Skip to content
Post Views: 8,153
‘இன்னைக்கு என்ன மூட்ல இருக்கார் தெரியலையே’ என்ற எண்ணத்தோடு அறைக்குள் நுழைந்தவன் பார்த்தது சூழல் நாற்காலியில் விழிகள் மூடி அமர்ந்திருந்தவனைத்தான் ‘என்ன பிரச்சனைன்னு தெரியலையே நாலு நாளா வீட்டுக்குக் கூடப் போகாம இங்கேயே இருக்காரு’ என்று பார்த்துநின்றான் சக்தி.
சேனாவின் கீழே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று வருடத்தில் அவனை ஒருமுறைகூட இப்படி பார்த்ததில்லை, உணர்வுகளை அவன் வெளிக்காட்டி பார்த்ததில்லை மிகவும் பொறுமையாகக் கையாளுவான் எந்த இடத்திலும் கோபமோ வார்த்தைகளோ சட்டென்று வெளிவராது, என்னவென்று கேட்கவும் தயக்கமாக இருந்தது சக்திக்கு.
Advertisement
“சார்” என்றவன் அழைப்பில் விழிகள் திறந்தவன் “வாங்க சக்தி” என்று நிமிர்ந்தமர்ந்தான்.
“என்னாச்சு சக்தி ஏதாவது சிங்குச்சா?” என்க.
Advertisement
Advertisement
“இல்ல சார், முன்னாடி நமக்குக் கிடைச்ச அதே தகவல்தான் புதுசா எதையும் எடுக்க முடியல ரொம்ப கட்டுப்பாடு இருக்கு, உள்ள போற எல்லாரும் எந்த டாக்டரைப் பார்க்க வந்திருக்காங்க எத்தனை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் சொன்னாதான் உள்ளேயே விடுறாங்க, ஒரு ஆக்சிடென்ட் கேஸ் வந்துச்சு அவங்கக்கூட அப்டியே எமெர்ஜனசி உள்ள நுழைஞ்சுட்டேன் ஆனா அங்கேயிருந்து வேற பிளோர் கூடப் போக விடமாட்றாங்க” என்றான் சக்தி.
“ஹ்ம்ம்… கொஞ்சம் பெரிய ஆட்கள் வர ஹாஸ்ப்பிட்டல் சோ கெடுபிடி இருக்கத்தான் செய்யும் ஆனா நாம அப்படி விட முடியாது உள்ள போயாகணும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சாகணும்” என்றவன் எழுந்து அறைக்குள்ளேயே நடந்துகொண்டிருந்தான் பிறகு அவனுடைய மேசையில் கிடந்த கோப்புகளில் அவன் பார்வை பதிந்தது.
Advertisement
‘நிர்மல்’ பெற்றோருக்கு ஒரே மகன் ஏகப்பட்ட சொத்துக்கள் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்துப் பெற்றோர் அவனுக்காகக் கட்டிவைத்திருக்கும் மருத்துவமனையில் ஹார்ட் சர்ஜனாக இருக்கிறான், பணத்தில் மூழ்கி முத்தெடுக்கும் பெரியவீட்டு பிள்ளைகளிடம் சாதாரணமாகக் காணப்படும் பார்ட்டி ட்ரிங்க்ஸ் பணத்திமிர் அகம்பாவம் அனைத்தும் அவனிடமும் இருந்தது.
சேனாவை ஆச்சரியப்படுத்திய விஷயம் அவனுக்குப் பெண்கள் சகவாசம் இல்லை என்பது அதற்காக அவனை உத்தமன் என்று எண்ண முடியாது, அந்த விஷயத்தை மட்டும் வட்டமிட்டுக் குறித்துவைத்தான்.
“சார் ஒருவேளை உடல் உறுப்புகளைத் திருடி விக்குறாங்களோ அதுவா இருக்குமோ”.
“நோ சக்தி இது அதில்ல இங்க பிரச்சனையே வேற, இது ஏதோ பெருசுச் சக்தி அது எதுவா இருந்தாலும் தோண்டி எடுக்காம விடமாட்டேன், பிரச்சனை வேற ஏதாவதுனா நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இருந்தே லேடி ஸ்டாப் அனுப்பலாம் ஆனா இங்க அதும் முடியாது”.
“இவன்லாம் சாதாரணமா நூறு பேரைக் கொன்னுட்டு அதை அப்படியே மூடி மறைக்கிற அளவுக்குப் பணம் படைச்சவனுங்க அதோட அதிகாரத்துல இருக்கவங்க சப்போர்ட்டும் இருக்கும், இவனுங்கள விசாரிக்கணும்னாவே நாம பத்து பேர் கிட்ட பெர்மிஷன் கேட்டு நிக்கணும்” என்றவன் பின் கழுத்தை அழுத்தமாகத் தேய்த்துவிட்டுக்கொண்டான்.
சக்திக்கு மண்டை காய்ந்தது என்னமோ நடக்கிறது அது என்ன என்று தெரியவில்லை, எதைத் தேடுகிறோம் என்றும் புரியவில்லை.
“சார் கொஞ்சம் வெளில போலாமா நீங்க நாலுநாளா ஆபிஸ விட்டு வெளில கூடப் போகல கொஞ்சம் டி சாப்பிட்டு வரலாமா சார்” என்க, அவனுக்கும் வெளியில் சென்றால் தேவலாம் என்று தோன்றியது.
“ஹ்ம்ம் போலாம் வண்டியெடு” என்றவன் கோப்புகளைப் பத்திரப்படுத்திவிட்டு வெளியேறினான், குன்னூரின் குளுமையை அனுபவித்துக்கொண்டு ஒரு சாலையோர தேநீர் கடையில் அமர்ந்திருந்தனர், அமைதியாக அமர்ந்திருந்தவர்களின் அருகில் வந்து நின்றது அறுபது லக்ஷம் மதிப்புள்ள கியா பிராண்ட் கார்.
அதிலிருந்து இறங்கியவனை பார்த்த இருவரும் சாதாரணமாக அமர்ந்திருந்தனர் “ஹலோ மிஸ்டர் தேவசேனாபதி ஐ ஆம் நிர்மல்” என்று சேனாவின் நேரே கையை நீட்டினான் பூஜாவின் வருங்கால கணவன்.
அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கைகுலுக்கியவன் “ஹலோ” என்றான், சேனா அமர்ந்திருந்த மரபெஞ்சின் ஒரு மூலையில் அமர்ந்தவன் “பரவாயில்ல போலீஸ் ஆகலனாலும் அப்படியே போலீஸ் மாதிரியே இருக்கீங்க” என்றான்.
நன்றாக நிமிர்ந்தமர்ந்த சேனாவின் விழிகள் அவனைத் துளைத்தது, போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்தவன் என்பதால் நடை உடை அனைத்தும் அந்த மிடுக்கோடு இருக்கும் மீசை எப்பொழுதும் முறுக்கு மீசையே முடியை மட்டும் கொஞ்சம் அதிகம் வளர்த்திருப்பான் இபோழுது யூனிபோர்ம் இல்லையே.
“இவர்தான் உங்க பிரெண்டா? போலீஸ்ல இருக்கிறவர்…” என்றவன் கேள்வியில் சேனா மற்றும் சக்தியின் விழிகள் ஒருநொடி கோர்த்துக்கொண்டது.
“நீங்கதான் இவர்கிட்ட சொன்னீங்களா என் மேலே எதோ சந்தேகம் இருக்குனு, எங்க ஹாஸ்ப்பிட்டல் பத்தி போலிசுக்கு எதோ தகவல் வந்ததா… நீங்கத் தாராளமா அங்கேயே வந்து விசாரிக்கலாம் அங்க எந்தத் தப்பும் நடக்கலைன்னு உங்களுக்கே புரிஞ்சிடும் எப்போ வரீங்கன்னு சொல்லுங்க நான் எல்லா ஏற்பாடும் செஞ்சு வெக்குறேன்” என்றவனை பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தான் சக்தி.
“எப்படி டாகடர் சார் பூனையை மடியில கட்டிட்டு சகுனம் பாக்குற மாதிரியா, உங்க பிளேஸ்ல நடுக்குற ரெய்டுக்கு நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணுவீங்க நாங்க வந்து பஜ்ஜி போண்டா சாப்பிட்டு போகணுமா” என்றவனை பார்த்துச் சிரித்தவன் “அது உங்க இஷ்டம் சார்” என்றுவிட்டு சேனாவின் புறம் திரும்பினான்.
“மாமா சொன்னாரு நீங்கக் கல்யாணத்துக்கு வரமாட்டீங்கன்னு அப்படிலாம் செய்யாதீங்க சின்னப் புள்ள மாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்பட்டுக்கிட்டு, கண்டிப்பா வந்துடுங்க” என்க.
அவன் அருகில் நெருங்கிய சேனா “எவன அடிச்சு உசுரோட பொதைக்கலாம்னு வெறியோட இருக்கேன் நீயா வந்து சிக்கி சின்னாபின்னமாவாத… போடா” என்றவன் விழிகளில் தெறித்த அனலில் இருவரையும் சில நொடிகள் பார்த்தவன் தன் காரை எடுத்துக்கொண்டு சென்றான்.
“என்னா திமிர் சார் இவனுக்கு எப்படி பேசுறான்” என்றான் சக்தி ஆத்திரம் அடங்காமல்.
“அவன் பேசினத்துக்கு அர்த்தம் புரிஞ்சுதா சக்தி உங்களுக்கு, உன்னால ஒன்னும் பண்ண முடியாது முடிஞ்சா வந்துபாருனு சொல்லிட்டு போறான்” என்றவனுடைய சிந்தனையில் இப்பொழுது ராஜேந்திரனே.
‘இந்த ஆளெல்லாம் பூமிக்கு பாரமா ஏன் இருக்கான்’ என்றுதான் தோன்றியது, உண்மையிலே மகளின் மேல் அவளின் நலனில் அக்கறை இருந்திருந்தால் தான் கூறிய விஷயத்தைப் பற்றி விசாரித்திருப்பான் அதை விட்டு மருமகனுக்கு உண்மையாக இருக்க அவனிடமே சென்று அவன்மீது போலீசுக்கு சந்தேகம் இருக்கிறது என்று கூறியிருக்கிறான், என்ன மாதிரி மனிதன் என்று எரிச்சலாக வந்தது.
“இப்போ என்ன சார் பண்றது” என்றான் சக்தி.
“என்ன பண்ண? ஒன்னும் செய்றதுக்கில்ல என்ன தப்பு நடக்குதுன்னே நமக்குச் சரியா ஐடியா இல்ல தப்பு நடத்துக்குத்தானும் ஐடியா இல்ல அப்படியே இருந்தாலும் சரியான ஆதாரம் வேணும்” என்றவன் மூச்சை இழுத்துவிட்டான் “சொல்றதுக்கில்ல சக்தி இவங்க எல்லாருமே கூட்டு களவானியா கூட இருக்கலாம் பொண்ணோட வாழ்க்கையை வெச்சு என்ன பிசினெஸ் பிளான் பண்ணியிருக்காங்கனு அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்”.
“நம்ம முயற்சியை நாம பண்ணிட்டே இருக்கலாம் ஏதாவது இனபர்மேஷன் கிடைக்குதான்னு பாருங்க, எனக்குத் தெரிஞ்சு அவன் ரொம்ப கவனமா இருப்பான் அவன் செய்றது எதுவா இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்தத் தப்பு அங்க நடக்காது, அட்லீஸ்ட் கல்யாணம் வரைக்குமாவது… பாக்கலாம் நீங்கக் கிளம்புங்க” என்றவன் அங்கேயே அமர்ந்துகொண்டான்.
ஆயிற்று… நான்கு நாட்கள் வீட்டின் பக்கமே போகவில்லை, கோபம் அனைவர் மீதும் கோபம் ஒருவரையும் பார்க்கத் தோன்றவில்லை, வார்த்தைகள் தடிப்பதை விரும்பாதவன் இங்கேயே இருந்துகொண்டான், வீட்டிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது எடுக்கவில்லை.
இன்று காலைத் தந்தையின் அழைப்பை எடுத்தவன் “திரும்ப அங்க வரணும்னு ஒரு நெனப்பிருக்கு அதை மாத்த வெச்சுற வேண்டாம் நானே வருவேன் கூப்பிடாதீங்க” என்றுவிட்டான், இன்றுவரை வீட்டினரிடம் இப்படி பேசியதில்லை பேசவைத்துவிட்டார்கள் ஓஸ்கரும் அவனின் அப்பத்தாவும்.
ஒரு வாரத்திற்கு முன்பு அவனுடைய குட்டிமாவிடமிருந்து அழைப்பு வந்தது இரவு நேரத்தில் “வீட்டுக்கு வாங்க கிராண்ட்ப்பா என்னமோ சொல்றார் ஸ்பெய்ன் போறோம் அப்படினு எனக்கு ஒன்னும் புரியல நீங்க வாங்க” என்றவளின் பதட்டமான அழைப்பில் அடுத்த பத்து நிமிடத்தில் பங்களா வீட்டில் நின்றிருந்தான் சேனா.
முன்பானால் அவளுடைய பாதுகாப்பு என்று சொல்லலாம் இப்பொழுது அந்தப் பயம் இல்லையே தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து மொத்தமாக முடக்கிவிட்டானே, ஒஸ்கருக்கும் அந்த விவரங்கள் தெரியும் மன்னிப்பை வேண்டி வந்தவர்களை இனிமேல் உங்களோடு எந்த உறவும் இல்லை என்று அனுப்பிவிட்டார்.
பிறகு இப்பொழுது எதற்க்காக மீண்டும் அவளை நாடு கடத்துகிறார் என்ற சிந்தனையோடே அவரை நெருங்கினான், அவன் பேசுவதற்கு முன்பே அவனைக் குற்றம் சுமத்தினார் ஒஸ்கர்.
“ஐரிஸும் நீயும் லவ் பண்றீங்களா சேனா, இது நடக்காது நீ இப்படி செய்வன்னு நான் எதிர்பார்க்கல” என்றவர் வார்த்தையில் அவனுக்குச் சுருக்கென்றது ‘நம்பிக்கை துரோகி என்கிறாரா தப்பில்லை யாரையுமே நம்பாமல் தன்னை மட்டும் நம்பி பேத்தியைத் தன் பொறுப்பில் விட்டிருந்தார், இப்பொழுது அவளின் மேல் தனக்கு நேசம் பூத்திருப்பதில் தன் ஆதங்கத்தை காட்டுகிறார்’ என்று சிந்தித்தவன் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்தினான்.
ஒஸ்கரின் வார்த்தைகள் மயூரிக்கு அதிர்ச்சியை கொடுத்தது இப்படியொரு எதிர்ப்பைத் தன் கிராண்ட்ப்பாவிடம் அவள் எதிர்பார்க்கவில்லை, அப்பொழுதே விழிகள் நிறையத்தொடங்க நடுங்கும் கைகளால் இருக்கையை அழுத்திப் பிடித்தாள் சேனாவின் விழிகள் ஒருநொடி அவளில் பதிந்து மீண்டது.
“என்ன காரணம்” என்றான் அவரிடம்.
“எனக்கு இதுல விருப்பம் இல்ல ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸா இருக்கீங்க, நீ அவளை நல்லா கேர் பண்ற அப்படித்தான் நெனச்சேன் உனக்கு இப்படியொரு எண்ணம் இருக்கும்னு நான் நினைக்கல” என்றார்.
அவர் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவனைக் காயப்படுத்தியது விழிகளை அவன் இறுக மூடித்திறக்க “கிராண்ட்ப்பா நான் தான் தேவாகிட்ட லவ் சொன்னேன் அவர் இல்ல” என்றாள் மயூரி.
“ மயூ” என்றான் அதட்டலாக.
“சோ வாட் ஐரிஸ் நீ சொன்னாலும் சேனாவுக்கு தெரியுமே எதுக்காக அக்ஸ்ப்ட் பண்ணனும் வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்ல” என்றவரை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவன்.
“சரி உங்க பார்வைல அது தப்பவே இருக்கட்டும் நீங்க இன்னும் காரணம் சொல்லல, எங்களுக்குச் சரின்னு பட்டது உங்களுக்குத் தப்பா இருக்கு அதேமாதிரி நீங்க வேண்டாம்னு முடிவு எடுத்ததுக்கு பின்னாடி இருக்குற காரணம் எங்களுக்குத் தப்பா படலாம் சோ காரணம் சொல்லுங்க” என்றான்.
“காரணம்…” என்று சில நொடிகள் தடுமாறியவர் “எனக்குப் பிடிக்கல ஐரிஸ்க்கு மாப்பிளை பார்த்துட்டேன், மாப்பிளை குடும்பம் நல்ல வசதி ஸ்பெயின்ல அவங்களுக்கு வீடு தொழில் எல்லாம் இருக்கு ஐரிஸ் கல்யாணம் முடிஞ்சு நானும் அங்கேயே போய்டலாம்னு எல்லாம் முடிவு பண்ணியாச்சு, இங்க இருக்குற எல்லாத்தயும் வித்துட்டு போகப்போறேன், அங்க எனக்குன்னு கொஞ்சம் சொந்தம் இருக்கு போதும் இங்க இருந்தது இனிமே இங்க இருக்க விரும்பல” என்றவரை சந்தேகமாகப் பார்த்தான்.
இதை எதைப் பற்றியும் ஒரு வார்த்தைகூட அவனிடம் கூறவில்லை, முன்பு அப்படி அல்ல அவனிடம் அனைத்தையும் கூறுவார் கலந்தாலோசிப்பார் ஸ்பெயினிற்க்கு அவளை அனுப்பும் முடிவைக் கூட அவனிடம் கூறியிருந்தார் மீண்டும் அதைப் பற்றிப் பேசும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.
“கிராண்ட்பா பிளீஸ் டோன்ட் டூ திஸ், எனக்குத் தேவா மட்டும்தான் வேணும் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்” என்றவளுக்கு பதட்டத்தில் உடல் நடுங்க சுவரோரமாகத் தளர்ந்து அமர்ந்தாள்.
“மயூ…” என்று அவள் அருகில் சென்றவனின் மார்போடு ஒன்றியவள் “தேவா டெல் ஹிம் எனக்கு… எனக்கு…” என்றவளை தன்னோடு சேர்த்தனைத்தான், உனக்கு அவன் வேண்டாம் என்ற வார்த்தையைக் கூட அவளால் தாங்க முடியவில்லை.
“மயூ… இங்கபாரு ஒண்ணுமில்ல அவர் ஏதோ தெரியாம பேசுறார் நான் பாத்துக்குறேன்” என்றவன் விழிகள் ஒஸ்கரை குற்றம் சுமத்தியது.
“இவ்ளோ பெரிய முடிவுகள் எடுக்கறதுக்கு முன்னாடி அவளோட சம்மதம் கேக்கணும்னு உங்களுக்குத் தோனலயா” என்க.
“நான் தெரியாம சொல்லல எல்லாமே முடிவு பண்ணிட்டேன் இன்னும் மூணு மாசத்துல நாம ஸ்பெய்ன் போறோம், அம்மா அப்பா இல்லாம உன்னை வளர்த்திருக்கேன், எல்லாரும் உன்னை எங்கயாவது கொண்டு போய் விடச் சொன்னப்போவும் அவங்க எல்லாரையும் ஓதுக்கிட்டு உன்ன பாத்துக்கிட்டேன், உன் பாட்டிக்குக்கூட உன்னைப் பிடிக்காது உனக்காக இவ்ளோ செஞ்சும் நீ கொஞ்சம் கூட நன்றி இல்லாம நடந்துக்குற” என்றவரின் கூற்றில் அழுகை நின்று ஸ்தம்பித்துவிட்டாள் மயூரி.
“போதும்” என்ற சேனாவின் கர்ஜனையில் சட்டென்று உணர்வு பெற்றார் ஒஸ்கர், பேசிய வார்த்தைகள் இப்பொழுது அவர் முன்னே நின்று அவரைக் கேலிபேசியது.
“ஐரிஸ்” என்று அவளை நெருங்கியவரை தடுத்தவன் “உங்க வீட்டில வந்து பொறக்கணும்னு அவ ஒன்னும் தவம் செய்யல யாரோ செஞ்ச தப்புக்கு அவளை எல்லாரும் சேந்து தண்டிச்சுடீங்க நீங்க யாருமே அவளுக்கு நியாயம் செய்யல” என்றவன் ஒஸ்கரை நெருங்கி “இந்தக் குன்னூர் பார்டர் தாண்டி நீங்க அவளைக் கொண்டுபோகவும் முடியாது, என்னை மீறி அவளை எவனும் நெருங்கவும் முடியாது” என்றவன் விழிகள் மீண்டும் அவளில் நிலைத்தது.
நிறைந்து தளும்பும் அந்த விழிகளே அவனைப் பாதி கொன்றுவிட்டது வாசல் கடந்து செல்லும் அவனைப் பார்த்துக்கொண்டே தடுமாறி எழுந்து ஒஸ்கரை நெருங்கிய மயூரி “என் தேவாவை விட்டு எங்கேயும் வரமாட்டேன் அப்படி நீங்கக் கொண்டுபோனும்னு நினச்சா… யு கேன் டேக் மை பாடி நாட் மை சோல்” என்றவள் விழிகள் மழையை பொழிய மெல்ல படிகளேறி மேலே சென்றாள்.
இறுதினங்களாக அவன் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை வீட்டில் யாருக்கும், மூன்றாம் நாள் காலை அவனைப் பிடித்துக்கொண்டார் கோசலை “அந்த நீலகிரிக்காரர் பொண்ணை பாக்கலாமா ராசா” என்றவரை சந்தேகமாகப் பார்த்தான் சேனா.
“என்ன உங்க தொரையையா வந்துட்டு போனாரா?” என்றவனின் கேள்வியில் தடுமாறியவர் “அவர் வந்தது ஒருபக்கம் இருந்தாலும் அந்தப் பிள்ளை உனக்கு வேண்டாம் சாமி” என்றவரை உணர்வின்றி பார்த்தான் பேரன்.
“ஏன்” என்ற கேள்வி அவன் விழிகளில்.
“பிள்ள பிறந்தநாள் மட்டும்தானே அவங்க குறிச்சு வெச்சிருந்தாங்க நேரம் நட்சத்திரம் ஒன்னும் தெரியலையே ஜாதகம் எழுதல எழுதவும் முடியாது போல அப்படியே எழுதினாலும் உனக்குப் பொருந்தாத ஜாதகமா இருந்தா அது ராஜகுமாரியா இருந்தாலும் நமக்கு வேண்டாம்” என்றார் கறாராக.
இப்படியொரு கோசாலையை அவன் இதற்கு முன் பார்த்ததில்லை “அப்பத்தா உனக்கு இப்போ ஜாதகமா முக்கியம்” என்றவனை பார்த்தவர்.
“ஆமாயா உன் விஷயத்துல எனக்கு அது ரொம்ப முக்கியம், நீதான்யா என் குலசாமி… பொண்டாட்டியை பறிகொடுக்க இருந்தான் உன் அப்பன் நீ கிடைக்காம போயிருந்தா என் புள்ளயையும் மறுமவளயும் ஒண்ணா இழந்திருப்பேன், உன் பொறப்புமட்டும் தான் அவளைக் காப்பாத்தி குடுத்தது, அப்பத்தா இதுவரைக்கும் உனக்குப் பிடிச்ச எதையும் செய்யக்கூடாதுனு சொன்னதில்லை இந்த ஒரு விஷயத்துல இந்தக் கெழவி சொல்றதை கேளுய்யா உன் காலைக் கூடப் புடிக்குறேன் சாமி” என்று அவன் அருகில் அவர் நெருங்கப் பதறி விலகினான் சேனா.
“அப்பத்தா” என்றவன் சத்தத்தில் அப்படியே நின்றுவிட்டார் கோசலை.
தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரியவில்லை அவளையும் தன்னையும் பிரிப்பதில் அப்படி என்ன சந்தோசம் இவர்களுக்கு என்ற சிந்தனையோடு அப்பத்தாவை பார்த்தவன் “எனக்கு ஜாதகம் பாத்து நல்ல வாழ்க்கை அமைச்சு தரேன்னு சொல்ற என் வாழ்க்கையே அவதான்னு நான் சொல்றது உங்க யாருக்கும் ஏன் புரியல” என்றவன் பின்கழுத்தை அழுந்தத் தேய்த்துக்கொண்டே பெற்றோரைப் பார்த்தான்.
பவுனு விழியில் நீரோடு அவனைப் பார்த்து நிற்கக் கந்தசாமி தாயை தடுக்கவும் முடியாமல் அவர் சொல்வதை மறுக்கவும் முடியாமல் தடுமாறி நின்றிருந்தார்.
அன்று ஒஸ்கர் திருமணத்திற்கு மறுத்தபோதே மொத்தமாக உடைந்து நின்றிருந்தவள் முகம் அவனுள் மின்னி மறைந்தது, ‘இவர்களுமா… இது தெரிந்தால் அவள் நிலை’ என்ற எண்ணமே அவனைத் தளர்த்தியது.
திரும்பித் தன் அப்பத்தாவை பார்த்தவன் “அவளை விட்டுடேனா நான் வெறும் பொணத்துக்கு சமம்” என்றவன் அப்படியே வெளியேறிவிட பின்னில் அவனைத் துரத்தி வந்தது அவன் தாயின் அழுகுரல்.
இன்றும் வீட்டிற்கு செல்ல மனமில்லை பாதி வழியிலே நின்றிருந்தவனின் சிந்தனையைக் கலைத்தது மேரியிடமிருந்து வந்த அழைப்பு “சொல்லுங்க மேரிமா” என்றவனிடம் “தம்பி ஐரிஸ் எவ்ளோ சொல்லியும் கேக்காம மலை கோவில் போய்டுச்சு, போய் ரொம்ப நேரம் ஆகுது இன்னும் வரல, அப்புறம்…” என்றவர் சொல்லத் தயங்க.
“என்னனு சொல்லுங்க மேரிமா” என்றான் வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே.
“உங்க அப்பத்தா காலைல வந்திருந்தாங்க, அவங்க வந்துபோன அப்புறம் ரூம் கதவைகூட திறக்கல இப்போ நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம போய்டுச்சு” என்றவர் முடிக்கும்போது மலைக்கோவிலின் கீழே வண்டியை நிறுத்தியிருந்தான்.
error: Content is protected !!