Skip to content
Post Views: 4,624
உன் காதல் ஒரு வரமாய்…..24
ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.எத்தனை எளிதாக தன் வாழ்வின் உள் வந்துவிட்டான் எப்படி நான் அவனை அனுமதித்தேன் இது தான் ஓடிக் கொண்டிருந்தது மனதில் இன்றல்ல கடந்த இரு வாரமாக அதாவது அவளின் திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து.தவறான புரிதல் தன்னிடம் தான் என்று புரிந்தாலும் சிவாவை பார்க்கும் போது முதலில் அவன் விட்டு சென்றது தான் நியாபகத்திற்கு வந்துவிட இவளிற்கு வேதாலம் முருங்கை மரம் ஏறிவிடுகிறது.
“என்ன மேடம் யோசனை பலமா இருக்கு…..”என்று கேட்டவாரே சிவா அவளின் முதுகுடன் ஒட்டி அவள் தோள்பட்டையில் தலை வைக்க,அமிர்தா அதிர்ந்து,
“என்ன பண்ணுறீங்க தள்ளுங்க….”என்று அவனின் கைகளை தடுக்க பார்க்க,
Advertisement
“என்ன பண்ணுறேன் நான்….நான் ஒண்ணும் பண்ணலையே….”என்று அவள் கழுத்தில் குறுகுறுப்பு மூட்டியவாரே முன்னேற அமிர்தா தான் அவனின் தீண்டலில் அலமலந்து போனாள்.இடையை பிடித்திருந்த கரங்கள் மெல்ல முன்னேற தொடங்க அதன் வன்மையை தாங்க முடியாமல் அவளின் உடல் தளர,
“நா….நா…நான் உங்க கிட்ட பேசனும்….”என்ற வார்த்தையே காற்றாக தான் வெளிவந்தது.
“ம்ம்….பேசலாம்…..”என்றவன் குரல் கிறங்கி ஒலிக்க,அமிர்தா தன் கைகளால் அவனின் மார்பை தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.எங்கே முழுவதுமாக அவனிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில்,
Advertisement
“நான் பேசனும் ப்ளீஸ்…..”என்ற கெஞ்சும் குரலில் அதுவரை அவளின் கழுத்தில் முகம் புதைத்திருந்தவன் மெல்ல நிமிர்ந்து,
Advertisement
“சொல்லு….ஆனா இப்படி தான் நீ இருக்கனும்….”என்று அவளின் இடைவளைத்து அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தான்.அமிர்தா அவனின் மடியில் அமர்ந்திருக்க,
“இப்….இப்படி உட்கார்ந்தா என்னால பேச முடியாது…..”
“அப்ப பேசாத….”என்றவன் உதடுகள் அவளின் பின்னங்கழுத்தில் ஊர்வலம் வர,அமிர்தா அவஸ்தையாகி தன் உடலை நெளித்தவாரே,
Advertisement
“கல்யாணத்தை தான் என் விருப்பமில்லாம பண்ணீங்க இப்…இப்ப இதையும் என் விருப்பமில்லாம பண்ணபோறீங்களா….”என்று கேட்ட நொடி அவனின் கைகள் தளர்ந்தது முதுகில் இருந்து முகத்தை நிமிர்த்தியவன் அவளை தன் பக்கத்தில் அமர வைத்துவிட்டு எழுந்து வெளியில் சென்றுவிட,அமிர்தாவிற்கு திக்கென்றானது.தான் பேசியது அதிகபடி என்று நன்கு புரிந்தது ஆனாலும் அவள் அவனிடம் தோற்றுவிடுவது போல் ஒரு பிரம்மை அதை அவளால் ஏற்க முடியவில்லை.அதை வார்த்தைகளாக அவள் கொட்டிவிட்டாள்.ஆனால் அது அவனை பாதிப்பதைக் கண்டு அவளால் மகிழமுடியவில்லை.
சிவா வெளியில் சென்று இருபது நிமிடங்கள் கடந்திருக்க அமிர்தாவால் ஒரு இடத்தில் அமர முடியவில்லை எழுந்து வாசல் கதவுக்கும் பின் கட்டிலுக்குமாக நடக்க நேரம் கடந்ததே தவிர அவன் வந்தபாடில்லை அமிர்தாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது மணியை பார்க்க இரவு பத்தை காட்டியது.எங்கு சென்றிருப்பான் என்று வாசல் கதவை திறக்க பால்கனியில் தான் நின்று கொண்டிருந்தான்.
இவளை பார்த்தவுடன் தன் பேசியில் இருந்து முகத்தை நிமிர்த்தியவன்,
“நீ போ நான் பத்து நிமிஷத்துல வரேன்….”என்றுவிட அமிர்தா அமைதியாக வந்துவிட்டாள்.கூறியது போல அடுத்த பத்து நிமிடத்தில் அவன் உள்ளே வர,அதுவரை அமிர்தா அவனிடம் எப்படி பேசுவது என்று யோசனை செய்து கொண்டிருக்க,அவளை மீண்டும் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு,
“ம்ம் இப்ப சொல்லு….”என்று வெகு சாதாரணமாக கேட்க,அமிர்தா தான் அவன் செய்த செயலில் திகைத்து அமர்ந்திருந்தாள்.அவளின் கன்னத்தை பற்றி தன் முகம் நோக்கி இழுத்தவன் நெற்றியில் முத்தமிட,தன் நிலை பெற்றவள்,
“அது நான்….நான்….”
“ம்ம்…நீ….நீ….”என்று அவனும் அவளுடன் ராகம் பாட,அமிர்தா தான் குழம்பி போனாள் அவனின் இயல்பான பேச்சில்,
“ப்ச்….அம்மு இன்னும் எவ்வளவு நேரம் தான் இதையே சொல்லிக்கிட்டு இருக்க போற….”என்றவன் தன் மீசை கொண்டு அவளின் பின்னங்கழுத்தில் தெய்க்க,
“நீங்க நிஜமா நான் பேசினதை கேட்கலையா….”என்று கேட்க,அவளின் முகத்தை பார்த்தவன்,
“கேட்டுச்சு…”என்றுவிட்டு அவளின் தோள்பட்டையில் தலையை வைக்க,அமிர்தா அவனின் பதிலில் பேச்சற்று அவனை திரும்பி பார்க்க இருவரின் முகமும் மிகச்சிறிய இடைவெளியில் நின்றது.
“அப்புறம் எதுக்கு கோச்சிக்கிட்டு வெளிய போனீங்க….”என்று கேட்க,
“நான் எங்கமா கோச்சிக்கிட்டு போனேன்…..திவி மேஸேஜ் பண்ணியிருந்தா….அதான் பேசிட்டு வந்தேன்….”என்று சாவகாசமாக கூற அமிர்தா விழிப்பதை பார்த்தவன் அவனே,
“ரொம்ப குழப்பிக்காத அம்மு பாப்பா….நீ தான் எனக்குனு முடிவு பண்ணி தான் இந்த வாழ்க்கைக்குள்ளே வந்தேன் அதனால நீ என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை….தப்பு என் பேருல இருக்கு அதனால மட்டும் தான் அமைதியா இருக்கேன்…இப்ப சொல்லு என்ன சொல்லனும் நீ…..”என்றுவிட்டு அவளை பார்க்க அமிர்தா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்படி பார்த்துக்கிட்டு இருந்தா நான் பேசிக்கிட்டு இருக்கமாட்டேன்….”என்றவன் உதடுகள் அவளின் கழுத்தில் அழுத்தமாக பதிய,அமிர்தாவின் உடல் கூசி சிலிர்த்தது.
“இல்ல என்னால முடியல….எனக்கு கஷ்டமா இருக்கு….இது இப்ப வேணாமே….”என்று ஒருவாரு தன் மனதில் நினைத்ததை அமிர்தா கூறிவிட,அவளை தன் மடியிலிருந்து இறக்கி அமர வைத்தவன் அவளின் கீழ் அமர,
“அய்யோ என்ன பண்ணுறீங்க….”என்று பதறி விலக,அவளை நகரவிடாமல் தடுத்தவன்,
“ம்ஹம்….இப்படியே இரு….”என்றவன் அவளின் மடியில் தலை வைக்க,
“அம்மு….நாம இரண்டு பேரும் நிறைய தப்பு பண்ணிட்டோம் ஆரம்பத்துல அதை சரி செய்ய தான பார்க்கனுமே தவிர அதே தப்பை திரும்ப திரும்ப பண்ணக்கூடாது….”என்றவன் முகம் நிமிர்த்த அமிர்தாவின் முகத்தில் குழப்ப ரேகை அதை நமுட்டு சிரிப்புடன் பார்த்தவரே,
“உனக்கு இன்னும் ஒண்ணு சொல்லவா….இங்க என்கிட்ட வாயேன்….”என்று கூற அவளும் குனிய,
“இங்க பல கல்யாணம் தப்புல தான் தொடங்குது….அதனால நாமும் தொடங்குவோம்….”என்றவன் அமிர்தா தெளியும் முன்பே அவளை வாரிசுருட்டிக்கொள்ள அதன் பின் அவளாள் பேசமுடியவில்லை என்பதைவிட அவன் பேச அனுமதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.மீறி அவள் பேச முற்பட்டால் அவள் இதழ்களுக்கு தக்க தண்டனையை கொடுக்க அவனின் வன்மையான தீண்டல்களில் அமிர்தா முதலில் திணறியவள் பின் அவனின் அளுமையின் அடங்க தொடங்க சிவா அவளுள் கரைய தொடங்கினான்.
சிவா மொத்தமாக அமிர்தாவினுள் தொலைந்து மீண்டு அவளின் முகம் காண அவளோ அவனின் முகம் காணமல் திருப்ப,அவளை தன்புறம் திருப்பி தன்னை பார்க்க செய்தவன்,
“இப்ப சொல்லு உனக்கு பிடிக்காம இருக்கா…..”என்று கேட்க,அதுவரை அவனின் சேட்டைகளில் கலைத்திருந்தவள் அவனை நன்கு முறைக்க,
“ஏன் செல்லம் முறைக்கிறீங்க….”என்று கேட்க அவனை தலையனையால் மொத்தியெடுக்க,
“இதுக்கு பேர் தான் தலையனை மந்திரமா அம்மு…..”என்று கிறக்கமாக கேட்க,
“உங்களை…..”என்று இன்னும் அடிக்க அத்தனை அடியையும் இன்பமாக வாங்கிக் கொண்டே அவளை மீண்டும் தன்னுள் இழுத்துக் கொண்டான்.ஆக அமிர்தாவை அவனை தான்டி யோசிக்கவிடாமல் செய்துவிட்டான் சிவா.
இதோ அமிர்தா,சிவா திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிற்று.மறுவீடு என்று பாரதி வீட்டிற்கும்,கீதாவின் வீட்டிற்கும் ஒருமுறை சென்று வந்துவிட்டனர்.திவ்யாவும்,கௌதமும் இப்போது கௌதமின் வீட்டில் தான் இருந்தனர்.கௌதமின் தந்தைக்கு உடல் நிலை இப்போது தான் தேறி வருவதால் கௌதம் தான் அனைத்தும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டயாம்.இன்னும் கௌதமின் வீட்டில் திவ்யாவை முழுமனதாக ஏற்க வில்லை தான் இருந்தாலும் முன்பு போல் அவளை வார்த்தைகளால் வதைக்கவில்லை.இப்போது மகனின் அருகாமையும் அவசியமாக இருக்க பெரியவர்கள் அமைதியாகிவிட்டனர்.அதோடு பேரனை பார்த்தவுடன் மற்ற விஷயங்கள் பின்னுக்கு சென்றன.
“டேய்….நாளையிலேந்து ஆபிஸ் போறியா….”என்று கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.காலையில் தான் அமிர்தாவின் வீட்டிற்கு வந்திருந்தாள்.
“ம்…ஆமா திவி….நாளைக்கு ஜாயின் பண்ணனும்…..”என்றவாரே கடாயில் எதையோ வருத்துக் கொண்டிருந்தான்.அவனின் பக்கத்தில் அமிர்தா காய்கறி நறுக்கி கொண்டிருந்தாள்,
“ஏன் உன் வீட்டுக்காரம்மா….லீவ் போடமாட்டாங்களா….அவளையும் அழைச்சிக்கிட்டு போ….”என்று திவ்யா கூற,
“எனக்கு வேலையிருக்கு…..”என்றாள் அமிர்தா,
“அட உனக்கு மட்டும் தான் வேலையிருக்கா ஏன் அவனுக்கும் தான் இருக்கு….அவன் லீவ் போடலை….நீயும் போட்டுட்டு போ….”என்று கூற,
“முடியாது…என்ன செய்வீங்க….”என்று அமிர்தா எகிறி கொண்டு வந்தாள்.
“வெளில போய் சண்டை போடுங்க….என் வேலையை பார்க்கவிடுங்க….”என்ற சிவாவின் தலையில் கொட்டிய திவ்யா,
“ஏன்டா எருமை நான் உனக்காக தான் பேசிக்கிட்டு இருக்கேன் என்னையேவே வெளில போக சொல்லுற…எருமை எருமை….”என்று கொட்ட,
“அதை அவங்க பார்த்துப்பாங்க நீ வெளில வா குள்ள எருமை…..”என்று கௌதமின் குரல் பின்னிருந்து கேட்க,
“இந்தா வந்துட்டாருல்ல உன் சீனியர்…..எப்படி தான் மூக்கு வேர்க்குமோ….”என்று அதற்கும் திட்ட,
“அவரு எங்க என்னை பார்க்க வந்தாரு அவரு உன்னை தான் பார்க்க வந்திருப்பாரு….போ….”என்று சிவா அவளின் தலையில் தட்ட,
“எல்லாம் இவளாள….”என்று அங்கு அமிர்தாவை தேட,
“அவ எப்பவோ போயாச்சு…..நீ என்கிட்ட தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்க….”என்ற சிவா சமைத்தவற்றை எடுத்துக் கொண்டு வெளியில் வர அங்கு பால்கனியில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள் அமிர்தா.
“அம்மு வா சாப்பிடலாம்….”என்று கூற,
“ம்ம்…வரேன்….”என்றவிட்டு குழந்தைக்கு உணவை கொடுக்க,திவ்யா தான் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அங்க பார்வை…”என்று கேட்டபடி அவளின் அருகில் வந்தான் கௌதம்.
“ம்ம்….இவ ரொம்ப அழுத்தமா இருக்கா….அது தான் எனக்கு கவலையா இருக்குங்க….சிவா ரொம்ப பொறுமையா தான் போறான்….ஆனா அந்த பொறுமை எல்லை கடந்துடுமோனு பயமா இருக்கு….இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுறா….”என்று வருத்தமாக கூற கௌதமிற்கும் அப்படி தான் தோன்றியது.திருமணம் முடிந்து நான்கு நாட்களில் மீண்டும் வேலைக்கு போய்விட்டாள் அமிர்தா.
பாரதி,கீதா,திவ்யா என அனைவரும் எத்தனை கூறியும் கேட்டகவில்லை ஒருகட்டத்தில் சிவா அவள் விருப்படி விட்டுவிடுங்கள் என்று கூறயவுடன் தான் அமைதியானர்கள் ஆனாலும் அவ்வபோது அமிர்தாவிடம் அதிர்ப்தியை காமித்துவிடுவாள் திவ்யா.அதுவே இருவரும் இன்னும் அதிகமாக முட்டிக் கொள்ள காரணமாக அமைந்தது.என்ன தான் அமிர்தா திவ்யாவிடம் சண்டையிட்டாலும் அதை சிவாவும் கௌதமும் கண்டுகொள்ள மாட்டார்கள்.அதனால் இருவரும் பார்த்துக் கொள்ளும் போது எல்லாம் முட்டிக் கொண்டு தான் இருப்பர்.
மதிய உணவு சிவா வீட்டில் தான் அனைவரும் உண்டனர்.
“முறைப்படி நான் தான் உனக்கு விருந்து வைக்கனும்….ஆனா பாரு….”என்று திவ்யா வருத்தமாக சொல்ல கௌதமிற்கு மனது வலித்தது.இன்னும் எத்தனை நாள் இவளும் கஷ்டப்படுவாள் என்று.அவனின் முகமாற்றத்தை உணர்ந்த சிவா,
“ப்ச்….வைக்கலாம் வைக்கலாம்…..பொறுமையா வை….எல்லாம் சரியானதும் வை….”என்று கூற,
“எங்க இன்னும் அப்படி தான் இருக்காங்க….என்ன குழந்தையை ஒதுக்கல….அது தான் ஒரு நிம்மதி…”என்று திவ்யா முகத்தில் அத்தனை வருத்தம்.
“என்கிட்ட வாயடிக்கிறீங்க….ஏன் அவங்க பேசலனா என்ன நீங்க பேச வேண்டியது தான….அவங்க பேசலை அதனால இவங்களும் பேசலையாம்….என்கிட்ட மட்டும் தான் வாய் போல…..”என்று அமிர்தா பட்டென்று கூறிவிட,
“அமிர்தா….”என்று சிவாவின் கோபக் குரலில் அவளின் உடல் அதிர்ந்து அடங்க,
“டேய் விடுடா….அது ஏதோ தெரியாம பேசிட்டு….”என்று கௌதம் சிவாவை அடக்கிக் கொண்டிருக்க,
“ஏய்….இதை நான் யோசிக்கவே இல்லை பாரேன்….”என்ற திவ்யாவின் இயல்பான பதிலில் தான் சிவா சற்று அமைதியானான்.இல்லையென்றால் சிவாவின் மற்றொரு முகத்தை இன்று அமிர்தா பார்த்திருப்பாள்.அமிர்தா திகைத்து அமர்ந்திருக்க திவ்யா என்ன பேசினாள் என்று கூட கேட்கவில்லை.
“நீ சொல்லுறது கரெட் தான் பாப்பா….”என்று அவளின் தொடை தட்ட அப்போது தான் அவளிற்கு சொரனையே வந்தது.
“ஆங்….”
“அட நீ இப்ப சொன்ன பாரு அது தான் கரெட்…இனி பாரு திவ்யா என்ன பண்ணுறேன்னு….”என்று கூற கௌதமிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
“திவி நாம கிளம்பலாம்….எனக்கு வேலையிருக்கு….”என்று கூற,
“ம்ம்…கிளம்பலாம்….ஆனா நான் உன்கிட்ட மட்டும் பேசுறேன் அவங்க கிட்ட ஏன் பேசல ஏன்….”என்று யோசிப்பது போல பாவனை செய்ய,
“ம்ம்….நீங்க என்னை வெளியாளா பார்க்கவேயில்லை அதான் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க….”என்ற அமிர்தாவின் பதில் அவளின் கன்னம் தட்டி கொஞ்சியவள்,
“என் செல்லம் கரெட்டா சொல்லிட்ட…..”என்று கூறியவள் சிவாவை முறைக்கவும் தவறவில்லை.
“டேய் இது உனக்கான வார்னிங்கு நினைக்குறேன்….அதாவது அவங்களுக்குள்ள நீ வராதனு சொல்லாம சொல்லுறா என் பொண்டாட்டி….”என்று கௌதம் சிவாவின் காதை கடிக்க,
“தேறிட்டீங்க சீனியர் நீங்க….பொண்டாட்டி மைண்ட் வாய்ஸ் எல்லாம் படிக்குறீங்க….”என்று கூற,
“பின்ன கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சுல்ல….இம்ருமென்ட் ஆகிட்டேன்…..உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கேளு….”என்று கூற,
“ஆமா இவரு அப்படியே சந்தேகத்தை கிளியர் பண்ணிடுவாரு….புரோகிராம்ல வர ஏரரையே கிளியர் பண்ண தெரியலை இன்னும் என்கிட்ட தான் தூக்கிட்டு வராரு……”என்று திவ்யா வார,
“பேபிமா கம்பெனி சீக்ரெட்டை வெளில சொல்லக்கூடாதுடா….மீ பாவம்….”என்று கெஞ்சுவது போல பாவனை செய்ய அதன் பின் நேரம் இனிமையாக கழிந்தது.அதே இனிமையுடன் இருவரும் விடைபெற்றனர்.திவ்யா கிளம்பும் முன் சிவாவிடம்,
“இங்க பாரு….அவ ஏற்கனவே பழசை மனசுல அழுத்திக்கிட்டு இருக்கா….இதுல நீ ஏன் தேவையில்லாம எங்க இரண்டு பேருக்குள்ளவர….அவ இப்படி இருக்குறது தான் எனக்கும் பிடிச்சிருக்கு….அவளை ஏதாவது சொன்ன உனக்கு தான் உதை….போ…அவளை சமாதான படுத்து….”என்று மிரட்டல் போல கூற கௌதம் நான் சொன்னேன் பார்த்தியா என்று வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்.
error: Content is protected !!