Skip to content
Post Views: 4,461
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் 8
Advertisement
அந்த ஹோட்டல் ரூம்மில் பிரகதீஸ்வரனுக்கும் , அவன் நண்பன் சுரேஷ்க்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருந்தது.
Advertisement
Advertisement
சுரேஷ் பிரகாவை பார்த்து இது இப்போ தேவையா? கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்லிக்கலாம்.
இல்லை சுரேஷ் , இப்போ இல்லைனாலும் எப்போனாலும் தெரியத்தான் போகுது. அதான் இன்னைக்கே , நான் மகிழ் கிட்ட சொல்லப் போறேன்.
Advertisement
டேய் சொன்னா கேளு. நீ. இதைச் சொன்ன கல்யாணம் நின்னுறும்.
பிரகா சுரேஷிடம் ” என் மகிழ் பத்தி எனக்குத் தெரியும் . அவ என்ன புரிஞ்சுப்பா. இந்த கல்யாணம் நடக்கும்.”
நான் சொல்லுறத கேளு பிரகா. கல்யாணம் முடிஞ்ச பிறகு , கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுடா.
பிரகா சுரேஷை பார்த்து ரெடியா நீ போய் நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்காங்களா போய் பாரு என்று சொல்ல.
சுரேஷ் தலையில் அடித்து கொண்டான். மனதில் இந்த கல்யாணம் நிக்க தான் போகுது. என்று நினைத்து புலம்பிய படியே செல்ல.
இரண்டு நாள்களாக தூக்கமின்னி தவித்த பிரகா. இந்த முடிவை எடுத்த பின் தான் தூங்கியதே.
********
மீனுக்குட்டி ரெடியா என்றாள் இனியா.
நான் ரெடியாகி 10 நிமிசம் ஆச்சு.
நீ. தான் உள்ளே போறே , வெளியில் வர கிழம்பிட்டியா.
நான் ரெடி பாட்டி.
இருவரும் ஹோட்டல் ரூம்பின் கீழே சென்று காரில் ஏறி மண்டபத்துக்கு செல்ல.மண்டப வாசலில் அனைவரும் இருந்தனர்.
அந்த ரேசர் கார் உள்ளே நுழைந்தவுடன். புது மாடலாக இருந்த அந்த காரை அனைவரும் பார்க்க. யார் வரா என்று பார்க்க.
கல்யாண மண்டப நுழைவாயிலில். திருச்செல்வனும் கோமதியும் ஒரு பக்கம் நிற்க. மறுபக்கம் நிர்மலாவும் , விமல்ராஜும் இருந்தனர். இரு ஜோடிகளும் வருபவரை வரவேற்க.
அந்த காரை பார்த்தவர்கள் யாராக இருக்கும். என்று பார்க்க. டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி வந்தாள் இனியா.
வந்து தன் பாட்டிக்கு முன் கதவை திறந்து விட எல்லோரும் இனியாவைத் தான் பார்த்து இருந்தனர்.
அவள் காரிலிருந்து இறங்கும். போதே என்ன ஒரு கம்பீரம்.
மீனாட்சியை காரில் இருந்து மெதுவாக இறங்க சொல்லி. அவரை தன் கைப்பற்றி அழைத்து வர. அனைவரின் பார்வை இனியாவின் மேல் தான்.
மீனாட்சியைப் பார்த்த நிர்மலா “அம்மா” என்று அருகில் செல்ல. கோமதி, “அத்தை ” என்று அவரும் அவர்களின் அருகில் சென்று , முதலில் கோமதி தான் மீனாட்சியை வாங்க அத்தை என்று அழைக்க. இனியாவைப் பார்த்த கோமதி கண்களால் வாம்மா என்று கூப்பிட.
அழகான புன்னகை கொடுத்தவள், பாட்டியை கைப்பற்றி அழைத்து வர.
நிர்மலா தன் அம்மாவை அணைத்து கொண்டார் வாம்மா என்று அழைத்து விட்டு, இனியாவை பார்த்து, இனியா குட்டி எப்படி இருக்கடா?
நல்லா இருக்கேன் அத்தை.
வாடா வாங்கம்மா என்று இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல.
மண்டப நுழைவாயில் முன் படிகட்டுகள் இருக்க. மீனாட்சிக்கு படிக்கட்டில் ஏறுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்க.
இனியா, ” என் கையை நல்லா பிடிச்சுக்கோ பாட்டி” என்று கூறி, அவரை மெதுவாக அழைத்துச் செல்ல.
திருச்செல்வன் தன் அம்மாவை , தன் மகள் அழைத்து வரும் அழகை பார்த்தார். நான் செய்ய வேண்டியதை தன் மகள் செய்கிறாள். 80 வயதுக்கு மேல் இருக்கும். தனது அன்னையை சிறு குழந்தை போல கைப்பற்றி அழைத்து வருவதை பார்த்தவர். அருகில் செல்ல கால்கள் துடிக்க. நான் பக்கத்தில் போனா கோபப்படுவார். என்று நினைத்து. தயங்கி நிற்க.
விமல்ராஜ் மீனாட்சியின் அருகில் சென்று அத்தை வாங்க, என்று அழைக்க தலையை அசைத்தார்.
மெல்ல படிகளில் மேலேயேறி வந்தார். மண்டப கதவின் பக்கத்தில் மீனாட்சியை ஒருசேரில் அமர வைத்த இனியா, கொஞ்ச நேரம் இங்கே உங்காரு பாட்டி, என்று குடிக்க. வெது வெதுப்பான தண்ணீரை கொடுக்க அதை வாங்கி மெதுவாக குடித்தவர்.
தன்னைச் சுற்றி எல்லோரும் நிற்பதை பார்த்தவர். போய் கல்யாணத்துக்கு வந்தவங்களை கூப்பிடுங்க என்று அனுப்பிவைக்க.
கோமதி இனியாவை தன்னுடன் அழைக்க.
இனியா ” நான் பாட்டி கூட இருக்கேன்மா” என்றாள்.
மீனாட்சி கோமதியின் தவிப்பைப் பார்த்து. உங்க அம்மா தான் கூப்பிடுறாயில்ல போடி.
நான் கொஞ்ச நேரம் இப்படி இருந்துட்டு உள்ளே போய் உங்கார்ந்துங்குறேன்.. நீ போ இனியா, உன் அம்மா உன்ன ஆசையா கூப்பிடுறா பாரு போ மா என்று அனுப்பி வைக்க.
கோமதி தன் மகள் இனியாவை மணமகள் அறைக்கு அழைத்து செல்ல.
அவளோ, அம்மா வேண்டாம், மகிழ் இருப்பா என்னை பார்த்தா திட்டுவா என்று தயங்கி நிற்க.
கோமதி அது எல்லாம், அவ ஒன்னும் சொல்ல மாட்டா என்று உள்ளே அழைத்து செல்ல.
அப்பொழுது தான் மகிழுக்கு அனைத்து மேக்கப்பை முடித்து இருக்க, தங்கம் போல் ஜொலித்தாள் மகிழ்வதனி. இனியாவை பார்த்த மகிழ் ” வா இனியா இப்பாதான் வந்தியா”? என்று கேட்க.
இனியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுவயதில் இருந்தே மகிழுக்கு, இனியாவை கண்டாலே ஆகாது. இனியாவுக்கு எது குடுத்தாலும் பிடுக்கி விடுவாள். எப்போதும் அவளை அடிப்பது, திட்டுவது என்றே இருப்பாள்.
நீண்ட வருடங்கள் பிறகு , பாசமாக அழைக்க. இனியாவுக்கு. இது உண்மையா? இல்லை நடிப்பா? என்றே தெரியவில்லை.
கோமதி ஒரு பையை எடுத்து இனியாவிடம் கொடுத்து. “இது உனக்கு வாங்கின பட்டு புடவை நகை இருக்கு போம்மா போய் மாத்திட்டு வா” என்று கூற.
இனியாவோ. மகிழ்முகத்தையே பார்க்க.
மகிழ், இனியாவை பார்த்து அருகில் வர அழைக்க.
மெதுவாக தன் சகோதரியிடம் சென்றாள் இனியா.
இனியாவை மெல்ல அனைத்த மகிழ் ” பழச எல்லாம் மறத்துரு. இனியா. நான் சின்ன பிள்ளையில் அம்மா அப்பா உன் கிட்ட பாசம் காட்டுறது பிடிக்காம ஏதோ பண்ணிட்டேன் என்னை மண்ணிச்சுரு இனியா.” என்று மகிழ் கூற.
இனியாவின் கண்ணில் இருந்து நீர் வர.
ஏய் அழாதடி அம்மா பாரு, அவங்களும் வருத்த படுவாங்க என்று கூற.
அப்பொழுது தான் இருவரும் கோமதியை பார்க்க. கண்ணில் நீருடன் தன் இரு பெண் பிள்ளைகளை பார்த்து இருந்தார். எத்தனை நாள் கனவு தன் இரு பெண்களை ஒரு இடத்தில் வைத்து வைத்து பார்க்க ஆசைப்பட்டது.
இனியாவும் மகிழ்ழும் கட்டிலில் அமர்ந்து இருக்க. இரு பெண்களை தன் கை கொண்டு திருஷ்டி எடுத்தவர். இரண்டு பேரும் நல்லா இருக்கனும் எப்போதும்.
கோமதி இனியாவை புடவை கட்டச் சொல்லி விட்டு வெளியில் சென்றார்.
மகிழ் இனியாவிடம் ” அந்த ரூமில் போய் மாத்திக்கோ” .
மறுக்க முடியாமல் சேலையை மாத்த சென்றாள் இனியா. பையைத் திறந்து பார்க்க , மகிழ் இப்போது கட்டி இருந்த அதே புடவை டிசைன். ஆனால் கலர் மட்டும் வேறு. புடவை மாத்தி விட்டு வெளியில் வர.
மகிழ் இனியாவை பார்த்து ரொம்ப அழகா இருக்கு இனியா, இந்த புடவை அப்பா தான் உனக்கு செலக்ட்டு பண்ணார்.
நகையை போட்டுக்கோ இனியா என்று கூற ” இல்ல மகிழ் இதுவே போதும் என்றாள்”.
நீ கேட்க மாட்ட இங்கே வா என்று நகைகளை இனியாவுக்கு போட்டு விட. கதவைத் தட்டி விட்டு திருச்செல்வன் உள்ளே வர, தன் பெரிய மகள் சின்ன மகளுக்கு நகையை மாட்டிவிடுவதை பார்க்க திருச்செல்வனுக்கு இத்தனை வருட மனபாரம் இறங்குவது போல் இருந்தது.
என்ன அப்பா? என்று மகிழ் கேட்க.
பிரகாவிற்கு வாங்கிய நகை எங்கம்மா? என்று திருச்செல்வன் கேட்க.
” இதோப்பா நான் எடுத்து தரேன்” என்றவள் ஒரு கப்போர்டை திறந்து ஒரு பையை எடுத்து அவரிடம் கொடுக்க.
எல்லாம் சரியா இருக்காமா? என்று மகிழிடம் கேட்டவரின் பார்வை இனியாவிடம் இருக்க.
அதை பார்த்த மகிழ், அப்பா இனியாவுக்கு நீங்க செலக்ட்டு பண்ண புடவை நகையெல்லாம் அழகா இருக்குல்லப்பா என்று கூற.
அவரோ இனியாவை பார்த்தார் தவிர பேச வில்லை.
அதை அறிந்த மகிழ். அப்பா இனியாகிட்ட பேசுங்கப்பா என்று கேட்க.
அவருக்கோ தன் இதயம் துடிப்பது அவருக்கே கேட்டது.
மனதில் நீதான்னம்மா இனியாக்கிட்ட பேசக்கூடாது. அவள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று என்க்கிட்ட அந்த ஐ .சி.யு வார்ட் ரூம்பில் இருந்து சத்தியம் வாங்கியது. இப்போ நீ பேசுன்னு சொன்னால் நான் பேசனுமா? என்று நினைத்தவர். தான் உயிரே வைத்து இருக்கும் மகளிடம் பேசாமல், பார்க்காமல் , இத்தனை வருடம் அவளுக்கு செய்தது பாவம். ஒரு தந்தை , ஒரு பெண்ணிற்காக இன்னொரு பெண்ணை தண்டிப்பது கொடுமை அல்லவா. என்று நினைத்து இனியாவை பார்க்க.
அவளோ தந்தையை பார்க்காமல் குனிந்து இருக்க.
மறுபடியும் மகிழ் திருச்செல்வனிடம் அப்பா இனியாக்கிட்ட பேசுங்கப்பா. என்று சொல்ல.
மனதில் திருச்செல்வன் என்ன பேச என் பிள்ளைட்ட , ஏது பேச, ஒன்னும் தெரியாத பிள்ளையை தன் அம்மாவிடம் விட்டு வந்தது எவ்வளவு பெரிய தப்பு . நெஞ்சு அடைப்பது போல் வர , இனியாவின் பக்கத்தில் நெஞ்சை பிடித்து கொண்டு அமர.
திருச்செல்வன் அருகில் நெஞ்சை பிடித்து அமர்வதை பார்த்த இனியா .அப்பா என்று கத்தியவன் அவரை அனைத்து கொண்டு அப்பா , அப்பா என்று அழுக.
திருச்செல்வனோ ஒன்னும் இல்லடா , இந்த அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.
நெஞ்ச பிடிச்சு இருக்கீங்க என்ன ஆச்சுப்பா. நெஞ்சு வலிக்குதா என்று இனியா கேட்க.
திருச்செல்வன் நெஞ்சை நீவி விட. ஒன்னும் இல்ல இனியாம்மா, நீ அப்பா கிட்ட வந்துட்டல்ல எனக்கு ஒன்னும் ஆகாது.
மகிழ் தந்தையின் அருகில் அமர்ந்து. அப்பா சாரி, சாரிப்பா என்று கூற.
ஒன்னும் இல்லடா என்றார் திருச்செல்வன்.
இனியாவை பார்த்த மகிழ் சாரி இனியா என்று சொல்ல.
பரவாயில்லை மகிழ் , நாளைக்கு உனக்கு கல்யாணம் அதை பாரு இப்போ இதெல்லாம் வேண்டாம்.
இல்லை இனியா நான் அப்பாக்கிட்ட இனியாவிடம், பேச கூடாது, இந்த வீட்டில் அவ இருக்கக் கூடாது சொன்னேன். இப்போ நெனச்சா எனக்கு என்மேலயே கோபமா வருது.
திருச்செல்வனுக்கு பழையது அனைத்தும் நியாபகம் வந்தது.
கோமதி நீண்ட வருடம் கழித்து கருவுற்று இருக்க. அதுவும் இரட்டை பிள்ளைகள் எனும் போது. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதுக்கு கடவுள் குடுத்த பரிசாக நினைத்து சந்தோஷபட.
கோமதிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரு பிள்ளைகள் பிறக்க. ஆண் பிள்ளைக்கு மகிழன் என்றும். பெண் பிள்ளைக்கு மகிழ்வதனி என்று பேர் வைத்தனர்.
மகிழன் 10 மாத குழந்தையாக இருக்கும் போது விடாத காய்ச்சலால் இறந்து விட. அவர்களுக்கு தீராத துன்பம். பிள்ளை இல்லாமல் தவிக்க விட்டு. இரு பிள்ளைகளை குடுத்து . ஒன்றை இலந்து. அவர்களுக்கு எல்லாம் ஆகி போனால் மகிழ்.
துன்பத்தில் இருந்து வெளியில் வந்தது மகிழை பார்த்துத்தான் .
திருச்செல்வனும், கோமதியும் மகிழை கீழே விடாமல் தாங்க. மகிழுக்கு எல்லாம் தாய் தந்தை தான்.
மகிழுக்கு 3 வயது ஆகும் போது கோமதி இரண்டாவது முறை கருவுற்று இருக்க அதுவும் இரட்டை பிள்ளைகள் என்று தெரிய வர இரட்டிப்பு மகிழ்ச்சி.
கோமதிக்கு இனியன் , இனியா பிறக்க, மகிழ் மீது செலுத்தும் அக்கரை குறைய.
கோமதிக்கு இரட்டை பிள்ளைகளை பார்க்கவே சரியாக இருக்க. மகிழ்ழை சரியாக கவனிக்க முடிய வில்லை. திருச்செல்வன் தான் மகிழை நன்றாக பார்த்து கொண்டார்.
மகிழுக்கோ , இவர்கள் இரண்டு பேர் வந்து விட்ட பின் தான் , கோமதியும் , திருச்செல்வனும் என் மீது பாசம் காட்ட வில்லை.
மகிழே அவர்கள் உலகம் என்று இருந்தவர்கள். இப்போ வந்த இனியன், இனியாவை அவளால் ஏற்று கொள்ள முடிய வில்லை.
கோமதி சிறுபிள்ளைகளை அக்கறையோடு பார்க்க. மகிழ் நீ பெரிய பிள்ளை இவர்கள் உன் தங்கை ,தம்பி நீ தான் அவர்களுக்கு எல்லாம் கொடுக்கனும் நல்ல பாத்துக்கணும் என்று சொல்ல.
மகிழோ இல்லை நான் பாத்துக்க மாட்டேன். இவங்களை எனக்கு பிடிக்கல . பாட்டி வீட்டுல கொண்டு போய் விடுங்க என்று எப்பொழுதும் அழுவாள்.
இனியானை , ஆண் பிள்ளை தன் தம்பி என்று புரிந்து கொண்டவள். இனியாவை ஏற்க மறுத்தாள்.
திருச்செல்வனின் உருவ அமைப்பு அப்படியே இனியாவை போல் இருக்க . அவளை பார்க்கும் எல்லோரும் திருச்செல்வன் மகள் நீ அப்படியே திருச்செல்வன் மாதிரியே இருக்க. அனைவரும் சொல்ல . சொல்லியவுடன் இனியாவை ஆசையாக அனைத்து கொள்வார் திருச்செல்வன் என் மகள் என்று.
திருச்செல்வன் இனியாவை தூக்கி கொஞ்சினாலோ, எதாவது வாங்கி கொடுத்தாலோ, மகிழுக்கு கோபமாக வரும்.
இனியாவை, அடித்து அழ வைப்பாள்.
தன் தந்தை தன்னை மட்டும் தான் கொஞ்ச வேண்டும் என்று நினைக்க. வருடங்கள் போக போக மகிழுக்கு இனியா எதிரி போல் ஆனாள். நாட்களும் செல்ல இதுவே மகிழுக்கு மனநோய் போல் ஆனது.
மகிழுக்கு இதயத்தில் சிறு தொந்தறவு இருக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டாள். அவளை செக் பண்ண டாக்டர், அவளுக்கு சின்ன பிரச்சனை ஆனால். இப்படியே இருந்தாள். இது பெரிய பிரச்சனையாக மாறும். அவளுக்கு மனதில் ஏதோ அழுத்தும் விசயம் இருக்கு அத சரி பண்ணுங்க. அத சரி பண்ணாவே போதும், உடம்பு சரியாகும் என்று சொல்ல.
திருச்செல்வனுக்கு ஏற்கனவே, மகிழன் இறந்து விட, எங்கே மகிழுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று நினைத்து அவளிடம் , மெதுவாக பேச்சு குடுக்க.
அனைத்தையும் சொல்லி முடித்தால் மகிழ்.
திருச்செல்வனுக்கு நான் தான். இதற்கு காரணம் . மகிழ்ழிடம் அதிக பாசம் காட்டி , கைகுள்ளே வைத்து இருந்து விட்டு, மகிழை நன்றாக கவனித்துருக்க வேண்டும். அதிக பாசம் காட்டி விட்டு , மற்ற பிள்ளைகள் வந்து விட அதை மறப்பது தவறு என்று புரிந்து கொண்டார். எத்தனை பிள்ளைகள் வந்தாலும் முதல் பிறக்கும் குழந்தை எப்பொழுதும் பெற்றோருக்கு பாசம் அதிகம் தான் .
தன் இரு பெண்களை பார்த்தவர் நீங்க ரெண்டு பேரும் என் கண் மாதிரி யார் மீது அதிக பாசம் என்று என்னால் சொல்ல முடியாது. நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும் என்று திருச்செல்வன் கூற.
சரிப்பா என்று இனியாவும் மகிழும் கூற.
அனைத்துக் கொண்டார் இரு பெண் பிள்ளைகளையும்…..
error: Content is protected !!