Skip to content
Post Views: 7,192

அன்று திருவிழா… ஊரே கோலாகலமாக இருந்தது… மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கோவிலை நோக்கி படையெடுத்து கொண்டு இருந்தனர்… அர்ஜுனனின் வீட்டிலும் பாட்டி கர்ணன் சுபா ராஜம்மா நால்வரும் சந்தோசமாக தயார் ஆகிக் கொண்டு இருந்தனர்…
பாலா எதோ தப்பு செய்த பாவத்துடன் தயாராகி இருக்கையில் அமர்ந்து இருந்தார்… கிரிஜாவுக்கு ரேவதியும் எதையோ சாதித்த மிதப்பில் தயாராகி அமர்ந்து இருந்தனர்…..
Advertisement
சசிகுமாரோ ஒருவித தெனாவெட்டில் அமர்ந்து இருந்தான்… இவர்களை கவனித்த பாட்டிக்கு எதோ தவறாக பட்டது… எதுவும் செய்ய மாட்டார்கள் என நம்பி கர்ணனுடன் சுபா ராஜம்மா ஆரவை அழைத்து கொண்டு காரில் கோவிலுக்கு சென்றார்..
அர்ஜுனன் விடியற்காலையே கோவிலுக்கு வந்துவிட்டான்… அனைவரும் கோவிலுக்கு வந்துவிட்டனர்… பாட்டிக்கு எதுவோ தவறாக பட்டுக்கொண்டே இருந்தது… கோவில் பூசாரியை விசாரித்தால் மழுப்பலாகவே பதில் கூறிக் கொண்டு இருந்தார்….
நல்ல நேரத்தில் பூஜை ஆரம்பம் ஆனது… மக்கள் அனைவரும் ஆவலாக இருந்தனர்…. இந்த கோவிலின் பூசாரி ஒரு வருடமாக தான் இந்த கோவிலில் பூஜை செய்கிறார்.. அதற்கு முன் இவரின் அப்பா தான் செய்வார்… ஆனால் அவர் வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார்.. தற்போது அவரின் மகன் செய்கிறார்…
Advertisement
ஒரு பக்கம் ஆண்கள் அனைவரும் நிற்க மற்றொரு பக்கம் பெண்கள் அனைவரும் நின்று இருந்தனர்….
Advertisement
அய்யனாருக்கு முதலில் பூஜை ஆரம்பம் ஆகியது… அனைவரும் மனமுருகி வேண்டிக் கொண்டு இருந்தனர்… பூஜை முடிந்து முதல் மரியாதை செய்ய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது…
பூசாரி முதல் மரியாதை தர தட்டு எடுத்து வந்தார்… அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தனர்…
ஒரு பக்கம் கெண்டை மேளம் அடித்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் தவில் நாதஸ்வரம் இசைத்து கொண்டு இருந்தனர்…
Advertisement
அர்ஜுனன் ஒரு பக்கம் அவனின் அப்பா நின்று இருக்க இன்னொரு பக்கம் சசிகுமார் நின்று இருந்தான்… அவனிற்கு அடுத்து கர்ணன்… சுபாவின் அண்ணங்கள் வாணன் வர்ணன் என நின்று இருந்தனர்… அவர்களுக்கு அடுத்து ஊர் மக்கள் நின்று இருந்தனர்…
நேராக அர்ஜுனனிடம் வந்த பூசாரி அவனுக்கு முதல் மரியாதைக்கான தலைப்பாகை கட்டாமல் அவனுக்கு அருகில் இருந்த சசிகுமாருக்கு காட்டினார் …..
ஊரே ஸ்தம்பித்து நின்றது… பாட்டி அதை தடுக்க வந்தார்… ஆனால் அவரின் கைகளை சுபா பிடித்து தடுத்துவிட்டாள்..
கிரிஜா சற்று குற்றவுணர்ச்சியுடன் தான் அந்த நிகழ்வை பார்த்து கொண்டு இருந்தார்… ஆனால் ரேவதி சுபாவை வெற்றி பார்வை பார்த்து கொண்டிருந்தாள்…
பாலா தன் பெரிய மகனை பார்க்க முடியாமல் குற்றவுணர்ச்சியுடன் தலை குனிந்து நின்று இருந்தார்…
கர்ணன் கோபத்துடன் நின்று இருக்க வாணனும் வர்ணனும் அவனை அமைதி படுத்தி கொண்டு இருந்தனர்…
ஊர் மக்கள் அனைவரும் பாலாவை பார்த்து அத்திருப்தியுடன் நின்று இருந்தனர்…
அர்ஜுனன் எந்தவித முக மாறுபாட்டையும் காட்டாமல் இறுக்கமாக நின்று இருந்தான்… ஆனால் உள்ளுக்குள் அவமானம் கோவம் அதிகமாக இருந்தது… அவனின் கோவத்தின் வெளிப்பாட்டினால் அவன் உடல் சூடாக இருந்தது.. அவனின் கண்கள் ரத்த சிவப்பாக இருந்தது…
சசிகுமாருக்கு முதல் மரியாதை செய்தவுடன் ரேவதி தேங்காய் வாழைபழம் மற்றும் அய்யனாருக்கான பட்டாடை வைத்த தட்டை பூசாரியிடம் நீட்டினாள்..
அவரும் அதை வாங்கி கொண்டு அய்யனாருக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்… முதல் மரியாதை யாருக்கோ அவர் பூஜைக்கு குடுத்த பின் தான் மற்றவர்கள் சாமிக்கு பூஜைக்கு தர வேண்டும்…
பூசாரி தேங்காய் எடுத்து உடைத்தார்.. ஆனால் அந்த தேங்காய் அழுகிப் போய் இருந்தது… அதை பார்த்து பூசாரி அதிர்ந்து விட்டார்..
ஊர்மக்களும் அதிர்ந்துவிட்டனர்… ரேவதி பார்த்து நல்ல காயாக தான் வாங்கி இருந்தாள்… புது காயாக தான் வாங்கி இருந்தாள்… ஆனால் தற்போது காய் அழுகிப் போய் இருந்ததை பார்த்து மயக்கமே வருவது போன்று இருந்தது அவளுக்கு..
பூசாரி அந்த தேங்காய்யை மாற்றி வைத்துவிட்டு அந்த தட்டை பூஜை செய்து எடுத்துவந்து ரேவதியிடம் குடுத்துவிட்டார்…
அர்ஜுனனின் கண் பார்வையில் சுபா தட்டினை எடுத்து அர்ஜுனனிடம் குடுத்தாள்… அவனும் தேங்காய் உடைத்து அவனே அய்யனாருக்கு பூஜை செய்தான்….அந்த தேங்காய் உடைக்கும் போது அதில் தேங்காய் பூ இருந்தது…
அதை மீண்டும் சுபாவிடம் குடுத்துவிட்டு அய்யனாரை பார்த்து கை எடுத்து கும்பிட்டான்
பின் சுபாவிடம் சென்று ஆரவை தூக்கிக் கொண்டு தன் மனைவியை கைவளவில் நிற்க வைத்துவிட்டு தன்னை அவமான படுத்திய குடும்பத்தினரை பார்த்துவிட்டு தலை குனிந்து நின்று இருந்த தன் பெற்றவரை பார்த்தான்..
எதுவும் பேசாமல் இருவரையும் அழைத்து கொண்டு கோவிலில் இருந்து வெளியே வந்தான்… அவன் பின்னூடே ஊரின் முக்கால்வாசி மக்கள் பூஜைக்கு தராமல் கோவிலை விட்டு வெளியேறினர்…
ஊர் மக்கள் வருவதை பார்த்து அர்ஜுனன் திரும்பி இப்ப “எதுக்கு என் பின்னாடி வரீங்க… நான் சாமிக்கு பூஜைக்கு குடுத்துட்டு தானு வந்தேன்… எல்லாரும் இருந்து சாமி கும்பிட்டு வாங்க…
எனக்கும் எந்த பிரச்னையும் இல்ல… ரா(இரவு) பூஜைக்கும் எல்லாரும் வந்து இருக்கனும்” என்று கூறிவிட்டு
துர்க்கை அம்மன் கோவில் பூசாரியை பார்த்து “நீங்க பூஜைக்கு தரவங்க கிட்ட வாங்கி நீங்க பூஜை பண்ணுங்க… அந்த ஆளு இனிமே பூஜை பண்ண கூடாது” என்று கூறிவிட்டு
சுபா ஆரவை அழைத்து கொண்டு ஜீப்பில் வீட்டுக்கு சென்றுவிட்டான்…
ரேவதி அடங்காமல் “அவரு எப்படி ஆர்டர் போடலாம்… என் புருஷன் தானு இனிமே கோவில்ல பாத்துக்கணும்… இவரு தான் பூஜை பண்ணனும்” என்று கூறினாள்…
ஊரின் பெரியவர்கள் கோவிலின் கமிட்டி உறுப்பினர்கள் பாலாவை பார்த்து பாலா “எங்க முடிவை மீறி நீ ஒரு காரியம் பண்ணி இருக்க… நாங்க எல்லாரும் முடிவு பண்ணி உன்ன இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடியும்… ஆனா அர்ஜுன் தம்பி எதுவும் பேசாம போனதுனால அந்த மாதிரி பண்ணல…
எங்களால குடுத்த முதல் மரியாதையை எடுத்துக்கவும் தெரியும்…. உன் மருமகளை அமைதியா இருக்க சொல்லு…” அய்யனார் கோவில் பூசாரியைப் பார்த்து இனிமே “நீ அய்யனாருக்கு பூசை போடா கூடாது… “என்று கூறிவிட்டு ஒரு ஒருவராக பூஜைக்கு குடுத்தனர்….
பூசாரியின் மனைவி பாட்டியை போக விடமால் அவர் காலில் விழுந்து “அம்மா என் புருஷனை மன்னிச்சிடுங்க ம்மா… காசுக்கு ஆசைப்பட்டு மாத்தி முதல் மரியாதையை பண்ணிட்டாரு ம்மா” என்று கதறினார்…
“நான் மன்னிக்க என்ன இருக்கு… கடவுள் பார்த்துப்பாரு…” என்று கூறிவிட்டு கர்ணனுடன் கிரிஜா சசிகுமார் ரேவதி பாலா அந்த பூசாரி அனைவரையும் முறைத்துவிட்டு சென்றுவிட்டார்…
சுபாவின் அண்ணன்களும் தன் அத்தையை ஒரு அற்ப பார்வை பார்த்துவிட்டு தம் மனைவிகளையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்…
முதல் மரியாதை கிடைத்தும் மரியாதை இல்லாமல் பாலா கிரிஜா சசிகுமார் ரேவதி நால்வரும் அவமானத்துடன் வீட்டை நோக்கி சென்றனர்..
பாட்டி வீட்டுக்கு போகும் போது மாறனின் ஜீப் அங்கு இல்லை… அவருக்கு தெரிந்துவிட்டது… அவன் அவனின் சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டான் என…
கோபத்துடன் அமர்ந்து இருந்தார் பாட்டி… கர்ணனும் பாட்டிக்கு இருக்கும் கோவம் குறையாமல் அமர்ந்து இருந்தான்…
இவர்கள் நால்வரும் வீட்டில் நுழைய முற்படும் போது பாட்டி “அங்கேயே நில்லுங்க எல்லாரும்…” என்று கூறிவிட்டு பாலாவை பார்த்து “நீ எல்லாம் மனுஷனா டா… அவன் உன் புள்ள தானு… பெரியவன் இருக்க அப்ப சின்னவனுக்கு எப்படி டா முதல் மரியாதை தர முடியும்…
அவன் என்ன செத்தா போயிட்டான்… நீ எனக்கு பிறந்தியா அப்படினு சந்தேகமா இருக்கு டா…” ‘த்து’ என்று அவரின் முன்பே காரி துப்பினார் பாட்டி…
“இனிமே இந்த வீட்டுக்குள்ள யாருக்கும் இடம் இல்லை… எல்லாரும் வீட்டை விட்டு வெளிய போங்க” என்று கோவமாக கூறினார்..
“பாட்டி இந்த வீட்டுல எங்களுக்கும் உரிமை இருக்கு நாங்க எதுக்கு வெளிய போகனும்” என்று வேகமாக கேட்டாள் ரேவதி..
“வாடியம்மா என்ன சொன்ன உனக்கு உரிமை பட்ட வீடா… இது முழுக்க முழுக்க என் பேரன் அர்ஜுனனுக்கு உரிமை பட்ட வீடு..
இந்த வீடு உனக்கோ உன் மாமனாருக்கோ ஏன் எனக்கே கூட இந்த வீட்டுல உரிமை இல்லை… இது என் மருமக சிந்தியா வீடு…” என்று கூறினார்..
“அதுமட்டும் இல்லை நாம விவசாயம் பாக்குற அறுவது சதவீத நிலம் எல்லாம் அவளோடது தான்….
இந்த வீட்டுக்கும் நிலத்துக்கும் உரிமை பட்டவங்க என் பேத்தி நந்தினிக்கும் என் பேரன் அர்ஜுனனுக்கும் தான்” என்று கொஞ்சம் அழுத்தியே கூறினார்…
பாலாவிற்கும் கிரிஜாவுக்கு அப்போது தான் அது ஞாபகமே வந்தது…. ரேவதி சசிகுமார் இருவரும் அதிர்ச்சியாக நின்று இருந்தனர்…
ரேவதியெல்லாம் இனிமேல் இந்த வீட்டை நான் தான் ஆளுவேன் என்று மிதப்பில் சுற்றி கொண்டு இருந்தாள்… அவளின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது..
இவர்கள் நால்வரை பார்த்து உங்க நாலு பேருக்கும் இன்னும் ஒரு வாரம் நேரம் தரேன்… பாலா நம்ம பூர்விக வீட்டை தயார் படுத்தி வை… இந்த வீட்டை கண்ணாக்கே குடுத்துட்டு நாம எல்லாரும் அந்த வீட்டுக்கு போயிடலாம் என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார்…
கர்ணனும் இவர்களை பார்த்து ச்சீ உங்கள நினச்சா அருவருப்பா இருக்கு… என்று கூறிவிட்டு அவனும் சென்றுவிட்டான்…
இவர்கள் நால்வரும் கன்றிய முகத்துடனே தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர்…
ரா பூஜையில் முதல் மரியாதை யாருக்கு தர பட்டதோ அவருக்குள் தான் அய்யனார் இறங்கி குறி சொல்வார்… அவன் பூஜைக்கு தந்ததை இத்திரு கொள்ளாத சாமி.. அவனுள் இறங்குவாரா
error: Content is protected !!