Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 18

வீட்டின் நடுக்கூடத்தில் அனைவரும் கூடி இருக்க சுபாவின் இரண்டு கன்னத்தில் கைத்தடம் பதிந்து இருந்தது… அவளுக்கு முன் வாணன் வர்ணன் முகுந்தன் சசி நான்கு பேரும் நிற்க கிரிஜாவின் அம்மா கோபத்துடன் நின்று இருந்தார்…

அப்போது தான் அங்கு வந்த சேனாதிபதி கோவமாக கத்திக்கொண்டு இருந்த மனைவியை பார்த்தார்… பின் தன் செல்ல பேத்தியின் கன்னத்தில் இருக்கும் கைத்தடத்தை பார்த்து  “டேய் சுபா ம்மா என்ன டா ஆச்சு யாரு உன்னை அடிச்சா…. பரமா என்ன ஆச்சு யாரு சுபாவை அடிச்சா சொல்லி தொலைங்க” என்று கேட்டார்..

“உங்க பேத்தி என்ன பண்ணி இருக்கா தெரியுமா… காதலிக்குறாளாம் அதுவும் யாரை தெரியுமா… அந்த விளங்காதவனை….. கேட்டா வாயவே தொறக்க மாட்டிங்குறா..” என்று மீண்டும் அடிக்க பாய்ந்தார்… ஆனால் முன்னால் நிற்கும் நால்வரை தாண்டி அவரால் சுபாவை நெருங்க முடியவில்லை…



Advertisement

“ஏய் சொர்ணம்(கிரிஜா அம்மா) அமைதியா இரு என்ன ஒளறிட்டு இருக்க தெளிவா சொல்லி தொலையேன்” என்று பொறுமை போய் கத்தினார் அவர்….

சொர்ணம் சுபாவும் சசியும் பேசியதை கூறினார்… ஆம் அவர்கள் பேசியதை கேட்ட இருவரில் ஒருவர் சொர்ணம் என்றால் இன்னொருவர் பார்வதி அம்மா…

சுபாவும் சசியும் தோட்டத்தில் நின்று தான் பேசி கொண்டு இருந்தனர்…. தோட்டத்தில் பூ பறிக்க வந்த சொர்ணமும் அவர்களை சாப்பிட அழைக்க வந்த பார்வதியும் தான் கேட்டனர்…

Advertisement

பார்வதியால் எதுவுமே யோசிக்க முடியவில்லை…. யோசிக்கவும் விடவில்லை சொர்ணம்… அத்தனை ஆட்டம் ஆடி இருந்தார்… சுபாவை இழுத்து கொண்டு நடுக்கூடத்தில் விட்டு யாரும் எதிர்பார்க்கும் முன்பே அவளை அடித்து இருந்தார்..

Advertisement

அப்போது தான் வீட்டினுள் நுழைந்த வாணன் வர்ணன் முகுந்தன் மூவரும் வேகமாக அவரை தடுத்து சுபாவை தங்கள் பின் நிற்க வைத்தனர்…

சுபா அமைதியாக தான் நின்று இருந்தாள்… அழுகவும் இல்லை… எதிர்த்தும் பேசவும் இல்லை…

அதை பார்த்து கோவமாக கத்திக்கொண்டு இருக்கும் போது தான் சேனாதிபதி உள்ளே வந்தார்…

Advertisement

பரமசிவன் ரூமில் இருந்தவர் சத்தத்தில் தான் வெளியே வந்தார்… அவரும் மகளின் கன்னத்தில் இருந்த தடத்தை பார்த்து கோவமாக பேச முற்படும் போதே சேனாதிபதி தாத்தா கேட்டுவிட்டார்…

மகள் யாரையோ விரும்புகிறாள் என தெரிந்து அதிர்ந்தாலும் அது அர்ஜுனன் என தெரிந்து ஆசுவாசம் அவருள்…

ஆனால் பார்வதி தெளிவாக இருந்தார்… அர்ஜுனனிற்கு பிடித்தால் தான் இதை பற்றி பேச வேண்டும் என…

சொர்ணம் இன்னமும் கத்திக்கொண்டு தான் இருந்தார்… அர்ஜுனனை தான் அதிகம் திட்டினார்… சேனாதிபதி எவ்வளவு தடுத்தும் பேசிக்கொண்டே இருந்தார்….

அவர் அடங்காமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே இருந்தார்… அவர் கடைசியில் பேசிய வார்த்தையை கேட்டு அனைவரும் கோவமாக பேசுவதற்கும் அதுவரை அமைதியாக இருந்த சுபாவும் “பாட்டி” என்று கத்திவிட்டாள்…

பின் சேனாதிபதி பரமசிவன் பார்வதி மூவரையும் பார்த்து “ம்மா ப்பா தாத்தா சாரி…. எனக்கு மாமாவை எப்படி பிடிச்சது ஏன் பிடிச்சது எதுவும் தெரியாது… ஆனா மாமாவை பிடிச்சி இருக்கு…

நீங்க கேட்கலாம் லவ் பண்ற வயசா இதுனு…. என் லவ்வை இப்ப மாமா கிட்ட சொல்ல மாட்டேன்… நான் படிக்கணும்…எனக்கு நிறைய கனவு இருக்கு..

அவருக்கு வேற பொண்ணு பிடிச்சி இருந்தாலும் அவர் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.. இதை பத்தி யாரும் மாமாகிட்ட பேச கூடாது… என்கிட்டயும் இதை பத்தி பேசாதீங்க…

அப்பறம் பாட்டி மாமா பத்தி இனிமே உங்க வாயில இருந்து தப்பா ஒரு வார்த்தை வந்தது.. அவ்வளவு தான்… சின்ன பொண்ணு எதுவும் பண்ண மாட்டா அப்டினு நினச்சா அவ்வளவு தான்… மாமா விசயத்துல நான் யாருக்கும் பாவம் பார்க்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்…

அதன்பிறகு அவளிடம் அந்த விஷயத்தை பற்றி யாரும் பேசவில்லை… சொர்ணம் முனுமுனுத்தவாறே சென்றுவிட்டார்… அவர் போகும் முன் “ஏய் நீ பெத்த சனியன் கிட்ட இங்க நடந்தது சொன்ன அவ்வளவு தான்” என்று மிரட்டியே அனுப்பினார் தாத்தா….

பின் பார்வதியிடம் திரும்பி “மருமகளே பேத்தி சின்ன பொண்ணு தான்… ஆனா முடிவுல உறுதியா இருக்கு… ஆனா பாப்பாவோட விருப்பத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்… இங்க இருக்குறவங்களுக்கு தவிர்த்து வெளியே யாருக்கும் தெரிய கூடாது… டேய் பசங்களா உங்க நாலு பேருக்கும் தான்” என்று கூறி அவர் சென்று விட்டார்…

வாணனும் வர்ணனும் சசியிடம் விஷயத்தை கேட்டு வாங்கி இருந்தனர்… தங்கை தங்களிடம் கூறவில்லையே என்று வருத்தம் இருந்த போதும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை…

அதன் பிறகு அவளிடமும் யாரும் அதைப்பற்றி பேசவில்லை… சொர்ணம் தான் பேத்தியிடம் கோவப்பட்டு கொண்டு பேசாமல் இருந்தார்…

நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது… தேவியும் அர்ஜுனனும் தன் காதலில் சிறகடித்தனர்…. அர்ஜுனனிற்கு தான் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் வீட்டில் சொல்லி கொள்ளலாம் என இருந்தான்…. தேவி படிப்பை முடித்தவுடன் சொல்லலாம் என இருந்தாள்….

தேவி சுபாவின் உறவும் நன்றாக சென்று கொண்டு இருந்தது…. ஞாயிற்றுக்கிழமை யில் இருவரும் சந்திப்பும் தடை இல்லாமல் சென்றது… சுபாவின் பொது தேர்வின் போது தான் பார்க்க முடியவில்லை…

பத்தாம் வகுப்பிற்கு பொது தேர்வும் முடிந்து இருந்தது… ஆனால் தேர்வு முடிந்து பத்து நாட்களுக்கு பின் மாரடைப்பின் காரணமாக சொர்ணம் இறந்து இருந்தார்… அன்று வீட்டில் யாரும் இல்லை….

அனைவரும் வெளியே சென்று இருக்க இவர்மட்டும் வீட்டிலேயே இருக்கிறேன் என்று இருந்துவிட்டார்…

அதனால் அவர் இறந்தது யாருக்கும் தெரியாமல் போய் விட்டது… இரவு வீட்டிற்கு வந்த அனைவரும் வீடு இருளில் மூழ்கியதை பார்த்து பயந்து அவரின் அறையில் சென்று பார்த்த போது தான் அவர் இரண்டு போய் இருந்தது தெரிந்தது…

அனைவரும் வெளியில் செல்லாமல் இருந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என நினைத்து அழுதனர்…

சொர்ணம் இறந்து அடுத்த மூன்று மாதத்தில் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என கவலையிலேயே சேனாதிபதி தாத்தாவும் இறந்து இருந்தார்…

அவரின் இறப்பு அனைவருக்கும் பேரிடி… யாரெல்லாம் தாங்கிக்கொள்ள முடியவில்லை… அர்ஜுனன் கூட அழுதுவிட்டான் அவரின் இறப்பை கேள்விப்பட்டு…

அனைவரும் இருவரின் இறப்பை கடினப்பட்டு ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்து இருந்தனர்….

இருவரும் இறந்து ஒரு வருடம் சென்று இருந்தது… சசி சுபா இருவரும் பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரெண்டாம் வகுப்பு வெற்றிகரமாக அடி எடுத்து வைத்து இருந்தனர்….

அர்ஜுனன் வர்ணன் முகுந்தன் மூவரும் கடைசி வருட படித்து கொண்டு இருந்தனர்… தேவி மூன்றாம் வருடம்…

வாணனுக்கு நந்தினிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்து இருந்தனர்… அர்ஜுனன் தன்னுடைய அக்கா கல்யாணத்திற்கு அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தான்….. திருமணமும் ஒரு நன்னாளில் நன்றாக முடிந்து இருந்தது…

இந்த கல்யாணத்தில் பலமுறை அவனை நேரிடையாக சந்திக்க நேர்ந்தாலும் அதை அழகாக கையாண்டு அவனுடன் பேசாமல் தவிர்த்துவிட்டாள்….

ஆனால் உள்ளுக்குள் அவளின் மாமா ஒருமுறை அம்மு என்று அழைக்க மாட்டானா என ஏங்கி கொண்டு இருந்தாள்… அவனோ அவனின் தேவியின் நினைவில் உல்லாசமாக சுற்றிக்கொண்டு இருந்தான்….

வாணனுக்கும் வர்ணனுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகி இருந்தது… இங்கு வந்த சிறிது நாட்களிலேயே நந்தினிக்கு சுபாவின் காதல் தெரிந்துவிட்டது… அவளுக்கு சுபாவ தன் தம்பியின் மனைவியாக வருவது மிகவும் சந்தோஷம் தான்…

அன்றொரு நாள்  பரமசிவனும் பார்வதியும் ஒரு விஷேசத்திற்கு செல்வதற்காக தயாராகி வந்து இருந்தனர்… கூடத்தில் தான் அனைவரும் இருந்தனர்…

பார்வதி சுபாவிடம் “அண்ணாங்க அண்ணி என்ன சொன்னாலும் கேட்கணும் சுபா… ஆடம் பண்ண கூடாது… சின்ன பொண்ணு இல்ல நீ… ட்வெலத் படிக்குற அடுத்த வருஷம் காலேஜ்… எந்த விஷயத்துலயும் யாரையும் கட்டாய படுத்த கூடாது” என்று அறிவுரையை கூறினார்…

“மீ நாளைக்கு வந்துடுவ… பங்சன் போயிட்டு… ஆனா ஏன் இப்படி அட்வைஸ் பண்ற… ஒரு நாள் தாணு நான் சமத்தா இருப்பேன் மீ போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க” என்று கூறினாள் பார்வதியை அணைத்து கொண்டு…

அதே போல் நந்தினியிடம் “நீ தான் நந்து இந்த குடும்பத்தை காப்பாத்தனும்… வாணன் வர்ணன் சுபா எல்லாருமே உன் பொறுப்பு… அர்ஜுனுக்கு கூப்பிட்டேன் அவன்கூட பேச முடியல… அவனையும் நல்லா பாத்துக்கோ நந்தும்மா.. நீயும் பத்திரமா இரு” என்று அவளையும் அணைத்து கொண்டார்…

வாணன் வர்ணன் இருவரின் கன்னத்தை தடவிக்கொடுத்து “தங்கச்சியை நல்லா பாத்துக்கணும் தம்பிகளா… பத்திரமா இருங்க” என்று கூறிவிட்டு பார்வதியும் பரமசிவனும் விடைபெற்றனர்…

அனைவருக்கும் இருவரின் செயல் வித்தியாசமாக இருந்தாலும் நாளை வந்துவிடுவர் என நினைத்து தங்கள் வேலையை பார்க்க சென்றனர்…

யார் இவர்களுக்கு சொல்வது நாளை இருவரையும் உயிரற்ற உடலாக காண போகின்றனர் என ?!?!?!?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!