Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கள்ளி காட்டு காதலியே!

கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 12

கள்ளி காட்டு காதலியே!

அத்தியாயம் 12

      பொது கூட்டம் முடியும் போது தான் விக்ரம் வந்து கலந்து கொண்டான். அவன் வந்ததையும், எந்த பக்கம் இருந்து வருகிறான் என்பதையும் கவனித்தில் கொண்டார் நீதிபதி. அதை அந்த நண்பர் கூட்டம் தான் அறியவில்லை.

     “என்னடா ரெண்டு பேர் சட்டையும் கிழிஞ்சு இருக்கு…” விக்ரம் கேட்க.



Advertisement

   “ பொது கூட்டம்ன்னா கலவரம் வரும், கலவரம் வந்தா சண்டை வரும், சண்டை வந்தா சட்டை கிழிய தான் செய்யும் மச்சான்…” கேலி குரலில் அருண் சொல்ல,

    “எது சண்டையா? யார் மச்சான், நம்ம மேல கை வைக்கிறது? யாரு அம்புட்டு தைரியசாலி…” காட்டமாக விக்ரம் கேட்க.

  “ டேய் நீ வேற, அவன் சொல்றத நம்பாதா… சும்மா நானும், இவனும் தான் அடிச்சுகிட்டோம்…” என்று சாதரணமாக மதன் சொன்னான்.

Advertisement

     “நீங்களா, ஏண்டா? வேற வேலை இல்லை. எப்ப பாரு சின்ன பிள்ளைக மாதிரி தான்…” என்று சத்தம் போட்டான் விக்ரம்.

Advertisement

  மதன் கண்ணை காட்ட, அருண் வாயை மூடி கொண்டான். சற்று விக்ரம் நகர்ந்தது மதன் சொல்லி விட்டான்.

   “மச்சான், அவன் கிட்ட எதுவும் சொல்லாத. அப்புறம் அவன் விசயம் ஒன்னும் நம்ம காதுக்கு வராது. நம்ம பிரெண்ட்ஸ்க்கு பிரச்சனை வேணாம்ன்னு தள்ளி நிக்க தான் பார்ப்பான். அப்படி எல்லாம் அவனை விட முடியாது. வேணாம்னு சொன்னேன், அவன் உறுதியா நிக்குறான். நல்ல நட்பா நாம உறுதுணையா நிப்போம்…” என்று சொல்ல,

  அருண் புரிந்து கொண்டான். விக்ரமால், தங்களுக்கு சிரமம் என்றால், அவன் ஒதுங்கி கொள்வான். அவனை தனியாக விட முடியாது. என்ன நடந்தாலும் அவனுக்கு துணைக்கு தான் நிக்கணும் என்று நொடியில் முடிவெடுத்து கொண்டார்கள்.

Advertisement

     விக்ரம் தன் வண்டியை எடுக்க, பின் பக்கம் மதன், அருண் அமர்ந்து கொண்டார்கள்.

 “என்ன மாப்பிள்ளை எல்லாம் சரியாதான போகுது…” நாசுக்காக மதன் கேட்க.

       “ம்ம், ரொம்ப உறுதியா நிக்கிறோம்…” என்று விக்ரம் சொல்ல, பின் அமர்ந்து இருந்த இருவர் முகத்திலும் விரிந்த சிரிப்பு.

     இவர்கள் தான் வேண்டாம் என்றது… ஆனால். விக்ரம் மனம், அதில் இருந்த அவன் காதல், தவிப்பு, ஆசை புரிந்து பின் அவன் ஒருவனுக்காகவாது எல்லாம் நல்ல படியாக போக வேண்டும் என்று நினைத்தார்கள்.

       பிரபாக்கு இதுவரை இருந்த குழப்பமும், பயமும் போய், மனம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. ரொம்ப உற்சாகமாக இருந்தாள்.

       மறுநாள் ஊருக்கு கிளம்பும் போது சந்தோசமாக தான் கிளம்பினாள். எப்போதும் வீடு விட்டு விடுதிக்கு செல்லும் போது ஒரு ஏக்கம், வலி இருக்கும் … இன்று அதெல்லாம் ஒன்னுமில்லை. எப்படியும் விக்ரம் வருவான் என்று உற்சாகமா தான் கிளம்பினாள்.

      அவள் நினைத்தது சரி தான். அவர்கள் ஊர் சுற்று வட்டாரம் எங்கும் விக்ரம், அவளை பார்க்க வர வில்லை. விருதுநகர் மாவட்டம் உட் சாலை பிரிவில் தான் விக்ரம் ஏறி கொண்டான்.

   முன்பே அவளை கணித்து இருந்தான்..அவள் பஸ் வரும் ரூட் அவன் அறிந்தது தான். மதிய நேரம், கூட்டம் அதிகமில்லை. இருவர் அமரும் இருக்கையில் பிரபா மட்டும் அமர்ந்து இருந்தாள். அவள் நினைவோ விக்ரம் எங்கே என்பதில் தான் இருந்தது.

       அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றது, அதில் விக்ரம் ஏறியது என்று எதுவும் கவனத்தில் இல்லை. தன் தோல் உரச ஒரு உருவம் அமர்ந்த பின் தான் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தாள்.

   அன்றைய நாளுக்கு பின் இன்று தான் பார்த்து கொள்கிறார்கள். பிரபா, அவன் முகம் பார்த்து, கண் பார்த்து மலர்ந்து சிரித்தாள். முகம் மேலும் மெருகேரி இருந்தது.

     முன்பென்றால் நிமிர்ந்து முகம் பார்க்க மாட்டாள். தயங்கி தான் தலை குனிவாள். இன்று அவள் தோல் உரசி அமர்ந்த போதும், கூச்ச பட்டு நெளிந்து சுருங்க வில்லை. இயல்பாக அவனை ஏற்றாள். மனதால் அவனை ஏற்ற பின் யாரோ என்று தயங்கி நிற்க இடம் தரவில்லை.

           விருதுநகர் வந்த உடன் விக்ரம், அவள் பொருட்களை எடுத்து கொண்டான். அவனோடு தான் இறங்கினாள், எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒரு பேக்கரிக்கு அழைத்து சென்று டீ, டிபன் வாங்கி கொடுத்தான். அவளை சங்கடபடுத்தாமல் சாதாரண, இயல்பான பேச்சு வளர்த்து அவளையும் பேச வைத்தான்.

     “டிரெய்னிங் முடிஞ்சதா பிரபா?…”

   “இல்லைங்க, இன்னும் ஒரு மாசம் இருக்கு…”

   “கமிசன் எப்போ? மத்த டி.எல்.எம் வாங்கனும்ன்னா நீ அலைய வேணாம். என் கிட்ட என்ன வேணும்ன்னு சொல்லு, நான் பார்த்துக்கிறேன்…” என்று விக்ரம் சொன்னதும்,

   அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் பிரபா. அவன் படித்தது என்ஜினீயரிங், இவளின் டீச்சிங் சம்மந்தமாக எல்லாம் தெரிந்து இருந்தது.

   “என்ன பாக்குற, சந்திரா டீச்சிங் தான் முடிச்சு இருக்கு. அதுக்கு எல்லாம் நான் தான் பார்த்தேன். அது இங்கிலீஷ், நீ மேக்ஸ் அவ்வளவு தான்…” என்றதும்,

   சிரித்து கொண்டவள், “இப்போ தேவையில்லை. கமிசன் அப்போ சொல்றேன்…” என்று முடித்து கொண்டாள்.

      விக்ரம் இன்று பூ வாங்கி அவள் பையில் எல்லாம் வைக்க வில்லை. அவள் கையிலே குடுக்க, முகம் சிவக்க ஆசையாக வாங்கி கொண்டாள். அவன் முன்னவே பூ வைத்து, சரியாக இருக்கிறதா என்று அவனிடம் காட்டிய பின், முன் பக்கம் வழிய விட்டாள்.

   விருதுநகர் பஸ் ஸ்டாண்டு முழுக்க அலசினார்கள். பயிற்சி வகுப்புகள் இருப்பதால், கடைசி வருடம் என்பதாலும் அடுத்தடுத்த வாரம் சிரமம் என்று பிரபா சொன்னதும், அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுத்தான்.

  “ பிரபா… இனி, நீ என்கிட்ட உரிமையா கேட்க பழகு. தயங்கி, சங்கடபட்டு எல்லாம் நிக்க கூடாது. உன் மனசுல என்ன நினைக்கிறையோ அதை ஒளிவு, மறைவு இல்லாம பேசி பழகு. என்னையும் கேள்வி கேளு… நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு வாழ்க்கைன்ற பின்ன பேசவா, வேணாமான்னு தயக்கம் இருக்க கூடாது…” விக்ரம் தெளிவாக விளக்கிய பின் கொஞ்சம் தெளிந்தாள்.

      விக்ரம் எப்பவும் போல எதோ ஒன்றை பேசி கொண்டே தான் வந்தான். ஆட்டோவிலும் அவளை நெருங்கி அமர, பிரபா ஒன்றுமே சொல்ல வில்லை. அட… பிரபாவா இது? , விக்ரம்க்கு தான் ஆச்சர்யமாக இருந்தது. பிரபா, மனதார முழுமையாக தான் விக்ரமை ஏற்று கொண்டாள். அவன் என்ன தான் எடுத்து கூறினாலும், அவளும் தன்னுள் அலசி ஆராய்ந்து, அவனை விட்டு கொடுக்க தன்னால் முடியாது என்பதை அவளே ஒப்பு கொண்டாள்.

   அவளின் பைகளோடு இறங்கியவன், கேட்டுக்கு வெளியவே நின்று பொருட்களை அவளிடம் கொடுக்க,

   “உள்ள வாங்க…” என்று அழைத்தாள் பிரபா.

  “உள்ளவா? அப்படி வரலாமா…” என்று விக்ரம் கேட்க.

  “வரலாம், விசிட்டர்ஸ் பிளேஸ் இருக்கு, எங்க ஹாஸ்டலுக்கு வெளிய… அங்க உட்காரலாம், வாங்க…” என்று அழைத்து செல்ல,

   “அன்னைக்கு என்னை உள்ள விடல நீ…” என்று கேட்க.

    “அன்னைக்கு நீங்க யாரோ, நான் எப்படி, என்னன்னு சொல்லி உள்ள விட…” என்று பிரபா சொல்ல,

    “சரிதான். இன்னைக்கு மட்டும் நான் யாராம்?…” என்று இடக்காக விக்ரம் கேட்க.

  பிரபா பதில் சொல்ல வில்லை. முகத்தை வேற பக்கம் திருப்பி கொண்டாள்.

   “பதில் சொல்லு பிரபா?…” என்று உள்ளே வந்தவன், அங்கிருக்கும் விசிட்டர்ஸ் அமரும் கல் மேடையில் அமர்ந்து கொள்ள,

   ஒரு பெருமூச்சு விட்டவள், “அன்னைக்கு உங்க கூட எம் பேரு அடி படுறத நான் விரும்பல, அன்னைக்கு நீங்க எனக்கு செஞ்சதை நான் உதவியா தான் நினைச்சேன். இங்கிருந்து எங்க ரூம் பக்கம் தான், எட்டி பார்த்தாலே தெரியும். எல்லோருக்கும் உங்களை நான் என்னன்னு சொல்லுவேன். ஆனா, இன்னைக்கு…” என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

    “உங்களோடு சேர்ந்து என்னை பார்க்கட்டும். யார் கேட்டாலும் நான் சொல்லிப்பேன், என்னை கட்டிக்க போறவங்கன்னு… பின்னாடி என்னன்னு எனக்கு பயமில்லை. ஏன்னா, எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு…” என்று தெளிவாக பிரபா பேச,

    அவளை பார்த்து புன் முறுவல் சிந்தியவன், “அந்த நம்பிக்கையை அப்படியே கெட்டியா பிடிச்சுக்கோ, நானும் விட்டுட மாட்டேன். என்னைக்கும் நீ தான் ஜெய விக்ரமன் பொண்டாட்டி…” என்று உறுதியாக சொன்னான்.

    பிரபா உள்ளே சென்று ஒரு பாட்டலில் தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கி குடித்தவன்,

   “நான் கெளம்பவா?…” என்று விக்ரம் கேட்க.

   “ம்ம்… போயிட்டு வாங்க. அப்புறம் அந்த பக்கம் நம்ம ஊர் போக பஸ் கிடைக்காது…” என்று விடை கொடுக்க.

   “பார்த்து ஜாக்கிரதையா இரு பிரபா. இங்க தான் போன் இருக்கே, அப்பப்ப எனக்கு போன் பண்ணு, நானும் திருச்சி போயிடுவேன். நீ ஊருக்கு வாரதா இருந்தா, நான் வருவேன்…” என்று விக்ரம் கிளம்ப,

    அவனுக்கு தலையாட்டி விடை கொடுத்தவள், அவன் வாங்கி குடுத்த பொருட்களோடு தன் அறைக்கு வந்தால்.

 “அடி பூங்கூயிலே பூங்குயிலே கேளு

நீ பாடெடுத்த காரணத்தை கூறு!…

யாரிடத்தில் உன் மனசு போச்சு!…” என்று ஜெனி தொடங்க,

  “வேறு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பார்க்குது… வனம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது…” என்று அடுத்து சித்ரா பாட,

 “பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு?… பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு…”

         என்று அடுத்து மோனா எடுக்க,

    “விக்ரமன்… ஜெய விக்ரமன்…” என்று வெட்கத்தோடு சொல்லி முடித்தது பிரபா தான்.

     அப்போதே கணித்து விட்டாள். அவள் விக்ரமுடன் உள்ளே வரும் போதே, மாடி படியில் நின்று இவர்களை தான் இந்த வானர கூட்டம் பார்த்து நின்றது. நிச்சயம் ஒரு கச்சேரி இருக்கும் என்று நினைக்க, அப்படியே தான் நடந்தது.

   “இவ்வளவு நாளா பித்து பிடிச்ச மாதிரி இருந்தா, இன்னைக்கு தாமர பூ மாதிரி இருக்கா… மந்திரிச்சு விட்ட மாமன் யாரு?…” சிரிப்போடு சித்ரா கேட்க.

   இன்னைக்கு நைட் முழுக்க, இதுவே தான் ஓடும் என்று புரிந்தது பிரபாக்கு…

    “வேற யாரு, வண்டிகாரன் சொந்த ஊரு மதுரை… இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை…” என்று ஜெனி மீண்டும் தொடங்க,

    “கருத்த மச்சான், கஞ்சா தனம் எதுக்கு வச்சுசான்…” என்று மோனா ஆரம்பிக்கும் போதே…

போதும், போதும் என்று தடுத்த பிரபா, நடந்ததை சொல்லி விட்டாள். அவள் காதல் கதையை அவள் ஒத்து கொண்ட பிறகும் கூட விடவில்லை.

    “ரொம்ப நாள் அப்புறம் பிரபா இன்னைக்கு தான் பூ வச்சு வந்துருக்க?…”

    “பின்னே மதுரைக்கு பேமஸ் மல்லிகை பூ… விடுவாரா கருத்த மச்சான்…” என்று திரும்ப பேச,

   “ஐயோ! நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் தான, விடுங்க பிளீஸ்…”

   “அதெல்லாம் முடியாது. நம்ம செட்டுல முதல்ல செட்டானது நீ தான். அதனால் உன்னையும் விட மாட்டோம், அந்த மதுரகார மாமனையும் விட மாட்டோம்…” என்று சொல்ல,

  “பிரபா கண்டு கொள்ள வில்லை. அட போங்கப்பா, நீங்க என்னவும் பேசுங்க…” என்று நினைத்த படி, விக்ரம் வாங்கி கொடுத்தவற்றை பிரித்து எடுத்து வைத்தாள்.

     விக்ரம் ஒரு மயக்கத்திலே தான் சுற்றி கொண்டு இருந்தான். பிரபா அவனோடு ஒட்டி நின்று பேசியது எல்லாம் அவனை பறக்க வைத்தது.

  “முத்தி போச்சுடா…” என்று மதன் தான் புலம்புவான்.

  “காதல்னா அப்படி தான் மச்சான்…” என்று அருண் சொல்ல,

  “அவன் காதல் இருக்கட்டும். நீ அந்த காதலுக்கு ரொம்ப சொம்பு அடிக்கறையே சங்கதி என்ன? அவன் கள்ளி காட்ட புடிச்ச மாதிரி, நீ எதுவும் முள்ள காட்டை புடிச்சுருக்கையா?…” என்று சந்தேகமாக மதன் கேட்க.

   “டேய், ஒன்னுமில்லைடா… சும்மா நண்பனுக்கு சப்போர்ட் பண்ணேன். அதுக்கு ஏன் எரும வெட்ட போற மாதிரி பாக்குற…” என்று அருண் பதறி போய் கேட்க.

   “போதும்டா, இவன் ஒருத்தன் போதும் நம்ம ஊருக்கு… இவன் சங்கதி மட்டும் வெளிய தெரியட்டும், ஊரே சேர்ந்து நம்மளை ஊற வச்சு அடிக்கும்… இன்னொரு ஊர்ல எல்லாம் அடிவாங்க தெம்பு இல்லை. அதனால் நீ அடங்கி இரு…”

  அந்த வாரம் பிரபா ஊருக்கு செல்ல வில்லை. முதல் நாள் வெள்ளி கிழமையே வீட்டுக்கும், அத்தோடு விக்ரமுக்கும் சொல்லி விட்டாள். வேலை அதிகம் இருக்க, எழுத்து வேலை தான், விடுதியில் இருந்தே முடிக்க நினைத்து விட்டாள்.

     இவர்கள் போல பலரும் விடுதியில் தான் இருந்தார்கள். வெண்பொங்கல், வடை சாப்பிட்ட உடன் பிரபாக்கு தூக்கம் சொக்கியது. கீழ பாட்டு கச்சேரி ஆரம்பித்தார்கள். சண்டே என்பதால் ஸ்பெஷல் எப்.எம் ஓடி கொண்டிருந்தது.

     “ பிரபா, அடியே!… கல்லு ஃபிரியா இருக்கு போ… அப்புறம் சாயங்காலம் தண்ணி வராது…” என்று சித்ரா சத்தம் கொடுக்க,

    ஒரு மணி நேர தூக்கத்திற்கு பின் துவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரபா கண் விழித்தாள். சோம்பேறிதனமாக இருக்க, மெல்ல கீழ சென்று பார்த்தாள். இவளுக்கு இடமில்லை,

    “குற்றால குரங்கே பொய் சொன்னயா?…” என்று பிரபா கத்த,

   “இல்லடி, நான் பார்க்கும் போது இடம் இருந்துச்சு. எப்ப அந்த மூணார் வந்துச்சுன்னு தெரியலை பிரபா. அந்த மஞ்சளார் கிட்ட சொல்லிட்டு தான் போனேன்…” என்று இழுக்க, மீண்டும் வந்து படுத்து கொண்டாள் பிரபா.

   அவர்கள் விடுதியில் ஊர் பேர் சொல்லி தான் அழைப்பார்கள். வெளியே எங்காவது தான் பேர் சொல்லுவது, இல்லையென்றால் அவர்களது ஊர் தான், அவர்களுக்கான பேராக இருக்கும்…

        மாலை தான் பிரபா துணி துவைத்து, தலைக்கு குளிச்சு வந்தாள்.

    “யாரிடி… கள்ளி காடு, விசிட்டர்ஸ் வந்து இருக்காங்க…” என்று சத்தம் கேட்க.

   அப்போது தான் டீ குடிக்க உட்கார்ந்தவள், பதறி போய் ஓடி வந்தாள். அப்பாவா என்று பார்க்க வர, அங்கு யாருமில்லை.

     “நான் தான் இப்படி சொல்லி உன்னை கூப்பிட்டேன். இதை வரஞ்சு கூட பிளீஸ்…” என்று மீனா சொல்ல,

  போடி… என்று மேலே வந்து விட்டாள்.

  “யாரிடி…” என்று ஜெனி கேட்க.

    “கொடைக்கானல்… ஏதோ வரையவாம்…” என்று பிரபா சொல்லும் போதே,

   “ செகண்ட் இயர் பிரபா விசிட்டர்ஸ்…” மீண்டும் சந்தம் கேட்க.

   பிரபா போகவே இல்லை. “இவங்களுக்கு இது தான் வேலையே…” முனங்கி கொண்டு அமர்ந்து இருக்க,

   திரும்ப திரும்ப சத்தம் வரவும், “என்ன தான் வேணுமாம் இவளுகளுக்கு” கத்தி கொண்டே கீழ வர… அங்கு,

   “ஐயோ! விக்ரம்…” திகைத்து போனாள். நிஜமாவே பார்க்க வந்துருகாங்களா, வேகமாக படி இறங்கியவள், பின் நின்று திரும்ப மேல சென்று, கிடந்த கொடியில் தன் துப்பட்டாவை மேலே போட்டு கொண்டு கீழ வந்தாள்.

    அவளுக்கு ஒன்னுமே ஓட வில்லை. திடீரென்று அவன் வருவான் என்று நினைக்கவும் இல்லை. ஒரு நைட்டி, தூக்கி போட்ட கொண்டையும் என்று வர,

   ஐயோ! போச்சு என்று தலையில் அடித்து கொண்டாள்.

    “மேலே துப்பட்டா போட்டையே பிரபா, உள்ள இன்ஸ்கட் போட வேண்டாமா… போச்சு, ரொம்ப சங்கடம். சரி விடு அதெல்லாம் அவன் கண்டுக்க மாட்டான்…” என்று நினைத்த படி, ஒரு சிரிப்போடு விக்ரம் அருகே வர,

    அவன் முறைத்தான். “போய் வேற நைட்டி போடு…” என்று முறைத்தபடி சொல்ல, பிரபா ஓடி விட்டாள்.

    அவளுக்கே தெரிந்தது. அப்போது தான் துவைத்து, குளித்து வந்தாள். ஈரம் பட்ட ஆடை… வேகமாக வந்து உடை மாற்றி வந்தவள்,

   “என்ன? திடீர்ன்னு பார்க்க வந்து இருக்கீங்க…”

 “நான் திருச்சி போறேன் பிரபா. அதான் உன்னை பார்க்க வந்தேன். இனி வர லேட் ஆகும்…” என்று சொல்ல,

  அவன் அருகில் அமர்ந்தாள் பிரபா. விக்ரம் ஆச்சர்யமாக பார்க்க,

  “இந்த நேரம் வார்டன் இருக்க மாட்டாங்க. எங்க பிள்ளைக தான் விசிட்டர்ஸ் பாக்குறது. அதனால, உங்க பக்கத்துல உட்காரலாம்…”

    “உன் முடில ஈரம் சொட்டுது, தலையை விரிச்சு விடு பிரபா, இல்லன்னா தலைவலி வரும்…” என்றவன் அக்கறை அவளுக்கு இனிக்க,

   “உன் கையை குடு…” என்று கேட்க.

    அவன் சொன்னதும் மறுக்காமல் கையை நீட்டினாள். விக்ரம், தன் பையில் இருந்து ஒரு சின்ன பாக்ஸ் எடுத்து திறக்க… அது வளையல் என்று புரிந்த பிரபா,

   “என்னங்க வளையல்?…”

 திறந்து அவளிடம் காட்டியவன், “ம்ம் ஆமா, அன்னைக்கு கோவில்ல கொடுத்த வளையல் உடைஞ்சு போனதுக்கு அவ்வளவு அழுத தான… அப்பவே நினைச்சேன், உடையாம எப்பவும் போடுற மாதிரி எடுக்க நினைச்சேன். காசு கைக்கு வரவும் எடுத்துட்டேன்…” என்றவன், அவளின் இரு கைகளிலும் போட்டு விட்டான்.

  ஆன்டிக் டிசைன் அரும்பு அரும்பாக, லேசாக கருப்பு கலந்து இருந்தது.

    “நம்ம ஊர் பக்கம் இதை யாரும் தங்கம்ன்னு நினைக்க மாட்டாங்க. நீ உங்க வீட்டுல கோல்ட் கவரிங்ன்னு சொல்லிடு…” என்று விக்ரம் சொல்ல,

   சரி என்று தலையசைத்தவள். தன் கையில் கிடக்கும் வளையல்களை ஆசையாக வருடி பார்த்து கொண்டாள். ஒரு ஜோடி வளையல், பார்க்க அம்சமாக இருந்தது.

  “உங்களுக்கு காசு ஏது?…” என்று பிரபா கேட்டே விட்டாள். அவனுக்கு தான் வேலை கிடையாதே. பின்ன எப்படி யோசனையாக பார்க்க,

      “ இப்பவே காசு விவரம் எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டையா …” என்று சிரிப்போடு சொன்னவன்,

   “மாமா டிராவல்ஸ் நான் தான் பாக்குறேன். அதுனால எனக்குன்னு மாமா பணம் கொடுப்பாங்க… அந்த காசுல தான் வாங்கினேன்…”

“வேலைக்கு போறீங்களா?…”

“வேலைன்னு இல்லை ஒரு சேமிப்பா, பின்னாடி நமக்கு உதவும் பிரபா. உன் படிப்பும் முடிய போகுது. அப்புறம் உங்க வீட்டுல தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க. அதுக்கு முன்ன நம்ம விசயம் வெளிய வந்துடும். அதை சமாளிக்கனும், கைல காசு வேணும்…”

  “அத்தோடு நான் வெளி வேலைக்கு போன, எங்கப்பாக்கு சந்தேகம் வந்துடும். கொஞ்ச நாளைக்கு அடங்கி தான் இருக்கணும். அப்புறம், நான் இங்கேயே இருந்தா உன்னை விட்டு தள்ளி நிக்க தோணாது. ரெண்டரை மணி நேரம்ன்னாலும் ஓடி தான் வருவேன். அது மேலும் சிக்கல். குரூப் எக்ஸாம்க்கு படிக்கிறேன். நிச்சயம் உங்க அப்பாகிட்ட பேசாம உன்னை கூட்டி வெளியேற மாட்டேன். அப்போ, உங்க அப்பா என்னை மறுக்கிறதுக்கு எந்த காரணமும் இருக்க கூடாது. கண்டிப்பா நான் பாஸ் பண்ணிடுவேன்…”

   “எனக்காகவா…” லேசாக கண்கள் கலங்கியது அவளுக்கு..

  “எப்படின்னாலும் வாழ்க்கை ஓடி தான் ஆகணும். நாளைக்கு நீ என்னை நம்பி வரும் போது உனக்கு ஒரு நம்பிக்கையில்லாத நிலைமையை நான் கொடுக்க கூடாது. என்னை நம்பி வார, உன்னை நான் சுமக்கணும்…” என்றவன் எழுந்து கொண்டான்.

   “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு. உனக்கு எதுவும் வாங்கி குடுத்துட்டு போறேன். நான் திரும்ப வர நாள் ஆகும்…”

   “ஐயோ! எதுவும் வேணாங்க, போன வாரம் நீங்க வாங்கி கொடுத்ததே அப்படியே தான் இருக்கு…”

“ஏன் சாப்பிடல, நல்லா சாப்பிடு. இப்ப உனக்கு ஒன்னும் வாங்கி கொடுக்காம போக மனசு வரல… நான் போய் வாங்கி வாரேன்…”

“இல்லை ஸ்நாக்ஸ் வேண்டாம். சாப்பிட ஏதாவது வாங்கி வாங்க. இன்னைக்கு நிறைய பேருக்கு வீட்டு சாப்பாடு வந்திருக்கும். அதான், மெஸ்ல உப்மாவும், தேங்காய் சட்னியும்… எனக்கு பிடிக்காது. வேற ஏதாவது வாங்கி வாங்க…” என்று விக்ரமை அனுப்பி வைத்தவள்,

   அங்கேயே அமர்ந்து கொண்டாள். மனதில் நிறைய யோசனை, நிரம்ப பிடித்து இருந்தது விக்ரமமை… ஒரு அரை மணி நேரத்தில் வந்து விட்டான். கையில் பெரிய பார்சல் இருக்கவும், என்னவென்று பார்த்தாள்.

     பூ இருந்தது, விருதுநகர் பொரிச்ச பரோட்டா, சிக்கன் கிரேவி நிறைய இருந்தது.

  “எதுக்குங்க இவ்வளவு?…”

 “உன் பிரெண்ட்ஸ்க்கு, அவங்களுக்கும் பார்க்க ஆள் வரல தான…” என்று விக்ரம் சொல்ல,

  அட ஆமா, மறந்து விட்டாள். அதை கவனித்து அவன் வாங்கி வந்தது நிறைவாக இருந்தது. அப்போதே பூவை பிரித்து தலையில் வைத்து கொண்டாள். ஆசையாக வாங்கி வந்தான். அவன் பார்க்கட்டும் என்று வைத்தாள்.

      மஞ்சள் கலர் நைட்டியில் இருந்தாள். விக்ரம் தன் போனில் ஒரு போட்டோ எடுத்தான்.

  “பார்த்து இரு, நேரம் கிடைக்கும் போது போன் பண்ணு…” என்றவன்,

   “நான் கிளம்புறேன்… இனி ரெண்டு மாசம் அப்புறம் தான். நல்லா சாப்பிடு… எதையும் யோசிக்காத, நான் பார்த்துக்கிறேன்…” என்று பலவாறு சொல்ல,

   பிரபா சிரித்த முகமாக தான் இருந்தாள். ஆனால், மனசு என்னவோ பண்ணியது. அவனோடு போக உந்தியது.

   பிரபா கன்னத்தில் லேசாக தட்டி, “நான் வாரேன் பிரபா…” என்று விக்ரம் சொல்ல, அவன் கையை பற்றி கொள்ளும் ஆவல் வந்தது அவளுக்கு…

   அவளை திரும்பி, திரும்பி பார்த்து கொண்டே கேட்டை நோக்கி விக்ரம் நடக்க, லேசாக கண் கலங்க பார்த்தாள் பிரபா…

   அவனையே பார்த்து நின்றவள் மனதில் பயம் கவ்வியது. இவனை இழந்தால் என்னாவேன்… எப்படியாவது இவனோடு சேர்த்து விடு கடவுளே… என்று கண்ணீர் மல்க வேண்டியபடி, விக்ரம் கண்ணை விட்டு மறையம் வரை பார்த்து நின்றாள்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!