Skip to content
Post Views: 10,601
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 18
மணி பன்னிரண்டு இருக்கும். விக்ரம் உறங்காமல் தண்ணி தொட்டி மேலே விட்டத்தை பார்த்து கிடக்க, பிரபா வீட்டில் அழுதே ஓய்ந்து போனார்கள்.
பிரபா கண்ணில் ஜீவன் இல்லை. மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தி முடித்து இருந்தார் கலை செல்வி. மிகவும் சோர்ந்து போனாள். வாங்கிய அடியை விட, நடந்த துயரம் நெஞ்சை பிழிந்தது.
Advertisement
செல்விக்கு மகளை பார்க்க பார்க்க ஆத்திரம் வந்தது. கொடூரமாக உயிரை விட்ட மாடுகளின் நிலை கண் முன் வர, வேகமாக சென்றவர். பிரபா பீரோவில் இருந்த அவளின் படித்த சர்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்து வந்து வெளியில் இருக்கும் கங்கு அடுப்பில் போட…
தாய் என்ன செய்கிறார் என்பதை உணராமல் கூட அமர்ந்து இருந்தாள் பிரபா.
ரேவதி தான், “என்னத்த எரிச்சுட்டு கிடக்க…”
Advertisement
“ அவ படிச்ச படிப்ப தான். அவளை படிக்க வச்சதால தான திமிரெடுத்து போய் அடுத்தவன் கூட ஊர் மேஞ்சா…” என்று செல்வி சொன்ன பின் தான் , பதறி போய் பிரபாவும், செல்வமும் ஓடி போய் பார்த்தார்கள்.
Advertisement
“அறிவு கெட்டவளே! அஞ்சு வருசம் பிள்ளை கஷ்டபட்டு படுச்ச படிப்ப உன் ஆங்காரத்துக்கு எரிச்சு பிட்டையே…” என்று செல்வம் கத்த,
“நான் அன்னைக்கே சொன்னேன். பண்ணன்டாவது பிடிச்சது போதும் கட்டி கொடுங்கன்னு, காச கொட்டி படிக்க வச்சோம். இன்னைக்கு நம்ம குடி கெடுத்து பாவியா போனா… இவ செத்தாலும் ஒரு வார அழுகையில் மட்டும் தான் போகும்… உசுரோட இருந்து என்னும் யார கொல்ல போறாளோ…”என்று தாயின் வார்த்தைகளை கேட்டு பிரபா மறித்து போனாள்.
தாயும், தந்தையும் சண்டை கட்டி நிக்க, மெளனமாக உள்ளே வந்தாள்.
Advertisement
மதன், விக்ரமை எழுப்ப,
“என்னடா?…”
“ கீழ அத்தை வந்துருக்குடா.”
விக்ரம் இறங்கி வந்தான்.
“என்னம்மா?…”
திலகவதி, தன் இரு கைகளால் மகனை முகம் முதல் தொட்டு தடவி பார்த்தார். கண்கள் கலங்கியது.
“என்னம்மா? என்ன ஆச்சு?”
தன் கையில் இருந்த பையை தூக்கி அவனிடம் கொடுத்தவர்.
“நீ ஆசைப்பட்ட பிள்ளையை கூட்டிட்டு போய் எங்கேயாவது நல்லா பொழச்சுக்கோ சாமி…” என்று கண்ணீர் வழிய தாய் சொல்ல,
“அம்மா …” என்றான் அதிர்ந்து.
“ரெண்டு பொம்பளை பிள்ளைக்கு அப்புறம் ஆசையா உன்னை வரம் வாங்கி பெத்தேன். எனக்கு கொல்லி போட நீ இல்லாட்டியும் போவுது. ஆனா, உனக்கு நான் கொல்லி போடுற நிலமை மட்டும் வந்துற கூடாது…”
“எம் பிள்ளை எங்கேயாவது உசுரோட நல்லா பிழைக்குதுன்னு நினைப்பு போதும். நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். ஆனா, இங்க வேணாம். இந்த ஊர் வேணாம். நீ போயிரு… நம்ம சாமி உனக்கு துணை நிக்கும்…” என்று கண்ணீரோடு முடிக்க.
“அம்மா விடுமா. யார் என்னை என்ன செய்வா. விடு ஒரு கை பார்த்துக்கலாம்…” என்று தைரியமாக விக்ரம் சொல்ல,
“வேணாம் சாமி. உனக்கு நம்ம பயலுகல பத்தி ஒன்னும் தெரியாது. எனக்கு என் பிள்ளை வேணும். அம்புட்டு தான். நீ மொத ஊரை விட்டு போ…” என்று முடிவாக சொல்ல,
விக்ரம் முகம் யோசனையானது. ரொம்ப அமைதியான தாயே சொல்கிறார் என்றால் விசயம் பெருசா…
அடுத்து ரேவதியிடம் இருந்து போன் வர, அடித்து பிடித்து ஓட்டினான்.
அழுத களைப்பிலும், சோர்விலும் அப்போது தான் கண்ணசந்து இருப்பார்கள். ஏதோ ஒரு சத்தம். திரும்ப மாட்டுக்கா என்று பதறி செல்வம் எழுந்து நிற்க, பிரபா அறையில் இருந்து தான் வந்தது. பயந்து போய் பார்த்தால், உத்திரத்தில் தொங்கி கொண்டு இருந்தாள் பிரபா.
விரக்தி, பயம், அழுகை, வலி, தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி, அடுத்து என்ற கேள்வி குறி, விக்ரமை விட முடியாத தவிப்பு, ஒரு நாள், ரெண்டு நாள் அல்ல. ஐந்து வருடம் இரவு பகலாக படித்த படிப்பு ஒரு நொடியில் காத்தில் போனது, இவ்வளவு நடந்த பின் இனி தன் காதல் கை கூடாது என்ற அவநம்பிக்கை எல்லாம் பிரபாவை சேர்ந்து தாக்கியது.
இதுவரை பெரிதான கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கையை எளிதாக கடந்தவளுக்கு, வாழ்க்கை ஒரு நொடியில் சுமக்க முடியாத பாரமாகி போனது. அவளுக்கு எப்படி தூக்கு மாட்ட என்று கூட தெரியாமல் அரைகுறையாக மாட்டி, சுவற்றில் கால் மோத, அது கொடுத்த சத்தம் தான் செல்வம் எழுந்தது.
பெற்ற தந்தை கற்பனை பண்ணாத காட்சி. அலறி துடித்து கால்களை மேலே தூக்கி பிடிக்க, ரேவதியும், செல்வியும் பதறி போய் ஓடி வந்தார்கள்.
“ஐயோ! நான் பெத்த மகளே!” என்று நெஞ்சில் அடித்து செல்வி அழுக.
ரேவதி கை எல்லாம் நடுக்கம். பதறியபடி பிரபா கால்களை பற்றி கொள்ள, செல்வம் ஓடி போய் கத்தி எடுத்து வந்தார். ஒரு சேர் எடுத்து போட்டு தொங்கி கொண்டிருக்கும் கயிற்றை அறுக்க, கை அவ்வளவு நடுக்கம். கால் ரெண்டும் துவண்டது. கத்தி அழுக தான் நினைக்க, தொண்டை அடைத்து கொண்டது.
அரை மயக்கத்தில் பிரபா கண் மூடி கிடந்தாள். இதற்கா, இதை பார்க்கவா கண் காணாத இடத்தில் பனி, வெயிலை பொருட் படுத்தாமல் குடும்பத்திற்காக ஓடியது.
பதட்டத்தில் கயிறை அறுக்கும் போது செல்வம் தன் கையை கவனிக்காமல் அறுத்து கொண்டார். அதன் வலி கூட அவர் உணர வில்லை. பிரபா கழுத்து வழியே இரத்தம் வடிந்தது. மூச்சு இல்லை, செல்வி தான் நீர் கொண்டு வந்து கொடுக்க, ஓங்கி முகத்தில் அடித்து தெளிய வைத்தாள் ரேவதி.
பிரபா லேசாக கண் திறந்த பின் தான் மற்றவர்களுக்கு உயிரே வந்தது. ரேவதி கட்டி கொண்டு அழுது தீர்த்தவள், பிரபா கழுத்து, தொண்டை பகுதி எல்லாம் நீவி விட்டாள். செல்வம், மக்களின் கை, கால் எல்லாம் பிடித்து விட்டார்.
ஒரு மணி நேரம் ஆனா பின் தான் ஓரளவு தெளிவாக இருந்தாள் பிரபா. ரேவதி, பால் கொண்டு வந்து குடிக்க வைத்தவள். அவளை அழைத்து கொண்டு குளிக்க வைத்து உடை மாற்றி கூட்டி வந்து படுக்க வைத்தாள்.
செல்வி அங்கேயே முடங்க, செல்வம் அந்த சேரிலே தலை சாய்த்து கொண்டார். ரேவதி மகள் முகத்தையே பார்த்தவள், நேரம் பார்த்தாள் மணி மூணு. இனி விடிந்தால், காரியம் நமதில்லை என்று புரிந்தது.
விசயம் வெளியேறினால், அது குடும்ப பிரச்சனை இல்லை. ஊர் பிரச்சனை, பொது பிரச்சனை. அடுத்து எதுவும் நம்ம கையில் இல்லை. ரேவதி வேகமாக ஒரு பையில் பிரபா உடைகளை திணித்தாள். கண் மூடி கிடந்த அவளை எழுப்பி, “வா போலாம்…” என்று அழைக்க, செல்வம் விழித்து கொண்டார்.
“சித்தி?…”
“அந்த தம்பி விக்ரமை வர சொல்லி இருக்கேன். இனி நீ அவனோடு தான். வா, விடியும் முன் போகணும்…” என்று இழுக்க,
பிரபா பயந்தாள். தந்தை முகம் பார்த்தாள், தாய் கண் மூடி கிடந்தார்.
“ வேணாம் சித்தி…”
“அப்புறம், நாங்க இல்லாதப்பா வேற முடிவு எடுக்க போரையா இல்லை ஊர் கூடி நடத்தி வைக்குமா? வாடி…” என்று இழுத்து செல்ல,
தந்தை முகம் பார்த்தாள். செல்வம் முகத்தில் எதிர்ப்பு இல்லை. எல்லாம் கடந்த மன நிலைக்கு வந்து விட்டார் போல…
“அட, போங்கடா… பெத்த பிள்ளைக்கு கொல்லி வச்சு, என்னத்த அள்ளி கட்டி போக போறீங்க… என் பிள்ளை உயிர் துடிப்பதை கண்ணால கண்டவன். இனி என் உடம்பில் எதிர்க்க தெம்பில்லை…”
விக்ரம் ஐயனார் கோவிலுக்கு அடித்து பிடித்து ஓடி வந்தான். “என் மீது நம்பிக்கையே இல்லையா அவளுக்கு?… என்னை உசுரோட கொல்ல தெரிஞ்சா பாவி…”
ரேவதி மகளை கூட்டி சென்ற பின் தான் ஒரு யோசனை. வாயில் லா ஜுவன், அதன் மீது வன்மத்தை காட்டிய ஆள் நீதிபதி. அப்படி இருக்கு, அனைத்துக்கும் காரணமான தன் மகளை என்ன செய்வார். தன்னை போல யோசிப்பாரா?…
பெற்ற மகளின் சாவை கண்ணால் பார்த்து, என்னத்த கௌரவம் என்று தூக்கி போட்ட தன்னை போல அவர் இருப்பாரா? ஐயோ! என் மகள் என்று தோன்ற, வேகமாக கிளம்பி விட்டார்.
ரேவதி மகளோடு கோயிலை அடையும் முன், விக்ரம் அங்கு இருந்தான். தளர்ந்து போய், மிகவும் சோர்ந்து நடந்து வந்த அவளை பார்த்தவன், மனம் வலித்தது. என்னால் தானோ?…
தலைகுனிந்து தான் இருந்தாள் பிரபா. நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. பெற்ற தந்தை பார்க்க வீட்டை விட்டு வெளியேறியது வலித்தது. அவனையும் விட முடியவில்லை.
“பிரபா…” என்று விக்ரம் அழைக்க, நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அவ்வளவு வலி.
ஓடி போய் நெஞ்சோடு அணைத்து கொண்டான்.
“என்ன அவசரம் என்னை விட்டு தனியா போக… நான் என்ன சொல்லி இருக்கேன். நான், உன் கூட நிக்கும் போது இப்படி ஒரு காரியம் பண்ணலாமா… உனக்காக நான் எவ்வளவு தூரத்துக்கும் போவேன் பிரபா…”
பிரபாக்கும் அழுகையில் உடல் குலுங்கியது. அவன் நெஞ்சிலே தன்னை மறைத்து கொண்டாள்.
“தற்கொலை எனக்கு எப்பவும் உடன்பாடு கிடையாது. ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகி இருந்தா, நான் அந்த முடிவை தான் எடுத்து இருப்பேன்…” என்று விக்ரம் சொன்ன போது, பிரபா அழுகை இன்னும் கூடியது.
அவள் தலையை அவன் தடவி குடுத்தான். பார்த்திருந்த ரேவதிக்கு ஏதேதோ நினைவுகள். அவர்களை பார்த்த வண்ணம் இருந்தாள். ஏக்கமா, நிறைவா என்று அவளுக்கே தெரிய வில்லை.
சுற்றிலும் நாலு பேர் அடித்து மிரட்டின உடன் தன் கனவு கனவாக போனது. அதன் பின் பெரிதான நம்பிக்கை என்று இருந்ததில்லை. விக்ரமை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது.
பிரபாவை மார்போடு அணைத்து, தலையை தடவி கொடுத்த படி, மெதுவாக ரொம்ப பொறுமையாக அவளை சமாதானம் செய்கிறான். விக்ரம் கண்களிலும் நீர் நிறைந்து தான் நிற்கிறது. ஆனால், கண் தாண்டி வெளியே வர வில்லை. முழுதாக உடையும் தருணத்திலும், என்ன வேண்டும் என்றாலும் நடக்கும் நிலையிலும், அவளுக்காக தைரியம் கொண்டு, அவளை தட்டி கொடுத்து ஆறுதல் சொல்கிறான்.
இவனுக்கு என்ன குறை. நல்ல வசதி, படிப்பு, அந்தஸ்து, தாங்கும் குடும்பம் என்று எல்லாம் இருந்த போதும், அவளுக்காக நிற்கிறான். எல்லாவற்றையும் துறந்து விட்டு நிற்கிறான். விக்ரம் நிற்பான் அவளுக்காக, காலத்திற்கும் தாங்குவான் அவளை. ஒரு நல்ல ஆண் மகன் அவள் வாழ்வில் வந்தது வரும் தான்.
அதையே தான் தமிழ் செல்வமும் நினைத்தார். தன் மகளுக்காக விக்ரம் கண்களில் வந்த கண்ணீர், அவரை அமையாக்க செய்ய, வந்து விட்டார் நீதிபதி.
வேக வேகமா நீதிபதி வர, விக்ரம், இரு பெரியவர்களையும் பார்த்து தன்னை தயார் படுத்தி கொண்டான். பிரபா நிமிர்ந்து பார்க்க , அவள் கண்களில் அவ்வளவு பயம். ரேவதி உடன் வந்து விட்டாள் துணைக்கு…
அருண், அங்கிருந்த கட்டையை கையில் எடுத்து கொண்டான். மாமா என்றாள் அப்புறம் பார்த்து கொள்ளலாம். மதனும், தன் சட்டையை மடித்து கொண்டு தயார் என்று நினைத்தான்.
பெரிதாக காதல் மீது நம்பிக்கை இல்லாத அவனுக்கே, இவர்கள் அன்பு மாத்தி இருந்தது. இவ்வளவு அன்பு வைத்திருக்கும் இவர்களை ஏன் பிரிக்க வேண்டும். அப்படி என்ன கொள்கை, கோட்பாடு பார்த்து விடலாம்.
செல்வம் வேகமாக வந்து தன் மகளை இழுக்க, பிரபா அரண்டு போனாள். அவர் கையில் துப்பாக்கி இருந்தது.
“டேய் மதனு, நேசமாவே மிலிட்டரி துப்பாக்கி வச்சு இருக்குடா?…” என்று அருண் அலற
“அது தான் தெரியுமே!… சண்டைக்கு தயாராகுடா…” என்று மதன் கத்த
“என்ன இருந்தாலும் இரத்த பாசம். நான் எங்க மாமன் கூடவே ஜோடி போட்டு மல்லு கட்டுகிறேன். நீ அந்த மிலிட்ரிய கவனி…” என்று அருண் எம்பி விட,
“டேய் நான் கூட அவர் வச்சு இருக்குறது, சந்திரமுகி படத்துல வர பாம்பு மாதிரி, பார்வைக்கு மட்டும் தான்னு நினைச்சு இருந்தேன்டா…” என்று மதன் முன்னேற,
அங்கு வந்த நீதிபதி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். முறைத்து கொண்டு திலகவதி, என்ன செய்ய முடியும் என்ற திமிரோடு விக்ரம், வந்து பார் என்று ரேவதி, துப்பாக்கியை கையில் வைத்து முழு இராணுவ வீரனாக தமிழ் செல்வம், கட்டையோடு அருண், பார்ப்போம் என்று மதன் நிற்க.
நீதிபதி அசராமல், அசால்ட்டாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.
“பார்த்தியா மச்சான். தனோஸ் ரேஞ்சு க்கு என் மாமன் நிக்குறத… வயசானாலும் சிங்கம், சிங்கம் தாண்டா…” என்று அருண் கமென்ட் கொடுக்க,
“வாய மூடுடா உசுர கைல புடிச்சு எல்லாரும் நிக்குறோம்…” என்று மதன் கத்தினான்.
பிரபா, தந்தையை மீற முடியாத தவிப்போடு விக்ரமை பார்க்க,
பிரபா கையை இழுத்து கொண்டு செல்வம் நகர்ந்தார். உன் வெறிக்கு உன் மகனை நீ என்னவும் செய், என் மகள் ஆள் இல்லை என்று நடையை கட்ட…
“உங்க பொண்ணா விடுங்க மிலிட்டரி. அவங்க ரெண்டு பேரும் சேரட்டும்…” என்று நீதிபதி சொன்ன உடன் எல்லோரும் அவரை அதிர்ந்து பார்க்க,
அடுத்து ஒரு வார்த்தையும் நீதிபதி பேச வில்லை. வேற பக்கம் முகத்தை திருப்பி கொள்ள,
“அப்பா…” என்று மகன் முன்னேற,
அந்த வார்த்தை தந்தையை ஏதோ செய்தது. விக்ரம் சொன்னது போல, அவரால் சிவ லிங்கத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
தனக்கு நேர் எதிரே இருப்பது கல் என்று நினைத்து இருந்தால், அதே இறுமாப்போடு திமிராக பார்த்து இருப்பார். அவர் அதை கடவுளாக பார்த்தார்.
நீதிபதி மனம் திறந்து கொள்ள, கண்ணை மூடி கொண்டார். அவருக்குள் நடந்தது என்னவென்று தெரிய வில்லை. முழுதாக அமையாகி விட்டார்.
திலகவதி ஓடி வந்து, பையில் இருந்து ஒரு பொன் தாலியை வெளியே எடுத்தார்.
“சாமி! இது உனக்குன்னு பதினஞ்சு பவுன்ல உங்க அப்பா செஞ்சது தான். இந்தா, அந்த புள்ளை கழுத்துல போடு…” என்ற தாயை அதிர்ந்து பார்த்தவன், திரும்பி பிரபாவை பார்க்க,
தமிழ் செல்வம் மகள் கையை விட்டு இருந்தார். பிரபா, தன் தந்தையை அதிர்ச்சியோடு பார்க்க, செல்வம் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்.
பெற்றவர்கள் இருவருக்குமே பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கு. ஆனால், இத்தனை ஆண்டுகள் பழகிய ஒன்றை எளிதாக மாற்ற முடியவில்லை. தாங்கள் மட்டும் இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்க படுவோமோ என்று உள்ளுக்குள் இருக்கும் பயமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ரேவதி, பிரபாவை அழைத்து கொண்டு கிட்ட வர, விக்ரம் பிரபாவை நெருங்கி நின்றான்.
அவனுக்கு தெரியும், இதற்கு மேல் பெரியவர்கள் இறங்கி வர மாட்டார்கள். இவ்வளவு தூரம் சம்மதித்து, அவர்கள் முன் தங்கள் திருமணம் நடப்பதே பெரிது என்று நன்றாக தெரியும்.
பொதுவாக, ஐயனார் கோவிலில் கல்யாணம் செய்ய மாட்டார்கள். இங்கு அந்த ஆலமரத்து ஐயனார் துணை நிற்க, விக்ரம், பிரபா கழுத்தில் அந்த தாலி கொடியை போட்டு மனைவியாக ஏற்று கொண்டான்.
பிரபா கண்களில் நீர். எவ்வளவு பெரிய நிறைவு. சாக துணியும் போது கூட நாள் வேற மாதிரி அமையும் என்று நினைக்க வில்லை.
அருண், மதனுக்கு அவ்வளவு திருப்தி. நிச்சயம் கலவரம் வரும், பிரச்சனையாகி வெட்டு, குத்து வரை போகும் என்று நினைத்து இருக்க, இதுவரை வந்ததே பெரிது.
“கடைசில, எல்லா வில்லனையும் போல நல்லவராகிட்டார்டா…” என்று அருண் சொல்ல, மன நிறைவோடு சிரித்தான் மதன்.
வடக்கு பார்த்து நீதிபதியும், தெற்கு பார்த்து தமிழ் செல்வமும் நிற்க. விக்ரம், பிரபா கை பிடித்து கிளம்பி விட்டான். பிரபா அதிர்ந்து பார்க்க,
“நாம இங்க இருக்குறது சேப் இல்லா பிரபா. என்ன இருந்தாலும் அவங்க நம்ம பெத்தவங்க கொஞ்சம் யோசிப்பாங்க. ஆனா, ரெண்டு ஊர் காரங்களும் யோசிக்க மாட்டாங்க. நம்மளை முன் மாதிரி யா வச்சு திரும்ப காதல்ன்னு யாரும் வந்துவாங்கன்னு நினைப்பாங்க. அத்தோட விளைவு, நம்ம இறப்பு மட்டும் தான் …” என்றதும் அதிர்ச்சியாக பிரபா பார்க்க,
“எங்க அப்பா ஏதோ சாமி புகுந்த மாதிரி அமைதியா இருக்கார். விடிஞ்சு நாலு பேர் ஏதாவது சொன்னா, திரும்ப மனசு மாறிடுவார். நாமளும் இல்லாம, நம்ம ரெண்டு வீடும் அமைதியா இருந்தா. மத்த யாரும் பிரச்சனை பண்ண முன் வட மாட்டாங்க. தரியமா நாம இங்க இருந்தா, அது ஆணவம் மா தெரியும். ரெண்டு வீட்டையும் கஷ்ட படுத்துவாங்க. எங்க அப்பா தாங்க மாட்டார். கொஞ்ச வருசத்துக்கு நாம தள்ளி இருக்குறது தான் நல்லது. எல்லாருக்கும் கொஞ்சம் காயம் ஆறும், நம்ம நியாயமும் புரியும்…” என்று முடிவாக சொல்ல,
பெரியவர்களுக்கும் அது தான் சரியென்று பட்டது. எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று எண்ணம் மட்டும் தான் அனைவருக்கும் …
மதன், விக்ரம் கண்கள் கூட கலங்கியது.
“ நான் திரும்ப வருவேன்டா. எனக்கு பயமில்லை, ஊர் பிரச்சனையாக வேண்டாம். இது என் இடம், நிச்சயம் வருவேன்…” மதனும், அருணும் நண்பனை கட்டி கொள்ள,
பிரபாவை அணைத்து, “நீ தீர்க்க சுமங்கலியா நல்லா இருக்கணும்…” என்று ரேவதி ஆசிர்வதித்தாள்.
திலகவதி மகனை கட்டி கொண்டு கணிர் விட, அவரை தோல் அணைத்து பிடித்தவன்,
“ம்மா, நான் வருவேன். உன்னை விட்டு நானும் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்…” என்றவன் தந்தையை நெருங்க,
“போயிடு விக்ரம். எம் மனசு மாறும் முன் போயிடு…” என்று எங்கோ பார்த்து கொண்டு சொன்னார் நீதிபதி.
பிரபா, தன் தந்தையை பார்க்க, ஒரு தலையசைப்பு மட்டும் தான். அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
விடியும் முன் விக்ரம் விரைந்து விட்டான். கொஞ்சம் பயம் தான்.தன் ஊரை தண்டும் வரை பயந்து தான் இருக்க வேண்டும்.
நேரம் ஆக ஆக பிரபா கொஞ்சம் தெளிந்தாள். பயம் போனது, விக்ரம் அருகே இருக்க பாதுகாப்பாக உணர்ந்தாள்.
தங்கள் பகுதியை விட்டு நீண்ட தூரம் வந்த பின் தான் விக்ரமுக்கு நிம்மதி. நிர்மலமான முகத்தோடு வந்த மனைவியை பார்த்தான். கடந்து போகும் இடங்களை பார்த்து கொண்டிருந்தாள் பிரபா.
“பயமா இல்லை…” என்று விக்ரம் கேட்க.
“எனக்கென்ன பயம் கூட நீங்க இருக்கீங்க தான…”
“என்னை ரொம்ப தேடுனியா?”
“ஆமா, ஆனாலும் எங்க அப்பாவா மீறி வந்து இருக்க மாட்டேன். இப்போ தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. நிச்சயம் நாம நம்ம ஊருக்கு போவோம் தான…”
“கண்டிப்பா போவோம். நமக்கான வேர் அங்க தான் இருக்கு பிரபா. ஆனா, எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும்…” என்று விக்ரம் சொல்ல,
அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் பெண். அவளை சேர்த்து தட்டி கொடுத்தவன்,
“கொஞ்சம் தூங்கு பிரபா…” என்று அணைத்து கொண்டான்.
error: Content is protected !!