Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 1

அய்யனார்புரம் (கற்பனை ஊர்)

பெயருக்கு ஏற்றது போல் ஊரின் முதலிலேயே பெரிய அய்யனார் தான் ஊருக்குள்ள வரும்போது வரவேற்பார்… அந்த ஊரில் பெரிய திருவிழா என்றால் அய்யனார் கோவில் திருவிழா தான்.. அக்கம் பக்கம் இருக்கும் ஊரில் இருந்து எல்லாம் இந்த திருவிழாவை காண வருவர்…



Advertisement

இன்னும் இரண்டு மாதங்களில் இந்த திருவிழா வரும்… அதற்கான பணிகள்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது… அய்யனாருக்கு வர்ணம் பூசுதல் கோவில் பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்டு வருகிறது..

இதை மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் அர்ஜுனன்… ஆறடி உயரம்… மாநிறம் கொண்டவன்… இவனுக்கு முப்பத்தி இரண்டு வயது என்று சொன்னால் புதிதாக பார்ப்பவர்கள் யாரும் நம்பமாட்டார்கள்… இருபத்தி ஐந்து வயது தோற்றம் கொண்டவன்…

கண்ங்களில் என்னை தொட்டு பார் என்ற திமிர் அவனிடம் இருந்து கொண்டே இருக்கும்… அவனுக்கு உள்ளுணர்வு வீட்டுக்கு செல் என்று சொல்லிக் கொண்டே இருந்தது…

Advertisement

அதற்கு ஏற்றதாக அவனின் தொலைபேசி அழைப்பு வந்தது… அதில் “தீராம்மா” என்ற பெயரை தாங்கி அழைப்பு வந்தது.. அந்த அழைப்பு வந்த நிமிடம் அவனின் ஜீப்பின் அருகில் இருந்தான்..

Advertisement

அங்கிருந்த தன் தம்பி கர்ணனிடம் பார்த்துக்கொள்ள கூறிவிட்டு ஜீப்பை எடுத்துவிட்டு அழைப்பை ஏற்றான்… “ஹலோ சொல்லு அம்மு” என்று பாசமாக கூறினான்…

இந்த பாச குரலை அவனின் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் தான் கேட்க முடியும்… மற்றவர்களிடம் கடினமாக தான் வார்த்தைகள் வந்து விழும்..

அந்தப்பக்கம் எந்த பேச்சும் இல்லை… “ஹலோ அம்மு” என்று மீண்டும் அழைத்தான்…

Advertisement

“ப்பா ப்பா” என்று அவனின் மூன்று வயது செல்ல மகன் ஆரவ் அழைத்துக்கொண்டே அவனை அழைத்தான்..

“தம்பி அம்மா எங்கடா??”

“அப்பா அம்மா கீழே தூங்கி தூங்கி… எழுப்புனா எழுத்துக்கவே இல்லை.. நீ வா… பாட்டி கூப்பி(கூப்பிட்டேன்) சித்தி கூப்பி… யாரும் வரல.. நீ வா” என்று அழுதுகொண்டே கூறினான்..

ஆரவ் கூறிய இரண்டு நிமிடத்தில் அர்ஜுனனின் ஜீப் அந்த பெரிய வீட்டில் முன் சீறி நின்றது… அதில் இருந்து இறங்கி வேக வேகமாக வீட்டினுள் நுழைந்து மாடி படிக்கட்டுக்களை இரண்டு மூன்று படிகளாக தாவி ஏறி ஓடினான்…

அங்கு அவனால் அம்மு என்றும் தீராம்மா என்று அழைக்கப்பட்ட “சுபத்திரா” மயங்கி கீழே விழுந்து இருந்தாள்.. அதை பார்த்து அவனின் மூச்சே நின்றிருந்தது….

“அம்மு” என்று கத்திகொண்டே தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்ப முயன்றான்… ஆனால் அவள் எழவில்லை… அவளை தூக்கிக்கொண்டு அவள் அருகில் அமர்ந்திருந்த தன் மகன் ஆரவை “தம்பி அழுகக்கூடாது அம்மாக்கு ஒன்னும் இல்லை… அப்பா பின்னாடி வா” என்று அவனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றான்…

வீட்டில் ஆட்கள் இருக்கும் அரவம் தெரிந்தது…. மகன் அழைத்தும் வந்து காணாத வீடு ஆட்களை நினைத்து முகம் இறுகி ஜீப்பை நோக்கி விரைந்தான்…

அப்போது தான் வீட்டினுள் நுழைந்த ராஜம்மா ( வீட்டின் சமையல்காரர்) நிலைமையை புரிந்துகொண்டு அவனிற்கு முன் ஜீப்பில் ஏறி அமர்ந்து கொண்டு சுபாவை தன் மடியில் தாங்கி கொண்டார்..

ஆரவை முன் சீட்டில் அமர்த்திவிட்டு ஜீப்பினை புயல் வேகத்தில் கிளப்பினான் மருத்துவமனைக்கு…

அது வளர்ந்து வரும் கிராமம்… அங்கு சிறிய மருத்துவமனை தான் இருக்கும்… அந்த இடத்திற்கு இரண்டே நிமிடத்தில் வந்து இருந்தான்…

பணி முடிந்து வீட்டுக்கு கிளம்ப இருந்த மருத்துவர் இவனின் வாகனத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றார்.. அதற்குள் வேகமாக சுபாவை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான்…

ராஜம்மாவும் அழுதுகொண்டிருந்த ஆரவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார்…

மருத்துவர் அவளை செக் செய்துவிட்டு “இவங்க மயங்கி விழுந்து மூணு மணிநேரம் பக்கம் ஆகுது போல.. இவளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்திங்க” என்று திட்டிவிட்டு “கொஞ்சம் வெளிய இருங்க” என்று கூறிவிட்டு அவளுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்…

இறுகிய முகத்துடன் வெளியே வந்த அர்ஜுனனைப் பார்த்து ராஜம்மா பயந்துவிட்டார்… மெதுவாக அவன் அருகில் சென்று “தம்பி டாக்டரம்மா என்ன சொன்னாங்க” என்று கேட்டார்..

“அவ மயங்கிவிழுந்து மூணு மணிநேரம் ஆகுதாம்… ஏன்க்கா முன்னாடியே பாக்கல…” என்று கொஞ்சம் கோவமாகவே கேட்டான்…

“தம்பி பெரிய அம்மா துர்க்கை அம்மன் கோவில்ல பூஜைக்கு சொல்லியிருந்தாங்க… நானும் அம்மாவும் அங்க போயிட்டோம்…

சின்ன அம்மாவும் சின்ன பாப்பாவும் கோவிலுக்கு வரலன்னு சொல்லிட்டாங்க… பாப்பா நீங்க முன்னாடி போங்க நான் வரேன்னு சொல்லிச்சு… ஆனா பாப்பா வரவே இல்ல…

போன் பண்ணாலும் எடுக்கல சின்ன அம்மாவுக்கு போன் பண்ணா மகாராணி தூங்கிட்டு இருக்கா அப்டினு சொல்லிட்டு வெச்சிட்டாங்க… பெரிய அம்மா பாப்பா மேல ரொம்ப கோவமா இருக்காங்க..

நான் தான் மனசு கேட்காம பாப்பா இப்படி தூங்காதே அப்டினு நினைச்சிட்டு பாப்பாவை பாக்க வந்தேன் தம்பி” என்று கூறி முடித்தார்…

எதுவும் பேசாமல் முகம் இறுகி அமர்ந்துவிட்டான்.. அவனின் மகனோ அழுது கொண்டே இருந்தான்..

அவனை ராஜம்மாவிடம் இருந்து வாங்கி “ஆரவ் பிரேவ் பாய்ல அழுக கூடாது… அம்மாக்கு ஒன்னும் இல்ல…” என்று கூறி சமாதானம் படுத்தினான்…

அவனும் தேம்பிக்கொண்டே தகப்பன் மீது தூங்கிவிட்டான்… அப்போது டாக்டர் வெளியே வந்து “ஒன்னும் பிரச்சனை இல்ல சார்… எல்லாம் நல்ல விஷயம் தான்… உள்ள போய் அவங்கள பாருங்க… அரைமணி நேரம் குளுக்கோஸ் ஏறட்டும்…. அதுக்கு அப்பறம் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு கூட்டிட்டு போங்க.. நர்ஸ் பாத்துக்கோங்க” என்று கூறி சென்றுவிட்டார்…

ராஜம்மா ஆரவை அர்ஜுனனிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.. அவனும் வேகமாக உள்ளே சென்றுவிட்டான்…

தற்போது சுபத்திரா முழித்து இருந்தாள்… “அம்மு உடம்பு சரி இல்லனு முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல… தம்பி போன் பண்ணலானா என்ன ஆகியிருக்கும்.. தம்பி பயந்தே போயிட்டான்… ஆனாலும் எனக்கு போன் பண்ணிட்டான்…” என்று கூறிவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு “தேங்க்ஸ் அம்மு” என்று கூறி அவனின் மகவை தாங்கிய அவளின் வயிறை தடவிக்கொடுத்தான்..

“நல்லா தான் இருந்துச்சு மாமா… திடீர்னு மயக்கம் வந்துடுச்சி.. போன் தூரமா இருந்துச்சி.. அதுனால தான் போன் பண்ண முடியல மாமா…தம்பி ரொம்ப அழுதானா மாமா.. இப்ப அவன் எங்க..” என்று கேட்டாள்..

“வெளியே ராஜம்மா கூட இருக்கான்…. ஸ்ட்ரைன் பண்ணிக்காத அம்மு… இனிமே ரூம் விட்டு வெளியவே வரக்கூடாது..” என்று கண்டிப்பாக கூறினான்..

“மாமா… என்னால ரூம் உள்ளலாம் ரொம்ப நேரம் இருக்க முடியாது..”. என்று முகத்தை சுருக்கி கூறினாள்…

“சரி ஓகே வெளிய வரலாம்.. ஆனா இனிமே அந்த வீட்டுல ஒரு வேலைகூட செய்யக்கூடாது… அந்த வீட்டுல நீ மட்டும் தான் இருக்கியா செய்யட்டும்..”. என்று கொஞ்சம் கோவமாக கூறினான்..

அவளும் சரி சரி என கூறிவிட்டு அவனை பக்கம் அழைத்தாள்… “ரொம்ப பயந்துட்டியா மாமா… உன் முகம் ஏன் இப்படி இருக்கு… “என்று கூறி குளுக்கோஸ் ஏறாத கையினால் அவனின் முகத்தை துடைத்தவாறு கேட்டாள்…

“தம்பி அழுததும் பயந்துட்டேன் தீராம்மா.. எனக்கும் கொஞ்ச நேரமாவே வீட்டுக்கு போலாம்னு மனசு சொல்லிட்டே இருந்தது… உன் நம்பர் பார்த்ததும் கிளம்பிட்டேன்…. ஆனா தம்பி அழுததும் வேகமா வீட்டுக்கு வந்து பார்த்த நீ மயங்கிட்ட…”

அதற்குள் குளுக்கோஸ் முடிந்து இருந்தது… நர்ஸை கூப்பிட்டு கூறினான்.. அவரும் எல்லாம் நீக்கிவிட்டு அவர்களை கிளம்புமாறு கூறிவிட்டார்..

அர்ஜுனன் சுபா தடுத்தும் அவளை தூக்கி கொண்டு ஜீப்பிற்கு சென்றான்… அவனுடன் ராஜம்மாவும் ஆரவை தூக்கிக்கொண்டு சென்றார்…

அவர்கள் செல்லட்டும் அவர்களை பற்றிய சிறு அறிமுகத்தை பார்க்கலாம்..

ராமசாமி பட்டம்மாள் தம்பதியருக்கு ஒரே மகன் பாலா… அவரின் முதல் மனைவி சிந்தியாவின் மகன் தான் அர்ஜுனன்… அர்ஜுனனின் உடன்பிறந்த அக்கா நந்தினி…

சிந்தியா அர்ஜுனனின் இரண்டாம் அகவையில் நோய்வாய் பட்டு இறந்துவிட்டார்…

அதனால் குழந்தைகளை பார்க்க வீட்டினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பாலாவுக்கு இரண்டாம் திருமணம் செய்யப்பட்டது கிரிஜாவுடன்… பாலா கிரிஜாவின் புதல்வர்கள் சசிகுமார், கர்ணன் இருவரும்..

சசிகுமாரின் காதல் மனைவி ரேவதி… அவள் வரும் வரை அமைதியாக சந்தோசமாக இருந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது…

சுபத்திரா பரமசிவன் பார்வதியின் மூன்றாவது மகவு… முதலில் இரண்டு மகன்கள்.. கடைசியில் தான் மகள்… அவள் வீட்டில் கடைக்குட்டி என்பதாலோ என்னவோ மிகுந்த செல்லம் அவளுக்கு

ஆனால் அவளின் பெற்றோர்கள் அவளின் பதினெட்டாம் வயதில் ஒரு ஆக்சிடென்டில் இறந்துவிட்டனர்… அவளின் பெரிய அண்ணன் மேகவாணன் அவனின் மனைவி தான் அர்ஜுனனின் அக்கா நந்தினி… பரமசிவன் பார்வதி இறப்பதற்கு ஆறு மாதம் முன்பு தான் கல்யாணம் ஆகி இருந்தது….

அவர்களின் இறப்பு இவர்களுக்கு பேரிடி தான். ஆனால் அவர்கள் இறந்த அடுத்த மூன்று மாதத்தில் நந்தினி கருத்தரித்து இருந்தாள்.. வாணனோ தன் பெற்றோர்கள் தான் அவனின் குழந்தையாக பிறப்பர் என்று கூறிக்கொண்டு இருந்தான்..

அதேபோல் தான் அவனின் அப்பாவின் ஜாடை கொண்ட ஆண் குழந்தை பிறந்து இருந்தது… அந்த குழந்தைக்கு சிவனேஷ் என்று பெயரிட்டு மகிழந்தனர்..

சுபாவின் சின்ன அண்ணன் மேகவர்ணன்…. அவனின் மனைவி ஜனனி… இவள் சுபத்திராவின் தோழி.. இவர்களுக்கு கார்த்திகா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உண்டு…

கிரிஜா …. பாலாவின் இரண்டாவது மனைவி பரமசிவத்தின் உடன்பிறந்த தங்கை… இவர்களின் மேல் பாசமாக தான் இருப்பார்.. ஆனால் தற்போது ?!?!?!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!