Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 14

“ஹேய் .. யூ.. “ என்று சின்னதாய் கத்தியபடி எழுந்தமர்ந்தாள் மது!

அவள் அணிந்திருந்த நைட்டியின் ஜிப் லேசாக கீழே இறங்கி இருந்தது!

“ஹேய். ரிலாக்ஸ் மது, நான் தாண்டி! உனக்கு டெம்ப்ரேச்சர் செக் பண்ணினேன்!”

ரகு அவளின் கழுத்தில் கை வைத்து இன்னும் பீவர் இருக்கிறதா என்று செக் பண்ணிக் கொண்டிருந்தான், அவள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தவளை.



Advertisement

“அதுக்கு இப்படியா பண்ணுவாங்க?”

“என்ன இப்போ? உன் கழுத்தில் கை வைத்து பார்க்கும் போது, லேசா என் கை விரல் பட்டு உன் நைட்டி ஜிப் ரன்னர் கொஞ்சம் இறங்கிடுச்சு!

அதுக்கு ஏண்டி என்னை இப்படி வில்லன் ரேஞ்சுக்கு பாக்குற?”

Advertisement

‘நான் என்ன வேணுமின்னா, இப்படி இழுத்து விட்டேன்?” என்று இப்போது புல்லாகவே  இறக்கி விட்டுவிட்டான்!

Advertisement

மது பெரும்பாலும் பகல் பொழுதுகளில் தூங்க மாட்டாள்.

ஆனால் இப்போது வெளியே எங்கும் போக முடியாததால், போர் அடித்து, சும்மா கண் மூடி படுத்துக்கொண்டிருந்தாள் அவள் ரூமில்.

இப்படி கொஞ்ச நாளாக தூங்கும் மதிய தூக்கம், மற்றும் மனம் முழுக்க உள்ள சந்தோசம், பூரிப்பு காரணமாக அவள் கொஞ்சம் வெயிட் போட்டு விட்டாள்!

Advertisement

உடல் கொஞ்சம் பூசினால் போல ஆகியிருக்க, கன்னங்களோ இன்னும் செழுமை கூடியிருந்தன!

அவளின் பழைய நைட்டிகள் இப்போது அவளுக்கு சரியாக இல்லை.

எனவே புதிதாக சில நைட்டிகளை மானு தான் வாங்கி வந்திருந்தாள்.

மது வழக்கமாக இப்படி ஜிப் வைத்ததை போட மாட்டாள்.

அது தெரியாமல் மானு வாங்கி வந்தது தான்  இது!

இப்படி இவன் கிட்ட மாட்ட வைத்து விட்டது!

“சாரி. ஏதோ  பதட்டத்துல சொல்லிட்டேன். விடுங்களேன்!” அவள் நைட்டியை சரி செய்ய முயல,

“முடியாது.. செய்யாத தப்புக்கு உன்கிட்ட திட்டு வாங்கறதுக்கு, செஞ்சிட்டே போறேனே!”

“நான் போனா போவுது நம்ம டார்லிங் இன்னும் பீவர்ல இருக்கப் போறா, என்னன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.

தூங்கிட்டு இருக்கிற உன்னை டிஸ்டர்ப் செய்ய வேணாம்னு பார்த்தால், நீ என்கிட்ட  இப்படி கத்துற?”

“சாரிப்பா..” என்றவாறு அவள் திரும்பவும் சரி செய்ய முயல,

“முடியாது..” என்று அவள் கையைப் பிடித்து தடுத்தான்.

அவளோ அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக கையை உருவிக் கொள்ள முயன்றாள்.

“ஏய்..  என்கிட்டேயே போர்சை.. போடுற? நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இப்படி பண்ணாதேன்னு!

பண்ணுனா, அதன் பின் விளைவுகள் என்னன்னு உனக்கே தெரியும்!” அவள் குறும்பாய் சிரித்துக் கொண்டே அவள் கையை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டு பேசினான்!

“ஏன்டி அப்படி நினச்சே என்னை?”

“ம்ம். அது வந்து..  நீங்க தான் என் கனவுல வந்து இது மாதிரி தான் செஞ்சீங்க நேத்து! நான் கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டேன் தெரியுமா!” அவள் சிணுங்கினாள்!

“ஓ.. அப்படியா…. இன்னும் என்னவெல்லாம் செய்தேன் இந்த மாமா உன் கனவுல?”

“ம்ம். அவ்வளவு தான்  அதான் நான் கீழே விழுந்து முழிச்சிட்டேனே!”

“நீ என் கனவுல வந்து என்னவெல்லாம் பண்ணுற தெரியுமா?”

“நான் எல்லாம் ரொம்ப டீசண்டா தான் வந்துருப்பேன்! நானெல்லாம் குட் கேர்ள்! உங்கள மாதிரி பேட் பாய் இல்ல!”

“அது சரி. ரொம்ப குட் கேர்ள் தான்!  இதுக்கே இப்படி பண்றீயே, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு.. ம்ம்.? கண்ணடித்தான்.

“அப்ப இந்த மாதிரியெல்லாம் பண்ணின, அப்புறம் பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன்! நிஜ வில்லனாவே மாறிடுவேன்!

இப்ப பொழச்சுப் போ! அவளை விட்டான்!

அவள் “ஸ். ப்பா” என்று ரிலாக்ஸ் ஆகையில், சட்டென அவளை இறுக அணைத்து அவள் இதழ்களில் ஒரு வன் முத்தம்!

“இது நான் உன் லவ்வரா இருந்து கொடுக்கிற கடைசி முத்தம்! இனி உன் புருஷனா கொடுப்பேன்!”

அவளை வெட்கமுற வைத்து விட்டு, அவன் கிளம்பி வெளியே வந்தான்!

அங்கே ஹாலில் ராஜு, மானு, மாது மூவரும் கேரம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

“ஏண்டா, மதுவுக்கு பீவர் சரியாகிடுச்சுன்னு என் கிட்ட யாருமே சொல்லல? சொன்னா நான் இங்க வந்திருக்க மாட்டேன்ல?

நான் வேற வேஸ்டா இங்க அலைஞ்சுட்டு இருக்கேன்!” மாதுவைப் பார்த்துக் கேட்டான்.

“அது வந்து.. அத்தான்..” மாது தயங்க..

“ஆஹான்.. நம்பிட்டோம்!” என்றான் ராஜு ரெட் காயினைக் குறிவைத்த படியே தலையை நிமிர்த்தாமல், நமுட்டு சிரிப்புடன்.

அதைக் கேட்டு, டக்கென்று என்று சிரித்து விட்டாள் மானு.

“ஏய். என்னடி சிரிப்பு உனக்கு, அவன் தான் கிண்டல் பண்ணினா, நீயும் கூட சேர்ந்து சிரிப்பியா?” அவள் காதை செல்லமாக திருகினான் ரகு!

“அய்யோ.. விடுங்க அத்தான், நான் சிரிக்கல..”  என்றவள் “அய்யோ அத்தான் இங்க பாருங்க உங்க சர்ட்ல மதுவோட ஸ்டிக்கர்!” என்று சொல்ல,

“அய்யோ எங்கே?’ என்று அவனும் தேடி குனிய, சைக்கிள் கேப்பில் அவனிடமிருந்து தப்பினாள் மானு!

தன் சர்ட்டில் ஒன்றையும் காணாது, அவள் குறும்பை புரிந்துகொண்ட ரகு

“விஷம், விஷம்” என்று அவள் தலையில் குட்டி விட்டு, சிரித்தபடியே அங்கிருந்து வீடு திரும்பினான்.

அங்கே சென்றால், அங்கே வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள் வைஷு. பின்னால் ராகவன்!

“டேய். எங்கடா போயிட்டு வர?”

“ஏன் மது வீட்டுக்கு தான்!”

“அதான் ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு அங்க போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கோம்ல, அப்புறம் ஏன்டா போனே?”

“அது.. அது அவளுக்கு பீவர்! அதான் ட்ரீட் பண்ண போனேன்!”

“அய்யோ சாமி போதுண்டா ரீல் அறுந்து போச்சு! அவளுக்கு பீவரெல்லாம் அப்பவே சரியாகிடுச்சு. அதுவும் இல்லாம அங்க மானு இருக்கா, அவ பார்த்துக்க மாட்டாளா? ஏண்டா இப்படி  எங்க மானத்த வாங்குற?”

“அடப்பாவிங்களா, அதுக்குள்ள போனில் சொல்லிவிட்டாங்களா?”

“ம்ம்.” வைஷு ராகவனுக்கு ஜாடைக் காட்ட, அவன் மெல்ல ரகுவின் முன் சென்று, அவன் கர்ச்சீப் எடுத்து ரகுவின் முகத்தை துடைத்து விட்டான்!

“டேய் போதும்டா அசடு வழிஞ்சது! இதெல்லாம் நம்மள மாதிரி ஆம்பிளைங்க லைப்ல கொயட் நாச்சுரல்! விடு..” என்று அவன் பங்குக்கு அவனும் வாரினான்.

“ஹாய் ரகு!” பின்னால் குரல் கேட்க, மூவரும் திரும்பினார்கள்!

அங்கே பார்த்தி!

வைஷுவுக்குள் கொஞ்சம் பதட்டம்!

“அய்யோ, வந்துட்டானா இந்த சனியன் பிடிச்சவன்! இந்த ஏழரை ஏன் இப்பவே வந்துச்சு!

வந்து என்னவெல்லாம் குட்டையை குழப்பப் போறானோ? வந்தது தான் வந்தான், இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சி வந்துருக்க கூடாது?”

மனதிற்குள் திட்டினாள்.

வந்தவன் அவளைப் பார்த்தான்.

“ஏண்டி நான் இல்லாத நேரம் பார்த்து, ரகுவுக்கு அந்த மதுவையே கல்யாணம் செய்யும்  வரை கொண்டு வந்துட்டியா?” என்ற அர்த்தம் பொதிந்த பார்வை அது!

“போடா, இனி உன்னால என்ன செய்ய முடியும், இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணம்!” என்ற பதில் பார்வை அவளிடம்.

ராகவனுக்கும் அவன் வந்தது பிடிக்கவில்லை. எனவே போன் வந்தது போல் உள்ளே சென்றுவிட்டான், பார்த்தியிடம் ஒரு சின்ன தலையசைப்புடன்.

மதுவும் அவன் பின்னே சென்று விட்டாள்.

மருந்துக்கு கூட அவர்கள் இருவரும் “தன்னை உள்ளே வா” என்று கூப்பிடாதது அவனுக்குள் கோபத்தை உண்டு பண்ணியது.

அதை மறைத்து சிரித்தபடியே, “என்னடா கல்யாண மாப்பிள்ளை எப்படி இருக்க?” என்று ரகுவின் அருகில் வந்து அவனைக் கட்டிக் கொண்டான்!

“ம்ம். நல்லா இருக்கேன், ஹேப்பியா!” ரகு முழு மனதுடன் சொன்னான்! “உன் டூர்லாம் எப்படி போச்சு?’

பார்த்திக்குள் பயங்கர கோபம்.

“ஏண்டா, ஏன் பொழப்ப கெடுத்தவளயே கல்யாணம் பண்ண போறே!

இதுல ஹேப்பியா இருக்கேன்னு என்கிட்டேயே சொல்றியா?” உள்ளுக்குள் கறுவினாலும் வெளியே சிரித்துக்கொண்டே “அது சூப்பரா போச்சு, நேத்துதான் வந்தேன்.

உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டு உடனே உன்னை பார்க்க வந்துட்டேன். வாயேன்  சும்மா ஒரு டிரைவ் போயிட்டு வரலாம் என் டூ வீலர்ல!”

“ம்ம். வா.” ரகுவும் அவனும் பைக்கில் வெளியே போனார்கள்!

“ரகு, கல்யாண வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு!

நான் இருந்து ஓடியாடி உன் கல்யாண வேலைப் பார்த்துருக்கணும், நான் இல்லாம போயிட்டேன். இன்னும் எதாச்சும் வேலை பாக்கி இருந்தா சொல்லுடா, நானும் சேர்ந்து பாக்குறேன்!”

“அதெல்லாம் வைஷு ஆள் அரேஞ்ச் பண்ணிட்டாடா!” சொன்னவன் பார்த்தி ஹெல்மெட்டை போடாமல் சும்மா பெட்ரோல் டாங்கின் மீது வைத்திருப்பதை பார்த்து சொன்னான் “டேய் நீ ஹெல்மெட்ட போடு”

“நீ வேறடா, இரு.. ட்ராபிக் பி சி யாராவது வந்தா போடலாம்”.

சொன்ன நேரம் இரு ட்ராபிக் போலீஸ்காரர்கள் வழி மறித்து வண்டியை நிறுத்த சொன்னார்கள்.

“ஏன் சார். அதான் ஹெல்மெட் போட்டுட்டு தானே வந்தேன்” பார்த்தி கோபமாய் சொல்ல,

“ஓ அப்படியா .. அப்ப வண்டி பேப்பர்ஸ் எடுங்க”

எடுத்தான்.

இன்சூரன்ஸ் காலாவதியிருந்தது!

அவன் தாய்லாந்து டூர் சென்றுவிட்டதால் மறந்து போய் இருந்தான் அதை புதுப்பிக்க!

“வாங்க சார், வண்டிய இப்படி ஓரமா பார்க் பண்ணிட்டு பைன் கட்டிட்டு போங்க!”

“இல்ல சார்..அது வந்து நான் பாரின் டூர் போயிட்டேன்! நேத்து தான் வந்தேன்.  இன்சூரன்ஸ் போட தான் வண்டிய கொண்டுப் போய்க்கிட்டு இருக்கேன்!”

அவன் அவரிடம் வாதிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பி சி ரகுவை அடையாளம் கண்டு கொண்டார்!

“சார் நீங்க டாக்டர் ரகுநந்தன் தானே ! யோவ் அவர் போகட்டும் விடுயா..

சார் நீங்க போங்க ! சீக்கிரம் உங்க பிரண்ட இன்சூரன்ஸ் போட சொல்லிருங்க!”

பைன் போடப் போன இன்னொரு பி சி யிடம் திரும்பி “யோவ், அவர் யாருன்னு தெரியுமா? ராஜுவோட மச்சான்! டாக்டர்!

அப்புறம் தேவா சார்க்கு தெரிஞ்சா, என் வீட்டு மாப்பிள்ளைன்னு தெரிஞ்சும் வண்டிய நிப்பாட்டினியான்னு  நம்மள தான் திட்டுவாரு”

“ராஜுவுக்கு ஏதுயா சிஸ்டர்?”

“அது தான்யா. அவங்க வீட்டுக்கு வருமே ஒரு பாப்பா. மது பாப்பா. அந்த மதுவோட மாப்பிள்ளை தான் இவர்!” அவர்கள் பேசி கொண்டது ரகு, பார்த்தி காதிலும் விழுந்தது!

வழியில் ஒரு இளநீர் வண்டியின் முன் நிறுத்தி இளநீர் வாங்கினார்கள்.

அந்த இளநீர் விற்ற பெண்ணோ, இளநீர் கொடுத்து விட்டு காசு வாங்க மறுத்துவிட்டாள்!

கேட்டதற்கு, “நீங்க மது பாப்பாவ கல்யாணம் செய்யப் போற டாக்டர் அய்யா தானே! ரொம்ப சந்தோசம்!

உங்க ரெண்டு பேரின் நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பீங்க டாக்டர்! யோவ், இங்க பாரு யாரு வந்துருக்கான்னு” அவள் கணவனை அழைத்தாள்.

அவன் தன் லுங்கியை இறக்கிவிட்டு பணிவாக ஒரு வணக்கம் வைத்தான் ரகுவிற்கு!

“எல்லோர் வயிறும் குளிர, நான் இளநீர் விக்கிறேன், ஆனா என் புருஷன் கண்டத குடிச்சு குடல் வெந்து போய், முடியாம இருந்தான்.

அப்ப மது பாப்பா தான் உங்க கிட்ட சொல்லி ப்ரீ ட்ரீட்மென்ட் கொடுத்துச்சு! ரொம்ப நன்றிங்க டாக்டர்!”

“மது சில பேருக்கு அவனிடம் சொல்லி இப்படி ப்ரீ ட்ரீட்மென்ட்க்கு ஏற்பாடு செய்துருக்கா அதுல ஒருத்தங்க போல இவங்க” என்றான் ரகு பார்த்தியிடம்!

“அவள் தனக்குன்னு எதையும் என்கிட்ட கேக்க மாட்டாடா!” பெருமையுடன் சொன்னான் அவன்!

பார்த்திக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது!

இந்த ஒன்னரை மாதத்தில் என்னெவெல்லாம் மாற்றம் இந்த ரகுவிடம்!

ரகுவைப் பார்த்த முதல் கணத்திலேயே அவனுள் ஒரு அதிர்ச்சி!

மீசை வைத்துக் கொண்டிருந்த ரகுவைப் பார்த்து அதிர்ந்தான்.

அது மட்டுமா, ஹேர் ஸ்டைல் கூட மாறிப் போய்! கேட்டால் மச்சான் சொல்லி மாற்றினானாம்!

நான் வெஜ் சாப்பிட கூப்பிட்டால் மறுத்தான்.

“ஓ.. கல்யாணம் பிக்ஸ் ஆனதால் சாப்பிட கூடாதா?”

“இல்லை நான் என் மதுவுக்காக நான் வெஜ் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்” என்கிறான்!

இப்படியாடா ஒரேடியா மாறுவான் ஒருத்தன்! அவ்வளவு பவரா இந்த லவ்வுக்கு?

ஏன் நானும் தான் ஒரு பொண்ண லவ் பண்றேன், நான் என்ன இப்படியா மாறிட்டேன்?

எதே! இவன் பண்ணுவதற்கு பெயர் லவ்வா?

பார்த்தி ஒரு பெண்ணையும், பார்த்தியை ஒரு பெண்ணும் கல்யாணம் செய்ய விரும்பினார்கள்!

பார்த்தியோ, இருவரையுமே “பைப் லைனில்” வைத்து இருந்தான்!

அவன் விரும்புகிற பெண், நர்சிங் படித்து விட்டு, கவர்மென்ட் ஜாபில் இருக்கிறாள்.

இவன் பிசினெஸ் செய்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் வீட்டிலும் ஒரு வாறு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், காலத்துக்கும் அவளை ஹாஸ்பிட்டலில் பிக்கப் மற்றும் டிராப் செய்தே தன் காலத்தை அவள் சம்பளத்திலேயே ஓட்டி விடலாம்! செட்டில் ஆகி விடலாம்!

அவனை விரும்பும் பெண், அவனை விட மூன்று வயது மூத்தவள்!

படிக்கவில்லை என்றாலும் பார்த்தியைப் பார்த்தால் அப்படி தெரியாது! நன்றாக ட்ரெஸ் செய்து கொள்வான்!

பத்தாதிற்கு அவனிடமிருந்த அந்த நுனி நாக்கு ஆங்கிலம்!

அவளை அவன் பால் ஈர்த்தது! அவனுக்காக அவள் நிறைய செலவு செய்வாள்!

இப்போது கூட பார்த்தி தாய்லாந்து டூர் செல்ல அவள் தான் காசு கொடுத்தாள்.

தாய்லாந்தில் இருக்கும் போதே பார்த்தி ரகு மது நிச்சயதார்த்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பார்த்து விட்டான்!

இந்தியா போனவுடன் ரகுவை சந்தித்து, ஏதாவது பண்ணி ஆட்டத்தை கலைக்க நினைத்தான்!

ஆனால் அந்த பெண் அவனை விட வில்லை, நேராக அவனை கோவா டூர் அழைத்துப் போய் விட்டாள்!

அங்கேயும் போய்விட்டு , இங்கே வந்தால், நிலைமை இவ்வளவு தூரம் கை மீறி போய்விட்டு இருக்கிறது!

எப்படியும் ரகு, கொஞ்ச நாளில் அந்த மதுவை விரட்டி விட்டு, தன்னிடமே அந்த காண்ட்ராக்டை கொடுப்பான், அதைக் காட்டி அந்த நர்ஸ் பொண்ணை கல்யாணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்த்திக்கு, இந்த ரகு, அந்த மதுவை கல்யாணமே செய்துக்க போறான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

ஏதாவது பண்ணனும்! கல்யாணத்தை நிறுத்த முடியாது போல இனி! ஆனா அந்த மது சந்தோசமாவே இருக்கக் கூடாது!

என் வாழ்க்கையை கெடுத்து விட்டு அவள் சந்தோசமா வாழ இந்த பார்த்தி விட்டுடுவேனா?

இருடி, இந்த ரகுவிடம் ஏதாவது ட்ரை பண்ணி, அவன் மனசை கலைக்கிறேன் பார்! உள்ளுக்குள் முடிவெடுத்தான்!

மதுவின் பெருமை பேசிய ரகுவிடம், “மது ரொம்ப லக்கிடா, உன்னை கல்யாணம் செய்வதற்கு!” என்றான்.

சொல்லிவிட்டு, “ஆனா இது கூட நல்லாத்தான் இருக்கு! மதுவோட  மாப்பிள்ளை! – மது மாப்பிள்ளை!

ஆக்டர்  சூரிய ஒரு படத்துல எல்லோரும் அடையாளம் கண்டுக்குவாங்களே “புஷ்பா புருசன், புஷ்பா புருசன்ன்னு அது மாதிரி!

பெரிய ஜோக் சொல்லி விட்ட மாதிரி பார்த்தி சிரித்தான்!

ஆனால் ரகு சிரிக்க வில்லை! அவன் முகத்தில் ஒரு சின்ன எரிச்சல் , விருப்பமின்மை தெரிந்தது!

அதை கவனித்து விட்டான் பார்த்தியும்!

அவனுக்கு வேண்டியதும் அது தானே! ரகுவின் ஈகோவை தூண்டிவிட்டு காரியம் சாதிப்பது தானே அவன் எப்போதும் செய்வது!

“சரிடா ரகு, இங்க தான் நம்ம பிரண்ட் கிஷோர் இருக்கான்ல, அவன் புதுசா ஒரு ஜெம்ஸ் ஸ்டோன் கடை திறந்துருக்கான், வா நான் உனக்கு ஒரு ரிங் வாங்கித் தரேன் உன் கல்யாணப் பரிசா!”

“கிஷோர் இப்ப பெரிய ஜோசியகாரனா ஆகிட்டாண்டா! ஒரு யூட்யுப் சானல் கூட நடத்துறான். ஜாதகம் பரிகாரம்னு ஏதேதோ சொல்லி தாண்டா ஜெம்ஸ் ஸ்டோன் விக்குறான்!”

ரகுவை அங்கு அழைத்துப் போனான் பார்த்தி!

என்ன ஏழரையை கூட்டப் போறானோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!