Skip to content
Post Views: 5,719
“ஹலோ, நான் கிஷோர் பேசுறேன் ரகு, நீ எங்க இருக்க?” அந்த ராசிக்கல் கடைக்கார பிரன்ட் கிட்டயிருந்தும், அடுத்த போன் கால் ரகுவிற்கு!
“நான் வீட்டுல தான் இருக்கேன்! என்ன விசயம்? நீ எங்க இருக்க பார்த்தி எங்க?”
“நானும் அவனுக்கு கால் பண்ணினேன் அவன் எடுக்கலைன்னு தான் உனக்கு பண்ணினேன், உன்னோட ரிங் ரெடி ஆகிடுச்சுடா! அத சொல்ல தான் அவனுக்கு பண்ணிட்டு அவன் எடுக்கலைன்னு உனக்கு அடிச்சேன்!”
Advertisement
பார்த்தி அன்று ரகுவிற்கும் மதுவிற்கும் ஆர்டர் செய்த மோதிரம், குறித்த நேரத்தில் ரெடி ஆகவில்லை, இப்போது தான் ஆகியிருக்கிறது.
“ஓ! அப்படியா, எனக்கு நான் நம்ம பிரண்ட்ஸ்க்காக ரூம் புக் பண்ணியிருந்த ஹோட்டல்ல இருந்து போன் வந்தது.
இன்னும் நம் ப்ரண்ட்ஸ்ல யாரோ அங்க தான் இருக்காங்க, இன்னும் வெகேட் பண்ணலன்னு , பிரச்சினை பண்றாங்கன்னு, நான் அங்க தா போய்ட்டுருக்கேன், கொஞ்சம் நீயும் வர முடியுமா?”
Advertisement
“ஸுயூர் டா, எனக்கு அது பக்கம் தான், நீ வரதுக்கு முன்னாடியே நான் அங்க போய்டுவேன்! நீ வா!”
Advertisement
ரகு அங்கு சென்றபோது, அங்கு பார்த்தி தான் இத்தனை கலாட்டா செய்து கொண்டிருந்தான்!
நகரத்தின் பிரபல ஹாஸ்பிட்டல் ஓனர் புக் செய்தது என்பதால், கடந்த நான்கு நாட்களாக பார்த்தியை ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தனர் ஹோட்டல் ரிசப்சனில்!
அதன் ஜி எம்மும் லீவில் இருக்கவே, ரிசப்சனிஸ்ட் பையன் திணறினான்.
Advertisement
ரகு உள்ளே நுழையும் போது, கிஷோர் பார்த்தியை திட்டிக்கொண்டிருந்தான்.
“டேய் பார்த்தி, ஏண்டா, இப்படி லிமிட் இல்லாம குடிச்சுட்டு , கலாட்டா பண்ணிட்டுருக்க?”
பார்த்தி போதையில் குழறியபடி, “ஏய் கலாட்டா பண்றேன்னு வேணுமின்னா சொல்லு!
லிமிட் தெரியாம குடிச்சேன்னு மட்டும் சொல்லாத!
இந்த பார்த்திக்கு இந்த லிமிட், டோஸ் எல்லாம் கரெக்ட்டா தெரியும்!
ஒருத்தன் எந்த லிமிட்டுக்கு குடிக்கணும், ஒருத்தனுக்கு எந்த அளவுக்கு ஐஸ் வைக்கணும், கொம்பு சீவனும், ஏத்தி விடணும் எல்லாம், அய்யாவுக்கு தண்ணீர் பட்ட பாடு!”
“ஏண்டா இப்படி உளறிட்டு இருக்க?
ரகு கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாள் ஆச்சு, நீ இன்னுமிங்க என்ன பண்ணிட்டு இருக்க? வீட்டுக்கு போகாம? கிஷோர் கேட்டான்.
‘வீட்டுக்கா, போய் என்ன செய்ய? அதான் எல்லாம் கெட்டுப்போச்சே?
என் லைப்.. என்னோட கல்யாணம் எல்லாம்! இந்த ரகுவால, அந்த மதுவால!”
“ஹேய்.. ஹேய்.. உனக்கு தெரியுமா, இந்த ரகு பய இருக்கானே, அவன நான் கொம்பு சீவி விட்டு விட்டு, லாபம் பார்ப்பேன் சின்ன பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே!”
“ஆனா, அத கரெக்டா செய்யணும், கொஞ்சம் ஓவரா சீவிட்டோம்னா, அவன் உசாரா ஆகிடுவான்!
படிச்சுப்புட்டு அந்த ரகு வேணுமின்னா பெரிய டாக்டர் ஆகியிருக்கலாம்!
ஆனா இந்த டோசேஜ் கணக்கு எல்லாம் எனக்கு தான் பெர்பெக்டா தெரியும்!
நான் ஒரு படிக்காத டாக்டர்!
அப்பவே அவன் ஆத்தாக் காரியும் அப்புறம் அவன் கூடவே ஓட்டிட்டு இருப்பாளே..
யாரு.. ம்ம். அந்த வைஷு. அவளும் எவ்வளவோ ட்ரை பண்ணிருக்காங்க, என்னை அவன் கிட்டயிருந்து கழட்டி விட!
விட்டுருவேனா நான், இப்படி தான் அவன் ஈகோவை எங்கயாவது தூண்டி விட்டு தூண்டி விட்டு, நான் எனக்கு வேண்டியதை சாதிச்சுக்குவேன்! எப்படி… ? டோசெஜ்!
கரெக்ட்டான டோசெஜ்!
அவன்.. ஒரு.. ..ம்ம் எப்படி சொல்வாங்க.. ம்ம். தங்க முட்ட போடும் வாத்து!
அவன விடுவேனா நான்?
எப்படியோ அவன் மண்டையைக் கழுவி, அவன் ஹாஸ்பிட்டல் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்துட்டேன்!
அத காம்பிச்சு ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ண பேசி வச்சுருந்தேன்! கவர்மென்ட் ஹாஸ்பிடல் நர்ஸ்!
அப்படியே லைப்ல செட்டில் ஆக வேண்டியது!
அப்ப பார்த்து இந்த மது வந்தா! வந்து என் கேண்டீன் காண்ட்ராக்ட்ட புடுங்கிட்டா!
நான் ரகுகிட்ட பேசி, திரும்பவும் அவன குழப்பிவிட்டு ஈகோவை தூண்டி விட்டு, மறுபடியும் அத வாங்கிடலாம்னு போனா, இந்த ரகு பய என்னடான்னா, அவளை அந்த பார்வை பாக்குறான்!
போ! அப்படியே ஜெமினி கணேசன் தோத்தார் போ!
எனக்கு அப்படியே பக்குன்னு ஆய்டுச்சு!
அவளை பத்தி விசாரிச்சேன்! பெரிய கவரி மான் பரம்பரைன்னு சொன்னாங்க!
அத யூஸ் பண்ணிட்டு, அவளை இவன விட்டே அசிங்கமா திட்ட வச்சுட்டு, நான் நிம்மதியா தாய்லாந்து போனேண்டா!
வந்து பார்த்தா, இந்த வைஷு சனியன், என்ன பண்ணுச்சோ, ஏது பண்ணுச்சோ தெரியல, ரகு பயலுக்கும் அந்த மதுவுக்கும் கல்யாணம்றாங்க!
நான் ரொம்ப ஷாக்காகிட்டேன்! என்னோட ப்ளான் எல்லாம் போச்சு! என் லைப் செட்டில் ஆக இருந்த வழியெல்லாம், அடைஞ்சுபோச்சு!
பார்த்தேன், இனிமே நம்மால ஒண்ணும் செய்ய முடியாது, ஆனா போற போக்குல ஒருவாட்டி இந்த ரகு பயலுக்கு கொம்பு சீவி விட்டு போலாம்னு, ஒரு ட்ரை பண்ணிட்டு தாண்டா வந்துருக்கேன்!
என் ப்ளான் படி இந்த ரகு நடந்து இருந்தா, அவனுக்கு இந்நேரம் பர்ஸ்ட் நைட் கூட நடந்துருக்காது! எப்படி நம் ஐடியா!
பேச்சு உளறினாலும், ரொம்ப தெளிவாக வாக்குமூலம் அளித்து விட்டான் பார்த்தி!
கிஷோரின் பின்னால் ரகு இருப்பதைப் பார்க்காது!
“சகிக்கல!” வெறுப்புடன் சொன்னான் கிஷோர்!
“ஏண்டா அதுக்கு தான் என்னை அன்னிக்கு முழுசா சொல்ல விடாம தடுத்தியா?”
“.. ம்ம்.. ஹே ஹே “ இளித்துக்கொண்டு தலையசைத்தான் பார்த்தி!
“அது தான் சரியான டோஸ்! அதுக்கப்புறம் நீ இன்னும் நெகடிவா மதுவோட ராசிப் பத்தி எதாச்சும் சொல்லியிருந்தா, அவன் சுத்தமா எல்லாத்தையும் விட்டுட்டு நகர்ந்துருப்பான்!”
“நான் எங்கடா நெகடிவா சொல்ல வந்தேன்! அந்த ராசி பொண்ணுங்க புருஷன் மேல உயிரா இருப்பாங்க, அவங்களுக்காக எதையும் செய்வாங்கன்னு தாண்டா சொல்ல வந்தேன்!”
“நல்லதா போச்சு, நீ சொல்லாதது!” பார்த்தி சந்தோசப்பட்டான்!
அதற்குள் அங்கே போலீஸ் வந்து விட்டது!
பார்த்தி அங்கே ஒரு ரூம் பாயின் மண்டையை பாட்டில் கொண்டு அடித்து விட்டதால், ரிசப்சனிஸ்ட் பையன் போலிசை அழைத்து விட்டான்!
“அய்யோ இது வேறயா?”, ஏற்கனவே கடும் அதிர்ச்சியில் இருந்த ரகு, இன்னும் அதிர்ச்சியானான்!
“ஏய். யாருப்பா,அதுக்குள்ள போலீஸ்க்கு போன் போட சொன்னது?” ராஜுவின் அப்பா தேவேந்திரனின் குரல் கேட்டு நிம்ர்ந்தான் ரகு!
“இவர் எங்கே வந்தார்?”
அவருக்கு போன் போட்டதே அவன் தான்! அவனுக்கே தெரியாமல்!
ஹோட்டலில் பிரச்சினை என்று போன் வந்தவுடன், ரகுவிற்கு ராஜுவும் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
ஆனால் அவன் பதட்டத்தில் ராஜுவிற்கு பதில் ராஜுஸ் பாதர் நம்பருக்கு அடித்து விட்டான்!
போனில், அவர் குரலை கூட கவனிக்காமல் ராஜு, ஹோட்டல் பேரை சொல்லி,
“அங்கே என் பிரண்ட்ஸ்க்கு ஏதோ பிரச்சினை, நீ கொஞ்சம் அங்கே வர முடியுமா” என்று சொல்லி கட் செய்து விட்டான்.
அய்யோ, இவரும் பார்த்தி சொல்வதையெல்லாம் கேட்டுட்டு தான் இருந்தாரா?
அவன் தலையில் கை வைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து விட்டான்!
அவர் அவனிடம் ஒன்றும் பேசாது, அதற்குள் அங்கு பதறிக் கொண்டு வந்துவிட்ட ஜி எம்மை பார்த்து, “ஏன்ப்பா அதுக்குள்ள போலிசை கூப்பிட்டீங்க?”
“என் மாப்பிள்ளை பேரில் தானே புக் செய்துருக்கு, என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா?”
“அதில்ல சார், நான் அப்போ இங்க இல்ல, ரிசப்ன்சன் பையன் புதுசு, ரத்த காயம் பார்த்தும் பயந்துட்டு போலிசை கூப்பிட்டு விட்டான், நீங்க போங்க சார், நான் கிளியர் பண்ணிடுறேன்!”
தேவேந்திரன் அங்கே வந்த எஸ் ஐ பார்த்து, “எப் ஐ ஆர் எல்லாம் போடாதீங்க, சும்மா அந்த பார்த்திய வார்ன் பண்ணி, இனி என் மாப்பிள்ள இருக்க திசை பக்கம் கூட வரக் கூடாதுன்னு எழுதி வாங்கிட்டு அனுப்புங்க!
அப்படி வந்தா இருக்கிற பெண்டிங் கேஸ் எல்லாத்தையும் அவன் மேல போட்டுடுவோம்னு சொல்லி அனுப்புங்க”
எஸ் ஐயிடம் பேசி விட்டு ரகுவிடம் வந்து, “மாப்பிள்ள வாங்க நாம் கொஞ்சம் தூரம் டிரைவ் போயிட்டு வரலாம். நான் என் வண்டிய வீட்டுக்கு அனுப்பிட்டேன்.
வண்டிய எடுங்க நான் உங்க கிட்ட பேசணும்!”
அவர்கள் கிஷோரிடம் சொல்லிவிட்டு வண்டியில் சென்னை பைபாஸில் ஒரு லாங் டிரைவ் போனார்கள்.
நெடுஞ்சாலையில் கொஞ்ச தூரம் சென்றவுடன் , ஒரு மரத்தினடியில் காரை நிறுத்த சொல்லி இறங்கினார் தேவேந்திரன்.
ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்.
அவனிடம் வேண்டுமா என்று கேட்க,
“பழக்கமில்லை” என்றான் ரகுவும்.
“எனக்கு இத மட்டும் இன்னும் விட முடியல மாப்பிள்ள! இத மட்டும்னா, வேற எந்த கெட்ட பழக்கம் இருந்ததுன்னு கேக்கிறீங்களா?”
“எல்லாம் உண்டு! தண்ணி, பொண்ணு இப்படி எல்லாம்! ஆச்சரியமா இருக்கா? வீட்டுல இப்ப சொர்ணம் சொன்ன சொல்லுக்கு இப்படி ஆடுறவன், இப்படி சொல்றானேன்னு பாக்குறீங்களா?”
“நான் முன்னாடி இப்படி இல்லைப்பா, ஆடாத ஆட்டம் ஆடியிருக்கேன் வயசுல!”
“ஆனா அத்தனையையும் பொறுத்து, என் மேல அன்பா இருந்தவ என் பொண்டாட்டி!”
“நான் அவளுக்கு அத்தனை மனக் கஷ்டங்கள கொடுத்தும் கூட அவ என்னை வெறுக்கவே இல்லை! என்னோட கஷ்டக் காலத்துல துணையா இருந்தா!”
“ஒரு காலக்கட்டத்தில், எனக்கு அடுத்தடுத்து போதாத காலமா இருந்தது. எனக்கும் ஒரு பொண்ணு இருந்தா. அவ பேரும் மது தான்! மதுரா!
அவ கேன்சர்ல இறந்துட்டா! அந்த இடியில் நான் இருந்தப்போ, என் அரசியல் வாழ்க்கையும் அந்த நேரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. நான் துக்கத்தில் வீட்டிலேயே இருந்த சமயம், என் அரசியல் எதிரிகள் அதை பயன்படுத்திக் கொண்டார்கள்! பத்தாதற்கு மர்டர் அட்டெம்ப்ட் கூட பண்ணினார்கள்! ஆனால் நான் தப்பித்து விட்டேன். கையில் மட்டும் சரியான அடி! இடது கையில்!
சொர்ணம் தான் என்னை தாங்கிக் கொண்டாள்!
கூட இருந்த பயல்கள் எல்லாம் காக்கா கூட்டமாய் பறந்து போய் விட்டார்கள்!
அந்த ஆறு மாதத்தில் தான் நான் என் சொர்ணத்தின் அருமையைப் புரிந்து கொண்டேன்!
ஒரு படத்தில, சரத்குமார்னு நினைக்கிறேன், அவர், ஒருத்தன் பொண்டாட்டியை கொடுமை படுத்துறதை பார்த்துட்டு, அவன் இடது கையை உடைத்து விட்டு சொல்லுவார் “வலது கைய உடைக்காம ஏன் இடது கைய உடைச்சேன் தெரியுமா, வலது கை இல்லன்னா சோத்தை உன் அம்மா கூட ஊட்டி விடுவா, ஆனா கழுவி விட உன் பொண்டாட்டியால் மட்டுமே முடியும், உன் அம்மாவால கூட முடியாது! அதான் உன் இடது கையை உடைச்சென்னு சொல்லுவாரு! அது நிஜம் தான் தம்பி!
ஒரு பொண்டாட்டியால் அம்மா இடத்த நிரப்ப முடியும், பொண்டாட்டி இடத்த யாராலையும் நிரப்ப முடியாதுப்பா!
இத நானே அப்ப தான் உணர்ந்தேன். அதுல இருந்து, எனக்கு எல்லாமே அவள் தான்!
என்னைப் பொருத்த வர, எந்த காலத்துலயும் நம்ம பொண்ணுங்களுக்கு புருஷன் தான் முதலில்!
அவ படிச்ச பொண்ணா, படிக்காத பொண்ணா, பட்டணத்து பொண்ணா, இல்ல கிராமத்து பொண்ணான்றது இங்க முக்கியம் இல்ல, கிட்டத்தட்ட எல்லோருக்குமே அவ அவ புருஷனுக்கு தான் அவ மனசுல முதலிடம்! இதில விதி விலக்குகள் இருக்கலாம்!
பொண்டாட்டிங்கறவ யாரு தம்பி! நம்மில் பாதி!
அதுல எந்த பாதி ஆண்டா என்ன? எந்த பாதி அடங்குனா என்ன? ரெண்டும் ஒண்ணு தானேப்பா?
இதுல எதுக்கு வெட்டி ஈகோ!
நம்ம மேல நம்மள விட அன்பாய், அக்கறையாய் இருக்கிறவ கிட்ட சரண்டர் ஆறது ஒண்ணும் தப்பே இல்லை!
வெளில பொண்டாட்டி தாசன் மாதிரி தெரியறவன், உள்ளுக்குள்ள அவன் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சு அவ கிட்ட சரண்டர் ஆனவனா இருப்பான்!
அதுனால மாப்பிள்ளை, இந்த பார்த்தி சொன்னத எல்லாம் பாக்கும்போது, மது உங்கள ஆதிக்கம் செலுத்துவான்ற மாதிரி நீங்க நினைக்கிறீங்கன்னு தெரியுது!
அப்படி நினைச்சு நீங்களும் அந்த பொண்ண கஷ்டபடுத்திடாதீங்க!
அவ பாவம்! ஏற்கனவே ரொம்ப கஷ்டப் பட்டுட்ட பொண்ணு! நீங்க தான் அவளுக்கு ஆதரவா இருக்கணும்! அன்பா இருக்கணும்! நான் இத உங்க கிட்ட முதல்லையே கூட சொல்லியிருக்கேன்.
இன்னிக்கு இந்த பார்த்தி, நாளைக்கே கூட ஒரு கார்த்தி வரலாம்! அப்படி வந்தாலும் நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும்!
மது ரொம்ப அன்பான பொண்ணுப்பா, ஆள நினைக்கிற பொண்ணு இல்லை! நீங்க அத உணரனும்!
யோசிங்க.. அனுபவப்பட்டவன்ற முறையிலே சொல்றேன்!
நம்மள உயிரா நினைக்கிற பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆறது தப்பேயில்லை!
வண்டிய அப்படியே என் வீட்டுக்கு விடுங்க, வந்து காபி சாப்ட்டுட்டு போங்க. அந்த பார்த்தி இனி உங்க லைப்ல வராம நான் பார்த்துக்கிறேன்!”
ராஜுவின் வீட்டில் அவன் அம்மா சொர்ணம் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்!
டிவியில் சிவகுமார் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது!
அதே பாட்டு!
அன்று மது பாடின அதே பாட்டு!
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்! பாட்டு.
மங்கள் நாண் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக..
உந்தன் வாழ்வின் தீபம் நானாக..
…………….
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்.. என்றெல்லாம் பாடி அவனை கண்ணீரோடு கட்டிக்கொண்ட மது அவன் நினைவுக்கு வந்தாள்!
எவ்வளவு அன்பு, காதல், கனவுகள், எதிர்பார்ப்போடு இருந்த அவளை தான் எவ்வளவு காயப்படுத்தி இருக்கோம்னு அவனுக்கு இப்ப தான் உறைத்தது!
மேலும் அவளை காயப்படுத்திவிட்ட எண்ணம் கூட இல்லாமல் அவளை தொடர்ந்து ரொம்ப ஈசியா நினைச்சு வம்பு வேறு செய்து இருப்பதை நினைத்து, அவனுக்கு தன் மேலேயே மிகுந்த கோபம் ஏற்பட்டது!
அவன் காபி குடித்து விட்டு ராஜுவின் அம்மா அப்பாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
அவன் வீட்டில் மது, தலையில் வைத்து இருந்த ஜாதிப் பூவைக் கூட எடுத்துப் போட்டு விட்டு, நகையெல்லாம் கழற்றி வைத்து விட்டு, ரொம்ப சிம்பிளாக நெற்றியில் பொட்டு, வகிட்டில் குங்குமம் மட்டுமே அலங்காரம்!
நைட்டியை போட்டுக்கொண்டு அதன் மேல் ஷாலும் போட்டுக் கொண்டு, போர்வையையும் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தாள் கீழே தனியே மூலையில்!
தான் எந்த வகையிலும் அவனை டெம்ப்ட் செய்து விட்டதாக அவன் நினைத்து விடக் கூடாது என்று இத்தனை ஏற்பாடுகள்!
ரகுவிற்கு அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று புரியவே செய்தது!
மனதுள் ஒரு வலி! அவளுக்கு வலி ஏற்படுத்திவிட்டதால் ஏற்பட்ட வலி!
மது.. அவளை எழுப்பினான்!
“ம்ம்” என்றபடியே அவள் எழுந்து வந்தாள்.
‘சாரி மது.. வெரி சாரி… நான் சொல்றத கொஞ்சம்.. ” அவன் கிட்டே வந்தான்.
அவள் அவன் பேச்சை தடுத்தாள்!
“இப்ப என்ன உங்களுக்கு! என்னை கிஸ் பண்ணனுமா? இந்தா பண்ணிக்கோங்க!
இதுக்கு முன்னாடியெல்லாம் நீங்க சாரி கேட்டுகிட்டு என்கிட்ட வந்தால் அது தானே அர்த்தம்!
இனி இந்த டயலாக் எல்லாம் வேணாம்! ஸ்ட்ரெய்ட்டாவே கேளுங்க! வீணா இப்படி டயலாக் சொல்லி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம்!
அப்ப எல்லாம் நான் நீங்க என்னை லவ் பண்றதா நினச்சிட்டு இருந்தேன்! அதனால உங்களுக்கும் அது மாதிரி எல்லாம் சொல்ல வேண்டியிருந்தது!
இப்ப அதெல்லாம் தேவையே இல்ல! நான் உங்க ஒர்க்கர், நீங்க சொன்னா செய்துட்டு போறேன்! ம்ம்..” முகத்தை நெருங்கி வந்தாள்!
ரகு அவளை வேதனையுடன் பார்த்தான்!
“கொட்டு மது! எத்தனை தடவ வேணுமின்னாலும் கொட்டு! திட்டு! திட்டிட்டே இரு! என்னால் உனக்கு ஏற்பட்ட மனக்காயம் ஆறும்வர திட்டு!
நான் வாங்கிட்டே இருப்பேன்! என் மது தானே திட்டுற! என் உயிர் தானே நீ ! என் பெட்டெர் ஹாப் தானே நீ!
நீ திட்டுவது, என்னை நானே திட்டுவது போல தான்!
எனக்கு உறைக்கவே உறைக்காது! எனக்கு உன் கிட்ட மானம் ரோசம், எல்லாம் இல்லவே இல்லடி மது!
ஈகோ.. அது இல்லவே இல்லை மது!
அத நீ சீக்கிரம் புரிஞ்சுப்ப! நான் வெயிட் பண்றேன் மது!
ஐ லவ் யூ மது! “
மது புரிஞ்சுப்பாளா? அவள் மனம் கூட்டை விட்டு வெளியே வருமா?
error: Content is protected !!