Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 16

“தீ இல்லை புகை இல்லை

ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே

நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே



Advertisement

பூ இல்லை மடல் இல்லை

புதுத் தேனைப் பெய்கிறாய் உயிரிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்!

Advertisement

இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்!”

Advertisement

இது தான் ரகுவின் நிலை இப்போது!

கல்யாணம் நல்லபடியாக முடிந்து, ரிசப்சனும் கோலாகலமாய் முடிந்து இருந்தது!

குடும்பத்தினர் அனைவருமே டாக்டர்கள் என்பதால், ஒரு பெரிய டாக்டர்கள் கூட்டமே வந்திருந்தது!

Advertisement

டாக்டர்கள் மட்டுமின்றி நர்ஸ்கள், மற்ற ஹாஸ்பிட்டல் பணியாளர்கள், குடும்ப நண்பர்களோடு, உறவினர் கூட்டமும் மிக அதிகம் ரகுவின் பக்கம்!

இங்கே மதுவின் பக்கமோ மிக கொஞ்சமே வந்திருந்தனர்!

விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உறவினர்கள்!

மற்றபடி ராஜு மாதிரி நண்பர்களும், கமலா ஆன்டி மாதிரி நலம் விரும்பிகளும் தான் அவள் பக்க விருந்தினர்!

அவள் வீட்டுக்கு வந்து சுவாமி ரூமில் விளக்கேற்றிய போது, ராமநாதனே கொஞ்சம் கண் கலங்கி தான் விட்டார், தன் விஜியை நினைத்து!

அவள் இல்லையே அவளின் செல்ல பையன் திருமணத்தைக் காண!

பெரியப்பாவிற்கு பெரும் மன நிறைவு! அவர் வைஷுவைப் பாராட்டி தள்ளி விட்டார்!

எல்லாம் முடிந்து, இப்போது மிக நெருங்கிய உறவினர் மட்டும், மண மக்களுக்கு நலுங்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை சாந்தி முகூர்த்தத்திற்கு அனுப்பு முன்.

மது இப்போது சாதாரண வீட்டு மேக்கப்பில்! அதிலேயே பேரழகாக இருந்தாள் அவள்.

நீண்ட  கூந்தலை தளர்வாக பின்னி, வைத்திருக்கும் ஜாதி மல்லிச்சரமும், கட்டியிருந்த சிம்பிளான ஜார்ஜெட்  புடவையும், நெற்றி வகிட்டில் இப்போது புதிதாக குங்குமமும் , காதில் குட்டி ஜிமிக்கியும் எல்லாவற்றையும் விட, அவள் கண்கள்! அதில் அவளின் ரகுவின் மேல்  பாய்ந்த அந்த காதல் பார்வை!

“ஷ்.. அப்பா..”  என்று அவனை சிலிர்க்க வைத்தது!

“அய்யோ இப்படி பார்க்காதேடி! நான் அப்படியே ப்ளாட் ஆகிட்டு இருக்கேண்டி மது!” அவனுள் இப்போது மீண்டும் அதே பாடல்!

“என்னை இழக்கிறேன் உன்னிடம்…”

அவனுக்கு பார்த்தி சொன்னது நினைவு வந்தது!

கூடவே அந்த ஜெம்ஸ் ஸ்டோன்ஸ் விற்கும் கிஷோர் சொன்னதும்!

அவனைப் பார்த்தி அந்த கிஷோரின் கடைக்கு அழைத்து சென்றபோது, அவர்களை கிஷோர் ஆவலுடன் வரவேற்றான்!

ரகுவிற்கு கல்யாணம் என்று அறிந்தவுடன், ஒரு க்யுரியாசிட்டியில் கேட்டான்!

“ஓ! ரகு நீ என்ன ராசி?”

“கடகம்!”

“மதுவோடது?”

“விருச்சிகம்!”

“ஓ அப்படியா சூப்பர்! ரகு விருச்சிக ராசி பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க! ரொம்ப அறிவானவங்க, சுறுசுறுப்பாக இருப்பாங்க, நல்ல உழைப்பாளிகள்! மனதளவில் ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருப்பாங்க.

நல்ல நிர்வாகத் திறமை உள்ளவங்க! ரொம்ப மன உறுதி வைராக்கியம் உள்ளவங்க!

இவங்கள பணத்தாலயோ, அதிகாரத்தாலோ அடி பணிய வைக்கவே முடியாது!

கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையும் இருக்கும் அவங்க கிட்ட! எல்லோரும் அவங்களுக்கு கீழே இருப்பதை தான் விரும்புவாங்க. ஆனா..அவங்க ஹஸ்பெண்ட் மேல.. “

அதுக்கு மேல அவனை சொல்ல விடாமல் பார்த்தி அவனைத் தடுத்து விட்டான்!

போதும் இந்த டோஸ் தான் கரெக்ட்! இது மாதிரி ஏதாவது சொல்லி ரகுவைக் குழப்ப தானே இங்கே அழைத்து வந்ததே!

இதற்கு மேல் ரொம்ப சொல்லி ஓவர் டோஸ் ஆகிவிட்டால், ரகு அப்படியே இக்னோர் பண்ணி விடுவான்!

“டேய் போதும்டா! உன் ஜோசியக்கார வேலைய இங்கே காட்டாதே! அவனுக்கும் மதுவுக்கும் ரிங் வாங்க தான் கூட்டிட்டு வந்திருக்கேன் போதும்டா உன் மார்கெட்டிங்!”

ரகுவின் மனதில் அந்த கிஷோரின் வார்த்தைகள் கொஞ்சம் யோசிக்க வைத்தன!

கிட்டத்தட்ட அவன் சொல்வது எல்லாம் மதுவுக்கு பொருந்த தான் செய்கிறது!

அப்படின்னா அவ என்னை முழுசா டாமினேட் பண்ண தான் போறாளா?

பார்த்தி கிண்டல் பண்ணுன மாதிரி நான் மது புருஷன் தானா?

எனக்கென்று இனிமேலும் தனித்த அடையாளம் வரவே வராதா?

ராமநாதன் பையன், ராகவன் தம்பி, விஜியோட பையன் மாதிரி, இனி நாம் மதுவோட புருஷன்!

அவனுக்குள் கொஞ்சம் கசந்த உணர்வு!

விதி வலியதோ! அல்லது பார்த்தியின் சதியோ? ரகு இன்னும் கொஞ்சம் அந்த கிஷோர் அடுத்து சொல்லயிருந்ததைக் கேட்டிருந்தால், இது ஏற்பட்டு இருக்காது!

அடுத்து கிஷோர் சொல்லவிருந்தது, அவங்க ஹஸ்பென்ட் மேல உயிரா இருப்பாங்க, அவங்களுக்காக, எதை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்றுதான்!

அதை தான் பார்த்தி ரகுவை கேட்க விடாமல் செய்து விட்டானே!

அதன் பின் பாச்சிலர் பார்ட்டியின் போது பார்த்தி சொன்னது வேறு!

“மச்சான், எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு!

ஏய் இந்த பொம்பளைங்க  இருக்காங்களே, கல்யாணம்னு ஒண்ணு ஆனவுடனே ஆம்பிளைங்கள அப்படியே அவங்க கன்ட்ரோல்ல எடுத்துப்பாங்க! அதிலும் ஒரு குழந்தை பொறந்துட்டா போதும், அதுவும் அந்த காலத்துல ஆண் குழந்தை, இப்போவெல்லாம் பெண் குழந்தை!

அப்படி ஒரு பெண் குழந்தையையும் பெத்துட்டான்னு வச்சுக்க, அவ்வளவு தான் அவன் வாழ்க்கை முழுசும் அவ அடிமை தான்!

ஏன்னு கேக்குறியா?  அவனால அந்த பெண் குழந்தைய விட்டு பிரிய முடியவே முடியாது!

டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்ன்னு அத கொண்டாடுவான்! அப்புறம் அந்த குழந்தைக்காகவே அவன் பொண்டாட்டி என்ன அராஜகம் பண்ணினாலும் பொறுத்து தான் போவான்!

அப்படின்னு சொல்வாருடா! “

“நம்ப பசங்க கவுந்து போறது இந்த பர்ஸ்ட் நைட்ல தாண்டா! அப்போ மட்டும் கொஞ்சம் உசாராக ஸ்ட்ராங்கா இருந்துட்டா, அவன் பொழச்சான்! இல்லன்னா லைப்டைம் அடிமை தான்!

டேய்.. நீ வேற மது மேல ஓவரா பீலிங்க்ஸ்ல இருக்கிற! பார்த்து நடந்துக்கோ கண்ணா! அப்புறம் உன் பாடு சூரி மாதிரி ஆகிடப் போகுது!” கிண்டல் போல ஏற்றி விட்டிருந்தான்!

ரகு, தன் அண்ணன் ராகவனை நினைத்துப் பார்த்தான்!

ஒரு வேளை இது உண்மை தானோ!

அன்று வைஷு தன்னை அடிக்க சொன்ன போது, என்ன ஏது என்று கேட்காமலேயே அடிக்க தானே செய்தான்!

அப்போ நாமும் அப்படி தான் ஆகிடுவோமோ, இப்ப அலர்ட்டா இல்லன்னா!

அவனுள் பலத்த யோசனைகள்!

ரகு, ரொம்ப கரெக்டா, தப்பான திசையில் யோசித்தான்!

ரகுவின் அறை!

இதற்கு முன்னும் கூட அவர்கள் இங்கே சந்தித்து இருந்தாலும், இது புதுவித அனுபவம் இருவர்க்கும்!

மது கொஞ்சம் வெட்கத்தோடு உள்ளே நுழைந்தாள்.

அவள் அணிந்து இருந்த அந்த மெல்லிய சிந்தெடிக் சேலை அவளின் உடம்பின் வரி வடிவைக் காட்டியது!

அவள் எப்போதும் காட்டன் தான் அணிவாள்! இப்போது புது மாதிரியாக கொஞ்சம் செக்சியாக தெரிந்தாள் அவனுக்கு!

அதற்கு மேல் அவனால் பொறுத்துப் போக முடியவில்லை!

ஹேய் மதூ, என்று அவளை இறுகக் கட்டிக்கொண்டு, அவள் இதழ்களை சிறை செய்தான் கணவனாக!

மதுவுக்குள்ளும் ஒரே உணர்ச்சி பெருக்கம்!

காலையில் இருந்து கொஞ்சம் டென்சன், மகேஸ்வரியால் உண்டான மன வருத்தம், தன் கல்யாணத்திற்கு அவளின் பெற்றோர் இல்லாத துக்கம் உள்ளிட்ட பல கலவையான உணர்ச்சிகளில் இருந்த அவளுக்கு அவளின் நந்துவின் இந்த அணைப்பு, எல்லாவற்றையும் மறந்து ஒரு ஆனந்த உலகில் அடியெடுத்து வைத்து விட்ட உணர்வு!

பெருத்த நிம்மதி! ஆசுவாசம்! இன்னும் என்னவெல்லாமோ!

அவன் அவளை விடுவித்தான்!

“மது..”

“ம்ம்..”

“இத வச்சு என்னை உன் கண்ட்ரோல்ல எடுத்துட மாட்டியே!”

“எத வச்சு? என்ன கண்ட்ரோல்? அவளுக்கு முதலில் புரியவில்லை!”

“ம்ம்.. இத வச்சு தான்!” அவளை இன்னும் இறுக்கினான்!

சட்டென மது அவனை விட்டு விலகினாள்.

“என்ன சொன்னீங்க. கம் அகைன்.. என்ன சொன்னீங்க?”

“இத..  வச்சு..  என்னை உன் கன்ட்ரோல்ல எடுத்துட மாட்டியே?!”

“இத வச்சுன்னா, எத வச்சு?,,  நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”

“எத.. இந்த உடம்ப காட்டியா? செக்சை வச்சு உங்கள என் கன்ரோல்ல எடுக்க நினைக்காதேன்னு சொல்றீங்களா?”

“ம்ம்.” அவன் மெல்ல தலை ஆட்டினான்.

“என்னைப் பத்தி நீங்க அப்படி தான் நினச்சுட்டு இருந்தீங்களா டாக்டர்?”

“என்கிட்ட வேறே எந்த க்வாலிட்டியும் இல்லையா? சொல்லுங்க டாக்டர்!”

“ஏன் எல்லோரும் பொண்ணுங்கள இப்படி அந்த ஒரு ஆர்கனோடு மட்டும் ரிலேட் பண்ணி பார்க்குறீங்க? ஒரு டாக்டர் நீங்க. உங்ககிட்ட நான் இத எதிர்பார்க்கல இந்த மெண்டாலிட்டிய!”

மது முகத்தில் தாங்க மாட்டாத அதிர்ச்சி! வேதனை! வலி..

இதயத்தில் மறுபடியும் அடி வாங்கின வலி!

உதடுகள் துடி துடிக்க ரொம்ப கஷ்டப்பட்டு  அழுகையை அடக்கியதால் கோணலான உதடுகள்.

இமைகளைத் தாண்டி உடைத்துக்கொண்டு வெளியேற காத்திருந்த கண்ணீர்!

ஒவ்வொருவருக்கும் ஒரு இமொசன் பாயிண்ட் இருக்கும்! ரகுவுக்கு இந்த தனித்த அடையாளம் பற்றியது போல! மதுவுக்கும்.

அவளை திருடி என்று சொல்லிவிட்டால் கூட பொறுத்து போவாள், ஆனால் இப்படி அவள் நடத்தையை ஏதாவது சொல்லிவிட்டால் அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது!

ரகுவால் அவள் அழுவதைக்  காண முடியவில்லை!

ரகு ஒன்றும் பேசாமல் கொஞ்சம் மீண்டும் ஒரு தப்பு செய்து விட்ட உணர்வோடு மவுனமாகவே நின்றிருந்தான்!

மது கொஞ்சம் அவளைத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு,

“ப்ளீஸ் டாக்டர்! போதும்! இதுக்கு மேல என்னை ஒருத்தர் அவமானப் படுத்த முடியாது” என்று சொல்லி விட்டு மது அவனை விட்டு ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து, குளியலறையில் புகுந்து கொண்டாள்.

அங்கே போய் ஷவரின் அடியில் அப்படியே நின்றாள்!

கண்ணீர் வெள்ளம் பொங்கியது!

விக்கி விக்கி அழுதாள்!

மறுபடியும் ஒரு இடி! இந்த முறை கொஞ்சம் பலமாக!

முன்பு அவன் சொன்ன வார்த்தைகள், வெறும் மூன்றாம் மனுஷனாக அவன் சொன்னது.

ஆனால் இப்போது, உயிரில் கலந்து விட்ட உறவாக, அவனை எண்ணி, வாழத் தொடங்கியபின் வாங்கும் இடி!

அவளால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! சட்டென ரொம்ப  மேலேயிருந்து தொப்பென கீழே விழுந்து விட்டது போல் இருந்தது!

“உனக்கு வேணும்டி மது! உன் தகுதிக்கு மேலே ஆசைப்பட்ட இல்லே! அனுபவிடி! நல்லா அனுபவி! பட் பட்டேன்று தன் கன்னத்தில் தானே பலமாக அறைந்து கொண்டாள்!

நீ யாரு? கடவுள் உன்னை பண்ணின டிசைன் என்ன? இதுவரைக்கும் நீ கடந்து வந்த அனுபவம் எத்தனை! எத்தனை அடிகள்! அவமானங்கள்! ஏமாற்றங்கள்! துரோகங்கள்! இத்தனைப் பட்டும் திருந்தாத ஜென்மம் நீ! தூ.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

ஏற்கனவே அவன் உன்னை இந்த மாதிரி பேசியிருந்தும், நீ மறுபடி, இளித்துக்கொண்டு அவன் பின்னே போன இல்ல? அப்படி தான் நினைப்பான்!

அவனை அம்மா மாதிரி பார்த்துக்க  நினைச்சாளாம்!

பெரிய மதர் தெரசா பாரு இவ! இப்ப பாரு! வச்சான்ல நல்லா சூடு!

இனியாவது இந்த மாதிரி இமொசன்க்கு இடம் கொடுக்காதே! உன் ஷெல்லுக்குள்ள போய்டு மது!

அது தான் உனக்கு என்னிக்கும் ஸேப்! மறுபடி இப்படி அவமானப்பட்டு நிக்காதே! தாங்கிக்கிற சக்தி இனி உனக்கு இருக்காது!

போ.. அழாத.. போ, போய் கண்ணைத் துடைச்சுட்டு, பழைய மதுவா, எப்பவும் போல இரு!

உடனே எல்லாம் பெரிய முடிவு இப்ப எதுவும் எடுக்காத, உன் தம்பி, தங்கச்சிய யோசி, அமைதியா,, உன் ஷெல்லுக்குள்ள போய், இரு! எக்காரணம் கொண்டும் இனி இப்படி நெகிழ்ந்து போய்டாதே!”

அவள் கொஞ்சம் தெளிவானாள். உடம்பைத் துடைத்துக்கொண்டு, அங்கே ஏற்கனவே வைஷு வைத்து இருந்த நைட்டியை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

ரகு அப்படியே தான் இன்னும் நின்று கொண்டிருந்தான்.

“டாக்டர், இந்தாங்க, இந்த பாலைக் குடிங்க, எது நடந்தாலும், இப்படி புட் வேஸ்ட் பண்ணக் கூடாது. என் பாட்டி, பாதாம் பிஸ்தா எல்லாம் போட்டு காய்ச்சி கொடுத்தனுப்பியது!’

அவன் கையில் பால் டம்ளரைக் கொடுத்து விட்டு பேசினாள்.

“இத்தனை நாளில், நான் உங்கள இத காட்டி தான் கவர்ந்து இருக்கேன்னு நினைக்கும் போது, ரொம்ப அவமானமா இருக்கு டாக்டர்!’

“என்கிட்ட சொல்லிக்கிற மாதிரி, வேற எதுவுமே இல்லையா?

என் அறிவால், என் புத்திசாலித்தனத்தால், உங்கள கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணாதேன்னு கூட  சொல்லிருக்கலாம்,

என் பாசத்தைக் காட்டி உங்கள கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்றேன்னு சொல்லிருக்கலாம், இல்ல அட்லீஸ்ட் நல்ல சாப்பாடு போட்டு உங்கள கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்றேன்னாவது சொல்லியிருக்கலாம்!

ஆனா, இப்படி உடம்ப வச்சுதான் உங்கள கண்ட்ரோல் எடுக்க நினைக்கிறேன்னு சொன்னது, எனக்கு, என்னமோ என்னை நீங்க ஒரு செக்ஸ் ஒர்க்கர் மாதிரி பார்க்கிறாப்ல இருக்கு!

ஏன்னா அவங்க தானே அந்த ஆர்கன வச்சு பொழப்பு நடத்துவாங்க!

நான் அதுக்கெல்லாம் ஒர்த் இல்ல டாக்டர்!

எனக்கு இன்னும் ஒழுங்கா உங்கள கிஸ் பண்ணக் கூட தெரியல! அது உங்களுக்கே தெரியும்!

உங்களுக்கு தெரியுமா? நான் இந்த விசயத்துல கொஞ்சம் தத்தி! எனக்கு என் வயதையொத்த கேர்ள்ஸ் யாருமே பிரண்ட்ஸ் ஆ இல்லை! பேசி தெரிஞ்சுக்க கூட!

ஒண்ணு வயசுல பெரியவங்க, இல்லன்னா என் மேல மரியாதை வச்சுருக்க சின்னவங்க!

நான் உங்கள தான் பிரண்டா நினைச்சேன்,

உங்கள என் பிள்ளையா நினைச்சேன்!

ஏன் என் அம்மாவா கூட நினைச்சு தான், எனக்கு பீவர் வந்தப்போ, உங்கள தேடினேன்!

அடுத்தடுத்து என் உறவுகள, என் வீட்டு பெரியவங்கள இழந்த நான், சாஞ்சுக்க உங்க தோளைத் தேடினேன்!

இப்படி நீங்க தான் எனக்கு எல்லாமா தெரிஞ்சீங்க!

ஆனா நான் உங்களுக்கு ஒரே ஒரு மாதிரி தான் தெரிஞ்சுருக்கேன்!

நான் முத முத என் இடுப்பை பார்த்து தான் மயங்கினேன்னு நீங்க சொன்னப்பவே கொஞ்சம் சுதாரிச்சு இருக்கணும்!

லூஸ் மாதிரி, என்னை மாதிரி நீங்களும் என்னை மனசார காதிலிக்கிறீங்க, என்னை உங்க அம்மா மாதிரி பாக்குறீங்க எல்லாம் ஓவரா நினைச்சுட்டேன்!

அதுக்கு நல்லா செருப்படி கொடுத்தீங்க டாக்டர்!

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்!

ஆனா ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கங்க,  நீங்க நினைக்கிற மாதிரி, இந்த உடம்ப காட்டி, உங்கள கண்ட்ரோல் பண்ற அளவுக்கு நான் ஒர்த் இல்ல, டிரைன்டும் இல்ல, கெப்பாசிடியும் இல்ல! அதனால நீங்க பயப்பட வேண்டாம்!

இனி, நான் உங்க முன்னாடி, அதிகம் வந்து நிக்க கூட மாட்டேன்!

அப்படியே வந்தாலும் உங்கள சலனப் படுத்துற மாதிரி என் தோற்றமோ பேச்சோ இருக்காது! நீங்க ஸேப் தான்!

மத்தபடி, உங்களுக்கே எதாவது பிசிக்கல் நீட்ஸ் இருந்தா, நீங்க தாராளமா வேறே எங்காச்சும் safe ஆன இடத்துல பார்த்துக்கங்க!

நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!”

“ஏய்..மது, என்னடி இப்படியெல்லாம் பேசுற? நான் வேற ஒரு அர்த்ததுல சொல்ல ட்ரை பண்ணி, இப்ப அதுவே பெரிய செட்பேக் ஆகிடுச்சு!”

“இப்படி பேசாதே மது! நான் உன் செல்ல நந்து இல்ல! ப்ளீஸ்டி! நான் ஏன் இப்படி பேசினேன்னு எனக்கே தெரியலடி! அது உன்னை இவ்வளவு தூரம் ஹர்ட் பண்ணிடிச்சு!”

“இல்ல டாக்டர், நான் உங்கள அப்படி இனி அப்படி கூப்பிடவே மாட்டேன்! அது உங்க அம்மா கூப்பிற பேர்! அவங்க எங்க? நான் எங்க?

அந்த தகுதியெல்லாம் எனக்கு இருக்கானு தெரியல டாக்டர்! எனக்கே , இப்ப என்னைப் பார்த்தா மரியாதையா இல்ல!”

“ஒரு ஆள் மயக்கி மாதிரி தான் தெரியுது!”

“ப்ளீஸ் டாக்டர், என்னை விட்டுடுங்களேன்! நான் தான் உங்களுக்கு ப்ரீடமும் கொடுத்துட்டேனே?

இந்த தாலிய வச்சு எல்லாம் நான் உங்க கிட்ட எதையும் கிளைம் பண்ண மாட்டேன்!”

பேசி முடித்து விட்டு, அவள் ஒரு பெட் சீட்டை எடுத்து, கட்டிலை விட்டு ரொம்ப தூரம் தள்ளிப் போய், கிட்டத்தட்ட பாத்ரூம் வாசல் அருகே  விரித்துக் கொண்டு அமர்ந்து, அங்கே ஏற்கனவே கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த அவளின் பேகை திறந்து, அதில் இருந்த அவளின் போனையும் ஹெட் செட்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு, வீடியோ பார்க்க ஆரம்பித்து விட்டாள்!

ஒரு கையில் போன், மறு கையில் பால் டம்ளர்!

ரகு அப்படியே சிலையாக சில நிமிடங்கள் நின்றவன், அவனும் ஒரு டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு சென்றான்.

போகும் முன் அவள் அப்படி  என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாள், இந்த சூழ்நிலையிலும் என்று எட்டி அவள் போனை பார்த்தான்.

அதில் செந்தில் கழுத்தில் தூக்கு மாட்டிகொண்டு, கீழே டேப்பில் “ஹவா ஹவா” பாட்டு கேட்டுக் கொண்டிருக்க, வெளியே அவரைக் காப்பாற்ற முயன்ற கவுண்டமணியோ, செந்திலின் பாட்டியை திட்டிக் கொண்டிருக்கும் காட்சி!

நிஜமாவே இந்த மது ரொம்ப மெண்டலி ஸ்ட்ராங் ஆன ஆளு தான்!

இனி இவளை எப்படி சமாதானம் செய்வது!

ரொம்ப கஷ்டம்! அவனுள் வேதனை படர்ந்தது!

அவன் கண் முன் அவன் எதிர்காலம் கேள்விக் குறியாக!

கூடா நட்பு கேடாய் முடிந்ததா?

 இல்லை நல்ல நட்பு இனியும் வந்து காக்குமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!