Skip to content
Post Views: 4,132

கோடை விடுமுறை முடிந்து பள்ளி வழக்கம் போல் ஆரம்பித்து இருந்தது… வாரத்தில் ஐந்து நாள் காலை மாலை சிறப்பு வகுப்பு இருக்கும்… சனிக்கிழமை காலை மட்டும் சிறப்பு வகுப்பு…. மாலை இல்லை… ஞாயிறு அன்று பள்ளி இல்லை…
ஆனால் அன்று தேவி பரதநாட்டிய பள்ளிக்கு செல்வாள் … முன்பு இருந்த ஊரிலும் சிறு வயதில் இருந்தே வகுப்புக்கு செல்வாள்.. அரங்கேற்றமும் செய்வாள்… தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பதால் நடன வகுப்புக்கு ஞாயிற்றுகிழமை மட்டுமே சென்று வருவாள்…
Advertisement
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது காலை ஆறு முதல் எட்டு மணி வரையும்…. மாலை நான்கு முதல் ஆறு மணி வரையும் நடன பள்ளிக்கு செல்வாள்….
சுபாவும் அந்த நடன பள்ளியில் தான் அவளும் வகுப்புக்கு சென்றாள்… அவளுக்கும் அவளின் மாமனை போல் ஸ்ரீ தேவியை பார்த்தவுடன் பிடித்துவிட்டது…
தேவிக்கும் டால் போன்று இருக்கும் சுபாவை பார்த்தது பிடித்து விட்டது…. ஸ்ரீ தேவியை எப்போது அனைவரும் ஸ்ரீ என்று தான் அழைப்பர்… அர்ஜுனனும் சுபாவும் மட்டும் தான் தேவி என்று அழைப்பர்..
Advertisement
தேவி பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பதால் அவளால் சுபாவை பார்க்க முடியவில்லை…
Advertisement
தேவி ஞாயிற்றுக்கிழமை நடன பள்ளிக்கு வருவதை அறிந்து கொண்ட சுபாவும் வீட்டில் அடம் பிடித்து ஞாயிற்றுக்கிழமை நடன வகுப்புக்கு சென்று வந்தாள்…
தேவி அர்ஜுனனுடைய தொலைதூர காதல் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நன்றாக சென்றது… இங்கு சுபா தேவியுடனான உறவும் நன்றாக சென்றது…
பள்ளியில் இருந்து பதினைந்து நிமிட நடையில் அவளின் வீட்டை அடைந்து விடலாம்…. அந்த பதினைந்து நிமிட நேரத்தில் தான் அர்ஜுன் அவளை பார்ப்பான்…
Advertisement
எந்த வேலையாக இருந்தாலும் சனிக்கிழமை மாலை பள்ளி விடும் நேரம் தேவியை பார்க்க சென்றுவிடுவான்…
இதற்கிடையில் அர்ஜுனனிற்கு பொது தேர்வு மதிப்பெண்ணும் வந்து இருந்தது… நல்ல மதிப்பெண் எடுத்து ஒரு இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தான்… இவனுடன் அப்துலும் அந்த கல்லூரியில் சேர்ந்து கொண்டான்…
இப்போதும் ஹாஸ்டெலில் சேர்ந்து தான் கல்லூரிக்கு சென்று வருகிறான்… யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை அவன்…
அதேபோல் அர்ஜுனன் தற்போதும் அவன் படிக்கும் கல்லூரியில் யாரும் படிக்க கூடாது என சொல்லிவிட்டான்… அதனால் வர்ணனும் முகுந்தனும் வேறு கல்லூரியில் சேர்ந்துனர்
பொது தேர்வு விடுமுறையில் அவன் வீட்டில் தங்கவில்லை… தோப்பு வீட்டில் தான் தங்கிக்கொண்டான்…
தோப்பு வீட்டில் தங்கி இருக்கும் போது வாணன் வர்ணன் முகுந்தன் தினமும் பார்க்க வருவர்.. வர்ணனோ முகுந்தனோ இருவரில் யாரோ ஒருவர் அவனுடன் தங்கிக்கொள்வர்…
அவனை பார்க்க வீட்டில் அனைவரும் வந்தாலும் சுபா அவனை பார்க்க வரவில்லை… சிறுபிள்ளையாய் இருந்தாலும் அர்ஜுனன் மேல் இருந்த காதல் அப்படியே தான் இருந்தது அவளுக்கு…
காதல் என்று சொல்வதை விட அவன் மீது இருந்த பாசம் அன்பு அதற்கும் மேல் பெயரிட படாத உணர்வு மேல் ஓங்கி இருந்தது….
சசி அவளின் சடங்கின் போது அவள் அழுது கொண்டு சென்ற போதே அவளிடம் இருந்து விஷயத்தை வாங்கி இருந்தான்… அவனிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அந்த வயதில்…
ஆனால் சுபாவே “எனக்கு மாமாவை பிடிக்கும் சச்சு ஆனா இப்ப நான் எதுவும் சொல்ல மாட்டேன்… எனக்கு அதுக்கான ஏஜ் வரணும்.. காலேஜ் முடிச்சவாட்டி தான் மாமா கிட்ட பேசுவேன்” என்று உறுதியாக கூறி இருந்தாள்…
“வீட்டுல யாருக்கும் தெரியவேண்டாம் சச்சு” என்று கூறினாள்…
“முகி மாமாக்கு தெரியும் சுப்பு… நீ அழுதுட்டு வரும் போது அவரும் பார்த்தாரு… அவர் தான் என்னை அனுப்பி வெச்சாரு… அவர்கிட்ட சொல்லிடலாம்” என்று கூறினான்…
“ம்ம்” என்று சொல்லிவிட்டு “எனக்கு தூக்கம் வருது சச்சு நான் தூங்குறேன்” என்று கூறி தூங்கிவிட்டாள்…
சசியும் முகுந்தனிடம் யாரும் அறியாதவாறு கூறிவிட்டான்… முகுந்தனும் சசியிடம் “சசி இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்… இப்ப சுபா சின்ன பொண்ணு தான்… அவளோட மைண்ட் சேன்ஞ் ஆனாலும் ஆகலாம் ஆகாமையும் போகலாம்…. இத பத்தி பேசாத பாத்துக்கலாம்” என்று கூறிவிட்டான்…
அதன்பின் அர்ஜுனன் வீட்டிற்கு வந்தாலும் அவனை பார்க்க முயலவில்லை அவள்… தன்னுடைய படிப்பு முடிந்தவுடன் பார்க்கலாம் என முடிவு செய்து விட்டாள்…
ஒரு வருடம் வேகமாய் சென்று இருந்தது… தேவியும் ஆஷாவும் தங்களுடைய பொது தேர்வை நன் முறையில் முடித்து இருந்தனர்… தேவி தேர்வு முடிந்ததும் சொந்த ஊர் செல்வதாக ஆஷா அப்துல் மூலம் அர்ஜுனனிற்கு சொல்லி விட்டாள்..
நடன பள்ளியிலும் சுபாவிடம் கூறிவிட்டாள்… இரண்டு மாதம் வர முடியாது என… அவளும் சிணுங்கி கொண்டே சரி என கூறிவிட்டாள்…
“இங்க பாரு டால்.. குட் கேர்ள்ல நீயும் இப்ப டென்த்… சோ ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க…அதிகம் உன்னால இங்க வர முடியாது…. இந்த ரெண்டு மாசம் மட்டும் குட் கேர்ள்லா கிளாஸ் வருவியாம்… அதுக்கு அப்பறம் நானும் ரெகுலரா சண்டே உன்னை பாப்பேனாம்….
இந்தா இது என் அம்மா போன் நம்பர்.. இது என்கிட்ட தான் அதிகம் இருக்கும் … எப்ப கால் பண்ணாலும் பேசலாம்” என்று அவளை சமாதானம் படுத்தினாள்
சுபாவும் அவளை அணைத்து கொண்டு “மிஸ் யூ தேவி க்கா” என்று கூறிவிட்டு அவளிடம் இருந்து விடை பெற்று முகுந்தனுடன் சென்று விட்டாள்…
வாணன் வர்ணன் முகுந்தன் மூவரில் யார் வேண்டுமானாலும் வந்து அழைத்து செல்வர்…
தேவியை அழைத்து செல்ல அவளின் அம்மா வந்து இருந்தார்… “ம்மா ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்து இருக்க மாட்ட.. டால் இப்ப தான் கிளம்புனா… பயங்கர பீலிங் மேடம்… ரெண்டு மாசம் பாக்க முடியாதுனு… அப்பறம் நான் தான் சமாதானம் பண்ணி அவ அண்ணா கூட அனுப்பி விட்டேன்” என்று கூறினாள்…
“எப்படி ஸ்ரீ ம்மா உன்மேல அவ்வளவு பாசம் அந்த பாப்பாவுக்கு” என்று ஆச்சரியமாய் கேட்டார் தேவியின் அம்மா…
“எனக்கே தெரியல ம்மா… நான் அங்க ஜாயின் பண்ணி ஒரு வாரம் என்னையவே பாத்துட்டு இருந்தா…. பட் அடுத்த ஒரு மாசம் கிளாஸ் வரல… கிளாசுக்கு வந்த நாள் என்கூட நல்லா பேசுனா… அக்கா அக்கானு… எனக்கு ஒரு குட்டி தங்கச்சி கிடைச்ச பீல்… ஆனா இப்போ ரெண்டு மாசம் அவளை பாக்க முடியாதது வருத்தமா இருக்கு ம்மா… ” என்று தேவி அவளின் அம்மாவிடம் கூறினாள்…
“ஒருநாள் வீட்டுக்கு வர சொல்லு ஸ்ரீம்மா” என்று கூறினார் அவளின் அம்மா…
“சரி ஓகேம்மா ” என்று கூறி அவர்களின் வீட்டுக்கு சென்றனர்…
தேவியின் வீட்டில் அவளின் அப்பா அம்மா இவள் மூவர் மட்டும் தான் சொந்த ஊர் காஞ்சிபுரம்… அவளின் அப்பா அரசு அலுவலர் பணிமாற்றம் பெற்று தற்போது இந்த ஊருக்கு வந்து இருந்தனர்… அவளின் அம்மா இல்லத்தரசி…. அளவான அழகான குடும்பம் தான் ஸ்ரீ தேவியின் குடும்பம்…
இரண்டு மாதம் கடந்து பொது தேர்வு முடிவுகள் வெளியாகி தன் பெற்றோருடன் பேசி அர்ஜுனன் படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்து விட்டாள் ஸ்ரீ தேவி… அவளுடன் ஆஷாவும் அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்…
அதன்பின் என்ன தொலைதூர காதலை அனுபவித்த இருவரும் தற்போது இதை ரசித்து காதலில் மூழ்கினர்… என்ன தான் அருகில் இருந்தாலும் இதுவரை அவன் அவளை தொட்டது கூட இல்லை…
அதிகபட்சம் இரண்டொரு முறை அவளின் கையை பிடித்தது மட்டும் தான்…. அதிகம் பேசினர்… காதலை பற்றி அல்ல.. வீட்டில் உள்ளோர் பற்றி நாட்டில் நடப்பது என அனைத்தும்…. அப்துலும் ஆஷாவும் இவர்கள் பேசுவதை கேட்டு தலையில் தான் அடித்து கொள்வர்…
அதிகம் கூட்டம் இருக்கும் இடத்தில் இருவரும் பேசிக்கொள்ள கூட மாட்டார்கள்…
தேவி அதிகம் சுபாவை பற்றியும் கூறுவாள்.. ஆனால் அவளின் பெயரை குறிப்பிடாமல் டால் என்ற பெயரை வைத்து…
இங்கு சுபா வழக்கம் போல் ஞாயிறு நடனம் அதோடு தன் தேவி அக்காவுடன் அரட்டை என்று கழிந்தாலும் பத்தாம் வகுப்பில் முழு கவனத்தையும் செலுத்தி இருந்தாள்…. அவப்போது அவளின் மாமன் ஞாபகம் வந்தாலும் அவள் பெரிது படுத்தமாட்டாள்…
ஆனால் அவன் மேல் கொண்ட காதல் அப்படியே தான் இருந்தது… அதில் எந்த மாற்றமும் இல்லை.. முன் இருந்தது விட இன்னும் அவன் மேல இருந்த காதல் அதிகரித்த தான் இருந்தது….
அன்று ஒருநாள் சசி சுபாவிடம் “சுப்பு அண்ணா உன்கூட பேச கூட மாட்டிங்குறாரு… நீ ஏன் இப்படி லவ் பண்ற… அவருக்கு வேற லவ் இருந்தா… ஒருவேளை உன்னை பிடிக்கலனு சொன்னா என்ன பண்ணுவ” என்று கேட்டான்…
“அவருக்கு என்னை பிடிக்கலனாலும் அவரை போர்ஸ் பண்ண மாட்டேன்… நான் இப்போ சின்ன பொண்ணா இருக்கலாம்… நீ எப்ப கேட்டாலும் நான் இதை தான் சொல்லுவேன்…
ஒருவேளை அவருக்கு வேற பொண்ணை பிடிச்சி இருந்தாலும் எனக்கு அவர் சந்தோஷம் தான் முக்கியம்… அவர் ஆசைப்பட்ட பொண்ணோட ஹாப்பியா இருக்கட்டும்” என்று கூறினாள்…
“உனக்கு கஷ்டமா இருக்காதா????” என்று கேட்டான் சசி…
“கண்டிப்பா இருக்கும் எப்படி இல்லாம இருக்கும்… அவர் வேற ஒரு பொண்ண பிடிச்சி இருந்தா என் இதயம் நின்னாலும் நிக்கலாம்… என்ன வேணா ஆகலாம்… எனக்கு சொல்ல தெரியல… எனக்கு என் மாமா சந்தோசமா இருக்கணும்” ன்று கூறினாள்…
இவர்கள் பேசியதை கேட்ட இரு உருவம் அதிர்ந்து தான் நின்று இருந்தனர்… இவர்கள் பேசியதை கேட்ட அந்த இருவர் யாராக இருக்கும் ????
error: Content is protected !!