Post Views: 1,346
இரவு பொழுது பகலவனை விட்டு பிரிய மனமின்றி அவன் சுடர்களில் கை கோர்த்து மெது மெதுவாக விடை கொடுக்க, விடுதலையை எண்ணி பறவைகள் கூட்டம் தங்கள் கூடுகளிலிருந்து வெளியேறி வானத்தில் ஊர்வோலம் நடத்த, மலர்கள் அழகாய் மொட்டுகளிலிருந்து வெளிவர, எங்கிருந்தோ வந்த வண்டுகள் நொடியில் அந்த பூக்களின் தேனை உறிஞ்சி ருசி பார்க்க துவங்கின.
பறவைகள் கீச்சொலியில் கண்களை திறந்த கார்த்தி கண்களுக்கு நேர் எதிராக நீல வானமும் அதில் புல் போல் தென்னை மரங்களும் காட்சியளிக்க ஒரு நிமிடம் திடுக்கிட்டான், “அய்யய்யோ நெஜமாவே கேன்சர் வந்து சொர்கத்துக்கு வந்துட்டேனா?” பதறினான்.
“நீ எல்லாம் சொர்கத்துக்கு போக மாட்டடி, நேரடியா நரகம் தான்”
ப்ரேம் குரல் வந்ததும் தான் நிதானம் பிறந்தது, அதை வெளியில் காட்டாமல் எழுந்து கைகளை தலைக்கு மேல் நெட்டி முறித்து, “சொல்லிட்டாருயா பெரிய கவர்னரு” என்றான் கண்களை அந்த இடம் முழுதும் படரவிட்டு.
Advertisement
சுற்றிலும் வெறும் தென்னை தோப்பும் வயலும் தான் ஆனால் அதை தாண்டி எங்கும் பொட்டல் காடு மட்டுமே. கிராமங்களில் பொதுவாக அதிகம் இருப்பது வயல்களும், தண்ணீர் தாராளமாய் இருக்கும் ஆறு, குளம், அருவிகள் தான்.
ஆனால் இங்கு அது எதுவும் இல்லை. ஆங்காங்கு சிறு வயல்கள் மட்டுமே. கார்த்தி கத்திய சத்தத்திலே எழுந்த ஹரி நண்பர்கள் இருவருக்கும் காலை வணக்கத்தை வைத்தான்.
“ஏண்டா நேத்து என்ன ஆட்டம்? வந்த விசயத்துல நீங்க குடுக்குற முக்கியத்துவம் கொஞ்சம் கூட இல்ல” என்றான் ப்ரேம் பற்களை துலக்கிக்கொண்டே.
Advertisement
இவர்கள் இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு தொட்டியில் தான் அமர்ந்திருந்தான் கார்த்தி. தனக்கு அருகில் படுத்திருந்த சிவாவை மெதுவாக கால் கொண்டு ஹரி எழுப்ப, அவனோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்.
Advertisement
“இவனே பீல் பண்ணாம ஜாலியா இருக்கான். இதுல நான் பீல் பண்ணி என்ன ஆக போகுது” ஹரி சந்தேகமாய் ப்ரேமை பார்த்தான்.
அவனோ இன்னும் முறைப்படி கொஞ்சமும் கை விடாமல், “நீங்க எல்லாம் மாசமா இருந்து ஸ்கேன் எடுத்தா உங்க வயித்துக்குள்ள வண்டி வண்டியா பீர் பாட்டில் தான் இருக்கும்”
“நான் ஏண்டா மாசமாக போறேன்?” ஏகத்திற்கும் குழம்பி ப்ரேமை பார்த்த ஹரியை பார்க்க பார்க்க கார்த்திக்கு சிரிப்பு வந்தது.
Advertisement
“என்னடா இவன் இன்னும் எந்திரிக்காம இருக்கான், இன்னேரம் ஒரு பூஜை போட்டு நெய்வேத்தியமே பண்ணிருப்பானே” சிவாவை பார்த்து குழம்பி பொய் கேட்டான் ஹரி.
“நேத்து நீங்க பண்ண கூத்த பாத்து பயந்துதான்” கார்த்தி இருக்கும் இடம் சென்று, “தள்ளு பம்புசெட்ல குளிக்கணும்னு பல வருஷம் ஆசை”
அந்த நொடி சரியாக ஒரே நேரத்தில் இரண்டு மணி அடித்தது போல் ஹரியும் கார்த்தியும் ஒருவரை ஒருவர் சிரிப்புடன் பார்க்க கார்த்தி அங்கிருந்த வேகமாக ஓடி ஹரி இருக்கும் இடத்திற்கு வர, ஹரி சிவாவின் தலைக்கு மேல் வந்து நின்று அவன் கையை பிடித்துக்கொண்டான், கார்த்தி அவன் காலை பிடிக்க அவனை அப்டியே தூக்கி பம்ப்செட் தொட்டி அருகில் தூக்கி வந்தனர்.
“டேய் அவனை விடுங்கடா…” பதறிக்கொண்டு ப்ரேம் வர, அவனை ஹரி ஒரே தள்ளில் தள்ளி, “ஏதாவது உதவி பண்ணனும்னு தோணுச்சுனா வீடியோ எடு” என்று கட்டளையிட்டு ஊஞ்சல் போல் சிவாவை ஆட்டி ஒரே வீச்சில் அந்த பெரிய தொட்டியில் போட்டனர்.
விழுந்த அடுத்த நொடி, “ஐயையோ சுனாமி… சுனாமி காப்பாத்துங்க…” என்று சிவா ஒரு நொடி செய்வதறியாது தவிக்க அவன் கத்தியதை கேட்டு நண்பர்கள் மூவருக்குமே அடக்க மாட்டாத சிரிப்பு தான் வந்தது.
தண்ணீர் கண்களில் பட்டு தெளிந்தவுடன் தான் காலை தொட்டியில் ஊன்றி எழுந்தான். எழுந்தவுடன் அருகில் தொட்டியை பிடித்து சிரித்துக்கொண்டிருந்த கார்த்தியின் கழுத்தை பின்னாலிருந்து பிடித்து அப்டியே தொட்டிக்குள் இழுத்துப்போட்டான்.
“போடு ஸ்மாக்…” WWE தளத்திற்கே சென்றுவிட்டான் ஹரி. அவனையும் பின்னாலிருந்து ப்ரேம் தள்ளிவிட இப்பொழுது ஹரி, கார்த்தி, ப்ரேம் மூவரும் அந்த தொட்டியில்.
மூவரும் சிரிப்பை சற்று அடக்கி திரும்ப அங்கு முத்து இவர்கள் நால்வரையும் தான் பாத்ரூகொண்டிருந்தார் இதழில் ஒரு சிரிப்புடன். அந்த சில நொடி இடைவேளையில் அவர்கள் மூவரும் இணைந்து ப்ரேமையும் உள்ளே இழுத்து போட, “டேய் விடுங்கடா எருமைகளா, யாராவது பாத்தா தப்பா நெனச்சுப்பாங்கடா” என்றான் தண்ணீரில் கால்களை உதைத்துக்கொண்டே.
“ண்ணே நீங்க தப்பா நனைப்பிங்களா எங்களை?” என்றான் கார்த்தி முத்துவை பார்த்து.
“இதுல என்ன தம்பி இருக்கு, வயசு பசங்க. சந்தோசமா இருங்க” என்று பம்ப் செட்டையும் போட்டுவிட்டார் அவர்களுக்காக.
“ண்ணே… ரொம்ப தேங்க்ஸ் ண்ணே” அதன் பிறகு அடுத்த ஒரு மணி நேரம் நால்வரும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டும், மிதித்துக்கொண்டும் பொழுது கழிய ஒரு இன்பமான காலைப்பொழுதாகவே தோன்றியது நால்வருக்கும்.
“குளிக்க கூடாதுன்னு நெனச்சவனே குளிக்க வச்சிட்டாங்க லூசு பயலுக” முணுமுணுத்துக்கொண்டே தலையை துவட்டிய கார்த்தி அங்கு வீட்டின் வெளியே மாட்டி இருந்த கண்ணாடி முன்னாள் சென்று நின்றான்.
“இது ஒரு மூஞ்சி மயிறுன்னு எப்ப பாத்தாலையும் என்ன வந்து பாத்துட்டே இருக்கன்னு கண்ணாடி காரி துப்புது மச்சி” என்றான் ஹரி அவனுக்கு முன்னாள் வந்து நின்று தலையை கைகளால் சீவி.
அவன் தலையை கலைத்துவிட்டு கார்த்தி, ஹரியை முறைக்க, “நான் சொல்லல மச்சி கண்ணாடி சொல்லுச்சு”
அதற்குள் பின்னாலிருந்து, “எவண்டா அவன் என் ஜட்டிய திருடுனது?” சிவா இவர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்தான் சந்தேகமாக.
சலித்துக்கொண்ட கார்த்தி, “நீ எல்லாம் ஜட்டி போடுவன்னு எனக்கு இப்ப தான் தெரியுது”
அவனை நோக்கி இடுப்பில் வெறும் துண்டுடன் வேகமாக வந்த சிவா, “எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்கு” என்றான்.
கார்த்தி கீழே சற்று குனிந்து, “கிட்ட வராத வந்த துண்டை புடிச்சு கழட்டிவிட்ருவேன்” அப்படியே பின்னால் இரண்டடி சென்றான் சிவா.
“டேய் அலும்பு பன்னாதீங்கடா, சிவா இந்தா இங்க வச்சிட்டு அவன்கிட்ட போகாத, சுத்தி முதல நல்லா தேடிட்டு அப்றம் அடுத்தவங்ககிட்ட கேட்டு பழகு” திட்டிக்கொண்டே அவன் கையில் கொடுக்க, கார்த்தியைப் பார்த்து ஒற்றை விறல் காட்டி எச்சரிக்கை செய்ய, கார்த்தியும், ஹரியும் இணைந்து கை கட்டி குனிந்து பயப்படுவது போல் நடித்தனர்.
காலை உணவருந்தி ஏகத்திற்கும் முத்துவின் மனைவியை புகழ்ந்து தள்ள அவருக்கு ஒரு கட்டத்தில் வெட்கம் கூட ஒரு ஓரத்தில் வர துவங்கியது.
கை கழுவி அப்பொழுது தான் தன்னுடைய கைபேசியின் நினைவே வர, காலை பத்து மணி போல தான் அதை எடுத்து உயிர் கொடுத்தான் கார்த்தி. எடுத்தவுடன் அபர்ணாவின் எண்ணிலிருந்து நாற்பத்திற்கும் மேல் அழைப்புகள் வந்திருக்க வேகமாக தோட்டத்தினுள் சென்று அவளுக்கு அழைத்தான், அவன் பின்னாலே ஹரியும் வந்தான் ஓரளவிற்கு யாரை அலைகிறான் என்று யூகித்து.
அந்த பக்கம் அழைப்பை எடுத்ததும், “என்கிட்டே பேச இவ்ளோ ஆர்வமாங்க? சொல்லுங்க என்ன சொல்லணும்?” குரலை சற்று மாற்றி தான் அணிந்திருந்த கருப்பு சட்டையின் காலரை சரி செய்தான்.
“டேய் அறிவுகெட்ட முண்டம்” அபர்ணா அலற, உடனே காதை விட்டு ஒரு அடி தள்ளி கைபேசியை வைத்து மிரண்ட விழிகளுடன் ஹரியை பார்த்து, “எனக்கு இந்த பொண்ணு வேணாம்டா மச்சி” பேய்யை பார்த்த பயம் அந்த கண்களில்.
“அப்டி என்ன பேசிருப்பா…” என்ற யோசனையிலே ஹரி அவன் கைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட, “ச்சை மனுஷனுங்களாடா நீங்க? எத்தனை தடவ உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேன், போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு அப்டி என்ன கிழிக்கிற வேலை உனக்கு?” ஹரி வாயை பொத்தி சிரித்துக்கொண்டிருந்தான் கார்த்தியை பார்த்து.
“டேய் நான் பேசுறது கேக்குதா?” இன்னும் சத்தமாக பேசினாள் அபர்ணா. இந்த பக்கம் விட்டால் அலுத்துவிடுவான் போல் கார்த்தி.
இவர்கள் இருவரும் இங்கு ஏதோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்து ப்ரேம், சிவாவும் வந்தனர். “ம்ம்ம் கேக்குதுங்க” என்றான் பாவமாக.
“உவ்ப்…” அந்த பக்கம் அபர்ணா கோவத்தை கட்டுப்படுத்த பெருமூச்சு விட்டு, “சாரி ஏதோ கோவத்துல பேசிட்டேன். நேத்து ஏங்க வரல?” அவள் குரலிலும் இயலாமை தான்.
“எங்க?” அதானே எங்கே வரவில்லை? அனைவருக்கும் குழப்பம் தான், ஹரியை தவிர, அவனோ நாட்டுக்கோழியை ஒரு பிடி பிடித்த மகிழ்ச்சியில் பல்லை குத்திக்கொண்டிருந்தான்.
“நான் சொன்ன இடத்துக்கு…”
“ஓஓ நீங்க தான் கள்ளு விக்கிற இடத்தை சொன்னிங்களா ரொம்ப தேங்க்ஸ்ங்க… எங்க பல வருஷம் கனவு அது…” பயம் எல்லாம் சென்று ஒரேடியாக மகிழ்ச்சி அவன் பேச்சில்.
“ஓஓ அப்ப ராஜாக்கள் நாலுபேரும் கொண்டாட்டமா அந்த புரத்துல சந்தோசமா இருந்திருக்கிங்க?” அவள் குரலில் இருந்த கோவத்தை உணராமல்.
“ஐயோ அந்த ஒரு வருத்தம் மட்டும் தாங்க… சுத்தி ஒரு நாலு பொண்ணு இருந்தா இன்னும் மஜாவா இருக்கும்…ஹ்ம்ம்ம் எங்களுக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான் போல. எனிவேஸ் கோடான கோடி நன்றி ஏசப்பா… கோடான கோடி நன்றி”
“சரக்கடிச்சிட்டு எனக்கு நன்றி வேற ஒரு கேடு. நான் கோவிலுக்கு வர சொன்னா நீங்க கள்ளு குடிச்சிட்டு கூத்தடிச்சிருக்கீங்க. இதுல பெருமை மயிறு வேற…” பொரிந்து தள்ளினாள் கோவத்தில்.
“எங்களை எப்ப நீங்க கோவிலுக்கு வர சொன்னிங்க? என்ன எங்களை மாதிரியே நீங்களும் சரக்கடிச்சிருந்திங்களோ?” என்றான் கார்த்தி குரலை சற்று குறைத்து.
“உங்க கூட ஒரு தெண்ட கருமாந்திரம் சுத்திட்டு இருக்கும்ல அது எங்க? அதுகிட்ட கேளுங்க. அதுகிட்ட தான் சொன்னேன்”
எங்கையோ பார்த்துக்கொண்டிருந்த ஹரி வேகமாக திரும்பி, “நான் என்ன ஆடா மாடா அது இதுன்னு பேசிட்டு இருக்கா வாய மூட சொல்லுடா”
“பேசுனது எல்லாம் கேட்டுட்டு வாய மூடிட்டு இருந்தல அப்ப நான் பேசுறத கேட்டு தான் ஆகணும். நேத்து உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?” அபர்ணா குரலில் கோவம் இல்லை ஏதோ ஒரு இயலாமை.
தன்னையே நண்பர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பது அறிந்தும் அவர்கள் பக்கம் திரும்பாமல், “என்ன சொன்ன ஒன்னும் சொல்லலையே…” என்றான் அசால்டாக தோளை குலுக்கி.
“புளுகுணி மூட்டை, பொய் சொல்லாதடா, யமுனா கோவிலுக்கு அவ அண்ணனோட போறா, இப்ப போனா ஈஸியா கடத்திடலாம்ன்னு. அப்ப சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு தண்ணி அடிக்க போய்ட்டியா?”
ஒரே நேரத்தில் நண்பர்கள் மூவரும் ஹரியை பார்த்து, ‘இது எப்படா நடந்துச்சு?’ என்ற ரீதியில் பார்க்க, அவர்களை பார்த்து நாக்கை துருக்கி காட்டி, “சும்மா” என்றான் சிரிப்புடன்.
“நீ என்ன அப்டியா சொன்ன?” கண்கள் கைபேசி திரையை விட்டு அகலவில்லை ஹரிக்கு.
“டேய் டேய் நடிக்காத டா…” முதல்வன் அர்ஜுன் போல் பேசி, நண்பன் நடிப்பை கண்டுகொண்டான் கார்த்தி.
“இவன நம்பி இருங்க உங்களுக்கு இதுவும் வேணும் இன்…” இணைப்பை துண்டித்தான் ஹரி. அபர்ணா மீண்டும் அழைக்க அவன் கைபேசியை வம்படியாக பற்றி தன் பாண்ட் பாக்கெட்டில் வைத்தான்.
“அவ பேச்ச கேக்குறத நிறுத்துங்க. நாம யாரையும் நம்பி இங்க வரலடா. அதுவுமில்லாம நாம நேத்து சிவாக்காக ஜாலியா இருந்தோம். போயிருந்தா அந்த சந்தோசம் வந்துருக்குமா சொல்லுங்க, அதுவும் அவ என்கிட்டே அவளோட அண்ணன் மட்டும் தான் கூட வர்றான்னு சொன்ன இடத்துல சந்தேகம். ஊர் முழுக்க ஆள் வச்சிருக்கான் அவ அப்பன். ஊர் வெளிய இருக்க கோவிலுக்கு அவ அண்ணனோட மட்டுமா அனுப்பி வைப்பான்?” ஏதோ வாய்க்கு வந்ததை அவன் பேசி வைக்க, அவர்கள் ஒரு வேலை இருக்குமோ என்று ஆமோதிப்பாய் தலையை ஆட்டினர்.
“நீ சொல்றது சரி தான் மச்சி…” சிந்தனையில் கார்த்தியும் கூறினான்.
“சரி இப்ப நாம என்ன தான் பண்ண போறோம்?” சாதுவான சிவாவிற்கு ஒரு எல்லைக்கு மேல் பொறுமை பறந்தது.
“மச்சி கூல். வாங்க போகலாம். போறோம் பொண்ண தூக்குறோம்” என்றான் ஹரி.
“எப்படி சொல்லி ராசா உள்ள போவ? பொண்ண கடத்த வந்துருக்கோம்ன்னு சொல்லியா?” ப்ரேம் நக்கலாகக் கேட்டான்.
“நீ இருக்கறப்ப நாங்க எதுக்கு மாப்பிள்ளை கவலைப்படணும்?”
“நான் என்னத்த சொன்னேன்?”
“நேத்து நீ தான் சொன்னியே நாம பல்லக்கு தூக்க வந்துருக்கோம்ன்னு”
“டேய் அது நீ உண்மையை வெளிய சொல்லிட கூடாதுன்னு சொன்ன பொய் டா”
“அத நெஜமாக்கிடலாம்” என்றான் கார்த்தி இடையில் வந்து.
அவனைப் பார்த்துச் சிரிக்க ஹரி, “மச்சி உனக்கு அறிவு வளருது போல” என்றான் ஆச்சிரியமாக.
கார்த்தி வெட்கத்துடன், “வெரி தேங்க்ஸ் தோழரே…” உற்சாகமாக கூறினான்.
“எப்படி பல்லக்கு எல்லாம் ரெடியா வச்சிருக்கீங்களா தோழரே? அறிவுகெட்டவன் யோசிக்கிறான் பாரு” ஏதோ லாஜிக் இல்லாமலே அவர்கள் பேசுவது போல் இருந்தது ப்ரேமுக்கு.
“டேய் நாம பொண்ணுக்கு பல்லகே அங்க தான் போய் செய்ய போறோம்… அப்டி தான் எல்லாருக்கும் சொல்லுவோம் ஆனா உண்மையா நாம அங்க போய் கடத்த போறோம். பேக்ல மயக்கமருந்து, கோணிப்பை, கயிறு எல்லாமே ரெடி-ஆ இருக்கு. உள்ள போகுறதுக்கு என்ன வழின்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஊற சுத்தி தங்க இடம் பாக்க போறப்ப இவன் மாமனாரோட ரைட் ஹாண்ட்-னு ஒருத்தன் சொல்லிட்டு இருந்தான்.
கள்ளு குடிக்கிற இடத்துக்கு அவன் போறதா பேசிக்கிட்டான் சரி நமக்கும் ஆசை, அங்க போனா அவன்கிட்டயும் ஏதாவது நியூஸ் கறந்துடலாம்னு போனேன். நீயே வாய் விட்ட சரின்னு விட்டுட்டேன். போதைல இருந்தாலும் அவன்கிட்ட நூறு தடவ பல்லக்கு பலக்குன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் சோ கண்டிப்பா நம்மள நியாபகம் இருக்கும். இப்ப போகலாம் உள்ள, எந்த சந்தேகமும் எவனுக்கும் வராது” தன்னுடைய யோசனையை முழுதாய் கூறி முடித்தான்.
“மச்சி உன் ஐடியா ஐடியா தாண்டா” ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளி அவன் தோளை தட்டிக்கொடுத்தான் சிவா.
“ஐடியா தான், நான் என்ன கொழுக்கட்டைன்னா சொன்னேன். உன்ன அந்த அபர்ணாவை பத்தி யமுனா கிட்ட கேக்க சொன்னேன். கேட்டியாடா?” இப்பொழுது சிவாவிடம் வந்தான் ஹரி.
சற்றும் நிமிடம் எடுக்காமல், “கேட்டுட்டேன் டா ரொம்ப நல்ல பொண்ணாம். என்ன கொஞ்சம் வாய் அதிகம் பேசுமாம். பிப்த் வரைக்கும் ஒண்ணா படிச்சாங்களாம். தாராளமா அவ என்ன சொன்னாலும் செய்யின்னு சொன்னா” என்றான் சிவா.
“உன்கிட்ட எப்படின்னு தான் கேட்டேன், அவ புடலங்காயை பரிச்ச கதை எல்லாம் கேக்கல. கெளம்புங்கடா. அந்த ஆள் வீடு ஊர்விட்டு வெளிய இருக்காம்” நண்பர்களிடம் கூறியவன் மீண்டும் சிவாவிடம் திரும்பி, “உன் ஆள ரெடியா இருக்க சொல்லு எப்ப நாளும் வருவோம்னு” சிவா சரி என்றான்.
“மச்சி அந்த பொண்ண ஏண்டா நீ குறை சொல்லிட்டே இருக்க?” வந்தான் கார்த்தி.
“கோப்பாத்தா இவன் ஒருத்தன் காமெடி பண்ண வந்துட்டான்” சலிப்புடன் அவனை முறைக்க, கார்த்தியோ வேகமாக, “சரிடா நீங்க கெளம்புறப்ப சொல்லுங்க, நான் நேத்துல இருந்து Ben 10 எபிசோட் பாக்கவே இல்ல பாத்துட்டு வந்துர்றேன்” என்று மெதுவாகத் தப்பித்தான்.
அவனைப் பார்த்து தலையில் அடித்த ப்ரேம், “எங்க போய் இந்த கொடுமையை நான் சொல்றது” என்று புலம்பினான் செல்லும் நண்பனைப் பார்த்துச் சலிப்பாக.
நால்வரும் கிளம்பி நெடுஞ்சேரனின் இல்லத்திற்கு வழி தேடி ஒரு வழியாக வந்து சேர, வீட்டைச் சுற்றிக் காவலுக்கு அத்தனை மனிதர்கள், சிலரது தோற்றமே கூறியது அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.
“டேய் மஃப்ட்டில போலீஸ் எல்லாம் நிக்கிதுடா” கையில் ஒரு பையுடனும் இரண்டு காம்புகளோடும் முன்னாள் சென்றுகொண்டிருந்த ஹரியிடம் பயத்தை அப்பட்டமாக முகத்தில் வைத்துக் கூறினான் சிவா.
“டேய் இவனை அப்டியே அந்தா தூரத்துல தெரியிற கிணத்துல போட்டுட்டு வந்துடவா?” – கார்த்தி நண்பர்களிடம் கேட்டான்.
“போடுடா வாய மூடிட்டாவது இருப்பான், போறப்ப உயிரோட இருந்தா தூக்கிட்டு போகலாம்” என்றான் ப்ரேமும் கோவத்தில்.
“இல்லடா எனக்கு நேரமே சரியில்ல” சோகமாக கூறினான் சிவா.
“இல்லனா மட்டும் இவரு டிசைன் டிசைனா புடிங்கிருப்பாரு… மூடிட்டு கம் மேன்” என்று முன்னாள் நடக்கத் துவங்கினான் ஹரி.
கைகளில் ஆளுக்கு இரண்டு காம்புடனும், ஒரு பெரிய பையுடனும் வந்தனர். வாயிலை நெருங்க நெருங்க அனைவருக்கும் பயம் இருந்தாலும் ஒரு தெனாவெட்டோடு வாசலை நோக்கி நடந்தனர். வாசலை நெருங்கும் சில அடி தூரத்திற்கு முன் கருப்பு சட்டை, கருப்பு பாண்ட் அணிந்த ஒருவன் இவர்களை நிறுத்தி, “என்ன வேலை?” என்றான் கேள்வியாக.
“ஐ.டி…” என்று உளறிய கார்த்தியின் காலை வேகமாக பின்னால் மிதித்த ஹரி, “ஐ.டில தானே எங்க எல்லாருக்கும் வேல பாக்கணும்னு கொள்ள ஆசை, ஆனா என்ன பண்றது இந்த டெகரேஷன் வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்கோம்”
சோகமாக முகத்தை வைத்துக் கூறி பிறகு நண்பனிடம் திரும்பி முறைத்தவாறே பல்லை கடித்து, “என்னடா சொல்லு…” என்றான் அழுத்தமாக.
“ஆஹ்… ஆமாண்ணே… நாங்க எல்லாம் கோயம்பத்தூர்ல பெரிய கம்பெனில எல்லாம் வேலை பாக்கல, இந்த நம்ம மதுரைல தான் இருக்கோம். எந்த ஏரியால டா நாம இருக்கோம்?” திரும்பி ஹரியைப் பார்க்க அவனும் அவன் அருகில் நின்றிருந்த ப்ரேமும் ஏகத்திற்கும் முறைதான்.
“இல்ல ஏதோ ஒரு ப்லோல…” என்று அவன் இழுக்க, அவர்களை கேள்வி கேட்டவனோ இவர்கள் நால்வரையும் சந்தேகமாக பார்த்தான்.
“உங்க பேர்?”
“கல்லணை, பிச்சைமணி, மாத்ரு பூதம், நான் தோனி” என்றான் ஹரி வேகமாக.
“நீங்க அப்டி ஓரமா நின்னு பைக்குள்ள இருக்குறது எல்லாத்தையும் எடுத்து காட்டுங்க” என்றான்.
சிவாவிற்கு குப் என்று வேர்த்தது. உள்ளே பல பொருட்கள் யமுனாவை கடத்த என்று வைத்திருந்தனர்.
“டேய் சிக்குனா தோலை உரிச்சு யமுனா கல்யாணத்துக்கு தரைல விரிச்சிடுவாய்ங்க டா. ஏதாவது பண்ணணுமே” என்று புலம்பினான் ப்ரேம்.
நால்வரும் பையைக் கீழே வைத்து நிமிர அவன் இவர்கள் பையை நோக்கிக் குனிந்து அதைத் திறக்கப் போக, “பாருயா நல்லா பாரு” என்றான் ஹரி குரலை உயர்த்தி.
அவன் கண் ஜாடையில் கார்த்திக்கும் அவன் எண்ணம் புரிய, “ஆமா நீ மட்டும் அத திறந்து பாரேன்… அப்ப இருக்கு நாங்க யாருனு காட்டுறோம்” அளப்பறையை கூட்டினான் கார்த்தி.
அதற்கு அவனோ நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி, “என்னடா பண்ணுவ?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“சண்டை வெடிக்கும்டி யோய்…” சட்டையின் முதல் இரண்டு பட்டனைக் கழற்றி சண்டைக்குத் தயாரானான் ஹரி.
அவர்களைப் பார்த்துச் சுற்றி இருந்த மற்ற சிலர் இவர்களை நோக்கி வர, அந்த கருப்பு சட்டை அவர்களை கை கட்டி நிறுத்தினான், “சரி நீங்களே அத ஓபன் பண்ணி காமிங்க” என்றான் அமைதியாக.
“டேய் நாங்க யார் அனுப்பி வச்ச ஆளுங்க தெரியுமா? மாப்பிள்ளை அனுப்பி வச்சவங்க. எங்களை சந்தேகப்படுறது மாப்பிள்ளையை சந்தேகப்படுறது மாதிரி. இதுக்கு மேலையும் உனக்கு சந்தேகம் இருந்தா நீ கைய வையா அதுல” என்றான் இன்னும் குறையாத குரலில் ஹரி.
“நான் மாப்பிள்ளையோட பி.எ” அவன் பாக்கெட்டில் இருந்த ஒரு கொத்து காகிதத்தை நீட்டி, “இதுல சார் வேலைக்கு சொன்ன எல்லா ஆளுங்களோட டீடெயில்ஸ் இருக்கு. உங்க பேர் எனக்கு தெரிஞ்சு எங்கையும் இல்ல, நீங்களே தேடி பாத்து தாங்க” என்றான் அவர்கள் முன்னால் நீட்டி.
அதைக் கெத்தாக வாங்கி பார்த்த கார்த்தி, “ஆமா எங்க பேர் இதுல இல்ல, ஆனா மாப்பிள்ளை தானே டா நம்கிட்ட போன் பண்ணி சொன்னான்” என்றான் சளைக்காமல் பொய் கூறி.
“உன் சார் கிட்ட கால் பண்ணி குடு” அவன் முன்னாள் கை நீட்டி கேட்டான் ஹரி. அவனை இவர்களை அசையாது பார்த்திருக்க, “பாரேன் திமிர, சரியா நாங்க போறோம் ஆனா என் பல்லக்கு ரெடி பண்ணலன்னு மாப்பிள்ளை கேட்டா நீ தான் பேசிகனும், நாங்க உன்ன தான் கை காட்டுவோம் பரவல்லயா?” என்றதும் தான் அவன் சிறிது யோசித்தான்.
“சரி கால் பண்ணி தர்றேன்” என்று தன்னுடைய கைபேசி எடுத்து மாப்பிள்ளைக்கு அழைத்தான்.
“சார் நீங்க பல்லக்கு செய்ய ஆள் அனுப்புனீங்களா?”
அவனோ, “இல்லையே, நான் அப்டி யாரையும் சொல்லல” என்றான். அந்த பி.எ வின் பார்வையை உணர்ந்த ஹரி, “நீங்க தாங்க நானே அவர்கிட்ட பேசுறேன்” என்றான் வேகமாக.
அவன் கைபேசியை கொடுக்க, அதை வாங்க சென்ற கார்த்தியின் கையை பாதியிலேயே நிறுத்திய ஹரி அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “பேசி ஏதாவது உளறி வச்ச செருப்பாலேயே அடிப்பேன் பரவல்லயா?” என்றான் சிரித்துக்கொண்டே.
“மாப்பிள்ளை நான் வாங்கி பேச போறேன்னு நெனச்சியா? நீயே கம்பு எல்லாம் தூக்கி கை வலியோட நிப்ப, அது தான் வாங்கி உன்கிட்ட குடுக்க வந்தேன்” அழகாகச் சமாளிக்க அவனை மேலும் கீழும் கேவலமாகப் பார்த்தது கைப்பேசியைத் தான் வாங்கினான் ஹரி.
காதில் வைத்ததுமே, “சார் என்ன மறந்துட்டீங்களா? போன வாரம் தான நைட் ஒரு பதினோரு மணி போல எனக்கு கால் பண்ணி நானே மறந்தாலும் நீங்க மறக்க கூடாதுன்னு சொன்னிங்க?” என்றான் எடுத்த எடுப்பில்.
“யாரு மேன் நீ?” என்றான் மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோரணத்தோடு.
சுற்றி இருந்தவர்களை பார்த்து சற்று விலகி நின்று, “சார் என்ன மறந்துட்டீங்களா? ஞாயிற்று கிழமை பப்ல ஒரு பொண்ணுகூட வந்திங்களே… தி லாஸ்ட் ட்ரோப் பப் சார். அந்த பொண்ணுகூட உங்கள விடாம கட்டிபுடிச்சிட்டே என்ன தான போட்டோ எடுக்க சொல்லுச்சு…. ஆஹ்… உங்களுக்கு நியாபகம் இருக்காது. நீங்க தான் புல் போதைல இருந்திங்க.
அப்பா தான் போட்டோ எடுத்துக்கு எனக்கு ஒரு ஸ்காட்ச் வாங்கி குடுத்து நான் என்ன வேலை பாக்குறேன்னு எல்லாம் கேட்டு, உங்க கல்யாணத்துக்கு கூட பல்லக்கு ரெடி பண்ண சொன்னிங்களே மறந்து போச்சா?” நீண்ட போக்கோடு நிறுத்தாமல் பேச, ஹரிக்கு மூச்சு வாங்கியதோ என்னவோ, அந்த பக்கம் இருந்த மாப்பிள்ளைக்கு வேர்த்தது உண்மையே.
“ஆமா… ம்ம்ம் ஆமா நியாபகம் வந்துடுச்சு… ஆனா இருக்கட்டும் நீங்க பல்லக்கு எல்லாம் செய்ய வேணாம். நாளைக்கு நைட் நிச்சயத்துக்கு இன்னைக்கு எப்படி பண்ணுவீங்க? விட்ருங்க…” என்றான் பயத்தை வெளியில் காட்டாமல்.
“சார் அதெல்லாம் முடியாது சார், நான் பாருங்க என்னோட ஆளுங்கள எல்லாம் கூட்டிட்டு வந்துட்டேன் இனி திரும்பி போனா எங்களுக்கு நட்டம் தான்” என்றான் தொழில் மூழ்கி.
“சரி நான் காசு தர சொல்றேன்யா…” மாப்பிளைக்கு இவர்களை அனுப்பி விட வேண்டும்.
“ஆஹ் அதெல்லாம் சரிப்பட்டு வராது நாங்க காசுக்கு உழைப்போம்… திங்கிற சோறுக்கு மரியாதை வேணாம்?” என்றான் ஹரி சம்மதமே இல்லாமல்.
“டேய் சோதிக்காதடா… ஆமா போட்டோ என் போன்ல இல்லையே” என்றான் மாப்பிள்ளை பதட்டமாக தன்னுடைய கைபேசியின் கேலரியை புரட்டி பார்த்து, வாயை கொடுத்து மாட்டியது தெரியாமல்.
“சார் என் போன்ல இருக்கே அது…”
எப்பொழுது வேண்டும் என்றாலும் மினி ஹார்ட் அட்டாக் வரும் நிலை, “சரியா உள்ள பொய் வேலைய பாருங்க ஆனா உன்கிட்ட இருக்க போட்டோ தெரியாம கூட யார்கிட்டயும் காட்ட கூடாது சரியா?” என்ற ஆணையோடு கூறி அனுப்பி வைத்தான்.
“என்னடா நீ சொல்றதெல்லாம் உண்மையா? அன்னைக்கு அவனை நீ பாத்தியா?” ஹரியின் காதை கடித்தான் கார்த்தி.
“யாருக்கு தெரியும் சும்மா அடிச்சு விட்டேன். அவன் பேசுறதுலயே தெரியுது பன்னாடை இப்பயும் போதைல தான் இருக்கான். அது தான் என்ன சொன்னாலும் கேட்ருப்பான்”
செல்லும் பொழுது மாப்பிள்ளையின் பி.எ வை பார்த்து நக்கலாக மேலும் கீழும் பார்த்து ஒற்றை விரலை ஆட்டி எச்சரிக்கை செய்து உள்ளே சென்றான் கார்த்தி. வெளியே வீட்டின் மதில் சுவர் கிட்ட தட்ட எட்டு அடிக்கு மேல் இருக்க வீட்டின் பிரமாண்டம் தெரியாமல் இருந்தது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு தான் இவ்வளவு பெரிய இடத்தில எப்படி அவளை தேடி பிடிப்பதென்று தெரியாமல் முழித்தனர். நால்வரும் வீட்டின் பின்னால் இருக்கும் ஒரு இடத்தில பொருட்களை இறக்கி வைத்து காத்திருந்தனர்.
“டேய் உன் ஆளுக்கு போன் போட்டு எங்க வரன்னு கேளு அமைதியா கூட்டிட்டு போய்டலாம்” என்றான் ஹரி.
அதற்கு பேந்த பேந்த முழித்த சிவா, “மச்சி நான் உங்ககிட்ட ஒரு விசியம் மறச்சிடேண்டா” என்றான் திக்கி திணறி.
“அடுத்த குண்ட போட போறான்” சரியாக அவன் பார்வையை படித்து பிரேம் கூறினான்.
வாகாக அங்கிருந்த ஒரு கல்லின் மேல் அமர்ந்த கார்த்தி கன்னத்தில் கை வைத்து, “சொல்லுடா வீடு மாறி வந்துட்டோமா?” என்றான் நக்கலாக.
“இல்ல இல்ல அவன் போன் அங்க முத்தண்ணே வீட்டுலயே விட்டுட்டு வந்துருப்பான். ஒன்னும் பிரச்னை இல்ல நான் பொய் எடுத்துட்டு வரேன்” என்றான் ஹரி.
அவனை தடுத்த சிவா கலகத்தோடும் பயத்தோடும், “நான் யமுனா கிட்ட பேசி பல வருஷம் ஆச்சு” மூவரிடமும் எந்த பதிலும் இல்லை, தங்களுக்கு எதிரில் நின்ற சிவாவை ஏதோ படத்தை பார்ப்பது போல் பார்த்தனர்.
“ஏதாச்சும் ரியாக்ஷன் குடுங்கடா”
எழுந்த கார்த்தி நண்பன் தோளில் கை போட்டு, “மச்சி புரியுது. லவ் பண்ணா பத்து மணி நேரம் பேசலானா கூட இப்டி தான் பல வருஷம் பேசாத மாதிரி பீல் வருமாம். இன்னும் கொஞ்ச நேரம் பொறு அடுத்து… ‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’ தான்” என்றான் கேலியாய் கண்ணடித்து.
அவன் கையை தட்டி விட்டு, “நம்புங்கடா சாத்தியமா பிரேக் அப் ஆனதுக்கு அப்றம் நான் யமுனாவோட குரலை கூட கேட்டது இல்ல” கோவத்தை காட்டியாவது இவர்களை நம்ப வைக்க முயன்றான் சிவா.
“டேய் சும்மா சொல்லாதாடா” அவன் இடுப்பில் கிள்ளி விளையாண்டான் ஹரி மறு பக்கம் வந்து.
“டேய் யமுனா மேல சத்தியம்” என்ற பிறகே மூவருக்கும் நிலைமையின் தீவிரம் புரிந்தது. சில நிமிடங்கள் அங்கு கனத்த அமைதி.
அமைதியை கலைக்க கார்த்தி சிவாவை நிமிர்ந்து பார்த்து, “இன்னும் என்ன என்ன மிச்சம் வச்சிருக்க? சொல்லிரு, அதையும் இப்பயே சேத்து சொல்லிரு” என்றான் அமைதியாக.
“இல்லடா அவ்ளோ தான்” சிவாவின் குரலும் உள்ளே தான் சென்றிருந்தது.
“இல்ல எனக்கு புரியல… எந்த தைரியத்துல அந்த பொண்ணுகிட்ட பேசாமயே இவ்ளோ தூரம் வந்துருக்க, இதுல நாங்க வேற… அவளோட அப்பன்கிட்ட சிக்குனோம் மவனே கைமா தாண்டி” எப்பொழுது இவனை அடிக்கலாம் என்று சந்தர்ப்பத்தை எதிர் பார்த்தே காத்திருந்தான் ப்ரேம்.
“இதெல்லாம் விடுடா இப்ப அந்த பொண்ணுக்கு நெஜமாவே உன் மேல லவ் இருக்கா? எதுக்கு எங்களை கூட்டிட்டு வந்த?” சிவாவை பார்த்து ஹரி கேட்டான்.
“கேள்வியே தப்பு மச்சான். அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தா என்ன பண்ணுவ?” ப்ரேமின் கேள்வியில் விழுக்கென திரும்பி அவனை முறைதான் சிவா.
“என்ன தவற வேற யாரையும் அவ லவ் பண்ணல” என்றான் கோவமாக. “அதெப்டி ராசா நீயா சொல்லுவ?” – கார்த்தி.
“டேய் அவன் போன்ல தான் பேச மாட்டேன்னு சொன்னான், அதுக்கு பதில வெத்தலைல மை வச்சு பேசுவான்… என்னடா ஊமை?” எகத்தாளமாக சிவாவை நோண்டினான் ஹரி.
“ஓ அப்ப டெய்லி வீடியோ கால் தான்…” என்று விளையாட்டாக கண் சிமிட்டினான் கார்த்தி.
கோவத்தில் தன்னுடைய கைபேசியை எடுத்து காண்பித்த சிவா, “இது அவ ஃப்ரண்ட் மூலியமா அவ எனக்கு அனுப்பி வச்ச பத்திரிகை” என்று வாட்ஸ்ஆப்பில் வந்த பத்திரிகையை காட்டினான்.
மாப்பிள்ளை பெயர் ராஜேந்திர சிவா என்ற இடத்தில் இருந்த ராஜேந்திர என்ற பெயர் அடிக்கப்பட்டு, சிவாவிற்கு பின்னால் ஒரு ஹார்ட் வரைந்திருந்தது. “இந்த ஒரு ஹார்ட் போதாதா அவளோட மனசுல நான் இருக்கேன்னு சொல்ல?” மூவரும் அதை மாறி மாறி பார்த்தனர்.
“சரி இப்ப என்ன பண்ணலாம்?” ப்ரேம் கேட்டான் துவண்டு நின்ற சிவாவைப் பார்த்து.
“எனக்கு யமுனா தான் வேணும்டா”
“ஆரமிச்சிட்டான் யமுனா புராணத்தை” தலையில் அடித்து ஹரி தன்னுடைய பையைத் திறந்து நான்கு சிறிய பையையும் கொடுத்தான். அதில் ஒரு மயக்க மருந்து பாட்டில், ஒரு துணி மற்றும் ஒரு கோணிப்பையைத் திணித்து அதன் மேல் சில இரும்பு பொருட்களையும் வைத்திருந்தான் ஹரி.
“டேய் உள்ள ஒரு மயக்க மருந்து இருக்கு, படத்துல காமிக்கிற மாதிரி மூக்குல வச்ச ஒடனே மயக்கம் எல்லாம் போட்டுட மாட்டாங்க. ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும். சோ பாத்து தான் நாம பண்ணனும். எதையாவது தேட போறேன்னு சொல்லி நாலுபேரும் இந்த வீட்டுக்குள்ள போறோம், பொண்ணு எங்கன்னு பாத்து தூக்கிறோம்” தெளிவாய் கூறினான் ஹரி.
“ஒருவேளை அந்த பொண்ணு என் அப்பாவை மீறி நான் வர மாட்டேன்னு சொல்லுச்சுன்னா?” கார்த்தியின் கேள்வியில் அவனை முறைத்தான் சிவா.
“அதுக்கு தாண்டா புழுதீ இந்த மயக்கமருந்து… சரி எல்லாரும் வயர்லெஸ் ஹெட்போன்-அ காதுல மாட்டுங்க. காண் கால்ல தான் வீட்டை விட்டு வெளிய வர வரைக்கும் இருக்கனும்”
கண்டிப்பாகக் கூறி நால்வரும் ஒவ்வொரு திசைக்குச் சென்ற பின்னர் தன்னுடைய கைப்பேசியிலிருந்து முதலில் பிரேமுக்கு அழைத்தான், பிறகு சிவாவிற்கு அழைத்து, அதன் பிறகு கார்த்திக்கு அழைத்தான், “சொல்லுங்கடா சாம்பு மவனுகளா…” என்றான் உற்சாகமாக.
ஆனால் அவன் நல்ல நேரம் ஹரி அவனை ஹோல்டில் வைத்து நால்வரையும் இணைத்துவிட அவன் பேசியது மற்றவருக்கு கேட்காமல் போனது.
“ஹலோ மச்சான் நான் பேசுறது கேக்குதா டா?” – பிரேம்.
“டேய் மச்சான் நான் பேசுறது கேக்குதா டா?” இது சிவா.
“அடேய் கேக்குதானு தவற வேற ஏதாவது பேசுங்கடா” முணுமுணுத்தான் கார்த்தி ஆக மூவரும் ஒரே நேரத்தில் பேசினர்.
“அடேய் வெண்ண மவனுகளா, எவனாச்சும் ஒருத்தன் பேசுங்கடா” இப்பொழுதும் ஹரி கூற பின்னால் மூன்று ஹெலோ தான் வந்தது.
“தாய்லிக டேய்…” பிரேம்…
“சாரி மாப்பிள்ளை சொல்லு…” ப்ரேமின் கோவத்தை அறிந்து சரணடைந்தான் ஹரி.
“யமுனா மட்டும் தான் நம்ம டார்கெட், நடுல யார் வந்தாலும் ஏதாவது ஒன்னு சொல்லி சமாளிக்கணும். அப்டியே மாட்டுனாலும் எல்லாரையும் மாட்டி விட்ற கூடாது, தனியா மாட்டிக்கோங்க” சீரியஸாக பேசிக்கொண்டிருந்தான் பிரேம்.
“அதெப்படி மாமோய் இவன் சந்தோசமா இருக்க நான் என்னோட உயிரை பணயம் வைக்கணுமா? முடியாது நான் சிக்குனா ஒண்ணா சிக்குறோம், சாகுறதா இருந்தாலும் ஒன்னா தான் சாகுறோம், இது நம்ம நட்பு மேல ஆணை”
தலையில் கை வைத்து, “கடவுளே…” என்றான் பிரேம்.
“மச்சி…” திடீரென கார்த்தி ஹை பிட்சில் கத்தினான். மற்ற மூவரும் அதே இடத்தில் நின்று போனர்.
“டேய் ஏதாச்சு பிரச்சனையா?” எவரிடமோ சிக்கிதான் போனான் என்றே தோன்றியது மற்றவர்களுக்கு.
“டேய் எனக்கு யமுனா முகம் மறந்து போச்சுடா” – கார்த்தி.
“முண்டம்… இதுக்கா இப்டி கத்துன?”
“டேய் பொண்ண கரெக்ட்டா கடத்த வேணாம்…” – கார்த்தி பொங்கினான்.
“டேய் வர்ற வழில போஸ்டர்ல எல்லாம் நீ பாக்கலயா?” ஹரி கேட்க, “பாத்தேன், மறந்து போச்சு. சிவா பிக் அனுப்பு” என்றான் சிவாவிடம்.
“டேய் என்கிட்டே இப்ப மொபைல்ல இல்லடா எல்லாம் டிரைவ்ல வச்சிருக்கேன்” என்றான் சிவா, அவர்களுக்குள் பிரிவு வந்ததும் அவள் எண்ணங்கள் வராமல் இருக்க அனைத்தையும் அழித்திருந்தான்.
“விளங்கும். இதுல நீ பொண்ண வேற தூக்க வந்துட்ட” கார்த்தி நொடித்துக்கொள்ள அவனை அந்த நேரம் சரியாகக் கடந்து சென்ற ஒருவன் அதைக் கேட்டுவிட்டான்.
“டேய் என்னடா சொன்ன…” என்று கொத்தாக கார்த்தியின் சட்டையைப் பிடிக்க அவன் கண்களிலோ மரண பீதி.
“சொல்லுடா என்ன சொன்ன மறுபடியும் சொல்லு…”
“ஏதாவது சொல்லுடா காட்டுப்பன்னி… உன் டி.எல் கிட்ட என்ன கதை விடுவ” ஹரி சிரித்துக்கொண்டே பேசினான் ஆனால் பயம் எல்லாம் சிவாவிற்கு தான்.
“டேய் மாட்டிக்காதடா அப்றம் என்னையும் போட்டு குடுத்துடுவ நீ”
“போத்திட்டு இருடா…” கார்த்தி நண்பர்களைத் திட்ட, “என்னது டேய் இன்னைக்கு பூஜை பண்றேன்…” என்று அவன் கார்த்தியைப் பிடித்து இழுக்க, “அண்ணா அண்ணா நான் உங்கள சொல்லல…” பதறினான் கார்த்தி.
ஒரு பக்கம் இந்த முரடனின் கோவமும், சட்டையின் பிடியும். மறு பக்கம், ஹரியின் சிரிப்பும், சிவாவின் புலம்பலும், ப்ரேமின் அறிவுரையும், “வாய அடக்கி வாசிக்கணும் ஊருக்கே கேக்குற மாதிரி பேசுனா இப்டி தான்”
“அண்ணே சாத்தியமா உன்ன சொல்லலண்ணே” என்றான் கெஞ்சலாய்.
“பொண்ண தூக்க போறேன்னு சொன்னல? ஏண்டா எனக்கு என்ன காது கேக்காதுனு நெனச்சியா?” அவன் பல்லைக் கடித்துக் கேட்டான்.
“அப்றம் ஏன் என்ன சொன்ன-னு கேட்டானாம்?” அந்த பக்கம் ஹரி கேட்க, “அதான, அப்றம் எதுக்கு திரும்பி சொல்லு சொல்லுன்னு சொல்லிட்டே இருந்திங்க?”
கார்த்தி அவனிடமே இதைக் கேட்பான் என்று சற்றும் எதிர் பார்க்காத சிவா, “டேய்…” என்று கத்தியே விட்டான்.
ஆனால் ஹரியின் சிரிப்பை தான் எவராலும் அடக்க முடியவில்லை. அதன் பிறகு தான் தான் பேசியதன் அர்த்தத்தை உணர்ந்தான் கார்த்தி.
பேந்த பேந்த முழித்த கார்த்தி, “தெரியாம சொல்லிட்டேன் ண்ணே… நான் பொண்ண தூக்க தான் வந்துருக்கேன். ஆனா பல்லக்குல வச்சு…” என்று ஒருவாறு சமாளித்தான்.
“ஒழுங்கா வேலைய மட்டும் பாக்கணும், தேவை இல்லாம ஏதாவது செஞ்சிட்டு இருந்தன்னு பாத்தேன், மவனே…” நாக்கை கடித்து, “அறுத்துடுவேன்” என்று கார்த்தியை மேலும் கீழும் பார்த்து எச்சரிக்கை செய்து கிளம்பினான் அந்த முரடன்.
“போதும்டா சிரிக்காதா…” வந்த வழியே கார்த்தி சென்றான், “எதுக்குடா இவன் மேலையும் கீழையும் என்ன பாத்து இப்டி சொல்லிட்டு போறான். இவிங்க ஊர்ல எல்லாவனும் நாக்க அருக்குறதுலயே இருக்காய்ங்க…”
“டேய் அந்த ஆளு உன் நாக்க அருக்குறத பத்தி பேசலாடா…” சிரித்துக்கொண்டே ஹரி கூறினான்.
அவனைக் கூறியது உடனே புரிய, “போதும் புரிஞ்சது மூடு” என்றான் கார்த்தி உடனடியாக.
“சரிடா எல்லாரும் எங்க இருக்கீங்க?” ஹரி கேட்டான்.
“உன் பொடணிக்கு பின்னாடி ஓவர் ஓவர்…” ஹரி பின்னால் திரும்ப அங்கு அணைத்து பற்களையும் காட்டி நின்றான் கார்த்தி.
“டேய் இவன் என் பின்னாடி நிக்கிறாண்டா” – ஹரி.
“டேய் உன்ன எங்க போக சொன்னா நீ எங்க அவனை கூட நிக்கிற?” பி.ப்பி இப்பொழுதே வந்து விடவா என்று தலையில் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது பிரேமுக்கு.
“டேய் எனக்கு உள்ள போக பயமா இருக்கு. நான் போக மாட்டேன்” அடம் பிடித்தான் கார்த்தி.
“சோதிக்காதடா… ஒழுங்கா போய்ட்டு” என்றான் பிரேம்.
“அதெல்லாம் முடியாது” கார்த்தியும் பிடிவாதமாக இருந்தான்.
“அதுவுமில்லாம எனக்கு பொண்ணு தெரியாது, நாவாட்டுக்கு பாத்துட்டு விட்டுட்டா நாம படுற கஷ்டம் எல்லாம் வீணாகிடும்”
“மச்சி உன் கண்ணனுக்கு எந்த பொண்ணு கல்யாண பொண்ணு மாதிரி கலையா தெரியுதோ அத தூக்கிடு” எப்படியாவது இவனை உள்ளே அனுப்ப முனைந்தான் ப்ரேம்.
“இவன் கண்ணனுக்கு எம்பது வயசு கெழவி கூட கல்யாண பொண்ணு மாதிரி கலையா தாண்டா தெரியும்”
ஹரி தன்னை அசிங்க படுத்தியதையும் பொருட்படுத்தாமல், “எல்லா பெண்களும் ஒரு வகைல அழகு தாண்டா…” என்றான் ஒரு ரசனையோடு கார்த்தி.
“டேய் விடுங்கடா. நீங்க போங்க உள்ள நானும் இவனும் வெளிய ஏதாவது வழி இருக்கானு பாத்துட்டு இருக்கோம்” என்றான் ஹரி.
அதுவும் சரியாகப் பட, “சரிடா பாத்து இருங்க” என்று ப்ரேமும், சிவாவும் வீட்டினுள் சென்றனர்.
“சிவா, உன் மாமனார் கண்ணுல மட்டும் பட்டுடாதீங்க”
“சரி வந்த வேலைய பாக்கலாமா?” என்று பேச்சை மாற்றினான்.
சிரிப்பை அடக்கி, “சரிடா போகலாம்… டேய் ஹரி இங்க மேல ஒரு இருவது ரூம், கீழ ஒரு ஏழு எட்டு ரூம் இருக்கு… ஏற்கனவே ஆளுக்கு ஒரு வேலை பாக்க வந்துருக்கோம்னு சொல்லிட்டு சுத்துறோம்…” என்றான் கண்களை அந்த வீடு முழுதும் படரவிட்டு.
“டேய் மேல போய் பாருங்கடா… எப்படியும் கல்யாணத்துக்கு வர்ற பெருசுங்க கெஸ்ட் எல்லாம் கீழ தங்கும்… அதுவும் இல்லாம பொண்ணுங்களுக்கு கண்டிப்பா மேல பால்க்கணி ஓட இருக்க ரூம் தான் புடிக்கும்” கார்த்தியை அங்கேயே அமர கூறி வீட்டைச் சுற்றிப் பார்க்க இடது பக்கம் இரண்டு பெரிய பால்க்கணி கொண்ட அறை இருந்தது.
வலது பக்கம் ஒரே ஒரு அறையில் மட்டும் பால்க்கணி ஆனால் அதிலும் ஒரு வயதான தம்பதி அமர்ந்திருக்க அதில் நிச்சயம் யமுனா இருக்க மாட்டாள் என்றே தோன்ற, “மச்சி லெப்ட் சைடுல இருக்க ஆறாவது ரூம்ல பாரு…” என்று மீண்டும் கார்த்தி இருக்கும் இடத்திற்குச் செல்ல அங்கு கார்த்தி இல்லை.
“டேய் அவன் லெப்ட் சொன்னான்டா நீ எங்க ரைட்ல போற?” ப்ரேம் அந்த பக்கம் பயத்தில் கால்கள் நடுங்க நடந்துகொண்டிருந்த சிவாவின் சட்டையைப் பிடித்து இழுத்து, “கேங்ல எவனாவது ஒருத்தன் லூசா இருந்த பரவால்ல, இருக்குற எல்லாருமே லூசா இருந்தா நானும் தான் என்ன பண்றது?”
“நல்ல காசு மச்சி, ஹாஸ்பிடல் ஆரமிச்சிடு…” வழக்கம் போல் கார்த்தி ஐடியா கொடுத்தான்.
“எது பைத்தியத்தை வச்சு வைத்தியம் பாக்குறதா? உங்கள நம்பி நான் என்ன பன்னாலும் ஆண்டியா தான் ஆவேன். மூடிட்டு வெளிய போக வழிய பாருங்கடா நொன்னைகளா…” என்று சிவாவை அழைத்துக்கொண்டு ஹரி கூறிய ஆறாவது அறையை நோக்கிச் சென்றார்கள், “மச்சி மெதுவா யமுனாவை கூப்டுகிட்டே கதவை திற”
பிரேம் கூற, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து எவரும் இல்லை என்றதும் கதவை நோக்கி மெல்ல நடைபோட்டு கதவைத் தட்டினான்.
“யாரு?” என்ற இனிமையான பெண் குரல் உள்ளே கேட்க முகமெல்லாம் பல்லாகப் பிரேமை பார்த்த சிவா, “மச்சி யமுனா தாண்டா”
ஒரு வழியாக வந்த வேலை முடிந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் ப்ரேமும், “மச்சி யோசிக்காத உள்ள புகுந்து இத அவளோட மூக்குல வச்சு பொத்திடு… இந்த” என்று வைத்திருந்த மயக்க மருந்தை தன்னுடைய கைக்குட்டையில் சற்று அதிகம் ஊற்றிக் கொடுத்தான்.
“மச்சி பயமா இருக்குடா… நீயே போயேன் நான் வெளில யார் வர்றாங்கன்னு பாத்துட்டு வர்றேன்” என்றான் சமாளிப்பாகச் சிவா.
“இந்த கதையே வேணாம் ஒழுங்கா உள்ள போ” என்று கதவை பட்டாரெனத் திறந்து விட்டு சிவாவையும் யோசிக்காமல் உள்ளே தள்ளி விட்டான்.
சிவா உள்ளே சென்ற அடுத்த நொடியே, “யாருடா நீ எடுபட்ட பயலே. பொம்பளைங்க சேலை மாத்திட்டு இருக்குற இடத்துல இப்டி தான் நாய் புகுந்த மாதிரி வருவியா? அறிவில்ல?” என்ற ஒரு பாட்டி பொரிந்து தள்ளிக்கொண்டே சென்றது.
ஒரே அசிங்கமாக இருந்தாலும் யமுனாவைத் தான் அப்பொழுதும் சிவா அந்த அறையில் தேடினான்.
“என்னடா திருட்டு பயலா நீ… திருடன்… திருடன்…” அந்த அறையில் இருந்த இன்னொரு கிழவி கத்த துவங்கியது.
அப்பொழுது தன் நிலைமையின் தீவிரம் புரிய, “ஐயோ பாட்டி நான் திருடன் இல்ல வயர் வேலை பாக்க வந்துருக்கேன்” என்று கூறும் முன் இருவரும் அவன் சட்டையைப் பிடித்து அடிக்க துவங்க அவர்களிடம் விசும்பிக்கொண்டு, “ஏய் கெழவி நான் திருடன் இல்ல…” வெளியில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்துவிட்டான்.
இதை எல்லாம் வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் மூவரின் சிரிப்பு சத்தம் அவ்வளவு சத்தமாக இருந்தது.
பிரேமின் சிரிப்பை முறைத்துக்கொண்டு அவன் கையை பிடித்து இழுத்து, “எழவெடுத்தவனே யமுனா இருப்பான்னு சொன்ன அந்த கூட்டம் இருக்குடா” அந்த தளத்தின் ஒரு ஓரத்தில் இருவரும் நின்றுகொண்டனர் அந்த கிழவிகள் கண்ணில் பட கூடாதென்று.
“டேய்… ஹாஹா… மச்சி முடியலடா” பிரேம் தான் அதிகம் சிரித்துக்கொண்டிருந்தான், “அந்த கெழவி வாய்ஸ் கேட்டு யமுனா… ஹாஹா…. ஹா… ஹாஹாஹா யமுனா வாய்ஸ்-னு சொன்னான் பாரு…” சிவாவின் நெஞ்சிலே சாய்ந்து கண்களில் கண்ணீர் வழியச் சிரித்தான்.
“மச்சி இப்ப கூட ஒண்ணுமில்ல ம்ம்ம்-னு சொல்லு பாட்டிய கடத்திடலாம்” எவ்வளவு சீரியசான நேரத்தில் இதெல்லாம் தேவை தானா என்று ஹரிக்குத் தெரியவில்லை, அவன் வழக்கம் போல் அவன் போக்கில் மகிழ்ச்சியாகச் சுற்றிக்கொண்டிருந்தான்.
“நீ சொல்லி தாண்டா நாங்க லெப்ட் சைடு போனோம்” என்றான் சிவா பாவமாக.
“மாப்பிள்ளை நீங்க லெப்ட்டா போனீங்க? சாரி டா எனக்கு லெப்ட் ஆனா உங்களுக்கு அது ரைட்…” அடுத்து சில நொடிகள் சிவா அடி மட்டத்திற்கு இறங்கி அவனைக் கெட்ட வார்த்தைகள் கொண்டு ஒரு சிறப்பு அர்ச்சனையே செய்துவிட்டான்.
“இவன் எங்கையோ போய்ட்டாண்டா… நீங்க சேப்ட்டியா வெளிய வாங்க நான் வைக்கிறேன்” என்று நண்பனைத் தேட சென்றான் ஹரி.
இங்கு, சிவா கதவைத் தட்டப் போகக் கதவு ஏற்கனவே திறந்திருந்தது. உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தால், அவன் தேடி வந்த அதே யமுனா தான் நீல நிற பட்டுப்புடவையில் சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க சிவாவின் காதல் மனம் அவளை ரசிக துவங்கத் தன்னையே முழுதும் மறந்து சில நொடிகள் கடந்தும் கண்களை விலகாமலிருந்தான்.
இவனின் மௌனத்தைப் பொறுக்க முடியாத ப்ரேம் அவன் பட்டக்சில் கிள்ள, கோவமாக நண்பனைப் பார்த்து, “யமுனாவை சைட் அடிச்சிட்டு இருக்கேண்டா சும்மா தான் இரு”
“அதெல்லாம் அப்றம் பண்ணிக்கோ வெண்ண, நேரம் காலம் புரியாம… போ போய் வாய மூடிட்டு கூட்டிட்டு வந்துடு” என்றான்.
சிவாவின் யோசனையோடு அதை வாங்கி உள்ளே செல்ல போக, அவனை வேகமாக நிறுத்தி, “நீ போன உள்ளேயே குடும்பம் நடத்திடுவ. நாங்க உயிரோட வீடு போய் சேரனும். நீ வழிய விடு நான் போறேன்” என்று கோணிப்பையோடும், கையில் கைக்குட்டையோடும் உள்ளே சென்றான்.
இந்த பக்கம் அறையினுள் சென்ற ப்ரேம் கண்ணில், கீழே குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்த யமுனா அவனுக்கு வசமாக பின் புறம் திரும்பி நிற்க, யோசிக்காமல் அவளது மூக்கோடு சேர்த்து வாயையும் கைக்குட்டை கொண்டு மூடினான்.
அவன் கையிலிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தவள் ஒரு சில நிமிடத்தில் தன்னுடைய போராட்டத்தில் விட்டுவிட, அப்படியே அவளைத் தான் வைத்திருந்த கோணிப்பையில் மூடி மூட்டை போல் வெளியில் இழுத்து வந்தான்.
“என்னடா இந்த பிள்ளை பாக்க தான் ஒல்லியா இருக்கு, ஆனா டைனோசர் முட்டை மாதிரி எவ்ளோ வெயிட்டா இருக்கே… வாடா வந்து தூக்கு என்ன மயிரை பாத்துட்டு இருக்க” ப்ரேமின் அர்ச்சனை கேட்டு வேகமாக அவனக்கு உதவி யமுனாவை கீழே அழைத்து வந்தனர்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறச் சென்ற நேரம் சரியாக கார்த்தியும் ஹரியும் வந்தனர்.
“முன்னாடி வழியவே போய்டலாம்டா” என்று நால்வரும் ஒருவழியாக வெளியே வர கடினப்பட்டு முத்துவின் வீட்டிற்கு சென்றனர், இந்நேரம் அவர் வீட்டில் எவரும் இருக்க மாட்டார்கள் என்று.
“சரி கேப் புக் பண்ணு கிளம்பலாம்” ஹரியிடம் ப்ரேம் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே சிவா மூட்டையைப் பிரித்து, “டேய் யாருடா இது?” என்றான் அதிர்ச்சியில்.
அவன் பக்கம் திரும்பிய ஹரி, “டேய் சண்டை போட்றுக்க்கலாம் அதுக்குன்னு யமுனாவை நீ யாருனு எல்லாம் கேக்க கூடாது…” சிவாவின் கேள்வியில் பதறி அடித்துச் சென்று பார்த்த ப்ரேமுக்கும் ஆச்சர்யம் தான்.
காரணம் அவர்கள் கடத்தி வந்தது யமுனா அல்ல. வேறு ஏதோ ஒரு பெண்.
“டேய் நிஜமா இது யமுனா இல்லடா…”
இருவர் மனதில் பயம் மட்டுமே…
மற்ற இருவர் மனதில் குதூகலம்… அடுத்த அளப்பறையைச் செய்ய மனம் ஒரு திட்டத்தையே வைத்திருக்கின்றதல்லவா…