Post Views: 312
அந்த பெரிய வீட்டில் அனைவரும் அவர் அவர்களது வேலையை பார்த்துக்கொண்டு இருக்க..,,அந்த வீட்டில் மாடியில் இருந்து வலதுபுறத்தில் இருந்த இரண்டாவது அறையில் இருந்த ஒருவள் வேகமாக செயல் பட்டு கொண்டு இருந்தாள்…
வேகமாக எழுந்து குளித்து விட்டு வந்தவள்..,,தனக்கு பொருத்தமான ஆடையை தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்டாள்….அதை ஆயிரம் முறை சரிப் பார்த்துக்கொண்டே இருந்தாள் நம் நாயகி தக்ஷின்ய வர்ஷினி .
காற்றுப் போல் பறந்து கொண்டிருந்த கூந்தலை எடுத்து பறக்காத மாதிரி கிளிப் போட்டு அடக்கினாள் .மையிட்டு கண்களுக்கு அதன் பார்வையின் கூர்மையாக்கி கொண்டாள்…
இறுதியாக ஒருமுறை தன் பிம்பத்தை கண்டவுளுக்கே ” ஹே தஷூ இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க டி ” என்று கண்ணாடி முன் தெரியும் அவளது பின்பத்துக்கு ஒரு பறக்கும் முத்தத்தை தந்தவள்..,,நேராக தந்தையை காண சென்றாள்…
Advertisement
” அப்பா என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க பா ” என்று அவர் காலில் விழுந்தாள் தந்தையின் இளவரசி…
” நல்லா இரு மா ” என்று ஆசிர்வாதம் பண்ணினார்…
” என்னம்மா இன்னைக்கு என்னோட குட்டி இளவரசி அழகா இருக்காங்களே ” என்று அவளது தடையை தட்டி கேட்க…
Advertisement
” அப்படியா பா உண்மையிலே நான் அழகா இருக்கேன்னா…???” என்று சிறு வெட்கத்துடன் கேட்ட தன் மகளை பார்த்து..
Advertisement
” ஆமா டா சங்கி மா..நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க டா.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..???” என்றவரிடம்..
” அப்பா நான் தேவ்வ பாக்க போறேன் பா..எனக்கு ரொம்ப ஹாஃப்பியா இருக்கேன் அவன முதல் தடவை பார்க்க போறேன் பா ” என்றாள் அளவுகடந்த மகிழ்ச்சியில்…
” எப்படியோ அந்த பையன பார்த்து வா டா..அப்பா கிட்ட கூட்டிட்டு வா.. எல்லாம் பேசி முடிச்சறலாம் ” என்றார்.
Advertisement
” அப்பா ரொம்ப தேங்க்ஸ்..” என்று கூறி அணைத்து கொண்டு கண்ணத்தில் ஒரு முத்தத்தை வழங்கி விட்டு தேவ்வை காண சென்றாள்.
” என்னங்க இதெல்லாம்.அந்த பையன் யாருன்னு கூட நமக்கு தெரியாது ” என்று சிறு கோபத்துடன் அவள் செல்லும் பாதையை பார்த்துக்கொண்டே கணவரிடம் கேட்க…
” அவளோட சந்தோஷம் தான் மா எனக்கு முக்கியம்…” என்றார் வேலன்.
” அதுக்காக யாருன்னே தெரியாத ஒரு பையனுக்கு நம்ம பொண்ண கட்டி கொடுப்பீங்களா ..???” என்று வேதிகா பொறிந்து தள்ள…
“அவ நம்ம பொண்ணு வேதி ..என்னைக்கும் தப்பான முடிவ எடுக்க மாட்டா…அவ அந்த பையன சூஸ் பண்ணிருக்கானா அது கரக்ட்டா தான் இருக்கும்னு நான் நம்புறேன் ” என்றார் .
” ரெண்டு பேரும் என்னமோ பண்ணுங்க.. நான் சொல்றத எங்க கேக்குறீங்க ” என்று கோபித்து கொள்ள..
” சரி யுகி எங்க..??? இன்னும் கீழ வராம இருக்கான் ” என்று கேட்டு வேதியை திசை திருப்ப முயன்றார்..
” அவன் காலையிலேயே ஏதோ மீட்டிங்ன்னு சொல்லி கிளம்பிட்டான் ” என்றாள் வேதி .
” சரி வேதி நானும் கிளம்புறேன் ” என்று கூறி அறைக்கு சென்று கிளம்ப தொடங்கினார்.
வேலனும் கிளம்பி வர..,,அவருக்கு வேதி உணவை பரிமாறினாள்…உணவை அருந்திவிட்டு ” சரி நான் பொயிட்டு வரேன் வேதி ” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்..
வீட்டு வாசலை கடக்கும் போது..,,வீட்டு மனையில் கால் தடுக்கி விழ போக அவரது வீட்டு டிரைவர் வந்து பிடித்து விட்டார்…
” ரொம்ப நன்றி சந்திரன்..என்ன கீழ விழாம பிடிச்சதுக்கு ” என்றார்.
” இதுல என்னங்க ஐயா இருக்கு..இது என்னுடைய கடமை ” என்றார் அந்த வீட்டின் விசுவாசி.
” ஏங்க கொஞ்சம் இங்க வந்து உட்காருங்க..நடக்குற எதுவும் சரியில்ல ..நீங்க இன்னைக்கு எங்கேயும் போக வேணாம் .வீட்டிலே இருங்க ” என்றாள் வேதி.
” அய்யோ என்ன மா நீ.. இன்னைக்கு ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கு …. முக்கியமான மீட்டிங் இருக்கு ..யுகியால தனியா ஹேண்டில் பண்ண முடியாது மா.. நான் போயே ஆகனும் ” என்றார்.
” இல்ல நீங்க எங்கேயும் போக கூடாது” என்றாள்.
“சரி உனக்காக கொஞ்சம் நேரம் கழிச்சு போறேன்.ஆனா போய் தான் ஆகனும் டா ” என்றார் சமாதானம் படுத்தும் விதமாக….
( வேதி சொன்னத கேட்டு இருக்கலாம்… எல்லாம் விதியின் விளையாட்டு…)
“சரிங்க ” என்று சமையல் வேலை பார்க்க சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து ஆஃபிஸ்க்கு கிளம்பினார் சந்திரனுடன்….
பீச்சிற்கு வந்த தக்ஷூ ..,,தேவிற்காக காத்திருக்க தொடங்கினாள்…
அவள் தனது ஒன்றரை வருட காதல் யார் மீது வைத்திருந்தாலோ…இன்று அவனை முதன் முதலாக பார்க்க போகிறாள்….
அவளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது…அவளது இதயத் துடிப்பு அதி வேகமாக துடிக்க தொடங்கியது…. அவளால் அதை சீறாக துடிக்க வைக்க முடியவில்லை…..
தேவ்வை காண போகும் ஆர்வத்தில் இருந்தாள்….அவளை சுற்றி இருக்கும் ஆபத்தை தெரிந்து கொள்ளாமல்…
விஷ்ணு விற்கு அழைப்பு விடுத்தாள்….அவளது அழைப்பை எடுக்கவில்லை…
மீண்டும் முயற்சித்தாள்…,,,உடனே அவளது அழைப்பு ஏற்கப்பட்டது….
” ஹலோ தேவ்…!!! எங்க இருக்கீங்க..??? ஏன் இன்னும் வரல நீங்க..??? ” என்று கேள்வியை அடுக்க…
” ஹலோ..!!! ஹலோ..!!! நான் தேவ் இல்லைங்க… நான் அவனோட ஃபிரண்ட். அவன் ட்ரைவிங்ல இருக்கான் ” என்றான் தேவ்வின் நண்பன்…
” சாரிங்க…தேவ் கிட்ட மொபைல் கொடுங்க ” என்றாள் .
” இருங்க தரேன் ” என்று கூறி ” டேய் மச்சி..!!! அவுங்க உன்கிட்ட தான் பேசணும்னு சொல்றாங்க..வண்டிய ஓரமா நிறுத்திட்டு பேசு ” என்று கூறி மொபைலை அவனிடம் கொடுத்தான்..
வண்டியை ஓரமா நிறுத்திய தேவ் ..,, மொபைலை காதில் வைத்து பேச தொடங்கினான்…
” ஹலோ தக்ஷூ..!!!சொல்லு டா ” என்க
” ஏன்டா உன் மொபைல உன்னோட ஃபிரண்ட் எடுக்கிறாங்க ” என்று கேட்ட தஷூவிடம்
” ஏய் தக்ஷூ மா..!!! நான் ட்ரைவில இருந்ததுனால நான் தான் அவன் கிட்ட மொபைல் கொடுத்து பேச சொன்னேன் ” என்றான்.
” சரி..!!! இப்போ நீ எங்க இருக்க…??? எவ்ளோ நேரம் ஆகும் வரதுக்கு..???” என்றாள் தக்ஷூ.
” இன்னும் ஒரு ஹாஃப் அன் நேர்ல வந்துடுவேன் டா..இங்க ஒரே டிராஃபிக் ஜாமா இருக்கு ” என்றான்…
” சரி சீக்கிரமா வா ..” என்று கூறி அழைப்பை வைத்தாள்…
மொபைலை வைத்த அவள்..,, தன்னவன்னுகாக காத்திருக்க தொடங்கினாள்…
வேதிகாவுக்கு ஏதோ தப்பாக படவே… குளித்து முடித்து விட்டு கிளம்பி கோவிலுக்கு சென்றாள்..
கோவிலுக்கு வந்தவள்..,, தக்ஷூ பெயரிலும் தன் கணவன் பெயரிலும் அர்ச்சனை செய்ய ஐயரிடம் பூஜை தட்டை ஒப்படைக்க..,, அவரும் வாங்கிக் கொண்டு சாமியிடம் சென்று பூஜையை தொடங்கினார்..
தேங்காயை உடைக்கும் போது அது அழுகி இருக்கவே…,, ஐயர் வேதிகாவிடம் திரும்பி வந்து ” அம்மா தேங்காய் அழுகி இருக்கு..நீங்க வேற தேங்காய் வாங்கிட்டு வாங்க மா “என்று கூறி அனுப்பி வைத்தார்…
அவளும் சாமி கூறியது போலவே ..,, வேறொரு தேங்காய் வாங்கி வந்து கொடுத்து பூஜையை முடித்தாள்..
” சாமி தேங்காய் அழுகி இருக்கு..இதுனால எந்த பிரச்சனையும் இல்லையே ” என்று தவிப்புடன் கேட்க
” அதெல்லாம் இல்ல மா… திருஷ்டி கழிஞ்சதா நினைச்சிக்கோங்க .எந்த ஒரு பிரச்சனையும் இல்ல மா .நீங்க கவல படாம போங்க ” என்று அனுப்பி வைத்தார்…
மத்த சாமிகளையும் கும்பிட்டு வந்து சன்னதியில் உட்கார்ந்தாள் வேதிகா.
தக்ஷூ விடம் கூறியது போலவே பதினைந்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் தேவ் என்கிற விஷ்ணுதேவன்…
அவள் இருக்கும் இடத்தை தூரத்தில் இருந்தே கண்ட தேவ் ..,,அவளுக்கு ஹாய் கூறியபடியே அவளை நோக்கி வந்தான்…
தூரத்தில் இருந்தே தன்னவனை கண்டு கொண்ட தக்ஷன்யா விற்கு நாணம் வந்து ஆட்கொண்டது…
அவளுக்கு எதிர்முனையில் அவன் நின்று சாலையை கடப்பதற்காக நிற்க…,,அதே நேரம் அந்த சாலையில் தன் ஆஃபிஸ்க்கு சென்று கொண்டிருந்த வேலனை கண்ட தக்ஷூ தன் தங்தையை பார்க்க …
தீடிரென்று தக்ஷூ ” அப்பா ” என்று கதறலுடன் தூக்கி எறியப்பட்டாள்.
????????????????????
Stay tuned…✌️✌️✌️✌️