Skip to content
Post Views: 8,483
“நல்லநேரம் எப்போ முடியுது பொண்ணு மாப்பிளையை வீட்டுக்குக் கூட்டிட்டு போகணுமே” என்றார் தெய்வானை.
Advertisement
“இன்னும் நேரம் இருக்குடி உன் வீட்டுக்காரரை கவனிச்சு அனுப்பு கல்யாணத்துக்கு வந்ததே பெரிசு அதுல இவ்ளோ நேரம் இருந்திருக்காரு போச்சாப்பிட வை” என்ற கோசலை சின்ன மகனுக்குக் கண் காண்பிக்க “மாப்பிள வாங்க சாப்பிடுங்க” என்று அவர் அருகில் சென்றார் செந்தில்.
Advertisement
Advertisement
“இல்ல நான் கிளம்புறேன்” என்று நின்றார் ராஜேந்திரன்.
Advertisement
“ஒரு வாய் சாப்பிடுங்க இல்ல வேண்டாம்னா பாயசம் மட்டுமாவது குடிங்க” என்க சரி என்றவர் ஒரு கிளாஸ் பாயசம் மட்டும் வாங்கிக்கொள்ள, அவரை நெருங்கிய பூஜா “அப்பா பசிக்குது வாங்க சாப்பிடலாம்” என்றாள்.
கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆகிறது அவள் அவருடன் பேசியே, பூர்விகாவும் அவரின் அருகில் வந்து நிற்க ராஜேந்திரன் மனைவியை நிமிர்ந்து பார்த்தார் “தெய்வா வா எல்லாரும் சாப்பிடுங்க” என்ற செந்தில் அவர்களை அமரவைத்து பரிமாறினார்.
கோசலை மருமகளின் கையைப் பிடித்துக்கொண்டார் “இவங்க கல்யாணத்துல இப்படி ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டு பார்த்தது அதுக்கு அப்புறம் நம்ம குடும்ப விஷேஷம் எதுக்கும் இப்படி வந்ததில்லை, மனசே நிறைஞ்சிருக்கு பவுனு” என்றார், அதைப் பார்த்திருந்த அனைவருக்கும் சந்தோஷமே.
“நாங்க முன்னாடி வீட்டுக்குப் போறோம் நீங்கப் பின்னாடி வாங்க” என்ற பவுனு தெய்வானை மற்றும் பூஜாவை அழைத்துக்கொண்டு முன்னே சென்றுவிட்டார், வீட்டிற்கு பெண்ணும் மாப்பிள்ளையும் வந்ததும் ஆரத்தி எடுக்க வேண்டும் பால் பழம் போன்ற சடங்குகள் உள்ளதே.
அரைமணி நேரம் கழித்து செல்லலாம் என்று மற்றவர்கள் அமர்ந்திருக்க கந்தசாமியை நெருங்கிய சேனா “அப்பா சர்ச்சுக்கு போகணும்… அவளுக்கு ஒரு ஆசை இருக்கும்ல வேண்டிக்கணும்னு நான் கூட்டிட்டு போயிட்டு நேரா வீட்டுக்கு வந்திடுறேன்” என்றான் தந்தையிடம்.
“சரிய்யா பாத்து பத்திரமா போய்ட்டுவாங்க” என்றவர் “நான் சொல்லிக்கிறேன் இல்லனா ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க நீங்கக் கிளம்புங்க” என்று அவர்களை அனுப்பிவைத்துவிட்டு தாயிடமும் தம்பியிடமும் மட்டும் கூறினார்.
“அவங்கல்லாம் வரலையா…” என்றாள் மற்றவர்களைக் காண்பித்து வீட்டிற்கு போவதாக நினைத்து.
“ஹ்ம்ம் வருவாங்க நாம முன்னாடி போலாம்” என்றான் வேறு ஒன்றும் கூறாமல் நேரே சர்ச்சில் சென்று நின்றான், இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை “இங்க…!” என்றவளின் கையைக் கோர்த்துக்கொண்டவன் “வா” என்று உள்ளே அழைத்துச் சென்று “ப்ரே பண்ணிக்கோ” என்று அவள் அருகிலே நின்றுகொண்டான்.
வெகுநேரம் கர்த்தரை பார்த்துநின்றாள் இறுதியாகச் சிலுவை போட்டுக்கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தவள் “தேங்க்ஸ்” என்றாள் புன்னகையோடு மீண்டும் அவள் கைகளைக் கோர்த்துக்கொண்டவன் “போலாமா” என்க.
“ஹ்ம்ம்” என்றவள் அவனுடன் இனைந்து நடந்தாள், புகுந்தவீட்டின் சடங்குகள் அனைத்தும் முடிந்தபிறகு பூஜா அவளை முன்பு வேல்விழி உபயோகித்த அறைக்கு அழைத்துச்சென்றாள்.
“டிரஸ் மாத்திக்கோ மயூ காலைல இருந்து சாரிலே இருக்க கஷ்டமா இருக்கும், ரெப்பிரேஷ் பண்ணிட்டு கொஞ்சம் நேரம் தூங்கு ஈவினிங் கோவிலுக்குப் போறதுக்கு முன்னாடி எழுப்புறேன்” என்றவள் திரை சீலைகளை இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள்.
“கதவை நான் சாத்திட்டு போறேன் நீ ரெஸ்ட் எடு” என்ற பூஜாவின் கையைப் பிடித்தவள் “நானும் வரேன் எல்லாரும் அங்க இருப்பீங்க நான் இங்க என்ன பண்ண” என்ற நேரம் கையில் கிறீன் டீயோடு உள்ளே நுழைந்தாள் வேல்விழி.
அவள் பின்னே வந்த பவுனு “இப்போ ஒரு வேலையும் இல்ல வந்த சொந்தம் எல்லார்க்கும் பலகாரம் எடுத்து வெச்சுட்டுயிருக்கோம் அவ்ளோதான் நீ கொஞ்சம் நேரம் படுத்துத் தூங்கு ரொம்ப சோர்வா இருக்க” என்க.
“அண்ணி இந்தாங்க சூடா இருக்கு குடிங்க உங்களுக்காக அண்ணா குடுத்துவிட்டார்” என்று அவள் கையில் கொடுத்த வேல்விழி “பெரியம்மா நான் இங்கேயே இருக்கேன் பாத்துக்குறேன் நீங்கப் போங்க” என்க பூஜாவும் பவுனும் வெளியில் சென்றனர், வேல்விழி கதவை அடைத்துவிட்டு சேரில் அமர்ந்துகொண்டு போனை பார்த்திருக்க மயூரி டீயை குடித்துவிட்டு உடையை மாற்றியவள் பெட்டில் விழுந்த அடுத்த நொடி உறங்கியிருந்தாள்.
மயூரி உறங்குவதை உறுதிப்படுத்திக்கொண்டு வேல்விழி ரகுவரனை அழைக்க அழைப்பை எடுத்தவன் பேசாமலே இருந்தான் “ரகு மாமா எல்லாரும் இருக்காங்க எப்படி பேச முடியும், ஏன் இப்படி பண்றீங்க இப்போகூட அண்ணி தூங்குற ரூம்ல இருந்துதான் பேசுறேன்” என்றாள் மெல்ல, சில பல சமாதானங்களுக்கு பிறகு பேசத் தொடங்கினான் ரகு.
ஒருமணி நேரம் கடந்த நிலையில் கதவை யாரோ மெதுவாகத் தட்டிவிட்டு திறக்க அவசரமாக அலைபேசியை அப்படியே கைகளில் ஒலித்துக்கொண்டாள் வேல்விழி, அறையைத் திறந்து உள்ளே நுழைந்தான் சேனா அவனைக் கண்டதும் பதட்டத்தோடு எதுத்து நின்றாள் விழி, அவளை ஒருமுறை ஆராய்ச்சியாய் பார்த்தவன் மனைவியை நெருங்கி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
காய்ச்சல் இல்லை வைரல் பிவர் என்றிருந்தார் டாக்டர் ஆகையால் விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது மிகவும் பலவீனமாக இருப்பதால் ஒருமுறை க்ளுகோஸ் ஏற்றுவது நல்லது என்றும் கூறியிருந்தார், சோர்வாகவே இருக்கிறாள் உடனே அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
காலையில் தலைக்குக் குளித்தது குளிர் எல்லாம் சேர்ந்து மீண்டும் காய்ச்சல் வந்தால் என்ற பயம் காரணமாக அவளைக் காண வந்திருந்தான், இபோழுது சூடு இல்லை என்றதும் கொஞ்சம் நிம்மதி பிறந்தது திரும்பித் தங்கையைப் பார்த்தவன் “ஏதோ ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சாயந்திரம் லேட்டா வரியாம் என்ன கிளாஸ் என்கிட்டே இதுவரைக்கும் சொல்லல” என்றவன் குரலே அவளைப் பயம்கொள்ள செய்தது.
“இல்லன்னா நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒண்ணை நாம எடுத்துக்கலாம் காலேஜ் பீஸ்லயே வந்துடும் அதான் சொல்லல தினமும் இல்லண்ணா வாரத்துல ரெண்டு நாள்தான்” என்றாள் திக்கி திணறி, போலீஸ்காரன் மூளை எங்கோ தவறு என்றது.
“எது செஞ்சாலும் ஒண்ணுக்கு பத்துத்தடவை யோசி இல்ல வேற ஏதாவது பிரச்சனைன்னா அண்ணன்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன்” என்றவனை பார்த்தவளுக்கு தவறு செய்கிறோமோ சொல்லிவிடலாமா என்று ஒரு நொடி மனம் குழம்பியது.
“சேனா…” என்ற பவுனின் குரலில் “வரேன்மா” என்றவன் வேல்விழியை ஒருமுறை அழுத்தமாகப் பார்த்துவிட்டு வெளியேற அவளுக்கு அப்பொழுதான் மூச்சே சீரானது.
அலைபேசியை எடுத்துப் பார்க்க ரகுவரன் அழைப்பிலே இருந்தான் ‘ஐயோ இவர் என்ன கேட்டார் தெரியலையே’ என்று எண்ணியவள் “ஹல்லோ” என்க.
“என்ன சொன்னார் உங்க அண்ணா, என்ன… என்னை விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டியா” என்க அவனைச் சமாதானப்படுத்தவே அவளுக்கு அடுத்த அரைமணிநேரம் செலவானது.
“மயூ மயூ” என்று அவளை உலுக்கிக்கொண்டிருந்தாள் பூஜா.
“கோவிலுக்குப் போகணும் ரெடியாக வேண்டாமா” என்க அடித்துபிடித்து எழுந்தமர்ந்தாள் மயூரி “ஏய் மெதுவா… குளிச்சுட்டு வந்து இந்தச் சாரி கட்டிக்கோ” என்றவள் “சாரி குளிச்சுட்டுவா நானே கட்டிவிடுறேன்” என்று அங்கே அமர்ந்துகொள்ள மயூரி குளித்துவந்தாள்.
அவளுக்கு அழகாக அந்த வெயிட்லெஸ் சாப்ட் சில்க்கை கட்டிவிட்டவள் நீண்ட கூந்தலை பின்னலிட்டு நிறைய முல்லைப்பூ சூட்டினாள் “ரொம்ப அழகா இருக்க” என்றவள் “நீயும் மாமாவும் கோவிலுக்குப் போயிட்டு வாங்க” என்க.
“நீங்க யாரும் வரலையா” என்றாள் மயூரி.
“அப்பா கார் அனுப்பியிருக்கார் நானும் அம்மாவும் வீட்டுக்குப் போறோம் பூர்விகா சின்ன அத்தைக்கூட வரேன்னு சொல்லிட்டா” என்றவள் முன்னில் நடக்க அவளுடன் வெளியில் வந்தாள் மயூரி.
சொந்தங்கள் பலரும் அமர்ந்திருந்தனர் ஆண்கள் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க பெண்கள் ஆளுக்கு ஒரு வேலை செய்துகொண்டிருந்தனர் பவுனை நெருங்கிய மயூரி “நான் ஏதாவது செய்யணுமா ஆண்ட்டி” என்க.
“ஆமா” என்றவர் “ஆன்ட்டிலாம் கூப்பிடாத அத்தை கூப்பிடு” என்க “ஹ்ம்ம்” என்றாள் மெல்ல சிரித்துக்கொண்டே.
“தம்பி குளிக்கப் போயிருக்கு வந்ததும் ரெண்டு பெரும் கோவிலுக்குப் போயிட்டு வந்துடுங்க, எங்களுக்கு இங்க வேலை இருக்குடா சொந்தக்காரங்க நிறையபேர் ராத்திரி பஸ்க்கு கிளம்புறாங்க அவங்களை சாப்பிட வெச்சு பலகாரம் கொடுத்து அனுப்பனும், அதனால நீங்கப் போய்ட்டுவாங்க” என்க சேனா அவனுடைய அறையிலிருந்து வெளியில் வந்தான்.
வேட்டி கட்டி மெரூன் நிற சட்டையின் கையை மடக்கிக்கொண்டே வந்தவன் மனைவியின் அருகில் வந்து “போலாமா” என்க அவளும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள், தெய்வானை அவளின் உச்சி முகர்ந்து “சந்தோஷமா இருடா” என்றவர் “இப்போ வீட்டுக்குக் கிளம்புறோம்… சேனா உனக்கு எப்போ வரமுடியும்னு நாள் பாத்து சொல்லு அன்னைக்கே விருந்துக்கு ஏற்படு பண்ணிடலாம்” என்றவர் புறப்படத் தயாராக.
பவுனு அவரை நிற்கச்சொல்லி கையில் பெரிய பையோடு வந்தார் “என்ன இது” என்றவரிடம் “பலகாரம் இருக்கு அதோடு ராத்திரிக்கு அங்க போய் என்ன சமைக்க போறீங்க அதனால சாப்பாடு வெச்சுருக்கேன் அண்ணனுக்கும் குடுங்க” என்று தெய்வானையின் கையில் வைத்தார் வாங்கிக்கொண்டு தாயும் மகளும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
உறவுகளை மயூரிக்கு தெரியாது என்பதால் சேனாவே அவளை அருகில் நிறுத்திக்கொண்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டான் “சாப்பிட்டு போங்க” என்று தனி தனியாக அனைவரிடம் சொல்லிவந்தவனை பார்த்தவள் “அவங்களே சாப்பிட மாட்டாங்களா நாம சொல்லனுமா” என்க சிரித்தவன்.
“அதெல்லாம் மரியாதை எவ்ளவோ வேலைக்கு நடுவுல நமக்காக இவ்ளோ தூரம் வந்திருக்காங்க, அதோடு நம்ம வீட்டுக்கு வரவங்கள வெறும் வயிறா அனுப்பக் கூடாது தனித்தனியா அவங்களுக்கான மரியாதையை நாம செய்யானும், அதோட இதுல பாதிபேர் நாம கோவில் போயிட்டு வரும்போது ஊருக்குக் கிளம்பியிருப்பாங்க” என்றான்.
“இவ்ளோ விஷயம் இருக்கா” என்று விழித்தாள் அவள் “இதெல்லாம் ஒண்ணுமில்ல போகப் போக உனக்கே புரிஞ்சிடும் பிரியா விடு பொறுமையா தெரிஞ்சுக்கலாம்” என்றான்.
இரவு அங்கேயே தங்கும் சில சொந்தங்களின் பிள்ளைகள் ‘நாங்களும் வரோம்’ என்று அவர்களுடன் வண்டியில் ஏறிக்கொள்ள பிள்ளைகளின் சந்தோஷ ஆர்ப்பரிப்போடு கோவிலுக்குச் சென்று வந்தனர் தம்பதிகள்.
வீட்டிற்கு வந்து மற்றவர்களுடன் சேர்ந்து உணவருந்தி அமர்ந்திருக்க கனகம் வீட்டிற்கு சென்று காலை வருவதாகக் கூறி வந்து நின்றார், கோசலை அதிர்ப்பதியாகப் பார்த்தார் என்றாலும் ஒன்றும் கூறவில்லை.
“ஏன் கனகம் இங்கேயே படுத்துக்கலாம் நாளைக்கு போலாம்” என்றார் பவுனு “இல்ல வந்த எல்லாரும் படுக்கணுமே இடம் வேணும்ல” என்க.
“ஆமா அண்ணி அதுவும் சரிதான்” என்ற செந்தில் ஆண்கள் சிலரை தன்னுடன் அழைத்துக்கொண்டு “நாங்க அங்க படுத்துக்குறோம் மீதி கொஞ்ச பேர்தானே நீங்க இங்கேயே படுத்துக்கோங்க, நாங்க காலைல வரோம்” என்றவர் விழிகள் மனைவியைக் கண்டனமாகப் பார்த்தது, விழிக்குத்தான் தவிப்பாக இருந்தது தினமும் இரவு ரகுவுடன் பேசுவாள் அவளுக்குத் தனி அறை என்பதால் இன்று முடியாதே அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அன்னையுடன் படுத்துக்கொண்டாள்.
“நீ ரூமுக்கு போடாச் சேனா வெளில பேசிட்டு இருக்கான் வந்துடுவான்” என்ற பவுனு அவளை அவனுடைய அறையில் விட்டுவந்தார், அந்த வீட்டின் இறுதியில் இருக்கிறது அவனுடைய அறை தோட்டத்தை ஒட்டி.
வெளியில் சக்தி மற்றும் மோனிகாவுடன் பேசிக்கொண்டிருந்தான் சேனா, கோவிலுக்குப் போவதற்கு முன்பு சக்தியை அழைத்தவன் “எங்க இருக்க” என்க.
“இங்கதான் சார் ஆபிஸ்ல… மோனிகாவும் இங்கதான் இருக்காங்க” என்றான் அவன்.
“சரி நேரா சுந்தர் வீட்டுக்குப் போய் நம்ம மிரட்டல வாபஸ் வாங்கிட்டு வீட்டுக்கு வாங்க ரெண்டுபேரும் நைட் இங்கதான் சாப்பாடு” என்க “டன் சார்” என்றவன் மோனிகாவுடன் சுந்தர் வீட்டில் சென்று நின்றான்.
இவர்களைப் பார்த்த சுந்தர் பதட்டதோடு வெளியில் வந்து “சார் நான் முதலாளிக்கு எதுமே சொல்லல சார், நீங்கதான் என் போனை ஒட்டுகேக்குறீங்களே உங்களுக்கே தெரியுமே நான் எதுவும் சொல்லல” என்றார்.
“தெரியும் சுந்தர் சார் அப்போ சொல்லக்கூடாதுன்னு சொன்னோம் இப்போ சொல்லணும்னு சொல்றோம்” என்க.
“சார்?” என்றார் அவர் புரியாமல்.
“அதான் சுந்தர் சார் ஓஸ்கருக்கு கால் பண்ணி இந்த மாதிரி உங்க பேத்திக்குக் கல்யாணம் ஆயிடுச்சு உடனே வாங்கன்னு சொல்லணும், நீங்க நச்சுனு போடுற நங்கூரத்துல உங்க முதலாளி அடிச்சு பிடிச்சு ஓடிவந்திரனும் புரிஞ்சுதா” என்றவன் மோனிகாவுடன் சேனாவின் வீட்டிற்கு வந்துவிட்டான், இரவுணவை முடித்தவர்கள் ஒஸ்கர் வந்தபிறகு செய்யவேண்டியதை பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர், மயூரி மிராண்டா பற்றிய அனைத்து உண்மைகளையும் கந்தசாமிக்கு மட்டும் சொல்லியிருந்தான் சேனா.
சக்தியும் மோனிகாவும் விடைபெற்றபிறகு அவனுடைய அறைக்குச் சென்றான், உள்ளே கட்டிலில் அமர்ந்து அதன் மேலே அலங்காரமாகத் தொங்கிக்கொண்டிருந்த பூக்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாள் மயூரி, கதவை அடைத்தவன் அவளின் முன் சென்று நின்றான் சில நொடிகள் அவளைப் பார்த்திருந்தவன் “கொஞ்சம் எழுந்திரு” என்க.
அவளும் எழுந்து நின்றாள் ஒருமுறை அவளை மொத்தமாக விழிகளில் நிரப்பியவன் “சூப்பர்” என்க.
“என்ன!” என்று பார்த்துநின்றாள் அவள்.
“ஒண்ணுமில்ல ஈவினிங் சரியா ரசிக்கமுடியல” என்றவனை அவள் முறைக்க, சத்தமிட்டு சிரிர்த்தவன் அவளைத் தன் கையணைப்பில் வைக்க அந்தக் கன்னக்குழியில் தன் சுட்டுவிரலை வைத்து அழுத்தியவள் எக்கி அழுத்தமான முத்தமொன்றை பதித்தாள்.
“உங்களுக்கு வேட்டி சட்டை ரொம்ப அழகா இருக்கு தேவா” என்றவளை பார்த்தவன் இதழ்கள் மீண்டும் அழகாக விரிந்தது, அவள் விழிகளில் தன் இதழியொற்றியவன் அவளை அப்படியே தன்னோடு சேர்த்தனைத்தான், சில நொடிகள் அப்படியே நின்றவன் அவளை அணைத்துக்கொண்டு கட்டிலில் சரிந்தான்.
தன் மீது அவளைப் போட்டுக்கொண்டவன் “சாரி மாத்துணுமா” என்றான் அவள் செவிகளில் காற்றாக.
“ஹும்ஹூம்” என்றாள் மெல்ல.
“அப்போ அப்படியே தூங்கலாமா” என்றவனை சட்டென்று அவள் நிமிர்ந்து பார்க்க “நீ பக்கத்துல இருக்கணும் இபோதைக்கு அவ்ளோதான் யோசிச்சேன், எங்க அம்மா சமைக்குறத நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து என்னைத் தாங்கச் சத்து வேணும்ல இப்போ அழுத்தி முத்தம் குடுத்தா கூட ரெண்டுநாள் படுத்துடுவ போல” என்றான்.
அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை இமைக்காமலே அவனைப் பார்த்திருந்தவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “என்ன” என்க.
“ஒன்றுமில்லை” என்று தலை அசைத்தவள் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள், உடலில் சோர்வும் வலியும் நிறைய இருந்தது என்றாலும் அவன் நெருங்கினால் எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது என்றே அவள் முடிவு செய்திருந்தாள், அதற்க்கு தேவையே இல்லாமல் அவள் வலியை உணர்ந்துகொண்டான் உண்மையில் அவனுடன் இழைந்திருந்தால்கூட மனம் இத்தனை நிம்மதியையும் நிறைவையும் பெற்றிருக்குமா தெரியவில்லை.
“குட்நைட் பொண்டாட்டி” என்றவன் இதழில் அழுந்தி முத்தமிட்டவள் மீண்டும் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவன் மார்பில் ஒன்றினாள் தன்னோடு அவளை இறுக்கியவன் விழிகளும் அயர்வில் உறக்கத்தை தழுவியது.
“ஆண்ட்டி… இல்ல இல்ல அத்த சாப்பிட முடியல அப்புறம் சாப்பிடவா” என்றவளை பார்த்தவர் அவள் கையில் இருந்த கிளாஸை பார்த்தார் கொடுத்த ஜூஸில் பாதி அப்படியே இருந்தது “சரி விடு அப்புறமா வேற தரேன்” என்றவர் அடுக்கலைக்குள் செல்ல “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டவள் தங்களுடைய அறைக்கு எதிரிலிருந்த ரூமிற்குள் நுழைந்தாள்.
அந்த அறையை அவளுடைய தேவைக்காக ஒதுக்கியிருந்தான் சேனா கடந்த இருப்பது நாட்களாக அங்குதான் வேலை செய்கிறாள் யாரையும் உள்ளே விடுவதில்லை “வரைஞ்சு முடிச்சுதான் பாக்கணும்” என்றவள் அவனைக்கூட அதற்குள் விடவில்லை, திருமணம் முடிந்த மறுநாள் மதியம் விருந்து உண்டுகொண்டிருக்க அவசரமாக எழுந்து ஓடியவள் மொத்தமாக வாமிட் செய்துகொண்டிருக்க கனகமும் கார்த்திகாவும் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.
மற்ற அனைவரும் பதறிவிட்டனர் அப்படியே அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டு ஓடினான், மற்றவர்கள் வரும்முன் மருத்துவமனையை அடைந்திருந்தான் “இன்பக்ஷ்ன் ஆயிருக்கு சரியான சாப்பாடுயில்ல தூக்கம் இல்ல ஷி நீட் கம்பிளீட் ரெஸ்ட் சேனா மென்டல்லி டிஸ்டர்ப் ஆயிருக்கா கொஞ்சம் நல்லா பாத்துக்கணும்” என்றவர் “உங்களுக்கு இடையில…” என்று கேட்க.
“இல்ல டாக்டர் எனக்குத் தெரியும் அவளுக்கு இன்னும் உடம்பு சரியாகல” என்றான்.
“ குட் நல்லவிஷயம்” என்றவர் “ரெண்டுநாள் இங்க இருக்கட்டும்” என்றார், வீட்டினரும் வந்திருந்தனர் பவுனிற்கு புரிந்துவிட்டது அவர்கள் வாழத் தொடங்கவில்லை என்று மருமகளை நல்ல விதமாகத் தேற்றி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த நாள் முதல் அவளுக்கு அனைத்தையும் பார்த்துச் செய்கிறார்.
நேரத்திற்கு சத்தான உணவு, பழங்கள் முழு ஓய்வென்று சர்ச்சில் நடந்துகொண்டிருந்த வேலைக்குக் கூடப் போகவிடவில்லை வீட்டிலிருந்து போர் அடிக்க அந்த அறையை அவளுக்கென்று மாற்றிக்கொடுத்துவிட்டான்.
“வாங்க” என்ற கந்தசாமியை முறைத்து பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் ஒஸ்கர் “மரியாதை தெரிஞ்சவங்கன்னு நினச்சேன் ஆனா இவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டிங்க” என்றார் உள்ளே நுழையும் முன்பே.
“மரியாதை… என் அப்பாகிட்ட பேசும்போது மரியாதை ரொம்ப முக்கியம் மிஸ்டர் ஒஸ்கர்” என்றவன் “நீங்க எது கேக்குறதா இருந்தாலும் என்கிட்டே மட்டும்தான் கேக்கணும் இது என்னோட முடிவு” என்றான்.
அவன் அருகில் வந்த மயூரி “தேவா என்னாச்சு ஏன் இவ்ளோ கோபமா கிராண்ட்பா கிட்ட பேசுறீங்க, என்ன பிரச்சனை” என்றாள்.
“ ஒண்ணுமில்ல குட்டிமா நீ டென்ஷென் ஆகாத” என்றான்.
“கிராண்ட்பா…” என்று வேகமாக ஒஸ்கரை நெருங்கினாள், அவள் கையைத் தட்டி விட்டார் கோபமாக.
“நான் அவ்ளோ சொல்லியும் இவன்கூட இப்படி நிக்குற வெக்கமா இல்ல நன்றி கெட்டவ” என்றார் ஆத்திரத்தோடு.
“ஸ்டாப் இட்” என்றவன் அவளைத் தன் அருகில் பிடித்து நிறுத்தினான் “நீங்கச் செஞ்ச கேவலமான காரியத்தை இப்போ இங்க நான் பேச விரும்பல, அவளுக்கு உடம்பு சரியில்ல இப்போதான் சரியாட்டு வராச் சோ நீங்கக் கிளம்புங்க” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.
“நான் என்ன செஞ்சேன், மிஞ்சிப் போனா அவளைக் கூட்டிட்டு ஊர் சுத்துவன்னு நினச்சேன் அதுக்குமேல தப்பு நடந்தாலும் பரவாயில்ல அதெல்லாம் அவளுக்குப் பாத்த மாப்பிளைக்கு பெரிய விஷயம் இல்ல, சோ திரும்பி வந்ததும் இவளைக் கூட்டிட்டு போகணும்னு முடிவு செஞ்சிருந்தேன்”.
“இவளோட பாஸ்போர்ட் காணாப்போச்சு இல்லனா அப்போவே கொண்டுபோயிருப்பேன், ஆனா நீ இப்படியொரு காரியம் பண்ணியிருக்க” என்றவர் பேசிக்கொண்டே செல்ல.
“ச்சீ நிறுத்துயா” என்றார் பவுனு.
ஒஸ்கர் அவரை அதிர்ச்சியாகப் பார்க்க “என்னையா நினைச்ச என் பிள்ளையை, உரிமையா தாலி கட்டி கொண்டுவந்த அப்பறம்கூட பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு அவளைக் கொழந்தை மாதிரி பாத்துகிட்டு தள்ளி இருக்கான் அப்படிப்பட்ட பிள்ளைகளைத் தப்பு நடந்தாலும்ன்னு கேவலமா பேசுற, இன்னொருத்தனுக்கு மனசையும் உடம்பையும் கொடுத்த பொண்ணை கட்டாயப்படுத்தி கட்டிக்குறவன் உனக்கு யோக்கியனா உன்னைப் போய்ப் பெரியமனுஷன்னு நினைச்சோமே” என்றார்.
“இவர் பெரியமனுஷனா? சுயநலவாதி இவரைவிட இவர் பொண்ணு…” என்ற தந்தையை “அப்பா” என்று சேனா தடுக்க பார்க்க “சேனா அந்தப் பிள்ளைக்கிட்ட உண்மைய சொல்லிடுயா எவ்ளோ நாள் மறைக்கப் போற எல்லாத்தயும் சொல்லிடலாம்” என்ற மாமனாரை பார்த்தவள்.
“மாமா என்ன ப்ளீஸ் சொல்லுங்க” என்றவளை தன்னோடு சேர்த்தனைத்தவன் “மயூ வேண்டாம் ஒண்ணுமில்ல” என்றான்.
“இல்ல எனக்குத் தெரியணும் சொல்லுங்க ப்ளீஸ்” என்றாள்.
“எதமா சொல்ல… உன்ன பெத்தவ இன்னும் சாகல வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனுக்கு ஒரு பிள்ளையையும் பெத்துக்கிட்டு சுகமா வாழுறா, அவ புருஷன் பட்ட கடனை அடைக்க உன்னை அடமானம் வைக்கப் பார்த்தார் இந்தப் பெரியமனுஷன் அதுக்குதான் உன்னை ஊருக்குக் கூட்டிட்டு போகப் பார்த்திருக்கார், உங்க கல்யாணமே அதனாலதான் அவசரமா நடந்தது” என்றார் கந்தசாமி.
எந்தச் சலனமும் இல்லை அவளிடம் மூச்சுக்கூட வருகிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு “மயூ… மயூ…. என்னைப் பாரு அவங்க யாரும் வேண்டாம் நான் இருக்கேன் உனக்கு” என்றவன் அவளை உலுக்க அப்பொழுதும் அதே அமைதி வெறித்த பார்வையே.
“மயூ” என்றவன் வேகமாக அவள் கன்னத்தில் அடிக்கச் சட்டென்று ஒரு வேகமூச்சு எழ உரக்க சத்தமிட்டு அழத்தொடங்கினாள், அவளை அப்படியே அணைத்துக்கொண்டு தங்களின் அறைக்குள் நுழைந்தவன் கதவை அறைந்து சாற்றினான்.
error: Content is protected !!