்டுவர டென்ஷன்ல அதையெல்லாம் கவனிக்கல”.
Advertisement
தலையில் அடிபட்ட இடத்தில்… நான்கு தையல்கள் போட்டு வைத்தியம் பார்த்தனர். மயக்கம் தெளிவதற்காக அங்கேயே காத்திருந்தனர்.
தரணி சங்கரைப் பார்த்து, “நீங்க பானுவை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க ஸார். நான் பார்த்துக்கறேன்…” என்றான்.
அவனை திரும்பி முறைத்தவன், அவனை அப்படியே விட்டுட்டு போக சொல்வியா………..? “என் வைஃப் கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண முயற்சி செஞ்சிருக்கான் ராஸ்கல். அவன் கைய காலை முறிக்க வேணாம் என்றான் ஆத்திரத்தில் பல்லை நறநறவென கடித்து உக்கிர மூர்த்தியாக நின்றுகொண்டு..”
ம்ப்ச், “என்ன பேசறீங்க….. நீங்க…? ஏற்கனவே பானு அடிச்சதுனால தான், அவனை நாம இங்க கொண்டு வந்து ட்ரீட்மென்ட் பார்த்துட்டு இருக்கோம். இன்னும் அந்தாள் கண்ணுகூட முழிக்கல. இதுல கைய… காலை… எங்க முறிக்கறது……?”
முதல்ல அவன் எழுந்து வரட்டும். நீங்க என்ன முறிக்கறது…? நானே முறிக்கறேன். பண்ணாடை, நாய்…… “கூட வேலை செய்யற பொண்ணுங்கன்னா, அவனுக்கு அவ்வளவு இளக்காரமா…..?”
“பொண்ணுங்க வெளிய சொல்ல மாட்டாங்கன்ற தைரியம் இவனுங்களுக்கு. என்னமா பிளான் பண்ணிருக்கான். கொஞ்ச நாளாவே இவன் மேல எனக்கு ஒரு சந்தேகம். இவன் இது மாதிரி வீட்டுக்கு போற சமயமா பார்த்து பானுக்கு வேலை குடுக்கும் போதெல்லாம் எனக்கும் டவுட் வரும்.”
சில சமயம் நானே பானு கூட இருந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். இன்னைக்கு நான் முன்னமே போயிட்டேன், வீட்டுக்கு வேற ஒரு வேலையா……….
“இல்லாட்டி இந்த நாயை…… அங்கேயே துவம்சம் பண்ணியிருப்பேன்.”
நீங்க கிளம்புங்க ஸார். நான் பார்த்துக்கறேன் இவனை. நீங்க பானுவைப் பாருங்க. அவங்க டையர்டா………… தெரியறாங்க…
பானு சோர்ந்துபோய் தலையைபிடித்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் அங்கிருந்த நாற்காலியில். அவளால் நிற்க்கூட முடியவில்லை. நடந்திருந்த கலவரத்தில் மனதுடன் உடலும் சேர்ந்து களைத்திருந்தது. இன்னும் அவள் நடந்து முடிந்த பீதியிலிருந்து வெளிவரவில்லை. அவளது கண்கள் இரண்டும் கலவரத்துடன் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது.
மேனேஜர் இன்னும் கண்முழிக்காமல் இருந்தது, அவளுக்கு அடிவயிற்றில் அமிலத்தை கரைத்தது. பேந்த பேந்த முழித்துகொண்டு உட்கார்ந்திருந்தாள்.
தரணிக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அதனால்தான் சங்கரிடம் பானுவை இங்கிருந்து அழைத்துசெல்லும்படி கூறிக்கொண்டிருந்தான்.
ஆனால் சங்கருக்கோ மேனேஜரை அப்படியே விட்டு செல்ல மனமில்லை. அவனை ஒருவழியாக்காமல் இங்கிருந்து நகருவதில்லை என மனதில் கங்கனம் கட்டிக்கொண்டு, அவன் கண்முழிப்பதற்காக காத்திருந்தான்.
பானுவிடம் திரும்பிய தரணி, “பானு உங்களுக்கும் சொல்றேன்… இந்த விஷயம் நம்மளோட போகட்டும். வெளிய யாருக்கும் சொல்லாதீங்க. முக்கியமா………… ஆஃபிஸ்ல யாருக்கும் தெரிய வேணாம்”.
சங்கர், “ஏன்…? ஏன்…? தெரிய வேணாம். அவன் மேல கேஸ் ஃபைல் பண்ணி உள்ள தூக்கி வைக்காம விடமாட்டேன்… என எகிறினான்” தரணியிடம்.
ம்ப்ச், யோசிச்சு பேசுங்க. பானுக்கு இன்னும் புரபேஷன் பீரியடே முடியல. இதுல இன்னும் ஆஃபிஸ்க்கு தெரிஞ்சா எந்த பக்கம் வேணா பேசறதுக்கு சான்ஸ் இருக்கு. ஹையர் ஆஃபிஸர்ஸ் கிட்ட கம்ளைன்ட் பண்ணாலும்….. பானுவோட பேரும் தான இதுல அடிபடும்.
அப்ப அவங்களுக்கும் தான அசிங்கம், இதெல்லாம் வேணாம்னுதான் யோசிச்சு சொல்றேன்.
தரணி பேச பேச பானுக்கு பயத்தில் இன்னும் அழுகை அதிகமானது.
“ஹேய் நீ என்ன தப்பு பண்ண…….. அந்த பரதேசிய தைரியமா ஹேண்டில் பண்ணியிருக்க”. உண்மையிலேயே உன்னை பாராட்டனும்… என அவளது கையைப் பிடித்து, ஆறுதலாக அவளது தோளில் தட்டிக் கொடுத்தான் சங்கர்.
அதற்குள் நர்ஸ் வந்து மேனேஜர் விழித்து விட்டதாக தகவல் சொல்லிவிட்டு டாக்டரை அழைத்து வருவதற்காக சென்றார்.
சங்கர் முதல் ஆளாக உள்ளே சென்றான் கோவமாக.
பானுக்கும் பயம் வந்தது, சங்கரின் கோவத்தைப் பார்த்து. மேனேஜரை அடிக்கப் போய் இன்னும் ஏதாவது சண்டை அதிகமாகுமோ… என பயந்து, அவன் பின்னாடியே சென்றாள்.
தரணியும் வேகமாக சென்று சங்கருக்கு பக்கத்தில் நின்று கொண்டான்.
மேனேஜர் முழித்ததும் முதலில் தான் எங்கு இருக்கிறோம் என தெரியாமல், திரு திரு என முழித்துகொண்டு சுற்றிப் பார்த்தான். அங்கிருந்த நர்ஸ் அவன் கண் விழித்ததை பார்த்ததும் வெளியே வந்து சொல்லியிருந்தாள்.
சங்கரைப் பார்த்து யார் என முழித்தவன், பின்னாடியே பானுவும், தரணியும் வருவதைப் பார்த்து பேசாமல் இருந்தான்.
தரணி பானுவிடம் நட்பாக பழகுவதை தவறாக புரிந்து கொண்டு, அவர்களுக்கிடையே ஏதோ தவறான தொடர்பு இருப்பதாக தப்பர்த்தம் செய்திருந்தான். அதையே அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி, பானுவிடம் தவறான எண்ணத்தில் நெருங்கியிருந்தான்.
இதுமாதிரி எல்லாம் நடக்கும் என எண்ணி பார்த்திருக்கவில்லை. தலையில் வலியை உணர்ந்தவன், தலையை தொட்டு தடவிப் பார்த்தான்.
சங்கர் வந்த வேகத்தில் அவனது கழுத்தைப் பிடித்து நெருக்கினான் இரு கைகளாலும்.
தரணி, “ஸார் விடுங்க………… செத்து கித்து வைக்க போறான்……..” என அவனது கைகளை பிடித்து இழுத்தான்.
சங்கர், “போகட்டும். இவன்லாம் இருந்து என்ன பண்ணப் போறான்…? கூட வேலை செய்யற பொண்ணுங்ககிட்ட எப்படி… பிஹேவ் பண்ணனும்னு கூட தெரியாதவன் இருந்து, என்ன பண்ணப் போறான்..?”
பானு சொல்லுங்க… ஸார் கிட்ட, ப்ளீஸ் விடுங்க……ஸார்… என அவனது கையை விலக்கி எடுப்பதற்குள் தரணிக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
அதற்குள் மேனேஜருக்கு நரகத்தை காண்பித்திருந்தான் சங்கர். சங்கரின் பிடி தளர்ந்ததும் தொண்டையை தடவி கண்களில் நீர் வழிய இருமினான்.
உள்ளே நுழைந்த டாக்டர், அவன் இருமுவதைப் பார்த்து, ஆர் யூ ஓகே…? என அவனை பரிசோதனை செய்தார்.
பயத்தில் முகம் வெளிறி, எதிரிலிருந்தவர்களை பார்த்துக் கொண்டே ம்ம்… என தலையசைத்தான்.
தலையில அடிபட்டதுல பயந்துபோயிருக்கார் போல…, நத்திங்…. நீங்க பயப்படற அளவுக்கு எதுவும் இல்ல என மேனேஜரை பரிசோதித்த டாக்டர், குட், இப்ப நார்மல் ஆகிட்டார். நீங்க இவரை அழைச்சிட்டு போகலாம் என்றார்.
அதைக்கேட்டதும் மேனேஜருக்கு பீதியானது. இவங்களோடயா…….. என நினைத்துப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் கதிகலங்கியது. சங்கரின் ஆக்ரோஷத்தில் சில மணித்துளிகளுக்கு முன்னால் சாவின் விளிம்புவரை சென்று வந்திருந்தான். அவர்களுடன் தனித்து செல்ல பயந்து, டாக்டரிடம் மறுத்து பேசுவதற்கு முன்பு தரணி முந்திக் கொண்டு “ஓகே டாக்டர்…” என அவரிடம் பேசியவாறே வெளியில் அழைத்துச் சென்றிருந்தான்.
தரணி டாக்டருடன் வெளியே சென்றதும் பானுவைத் திரும்பி பார்த்தவன், சங்கரிடம் “நான் எப்படி இங்க வந்தேன்? என்னை யார் கொண்டு வந்து இங்க சேர்த்தாங்க…….?” என்றான்.
அவனை முறைத்த சங்கர், ஓங்கி ஒரு அறை விட்டான் ரௌத்திரமாக. “என்ன தைரியம்டா உனக்கு…..? என்கிட்டயே கேள்வி கேக்கறயா……? பண்ணதெல்லாம் பொறுக்கிதனம். ராஸ்கல் தொலைச்சு கட்டிடுவேன்”.
“எப்படி வந்தியா……..? ம்ம்…… பறந்து வந்து படுத்துகிட்ட…” என்றான் நக்கலாக. “உன்னைலாம் கொல்லனும்டா……”
“என்ன தைரியம் இருந்தா…, கூட வேலை பார்க்கறவங்கன்ற மரியாதை கூட இல்லாம, தப்பா அவங்க மேல கை வைக்க நினைச்சிருப்பே……..”
“உன் கையையும் காலையும் முறிச்சு விடனும்டா…… எந்த தைரியத்துல நீ அப்படி நடக்க துணிஞ்ச…… நாளைக்கு விஷயம் பேங்கல தெரிஞ்சா மூஞ்ச எங்க கொண்டு போய் வச்சுப்பே…….”
“பானு வெளியே சொல்லமாட்டான்ற தைரியமா….?”
உண்மையிலே மேனேஜரின் எண்ணமும் அதுதான். இதுவரை அவனின் லீலைக்கு அகப்பட்டிருந்த பெண்கள் யாரும் அவனை எதிர்த்ததில்லை. ஒன்னு இரண்டு பெண்கள் அவன் ஆசைக்கு தானாகவே உட்பட்டிருந்தாலும், எஞ்சியவர்கள் வெளியில் சொல்லும் துணிவு இல்லாமல், பயந்தே ஒதுங்கியிருந்தனர்.
“போலீஸ்ல நான் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தா என்ன பண்ணுவ…..? ஹையர் ஆஃபிஸர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணா என்ன பண்ணுவ….? இது எல்லாம் நினைச்சு நீ கொஞ்ச கூட பயப்படல இல்ல…… என்ன நெஞ்சழுத்தம் டா…. உனக்கு என அவன் கன்னத்தில் ஓங்கி இன்னொன்று வைத்தான்.
சங்கர் அடித்த அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்கியது அவன் கன்னத்தில்.
சங்கரது தாக்குதலில் பொறி கலங்கி கண்களிலிருந்து தானாகவே கண்ணீர் சுரந்தது வலியில். கன்னம் இரண்டும் மிளகாயை அரைத்து தடவியதுபோல திகுதிகுவென எரிந்தது சங்கரின் வேகத்தில்.
யாரிடமோ போனில் பேசிக்கொண்டே தரணி கதவைத் தாழிட்டு உள்ளே வந்தான். அட்ரஸ் மெசேஜ் பண்ணியிருக்கேன். ம்ம்… சீக்கிரம். ரொம்ப நேரம் வெயிட் பண்ணமுடியாது….. என போனை வைத்துவிட்டான்.
யாரிடம் பேசுகிறான்… என தெரியாமல் எல்லோரும் திரும்பி தரணியைப் பார்த்தனர்.
மேனேஜர் ஸாரை…. வீட்டுல கொண்டு போய் பத்திரமா ட்ராப் பண்ண வேணாம். அதுக்குதான் என் பிரண்ட்சை கூப்பிட்டுருக்கேன் என்றான் தரணி எள்ளலாக…
உன்னை இப்படியேவா அனுப்ப முடியும். சகல மரியாதையோட அனுப்ப வேணாம்… என்றான் தரணி எள்ளலாக…
“என்ன பார்க்குற…?
இதுல என்னையும் பானுவையும் பத்தி வேற தப்பா பேசியிருக்க நீ என்று தரணியும் ஒன்று வைத்தான் மேனேஜரின் கன்னத்தில்”.
“உன் கிரிமினல் மூளை என்ன யோசிக்கும்னு தெரியும்டா…….. சிசிடிவி கேமராவ ஆஃப் பண்ணிட்டா…………… எவிடென்ஸ் கிடையாது, மாட்ட மாட்டேன்னு நினைப்பா…”
மேனேஜருக்கு தரணியின் வார்த்தையில் உண்டான பயத்தில் கண்கள் தெரித்து வெளியே வந்துவிடும் போலானது.
இவன் உண்மையாக சொல்றானா… இல்ல இவனை பயமுறுத்த சொல்றானா… எனப் புரியாமல் சங்கர் அவனையே பார்த்திருந்தான்.
“என்ன பார்க்கறிங்க…….? உண்மையாதான் சொல்றேன். இவன் கைய காலை எடுக்காம நான் விட மாட்டேன் என்றான் ஆங்காரமாக தரணி”.
அவ்வளவுதான் அந்த மேனேஜர் சாஸ்டாங்கமாக சங்கரின் காலில் விழுந்திருந்தான்.
“நான் ஏதோ புத்தி பேதலிச்சு பண்ணிட்டேன் மன்னிசுடுங்க……. ப்ளீஸ்…….. இனி இது மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். நான் குடும்பஸ்தன். பிள்ளைக் குட்டிகாரன் ப்ளீஸ்……………. என கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்”.
“பண்றது பொறுக்கி வேலை. உனக்கு மன்னிப்பு வேற வேணுமா……?” என்றான் சங்கர் அவனை காலால் எந்தி.
ஓ…. ஸார் குடும்பஸ்தனா………………..,? பிள்ளை வேற இருக்கா……………? ரொம்ப வசதியா போச்சு………. என்றான் தரணி நக்கலாக.
தரணியின் பேச்சில் இன்னும் பயந்தவன் சங்கரது கால்களைப் பிடித்து அழவே ஆரம்பித்து விட்டான் பயத்தில்.
எங்கே வீட்டுக்கு தெரிந்தால் தனக்கு அவமானமாகிவிடும் என எண்ணி அழுது கதறினான் சங்கரிடம்.
பானுவிடமும் தன்னுடைய இழி செயலுக்கு மன்னித்து விடும்படி மன்னிப்பு கேட்டான்.
தரணி, நீங்க பானுவை கூட்டிட்டு கிளம்புங்க…
சங்கருக்கு மேனேஜரை அப்படியே விட்டுசெல்ல மனமில்லை. அது ஹாஸ்பிட்டலாக போனதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாத கையறுநிலையில் நின்றவனை சமாதானப்படுத்தி, பானுவுடன் அவனை வீட்டுக்கு அனுப்பியிருந்தான் தரணி.
சங்கர் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பியதும், எழுந்து ஓடப்பார்த்த மேனேஜரை அங்கேயே பிடித்து அமரவைத்த தரணி, என்ன அவசரம்..? நான்தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன் இல்ல… கொஞ்சம் வெயிட் பண்ணு….. என வில்லங்கமாக சிரித்தான்.
அந்நிகழ்வுக்கு பின் பானு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைந்திருந்தாள். அவளுடன் அவனும் அலுவலகத்துக்கு லீவ் போட்டு வீட்டிலேயே இருந்தான், அவளை தேற்றுவதற்காக.
அறையிலேயே முடங்கி அழுது கரைந்தவளை பார்க்க கஷ்டமாக இருந்தாலும், மிரட்டி.. உருட்டி.. குளிக்க வைத்து, சாப்பிட வைப்பதற்கே அவனுக்கு பெரும்பாடானது.
பேசாமல் சரசுவை வர வைப்போமா… என எண்ணினான். அவருக்கு தெரிந்தால் நிச்சயம் மதுசூதனனுக்கு தெரிந்துவிடும்.
அவன் கோவத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவான் என சொல்லாமல் தவிர்த்தான். இன்னும் பிரச்சினை கூடுதலாகுமே தவிர குறையாது. மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தால், பானுக்கு சங்கடம் அதிகமாகும் என நினைத்து சொல்லவில்லை.
இவளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லவும் அவனுக்கு பயமாக இருந்தது. ஆதலால் அவனும் லீவ் போட்டு வீட்டில் இருந்தான்.
சில சமயம் பயத்தில் இராத்திரியில் அவளையும் அறியாமல் பிதற்றுவதும் அழுவதுமாக இருந்தாள் தூக்கத்திலேயே. டாக்டரிடம் அழைத்து செல்லலாம் என அவளை அழைத்ததற்கும் வரவில்லை.
_______
பூரணியும் மதுசூதனனும் செல்வியைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்திருந்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தனர்.
பூர்ணி செல்விக்கு உடல்நிலை சற்று தேறும் வரை அவருடன் இருந்து, கவனித்துக் கொள்ள விரும்பினாள். மதுவிடம் மெல்ல தனது எண்ணத்தை முறையிட்டாள்.
அவனுக்கு அவளை அங்கே விடுவதற்கு விருப்பமில்லை. செந்திலை முன்னிட்டு அவளை அங்கு தங்குவதற்கு மறுப்பு தெரிவித்தான்.
மது, “அதான் உங்க அக்கா இருக்காங்க இல்ல, அவங்க பார்த்துப்பாங்க, நீ கிளம்பு. வேலைக்கு போகனும் இல்ல, வேணும்னா…… அடுத்த வாரம் கூட வந்து பார்க்கலாம்”.
ம்ப்ச், “என்ன பேசறீங்க………..? அவங்க இல்லன்னா இன்னைக்கு நான் இல்ல. இன்னைக்கு அவங்களுக்கு உடம்பு முடியாம இருக்கும் போது நான் உதவி செய்ய வேணாமா……..”
“நான் உன்னை அவங்களுக்கு எதுவும் செய்ய வேணாம்னு சொல்லல, இங்க தங்க வேணாம்னு தான் சொல்றேன்”.
“கூட இத்தனை பேர் இருக்காங்க இல்ல. அவங்களை மீறி அப்படி என்ன நடந்திடும், ப்ளீஸ்……. புரிஞ்சுக்கோங்க…………” நான்….. இங்க இருந்து பெரிம்மாவை பாத்துக்கறேன்.
செல்வியின் உடல்நிலை தேறவே நாள் எடுக்கும். இந்த நிலைமையில் ஒரு மகளாக கண்டிப்பாக பூர்ணியின் உதவி அவருக்கு தேவைப்படும். எத்தனை பிரச்சினை இருந்தாலும்… அவரை அப்படியே விட்டு செல்வதற்கும் மனமில்லை. இதுவே அவளுடைய பெற்ற தாயாக இருந்தால் அப்படியே விட்டு விட்டு செல்ல முடியுமா…………..?
பூர்ணி விரும்புவது போல் அவருக்கு தேவைப்படும் போது உதவாமல் வேறு எதற்கு…….? மனைவி கெஞ்சுவதை பொறுக்காமல், “சரி தங்கிக்கோ,,,,,, பத்திரமாயிரு……”
“எதுன்னாலும்… எனக்கு கூப்பிடு”. சங்கர்கிட்ட கூட சொல்லிட்டு போறேன். ஏதாவது தேவைப்பட்டா அவரையாவது கூப்பிடு, என பல முறை அவளை எச்சரித்து, பாதுகாப்பாக இருக்கும்படி கூறி சென்றிருந்தான்.
மாதவியும் உடன் தங்கியிருந்ததால் அவளுக்கு பயம் எதுவுமில்லாமல் இருந்தாள்.
பூர்ணி ஹாஸ்பிட்டலில் தங்கிக் கொண்டாள் செல்வியுடன். மாதவி வீட்டுக்கு சென்று இவர்களுக்கு சமைத்து எடுத்து வந்து மாலை வரை அன்னையுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவாள்.
வயோதிகத்தின் காரணமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. ஒரு வாரத்திற்கு மேல் ஹாஸ்பிட்டலில் இருந்தவர், மெல்ல உடல் தேறி கொஞ்சம் எழுந்து நடமாடும் அளவுக்கு தெம்பு வந்திருந்தது.
டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். செல்வி அதற்குமேல் அங்கே இருப்பதற்கு பூரணியை விடவில்லை. அவள் வேலைக்கும் செல்வதால் அவளை விடாப்பிடியாக கிளம்ப சொல்லிவிட்டார்.
மாதவியும் அதையேதான் பூரணியிடம் சொல்லியிருந்தாள். நீ கிளம்புடா….. வேலைக்கு போகனும் இல்ல. நான்தான் இங்க இருக்கேன் இல்ல. நான் பார்த்துக்கறேன்.
பூரணிக்கு அவர்களை அப்படியே விட்டுசெல்ல மனமில்லை.
பூர்ணி, அக்கா…….. “நான் ஒன்னு சொல்லவா……….?”
மாதவி…………….
இல்ல……, “பெரியம்மாவ நம்ம ஊருக்கு, முட்லூருக்கு அழைச்சிட்டு போலாமா……..? இங்க அண்ணனும், அண்ணியும் பகல்ல வேலைக்கு போயிடறாங்க……. நீங்களும் வந்திட்டீங்கனா… பெரியம்மா தனியாதான இருக்கனும்”.
அங்க வந்தா நீங்களும் பார்த்துப்பீங்க. நானும் அப்பப்ப வந்து பார்த்துக்கறேன்.
மாதவி, “நான் ஏற்கனவே அம்மாவ அங்க கூப்பிட்டேன் டா……. அவங்க அங்க வர மாட்டேன்றாங்க……….. பாண்டியனும் அனுப்ப மாட்டேன்னு சொல்றான்”.
ஓஹ்…… “நான் வேணா அண்ணன்கிட்ட பேசி பார்க்கவா…………..” கொஞ்ச நாளாவது பெரியம்மாக்கு உடம்பு சரியாகற வரைக்குமாவது அங்க வந்து இருக்கட்டுமே. மாமாவ விட்டு நீங்களும் எவ்வளவு நாளைக்கு இங்க இருப்பீங்க…..
அவன் ஏதாவது சொல்ல போறான்டா……… வேணாம் விடு.
“இல்ல, நான் அண்ணன்கிட்ட கேட்டு பார்க்கறேன். என்ன சொன்னாலும் பரவாயில்லை……. பெரியம்மாக்காக….. தான”
“முதல்ல அம்மா இதுக்கு ஒத்துக்கனுமே……….”
“அதெல்லாம் பெரியம்மா ஒத்துப்பாங்க, முதல்ல அண்ணன்கிட்ட கேட்கறேன்…………. அப்புறம் பெரியம்மாகிட்ட நானே பேசறேன்”.
பாண்டியனிடம் பூர்ணி செல்வியை மாதவியுடன் அழைத்துச் செல்வதற்கு கேட்டதும் முடியாது என மறுத்துவிட்டான்.
“ஏன்… இத்தனை நாள் அம்மாவ நாங்கதான பார்த்துகிட்டோம். நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க. நாங்க பார்த்துப்போம் என்று விட்டான்”.
தொடரும்.
error: Content is protected !!