Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 11.1

அத்தியாயம் 11

“இங்க காலேஜ்க்குள்ள வேணாம்னு ரெஸ்டரண்ட்க்கு போக சொல்லியிருக்கேன்” என்று ரெஸ்டரண்ட்டின் பெயரை சொன்னாள்.

“சரி உக்காரு” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய, “நீங்க போங்க, நான் ஆட்டோல வந்திடறேன்” என்றதும் விஷ்ணு முறைக்க, “உங்களோட வர பயமாயிருக்கு, நீங்க ரொம்ப வேகமா ஓட்டுவிங்க. மாமாதான் மெதுவா ஓட்டுவார்” என்றாள் பாவமாக.

ஊஃப் இதான் பிரச்சனையா என்று கோபம் குறைய, “உக்காரு, ஸ்லோவா ஓட்டுறேன்” என்றான்.



Advertisement

ராயலில் அமர்ந்தவள் ‘நான் பயப்படக்கூடாது. தைரியமா பேசனும்’ என்று முணகியபடி வர, விஷாலினியை கவனித்தபடி பயனித்து, ஐந்து நிமிடம் கழித்து பைக்கை நிறுத்தியவன் “இந்த ரெஸ்டாரண்ட்தான? இறங்கு” என்றான்.

இறங்கியவள் முகத்தில் முன்பிருந்த பதட்டம் போய் கோபம் நிறைந்திருந்தது. “நீ போ, நான் இங்க நிற்கிறேன், நீ பேசின பின்ன வரேன்” என்றான்.

“இல்ல நீங்களும் வாங்க” என்க, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

Advertisement

விஷாலினியை கண்டதும் ஜெகதீசன் கண்கள் ஒளிர்ந்தது. கண்களை சுழற்றியவள், “அதோ அங்க” என்று விஷ்ணுவிடம் முணுமுணுத்து ஜெகதீசனிடம் வந்தாள்.

Advertisement

மகளிடம் “உக்காருடா” என்றவர் விஷ்ணுவைப் பார்த்தார்.

ஜெகதீசன் எதிரே விஷாலினி அமர, விஷ்ணு ஜெகதீசன் அருகே சென்றமர்ந்தான்.

“எதுக்கு என்னை பார்க்க நினைச்சிங்க?”

Advertisement

“நான்தான்…” எனும்போதே “அதான் முன்னவே சொல்லிட்டிங்களே” என்றவள், “எதுக்கு என்னை பார்க்க நினைச்சிங்க?” என்றாள்.

மகளின் நேரடியான கேள்வியில் திணறினார். தங்கை மகனை மன்னித்திடு. என்னை மன்னித்திடு என்று நிறைய பேச நினைத்தார். ஆனால் தற்போது பேச்சு வரவில்லை ஜெகதீசனுக்கு.

தந்தை என்று சொல்லிக்கொண்டு தன்னிடம் பேச வந்தவர் முன் அமர்ந்திருப்பதே பெரும் சிரமமாக இருந்தது விஷாலினிக்கு. ஆனால் இது போல் மீண்டும் ஒரு சந்திப்பு வாழ்நாளில் வந்திடக்கூடாது. இன்றைக்கே இதற்கொரு முடிவுகட்ட வேண்டும் என்று முடிவெடுத்ததால் ஜெகதீசன் முன் அமர்ந்திருந்தாள்.

ஐந்து நிமிடம் பொறுமை காத்தவள், “இங்க உக்கார்ந்திருக்கலாம் எனக்கு டைம் இல்லைங்க, க்ளாஸ் கட் பண்ணிட்டு வந்திருக்கேன், என்ன பேசனுமோ பேசுங்க” என்றாள்.

“ஏதும் பேச வேணாம்டா, கொஞ்ச நேரம் உன்னை பார்த்திட்டிருக்கேன்” என்றார்.

“ஓ…” என்றவள் “என்னை பார்க்க வரேனு உங்க பசங்ககிட்ட சொல்லிட்டு வந்திங்களா?” என்றாள்.

இல்லையென தலையாட்டிய ஜெகதீசன் முகம் அவமானத்தில் குன்றியது.

“பொண்டாட்டிக்கு தெரியாம என் அம்மாவை கட்டிக்கிட்டிங்க. இப்போ பிள்ளைகளுக்கு தெரியாம என்னை பார்க்க வந்திருக்கிங்க. ஆக நீங்க மாறவேயில்ல…

அன்னைக்கு உங்க பொண்டாட்டிக்கிட்ட என் அம்மா அவமானப்பட்டு நின்ன மாதிரி உங்க பிள்ளைகள்கிட்ட நான் அவமானப்பட தயாராகிக்கனும்… ஆமாவா?” என்றாள் தீப் பார்வையோடு.

“அப்படியில்லடா” என்றதும் “முதல்ல இந்த டா போட்டு பேசுறதை நிறுத்துங்க. நீங்களா உரிமை எடுத்துப்பிங்களா?” என கடிந்து, “நீங்க என்னை திருட்டுத்தனமா பார்க்குறதுக்கு எனக்கு விருப்பமில்லைனாலும் நான் சப்போர்ட் பண்ணனும். ம்?” என்றாள்.

மீண்டும் “அப்படியில்லடா” என்று ஜெகதீசன் கலங்க, “வேற எப்படிங்க?” என்றவள், சில நொடி கழித்து “ஒருத்தரோட ஆசை மத்தவங்களுக்கு வலியை கொடுக்கக்கூடாது. உங்க ஆசை அப்படிப்பட்டதா?” என்றாள்.

“நீங்க ஆசைப்படுவிங்க. உங்க பொண்டாட்டி பிள்ளைக்களுக்கு அச்சப்பட்டு திருட்டுத்தனமா உங்க ஆசையை நிறைவேத்திப்பிங்க. ஆனா இதுல மானங்கெட்டு (நாணங்கெட்டு) போறது மட்டும் நான்… இது எந்த வகையிலங்க நியாயம்?” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.

“பதினெட்டு வருசம் முன்ன நீங்க ஆடின ஆட்டத்தால என் அம்மா வாழ்க்கை போச்சு. அந்த குற்றவுணர்வை போக்க உங்க தங்கை மகனை தூண்டிவிட்டிருக்கிங்க. அவனுக்கு நாலு கொடுத்தனுப்பியதும் இப்போ நீங்களே நேரடியா வந்திருக்கிங்க”

“பெத்த பிள்ளைக்கு அப்படி செய்வாங்களாடா? அவன்கிட்ட நான் எதுவுமே சொல்லலை. எனக்கு நல்லது செய்யிறதா நினைச்சு முட்டாள்தனம் செய்துட்டான்” என்றார் கண்ணீரோடு.

“சரி… அவன் முட்டாள்தனம் செய்துட்டான். அன்னைக்கு அவன் கூடவே அவங்கம்மா வந்திருந்தாங்களே… அது எப்படி? எதுக்கு? இல்ல அதுவும் உங்களுக்கு தெரியாம நடந்ததா?”

“அது… நீ வீட்டுக்கு வர சொன்னதா நிஜந்தன் சொன்னான். அவன் தனியா போக வேணாம்னு என் தங்கை கூட வந்துருக்கு”

“அப்போ அன்னைக்கு உங்க தங்கையும் அவங்க மகனும் என் வீட்டுக்கு வந்தது உங்களுக்கு தெரிஞ்சுதான் வந்திருக்காங்க. ஆமாவா?”

ஜெகதீசன் ஆமாம் என்பதாய் தலையசைக்க, தற்போது மேலும் விறைப்பாய் அமர்ந்தவள், “ஆக… எனக்கு சம்மதம்னா உங்க தங்கைக்கு என் அம்மாவை சம்மந்தி ஆக்கியிருப்பிங்க” என்க, தன் மனதை கண்டுபிடித்த மகளை காண முடியாமல் ஜெகதீசன் முகம் தாழ்ந்தது.

“உங்க தங்கை வீட்டுக்கு என் அம்மா வரப்போக இருந்தாகும் சூழல் வரும். உங்க தங்கை வீட்டுக்கு நீங்க வருவிங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்ன என் அம்மாக்கு கொடுத்த அசிங்கத்தை திரும்பவும் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிங்க” என்றவள் கண்கள் கண்ணீரை வெளியனுப்பியது.

“இல்லம்மா… இல்ல. இவ்வளோ தூரம் நான் யோசிக்கல. உன்னை பொறுப்பான இடத்துல ஒப்படைக்க மட்டும்தான் நினைச்சேன்” என்றார் தவிப்போடு.

“என் வாழ்க்கையை நினைக்க நீங்க யாருங்க? தெருவில விட்டுட்டு போன பொருளை இத்தனை வருசம் கழிச்சி சொந்தம் கொண்டாட நினைக்கிறதுக்கு வெக்கமாயில்ல?” என்றாள் ஆக்ரோசத்தோடு.

பக்கத்து டேபிளில் இருப்பவர்கள் பார்வை விஷாலினி மேல் பதிய… “விஷாலினி” என அவளருகே வந்தமர்ந்து அவளின் கையை ஆதரவாய் பிடித்தான் விஷ்ணு.

இவர்கள் வரும் முன்பே, பேரருக்கு பணம் கொடுத்து அரை மணி நேரம் கழித்து ஆர்டர் செய்வதாக சொல்லியிருந்தார் ஜெகதீசன். தற்போது விஷாலினியின் சத்தத்தால் தனது சேவைக்கான டேபிளுக்கு வந்த பேரர், “ஆர்டர் ப்ளீஸ்” என்றார்.

விஷாலினியின் முகம் அதீத சோர்வில் இருக்க, இவனால் மதியம் உண்ணவில்லை போல என நினைத்தவன், சில உணவு வகைகளை ஆர்டர் செய்து, பேரர் சென்றபின்னே, விஷாலியிடமிருந்து தன் கையை பிரித்தவன் “அப்படி வாங்க, உங்ககிட்ட பேசனும்” என்றான் ஜெகதீசனிடம்.

தன் மீதான மகளின் எண்ணத்தில் தவித்திருந்த ஜெகதீசன், “என்னை மன்னிச்சுடும்மா” என்றார் வேறு பேச திராணியில்லாமல்.

“நான் மன்னிச்சிட்டா நீங்க செய்த தப்பெல்லாம் இல்லைனு ஆகிடுமா?”

ஜெகதீசன் முகம் தாழ்த்த, “உங்களால என் அம்மா பட்ட அவமானத்தை எப்போவும் என்னால மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. நாம செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவு உண்டு. நல்லதோ கெட்டதோ அதை ஏத்துக்கிற கட்ஸ் வேணும். எங்களுக்கு அது நிறையவே இருக்கு.

செய்த பாவத்தோட குற்றவுணர்வை தாங்க முடியாம என்கிட்ட இறக்கி வைக்க நினைக்கிறிங்க. உங்களை பார்க்குறதையே அவமானம்னு நினைச்சுத்தான் என் அம்மா உயிரை பணையம் வச்சு உங்களை தள்ளி வச்சாங்க.

என் அம்மாவோட அவமானம் நீங்க. உங்களை பார்க்குறதையே அவமானமா நினைக்கிறேன். திரும்ப திரும்ப அவமானத்தை எதிர்கொள்ற நிலைக்கு எங்களை ஆளாக்காதிங்க. எல்லா நேரமும் அவமானப்பட்டுட்டே இருக்கமாட்டோம்.

உங்கப்பா என்னை ரகசியமா சந்திக்க வரார், கண்டிச்சு வைங்கனு உங்க பிள்ளைகள்கிட்ட சொல்லவும், உங்க தங்கை மகன் என்னை படிக்க விடாம டார்ச்சர் பண்றானு ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ணவும் எனக்கு நொடி நேரம் ஆகாது…

ஆனா ஏன் செய்யாம இருக்கேன் தெரியுமா? உங்களை பழிவாங்க கூட எனக்கு பிடிக்கல. என் வாழ்க்கையில இழந்த எதுவும் எந்த வகையிலயும் எனக்கு திரும்ப வேண்டாம். இனி என் கண்முன்ன நீங்க வரக்கூடாது.  என்று எச்சரித்தாள் மிக்கடுமையாக.

ஆர்டர் செய்த உணவுகள் வந்திட, கிளம்பும் எண்ணத்தோடு விஷாலினி எழுந்தாள். “நீ உக்காரு, இதோ வந்திடறேன்” என்று ஜெகதீசனை வெளியே அழைத்துச் சென்றவன், “ஃபர்ஸ்ட் இயர் கூட முடிக்காத சின்ன பொண்ணுக்கு மாப்பிள்ளை அனுப்பி வச்சிருக்கியே… வெக்கமாயில்ல உனக்கு? நீ விஷாலினிக்கு அப்பனா? இல்ல மாமனா?” என்றான் அதீத கோபத்தோடு.

தனது தவறுணர்ந்த ஜெகதீசன் கண்ணீர் விட, “அப்பன் நொப்பன்னுகிட்டு இனியொரு முறை இந்த பக்கம் உன்னை பார்த்தேன்… அதுக்கப்புறம் உன் லீகல் பிள்ளைகளுக்கும் உன்னை இல்லாம ஆக்கிடுவேன்… ஜாக்கிரதை” என்றான்.

“என் பொண்ணை கஷ்டப்படுத்த நினைச்சி நான் வரல தம்பி. செய்த துரோகத்துக்கு ஒருமுறையாவது மன்னிப்பு கேட்கனும் நினைச்சேன். மன்னிச்சிட்டா எல்லாம் சரியாகிடுமானு என் பொண்ணு கேட்டதும் எனக்கு பேச்சு வரல. என்னால என் பொண்ணும் மேகலையும் பட்ட அவமானத்துக்கு எது செய்தாலும் ஈடாகாது. நான் வந்ததும்… மன்னிப்பு கேட்க நினைச்சதும் தப்புதான். இனி வரமாட்டேன்.

அன்னைக்கு என் தங்கை மகன் தப்பா பேசினதுக்கு அடிச்சிங்களாம். என் பொண்ணை சுத்தி உண்மையான அன்புள்ள ஆளுங்க ஆதரவா இருக்காங்கனு மனசு நிம்மதியாகிடுச்சு. இனி என் பொண்ணை தொல்லை பண்ணமாட்டேன். பார்த்துக்கோங்க” என்று கண்ணீரோடு இருகை கூப்பி வணங்கி கிளம்பினார் ஜெகதீசன்.

மிரட்டினா கோபப்படுவான், இல்ல பயப்படுவானு பார்த்தா இவன் என்னடா இப்படி பேசிட்டு போறான்? போதாததுக்கு தங்கை மகனை அடிச்சதுக்கு பாராட்டிட்டு வேற போறான்… என்று பெரு மூச்சிழுத்து விஷாலினியிடம் வந்தான் விஷ்ணு.

“என்ன சொன்னாரு? எதோ கெஞ்சின மாதிரி இருந்தது? என் அம்மாவை பார்க்க ட்ரை பண்ணுவாரா?” என்றாள் பதட்டமாக.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. இனி வரமாட்டேன், பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு போறார். நீ பயப்படற அளவுக்கு அந்தாள் ஒர்த் இல்ல” என தைரியமூட்டினான்.

“திரும்ப என்னை பார்க்க வருவாரா?” எனும்போதே, “இனி இந்தாள் டென்ஷனை விடு. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

சம்மதமாய் தலையசைத்து “சரி போலாமா?” என்றாள்.

“இதையெல்லாம் யார் சாப்பிடுவா?”

“இல்ல எனக்கு பசிக்கல, நீங்க சாப்பிடுங்க” என்று எழப்பார்க்க, “உக்காரு” என்றான் கட்டளையாக.

விஷாலினி அமரவும் “மதியம் சாப்பிட்டியா?” என்றான்.

“சாப்பிடல, ஆனா எனக்கு சாப்பிடற மூட் இல்ல”

“சாப்பிட மூட் வேணுமா? பசி வந்தா போதாதா?” என முறைத்து, “இங்க எல்லாமும் காஸ்ட்லி, ஆர்டர் பண்ணியாச்சு, வேஸ்ட் செய்யக்கூடாது” என்றான்.

உண்ணும் மனநிலை இல்லை என்றபோதும், சிறு வயதில் தோசையை மறுத்ததற்குத்தானே அத்தனை கோபப்பட்டாங்க? இன்னைக்கு இத்தனை முறை சொல்லி நாம சாப்பிடாமல் போனால் கோபப்படுவாங்களே… என்று கை கழுவ எழ, விஷ்ணுவும் கோபமாய் எழ, “இல்ல, கை கழுவிட்டு வரேன்” என்றாள்.

சரியென தலையசைத்து தானும் கை கழுவி வந்தமர்ந்தான்.

உணவில் கை வைக்கப்போனவளுக்கு சிறு பதட்டம் தொற்றிக்கொள்ள, “மாமாக்கு நீங்க என்னை பார்க்க வந்தது தெரியுமா?” என்றாள் பதட்டத்தோடு.

“ஏன் தெரிஞ்சா என்ன?”

“மாமாக்கு தெரிஞ்சா அம்மாகிட்ட சொல்லிடுவாங்களே, இந்தாள் என்னை பார்க்க வந்தது தெரிஞ்சா அம்மா டென்ஷன் ஆகிடுவாங்க” என்றாள் கவலையாக.

“நான் வந்தது யாருக்கும் தெரியாது. போதுமா? சாப்பிடு” என்றான்.

அன்னை மீதுள்ள பயத்தோடே ஒரு கவளம் வாயில் வைத்தவள் “ஸ்… ஆ…” என்று கன்னத்தில் கை வைத்தாள் வலியோடு.

“என்னாச்சு?”

“இல்ல, பிரியாணிக்குள்ள எலும்பு பல்லுல பட்டுடுச்சு. வலிக்குது. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான்வெஜ் சாப்பிடக்கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்றாள்.

மூன்று மாதம் முன்னே மேகலை கடைக்கு செல்ல கேட்டை திறக்க, “விஷாலினி நல்லா படிக்கிறாளா ஆன்ட்டி? அந்த பிரச்சனையை நினைச்சு படிப்பை விட்டுடப்போறா” என்று விஷ்ணு அக்கறையாய் விசாரித்தான்.

“படிக்கிறதெல்லாம் பிரச்சனையில்ல தம்பி, பல்லை கட்டுறதுக்குள்ள பயங்கர கலாட்டா பண்ணிட்டா. இதுக்கும் பல்லு எடுக்கத் தேவையில்ல, சந்து பல்லுன்றதால கம்பி போட்டா போதும், எட்டு பத்து மாசத்துல சரியாகிடும்னு டாக்டர் சொன்னாங்க.

இப்படி இருந்தா என்னவாம்னு ஒரே ஆர்பாட்டம். கெஞ்சி, உண்ணாவிரதம் இருந்து அவளை சம்மதிக்க வச்சேன்” என்று மேகலை சொன்னது நியாபகம் வந்தது.

விஷாலினி தட்டிலிருந்த கறித்துண்டுகளை எடுத்து தனதில் வைத்துக்கொண்டவன், “வெறும் சாப்பாடு சாப்பிடலாம். சாப்பிடு” என்றான் இயல்பாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!