Skip to content
Post Views: 4,834

அர்ஜுனன் தான் புபில் லீடர்(pupil leader)…. அன்று ப்ரின்ஸிபலிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் ஸ்ரீ தேவி ப்ரின்ஸிபலை பார்க்க தன் பெற்றோருடன் அந்த அறைக்கு வந்தாள்…
வட்ட முகமாய் புருவ மத்தியில் சின்னதாய் ஒரு பொட்டு வைத்து பள்ளி சீருடையில் இரட்டை ஜடை பின்னி முகத்தில் புது பள்ளியில் சேர போகும் படபடப்பும் ஆர்வமும் போட்டி போட்டு கொண்டு இருந்தது…
Advertisement
கண்டவுடன் காதல் என்பார்களே அது போல் தான் கண்டவுடன் அவன் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்து கொண்டாள் ஸ்ரீ தேவி…. அவளை பார்த்தவுடன் அவனுக்கு
பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
என்ற பாடல் தான் நியாபகம் வந்தது அர்ஜுனனுக்கு….
Advertisement
அவள் பெற்றோர் ப்ரின்ஸியிடம் பேசி கொண்டு இருந்தனர்… அவளின் அப்பா அரசு அலுவலராக இருந்து ட்ரான்ஸ்பர் ஆகி இந்த ஊருக்கு அருகில் வந்துள்ளார்… அதனால் அவரின் மகளான ஸ்ரீ தேவியையும் இதே ஊரில் படிக்க வைக்க இந்த பள்ளியில் சேர்த்து உள்ளதாக கூறினார்…
Advertisement
ப்ரின்ஸிபல் ஸ்ரீ தேவியிடம் ” வெல்கம் டு அவர் ஸ்கூல் மா.. டென்த்ல எவளோ மார்க் எடுத்து இருக்கீங்க…” என்று கேட்டார்
அவளோ “போர் நைன்ட்டி பைவ் மேம்” என்று கூறினார்…
ப்ரின்ஸியோ “சூப்பர் மா… கீப் இட் அப்… இதே மாதிரி லெவெந் ட்வல்த்லயும் நல்ல மார்க் எடுக்கனும்…” என்று கூறிவிட்டு அர்ஜுனனிடம் திரும்பி “அர்ஜுன் இவங்களை லெவெந் பி(B) கிளாஸ்ல விட்டுட்டு நீ உன்னோட கிளாஸ் போயிடு… நீ போயிட்டு ஆஷாவை வர சொல்லிடு அர்ஜுன்.. நீ பாய்ஸ்க்கு சொல்லிடு… ஆஷாவை நான் கேர்ள்ஸ்க்கு சொல்ல சொல்லிடறேன்…” என்று கூறி மீண்டும் ஸ்ரீ தேவியின் பெற்றோர்யிடம் திரும்பி “இந்த பையன் உங்களை கிளாஸ்க்கு கூட்டிட்டு போவான்.. ” என்று கூறினார்…
Advertisement
அவர்களும் ப்ரின்ஸியிடம் தலையசைத்து விட்டு அவனை பின் தொடர்ந்தனர்… அவனும் அவர்களை அந்த கிளாஸ்க்கு அழைத்து சென்றுவிட்டு அங்கிருக்கும் மேமிடம் சொல்லிவிட்டு அந்த வகுப்பில் படிக்கும் ஆஷாவை ப்ரின்ஸிபல் அழைப்பதாக கூறிவிட்டு அவர்களிடம் தலையசைத்து விடைபெற்று கொண்டான்…
அதன்பின் அவனுக்கு அடுத்த ஒரு வாரம் அவளை காண முடியா நிலை…. எப்படியோ அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆஷாவை அழைக்கும் சாக்கில் அந்த வகுப்புக்கு சென்றான்…
அவனுக்கு ஏற்றதுபோலவே பிடி மிஸ்ஸும் அழைக்க சென்றுவிட்டான் அந்த வகுப்பிற்கு..
அங்கிருக்கும் சாரிடம் “சார் ஆஷாவை பிடி மிஸ் கூப்பிட்டாங்க” என்று கூறி அவனின் தேவியை கண்களில் வலை வீசி தேடினாள்…
அவன் தேடியவளோ முதல் வரிசையில் உட்கார்ந்து சிரத்தையாக ஒரு சமிற்கு(sum) விடையை போட்டு கொண்டு இருந்தாள்…
அவனின் பார்வையின் போக்கை உணர்ந்த ஆஷா நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு ஆசியரிடம் விடை பெற்று அர்ஜுனனை நோக்கி வந்தாள்…
வகுப்பறையை தாண்டி மைதானத்திற்கு நுழையும் வேளையில் “என்ன அண்ணா என்னை கூப்பிட வரும் போது பார்வை எல்லாம் வேற இடத்துல இருந்ததே” என்று கேலியாக கேட்டாள்…
அவனோ அசடு வழிந்தவாறே “இல்ல தங்கையே.. உன்ன தானு பார்த்துட்டு இருந்தேன்… வேற எங்கயும் பார்கலேயே” என்று கூறிவிட்டு “நான் பிடி சாரை பார்க்க போறேன்… நீ போய் மிஸை பாரு” என்று கூறி ஓடிவிட்டான் அர்ஜுனன்…
இங்கு இவனோ காதலில் மூழ்கி இருக்க அங்கு சுபத்திராவோ அவள் பள்ளியில் அழுது கொண்டு இருந்தாள்… ஜனனியும் மருதாயி பாட்டியின் மகன் வழி பேத்தி கண்மணியும் அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்…
அவளின் ஆசிரியையும் அவளுக்கு ஒரு விஷயத்தை பத்தி விளக்கி கொண்டு இருந்தார்…
“இங்க பாரு சுபா இது எல்லா லேடீஸும் அனுபவிப்பாங்க… ஏன் நீ செவென்த் படிக்குற அப்ப கண்மணிக்கும் இப்படி ஆச்சு.. நான் அப்பயே எல்லாருக்கும் இத பத்தி சொல்லி இருக்கேன்ல அழுகாத உன் அம்மாவும் அப்பாவும் வந்துடுவாங்க ” கூறிக்கொண்டு இருக்கும் போதே பார்வதியும் வந்து இருந்தார்…
ஆசிரியை சொன்ன விளக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தி இருந்தாள்.. ஆசியரிடம் விடை பெற்று அறையில் இருந்து அவளுக்கு முக்காடு போட்டு கையில் இரும்பை குடுத்து வேப்பிலையும் குடுத்து வேகமாக காரில் அமர வைத்தார் பார்வதி…
ஆம் சுபத்திரா பருவம் அடைந்து இருந்தாள்.. திடீரென்று ரத்தத்தை பார்த்து தான் அழுது கொண்டு இருந்தாள்… அவளின் அழுகையை பார்த்த கண்மணியும் ஜனனியும் என்ன என்று விசாரித்து ஆசிரியையிடம் கூறினர்..
அவரும் அவளின் பெற்றோருக்கு அழைத்து விஷயத்தை கூறி வர வைத்துவிட்டார்…
கிரிஜாவின் அம்மாவோ அதை விசேஷம் வைத்து பெரிதாக செய்யலாம் என கூறினார்… ஆனால் பரமசிவனோ “அப்டி எல்லாம் பண்ண முடியாது மா.. என் பொண்ணு சின்ன பொண்ணு… வீட்டோட மட்டும் தான் பண்ணுவேன்” என்று கூறிவிட்டார்…
அவருக்கு இதை பெரிதாக செய்ய விருப்பமில்லை… அதனால் இவ்வாறு கூறிவிட்டார்… அவரோ வாய்க்குள் முணுமுணுத்தவாறே சென்று விட்டார்…
பார்வதிக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லை எனவே பாலாவை தான் தாய்மாமனாக மாலை போட கூப்பிட்டனர்… அவரும் அனைத்தும் சிறப்பாக செய்தார்…
வீட்டளவில் வைத்தாலும் கிரிஜாவின் குடும்பம், மருதாயி பாட்டி குடும்பம், ஜனனியின் குடும்பத்தை வைத்து மட்டும் விழா செய்தனர்…. இதுக்கு அர்ஜுனன் வந்து இருந்தான்…
ஆனால் அவன் சுபாவை பார்க்கவில்லை… தன் நண்பர்கள்… பாட்டி.. அக்கா.. தம்பிகள்… தாத்தா.. தன் அத்தான்(வாணன்)… மாமா… தன் பிரியமான பாரு அத்தையிடம் மட்டும் பேசினான்…
தன் அஜ்ஜு மாமா தன்னுடன் பேசுவான் என எதிர்பார்த்த சுபத்திராவிற்கு ஏமாற்றம் தான்… அவன் அவளை பார்க்க கூட இல்லை… அதனால் சோகமாகவே இருந்தாள்…
அதை இன்னும் அதிகம் ஆக்குவது போல் அம்மாவும் மகளும் எல்லாரும் இருக்கும் போதே இப்போதே சசியிற்கும் அவளுக்கும் சம்பந்தம் பேசினர்…
அதாவது இப்போதே பேசி வைத்து விட்டு இருவரும் கல்லூரி முடித்தவுடன் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என…
நல்வாய்ப்பாக மருதாயி பாட்டியின் குடும்பமும் ஜனனியின் குடும்பமும் விடை பெற்று சென்று விட்டனர்…
சேனாதிபதி கொதித்து போய் இருந்தார்… மற்ற அனைவரும் சீ என பார்த்தனர் இருவரையும்… பாலாவிற்கே இந்த பேச்சை பிடிக்கவில்லை…
இதுவரை பார்வதி அவரை எதிர்த்து பேசியது இல்லை.. ஆனால் இந்த நிகழ்வில் அவரே “போதும் நிறுத்துங்க அத்தை… சின்ன பசங்க என்ன பேசுறீங்க… கிரிஜா உனக்கும் அறிவில்லையா.. அவங்க தான் அந்த காலத்து மனுஷி புரியாம பேசுறாங்க நீ எப்படி இதை நினைக்கலாம்…” என்று காட்டமாகவே கேட்டுவிட்டார் பார்வதி…
அவரை எதிர்த்து பேசிய பார்வதியை பார்த்து கோவமாக எதோ பேச வந்தவரை சேனாதிபதி இடியென கன்னத்தில் தன் கையை இறக்கினார்…
நிறைய முறை அவரிடம் அடி வாங்கி இருக்கிறார்.. ஆனால் இம்முறை கொஞ்சம் பலமாக தான் விழுந்து இருந்தது..
அவரின் இந்த அடியில் மயக்கம் வராத குறை தான்… தடுமாறி கீழே விழ போனவரை கிரிஜா தான் தாங்கி பிடித்தார்…
“இன்னொரு முறை இந்த மாதிரி பேச்சு வந்தது அவ்வளவு தான்… கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்… சின்ன புள்ளைங்கள வெச்சு பேச்சை பாரு” என்று திட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்…
கிரிஜாவோ அவள் அம்மாவிடம் “நான் தான் அப்பவே சொன்னேன்ல ம்மா.. இந்த பேச்சு வேணாம் அப்டினு… நீ தான் நான் சொன்னதை கேட்கல.. இப்ப பாரு நீ தான் அடிவாங்கிட்டு இருக்க… உன் பேச்சை கேட்டு நடக்குறதுனால என் புருஷன் இப்பலாம் திட்டுறாரு… இப்ப என்ன பண்ண போறாரோ தெரியல.. உள்ள வரப்பையே பயங்கரமா முறைச்சாறு” என்று புலம்பி கொண்டே வெளியே சென்று விட்டார்…
பாட்டியின் பேச்சில் பயந்த சுபாவை பார்த்து சசியே “அடியே சுப்பு நாம எப்பயுமே நல்ல ப்ரண்ட்ஸ் தான் அந்த லூசு பாட்டி என்னவோ சொல்லிட்டு போகட்டும்… ” என்று கூறினான்…
அவன் சொன்ன பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக பயத்தில் இருந்து மீண்டாள்…
அர்ஜுனனும் அனைவரிடமும் விடைபெற்று கொண்டு சென்றுவிட்டான்… கிளம்பும் போதாவது எதாவது பேசுவான் என நினைத்து கொண்டு இருந்த சுபாவும் அவன் அவளை பார்க்காமல் சென்றது அவளுக்கு அழுகை வருவது போன்று இருந்தது… அதனால யாரும் பார்க்கும் முன் அறைக்கு சென்றுவிட்டாள்…
இவளின் இந்த செய்கை சசிக்கும் முகுந்தனின் கண்ணில் மட்டும் தான் பட்டது… இருவரும் பக்கத்தில் தான் நின்று இருந்தனர்.. அவளின் இந்த செய்கையை பார்த்து இருவரும் அர்த்த பார்வை பார்த்து கொண்டனர்…
இங்கு காரில் சென்ற அர்ஜுனனுக்கு அவனின் தேவியின் நியாபகம் தான்… இங்கு ஒருத்தி இவனின் நினைவில் வாடியிருக்க அவனோ இவனை யார் என்று தெரியாத ஒருத்தியை நினைத்து கொண்டிருக்கிறான்….!!!!!!
error: Content is protected !!