Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 26.

நிலாவுடன் சமாதானமாகும் தமிழ்.

 

நிலா மழையில் நனைந்ததால் குளித்து விட்டு வந்தாள்.

 



Advertisement

இனி,

 

ஹச் ஹச் என தும்மி விட்டு தமிழ் இருக்கிறானா என நிலா திரும்பி பார்க்க அங்கு தமிழ் இல்லாததால் அப்பாடா என தலையை துடைத்து விட்டு கீழே சென்றாள்.

Advertisement

 

Advertisement

கீழே தமிழ் அம்மா, அப்பா, தமிழ் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

 

‘வா நிலா நீயும் உட்காரு சாப்பிடு ‘, என சொல்லி தமிழ் அம்மா அவளிடம் சாப்பாட்டை தள்ளி வைக்க அதை எடுத்து போட்டு சாப்பிட்டாள்

Advertisement

 

‘டேய் தமிழ் உனக்கு  சப்பாத்தி’, என தமிழ் அம்மா கேட்க அவன் எதுவும் பேசாமல் தானே எடுத்து வைத்து சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றான்.

 

நிலா படுக்கையை உதறி விட்டு மூக்கை உறிஞ்சு கொண்டே பத்தாததுக்கு தும்மிக் கொண்டு விரித்துக் கொண்டிருந்தாள்.

 

தமிழ் வேகமாக அங்கு வந்து போர்வையை  அவனிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி தான் உதறி விரித்து விட்டு டேபிளிலிருந்த விக்ஸ் டப்பாவை எடுத்து வந்து அவள் கையில் குடுத்து விட்டு எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டான்.

 

‘ச்சே எனக்கு உடம்பு சரியல்ல. இங்க என்னை பாத்துக்க கூட ஆள் இல்ல. இதே எங்க அப்பாவா இருந்தா மடில படுக்க வச்சு தலைல, மூக்குல, தொண்டைல ன்னு எல்லா எடத்தலையும் விக்ஸ நல்லா தேச்சு விட்டு தலைய அழுத்தி விட்டு தூங்க வச்சிருப்பாரு. இங்க யாரோ ஒருத்தர் உன்னை உங்க அப்பா மாதிரி பாத்துக்கறேன்னு சொன்னாங்க. எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் போல’, என நிலா வம்பிழுக்க,

 

தமிழ் அங்கிருந்து வேகமாக வர, ‘போச்சு தேவை இல்லாம வம்பிழுத்திட்டமோ. இன்னிக்கு அடி கன்பார்ம். உனக்கு நல்லா வேனும். பேச்சா பேசற’, என நிலா தனக்குள் நினைத்த படி கண்ணை மூடிக் கொண்டாள்.

 

தமிழ் அவள் அருகில் உட்கார்ந்து அவளை இழுத்து தன் மடியில் படுக்க லைத்துக் கொள்ள கண் முழித்து பார்த்த நிலா தமிழையே கண் கொட்டாமல் சிறிது  நேரம் பார்த்து விட்டு, ‘நான் சும்மா வம்பிழுத்தேன். அப்பவாவது என் கூட பேசுவீங்கன்னு’, என சொல்லிக் கொண்டே நிலா தமிழ் மடியில் இருந்து எழ முயற்சிக்க அவளை எழுந்திருக்க விடாமல் தன் மடியிலேயே வைத்து அழுத்தினான். பின்னர் அருகிலிருந்த விக்ஸ் டப்பாவை எடுத்து தலை, தொண்டை, மூக்கு என எல்லா இடத்திலும் நன்கு தடவி விட்டு மூக்கின் அருகில் தன் விரல்களை வைத்து ‘ம் நல்லா மோந்து வாசத்த  உள்ள இழு’, என தமிழ் சொல்ல அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அவன் விரலில் இருந்த விக்ஸ் வாசனையை உள்ளே முகர்ந்து இழுத்தாள் நிலா. பிறகு இதமாக அவள் தலையை அமுக்கி விட்டான் தமிழ்.

 

‘சாரி தமிழ். நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல. பக்கத்துல யார் கிட்டயாவது போன் வாங்கி நான் கூப்டு இருக்கலாம். இனிமே இப்டி நடக்காம பாத்துக்கறேன். சாரிப்பா என்னை மன்னிச்சிடுங்க. எங்கிட்ட எப்பவும் போல பேசுங்க ‘, என நிலா சொல்ல,

 

‘நிலா ப்ளீஸ் இப்ப எதுக்கு இத்தன சாரி. ஆக்சுவலா நான் தான் கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன். மழை வருது அதனால எங்கயாவது நின்னுட்டு மழை நின்னதும் வந்துருவன்னு தான் பர்ஸ்ட் யோசிச்சேன். அப்புறம் டைம் ஆக ஆக போன் வேற எடுக்கலைன்னதும் எனக்கு ரொம்ப பயமா, ஒரு மாதிரி பதட்டமா கை, கால் எல்லாம் நடுக்கம் ஆயிடுச்சு. உன்ன பாத்ததுக்கு அப்புறமா தான் எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்துச்சு. ஏன் இப்டி நடந்துக்கிட்டேன்னு எனக்கே தெரியல. சரி அத விடு. தலைய நல்லா தொடச்சியா’,  என சொல்லி தமிழ் துண்டை எடுத்து அவள் தலையை துடைத்து விட,

 

நிலா தமிழை கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘ரொம்ப தேங்க்ஸ் டாடி’  என சொல்ல,

 

‘உனக்கு அப்பாவா இருக்கறது ரொம்ப கஷ்டம்னு நினைக்கறேன். நீ என்ன நினைக்கற’, என சிரித்துக் கொண்டே தமிழ் சொல்ல நிலாவும் சிரித்தாள்.

 

‘அப்புறம் அந்த இன்வஸ்டர் சைன் பண்ண காபி உங்களுக்கு அனுப்பி இருந்தனே பாத்திங்களா ‘, என நிலா கேட்க,

 

‘ம் பாத்தேன். அது மட்டுமில்லாம அவரே எல்லாம் ஓகே ன்னு வாய்ஸ் மெசேஜும் போட்டு இருந்தாரு. அதுல கூட உன்ன பத்தி தான் பேசி இருந்தாரு. எப்டி நிலா நான் மட்டும் தான் உன் மேல இம்ப்ரஸ் ஆனேன்னு நினச்சேன். ஆனா எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணிடற..’, என தமிழ் கேட்க,

 

‘ம் என்ன கிண்டல் பண்றீங்களா’, என நிலா கேட்க,

 

‘இரு வரேன்’, என சொல்லி தமிழ் தனது போனை எடுத்து வந்து அந்த இன்வஸ்டர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை அவளுக்கு போட்டுக் காட்டினான்

 

‘இதுக்கு என்ன சொல்ற’, என தமிழ் கேட்க,

 

‘அவரு நல்லா பேசுனாரு. நானும் அவர் கூட நல்லா பேசினேன். அப்புறம் அந்த ஃபைல்ல இருக்கறது ஏற்கனவே நல்லா எனக்கு தெரியும். அதான் அவரு டவுட்ட ஈசியா க்ளியர் பண்ணிட்டேன். அவ்ளோ தான். அவரு கொஞ்சம் சென்டிமெண்ட் டைப். அது தான்  என்னை ரொம்ப புகழ்ந்து பேசி இருக்காரு.’, என நிலா சொல்ல,

 

”சரி உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. எனக்கு தூக்கம் வருது. நீயும் தூங்கு’, என சொல்லி விட்டு தமிழ் தூங்க செல்ல, இருவரும் தூங்கினர்.

 

அடுத்த நாள் காலையில் நிலா கிளம்பி கீழே இறங்கி வர,

 

‘நிலா இந்தா வெறும் வயித்துல இந்த கஷாயத்த குடி. சலி,  தும்மல் எல்லாம் சரியாகிடும்,.’, என சொல்லி தமிழ் அம்மா டம்ளரை குடுக்க,

 

‘ரொம்ப தேங்க்ஸ் ஆன்டி’  என சொல்லி நிலா அதை வாங்கி குடித்தாள்.

 

தமிழ் கிளம்பி கீழே இறங்கி வந்து சாப்பிட உட்கார தமிழ் அம்மா அவனுக்கு பரிமாறினார்.

 

‘ராஜி எங்க நிலா சாப்படல’  என தமிழ் கேட்க,

 

‘பார்ரா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டீங்களா. அவளுக்கு கஷாயம் குடுத்தேன் குடிக்க அதான் அரை மணி நேரம் கழிச்சு தான் சாப்படனும்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘என்னது கஷாயமா. சலி பிடிச்சா போட்டு தருவியே அதுவா. அத நிலா குடிச்சிட்டாளா’, என ஆச்சர்யமாக தமிழ் கேட்க,

 

‘பின்ன உன்ன மாதிரியா. ஒரு டம்ளர் கஷாயத்த குடுத்தா முக்கால் டம்ளர குடிக்க மாட்டேன்னு அடம் புடிச்சு தட்டி விட்டுட்டு அப்டி இப்டின்னு குடிச்ச கால் டம்ளரையும் வாந்தி எடுத்துட்டு இருப்பாங்க ‘  என தமிழ் அம்மா சொல்ல,

 

‘அப்டியா ஆன்டி.’, என அங்கு வந்த நிலா ஆர்வமாக கேட்க,

 

‘நீ வேற நிலா இவனுக்கு மட்டும் உடம்பு சரி இல்லைன்னா போதும் இருக்கற எல்லாரையும் ஒரு வழி பண்ணிருவான்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘போதும் போதும் என் புகழ் பாடுனது. அப்பா எங்க ‘, என தமிழ் பேச்சை மாற்ற,

 

‘அவரு நேரமா கிளம்பி அவரு ப்ரெண்ட பாக்கனும்னு போய்ட்டாரு. நிலா அரை மணி நேரம் ஆயிடுச்சு சாப்பிடு’, என தமிழ் அம்மா சொல்ல நிலா எடுத்து வைத்து சாப்பிட்டாள்.

 

சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலாவிடம் அருகில் வந்து அவள் காதில் மெதுவாக, ‘நிஜமாவே கஷாயத்த குடிச்சிட்டியா கசக்கல’, என குழந்தை போல் கேட்ட தமிழை பார்த்து சிரித்த படி அவனை ரசித்துக் கொண்டே சாப்பிட்டாள்.

 

‘இன்னும் குழந்தையாவே இருக்குற உங்களுக்கு என் அப்பாவா நடந்நுக்கறது கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம் தான்’, என தனக்குள் நினைத்துக் கொண்டாள் நிலா.

 

இருவரும் சாப்பிட்டு விட்டு ஆபிஸ்க்கு கிளம்பிச் சென்றனர்.

 

‘குட்மார்னிங் நந்தினி’, என சொல்லி விட்டு நிலா தன் இடத்திற்கு சென்று தன் வேலையை பார்க்க,

 

‘குட்மார்னிங் நிலா’, என சொல்லி விட்டு நந்தினியும் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரம் கழித்து நிலா ஒரு ஃபைலை வாங்க நந்தினியிடம் வந்து கர்சீப்பை வைத்து மூக்கை துடைத்துக் கொண்டே கேட்க,

 

‘நிலா என்னாச்சு சலி பிடிச்சுக்குச்சா’, என நந்தினி கேட்க,

 

‘அத ஏன் கேக்கற.’, என ஆரம்பித்து நிலா நடந்ததை சொல்லி முடிக்க,

 

‘வர வர உங்க லவ் ஸ்டோரி ரொம்ப சூப்பரா போய்கிட்டு இருக்கு நிலா. ஆனா ஒன்னு நல்லா தெரியுது சார் உன்ன ரொம்ப லவ் பண்றாரு. கடைசில அவர நீ ஏமாத்தாம இருந்தா சரி. பாவம் டி மனுஷன் இப்பவாவது  ஞாபகம் மட்டும் தான் இல்லாம இருக்காரு. அப்புறம் பைத்தியமாவே ஆயிடுவாரு .’,  என நந்தினி சிரித்துக் கொண்டே சொல்ல,

 

‘ஏன் நந்தினி அப்டி சொல்ற. என்ன பாத்தா அப்டி ஏமாத்திட்டு போறவ மாதிரியா தெரியுது. அவரு தான் என்னோட உலகமே. அவரு விட்டுட்டு என்னால வாழ முடியாது’, என சொல்லி நிலா அழ,

 

‘ஏய் நிலா சும்மா சொன்னேன்டி. அத போய் சீரியஸா எடுத்து கிட்டு இப்டி அழுகுற. ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய புள்ள குட்டிங்கள பெத்து கிட்டு நல்லா சந்தோஷமா இருப்பீங்க. இது தான் உங்க லவ் ஸ்டோரியோட ஹேப்பி என்டிங் ஓகே வா.’, என சொல்லி நந்தினி நிலாவின் கண்ணீரை துடைத்து விட்டு சமாதானப் படுத்த,

 

‘நிறையாலாம் வேனா. தமிழுக்கு பொண்ணு வேனும்னு முன்னாடியே சொல்லிட்டாரு, அதனால அவருக்கு ஒரு பொண்ணு, அப்புறம் எனக்கு அவரு மாதிரியே ஒரு ஜூனியர் தமிழ் ஆக ரெண்டு குழந்தைங்க போதும் நந்தினி’, என நிலா சிரித்துக் கொண்டே சொல்ல,

 

‘உள்ளுக்குள்ள அவ்ளோ ஆசையாடி. உன் ஆசைப்படியே நடக்கும்’, என்றாள் நந்தினி.

 

‘சரி நான் போய் வேலைய பாக்குறேன்’, என நிலா சொல்ல,

 

‘நிலா மதியம் நான் ரசம் கொண்டு வந்துருக்கேன். அத ஊத்தி சாப்டா சலிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்’, என நந்தினி சொல்ல,

 

‘சலிக்கு தான் நல்லா இருக்குமா எனக்கு நல்லா இருக்காதா’, என நிலா கிண்டல் செய்ய,

 

‘அடிவாங்க போற. ஒழுங்கா ஓடிரு’, என நந்தினி சிரித்துக் கொண்டே சொல்ல நிலா தன் இடத்திற்கு சென்றாள்.

 

தமிழ் தன் அறையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க கவினிடம் இருந்து போன் வர அதை அட்டண்ட் செய்தான்.

 

‘சொல்லு மச்சான் எப்டி இருக்கீங்க’, என தமிழ் கேட்க,

 

‘எல்லாம் நல்லா இருக்கோம் டா. அப்புறம் ஒரு சந்தோஷமான விசயம். நீ மாமா ஆகப் போற டா.’, என சந்தோஷமாக கவின் சொல்ல,

 

‘மாமா வா யாருக்கு’, என எதுவும் புரியாமல் தமிழ் கேட்க,

 

‘அப்பா டேய் நான் அப்பா ஆக போறேன், யாழினி அம்மா ஆக போறா, அப்டினா நீ மாமா ஆக போற. இப்ப புரியுதா’  என கவின் விளக்கி சொல்ல,

 

‘ஏய் நெஜமாவே ஹேப்பி நியூஸ் டா. கங்க்ராஜூலேசன்ஸ். எப்படிடா’, என தமிழ் கேட்க,

 

‘எப்டியா டேய் நீ எல்லாம் நல்லா வருவ’, என கவின் சொல்ல,

 

‘இல்ல டா எப்பன்னு கேக்குறதுக்கு தான் எப்டின்னு கேட்டுட்டேன்’, என தமிழ் சொல்ல,

 

‘ரெண்டு நாளா சிம்ப்டம்ஸ் தெரிஞ்சுது. இன்னிக்கு காலைல ஹாஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிட்டு வந்தோம்.’, என கவின் சொல்ல,

 

‘ரொம்ப ஹேப்பி. யாழினி எங்க அவ கிட்ட குடு.’, என தமிழ் கேட்க,

 

‘ஒரு நிமிஷம் லைன்ல இரு. யாழினி, யாழினி’, என கூப்பிட்டுக் கொண்டே சென்று கவின் யாழினியிடம் போனை குடுத்தான்.

 

‘யாருப்பா’, என யாழினி கவினை கேட்க,

 

‘தமிழ்’, என்றான் கவின்.

 

‘ஏய் யாழினி கங்க்ராஜூலேசன்ஸ் டி. அம்மா ஆக போறயாமே. ரொம்ப ஹேப்பி நியூஸ்’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா டா  ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். புதுசா ஏதோ ஃபீல் ஆகுது. ஆனா என்னன்னு சொல்ல தெரியல. ஏற்கனவே நம்ம எல்லார் வீட்லயும் என்னை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க. இனிமே சொல்லவே தேவை இல்ல.  ராணி மாதிரி பாத்துக்குவாங்க. அப்புறம் மறக்காம ஆன்டி, அங்கிள், நிலான்னு எல்லார் கிட்டயும் சொல்லிடு’, என யாழினி சந்தோஷமாக சொல்ல,

 

‘சரி கண்டிப்பா சொல்லிடறேன். அப்புறம் கேர் ஃபுல்லா இரு. நல்லா சத்தா சாப்டு. டாக்டர் சொல்றத ஃபாலோ பண்ணு. முக்கியமா சந்தோஷமா இரு. மருந்து, மாத்திரை எல்லாம் மறக்காம எடுத்துக்க,. என் மருமகன பத்திரமா பாத்துக்க ‘, என தமிழ் சொல்ல,

 

‘இரு இரு அதுக்குள்ள மருமகன்னே முடிவு பண்ணிட்டியா.’, என யாழினி கேட்க,

 

‘ஆமா எனக்கு பொண்ணு தான் பிறக்கும். அப்போ உனக்கு பையனா இருந்தா தான கல்யாணம் பண்ணி வைக்க முடியும். ‘, என தமிழ் சொல்ல,

 

‘கேட்டியா கவின் சாருக்கு பொண்ணு தான் பிறக்குமாம். அதனால நமக்கு பையன் பிறந்தா தான் கல்யாணம் பண்ணிக்க முடியுமாம். இவன கொஞ்சம் என்னன்னு கேளு’, என யாழினி கவினிடம் போனை குடுக்க,

 

‘மச்சான் அதெல்லாம் கணக்கு கரெக்டா தான் போடுற. ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு நடக்கனுமே’, என கவின் கிண்டல் பண்ண,

 

‘அதுக்கு முன்னாடி ஒன்னு நடக்கனுமா. என்னது’, என தமிழ் யோசித்த படி கேட்க,

 

‘ம் முட்டாள் அதுக்கு முன்னாடி உனக்கு குழந்தை பிறக்கறதுக்கு நீயும் நிலாவும் ஒன்னா சேரனும் . புரிஞ்சுதா’., என கவின் சொல்ல யாழினி சிரிக்க,

 

‘ம் புரியுது புரியுது. சரி எந்த டாக்டர் பாக்கறீங்க ‘, என தமிழ் பேச்சை மாற்ற,

 

‘டேய் பேச்ச மாத்தாத. சீக்கிரமா நீயும் நிலாவும் சேர்ந்து எங்களுக்கு குட் நியூஸ் சொல்லுங்க. உன் ஆசை படியே நாங்க எங்க மருமகளுக்காக வெய்ட் பண்றோம் சரியா. சரி பாய் அப்புறமா கூப்டறேன்’, என சொல்லி போனை கட் செய்தான் தமிழ்.

 

தமிழ், நிலா இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு காரில் சென்றனர்.

 

‘நிலா சொல்ல மறந்துட்டேன். மதியம் கவினும், யாழினியும் போன் பண்ணாங்க. ஒரு குட் நியூஸ் சொன்னாங்க. என்னன்னு கெஸ் பண்ணு பாப்போம்.’, என தமிழ் கேட்க,

 

‘ஏதாவது பிஸ்னஸ்ல பெரிய பிராஃபிட் கிடைச்சதா.  இல்ல வீட்ல ஏதும் விசேஷமா இருக்குமோ.  ஒரு வேல யாழினி உண்டாகி இருக்காங்களா’, என நிலா சரியாக கேட்க,

 

‘ஏய் நிலா சூப்பர் டி. எப்டி கரெக்டா கெஸ் பண்ண.’, என தமிழ் ஆச்சர்யமாக கேட்க,

 

‘நிஜமாவா. ரொம்ப சந்தோஷம் . ஒரு பொண்ணுக்கு தான் அம்மா ஆகறத விட,  ஒரு ஆணுக்கு தான் அப்பா ஆகறது விட பெரிய சந்தோஷம் இந்த உலகத்துல வேற எதுவும் இருக்க முடியாது’, என நிலா சொல்ல,

 

‘அதுவும் கரெக்ட் தான் நிலா’, என தமிழ் சொல்ல,

 

‘சரி இந்த வாரத்துல ஒரு நாள் போய் அவங்கள பாத்துட்டு வந்துடலாம்.’, என நிலா சொல்ல,

 

‘ம் ஓகே மேடம். நீங்க சொன்னா சரி தான்’,  என தமிழ் சொல்ல,

 

‘தமிழ் எனக்கும் அம்மா ஆகனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதுவும் நீங்க கேட்ட மாதிரியே ஒரு பொண்ண பெத்து குடுக்கனும். அதுவும் நீங்களும் சேர்ந்து கிட்டு என்னை தொல்லை பண்ணனும். ம் இதெல்லாம் கனவாவே போயிருமோன்னு பயமா இருக்கு’, என நிலா தனக்குள் பேசிக் கொண்டு வர,

 

‘நிலா ஆமா இப்ப உனக்கு சலி பரவால்லயா. இல்லன்னா சொல்லு டாக்டர் கிட்ட போய்ட்டு வீட்டுக்கு போலாம்.’ என தமிழ் கேட்க,

 

‘இல்ல பரவால்ல தமிழ். ஆன்டி குடுத்த கஷாயத்துலயே எனக்கு பாதி சரியாகிடுச்சு. இன்னும் ரெண்டு வேளை போட்டு தரேன்னு சொன்னாங்க. அத குடிச்சாலே போதும் முழுசா சரியாகிடும்.’, என நிலா சொல்ல,

 

‘நிஜமாவே வா. பரவாலயே. ராஜிய வச்சு ஒரு க்ளீனிக்கே ஆரம்பிக்கலாம் போல. அடுத்த ப்ராஜக்ட் அது தான்.’, என தமிழ் கிண்டல் செய்ய,

 

‘ஆனாலும் நீங்க ஓவரா தான் ஆன்டிய கிண்டல் பண்றீங்க. சரி நாளைக்கு போய் மழைல நிறுத்திட்டு வந்த டூ வீலர எடுத்துட்டு வந்தரவா’, என நிலா கேட்க,

 

‘எதுக்கு திரும்பவும் நீ போய் டூ வீலர எடுத்துட்டு வரேன்னு போவ அப்புறமா உன்ன காணோம்னு உன் பின்னாடியே உன்ன தேடி அலையறதுக்கா. போதும்டா சாமி. அந்த வேலையே வேணாம். காலைல வந்த உடனேயே செக்யூரிட்டி கிட்ட சாவியக் குடுத்து எடத்த தெளிவா சொல்லி அனுப்பிட்டேன்.   அவரும் கரெக்டா போய் எடுத்துட்டு வந்து ஆபிஸ்ல நிறத்திட்டாரு.’, என தமிழ் சொல்ல நிலா சிரித்தாள்,

 

தமிழ், நிலா இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

‘வந்துட்டீங்களா. எங்க டைம் ஆச்சு இன்னும் காணோமேன்னு உங்க அம்மா கேட்டு கிட்டு இருந்தா.  சரி ரெண்டு பேரும் போய் ப்ரஷப் ஆகிட்டு வாங்க டீ குடிக்கலாம்’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘ஓகே டாடி’, என தமிழும், ‘சரிங்க அங்கிள்’, என நிலாவும் சொல்லி விட்டு மேலே போய் ப்ரஷப் ஆகி விட்டு வர,

 

‘இந்தா தமிழ், இந்தா நிலா’, என இருவருக்கும் டீயைக் தமிழ் அம்மா குடுக்க இருவரும் வாங்கிக் கொண்டனர்.

 

‘தேங்க்ஸ் ஆன்டி’, என நிலா சொல்ல,

 

‘இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘இதுக்கும் அப்புறம் நீங்க போட்டு தந்த கஷாயத்துக்கும் சேத்து தேங்க்ஸ். ஆமா ஆன்டி சலி தும்மல் இப்ப பரவால்ல. உங்க மருந்து சூப்பரா வேல செய்யுது’, என நிலா சொல்ல,

 

‘ராஜி அதான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். உன்ன வச்சு ஒரு சித்த வைத்திய சாலைன்னு ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.  நீங்க என்ன டாடி சொல்றீங்க ‘, என தமிழ் கிண்டல் செய்ய,

 

‘ஆமாடா தமிழ் கண்டிப்பா. நானே ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். பரவால்ல நீ ஆரம்பிச்சா என்ன நான் ஆரம்பிச்சா என்ன ‘, என தமிழ் அப்பாவும் தமிழோடு சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ய,

 

‘என்ன அங்கிள் தமிழ் தான் ஆன்டிய கிண்டல் பண்றாருன்னா நீங்களும் அவரு கூட சேர்ந்து கிட்டு கிண்டல் பண்றீங்க ‘, என நிலா அவளது அத்தைக்கு சப்போர்ட் செய்ய,

 

‘அவங்க ரெண்டு பேரும் அப்டி தான். அத விடு.  உனக்கு சலி பரவால்ல தான அது போதும்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘சாரி ராஜி சும்மா விளையாட்டுக்கு கிண்டல் பண்ணோம். உன்ன நாங்க கிண்டல் பண்ணாம வேற யாரு கிண்டல் பண்ணுவா’, என தமிழ் கேட்க,

 

‘என்ன கிண்டல் பண்ணது போதும் டீ ஆறறதுக்குள்ள குடிங்க ‘, என தமிழ் அம்மா சிரித்துக் கொண்டே சொல்ல அனைவரும் பேசிக் கொண்டே டீயைக் குடித்தனர்.

 

நந்தினி சொன்னது போல் தமிழ், நிலாவின் காதல் கதையில் ஹேப்பி என்டிங் வருமா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!