Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 12

ரகு வீட்டின் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மது.

பெரியவர் ரெங்கநாதனின் கண்டிசன்படி, அவள் நிச்சயம் முடிந்த பின்னும் தினமும் அவள் மாலை வேளைகளில் ரகு வீட்டிற்கு வழக்கம் போல் வந்து கொண்டு தான் இருந்தாள்.

அதே பாட்டு கச்சேரியும் காபியுமாக அவர்கள் கொண்டாடி கொண்டிருந்தார்கள்!

புதிதாக என்னவென்றால், இப்போது ரகுவும் அவளுக்கு ஒரு கண்டிசன் போட்டிருக்கிறான்!



Advertisement

அவள் தினமும் ஓபி முடிந்து அவன் ஒய்வு எடுக்கும் அறைக்கு சென்று, அவனை சந்தித்து, ஒரு ஹக் ஒரு கிஸ்ஸாவது பண்ணி விட்டுதான் அவள் ரகுவின் வீட்டிற்கு போக வேண்டும்!

ஆனால் பாவம், கடந்த நான்கு நாட்களாக அவன் ஓபிக்கு பயங்கர கூட்டம்!

முடிந்த பின்னும் மிக கொஞ்ச நேரமே அவனுக்கு இருந்தது. அதிலும் அவனுக்கு ராகவனோடு ஹாஸ்பிட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டியிருந்ததால், அவன் மதுவை தனியே சந்திக்க நேரமே இல்லை! இரவில் போனில் சாட் பண்ணுவதோடு சரி!

Advertisement

இன்றும் அப்படி தான் இருந்தது.

Advertisement

மது ரகுவின் வீட்டினுள் நுழைந்து, அங்கு யாரையுமே காணாது ஆச்சர்யப் பட்டாள்.

குழந்தைகளையும் காணோம், பெரியவரையும் காணோம். கேர் டேக்கர் அக்காவையும் காணோம்.

எல்லோரும் எங்கே போய் விட்டார்கள் என்று எண்ணியபடி, அவள் கிச்சனுக்குள் நுழைந்தாள், பெரியவருக்கு காபி டிகாக்ஷன் போடுவதற்கு.

Advertisement

அடுப்பில் தண்ணீர் பாத்திரம் வைத்து ஆன் பண்ணி, காத்துக் கொண்டிருந்த போது, அவள் இடுப்பை இரு வலிய கரங்கள் அழுத்திப் பிடித்து, அணைத்துக் கொண்டன!

ரகு தான் என்று அவள் உணர்ந்தாலும், ஏய்! என்ன இது கிச்சனில் போய்! என்று அவள் வாயைத் திறந்து சொல்ல முயலும் முன் அவள் இதழ்கள் வன்மையாக சிறைப் பிடிக்கப்பட்டு பேச்சிழந்தாள்!

எனினும், அய்யோ, இங்கு குழந்தைகள், அல்லது பெரியவர் வந்து விடப் போகிறார் என்ற நினைப்பால், அவனை விலக்க முயன்ற போது, அவன் இன்னும் பிடியை இறுக்க தான் செய்தான்!

சில நிமிடங்களுக்கு பிறகு, அவளை விடுவித்து, அவளிடம் கோபப் பட்டான்!

“ஏய், ஒருத்தன், நாலு நாளா உன்னைப் பார்க்காம காய்ஞ்சு போய், வந்து கிஸ் பண்ணினா, எதிர்த்து போர்சை போடுற?”

“அய்யோ, அப்படியெல்லாம் இல்ல! இங்கே பசங்க இல்லன்னா பெரிய மாமா யாராவது வந்துட போறாங்கன்னு பயந்து தான் விலக நினைச்சேன்! மத்தபடி உங்கள அவாய்ட் எல்லாம் பண்ணல!”

“ஏன்? எனக்கு அறிவு இல்ல? அவங்க இங்கே வந்துடப் போறாங்கன்ற பயம் எனக்கு இல்லையா? இருந்தும் நான் இப்படி பண்ணினேன்னா, அவங்க யாரும் இப்ப இங்க வர போறதில்லன்னு தெரிஞ்சதுனால தான்னு கூட உனக்கு புரியல?” அவன் ரொம்ப கோபப்பட்டுக் கத்தினான்!

“ஓகே.. .ஓகே கூல் கூல், கோபப்படாதேப்பா நந்து கண்ணா! நான் உன் செல்ல மது இல்ல, தெரியாம பண்ணிட்டேன்! மன்னிச்சுடு நந்துமா!” அவள் மெல்ல அவனை சமாதானப்படுத்தி, கூட்டிக்கொண்டு போய் அருகில் இருந்த டைனிங் டேபிள் முன் உட்கார வைத்தாள்!

அவளின் அந்த நந்து கண்ணாவில் அப்படியே கூல் ஆகி விட்டான் ரகு!

அவன் தான் அவளை அப்படி அழைக்க சொல்லியிருந்தான்! அவன் அம்மா விஜி மட்டும் தான் அவனை அப்படி அழைப்பார்! அப்படியே மதுவும் கூப்பிட வேண்டும் என்று முன்பே சொல்லியிருக்கிறான் ரகு!

ரகு, அவளை இப்போது தன்னருகே அழைத்து, அவள் நெஞ்சில் தலை சாய்த்துகொண்டான்!

அவன் தலையை வருடி விட்ட மது, “இப்போ கோபம் குறைஞ்சுடுச்சா?” என்றாள்!

“ம்ம். சாரி மது!”

“அய்யா மகராசா! டாக்டர் சார் ! நீங்க இன்னொரு வாட்டி வேணுமின்னாலும் என்னைத் திட்டுங்க, ஆனா சாரி  மட்டும் கேட்காதீங்க!

நீங்க சாரி கேட்டதுக்கப்புறம் வர பின் விளைவுகளை என்னால் தாங்க முடியாது! இதோ இன்னைய கோட்டா ஓவர்!” அவள் உதட்டைக் காட்டினாள்! அது சிவந்து போய் இருந்தது!

ரகு சிரித்து விட்டான்!

“அங்க மட்டுமில்ல, இங்கயும் தான்!” அவள் தன் இடுப்பைக் காட்டினாள்! அதுவும் அவன் முரட்டுத் தனத்தில், அவன் விரல் அச்சு பதிந்து சிவந்து போய் இருந்தது!

“அய்யோ! சரி வா! என் ரூமுக்கு போகலாம்! மருந்து போட்டு விடுறேன்!”

“அய்யோ! உங்க ரூமுக்கா, கிச்சன்ல தனியா மாட்டுனதுக்கே, ஏகப்பட்ட விழுப்புண்கள்! இதில உங்க ரூமுக்கு, அதுவும் இப்ப? வாய்ப்பில்ல ராஜா!”

“வரலன்னா தூக்கிட்டு போய்டுவேன்!”

“அது சரி! ஆமா, எங்க இங்க யாரையும் காணோம்? எங்க தான் போனாங்க அப்படி? பெரிய மாமாவைக் கூட காணோம்!”

“எல்லோரையும், என் வருங்கால சகலை திலீப், பக்கத்தில் புதுசா திறந்திருக்கிற மாலுக்கு கூட்டிக் கொண்டு போய் இருக்கான்! என்னையும் கூப்பிட்டான், நான் வரலன்னு சொல்லிட்டேன்!”

“மாலுக்கா? பெரிய மாமாவுமா?” மது ஆச்சர்யப் பட்டாள்!

“ம்ம். அங்கே ஒரு கிட்ஸ் ப்ளே ஏரியா சூப்பரா இருக்காம், அதான் தன்விக் குட்டியையும் தாருவையும் கூட்டிட்டு அவரும் வேடிக்கைப் பார்க்க போயிருக்கார்!

ஹெல்புக்கு மேகலா அக்காவும் போயிருக்காங்க! அதான் இப்ப இங்க யாருமில்ல!”

“அதான் வாட்ச்மேன் ஏதோ சொல்ல வந்தார் போல, நான் உள்ளே வரும் போது, நான் தான் போனில் இன்ட்ரெஸ்ட் ஆ பேசிட்டு இருந்துட்டு கவனிக்காம விட்டுட்டேன் போல!”

“சரி. சரி. வா என் ரூமுக்கு போகலாம்!”

“அய்யோ ப்ளீஸ், போனவங்க வந்துட போறாங்க, அவங்க வரும் போது நான் உங்க ரூமில் இருந்தா ஒரு மாதிரி சங்கடமா இருக்குமே!”

“இப்ப தானே சொன்னேன்! நான் பார்த்துக்க மாட்டேனா? அவங்க வரது CCTV யில் தெரியும்! என் ரூமில் இருந்தே அவங்க கார் உள்ளே நுழையறத பார்த்துடலாம்!

ஏய், இப்ப வரப் போறியா இல்லையா?”

“ஓகே கூல், கூல் வரேன்!”

அவன் ரூமிற்குள் நுழைந்த மதுவுக்கு ஆச்சரியம்!

 அங்கே அவள் ஆசைப் பட்டு வாங்க நினைத்துக்கொண்டு இருந்த ப்ளூ கலர் ரெக்லைனர் சோபா!

கிப்ட் ரிப்பன் எல்லாம் கட்டி வைத்து இருந்தான் ரகு!

“இதைக் காட்ட தாண்டி உன்னை இங்க கூப்பிட்டேன்! இது உனக்காக நான் வாங்கி வச்சுருக்கேன்! பாரு, நீ தான் பர்ஸ்ட் உக்காரணும்! என் மகாராணிக்கு , இந்த ராஜாவின் அன்பு பரிசு! சிம்மாசனம்!”

“அய்யோ! இதை வாங்க  நான் ரொம்ப நாளா வாங்க ஆசைப் பட்டுட்டு இருந்தேங்க! பட் பிரையாரிட்டி செலவுகள் வேற நிறய இருந்துச்சு!”

“நீ ஆசைப் பட்டு, கமலா ஆண்ட்டி கிட்ட சொல்லிட்டு இருந்தத நான் பார்த்துட்டு தான் இதை வாங்கினேன்!”

“அப்பவேவா?”

“ம்ம். நான் அப்பல்லாம் அடிக்கடி கமலா ஆன்டி ரூமுக்கு, தர்ஷினி ரூமுக்கு எல்லாம் எதாச்சும் அபீசியலா கேட்டு வருவேன்ல!

அதெல்லாம் சும்மா! உன்னை சைட் அடிக்க தான்! நான் நினச்சா அவங்கள என் ரூமுக்கு கூப்பிட்டு கூட பேச முடியும்! ஆனா, நானே வந்தது, நீ அங்க இருக்கிறத தெரிஞ்சுட்டு தான்!”

“அடப்பாவி!”

“அப்புறம் ஏன் என்னை அப்படி திட்டிநீங்கன்னு கேட்டுடாதே மது! அது நான் பண்ணுன முட்டாள் தனத்தின் உச்சம்!” அவன் இப்பவும் வருந்தினான்!

“சாரி மது!”

“அய்யோ, உங்க கால்ல வேணுமின்னாலும் விழறேன், இந்த சாரிய விடுறீங்களா?”

“எல்லா நல்ல குணமும் இருக்கு, என் செல்லத்துகிட்ட, இந்த கோபம் மட்டும் தான்! அது மட்டும் இல்லன்னா, நீங்க எப்பவும் சூப்பர் ஹீரோ தான்!

ப்ளீஸ்ப்ப அத மட்டும் கண்ட்ரோல் பண்ணுங்க! இல்லன்னா உங்க கோபத்த, உங்க ஈகோவ, எப்பவுமே, யாராச்சும் யூஸ் பண்ணிட்டே தான் இருப்பாங்க! உங்கள அவங்க கன்ட்ரோல்ல எடுத்துப்பாங்க!”

“ஏய்! மது, என்ன உனக்கும் அந்த வைஷு வேப்பிலை அடிச்சு விட்டுட்டாளா? அதானே பார்த்தேன்! தெரியும்டி எனக்கு! நீங்க ரெண்டு கோ சிஸ்டரும் கூடி கூடி பேசும் போதே, இது மாதிரி எதாச்சும் அவ உன்கிட்ட சொல்லியிருப்பான்னு!”

“அவளுக்கு பார்த்திய பிடிக்காது. அவன் என் ஈகோவ யூஸ் பண்ணிக்கிறான்னு சொல்லி திட்டிட்டே இருப்பா!”

“அப்படி இல்லீங்க! பார்த்தி அண்ணான்னு மட்டுமில்ல, யாருமே, ஏன் அது நானா இருந்தா கூட, யாரும் உங்க வீக்நெஸ்சை யூஸ் பண்றதுக்கு நீங்க விடக் கூடாதுங்க!

ஒரு மாதிரி வைராக்கியமா இருக்கணும்!

யார், என்ன, எப்படி தூண்டினாலும், ட்ரை பண்ணினாலும் நான் அதுக்கெல்லாம் மசிய மாட்டேன்னு  ஒரு ஸ்ட்ராங் மென்டாலிட்டி வேணும்ப்பா! அத தான் சொல்ல வரேன்.. ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க!”

“ம்ம். ஓகேங்க மது டீச்சர்! இப்ப போதும் கிளாஸ்! அது சரி. நீ எப்படி என் வீக்னெஸ்சை யூஸ் பண்ண ட்ரை பண்ணுவ?”

“.. ம்ம். அது வந்து.. நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்! அது எனக்கு வராது..”

“அது தான் எனக்கும் தெரியுமே லூசு! சும்மா ஒரு டெஸ்ட் செய்து பார்க்கலாம்!

எங்க .. எதாச்சும் என் கிட்ட ட்ரை பண்ணு பார்ப்போம்! நான் உன்கிட்ட  வைராக்கியமா இருக்கேனா, இல்லையான்னு பார்ப்போம்!”

“அதெல்லாம் வேணாம்!”

“ச் ச்ச். சும்மா ட்ரை பண்ணு டார்லிங்!”

அவள், அவனை நெருங்கி அணைத்துக்கொண்டு “ஏங்க நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்க தானே! முத்தமிடுவது போல அவன் முகத்தை நெருங்கி கேட்டாள்!

ட்ரை பண்ணுறாளாம்!

 அவன் சிரித்துக்கொண்டே “ஹே ஏமாந்தியா டார்லிங்! எனக்குதான்  உங்கிட்ட வைராக்கியம், அப்புறம் இந்த மானம் ரோசம் இந்த வெங்காயம் ஒண்ணுமே கிடையாதே! என்று சொல்லி சிரித்து விட்டு, அன்றைய அவனின் “கோட்டாவை” எக்ஸ்டெண்ட் பண்ணினான்!

அவன் விடுவித்தவுடன் “யூ சீட்! போடா, பிராட்(fraud) டாக்டர்! அவனை நெஞ்சில் குத்தினாள் மது!

அதற்குள் cctvயில் திலீப் கார் உள்ளே நுழைவதைப் பார்த்து விட்ட ரகு, “ஏய் மது! க்விக்! சீக்கிரம், உன்னை சரி பண்ணிட்டு கீழே கிச்சனுக்கு போ பசங்க வந்துட்டாங்க!”

அவளும் தன்னை சரி செய்து கொண்டு, கீழே போய் விட்டாள்.

“மதூ..” என்று ஓடி வந்தது தன்விக் குட்டி!

“ஏய்! குட்டிமா, எங்க போய்டீங்க எல்லாரும்!”

“நாங்க மாலில் போய் சூப்பரா விளையாடினோம் மது! அடுத்த தடவ உன்னையும் கூட்டிட்டு போறோம்!”

“நாங்க அங்கேயே சாப்பிட்டு விட்டோம்! இப்ப ஒண்ணும் வேணாம் மது!”

“ஆமா மது, நீ ஏன் ஜென்ட்ஸ் பெர்ப்யும் யூஸ் பண்ற?” தன்வி குட்டி கேட்டுவிட்டது!

“ஓ! கண்டுபிடிச்சுட்டியா?  ஆமாண்டா குட்டி, நான் தான் காலையில் அவசரத்தில் மாது அண்ணாவோட  பெர்ப்யும எடுத்து அடிச்சுட்டேன்!”

“ஓ மாது அண்ணாவும் சித்தாவோட பிராண்ட் தான் யூஸ் பண்றானா?”

“அய்யோ அம்மாடி! இதுங்க என்ன இவ்வளவு ஷார்ப்! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ப்பா!” மது உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்!

“தாரு, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு! வேற என்னமோ போல இல்ல! மது ஏதோ பொய் சொல்றா?”

“நம்பிடுவோம், இல்லண்ணா அப்புறம் ஸ்டார்ஸ் தர மாட்டா!” தாரு சொன்னாள்!

சொல்லி விட்டு அவர்கள் திலீப்க்கு பாய் சொல்ல வெளியே ஓடினார்கள்!

இதையெல்லாம் கேட்டுக்கொண்டே மாடி இறங்கி வந்த ரகு, மதுவைப் பார்த்து, “எப்பவும் அலர்ட் ஆ இருக்கனும் மது! ரெண்டும் சரியான குட்டி சாத்தான்ங்க!”

“ச்சே.. ச்சே குழந்தைகளை போய் அப்படி சொல்லாதீங்க! ஸ்மார்ட் குழந்தைங்க அவங்க!” பரிந்து பேசி விட்டு அவளும்  திலீப்க்கு பாய் சொல்ல வெளியே ரகுவுடன் சென்றாள்!

அடுத்த ஞாயிறு.

ரகு மதுவை வெளியே அழைத்து செல்ல இரு வீட்டு  பெரியவர்களிடமும் பெர்மிசன் வாங்கி, இதோ சும்மா ஒரு லாங் டிரைவ் போய்க் கொண்டு இருக்கிறார்கள்!

வண்டியை ஓட்டிய படி ஏதோ ரொம்ப தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் ரகு!

“டாக்டர் அப்படியென்ன யோசனை, பக்கத்துல உங்க மது டார்லிங் இருக்கும் போதே?”

“அது, வந்து ஒரு முக்கியமான விஷயம் பத்தி தான்!”

“அப்படி என்னப்பா முக்கிய யோசனை?”

“அது வந்து. இந்த லேடிஸ் ப்ளவுஸ் போடுறீங்கள்ள, அதுல எத்தனை ஹூக் இருக்கும்னு தெரியல, அதான் திங்க் பண்ணிட்டு இருக்கேன்!”

“ஓ! இதுவல்லவோ, நாட்டுக்கு முக்கியமான, ரொம்ப இன்ட்டேன்சிவா தேவைப்படுற விஷயம்! அத நீங்க அவசியம் தெரிஞ்சுக்க தான் வேணும்!”

“அதுக்கு நான் வேணுமின்னா ஹெல்ப் பண்றேன்! நீங்க பார்த்தே தெரிஞ்சுக்கங்க!”

“ரியலி! மது யூ ஆர் க்ரேட்! நீ இப்படி சொல்வேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தெரியுமா?”

“ம்ம். கொஞ்சம் இருங்க”, சொன்ன மது, கார் பின் சீட்டில் இருந்த அவள் காரில் ஏறும்போது கையில் கொண்டு வந்த அந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து, அதிலிருந்த ப்ளவுசை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“நீங்களே எண்ணிக்கங்க! இது நார்மல் ப்ளவுஸ்! இதுவே போட் நெக் மாடல் என்றால், கொஞ்சம் கூட ஹூக்ஸ் இருக்கும்! பார்த்துக்கங்க, ரெண்டு மாடலும் இருக்கு இதில!

நான் உங்களுக்காக வெளியே காத்திட்டு இருக்கும் போது தான் டைலர் அக்கா, இத கொடுத்தாங்க!

வீட்டுக்குள்ள மறுபடியும் போக சோம்பல் பட்டுட்டு கையில் கொண்டு வந்தது..  பாருங்களேன் இப்ப உங்களுக்கு யூஸ் ஆகியிருக்கு! அவள் நாடகத்தனமாக அதிசயித்தாள்!

ரகு காண்டானான்!

“யூ… சீட்!” சொல்வது இப்போது ரகுவின் முறையானது!

“டிட் பார் டாட்!” என்று குறும்பாய் சிரித்தாள்  அவனின் மது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!