Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாக அல்ல உயிராக

உறவாக அல்ல உயிராக 5

உறவாக   அல்ல  உயிராக

அத்தியாயம்.  5



Advertisement

   அன்றைய   ஹாஸ்பெட்டல் வேலைகளை   வேகமாக முடித்தார்  நிர்மலா.

Advertisement

Advertisement

  மகன்  வருவதால்  வீட்டிற்கு   வேகமாக  செல்ல  வேண்டும்  என்று எண்ணி  வேலையை  முடித்தவர்.

வீட்டிற்கு வந்து.  பிரகாதீஸ்வரனுக்கு  போனில்  அழைக்க. அவனின்  போனோ  நாட் ரீசபல்  என்று  வர.  மறுபடியும்  அழைக்க,  அதுவும் நாட் ரீசபல்  என்று  வர.

Advertisement

  “நிர்மலா”  கணேஷனுக்கு  போனில்  அழைக்க.  போனை  எடுத்தவன்.

  ஹலோ!  நிர்மலா  ஆண்டி. எப்படி. இருக்கீங்க?  என்றவன்.  சொல்லுங்க   ஆண்டி.

எங்க  வந்துட்டு  இருக்கீங்கபா, ப்பிளைட்  லேட்ட.

 இல்லை  ஆண்டி, சரியான  நேரத்துல  வந்துட்டோம்.  ஏன்  ஆண்டி?

  இன்னும்  பிரகா  வீட்டுக்கு  வரல.  எங்க  இருக்க  நீ?

  நானா  ஆண்டி?  இங்கே  தான்  பெங்களூரில்  உள்ள  ஹெட்  ஆபிஸ்ல.

” ஓ அப்படியா,  பிரகா  போன்  எடுக்கல.  நீ  போய்  உன்  போனா.  பிரகா  கிட்ட  கொடு. நான்  பேசனும்”,  என்று  சொல்ல.

  ஆண்டி , சார்  இப்போ   இங்கே  இல்ல.

இல்லனா,  என்னப்பா,  எங்கே  இருக்கான்  பிரகா.

 ஆண்டி  சார்  மட்கேரிக்கு  போறதா  சொன்னார்.

  என்ன?   மட்கேரிக்கு  போறதா  சொன்னானா?

  ஆமாம்  ஆண்டி.

  சரிப்பா  ரொம்ப  நன்றி!  என்று  போனை  வைத்தார்.

மனதில், ” மட்கேரிக்கு   போய்  இருக்கான்.  ஏன்   நான்  இங்கே  அவனை   எதிர்   பார்ப்பேன்  என்று  அவனுக்கு  தெரியாதா?”

 ஒரு  வார்த்தை   போன்  போட்டு   சொல்லி  சென்று  இருக்கலாம்  என்று புலம்பியவர்.

  நிர்மலா  வீட்டில்  சமையல்  வேலை  செய்யும்  பெண்  வந்து.  “அம்மா   நீங்க  சொன்ன  மாதிரி,  பிரகா   தம்பிக்கு  பிடித்த  மாதிரி  சமையல்  எல்லாம்   முடிச்சாச்சு  தம்பி  எப்போ   வருவார்”?

  நிர்மலா  அவளை  பார்த்து. நீ  கிளம்பு.  பிரகா  வர  லேட்டாகும்.

 சரிமா  என்று  அந்த  பெண்  கிளம்பி  இருந்தார்.

 நிர்மலாவின்   போன்  ஒலிக்க.  போனை  எடுத்துப்  பார்க்க  ஹஸ்பெண்ட்   கால்லிங்  என்று  போன்  வர.

  போனை  எடுத்து  காதில்  வைத்தார்  நிர்மலா.

 அங்கே  விமல்ராஜ்  ஹலோ!       “நிம்மி  ( நிர்மலா)   பிரகா  வந்துட்டானா”? ஹலோ   நிம்மி  என்று   அழைக்க.

நிர்மலாவின்    கண்ணில்   இருந்து   நீர்  வர.  சொல்லுங்க  விமல்  என்றார்.  அவரின் குரலை  வைத்து.

  என்ன நிம்மி?  என்னாச்சு  குரல்  சரியில்லை  அழரீயா?  என்று  விமல்  கேட்க.

 இல்ல  நான்  அழல, ஏன் அழனும் என்றவளால்.  அழாமல்  இருக்க  முடியவில்லை  விமல்,  விமல்,  என்று  போனை  இருக்கமாக  பிடித்துக்  கொண்டு   அழுதவரை.

” ஏ,  நிம்மி  என்னாச்சுமா ?

பிரகாதீஸ்வரனுக்கு,  ஏதாவது  என்று  இலுக்க.

அதெல்லாம் ஒன்னும் இல்ல.

அவன்  மட்கேரியில்  உள்ள வீட்டுக்கு  போய்  இருக்கான்.

 ஓ ,அப்படியா?

  என்ன, ஓ, அப்படியா?  நான்  அவனுக்காக  இங்கே  காத்துட்டு  இருக்கேன். அவனப்    பார்த்து  9, 10  மாசம்  ஆச்சு.  அவனப்   பார்க்க  ஆசையா  வந்தா,  அவன்  என்க்கிட்ட. ஒரு  வார்த்தை  சொல்லமல்   மட்கேரிக்கு  போய்  இருக்கான்.

விமல்  நிர்மலாவிடம், ” நிம்மி  அவன்  எப்பொழுதும்  போகுறது  தானே.  இத  நீயேன் பெருசு   பண்ணுறா?  இரண்டு  நாள்  ரெஸ்ட்  எடுத்துட்டு  வந்துருவான்.

 என்ன  வந்துருவான்?

எனக்கு  அதெல்லாம்  தெரியாது. நான்  இப்போ  என் பையனா பாக்கனும்  நான்   மட்கேரிக்கு  போறேன். என்றவரை.

விமல்  என்ன  மட்கேரிக்கு   போறியா?

 ஆமாம் என்றார்  நிர்மலா.

என்ன  நிம்மி  ஹாஸ்பெட்டலுல  எவ்வளவு  வேலையிருக்கும்.  தீடீருன்னு  மட்கேரிக்கு   போறேன்   சொன்ன என்ன  அர்த்தம்.

ஹலோ  விமல்  சார் , என்ற  நிர்மலா.  நான்  போகக்கூடாதா?

அது  இல்லம்மா  தீடீர்ன்னு.

 என்ன  தீடீர்ன்னு நான்  என்னுடைய  எல்லா  வேலையை  முடிச்சுட்டேன். இப்போது  எந்த  அப்பாய்மெண்டும்  எனக்கு  இல்லை.  நான் என்  வேலையைப்   பார்க்க  புதுசா  இரண்டு  டாக்டர்சை   வேலைக்குச்  சேர்த்து இருக்கேன்.  என்  பையன்  கல்யாணம்  முடியற  வரைக்கும்  ஹாஸ்பெட்டல்   வர  மாட்டேன்.

 இனிமே, ஹாஸ்பெட்டல்  வந்தாலும்.  செஸ்ட்   ஒரு  பார்வை, ஓர்  விசிட்   அவ்வளவு  தான்.  நீங்க  தான்  இனிமே  ஹாஸ்பெட்டலை  பார்த்துகணும்,  சரியா?

பாய் நான் மட்கேரிக்கு   கிளம்புறேன்.

விமல் ராஜ், “நிம்மி, நிம்மி,  நானும்  வரேன்  பிரகாவை  பார்க்க”

 என்ன விமல்?  ”  உங்களுக்கு  நிறைய  சர்ஜரி  இருக்குமே”  என்று  கேட்க.

  இப்போதிக்கு  இல்ல.  நானும்  வரேன்  நீ  ரெடியா  இரு.   நாம  போலாம்   என்றவர். தன்னுடைய  வேலைகளை  முடித்து  விட்டு   கிளம்பினார்.

நிர்மலாவும்  விமல்ராஜும்,  மட்கேரி  வீட்டிற்கு  சொல்ல.

நிர்மலா  அந்த   வீட்டின் கேட்  மீது   N . V . ஹோம்  என்று இருக்க  அதை  பார்த்து  சிரித்தவர்.  விமல்ராஜைக், கூப்பிட்டு  அந்த  போடைக்  காண்பித்தார்.

அதைப் பார்த்த  விமல்ராஜ், நிர்மலாவிடம்  ”  பார்த்தியா  உன்  மகன்  வீட்டிற்கு   N. V.ஹோம்  என்று  நம்  இருவரின்   பேரில்  உள்ள  முதல்  எழுத்தை  வைத்து  இருக்கான்”   என்றார்.

ஆமாம் என்ற  நிர்மலா,  இந்த  வீட்டிற்கு  அவர்கள்  வீட்டின்  கிரக பிரவேஷம்  அன்று  வந்தது தான் அப்பொழுது  இந்த  போட் இல்லை.

விமல் ராஜின்  கார் விட்டில்  உள்ளே வர. அந்த  வீட்டில்  தோட்ட வேலை  செய்பவர்.  இவர்களைப் பார்த்து.  பிரகா  சார்  தான  வர்வேன்  சொன்னாங்க.

 சாருடைய  அம்மா  அப்பா  வந்து  இருக்காங்க  இருவரை  வரவேற்று.  அவர்களை   உள்ளே  அழைத்து  சொல்ல.

நிர்மலா  அவர்களிடம்  பிரகா  எப்போ   வந்தார்?  எனக்  கேட்க.

மேடம் ,” சார்  இன்னும் வரல”.

நீங்க  போய்  ப்பாய்  அம்மாவிடம்  கேளுங்க .நிர்மலா , விமல்ராஜ்

 கொண்டு  வந்த  பேகுகளை  விட்டீன்  உள்ளே  உள்ள  ரூம்பில்  வைத்து  விட்டுச்  செல்ல.

நிர்மலாவுக்கு  அது  யாரு  ப்பாய்  அம்மா  என்று நினைக்க.  அவர்கள்  முன்  சூடான  தேனீரை  நீட்டி  இருந்தார்.  அந்த ப்பாய்  அம்மா  ஒரு 60, 65, வயதுடைய பெண். எடுத்துகோங்க மா  காபி  என்று  நீட்ட   இருவரும்  அதை   எடுத்துக்  கொண்டு  பருகினார்கள்.

நீங்க  என்று  பாய்யம்மாளிடம்  நிர்மலா கேட்க.

 நான்  இந்த   வீட்டில்  சமையல்  வேலை  செய்யுறேன்மா.   (சாய்ஹப்பரு )   முதலாலி  காலை  போன்  பண்ணி   சொன்னாங்க   வர்ரேன்னு. அதான்  நான்  வந்து  சமையல்   முடிச்சுட்டேன்.  நீங்க  சார்  எல்லோரும்   சாப்பிடுங்க  என்று  கூறி  சென்றார்.

 பிரகாதீஸ்வரனுக்கு   போன்  போட்டார்   விமல்ராஜ் .  பிரகா  போனை   எடுத்து  ஹலோ  டாட்  எப்படி  இருக்கீங்க.

 நான்  நல்ல இருக்கேன்.  நீ  எங்கே  இருக்க  பிரகா?

 நானா?   ”  இங்கே  மட்கேரியில்  உள்ள  வீட்டுக்கு  போய்யிட்டு இருக்கேன்.”  என்று கூற.

 ஓ என்றவர்,  நானும்   மட்கேரியில உள்ள வீட்டில்  தான்  இருக்கேன்.

என்ன? டாடி. சர்பிரைஸ்  குடுக்குறீங்க.

நீ  வர  எவ்வளவு  நேரம்  ஆகும்.

 டாட் , வீட்டுல  இருந்து  வெளியே  வாங்க  என்றவன். போனை  அனைத்து   வைக்க.

 விமல் ராஜ்  வீட்டில்   இருந்து  வெளியே  வர.

பிரகாவின்  கார்  வீட்டினுள்  நுளைந்தது.  காரை  வேகமாக  நிறுத்தியவன்.  தந்தை  நோக்கி  வேகமாக  ஓடியவன்.  ” ஹாய்  டாட் என்று  கூறி  அவரை கொண்டான். மிஸ்யு டாட்.”  என்று  சொல்ல.

” ஐ  யம் ஆல்  சோ  மிஸ் யு மை சன் என்றார்  விமல்ராஜ்.

 பிரகா  தந்தையைப்  பார்த்து ஹவ் வார் யு டாட்.

யா!  குட் பிரகா.

நீ  எப்படி  இருக்கு  பிரகா?

பார்த்து  நீங்களே  சொல்லுங்க.

உங்கள்  மகன்  எப்படி இருக்கேன். அவர் முன் தன்  உருவத்தை  காண்பித்து  கேட்க.

” யா குட் பா, நல்லாதான்  இருக்க” யக்சசைஸ்  பண்ணி  இன்னும்  உடம்பு  ஏத்துன  மாதிரி  தெரியுது என்றவர்.

  பிரகாவின்   தோள்களையும்,  கையையும் அமுக்கிப்  பார்க்க,  அது கல் போல  இருந்தது.

“சூப்பர்   பிரகா  உடம்ப  நல்ல  மெய்ண்ட்டேன்  பண்ணுற”.

 தாங்க் யு  டாட் .  டாட்  மம்மி. எங்கே?  என்று  கேட்க. வீட்டு  ஹால்லில்  உள்ள  சோபாவில்  அமர்ந்து   இருந்தார்  நிர்மலா.

 இவர்கள்  அவரை  பார்க்க  நிர்மலா  முகத்தை  திருப்பி  இருப்பது   தெரிந்தது.

வந்து   இவ்வளவு  நேரம்  இரண்டு பேரும்  பேசிட்டு  இருந்துட்டு. இப்போதான்   இவனுக்கு  என்  ஞாபகம்  வருதாம்.  என்று  முனகிக்கொண்டு  முகத்தை  திருப்பிக்  கொண்டார்.

 பிரகாதீஸ்வரன்   வேகமாகச்  சென்று.  சோபாவில்  அமர்ந்து  இருந்த தன்  அம்மாவை  அணைத்துக்  கொள்ள.

 டேய்!  பார்த்து என்று விமல்ராஜ் சொல்ல.

பிரகா!  என்று  கத்தி  இருந்தார்  நிர்மலா.

விமல்ராஜின்  சிரிப்பு சத்தம்   கேட்டு. நிமிர்ந்த நிர்மலா, என்ன சிரிப்பு  உங்களுக்கு?

” இல்ல, உன் மகன்  ஆசையா வந்து. உன்னை  கட்டிப்பிடிச்சான்”.

“அவன்  இருக்குற  சைஸ்சுக்கு

நீ   அவன்  பக்கத்தில்   இருந்ததப்  பார்த்தா  கோழி  குஞ்சு  மாதிரி  இருந்தேயா”?

அதான்  சிரிப்பு வந்துருச்சு.

” வரும் , வரும்,  நீங்களும்  உங்க  மகனும் வளந்துட்டே  போங்க.  உங்க  இரண்டு பேர்  பக்கத்தில்  யார்  வந்தாலும்  அப்படிதான்  இருக்கும்.”

பிரகாவும், விமல்ராஜும்,  சராசரியை  விட  மிகவும்  அதிக  உயரம் என்பதால்.

“ஐ மிஸ் யு மாம்,  மை ஸ்விட்  மாம் என்று  தன் அம்மா  நிர்மலாவை  கொஞ்சி,  பிரகா  , சாரி மாம்  ஒரு சின்ன  வேலை. அதான்  மட்கேரிக்கு  வந்துட்டேன்  என்று விளக்கம்  சொல்ல.

நிர்மலா  பேசாமல் இருக்க.

நிர்மலா  மடியில்  தன் தலை   வைத்த  பிரகா.  சோபாவில்  மேல்  கால் நீட்டி  படுத்துக் கொண்டான்.  தன் தாயின்  கையை எடுத்து தன்  தலையில்   வைத்து  அழுத்த.

நிர்மலா, பிரகாவின்  தலை  முடியை  கோதிவிட  மாம்  தூக்கம்  வருது கொஞ்ச  நேரம் என்று  அவரின்  மறு  கையை  எடுத்து. அவனின் கன்னத்தில்  வைத்து கண்களை  மூடிக்கொண்டான்.

தன் மகனை கண்குளிர  பார்த்துக் கொண்டு இருந்தார்  நிர்மலா.

விமல் ராஜ்  நிம்மி!  என்று மெதுவாக  அழைக்க  என்ன  என்பது  போல செய்கையில் நிர்மலா  கேட்டார்.

விமல் சமாதானம்   ஆயாச்சா?  என்று  கேட்க.

 எல்லாம்  ஆயாச்சு.

 விமல்ராஜின்  போன்  ஒலிக்க  எடுத்துப்  பார்த்தார். திருச்செல்வன்  காலிங்  என்று வர. “ஹலோ!  மச்சான்  சொல்லுங்க.

 திருச்செல்வன்  ” மாப்பிள்ளை  எல்லோரும்  நல்ல இருக்கீங்களா”?

 “எல்லோரும்  நல்லா இருக்கோம்  மச்சான். உங்க  மருமகன்  இப்போ தான் வந்தான்.”

  ‘ஓ   மருமகன்   பிரகாதீஸ்வரன்  வந்தாச்சா.  எப்படி  இருக்கார்.  எங்க  வீட்டு  மாப்பிள்ளை”?

 நல்லா இருக்கான்  மச்சான்  தூங்கிட்டு இருக்கான்.

” சரி  மாப்பிள்ளை. ஜோசியர்  கல்யாணத்துக்கு  நாள்  குறிச்சு  குடுத்துட்டார்.  இன்னும்  பத்து நாளுல  ஒரு நல்ல முகூர்த்தம் நாள்  இருக்கு மாப்பிள்ளை,  அத  விட்டா அடுத்த  நல்ல முகூர்த்த நாள்  இரண்டு  மாசம்  கழிச்சுத்தான்னு  சொல்லிட்டார்.  நீங்க என்ன  சொல்றீங்க”?

 விமல்ராஜ், நிர்மலாவிடம்   அனைத்தையும்  சொல்ல. நிர்மலா யோசிக்க, பிரகாதீஸ்வரன்  கண்களை மூடிக்கொண்டு  (10)  “பத்தாவது  நாளே  கல்யாணத்தை  வைக்க  சொல்லுங்கப்பா” என்றான்.

சொல்லி விட்டு. நான்  மேலே  தூங்க  போறேன் என்று சென்றான்.

விமல்ராஜ்  திருசெல்வனிடம்,   “மச்சான்  இன்னும்  பத்து நாளில் வர முகூர்த்தத்துல  கல்யாணத்த  வைக்கலாம்.

 திருச்செல்வன், ” சரி  மாப்பிள்ளை,  கல்யாணத்தை  சென்னையில் வைக்கலாம்.  நீங்க  ரிசப்ஷன  பெங்களூரில்  வச்சுக்கோங்க” என்றார்.

நிர்மலாவிடம்  விமல்  கேட்க.

 நீங்க  என்ன  சொல்லுறீங்க  என்றார் நிர்மலா.

விமல்ராஜ் எனக்கு  ஓகே  தான்.

திருச்செல்வனுக்கு  சந்தோஷம்,  சரி  மாப்பிள்ளை  பத்திரிக்கை ரெடி  பண்ணி  அனுப்புறேன்.

நீங்க  எல்லோரும்   கல்யாணத்துக்கு  5  நாள்  முன்னாடி வந்துருங்க.

அப்புறம்  மாப்பிள்ளை ”  கல்யாண  மண்டபம் என்  நண்பனுடையது. பெரிய மண்டபம்   நல்ல படியா  கல்யாணம்  பண்ணாலாம்”

விமல்ராஜ்   சரி மச்சான். நல்ல படியா  கல்யாணத்தை  பண்ணலாம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!