Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே 15.1

அறைக்குள் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தவனை பின்தொடர்ந்தது அவளின் விழிகள், போர்த்தியிருந்த கம்பிளியை இன்னும் நன்றாக இறுக்கினாள்.

 

“பைவ் மிண்ட்ஸ்” என்று சைகை செய்தவன் வேகமாகக் குளித்துவிட்டு அவளுடைய உடை அவனுடைய உடை அனைத்தையும் ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு மிஷினில் போட்டுவிட்டு வந்தான், ஐந்து  நாட்களாக அவளை விட்டு எங்கும் செல்லவில்லை.

 



Advertisement

இன்று காலை முதல் இரண்டு முறை வாமிட் செய்துவிட்டாள் சாப்பிட்ட அனைத்தும் வெளியில் வந்துவிட்டது, அவனே துடைத்துச் சுத்தப்படுத்த  தேவா வேலை செய்றவங்களை கூப்பிடுங்க நீங்கச் செய்யாதீங்க என்றாள் அவன் கேட்கவில்லை.

 

அனைத்தையும் சுத்தப்படுத்தி துடைத்துவிட்டு அவளுக்கு “உடைமாற்றுகிறேன்” என்க “குளிக்கணும்” என்று பிடிவாதம் செய்தாள்.

Advertisement

 

Advertisement

“ரெண்டுநாளா கண்ணே தொறக்கல இன்னைக்குத்தான் பிவர் கொஞ்சம் கொறஞ்சிருக்கு இப்போ குளிக்க வேண்டாம், அதுவும் குன்னூர் குளிருக்கு… விளையாடுறியா” என்றான்.

 

அதையெல்லாம் கேட்கவில்லை அவள் “மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு குளிச்சா நான் கொஞ்சம் சுத்தமாயிடுவேன்” என்றவள் “எப்படி  ஆகும் உள்ள ஓடுற ரத்தம் அழுக்கு ரெண்டு பேரோட ரத்தமும்  அழுக்கு” என்றவள் விழிகள் மீண்டும் நிறைந்தது.

Advertisement

 

“மயூ…” என்றவன் அதட்டல் குரலில் முகத்தை மூடிக்கொண்டாள்.

 

“குளிக்கணும் அவ்ளோதானே” என்றவன் வெதுவெதுப்பான நீரை வைத்துவிட்டு அவளை அப்படியே தூக்கி கொண்டு போய்க் குளியலறையில் ஸ்டூலில் அமரவைத்து “அஞ்சே நிமிஷம் சட்டுனு வெளில வந்துடனும் இங்கேயே இருப்பேன்” என்று கதவைக் கொஞ்சமாக மட்டும் சாற்றிவிட்டு வெளியிலே நின்றான்.

 

உடலில் கொஞ்சம் கூடப் பலமே இல்லை கையைத் தூக்கினாலே வலிக்கிறது, அவள் முயற்சி செய்துகொண்டிருக்க சட்டென்று உள்ளே நுழைந்தான் சேனாபதி “இரு” என்றவன் அவனே கழட்டிவிட “என்ன பண்றீங்க நானே…” என்றவளை முறைத்து பார்த்தவன்.

 

“சும்மாயிருடி கையையே அசைக்க முடியல இதுல குளிக்கணுமாம்” என்றவன் உடையைக் கழட்டிவிட்டு “சீக்கிரம் வா” என்று மீண்டும் வெளியில் சென்றான்.

 

தண்ணீர் ஊற்றிக்கொண்டதுமே கொஞ்சம் நன்றாக இருந்தது மயூரிக்கு, பேருக்குக் குளித்துவிட்டு துண்டைக் கட்டிக்கொண்டவள்   எழுந்து மெல்ல கதவை நெருங்க அவனே கதவைத் திறந்துவிட்டான் “பச்… சொன்னா கேக்குறியா” என்றவன் மீண்டும் அவளைத் தூக்கி சென்று கட்டிலில் விட்டான்.

 

வீட்டில் இடும் உடையொன்றை அவளிடம் கொடுத்தவன் ரூமின் ஹீட்டரை கொஞ்சம் அதிகப்படுத்தி வைத்தான், சாத்துக்குடி ஜூஸை அவள் கையில் கொடுத்துக் குடிக்க சொல்ல “வேண்டாம்” என்றாள்.

 

அவன் நகராமல் அப்படியே நிற்க வாங்கிக்கொண்டாள், ஜுரம் அதிகமாக இருந்தது மூன்று நாட்களாக அதோடு உறக்கமே இல்லை அவளுக்கு மருத்துவர் கொடுத்த மருந்திற்கும் உறங்கவில்லை இப்பொழுது ஜூஸில் தூக்க மாத்திரை சேர்த்து கொடுத்திருந்தான் அதைக் குடித்து முடித்தவள் அவனை நோக்கிக் கைகளை விரிக்க அவளை நெருங்கி அமர்ந்தவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

 

“என்னை விட்டுட்டு போகமாட்டல தேவா”  என்றவளுக்கு மயக்கத்தில் மரியாதை எல்லாம்  மறந்துவிட்டிருந்தது.

 

“இதுக்கு நான் பதில் சொல்லனுமா”.

 

“வேண்டாம்… நீ போகமாட்ட ஆனாலும் நான் கேப்பேன் நமக்குக் கல்யாணம் நடக்குமா?… இந்த உண்மையும் தெரிஞ்சா பாட்டி என்னை வேண்டாம் சொல்லிடுவாங்க தானே” என்றவள் கண்ணீர் அவன் கைகளில் பட்டுத் தெறித்தது சூடாக.

 

“மயூ மறுபடியும் பிவர் வந்துடப்போது, யார் என்ன சொன்னா என்னடி நீயே சொன்னாலும் உன்னைவிட முடியாது புரிஞ்சுதா” என்றான் சீற்றத்தோடு.

 

“பாப்பா பொறக்கலைனா என்ன பண்ணுவ, அப்போ வேற கல்யாணம் செய்யச் சொல்லுவாங்கல்ல, நீ வேற யாரையும் கல்யாணம் செய்யக் கூடாது, உன்னை யாருக்கும் கொடுக்கமாட்டேன் நான்தான் பாப்பா என்னை நல்லா பாத்துக்கணும் சரியா”.

 

“ஹ்ம்ம் சரி”.

 

“பாப்பா பொறந்தாலும் என்னை நல்லா பாத்துக்கணும் அப்போவும் நாந்தான் பாப்பா சரியா”.

 

“சரி”.

 

“நான் என்ன சொன்னாலும் ஏன் சரி சரி சொல்ற”.

 

“வேற என்ன சொல்லணும்”.

 

“ஐ லவ் யு சொல்லு”.

 

“நான் சொல்லித்தான் உனக்கு அது தெரியணுமாடி”.

 

“வேண்டாம் போ… ஆனா நான் சொல்லுவேன் தேவா ஐ லவ் யு, இவ்ளோ புடிக்கும்” என்று கைகளை விரித்துக் காண்பித்தாள் “என்னையும் உங்களுக்கு இவ்ளோ பிடிக்குமா” என்றவளை தன் மடிக்கு மாற்றியவன் அவள் முகத்தைத் தன் மார்பில் புதைத்துக்கொண்டான்.

 

“தூங்குடா” என்க.

 

“தூக்கம் வரல… என்னைத் தூங்க வைங்க தேவா தூங்கணும் எனக்குத் தூங்கணும்” என்று ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தவள் விழிகளை மெல்ல மெல்ல உறக்கம் தழுகியது.

 

நல்ல உறக்கத்திலிருந்தவளை நன்றாகப் படுக்க வைத்தவன் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான் கேட்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திமுடித்து அழைத்துவிட்டான் சுந்தரை ஒஸ்கரின் காரியதரிசி.

 

“சொல்லுப்பா” என்றார் அவர் அந்தப்பக்கம்.

 

“சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ரொம்ப அர்ஜென்ட் பங்களா வீட்டுக்கு வரீங்களா” என்றான்.

 

ஓஸ்கர்  இல்லாத நேரம் அங்கு ஏன் அழைக்கிறான் என்று யோசனையில் நின்றவர் “தம்பி சார் இல்லையே அங்க” என்றார்.

 

“ஆமா அவர் இல்ல, எனக்குச் சில விஷயங்கள் தெரியவேண்டியது இருக்கு நீங்கக் கண்டிப்பா வரணும் நான் வெய்ட் பண்றேன்” என்றவன் அவரின் வருகைக்காகக் காத்திருந்தான்.

 

*****************************************************************************

 

நிர்மலின் வழக்கு முடிந்து விசாரணை நடந்துகொண்டிருந்தது இன்னும் இன்னும் அவனுக்கெதிரான தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்க மூன்று பேரையும் மொத்தமாக உள்ளே வைக்கும் அனைத்து பணிகளையும் தீவிரமாகச் செய்துகொண்டிருந்தது கிரைம் பிரென்ச், கிட்டத்தட்ட வழக்கு முடியும் தருவாயில் இருந்தது.

 

குன்னூரின் பழமையான சர்ச்சில் ஓவியங்கள் வரையும் பணியில் இருந்தாள் மயூரி, வீட்டிலே முடங்கிக் கிடந்த பூஜாவை தன்னுடன் வருமாறு அழைக்க அவளும் இணைந்துகொண்டாள்.

 

மயூரிக்கு சிறு சிறு உதவிகள் செய்வாள், அவள் வரைவதை ரசித்துப் பார்த்திருப்பாள் எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் சந்தேகங்கள் கேட்டு என்று அவளுடைய நாட்கள் நல்லவிதமாகவே சென்றது, கிட்டத்தட்ட ஒருமாதம் கடந்த நிலையில் சர்ச்சிற்கு வந்திருந்தான் சக்தி.

 

“மேம் செமயா இருக்கு” என்றான் அவள் வரைந்துகொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்து.

 

“எத்தனை தடவை சொல்றேன் உங்ககிட்ட அப்படி கூப்பிடாதீங்கன்னு, இனிமே நான் பேசவே மாட்டேன்” என்று முகத்தைத் திருப்பினாள் மயூரி.

 

“சாரி சாரி சட்டுனு வரமாட்டுது இனிமே அப்படி கூப்பிடமாட்டேன் தங்கச்சி” என்றான் மன்னிப்பை யாசிக்கும் விதமாகப் புன்னகையோடு.

 

“ஓகே ஓகே மன்னிச்சாச்சு” என்றவள் “என்ன இந்தப் பக்கம் புடிக்கறதுக்கு கேஸ் ஒன்னும் கிடைக்கலையா”  என்க.

 

“எல்லாம் என் நேரம்” என்றவன் “உங்க பிரெண்ட்க்கு ஒரு வேலை பத்தி சொல்லலாம்னு வந்தேன்” என்றவனை அப்பொழுதுதான் நிமிர்ந்து பார்த்தாள் பூஜா.

 

“எனக்கா!” என்றவளை பார்த்தவன் “உங்களுக்குத்தான் தெரிஞ்ச ஒரு ஆஃபீஸ்ல வேலை இருக்கு போய்ப் பாருங்க பிடிச்சிருந்தா போலாம் நம்பிக்கையான இடம், நாளைக்கு போய்ப் பாருங்க” என்று அவள் கையில் ஒரு விசிட்டிங் கார்டை வைத்தான்.

 

அவள் மயூரியை திரும்பிப் பார்க்க “என்ன? இந்த வேலையை முடிக்க எப்படியும் எங்களுக்கு ஒரு வர்ஷம் ஆகும் அதுவரைக்கும் இங்கேயே சும்மா உக்காந்திருக்க போறியா” என்றாள் மயூரி.

 

மயூரியுடன் இன்னும் நான்கு பேர் அங்கே பணியில் இருந்தனர் அவர்கள் ஒரு குழுவாகப் பணியாற்றினர்இல்லஎன்று புன்னகைத்த பூஜா அவனிடமிருந்து அந்தக் கார்டை வாங்கிக்கொண்டாள்.

  

அலைபேசியில் பேசிக்கொண்டே அந்தப் பெரிய வாயிலைக் கடந்து உள்ளே வந்துகொண்டிருந்தான் சேனாபதி, இரண்டு பக்கமும் சூரியக்கதிர்கள் விழுந்து திளங்கிக்கொண்டிருக்க நடுவில் அவனின் நிழல் கம்பீரமாக முன்னேறி வந்துகொண்டிருந்தது.

 

அதைமட்டுமே பார்த்து அப்படியே அந்தப் பிரேம் லேடரில் (சட்ட ஏணி) அமர்ந்திருந்தாள் மயூரி,  உள்ளே வந்துகொண்டிருந்தவன் விழிகளும் அவளில் மட்டுமே, ஏணியின் அருகில் வந்தவன் அவளை நோக்கிக் கைநீட்ட அவன் கையைப் பற்றிக்கொண்டு கீழிறங்கி அவனை முட்டிக்கொண்டு நின்றாள்.

 

“வா” என்று அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டவன் “பூஜா ஒரு டென் மிண்ட்ஸ்” என்க “சரி மாமா” என்றாள் அவள்.

 

சக்தியிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கண் காண்பித்தவன் மயூரியை அழைத்துச் சென்றான், வெளியே சர்ச்சின் முன்புறம் இருந்த சிறிய பூங்காவில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

 

அவளுடைய கரத்தை அழுத்திப் பிடித்திருந்தவன் “ஊருக்குப் போறேன் இன்னைக்கு, அங்க நமக்காக என்ன காத்திட்டிருக்கு எனக்குத் தெரியல, அது எதுவா இருந்தாலும் நான் இருக்கேன் உனக்கு அந்த நம்பிக்கையை நீ எப்போவும்  இழக்கக் கூடாது சரியா” என்க.

 

“ஹ்ம்ம்” என்றாள்.

 

 “இப்போதைக்கு சார் கிட்ட ஒன் மன்த் லீவ் தான் கேட்டிருக்கேன், அங்க போனாதான் தெரியும் எவ்ளோ நாள் ஆகும் என்னனு, இருபது வர்ஷம் முன்னாடி நடந்தது சில ஆளுங்க இல்லாம கூடப் போயிருக்கலாம், ஒன்னொன்னா கண்டுபிடிக்கணும் பாக்கலாம்…”.

 

“அப்புறம் டைம் கிடைக்கும்போது போன் பண்ணுவேன் சில நேரம் போன் பேசமுடியாம போலாம் அதுக்கெல்லாம் டென்ஷன்  ஆகக் கூடாது அழக் கூடாது சரியா,  ரிலாக்ஸா உன் வேலையைச் செய் உன் கிராண்ட் பா உன்னை எங்கேயும் கூட்டிட்டு போகமாட்டார்” என்றவன் அவளுடைய பாஸ்போர்ட்டை எடுத்துக் காண்பித்தான்.

 

விழிகளை மொத்தமாக விரித்தவள் “எப்படி! கிராண்ட் பா இதை அவரோட ரூம்ல ஒளிச்சு வெச்சிருந்தார்” என்க.

 

“போலீஸ்காரண்டி ஒளிச்சு வெக்குற எல்லாத்தயும் தேடி கண்டுப்பிடிக்குறது தான் என் வேலையே”  என்றவன் “நீ ஒளிச்சு வெச்சுருக்க அழகை எல்லாம் கண்டுபிடிக்குறேன் சீக்கிரம்” என்றான் அவள் செவியில் மீசை  முடிகள் உரச, அவன் தோளில் முகத்தை மறைத்துக்கொண்டாள் மயூரி.

 

சக்தியிடம் இவர்களின் பொறுப்பை ஒப்படைத்தவன் அன்று இரவே குருவினையப்பள்ளி நோக்கிப் பயணமானான், புதியதாகத் தொழில் தொடங்குவதை பற்றிய பயிற்சிக்காகச் செல்வதாக வீட்டில் சொல்லியிருந்தான்.

 

முன்பே அறை புக் செய்திருக்க முதலில் அங்குச் சென்று குளித்துத் தயாராகி நேரே அந்த ஆயுர்வேத சாலைக்குச் சென்றான், அவனுடைய எட்டு வயதில் பார்த்ததைப் போல அல்ல நிறைய மாற்றங்கள் இருந்தது, அன்று அதிகம் குடில்களே… இன்று நிறைய கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது.

 

கொஞ்சம் பழமையையும் நிலைநிறுத்தியிருந்தனர் ரிசப்ஷனில் மருத்துவரைக் காண வேண்டும் என்று சொல்லிக் காத்திருந்தான், அவனுடைய தாய்க்கு சிகிச்சை அளித்த அந்த மருத்துவர் இல்லை அவருக்கு அப்பொழுதே வயது அறுபதை தொட்டிருந்தது, அவருடைய மகனே இப்பொழுது அங்குத் தலைமை மருத்துவர்.

 

“வாங்க உக்காருங்க என்ன பிரச்சனை” என்றவரை பார்த்தவன் “நான் ட்ரீட்மெண்ட்க்கு வரல சார், ஐ நீட் சம் இன்பர்மேஷன் இருபது வர்ஷம் முன்னாடி இங்க ஒருத்தவங்க ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டாங்க ஆங்கிலோ இந்தியன், அவங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது” என்க.

 

அவர் அவனைச் சந்தேகமாகப் பார்த்தார் “நீங்க யாரு? எதுக்காக அவங்களை பத்தி கேக்குறீங்க அதும் இத்தனை வருஷத்துக்கு அப்புறம்” என்க.

 

மிராண்டா மற்றும் மயூரியை பற்றி மேலோட்டமாகச் சில விஷயங்களைச் சொன்னவன் “அவங்கள பத்தி தெரியணும்” என்றான்.

 

சில நொடிகள் யோசனையிலே இருந்தவர் “அப்பாக்கு ரொம்ப வயசாயிடுச்சு நிறைய விஷயங்கள் ஞாபகம் இல்ல அவர்கிட்ட கேட்டா எதுவும் யூஸ் இருக்கா தெரியல, அந்த டைம் இங்க வேலை பாத்தவங்க யாரும் இப்போ இங்கயில்ல ஒரு ரெண்டு பேர் மட்டும்தான் இருக்காங்க அவங்ககிட்ட வேணா கேட்டுப்பாருங்க”.

 

“ரிசப்ஷன் ரைட் சைட்ல உள்ள போனா தியான மண்டபம் இருக்கும் அங்க வெய்ட் பண்ணுங்க நான் அவங்களை அனுப்புறேன், அப்புறம் ரெஜிஸ்டர்ல அவங்கள பத்தி இருக்கானு தேடி வெக்க சொல்லறேன் டூ டேய்ஸ் அப்பறம் கால் பண்ணுங்க”  என்றவரிடம் கைக்குலுக்கியவன் “தேங்க்யூ சோ மச் டாக்டர்” என்க.

 

“இட்ஸ் ஓகே சார் என்னால முடிஞ்ச சின்ன உதவி அவ்ளோதான், நீங்கத் தேடிவந்த விஷயம் நல்லடியா முடியட்டும்” என்றார் அவர்.

 

மீண்டும் அவருக்கு நன்றி உரைத்துத் தியான மண்டபத்தில் காத்திருந்தவனை தேடி வந்தனர் மத்திய வயதில் இருந்த பெண்கள் இருவர், மிராண்டாவின் புகைப்படத்தைக் காட்டி அவர்களிடம் கேட்டான், அவளை ஞாபகம் இருந்தது அவர்களுக்கு இருவருமே யாரோ ஒரு பெண்மணி  கொண்டுவந்து சேர்த்ததாக மட்டுமே சொன்னார்கள்.

 

“வேற எதுவும் தெரியாதுங்க இடையில ஒருதடவை மட்டும் வந்து பாத்துட்டு போனாங்க, ஆனா அப்புறம் வரல கொழந்தை பொறந்தப்போ அவங்களுக்கு சேதி அனுப்பினாங்க அப்போவும் அவங்க வரல அதுக்கு அப்புறம்தான் அந்தப் பொண்ணோட அப்பா அம்மா வந்து அதை அழைச்சுட்டு போனாங்க” என்றார்கள்.

 

புதியதாக ஒன்றும் தெரியவில்லை, இனி கொண்டுவந்து சேர்த்தவரை பற்றிய விவரம் தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு எதுவம் செய்ய முடியும், இருதினங்கள் அருகில் இருக்கும் இடங்களில் சுற்றி திரிந்தான் தனியாகப் பங்களா தங்கும் இடம் அப்படி ஏதேனும் இருக்கிறதா என்று பல இடங்களிலும் மிராண்டாவின் புகைப்படத்தைக் காட்டி தெரியுமா என்று கேட்டுப்பார்த்தான் ஒன்றும் உபயோகமாகக் கிட்டவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!