Skip to content
Post Views: 6,500

மருதாயி பாட்டி எல்லாருக்கும் சொல்லட்டும் நாம போய் என்ன நடந்ததுனு பாத்துட்டு வரலாம் வாங்க
கிரிஜா தன் பெற்றோரை எதிர்த்து அந்த ஊரை சேர்ந்த ஒருவனை காதலித்து திருமணம் செய்தார்… அவரை பொறுத்த வரை அவன் நல்லவன் தான்… ஆனால் அவன் கேடுகெட்டவன்…. குடிகாரன்… அவன் குடிப்பது தெரிந்து தான் அவனை கிரிஜா கல்யாணம் செய்து கொண்டார்…
Advertisement
பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை… பிறைசூடன் தான் பார்த்து கொள்வார்…. பிறைசூடன் கிரிஜாவை விட ஏழு வருடம் பெரியவர்….
ஆறு வருடம் முன்பே பிறைசூடனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகி இருந்தது…
கல்யாணம் ஆகி அடுத்து வருடம் மேகவாணன் பிறந்து இருந்தான்… அடுத்த இரண்டு வருடங்களில் மேகவர்ணனும் பிறந்து இருந்தான்…
கிரிஜாவுக்கு கல்யாண ஏற்பாடு ஆரம்பிக்கும் போதே வீட்டில யாரிடமும் சொல்லாமல் கோவிலில் கல்யாணம் செய்து இருந்தார் கிரிஜா..
Advertisement
ஒரு மாதம் தன்னுடைய கணவனுடன் சந்தோசமாக வாழ்ந்த கிரிஜாவிற்கு அவரின் கணவனின் இறப்பு செய்தி இடியாய் விழுந்தது… குடித்துவிட்டு தள்ளாடிய படியே அங்கிருந்த கிணற்றில் விழுந்து இறந்து இருந்தார்…
Advertisement
அவரின் கணவனிற்கு பெற்றோர் யாருமில்லை… தனியாய் இருந்த கிரிஜாவை பிறைசூடனும் பார்வதியும் தான் பார்த்து கொண்டனர்… கிரிஜாவின் அம்மாவிற்கு தன் மகளின் வாழ்க்கை ஆரம்பித்தவுடன் முடிந்து விட்டதே என்று கவலை அவரை கொன்று தின்றது….
மருதாயி பாட்டி ஊருக்கு சென்று இருந்ததுனால் கிரிஜாவின் கணவனின் இறப்பு அவருக்கு தெரியவில்லை… அதனால் அவர் இறந்து பத்து நாள் கழித்து தான் இவர்களை பார்க்க ஊருக்கு வந்து இருந்தார்…
அவர் வந்த போது தான் கிரிஜாவின் வாழ்க்கையை பற்றி இவரிடம் அழுது புலம்பிக்கொண்டு இருந்தார்…. மருதாயி பாட்டி தான் பாலா பற்றி இவரிடம் கூறினார்..
Advertisement
“கிரிஜாவுக்கு ரெண்டாவது கல்யாணம் செஞ்சு வைக்கலாம் அத்தாச்சி… எங்க ஊருல கூட ஒரு பையனுக்கு ரெண்டாம் தாரமா பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க… அவனோட பொண்டாட்டி மஞ்ச காமாலை வந்து இறந்து போயிட்டா…
ரெண்டு பசங்க… ஒரு பொண்ணு ஒரு பையன்… பொண்ணுக்கு நாலு வயசு… பையனுக்கு இப்ப மூணு வயசு… பொண்ணு தேடிட்டு இருக்காங்க..
எனக்கு ரொம்ப தெரிஞ்ச இடம் தான்… அதுனால நம்பிக்கையா தரலாம்” என்று கூறினார்….
“ரெண்டாம் தாரம் தரது பிரச்சனை இல்ல அத்தாச்சி… ஆனா ரெண்டு புள்ளைங்க இருக்குனு சொல்றிங்க அதுதான் உறுத்தலா இருக்கு…. இவ கல்யாணம் செஞ்சி போனாலும் இவ அவங்களுக்கு சேவை செஞ்சிட்டு இருக்கனுமா…
இவளுக்கு குழந்தை வர ஒத்துப்பாங்களா…” என்று கேட்டார் கிரிஜாவின் தாய்…
“என்ன அத்தாச்சி நீங்களே இப்படி பேசுறீங்க… யாரு ஏற்கனவே கல்யாணம் ஆகி வாழ்ந்த பொண்ணுகளை கல்யாணம் பண்ணிக்குறாங்க…. நான் வர அப்பயே அந்த பையனோட அம்மாகிட்ட பேசிட்டு தான் வந்தேன்… அவங்க எதுவும் நினைக்கல…
வர பொண்ணு என் பையனை நல்லா பார்த்துக்கிட்டா போதும்… பசங்களை நான் பார்த்துப்பேன் அப்டினு சொன்னாங்க” என்று கூறினார்…
“சொத்துலாம் இருக்கா அவங்களுக்கு” என்று கேட்டார் கிரிஜாவின் தாய்..
“அதுலாம் ஏகப்பட்டது இருக்கு.. அந்த பையனோட மூத்த தாரத்துக்கு அம்புட்டு சொத்து இருக்கு… இவங்களுக்கு அவங்களுக்கு குறைவு இல்லாம இருக்கு…. அந்த பொண்ணு சிந்தியாவோட சொத்து அவங்க புள்ளைங்கக்ளுக்கு தான்..
இப்போ அந்த பொண்ணோட வீட்டுல தான் இருக்காங்க… நீங்க அண்ணன் கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க அத்தாச்சி… மேற்கொண்டு அவங்க கிட்ட பேசலாம்” என்று கூறி அவர் விடைபெற்று கொண்டு சென்றுவிட்டார் மருதாயி பாட்டி
கிரிஜாவின் தாயும் அவரின் கணவனிடம் கேட்டார்… அவரோ “அவங்களா அவங்கள நல்லா தெரியும்.. நல்ல குடும்பம் தான்… போய் உன் பொண்ணுகிட்ட கேட்டு சொல்லு… அவளுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்” என்று கூறி சென்றுவிட்டார்..
கிரிஜாவின் தாயும் அவரிடம் கேட்டார்… முதலில் ஒத்துக்கொள்ளவில்லை… அவரின் அம்மாவும் எதை எதையோ பேசி மிரட்டி அடித்து கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி இருந்தார் பத்து நாட்களில்..
மருதாயி பாட்டி மூலம் பாலாவின் பெற்றோர் பட்டம்மாள் ராமசாமியிடம் பேசி அடுத்த பத்து நாட்களில் கல்யாணம் என பேசி வைத்து இருந்தனர்…
நந்தினி அர்ஜுனனிடம் கிரிஜாவை காட்டி உங்கள் அம்மா என்று அறிமுகம் படுத்தினர்.. அவர்களோ இவங்க என் அம்மா இல்ல என்று கூர் அழுதுகொண்டே சென்று விடுவர்…
சிறு பிள்ளைகள் தான் போக போக புரிந்து கொள்வர் என விட்டுவிட்டனர்… அவர்களை ராஜம்மா தான் பார்த்துக்கொள்வார்… ராஜம்மாவின் கணவன் அதே வீட்டில் தான் வேலை செய்கிறார்.. இவர்களுக்கு குழந்தை இல்லை… ராஜம்மாவின் கணவனின் பெற்றோரோ வேறு யாரையோ கல்யாணம் செய்து கொள் என்று கூறுவர்..
அவரோ “என் பொண்டாட்டி தான் எனக்கு முக்கியம் குறை எனக்கு தான் இருக்கு… அது தெரிஞ்சும் அவ என்கூட இருக்கா.. ஆனா நீங்க என்ன அவளை இவளோ பேசுறீங்க… உங்களுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னை பெத்துக்காக உங்களுக்கு செலவுக்கு காசு தரேன்” என்று கூறிவிட்டார்…
குழந்தைகள் இல்லாத ராஜம்மாவும் அவரின் கணவன் கருப்பையாவும் இருவரையும் கண்ணின் மணி போல் பார்த்து கொள்வர்…
பாலா இரண்டும்கெட்டான் நிலையில் இருந்தார்… கல்யாணம் செய்து கொள்ளவோமா வேண்டாமா என…
பட்டம்மாள் பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் தான் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டார்..
பத்துநாட்களில் கல்யாணம் கோவிலில் நெருங்கிய உறவுகளின் மத்தியில் நடைபெற்றது…
கல்யாணம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டனர்…. இரவு அவர்களுக்கான சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. குழந்தைகள் இருவரும் எப்போதும் இரவு பாலாவுடன் தான் உறங்குவர்…
இப்போது பட்டம்மாள் பாட்டியுடன் உறங்க செல்ல மறுத்து தன் தந்தையின் கால்களை பிடித்துக்கொண்டு நின்று அழுது கொண்டு இருந்தனர்….
இதை பார்த்து கிரிஜாவின் அம்மா முகம் சிறிது சிறிதாக மாறியது… அதை பார்த்து பட்டம்மாள் பாட்டி பிள்ளைகளை ராஜம்மா உதவியுடன் தன் அறையில் வைத்து பூட்டிவிட்டு ராஜம்மாவை அறையில் இருக்கமாறு கூறி மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்…
தங்கள் தந்தை தங்களுடன் படுக்கவில்லையே என குழந்தைகள் இருவரும் அழுதுகொண்டே தூங்கிவிட்டனர்…
கிரிஜாவின் குடும்பமும் இரவு அவரை அறையினுள் அனுப்பிவிட்டு வீடுக்கு சென்று விட்டனர்…. நடுஇரவில் எங்கயோ சென்ற பாலா வரும்பொழுது நன்றாக குடித்துவிட்டு வந்தார்…
அடுத்த நாள் காலை தான் இருந்த நிலையை பார்த்து கிரிஜா அழுதுகொண்டு இருந்தார்… அவரின் அழுகை சத்தத்தில் எழுந்த பாலா தான் இருந்த நிலையையும் கிரிஜாவின் அழுகையும் பார்த்து குடித்துவிட்டு கிரிஜாவிடம் அத்துமீறி விட்டதாக எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டார்…
கிரிஜாவோ எந்த பதிலும் சொல்லாமல் குளியலறைக்கு சென்று கதவை மூடிவிட்டார்…. இங்கு பாலா அப்டியே சாய்ந்து அமர்ந்துவிட்டார்…
உள்ளே கிரிஜாவோ கதவில் சாய்ந்து அப்டியே நின்றுவிட்டார்… இரவு நடந்தது பற்றி நினைத்து பார்த்தார்… உள்ளே வந்த பாலா அவரை எதுவும் சீண்டாமல் உறங்கிவிட்டார்… ஆனால் கிரிஜாவிற்கு வேறு ஒன்று மனதை அறுத்தது…
கிரிஜாவிற்கு மாதவிடாய் எப்போதும் மாதா மாதம் சரியாக வந்துவிடும்… ஆனால் இந்த மாதம் இன்னும் ஆகவில்லை என நேற்று தான் யோசித்தார்… பத்து நாட்களில் தள்ளி போய் இருந்தது…
அதனால் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று தோன்றியது… அப்படி இருந்தால் யாருக்கும் தெரியக்கூடாது… இந்த குடும்பத்து வாரிசுனு சொல்லிடலாம்… என்று நினைத்தார்.. ஆனால் பாலாவை எப்படி நெருங்க வேண்டும் என்று தெரியவில்லை…
அதற்கு ஏற்றது போல் பாலா குடித்துவிட்டு வந்ததால் பயன்படுத்திக் கொண்டார்… குளித்துவிட்டு வெளியே வந்த கிரிஜா நல்லவராய் காட்டிக்கொள்ள பாலாவிடம் “யாருகிட்டயும் சொல்லாதீங்க.. உங்களுக்கு தான் கெட்ட பேரு” என்று கூறி சென்றுவிட்டார்…
யாருக்கும் சந்தேகம் வராததை போல் நடந்துகொண்டார்.. பாலாவும் தான் செய்த காரியத்தால் குற்றவுணர்வில் தவித்தார்.. அதனால் குழந்தைகளை கூட கொஞ்சவில்லை… அதனால் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இவரிடம் இருந்து விலகினர்…
கிரிஜாவை ஆடிக்கு அழைக்கவந்த கிரிஜாவின் தாய் இதை பார்த்து சந்தோஷமடைந்தார்… இப்படியே நடந்தால் குழந்தைகளின் பொறுப்பை பட்டம்மாள் பாட்டியிடமும் அவர் கணவரிடமும் தந்துவிடலாம் என்று கணக்கு போட்டார்…
ஆடிக்கு அழைத்து சென்ற ஒரு வாரத்தில் கிரிஜாவின் தாய் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டுகொண்டார்… அவர் கிரிஜாவிடம் “கிரிஜா மாசமா இருக்கியா???” என்று கொஞ்சம் பயத்துடனே கேட்டார்…
“ஆமா ம்மா” என்று கூறினார் கிரிஜா
“மாப்பிளைக்கு தெரியுமா???… உனக்கு எப்ப தெரியும்???… அங்க எல்லாருக்கும் தெரியுமா???” என்று கேட்டார்
“எனக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு நாள்ல தெரியும் ம்மா… அவருக்கு தெரியும்… வீட்டுல யாருக்கும் தெரியாது… என் குழந்தைகளை நீ பார்த்துக்க போற.. அந்த மாதிரி உன் குழந்தையும் நான் பார்த்துக்கறேன்னு சொன்னாரு ம்மா…” என்று தன் தாயிடம் பொய்யை கூறினார்…
“அதுமட்டுமில்லாம அவரே வீட்டுல சொல்றேன்னு சொல்லிட்டாரு ம்மா.. நீ எதுவும் கேட்காத… அவரே சொல்லுவாரு ம்மா” என்று கூறி உறங்க சென்றுவிட்டார் கிரிஜா…
ஆடி மாத கடைசியில் கிரிஜாவை வீட்டிற்கு அழைக்க வந்த பாலாவிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்…
“அம்மா கொஞ்சம் கோவ பட்டாங்கங்க… நீங்க குடிக்குறது பத்தி அத்தை கிட்ட சொல்றேன்னு சொன்னாங்க… நீங்க ஒரு வார்த்தை சொல்லிடுங்க.. அம்மா கிட்ட சொல்லாதீங்க அப்டினு” என்று கூறினார்..
அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே கிரிஜாவின் தாய் அங்கு வந்தார்.. அவருடன் மருதாயி பாட்டியும் வந்தார்… இருவரையும் பார்த்து “அம்மா கிட்ட சொல்லாதீங்க நானே சொல்லிடறேன்” என்று கூறிவிட்டு வெளியே தோட்டத்திற்கு சென்றுவிட்டார்…
இருவரும் கவனமாக இரு அப்படி என்று கூறி பாலாவுடன் அனுப்பிவைத்தனர்… அடுத்து வந்த நாட்கள் நன்றாக தான் சென்றது.. குடும்ப வாரிசை சுமக்கும் கிரிஜாவை நன்றாகவே பார்த்து கொண்டார் பட்டம்மாள் பாட்டி…
பத்தாவது மாதத்தில் சசிகுமார் பிறந்தான்… கிரிஜா அவரின் தாய் மருதாயி பாட்டிக்கு மட்டும் தெரியும் இது பத்தாவது மாதம் என மற்றவர்கள் எல்லாருக்கும் இது ஒன்பதாம் மாதம்… மருத்துவமனைக்கு செல்ல வில்லை…
மருதாயி பாட்டியே பிரசவத்தை பார்த்தார்.. நந்தினியும் அர்ஜுனனும் தங்கள் தந்தையுடனும் கிரிஜாவுடன் தாமரை இலை போன்ற உறவில் தான் இருந்தனர்…
கிரிஜா இவர்கள் மேல் பாசமாக தான் இருந்தார்.. அவரின் தாயும் எதுவும் சொல்லவில்லை… வேறு ஒருவரின் குழந்தையை தன் குழந்தையாய் ஏற்றுக்கொண்ட பாலாவின் குழந்தைகளை அவரும் ஏற்று கொண்டார்…
அடுத்த ஒரு வருடத்தில் கர்ணனும் பிறந்துவிட்டான்… நான்கு குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் பாவித்தார் கிரிஜா.. சசிகுமார் கிரிஜாவின் ஜாடை.. அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் சசிகுமார் பாலாவின் வாரிசாகவே வளர்ந்தான்…
சசிகுமார் நல்லவனாக தான் இருந்தான்… எப்போது அவனுக்கும் ரேவதிக்கும் காதல் ஏற்பட்டதோ அப்போது இருந்து தான் மாறினான்… கல்யாணத்திற்கு பிறகு கிரிஜாவுக்கு மாறிவிட்டார்… பாலாவும் அவரின் பேச்சை கேட்கும் அடிமையாகவே மாறிவிட்டார்..
நடந்த விஷயத்தில் மருதாயி பாட்டி இவர்களிடம் கிரிஜா அவரின் தாயிடம் கூறியது பாலாவிற்கு தெரியும் என்பது… இவர்கள் நன்றி கூற செல்லும் போது அம்மாவிற்கு தெரியவேண்டும் என்று கூறியதை மட்டும் அனைவரிடமும் கூறினார்..
தான் இத்தனை வருடம் ஏமாற்ற பட்டதை நினைத்து தான் பாலா கிரிஜாவை யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் அறைந்து தன் பெல்ட்டால் இரண்டு மூன்று முறை அவரை அடித்து இருந்தார்…
பட்டம்மாள் பாட்டி பாலாவை அறைந்து “உனக்கு எல்லாமே தெரிஞ்சி இருக்கு.. இப்ப எதுக்குடா அவளை அடிக்குற…” என்று கோவமாகவே கேட்டார்…
“ம்மா இவ இத்தனை வருஷம் என்னை ஏமாத்தி இருக்கா ம்மா.. என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா ம்மா..” என்று கூறி நடந்ததை எல்லாம் அனைவரிடமும் கூறினார்..
அனைவருக்கும் ச்ச்சீ என்று ஆகிவிட்டது… கிரிஜாவை நினைத்து… ரேவதி பாலாவின் சொத்தும் தனக்கு வராதா என்று அதிர்ச்சியாகி நின்று இருந்தாள்….
error: Content is protected !!