Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 42.

தமிழை விட்டு நிலா பிரிய எடுக்கும் முடிவு.

 

தமிழ், நிலா இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

 



Advertisement

இனி,

 

இருவரும் பிரஷப் ஆகி விட்டு, ‘நிலா நான் போய் கதவை சாத்திட்டு வந்தறேன்’ என சொல்லி விட்டு தமிழ் சென்று கதவை சாத்தி விட்டு எல்லா லைட்டையும் ஆஃப் செய்து விட்டு மேலே வந்தான்.

Advertisement

 

Advertisement

நிலா தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலே வந்தாள்.

 

எதுவும் பேசாமல் இருவரும் சிறிது நேரம் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

Advertisement

 

‘ஏன் நிலா என் மேல கோபமா தான இருக்க ‘, என தமிழ் கேட்க,

 

‘அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல தமிழ். உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும். காரணம் இல்லாம நீங்க எந்த முடிவும் எடுக்க மாட்டீங்கன்னு. அதே மாதிரி அடுத்தவங்க மனசு கஷ்டபடற மாதிரி நீங்க நடந்துக்க மாட்டீங்க. நீங்க என் மேல உயிரே வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். அப்டி இருந்தும் உங்கள விட்டு என்னை பிரிஞ்சு போக சொல்றீங்க. அத என்னால செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் செய்ய சொல்றீங்க. அதுக்கான ரீசன் தான் எனக்கு தெரியல. உங்கள விட்டு போறேன்ற வருத்தம் தான் எனக்கு. ஆனா அத விட நீங்க எவ்ளோ வருத்தப் படுவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். எத சொன்னா நான் அதுக்கு ஒத்துக்குவேன்னு நீங்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க.’, என நிலா சொல்ல,

 

‘அப்டி இல்ல நிலா.’, என தமிழ் சொல்ல,

 

‘சரி விடுங்க. இன்னிக்கு தான் நாம சேர்ந்து இருக்கற கடைசி நைட். எதுக்கு சோகமாக, அழுது கிட்டு இருக்கனும். நம்ம லைஃப்ல நடந்த சந்தோஷமான மொமன்ட்ஸ ரீவைண்ட் பண்ணி பாத்து கிட்டு இருக்கலாமே’, என நிலா சொல்ல,

 

‘சரி ஆனா எனக்கு தான் எதுவும் ஞாபகத்துல இல்லயே. நீங்க சொன்ன கதையா தான எனக்கு அது தெரியும். ‘, என தமிழ் சொல்ல,

 

‘உங்களுக்கு ஞாபகம் இல்லைன்னா என்ன எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. முதல் நாள் இன்டர்வ்யூக்கு வந்து உங்கள பாத்தப்ப தெரியல உங்கள தான் நான் பின்னாடி லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு. நந்தினி கிட்ட நீங்க எப்டின்னு கேட்டு தெரிஞ்சுக்கும் போது தெரியல உங்கள நல்லா புரிஞ்சுக்க தான்னு. நீங்க கேட்டதும் உங்க கேர்ள் பிரெண்டா நடிக்க ஒத்துக் கிட்டப்ப தெரியல நிஜமாவே அது தான் நடக்கும்னு. உங்க அம்மா அப்பா கிட்ட மருமகளா பழகும் போது தெரியல அவங்க தான் எனக்கு உண்மையான ஆன்டி அங்கிளா வருவாங்கன்னு. எனக்காக நீங்க எல்லாம் செய்யும் போது தெரியல என் மேல நீங்க இவ்ளோ அன்பு வச்சிருக்கீங்கன்னு, உங்களுக்கு நான் ப்ரபோஸ் பண்ணும் போது தெரியல நம்ம காதல் இவ்ளோ ஸ்ட்ராங்கா ஆகும்னு, உங்கள கல்யாணம் பண்ணப்ப தெரியல நான் எவ்ளோ லக்கி ன்னு, உங்க கூட சேர்ந்து இருந்த அந்த ஒரு வாரம் தெரியல அது தான் புருஷன், பொண்டாட்டியா நாம இருந்த கடைசி நாட்கள்னு, உங்களுக்கு ஆக்சிடண்ட் ஆகி நீங்க என் சம்பந்தமான எல்லாத்தையும் மறந்தப்ப தெரியல எது வரைக்கும் காத்திருக்கனும்னு, திரும்ப என் கூட பழக ஆரம்பிச்சப்ப தெரியல இவ்ளோ சீக்கிரம் உங்கள விட்டு பிரிவேன்னு. ‘, என நிலா ஃபீல் பண்ணி பேசுவதை கேட்டதும் தமிழுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருக்க,

 

‘தமிழ் உங்கள கடைசியா கட்டி பிடிச்சு முத்தம் குடுத்துக்கவா. ‘, என நிலா அழுது கொண்டே கேட்க,

 

‘நிலா இதுக்கு எல்லாம் உடைஞ்சு போற ஆள் இல்லயே நீ . என்னாச்சு உனக்கு நான் உன்  வாழ்க்கைல இருந்தாலும் இல்லாட்டினாலும் நீ எப்பவும் போல ஸ்ட்ராங்கா தான் இருக்கனும். எனக்கு அந்த நிலாவ தான் புடிக்கும்’, என தமிழ் சமாதானப்படுத்த வேகமாக வந்து தமிழை கட்டி பிடித்து முகம் முழுக்க முத்தம் வைத்து விட்டு லைட்டை ஆஃப் பண்ணி விட்டு படுத்து கொண்டாள் நிலா.

 

தமிழும் வேறு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான்.

 

காலையில் அலாரம வைத்து சீக்கிரம் எழுந்து சமைக்க சென்றாள் நிலா. சமைத்துக் கொண்டே தமிழை விட்டு பிரிவதை பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.

 

தமிழ் எப்போதும் போல் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கிளம்பி கீழே வந்தான்.

 

‘நிலா ஆபிஸ்க்கு லேட்டாச்சு நீ கிளம்பலையா’, என கேட்டுக் கொண்டே தமிழ் சமையலறைக்கு வந்தான்.

 

அங்கு கை முழுக்க ரத்தத்தில் மயங்கி கிடந்த நிலாவை பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றான் தமிழ். பிறகு சுதாரித்துக் கொண்டு வேகமாக சென்று ஒரு பெரிய துணியை எடுத்து வந்து தண்ணீரில் நனைத்து அவள் கையில் வெட்டப் பட்டு இருந்த இடத்தை தேடி அதை இறுக்கி கட்டி விட்டு அவளை தூக்கிக் கொண்டு போய் காரில் உட்கார வைத்து விட்டு வேகமாக காரை ஹாஸ்பிடலுக்கு ஓட்டினான்.

 

ஹாஸ்பிடல்லில் எமர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

 

தமிழ் வெளியே பதட்டம் கலந்த பயத்துடன் உட்கார்ந்து இருந்தான்.

 

கவினுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி தமிழ் அழ கவின் அங்கு வந்து சேர்ந்தான்.

 

‘தமிழ் அழாத நிலாக்கு ஒன்னும் ஆகாது. ‘, என கவின் சொல்ல,

 

‘டேய் அவள நான் என்னை விட்டு பிரிஞ்சு தான போக சொன்னேன். அவ ஏன்டா என்னை விட்டு மொத்தமா போறதுக்கு முடிவு பண்ணா. அவள பக்கத்துல இல்லன்னாலும் தூரமாவாவது பாத்து என் காலத்த ஓட்டிக்கலாம்னு நினைச்சிட்டு  இருந்தனே டா. இப்டி கண்ணுலயே படாத அளவுக்கு தூரமா போயிடலாம்னு நினச்சிட்டாளே டா. என் மேல அவ பாசம் வச்சிருக்கேன்னு சொன்னது எல்லாம் பொய்யாடா . அவ இல்லைன்னா என்னால தாங்கிக்க முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன்டா இப்டி பண்ணா’, என சத்தமாக தமிழ் அழ கவின் அவனை சமாதான படுத்த முடியாமல் அவனை கட்டி பிடித்துக் கொண்டு அவனும் அழுதான்.

 

சிறிது நேரம் கழித்து எமர்ஜென்சி ரூமில் இருந்து டாக்டர் வெளியே வர கவின் எழுந்து சென்று, ‘டாக்டர் நிலா இப்ப எப்டி இருக்கா’, என கேட்க,

 

‘ஒன்னும் பிரச்சனை. இல்ல. டேன்ஜர் சோன தாண்டிட்டாங்க.  கரெக்டா மணிக்கட்டுல வெட்டி இருக்கனால நிறைய ப்ளட் லாஸ் ஆயிருக்கு . அதனால அவங்க பன்னிரெண்டு மணி நேரம் அப்சர்வேசன்ல இருக்கனும். அதுக்கப்புறம் நீங்க டிஸ்ஜார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்’, என டாக்டர் சொல்ல,

 

‘ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். இப்ப அவங்கள பாக்கலாமா’, என கவின் கேட்க,

 

‘ஓ தாராளமா பாக்கலாம். ஆனா பேசன்ட டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க ‘, என டாக்டர் சொல்லி விட்டு செல்ல,

 

‘தமிழ் நிலாக்கு ஒன்னும் இல்லையாம். நல்லா இருக்காளாம். வா போய் பாக்கலாம்’, என கவின் அழுது கொண்டிருந்த தமிழிடம் சொல்ல,

 

‘நீ என்ன சமாதானப் படுத்த  இப்டி சொல்ற. அது எப்டி நான் தான் பாத்தனே அவ்ளோ  ரத்தம் இருந்துச்சே’, என தமிழ் கேட்க,

 

‘அது எல்லாம் ஒன்னுமில்ல. ஆனா ஒன்னு தெரியுது நிலா ரொம்ப அன் லக்கி இல்லைன்னா இவ்ளோ ட்ரைப் பண்ணியும் சாகாம திரும்ப உன் கிட்ட மாட்டிக்குவாளா.’, என கவின் சொல்ல,

 

‘நிலாவ மிஸ் பண்ணி இருந்தா நான் தான்டா அன் லக்கி’, என தமிழ் சொல்ல

 

‘சரி வா நிலாவ போய் பாக்கலாம்.’, என கவின் சொல்லி தமிழை கூட்டி கொண்டு நிலா ரூமுக்கு போனான்.

 

நிலாவை பெட்டில் படுக்க வைத்திருப்பதை பார்த்த தமிழ் அவள் அருகில் சென்று உட்கார்ந்து அவள் கையை பிடித்துக் கொண்டு அழுதான்.

 

‘தமிழ் அழாத டா. அதான் அவளுக்கு ஒன்னும் ஆகலைல்ல’, என கவின் கேட்க,

 

‘அவளுக்கு எதாவது ஆயிருந்தா நானும் அவ கூடவே சேர்ந்து செத்து போயிருவேன் டா’, என தமிழ் சொல்ல,

 

‘சரி அவள டிஸ்டர்ப் பண்ணாம பாக்கனும்னு டாக்டர் சொல்லிருக்காரு. நீ அமைதியா இங்க இருக்கியா இல்ல வெளியே போறியா’, என கவின் கேட்க,

 

‘இல்ல நான் வெளிய வந்தா நிலா என்னைய விட்டுட்டு போயிடுவா.’, என தமிழ் சொல்ல,

 

‘அப்டினா அமைதியா அவ பக்கத்துலயே இரு’, என சொல்லி விட்டு கவின் வெளியே சென்று ஹாஸ்பிடல் பார்மலிட்டிஸை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

கவின் யாழினிக்கு போன் பண்ணி நடந்ததை சொல்ல அவள் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்தாள்.

 

‘யாழினி காலைல இருந்து உட்கார்ந்த இடத்த விட்டு நகராம அவ பக்கத்துலயே உட்கார்ந்து இருக்கான். என்னால அவன சமாதானம் பண்ண முடியல. அதான் வேற வழி இல்லாம உன்ன கூப்டேன்’, என கவின் சொல்லி நிலா ரூமுக்கு கூட்டி சென்றான்.

 

‘தமிழ் நிலாக்கு ஒன்னும் ஆகாது. நீ இருக்கறப்ப அவளுக்கு எதுவும நடக்க விட்ருவியா’, என யாழினி கேட்க,

 

‘வா யாழினி நீயாவது அவ கிட்ட கேளு ஏன் இப்டி பண்ணான்னு. அவ இல்லாம நான் கஷ்ட படுவேன்னு தெரிஞ்சும் இப்டி பண்ணிருக்கா. நான் பாக்காம விட்ருந்தா என்னைய தவிக்க விட்டுட்டு போயிருப்பா யாழினி’, என சொல்லி தமிழ் அழ,

 

யாழினி அவனை தோளில் சாய்த்து கொண்டு சமாதான படுத்தினாள்.

 

‘யாழினி நான் செஞ்சது தப்புன்னு அவ எனக்கு இப்டி தான் புரிய வைக்கனுமா’, என தமிழ் கேட்க,

 

‘அப்டி இல்ல டா. முத நீ அழறத நிறுத்து’, என யாழினி சொல்ல,

 

‘நான் அவ நல்லதுக்கு தான யோசிச்சேன் அவ அத புரிஞ்சுக்காம ஏன் இப்டி பண்ணா’, என தமிழ் அழுத படி பேசிக் கொண்டே இருக்க,

 

நர்ஸ் வந்து, ‘ சார் ப்ளீஸ் பேசண்ட டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க ‘, என சொல்ல,

 

‘தமிழ் வா கொஞ்ச நேரம் வெளிய ரிலாக்ஸ் ஆகிட்டு வரலாம்’, என யாழினி கூப்பிட,

 

‘இல்ல நான் எங்கயும் வரல ‘, என தமிழ் சொல்ல வேறு வழி இல்லாமல் யாழினியும் விட்டு விட்டாள்.

 

கவின் சென்று டீ வாங்கி வர, ‘தமிழ் காலைல இருந்து எதுவும் சாப்டல இந்தா இந்த டீ ஆவது குடி’, என கவின் குடுக்க,

 

‘எனக்கு எதுவும் வேணாம். என் நிலா எழுந்து எனக்கு குடுக்காம நான் எதுவும் சாப்பிட மாட்டேன்’, என தமிழ் சொல்ல,

 

‘டேய் நீ ஏன் இப்டி பண்ற’, என கவின் கேட்க யாழினி கவினிடம், ‘கவின் அவன விடு. நிலா எந்தரிச்சதும் அவன் சரி ஆயிடுவான்’, என சொன்னாள்.

 

தமிழை நிலா எப்படி சமாதானம் செய்ய போகிறாள்?

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!