சுவாசம் 1
இரவு இரண்டு மணியாக இருக்க அந்த ஊரே அமைதியாக இருந்த நேரத்தில் ஒரு பெண்ணின் கேவல் சத்தம் மட்டும் அந்த ஊரை துளைத்து கொண்டு இருந்தது…
அவளது கேவல் சத்தம் யாருக்கும் கேட்காமல் போக அவளது வீட்டின் ஒரு அறையில் வெளிச்சம் கூட வர விடாமல் செய்து அந்த அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்தாள்…
நிமிடங்கள் மட்டுமே கடந்து கொண்டு இருக்க அவளது அழுகை நின்றபாடில்லை..அவளது மனம் முழுவதும் பயமே நிறைந்து இருந்தது…
அவளது உடல்களில் பல சிராய்ப்பு காயங்கள் அடித்ததற்கான அறிகுறிகள் இருந்தது. சில சிராய்ப்புகளில் இருந்து இரத்தம் கூட வர தொடங்கியிருந்தது..
அவளது நிலையை கண்டு வானம் கூட கதறி அழத் தொடங்கியது மழையின் மூலமாக..
அந்த நேரத்தில் கூர்க்கா அந்த தெருவில் கூர்க்கா விசில் அடித்த படியும் டார்ச் லைட் காட்டியபடியும் நடக்க ..,,அந்த வெளிச்சம் அவளது அறையில் வந்து ஒரு நொடிக்கும் மிகாமல் இருந்து விட்டு செல்ல அந்த வெளிச்சத்தை கண்ட அவள் மேலும் பயந்து போய் தன் இரு கால்களையும் அவளது கரங்களை வைத்து பிடித்துக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
அவளது அந்த பயம் அவளை நடுக்கத்தில் கொண்டு வர செய்ய அவளது அழுகை மேலும் அதிகரித்தது.
அவளால் இன்று நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தனது பிறப்பே இவர்களுக்கு ஒரு கேலி பொருளாக இருக்கும் என அந்த பதினைந்து வயதுடைய சிறுமிக்கு தெரியவில்லை.
எதனால் தனக்கு இப்படி ஒரு நிலமை..??? தான் இப்படி பிறந்ததற்கு நான் பிறப்பாக முடியாதே .அப்படி இருக்கையில் என்னை ஏன் இவர்கள் அனைவரும் குற்றம் கூறுகிறார்கள்.
என் உடலில் ஏற்பட்ட மரபணு மாற்றத்தை ஏன் இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
முடிந்தவரை அழுதவள் அவளது தந்தை கடைசியாக கூறிய வார்த்தை அவளது செவியினுள் கேட்டுக்கொண்டே இருந்தது..
அன்று காலை…
தன் அம்மாவிடம் சென்றவன் ” அம்மா எனக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்கு மா .ஏனோ தெரியல சங்கோஜமா இருக்கு . இதெல்லாம் எதனாலன்னு எனக்கு புரியல ” என்று விமலாவிடம் புலம்ப
“எதையாவது நினைச்சிட்டு இருக்காத ராசா .சீக்கிரம் போய் கிளம்பு ஸ்கூலுக்கு லேட் ஆகுது பார் ” என்று சொல்லி அவனை அனுப்பி வைக்க அவனும் வேறு வழியில்லாமல் அறைக்கு சென்றான்.
அறைக்கு வந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் கப்போர்டில் இருந்து அவனது பள்ளி சீருடையை அணிந்துக் கொண்டான் விசிலடித்தபடியே..
அதன்பின் அவன் அவனது வேலைகளை சரியாக செய்து முடித்துவிட்டு அறையை விட்டு வெளியேறி கீழே வந்தான்..
வந்தவன் சாப்பிட்டு முடித்து விட்டு அவனது விதுஷாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றான்.
விதுஷா இவனை விட ஒரு வயதே சிரியவள். விதுஷாவும் அவனும் ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் போல் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..
அவனுக்கு ஒன்று என்றால் விதுஷா துடிப்பதும் விஷாவிற்கு ஒன்று என்றால் அவன் துடிப்பதும் என இவர்களின் அண்ணன் தங்கை வாழ்வு ஒருவருக்காக ஒருவர் என சென்றது…
பள்ளிக்கு சென்றவர்கள் விதுஷாவை வகுப்பில் விட்டுவிட்டு அவனது வகுப்பிற்கு சென்று அமர்ந்துக் கொண்டான்..
வகுப்பிற்கு வந்தவன் யாரும் இல்லாத காரணத்தினால் டேஸ்கில் தலை வைத்து படுத்திருக்க அவனை அவனது நண்பர்கள் வந்து தட்டி எழுப்பி விட்டனர்..
அவனது நண்பன் ஒருவன் அவன் தோளில் கைப் போட்டு அவன் பக்கத்தில் அமர அவனுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கவே நெளிந்தான்.
அதனை கண்ட அவன் தோழன் ” ஏன்டா இப்படி ஏதோ ஒரு பொண்ணு மேல கைப் போட்ட மாதிரி இப்போது நெளியுற ” என்று அவனை கிண்டலடிக்க…
“தெரியல டா ஆனா ப்ளிஸ் எதுவா இருந்தாலும் மேல கைப் போடாமா பேசு எனக்கு எதோ ஒரு மாதிரி கூச்சமா இருக்கு ” என்றான் .
அதனை கேட்ட அவனது நண்பர்கள் நகைக்க அதில் ஒருவன் ” ஏன்டா இப்படி பொண்ணு மாதிரி பேசிட்டு இருக்க ” என்று சொல்லி சிரிக்க…
ஏனோ அந்த இடத்தில் அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
சில நாட்களாவே அவன் இப்படி தான் இருக்கிறான். பசங்களில் பக்கத்தில் இருக்கவே கஷ்ட பட்டான் அவன். அதில் அவன் தந்தை ராமராஜன் டிவி பார்க்கும் போது கைகளை தோளில் போடுவதே எதோ நெருப்பில் நிறுக்கின்றமாறு உணர்ந்தான்.
தன் தங்கை வீட்டிற்கு வந்தவுடன் போடும் கவுனை போட்டு பார்க்க வேண்டும் போல் ஆசை அவனுள் எழும்பியது..
இதை விட தன் அன்னை உபயோகிக்கும் மஞ்சல் குங்குமம் முகத்திற்கு போட அழகு சாதனை பொருட்கள் என அனைத்தையும் உபயோகிக்கும் ஆசை அவனுள் எழவே செய்தது..
அவன் மனதை கடிவாளம் போட்டு வெகு சிரம பட்டு கட்டி வைத்தான்…
அவன் மனது இதை பற்றி எல்லாம் சிந்தித்து கொண்டு இருக்க வகுப்பிற்குள் கணக்கு ஆசிரியர் உள்ளே நுழையவும் அவனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு வகுப்பை கவனிக்க தொடங்கினான்…
அவர் சிறிது நேரம் வகுப்பு எடுத்த அவர் ஒரு சம்மை கொடுத்து போட சொல்ல மாணவர்களும் அதை போட முயற்சித்தனர்.
சிறிது நிமிடங்களுக்கு பிறகு ராசாவை (இப்போதைக்கு அப்படி கூப்பிட்டுக்கலாம் பா ) அழைத்து “நான் கொடுத்த சம்ம போட்ல வந்து போடு ” என்க…
ராசாவும் அவர் கூறியது போல் எழுந்து சென்று அந்த சம்மை போட தொடங்கினான்…
தீடிரென்று அவனது நண்பன் ஒருவன் அவனது பேண்டில் இரத்தம் இருப்பதை பார்த்து மற்ற நண்பர்களிடம் கூற அங்கே சலசலப்பு ஏற்பட்டது…
” டேய் அங்க பாருங்க அவனோட பின்னாடி இருந்து ப்ளேட் வருது ” என்று ஒருவன் கூற
” ஆமா டா வருது.. இன்னைக்கு காலைல கூட இவன் ஒரு மாதிரி தான் டா நடந்துகிட்டான் ” என்று மற்றொருவன் கூற இதை எல்லாம் கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து தனியே சென்றார்.
தனியே அழைத்து வந்தவர் “டேய் எங்கேயாவது கீழ விழுந்தியா டா ” என்று கேட்க
“இல்லையே சார் .ஏன் கேக்குறீங்க..???” என்று அவரை பார்த்துக் கேட்க..
” இல்ல டா உன்னோட ட்ரெஸ் பின்னாடி எல்லாம் ஒரே ப்ளேடா இருக்கு ” என்றார் திக்கித்திணறி…
” சார் இது எனக்கு என்னென்னு தெரியல சார் ஆனா ரெஸ்ட் ரூம் போகும்போது எல்லாம் ப்ளேட் வருது சார்” என்றான் அந்த பதினைந்து வயது பையன்….
இதை கேட்ட அவர் அதிர்ச்சி அடைய ” எத்தனை நாளா டா..??” என்றவரின் கேள்வியில் பயம் நிறைந்திருந்தது…
“நேத்து நைட்ல இருந்து சார் ” என்றான் எதுவும் அறியாத குழந்தையாய்…
ஏதோ புரிந்தவராக அவனை பாத்ரூமிற்கு அழைத்து சென்றவர் அவனை அங்கேயே நிற்க வைத்து விட்டு பக்கத்தில் இருந்த ஒரு கடைக்கு சென்று ஒரு ஆடை வாங்கி வந்து மாத்தி வர சொன்னார்…
அவன் வருவதற்குள் முதல்வரை கண்டு அவருக்கு தெரிந்த விடயத்தை அதிர்ச்சியுடன் கூறி அவனது பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தார்…
இருவரும் பதறியடித்து ஓடி வந்தனர்.. ராமராஜன் மற்றும் விமலாவிடம் நடந்ததை கூற இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது…
விமலா அழுகையிலும் ராமராஜன் கோபத்திலும் இருந்தனர்.. அவனை அழைத்துக்கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தனர்…
அவர் கோபமாக இருப்பதை கண்ட அவன் தந்தையின் பக்கத்தில் சென்று அவர் புஜத்தின் மேல் கை வைக்க அவனின் கையை உதறியவர் ” நீ எல்லாம் என்ன தொடாத எனக்கு அசிங்கமா இருக்கு ” என்றவர் அவரது பெல்ட்டினால் அடிக்க தொடங்கினார்.
” ஏங்க அவன் நம்ம பையன்ங்க ” என்று விமலா அழுகையுடன் சொல்ல ” இனி இவன் ச்சீ இவ எப்படி பையனா இருப்பா இவன் தான் அறவாணியா மாறி இருக்கானே ” என்று கோபத்தில் கத்தி அவனை கீழே தள்ளிவிட்டார்…
அவனது தன் தந்தை செய்ததில் அதிர்ந்தவன் எழுந்து நிற்க அவர் கூறியது கேட்டு திகைத்து போய் நின்றான்…
அவனால் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. அங்கேயே பக்கத்தில் இருந்த தூணை பிடித்து நின்றுக்கொண்டான்.
அந்த நேரம் பார்த்து விதுஷா பள்ளியில் இருந்து வர ” அண்ணா ” என்றவாறு அவனை கட்டிக் கொண்டாள்…
அவள் அணைத்துக் கொண்ட அடுத்த நொடி விதுவை அவனிடம் இருந்து பிரித்து விட்டு அவளை தூக்கி கொண்ட ராமராஜன் “இனி இவன் உனக்கு அண்ணன் கிடையாது ” என்றார்…
“அப்பா நான் என்ன பா பண்ணேன் எதுக்கு தங்கச்சிய என்கிட்ட இருந்து பிரிக்கிறீங்க ” என்று அவன் அழுகையுடன் கேட்க…
” என்ன இனி இந்த கேவலமான வாயால இருந்து என்ன அப்பான்னு கூப்பிடாதா .இனி எனக்கு ஒரு பொண்ணு மட்டும் தான். உன்ன இனி எங்க கூட வளர்த்தா என்னோட கவுரவம் என்னாகுறது . அப்புறம் என்ன இந்த ஊருல யாரும் மதிக்க மாட்டாங்க ” என்றவர்.
” எனக்கு இப்படி ஒரு பையன் பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன் .இப்படி ஒன்னு பிறந்து அது என்னோட வாரிசா இருக்க நான் விரும்பல அதுக்கு நீ சாகுறதே மேல் ” என்று கடுங்கோபத்தில் கடுங் சொற்களால் தன் மகனாக பிறந்து இப்போது மகளாக மாறிய அவளை காயப் படுத்திக் கொண்டு இருந்தார் ராமராஜன்.
இதை அனைத்தையும் கண்டும் எதிர்த்து பேச முடியாத நிலையில் கண்ணீரே கதி என்று அழுது கொண்டிருந்தார் விமலா.
“அப்பா… அம்மா..” என்று அழுகையுடன் கூற ராமராஜன் தன் மனைவி பிள்ளையை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார்..
சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததெல்லாம் அவள் நினைவில் வந்தது..
இறுதியாக அவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் வர கண்ணீர் பெருகியது.
” எனக்கு இப்படி ஒரு பையன் பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன் .இப்படி ஒன்னு பிறந்து அது என்னோட வாரிசா இருக்க நான் விரும்பல அதுக்கு நீ சாகுறதே மேல் ” என்ற வார்த்தைகள் மட்டுமே அவளது எண்ண வோட்டத்தில் மிதக்க காலின் நடுவில் தலை கவிழ்ந்து இருந்தவள் நிமிர்த்தி ஒரு முடிவுடன் எழுந்து அந்த அறையில் இருந்த கத்தியை கொண்டு தன் மணிக்கட்டில் அறுத்துக் கொண்டாள்.
மணிக்கட்டில் இருந்து இரத்தம் வேகமாக வெளியேற அதை விட அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு வந்தது.
அவளால் கையில் ஏற்பட்ட வலியை விட மனதில் ஏற்பட்ட வலியை தான் தாங்க முடியவில்லை..
அவள் கண்கள் மெதுவாக சொருக அந்த இடத்திலே மயங்கி சரிந்தாள்..
சரியும் போது அவள் அவளது அன்னை அப்பா தங்கச்சி விதுஷா என குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் கண்ணில் பட அதை பார்த்தவாறே இமை மூடும் போது அவளது அன்னையின் குரலில் இதழியன் என்ற பெயரின் உச்சரிப்பு அவளின் செவிக்கு எட்டியது. அதை கேட்டவள் புன்னகையுடன் மயங்கி சரிந்தாள்.
~ சுவாசிக்கும்…
