Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்…..18

உன் காதல் ஒரு வரமாய்….18

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அமிர்தா எழும் போதே சற்று நேரம் கடந்து தான் எழுந்தாள்.பொறுமையாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உணவை உண்டு கொண்டிருக்கும் போது தான் பாரதியின் அழைப்பு வந்தது.

“ஏய் அமிர்தா……என்ன ஆச்சு….”என்று அவள் ஆர்வமாக கேட்க,

“என்னக்கா????என்ன ஆச்சு????”



Advertisement

“அடேய்….உனக்கு இன்னைக்கு ரிசல்ட்….நியாபகம் இல்லையா….”என்று கேட்க,அமிர்தாவிற்கு அப்போது தான் நியாபகமே வந்தது.

“அச்சோ ஆமாம் இல்லை….நான் மறந்துட்டேன்…..பார்க்கனும் பார்த்துட்டு சொல்லுறேன்….”என்று போனை வைத்துவிட்டு தன் வேலைகளை பார்க்க அடுத்து கீதாவிடம் இருந்து அழைப்பு அவளும் அதையே கேட்க பார்த்து சொல்லுகிறேன் என்று வைத்துவிட்டு தன் வேலைகள் அனைத்தையும் முடித்துவைத்துவிட்டு பொறுமையாக தான் இணையமையம் சென்றாள்.

தனது பதிவு எண்ணை அடித்துவிட்டு அமர்ந்திருந்தாள் மனதில் எதையும் யோசிக்கவில்லை.எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு அடிவாங்கி அடிவாங்கி மனது கற்பாறையை போல மாறியிருந்தது.சற்று நேரத்தில் திரை விரிய அமைதியாக அதனை பார்த்தவளுக்கு நெஞ்சில் சிறிதாக நிம்மதி பரவியது ஆம் இம்முறை அமிர்தா தேர்ச்சி பெற்றிருந்தாள்.பொறுமையாக முழுதாக படித்துவிட்டு அதனை அச்செடுத்துக் கொண்டு தன் விடுதிக்கு வந்து சேர்ந்தாள்.

Advertisement

தன் அறைக்குள் வந்தவள் தன் அன்னையின் முன் தான் நின்றாள்.அவரின் புகைப்படத்தின் முன் தான் நகலெடுத்த காகிதத்தை வைத்துவிட்டு,

Advertisement

“ம்மா….நான் உன்னோட கனவுல பாதியை நிறைவேத்திட்டேன்…..”என்று கூறிவிட்டு தன் படுக்கையில் அமைதியாக முழங்கால் போட்டு அமர்ந்தவள் முகத்தை முழங்காலில் புதைத்துவிட,மூடிய இமைகளின் முன் நின்றான் அவன்.

“க….கடுவான் நான் ஜெயிச்சிட்டேன்….”என்று இவள் கத்த,இவளை வாரி அணைத்துக் கொண்டவன் அவளின் முகமெங்கும் முத்தமிட,அத்தனையும் அமைதியாக வாங்கி கொண்டவள்,

“எதாவது சொல்லுங்க….நா….”என்றவளின் உதட்டை ஒற்றை விரலால் மூட செய்தவன்,

Advertisement

“நாம….நாம ஜெயிச்சிட்டோம்…..”என்று கூறி அவளின் இதழ்களை ஒற்றி எடுக்க அமிர்தாவும் அவனின் இதழொற்றலில் மயங்கியிருந்தாள்.இருவரும் இருந்த உலகில் எங்கோ ஒரு ஓசை கேட்க அமிர்தா விழித்து பார்க்க அவளது அறையில் இருந்தாள்.தன் நினைவுகளில் இருந்து வெளிவர சிறிது நேரம் தேவைப்பட்டது அவளிற்கு.பிறகு தன் பேசியை எடுத்துப்பார்க்க பாரதியும்,கீதாவும் மாற்றி மாற்றி அழைத்திருந்தனர்.

“அய்யோ சொல்ல மறந்துட்டேன் இவங்க கிட்ட….”என்று தன் தலையில் தட்டிக் கொண்டவள் பின் இருவருக்கும் அழைத்து விபரம் கூற இருவருக்கும் அத்தனை சந்தோஷம்.இருவருடனும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தவள் பின் தனக்கு உதவிய பேராசிரியருக்கும் அழைத்துக் கூற அவரும் அமிர்தாவிற்கு வாழ்த்து கூறினார்.

அனைவருக்கும் பேசிவிட்டு அமர்ந்து தனது பேசியில் எண்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் விழுந்தது அவனின் எண். மீண்டும் அவனின் குரல் எனக்கு சொல்லமாட்டியா என்று கேட்டது.ஒருநொடி அவளின் கைகள் அவனின் எண்ணிற்கு அழைக்க முற்பட்ட நேரம்,

“திவ்யா….அமிர்தா திவ்யா இங்க இல்லையா….”என்று கேட்டுக் கொண்டு ஒரு பெண் உள்ளே வர,அமிர்தாவின் கை அப்படியே நின்றது அந்த பெயரைக் கேட்டதும்.

“அமிர்தா…”என்று மீண்டும் அந்த பெண் அழைக்கவும் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆங்…என்ன கேட்டீங்க….”என்று மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவளுடன் அறையில் தங்கியிருக்கும் பெண் வந்துவிட,

“ஏய் மலரு….இங்க என்ன பண்ணுர….”

“உன்னை தான் தேடி வந்தேன்டீ….”என்று பேசிய வாரே வெளியில் சென்றுவிட,அமிர்தா ஓய்ந்து அமர்ந்துவிட்டாள்.என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன் நான் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.இனி அவனை கனவில் கூட நினைப்பது தவறு அல்லவா என்று மூளை எடுத்துரைக்க ஆனால் மனது அவனின் அருகாமையை தேடி ஏங்கியது. இதனால் மனதுக்கும் மூளைக்கும் இடையில் ஓர் போர் மூண்டது.

“நீ செய்யறது தப்பு….சிவா உன்னோட இல்லை அதை ஏத்துக்க பழகு….”என்று மூளை கூற,

“இல்ல….அவரு என்கூட தான் இருக்காரு….நிழலா….”என்று மனது கூறியது.

“இல்ல நீ கனவுலேயே வாழ முடியாது….அப்படி வாழ்ந்தா உன்னால நிகழ்காலத்தை எதிர்கொள்ள முடியாது….அதனால நிகழ்கால வாழ்க்கைக்கு நீ உன்னை மாத்திக்கிறது தான் நல்லது…..”என்று மூளை கூற,

“ஏன் நான் என் நினைவுகளோட தான வாழறேன்….அவரோட வாழ்க்கையில தொந்தரவு கொடுக்கலையே….அப்புறம் எப்படி இது தப்பாகும்…”என்று மனது கூற,

“நீயே நல்லா யோசி உனக்கு இதனால எவ்வளவு பிரச்சனை…நீ இதை நினைச்சே இப்படி இடிஞ்சி உட்காருக்கிறதால எதுவும் மாறப்போறதில்லை நீதான் கஷ்டப்பட போற அதோட உன்னை தான் எல்லாரும் தப்பா பேசுவாங்க…அதனால இதிலிருந்து வெளில வா….”என்று மூளையின் குரல் ஓங்கி ஒலிக்க அமிர்தா தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

“இல்ல நான் தப்பான பொண்ணு இல்ல…தப்பானவ இல்லை….”என்று தனக்குள் கூறிக் கொண்டவள் தன் அன்னையின் படத்தை தன் கைகளுக்குள் அடக்கி கொண்டு தூங்க முற்பட்டு வெற்றியும் கண்டாள்.

புத்தகங்களை அமிர்தாவின் கை அடுக்கி கொண்டு இருந்தாலும் கண்கள் என்னவோ வாசலை தான் பார்த்துக் கொண்டிருந்தது.அவள் எதிர்பார்த்த நபர் வரவும் அவள் முகத்தில் ஒரு பரவசம்,

“என்ன அமிர்தா எனக்காக தான் வெயிட் பண்றியா….சரி வேலை முடிச்சிட்டு வா…..”என்றவர் தனக்கான புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட,அமிர்தா தன் வேலைகளை முடித்துவிட்டு வெளிவர அவர் பக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருதார்.

“மேடம்….”

“ம்ம்…சரி சொல்லு உனக்கு என்ன உதவி வேணும்….”

“மேடம் அடுத்த இன்டர்வூயுக்கு இன்னும் எப்படியெல்லாம் ரெடியாகனும் மேடம்…நீங்க சொன்ன வரை படிச்சிருக்கேன்….இருந்தாலும் இது பத்தாதுனு தோணுது….”என்று கைகளை பிசைந்து கொண்டே கூற,

“ம்ம்….நீ சொல்லுறது சரி தான்….நான் எனக்கு தெரிஞ்ச கோச்சிங் செண்டர்ல கேட்டு பார்க்குறேன்…..”

“மேடம் கோச்சிங் செண்டருக்கு கொடுக்குற அளவுக்கு பணம் இல்லை….நீங்க சொல்லுங்க மேடம் நான் படிச்சிக்குவேன்….”என்று கூற,

“அட எனக்கு உன்னை பத்தி தெரியாதாமா….அதை நடத்துறது எனக்கு வேண்டப்பட்டவங்க தான் அதனால நான் சொன்னா கேட்பாங்க….”என்றவர் கூற,அமிர்தாவின் முகம் யோசனையிலேயே இருக்க,

“என்ன யோசனை பலமா இருக்கு….”

“இல்ல மேடம்….நான் வேலைக்கு போயிகிட்டு அதோட அங்க படிக்க…ம்ம் அதெல்லாம் சரிவராது மேடம்….வேற ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க மேடம்….”என்று கூற,சற்று நேரம் அமைதியாக இருந்த வாணி,

“ம்ம் அப்ப நான் உனக்கு ஞாயிற்றுகிழமை மட்டும் சொல்லி வைக்குறேன்….அப்ப போ…ஏனா நீ படிக்கிறது மட்டும் பத்தாது…இவங்கள மாதிரி ஆட்களுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கும்…..அது உனக்கு உதவியா இருக்கும்…..”என்று கூற,அமிர்தாவிற்கும் வேறு வழியில்லை என்பதால் ஒத்துக் கொண்டாள்.

ஞாயிற்றுகிழமை வகுப்புகள் தொடங்க அமிர்தாவும் சேர்ந்து கொண்டாள்.வாணி அமிர்தாவை பற்றி அனைத்தும் கூறியிருந்த காரணத்தால் இன்ஸ்டியூட்டின் மேளாலர் அவளுக்கு கட்டணத்தை பாதியாக குறைந்திருந்தார்.அதுவே அமிர்தாவிற்கு சற்று நிம்மதி தந்தது.வாரம் முழுவதும் நூலகம் வார இறுதி வகுப்பு என்று அவளின் நாட்கள் வேகமாக தான் சென்றன.

இப்போதெல்லாம் இரவில் அவளின் தூக்கமும் கெட்டது சிவாவினால்.அவனை நிழல் உலகிலும் மறக்க முயன்று தோற்று கொண்டிருந்தாள்.என்று அவளின் மூளை அவளை தப்பானவள் என்று எடுத்துக் கூறியதோ அதை ஏற்க முடியாமல் தடுமாறியவள் பின் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறாள்.ஆனால் முயல மட்டுமே முடிந்தது அவளாள் அத்தனை எளிதில் தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவனை அகற்ற முடியவில்லை.இந்த காரணத்தால் அவளின் படிப்பும் கெட ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல் வாணியிடம் தனக்கு இருக்கும் பிரச்சனை கூறி இதை எப்படி சரிசெய்ய என்று கேட்க,

“ம்ம்…இவ்வளவு பிரச்சனை இருக்கு இதோட நீ எப்படி இருக்க….”என்று கேட்க அமிர்தா பதில் ஏதுவும் கூறாமல் தலை குனிந்துவிட்டாள்.

“உனக்கு யாரும் இல்லை இல்லையா அதான் எது சரி தப்புனு இன்னும் உனக்கு புரியல….”

“இல்ல மேடம் என்னோட அக்கா இரண்டு பேரும் உதவுனாங்க…ஆனா நான் தான் அவங்க கிட்டேந்து இதை மறைச்சிட்டேன்….அப்ப எனக்கு இது தப்பா தெரியலை ஆனா எப்ப அவரை ஒரு குழந்தையோட பார்த்தேனோ எனக்கு நான் நினைக்கிறது கூட தப்புனு தோணுது….என்ன செய்யறதுனு தெரியலை இன்னும் இரண்டு மாசத்துல எனக்கு இண்டர்வியூக்கு வந்துடும்னு சார் சொல்லுறார்….இந்த சமயத்துல நான் இப்படி இருந்தா நான் இவ்வளவு நாள் கஷட்டப்பட்டது எல்லாம் வீணா போகிடும்…..”என்று தன் மனதில் உள்ளதை உள்ள படி கூறிவிட அனைத்தையும் கேட்ட வாணி அவளை நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அனுப்பி வைத்தார்.

அமிர்தாவிற்கு இந்த முறை சிவா என்பவன் எல்லாம் பின்னுக்கு சென்று அவளின் எதிர்காலம் மட்டுமே முன்னுக்கு நிற்க அந்த மருத்துவரின் அறிவுரைகளை கவனமாக கேட்டு அதன் படி தன்னை தேற்ற தொடங்கினாள்.முழுதாக அவளால் சிவாவை மறக்க முடியவில்லை என்றாலும் அவனில்லாமல் நிஜம்,நிழல் இரண்டிலும் இருக்க வேண்டும் என்று தன்னை ஊறுவேற்றிக் கொண்டாள்.முன்பு சரியாக தெரிந்து ஒன்று இன்று மிகப்பெரிய தவறாக தெரியவும் மாற்றிக் கொண்டாள் தன்னை. சில நேரங்களில் சில மாற்றங்கள் தேவை அது இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும் என்றால் மாற்றிக் கொள்வது தான் உத்தமம்.

நல்ல மாற்றம் வெற்றியை மட்டுமே தரும் என்பதற்கு பலனாக அமிர்தாவிற்கு அவள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததுவிட்டது.ஆம் அடுத்தக்கட்ட தேர்விலும் அமிர்தா வெற்றி அடைந்துவிட்டாள்.இன்னும் சில வாரங்களில் அவளிற்கான நியமனமும் எந்த இடத்தில் வேலை என்று கூறிவிடுவார்கள்.பாரதியிடமும்,கீதாவிடமும் கூற அவர்கள் இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி பாரதி ஒருமுறை தன் கணவனுடன் சென்னை வந்து அமிர்தாவை பார்த்துவிட்டே சென்றிருந்தாள்.

“வாணி மேடம்….எங்க இருக்கீங்க….”என்ற அமிர்தாவின் குரல் மிக உற்சாகமாக ஒலிக்க,

“என்ன அமிர்தா ரொம்ப சந்தோஷமா இருக்க…என்ன விஷயம்….நான் ஒருவேளையா வெளியூர்ல இருக்கேன்…”என்று அவர் கூற,

“மேடம் எனக்கு தாம்பரம் ஹெட் போஸ்ட் ஆபிஸ்ல போஸ்டிங் போட்டிருக்காங்க….அடுத்த வாரம் நான் ஜாயின் பண்ணும்….”என்று கூற,

“சந்தோஷம்…ரொம்ப சந்தோஷம்….நீ ஜெயிச்சிட்ட…எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா….என்ன என்னால உன்னை இப்ப பார்க்க முடியல….சாரிடாமா….”என்று வருத்தப்பட,

“பரவாயில்லை மேடம்….நான் ஜாயின் பண்ணிட்டு கண்டிப்பா உங்களை பார்க்க வருவேன்….”என்று அமிர்தா கூற அவரும் சந்தோஷத்துடனும்,பெருமையுடனும் சரியென்று கூறினார்.அதன் பிறகு தன் அக்காக்களுக்கும் அழைத்து விபரம் கூற,

“அப்ப நீ இனி தாம்பரம் போய் தான் வேலை பார்க்கனுமா….”என்று கீதா தன் முதல் சந்தேகத்தை வைக்க,

“ஆட ஆமாம் இல்ல….நானும் கேட்க மறந்துட்டேன் பாரேன்….நீ எப்படிடீ அவ்வளவு தூரம் போவ….”என்று பாரதியும் கூறினாள்.மூவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தனர்.பாரதி வந்திருந்த போது வலுக்கட்டாயமாக அமிர்தாவிற்கு ஒரு கைபேசி வாங்கி கொடுத்து சென்றிந்தாள்.அதன் பலன் இதோ எப்போது நேரம் கிடைக்கிறதோ வீடியோ காலில் பேசிக் கொள்வர்.

“அங்க நான் தங்க ஏதாவது இடம் பாரக்கனும்….”என்று அமிர்தா கூற,

“தனியா எப்படி புள்ள போவ….”என்று இருவரும் யோசிக்க,

“அட நீ ஏன்மா டென்ஷன் ஆகுற….எனக்கு தெரிஞ்சவங்க வீடு அங்க இருக்கு நீ அங்க தங்கிக்க….நானே நேர்ல வரேன் வந்து உனக்கு தங்க ஏற்பாடு செஞ்சி தரேன்….பயப்படாத….”என்று பாரதியின் கணவன் முன்வர,பாரதிக்கு பெருமையாக இருந்தது.தனக்காக தன் கணவன் செய்கிறான் என்பதிலேயே பூரித்து போனாள் பெண்.

“அப்புறம் என்னடீ அதான் சொல்லிட்டாங்கல நீ மூட்டையை கட்டு நாங்க வரோம்….”என்று பாரதியும் கூற,கீதாவின் முகத்தில் ஏதோ இயலாமை அதை கண்டு கொண்ட அமிர்தா,

“கீதாக்க….உங்களால செய்ய முடியலைனு வருத்தப்படாதீங்க….நீங்க என்கூட இருக்குறதே பெரிய பலம்….நீங்களும் பாரதி அக்காவும் எனக்கு வேற வேற இல்லை…..”

“அடியே முதல்ல நீ உன் வீட்டையும்,புருஷனையும் பாரு…அப்புறம் இவளை பார்க்கலாம்….”என்று பாரதி கூறிக் கொண்டிருக்கும் போதே,

“சரியா சொன்ன பெரிய தங்கச்சி….என்னை இவ பார்க்கவே மாட்டேங்குறா….”என்று குழறலாக ஒரு குரல் கேட்க பாரதி பயந்துவிட,கீதா பேசியை வைத்துவிட்டாள்.

“வச்சிட்டா…..சரிடீ நாங்க எப்ப வரோம்னு போன் பண்ணுறோம் வைக்குறேன்….”என்றுவிட்டு பாரதி வைத்துவிட்டாள்.

பாரதி தம்பதியினர் கூறியது போல இரண்டு நாட்களில் சென்னை வந்து அமிர்தாவை தாம்பரத்தில் குடியேற்றி விட்டு அவளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்துவிட்டும் சென்றனர்.ஒற்றை அறையில் ஒரு பக்கம் தடுப்பு போல அமைத்து அதை சமையல் கட்டாக மாற்றியிருந்தனர் அந்த வீட்டினர்.அவள் ஒருவளுக்கு இந்த வீடு போதுமானதே.இப்போது இன்னும் பெரிய பொறுப்பை ஏற்றது போன்றதொரு உணர்வு.பொறுப்புகள் கூட கூட அதை கையாலும் பக்குவமும் வந்தது அவளுக்கு.அவளின் வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க தொடங்கும் போது அவளின் வாழ்வில் மீண்டும் நுழைந்தான் சிவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!