நீ எனக்கு தந்த காதல் – 38.
தமிழை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நிலா.
காலையில் எழுந்து தமிழ், நிலா இருவரும் கிளம்பினர்.
Advertisement
இனி,
தமிழ் கிளம்பி விட்டு, ‘நிலா கிளம்பியாச்சா’, என கேட்க,
Advertisement
Advertisement
‘இதோ ஒரு நிமிஷங்க வந்துட்டேன்’, என நிலா தேவதை போல் அழகாய் கிளம்பி வர அவளை பார்த்த தமிழ் ஒரு நிமிஷம் கண் எடுக்காமல் அவளது அழகை ரசித்து விட்டு,
‘ஏய் நிலா என்னடி என் கண்ணுக்கு நீ இவ்ளோ அழகா தெரியுற. இது தான் அழகுல மயங்கறதோ. டே தமிழ் உசாரா இரு டா. இதுக்கு எல்லாம் அசரக் கூடாது.’, என தனக்குள் பேசிய படி தமிழ் நிற்க,
Advertisement
‘தமிழ் தமிழ் போலாமா’, என நிலா அவனை அசைத்து கேட்க,
‘ம் போலாமே’, என தமிழ் சொல்ல இருவரும் கீழே இறங்கி வர அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
‘சரி நாங்க கிளம்பறோம்’, என சொல்லி தமிழ் கிளம்ப,
‘ஆன்டி, அங்கிள் நாங்க ஈவ்னிங் அப்டியே பாரதிக்கு பொண்ணு வீடு பாக்க போய்ட்டு வந்தறோம்’, என நிலா சொல்ல,
‘ம் சரி பாத்து போய்ட்டு வாங்க ‘, என தமிழ் அம்மா, அப்பா இருவரும் தமிழையும், நிலாவையும் வழி அனுப்பி வைக்க இருவரும் காரில் ஆபிஸ்க்கு சென்றனர்.
ஆபிஸில் எப்போதும் போல் நந்தினியும் நிலாவும் பேசி கொண்டே வேலை பார்த்தனர்.
‘ஏய் நிலா என்ன இன்னைக்கு சூப்பரா கிளம்பி வந்திருக்க. ஏதாவது விசேஷமா.’, என நந்தினி கேட்க,
‘ஆமா நந்தினி இன்னிக்கு ஈவ்னிங் என் தம்பிக்கு பொண்ணு பார்க்க போறோம்’, என நிலா சொல்ல,
‘அப்டியா ஆனா நான் என்னவோ உன்ன தான் பொண்ணு பார்க்க வராங்களோன்னு நினச்சேன்’, என நந்தினி கிண்டல் பண்ண,
‘நீயுமா நந்தினி நடத்து’, என நிலா சொல்ல,
‘ஆமா உன்ன இப்டி பாத்துட்டு தமிழ் என்ன சொன்னாரு’, என நந்தினி ஆர்வமாக கேட்க,
‘நீ வேற கடுப்ப கிளப்பாத. அவரு கிட்ட இருந்து ஒரு ரியாக்ஷனும் இல்ல ‘, என நிலா சொல்ல,
‘நிஜமாவா சொல்ற. இந்த அழகு சிலைய பாத்து கூடவா தமிழ் மயங்கல’, என நந்தினி கேட்க,
‘போதும் என்ன கிண்டல் பண்ணது’, என நிலா சொல்ல,
‘சரி ஈவ்னிங் யாரு யாரு போறீங்க ‘, என நந்தினி கேட்க,
‘நான், எங்க அம்மா, என் தம்பி, தமிழ்’, என நிலா சொல்ல,
‘என்ன தமிழ் சாருமா எப்டி’, என நந்தினி ஆச்சர்யமாக கேட்க,
‘அதே தான் எனக்கும் புரியல. எங்க அம்மா என் கிட்ட கேட்டப்ப அவரு பிசி வர மாட்டாருன்னு சொல்லிட்டேன். நீ தமிழ் கிட்ட போனை கூட நான் பேசிக்கறேன்னு சொன்னாங்க. சரி அவரும் அப்டி எதாவது சொல்லி வர மாட்டாருன்னு நினச்சு போனை குடுத்தா அவரு கேசுவலா அப்டியா நிலாம்மா போலாம். நாளைக்கு நானும் நிலாவும் வந்தறோம்ன்னு சொல்லிட்டு வச்சிட்டாரு.’, என நிலா சொல்ல,
‘சரி நீ எதுவும் அவரு கிட்ட கேக்கலயா’, என நந்தினி கேட்க,
‘கேட்டனே என்னய உங்கள விட்டு போக சொல்றீங்க. ஆனா எங்க அம்மா கிட்ட நல்லா பேசறீங்க. ஒரு வேல நான் உங்கள விட்டு போனதுக்கு பின்னாடி எப்டி உங்க வீட்லயும், எங்க வீட்லயும் இருக்கவங்கள சமாளிப்பீங்கன்னு’, என நிலா சொல்ல,
‘அதுக்கு தமிழ் என்ன பதில் சொன்னாரு’, என நந்தினி ஆர்வமாக கேட்க,
‘ம் எதுவும் பதில் சொல்லாம படுத்து தூங்கிட்டாரு’, என நிலா சொல்ல,
‘என்னது எதுவும் பதில் சொல்லலையா.’, என நந்தினி கேட்க,
‘நந்தினி அவரு ஏதோ ஒரு ரீசனுக்காக தான் இந்த முடிவு எடுத்திருக்காரு. மத்தபடி வேறு எதுவும் யோசிக்கல. அதான் அவரால சுட்ச்வேசன சமாளிக்க முடியல. அப்டி என்ன தான் ரீசனா இருக்கும். அத முதல கண்டுபிடிக்கனும். அத கண்டுபிடிச்சிட்டா போதும் ப்ராப்ளத்த ஈசியா சால்வ் பண்ணிடலாம்’, என நிலா சொல்ல,
‘அப்டின்னா எப்டியாவது அத சீக்கிரமா கண்டுபிடி.’, என நந்தினி சொல்ல இருவரும் பேசிக் கொண்டே வேலை பார்த்தனர்.
அதே நேரத்தில் தமிழுக்கு யாழினி போன் செய்ய அதை அட்டணட் பண்ணி,
‘சொல்லு யாழினி எப்டி இருக்க ‘, என தமிழ் கேட்க,
‘ம் நான் நல்லா தான் இருக்கேன் . நீ என்ன இன்னும் அந்த முடிவுல இருந்து மாறலையா’, என யாழினி கேட்க,
‘எப்பவும் கவின் தான் என்னைய போன் பண்ணி திட்டுவான். இன்னைக்கு நீயா. நீ கேக்கறத பாத்தா கவின் இங்க நடக்கறத எல்லாம் ஒன்னு விடாம உங்கிட்ட சொல்லி இருக்கான் போல’, என தமிழ் கேட்க,
‘ஆமா அதுக்கு என்ன இப்ப. சார் என்னவோ ஆஸ்ட்ரேலியா போக போறீங்களாமே’, என யாழினி கேட்க,
‘ஆமா இங்க இருந்து அவள பாத்து கிட்டே கஷ்டபட சொல்றயா. என்னால முடியாது. அதான் இந்த முடிவுக்கு வந்தேன்’, என தமிழ் சொல்ல,
‘டேய் நீ சொன்னதும் நிலா சரின்னு சொல்லி இருக்கான்னா அவ உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்குறா அத விட அதை செய்யறேன்னு ஒத்து கிட்டப்போ அவ மனசு எப்டி கஷ்டப் பட்டு இருக்கும்’, என யாழினி சொல்ல,
‘ஏய் ஒரு நிமிஷம் இப்ப கவின்க்கு என்னை மாதிரி ஒரு பிரச்சனைன்னு வை அவன் உங்கிட்ட இந்த மாதிரி அவன விட்டு உன்ன போக சொன்னா நீ என்ன பண்ணுவ. ஒரு பேச்சுக்கு தான் கேக்கறேன் சொல்லு’, என தமிழ் கேட்க,
‘ம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். அவன் கூட தான் இருப்பேன்னு அடம் பிடிப்பேன். எதுக்கு இந்த மாதிரி சொன்னைன்னு அவன கேட்டு உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பேன் ‘, என யாழினி சொல்ல,
‘ஆனா என் நிலா நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவளுக்கு அதுல விருப்பமே இல்லைன்னா கூட சரின்னு ஒத்துக்கிட்டா. அதே மாதிரி எனக்கு சரியா போச்சு இனிமே இப்டி என்னை பேசன்ட் மாதிரி ட்ரீட் பண்ணாதன்னு அவ மனசு கஷ்ட படற மாதிரி நான் சொன்னா கூட சரின்னு சொல்லிட்டு அதுல இருந்து அவ கூட இருக்கவங்க மூலமா எனக்கே தெரியாத மாதிரி என்னைய இன்னும் கவனிச்சிட்டு தான் இருக்குறா. நானே அவள விட்டு விலகி விலகி போக ட்ரைப் பண்ணா கூட அவ என்ன கேர் பண்றத விட மாட்டேங்குறா. அவ்ளோ ஏன் இதுக்கு என்ன ரீசன்னு அவ எத்தன தடவ கேட்டும் நான் பதில் சொல்லலைன்னா கூட பரவால்ல எங்கூட எப்பவும் போல பேசுனா மட்டும் போதும்னு சொல்றா. இப்ப சொல்லு என் நிலாவுக்காக நான் யோசிக்கறது தப்பா. அவ என் கூட இருந்தா எப்பவும் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல்ன்னு வாழ்க்க பூரா அலைஞ்சு கிட்டே தான் இருக்கனும். எனக்கு எப்ப என்ன ஆகுமோன்னு தினம் தினம் பயந்து பயந்து வாழ வேண்டி இருக்கும். அதே என்னைய விட்டு அவ போய்ட்டா சந்தோஷமா இல்லைன்னா கூட நிம்மதியாவாவது இருப்பா. ‘, என தமிழ் ஃபீல் பண்ணி சொல்ல,
‘தமிழ் நீ சொல்றது எனக்கு நல்லா புரியுது. ஆனா நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படறத தான் எங்களால தாங்க முடியல’, என யாழினி சொல்ல,
‘நான் வாங்கிட்டு வந்த வரம் அப்டி. அவனவனுக்கு நல்ல பொண்டாட்டி அமையலைன்னு கவல. ஆனா எனக்கு பாரு நல்ல பொண்டாட்டி கிடைச்சும் கூட அவ கூட வாழ குடுத்து வைக்கல. சரி என் கதைய விடு. நீ என் மருமகன நல்லா பாத்துக்கறயா இல்லையா’, என தமிழ் கேட்க இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தனர்.
தமிழ், நிலா இருவரும் வேலையை சீக்கரமே முடித்து விட்டு நிலா வீட்டுக்கு காரில் சென்றனர்.
பாரதியும், நிலா அம்மாவும் கிளம்பி காத்திருக்க இவர்கள் வந்ததும் அவர்களும் காரில் ஏற அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
தமிழ் காரை ஓட்ட பாரதி முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள நிலாவும் அவளது அம்மாவும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டனர்.
‘அப்புறம் பாரதி பொண்ணு உனக்கு பிடிச்சிருக்கா’, என தமிழ் கேட்க,
‘ம் ஓகே தான் மாமா. முத அந்த பொண்ணுக்கு என்னைய பிடிக்கனும். ஏன்னா இந்த காலத்து பொண்ணுங்க நிறையா எதிர் பாக்குறாங்க ‘, என பாரதி சொல்ல,
‘உனக்கு என்ன பாரதி குறைச்சல். பாக்க நல்லா இருக்க. நல்ல படியா பிஸ்னஸ் பண்ற. உன்ன போய் எந்த பொண்ணு வேனாம்னு சொல்ல போகுது’, என தமிழ் கேட்க,
‘மாமா பாத்தீங்களா நீங்களே என்னை கிண்டல் பண்றீங்க. ‘, என பாரதி சொல்ல,
‘டேய் கிண்டல் பண்ணல டா நிஜமா தான் சொல்றேன். ஆனா உனக்கு வர போற பொண்ணு ரொம்ப குடுத்து வச்சவ. உன் குணத்துக்கு எப்டி பட்ட பொண்ணு வந்தாலும் சமாளிச்சிருவ. அப்புறம் நிலாம்மா பத்தி சொல்லவே தேவை இல்ல அவங்க வர போற மருமகள நிலா மாதிரி பாத்துக்கு வாங்க’, என தமிழ் சொல்ல,
‘நீங்க சொன்னது என்னவோ உண்மை தான் மாமா. எனக்கு கல்யாணத்து மேல நம்பிக்கை வந்ததே உங்களையும், நிலாவையும் பாத்து தான். நீங்க ரெண்டு பேரும் எப்டி எந்த கஷ்டம் வந்தாலும் பிரியாம ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா இருக்கீங்களோ அதே மாதிரி வாழனும்னு ஆசை எனக்கு’, என பாரதி சொல்ல அதை கேட்டதும் தமிழுக்கு புறையேற அது வரை தன் அம்மாவுடன் பேசிக் கொண்டே இவர்கள் பேசுவதை கேட்ட நிலா, பாரதி இதை சொன்னதும் தமிழை பார்க்க,
‘தமிழ் தம்பி இந்தாங்க தண்ணி குடிங்க ‘, என நிலா அம்மா தண்ணீர் பாட்டிலை தமிழிடம் குடுக்க தமிழ் நிலாவை பார்த்த படி அதை வாங்கி குடித்தான்.
‘தமிழ் பூவும், ஸ்வீட்டும் வாங்கனும். வழில கடை வந்தா நிறுத்துங்க ‘, என நிலா பேச்சை மாற்றினாள்.
தமிழும் அதே போல் கடைகளில் வண்டியை நிறுத்த நிலாவும், பாரதியும் போய் ஸ்வீட்டும், பூவும் வாங்கி விட்டு வந்தனர்.
அனைவரும் பேசிக் கொண்டே அந்த வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.
பாரதியின் நம்பிக்கையை பொய் ஆக்குவார்களா தமிழும், நிலாவும்?
தொடரும்…
