Skip to content
Post Views: 4,910

அர்ஜுனன் வீட்டில் இருந்து புறப்படும் முன்னே தன் மனைவி கண்மணிக்கு சுபா வரக்கூடிய விஷயத்தை கூறி இருந்தான் முகுந்தன் … அவளும் தன் பெற்றவர்களை எழுப்பி விஷயத்தை கூறிவிட்டு அவளுக்கு சமைக்க உள்ளே சென்றாள்… மழையில் நனைத்ததால் சூடாக சாப்பிட ஏதுவாக சமைக்க சென்றுவிட்டாள்… அவளிற்கு உதவியாக அவளின் அம்மா செண்பகமும் சென்றார்…
வெளியே கேட்ட பேச்சு குரலில் சுப்ரியாவும்(முகுந்தன் தங்கை) மருதாயி பாட்டியும் அறையில் இருந்து வெளியே வந்து என்னவென்று விசாரித்தனர்… மாரியப்பன் அவர்களுக்கு விஷயத்தை கூறி இருந்தார்….
சுப்ரியா மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டாள் அங்கு முகுந்தன் கண்மணியின் மூன்று வயது மகன் ஆகாஷ் தூங்கி கொண்டு இருந்தான்… அவனை காண அறைக்கு சென்றுவிட்டாள்….
ஐந்து நிமிடத்தில் முகுந்தனின் கார் வீட்டு வாசலில் நின்றது… முதலில் முகுந்தன் இறங்கினான்… அதன்பின் கைத்தாங்களாக சுபாவை இறக்கி வீட்டினுள் அழைத்து வந்தான்..
மழையில் நனைந்ததை வீட்டில் கூறியதால் மருதாயி அந்த இரவிலும் அவளுக்காக சாம்பிராணி புகை தயார் செய்து வைத்து இருந்தார்… அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை… வந்தவளை உட்கார வைத்து பாட்டி செய்த முதல் வேலை அவளுக்கு சாம்பிராணி போட்டது தான்….
அவளின் தலை காய்ந்த பின் அவளுக்காக சூடாக எண்ணெய் விடாமல் தோசையும் அந்த நேரத்தில் சட்டென்று ஒரு சாம்பாரும் வைத்து கொண்டு வந்தார் செண்பகம் அம்மா… கண்மணியும் அவளுக்கு குங்கும பூ போட்டு பாலை சுண்ட காய்ச்சி எடுத்து வந்தாள்…
சாப்பிட மாட்டேன் என கூறிய சுபாவை வற்புறுத்தி செண்பகம் அம்மா ஊட்டிவிட்டார்… பின் அவளை சிறிதுநேரம் நடக்க வைத்துவிட்டு பாலை குடுத்தாள் கண்மணி…
அவள் குடித்தவுடன் அவளை மெதுவாக அறைக்குள் அழைத்து சென்றாள்… அவளை படுக்கவைத்து கனமான போர்வையை போத்திவிட்டு அவள் தூங்கும் வரை அங்கேயே அமர்ந்து இருந்தாள்… சுபாவின் சீரான மூச்சினை பார்த்து அவள் உறங்கிவிட்டாள் என தெரிந்து கொண்டு வெளியே வந்தாள்…
அவள் வந்தவுடன் அங்கு வீட்டில் நடந்த அனைத்து விஷயத்தையும் கூறிவிட்டு அவளிடம் எதுவும் கேட்கவேண்டாம் என கூறினான்.. பின் கண்மணியிடம் இன்று அவளுடன் தூங்கு என்று கூறிவிட்டு ஆகாஷுடன் சென்று உறங்கிவிட்டான்….
மற்றவர்களும் உறங்க சென்றுவிட்டனர்.. கண்மணி சுபாவுக்கு எதுவும் காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்த்துவிட்டு தூங்க ஆரம்பித்தாள்….
இங்கு அர்ஜுனன் வீட்டில் அர்ஜுனன் மேலே மொட்டை மாடியில் மண்டியிட்டு எங்கேயோ வெறித்தவாறு அமர்ந்து இருந்தான்…
அனைவரும் மீண்டும் மேலே வந்து அவனை நோக்கி சென்றனர்… வாணன் சென்று அவன் முன் மண்டியிட்டு ” பாப்பா இப்ப கோவத்துல போய் இருக்கா அர்ஜுன்… கோவம் கம்மியான பின்னாடி வந்துடுவா… அவளால உன்ன விட்டு இருக்க முடியாது அர்ஜுன்… போ ரூம்க்கு போய் குளிச்சிட்டு தூங்கு காலைல பேசிக்கலாம்” என்று கூறி அனுப்பி வைத்தான்….
அர்ஜுனனும் எந்த பேச்சும் இல்லாமல் பொம்மை போல் சென்று அறைக்குள் அடைந்தான்…. நேராக அவன் சென்றது சுபாவின் போட்டோக்கள் இருந்த அறைக்கு தான்… செல்லும் முன் அவளின் சேலையை எடுத்து தன்னுடன் போர்த்தி கொண்டு அவளின் புகைப்படத்தை பார்த்தவாறே அமர்ந்து விட்டான்… கண்களில் இருந்து கண்ணீர் வலிந்து ஓடியது…..
அவனேயே அறியாமல் விடியும் பொழுது தான் கண் அயர்ந்தான்…
அனைவரையும் பதற வைக்கவே அன்றைய நாள் விடிந்தது.. யாரும் தூங்கவில்லை…. வயலை பார்க்க கர்ணனுடன் சசியும் சென்றுவிட்டான்… அங்கு மெய்யனூரில் போட்டதை போட்ட படி வந்ததால் வர்ணன் மட்டும் அங்கு சென்றான்..
ராஜம்மாவும் அவரின் கணவன் கருப்பையாவும் (வேலையாட்கள்) பழனிக்கு சென்று இருந்தனர்… அதனால் அங்கு பட்டு பாட்டிக்கு யாரும் சொல்லவில்லை…
முகுந்தன் வீட்டில் தூங்கி எழுந்த சுபா வெளியில் கிடந்த தாலியை பார்த்தவாறு தங்களுடைய கல்யாணத்தை பற்றி யோசித்தாள்.. கண்மணி வெளியில் சென்றதால் அவள் மட்டும் தான் இருந்தாள்…..
ஒரு மணிநேரம் தான் அர்ஜுனன் தூங்கி இருப்பான் மீண்டும் விழிப்பு தட்டியது அவனுக்கு…. நடந்த அனைத்தையும் யோசித்துவிட்டு மீண்டும் தளர்வாக அமர்ந்து அங்கு மாட்டப்பட்டு இருந்த சுபாவின் புகைபடங்களை பார்த்து கொண்டு இருந்தான்…
அப்போது தான் அவனுக்கு ஒரு புகைப்படம் கண்ணில் சிக்கியது… அதில் அவர்கள் திருமணத்தில் முகுர்த்தம் முடிந்து போட்டோ எடுத்தபோது திருமண உடையிலேயே பரதநாட்டிய முத்திரைகளையும் அவளின் முகத்தில் அபிநயங்களை காட்டியும் நிறைய புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது….
அப்போது அர்ஜுனன் இருந்த மனநிலையில் ரசிக்கவில்லை…. அதன்பின்னான நாட்களில் தான் அந்த புகைப்படத்தை ரசித்து பார்த்தான்…
தற்போது அவனுக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து அவனும் கல்யாணத்தை பத்தி யோசித்து பார்த்தான்… இருவரும் ஒரே நேர்கோட்டில் தங்கள் கல்யாணம் எவ்வாறு நடந்தது என்பதை யோசித்து கொண்டு இருந்தனர்….
சுபாவிற்கு இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் சென்று இருந்தது… தலையில் போடப்பட்டு இருந்த கட்டினை நீக்கி இருந்தனர்… ஆனால் கையில் எலும்புகள் இன்னும் சேரவில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்….
Advertisement
ஒரு வருடம் நடந்தது மறந்துவிட்ட காரணத்தினால் அவளிடம் எதுவும் தோன்றி துருவி எதுவும் கூறவில்லை… வீட்டில் கீழே விழுந்த காரணத்தினால் தலையில் அடிபட்டுவிட்டது என்று மட்டும் கூறிவிட்டனர்…
இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி அவளிடம் கூறவே இல்லை… சொன்னால் இதயம் யாருடையது என்று கேள்வி வரும்.. இன்னும் பிரச்சனை தான் என கூறாமல் விட்டுவிட்டனர்…
இரண்டு மாதங்கள் சென்று இருந்தது… வருணனும் ஜனனியும் காதலித்து கொண்டு இருந்தனர்… அவர்களின் காதல் இருவருடைய வீட்டிலும் தெரியும்….
Advertisement
அன்று ஜனனியின் பெற்றோர் சுபாவின் வீட்டிற்கு வந்து இருந்தனர்… அவர்கள் தயக்கத்துடனே பேச ஆரம்பித்தார்கள்… அவர்கள் வந்த போது மருதாயி பாட்டியின் குடும்பமும் அங்கே தான் இருந்தது….
Advertisement
மாரியப்பன் தான் அவர்களின் தயக்கத்தை பார்த்து “சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க… எங்க தயக்கம் இங்க போய்… சொல்லுங்க” என்று கூறினார்…
ஜனனியின் அப்பாவோ “என்னடா இப்படி கேட்குறாரேனு தப்பா நினைக்க கூடாது… பாப்பாவுக்கு இன்னும் மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லிட்டாங்க…. இல்லனா கல்யாணம் நடக்க ஏழு வருஷம் ஆகிடுமாம்… பாப்பாகிட்ட சொன்னா சுபா பாப்பாவுக்கு கல்யாணம் நடந்தா தான் அவளும் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டா.. என்ன பண்றதுனு தெரியல அதுதான் இங்க வந்தேன்” என்று கூறினார்…..
அந்த இடத்தில வாணன் நந்தினி மருதாயி பாட்டி மாரியப்பன் சென்பகம் அம்மா மட்டும் இருந்தனர்… மற்றவர்கள் எல்லாம் முதல் மாடியில் இருந்த சுபாவின் அறையில் இருந்தனர்…. அதனால் அவர்களுக்கு ஜனனியின் பெற்றோர் வந்தது தெரியவில்லை…
Advertisement
கீழே இருப்பவர்கள் அடுத்து என்ன என்ற யோசனையில் ஆழ்ந்தனர்…. சுபாவிற்கு கல்யாணம் என்றால் அர்ஜுனனிற்கும் தானே… அர்ஜுனன் எப்படி சம்மதிப்பான் என்று யோசனை அனைவருக்கும் இருந்தது… அதன் பொருட்டே ஜனனியின் பெற்றோருக்கு இவ்வளவு தயக்கம்…
அர்ஜுனன் இன்னும் யாரிடமும் அதிகம் பேசாமல் வயல்கள், ஆலைகள் என தான் சுற்றிக்கொண்டு இருந்தான்… அவனிடம் பேசினால் அதற்கு மட்டும் தான் பதில் தருவான்… அவனுடன் யார் பேசுவது என்றே பெரிய கேள்விக்குறி…?!?!?
அப்போது தான் தேவியின் பெற்றோர் இருவரும் வந்து இருந்தனர்… விஷயத்தை தெரிந்து கொண்டு அர்ஜுனனிடம் தாங்கள் பேசுவதாய் கூறிவிட்டனர்….
மேலிருந்தவர்களிடம் எதுவும் கூறவில்லை.. அர்ஜுனன் சம்மதித்த பிறகு கூறிவிடலாம் என்று முடிவு எடுத்தனர்.. அவர்கள் மறுத்தும் தேவியின் அப்பா கேட்பதாய் இல்லை… எனவே அவர் கூறியதற்கு சரி என கூறிவிட்டனர் அனைவரும்….
அடுத்த நாளே தேவியின் அப்பா அர்ஜுனனை வீட்டிற்கு வர கூறி இருந்தார்.. அவனும் யோசனையுடனே அங்கு வீட்டிற்கு சென்றான்… வந்தவனை வரவேற்றுவிட்டு பட்டென்று விஷயத்தை கூறிவிட்டார் தேவியின் அப்பா….
அவன் அதிர்ந்து நின்றுவிட்டான்… “அங்கிள் என்ன சொல்றிங்க…??? “
“நீங்க சுபா பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றேன்… உங்கள கட்டாயப்படுத்தல… யோசிங்க… உங்க ரெண்டு பேர் கல்யாணம் நடந்தா தான் வர்ணன் தம்பியும் ஜனனி பாப்பாவும் கல்யாணம் பணிப்பேன்னு சொல்றாங்க… எப்போ ஆனாலும் நீங்க கல்யாணம் பண்ணி தான் ஆகணும்… அத கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்கன்னு தான் சொல்றோம்… அங்க வீட்டுல எல்லாருமே உங்க கிட்ட பேச வேண்டாம்னு தான் சொன்னாங்க.. ஆனா நான் தான் அவங்க பேச்சை கேட்காம உங்ககிட்ட பேசுறேன்” என்று கூறினார்
அவன் எதுவும் கூறவில்லை… வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்… அவன் முதலில் சென்றது அலுவலக அறையில் இருந்த சின்ன அறைக்கு தான்…
அதில் அவள் வாங்கி தந்த அனைத்து பொருட்களும் அந்த அறையில் தான் வைத்து இருந்தான்… முதலில் அதை எல்லாம் ஒரு மூட்டையில் போட்டு கட்டி வைத்தான்…. அதை அங்கேயே வைத்துவிட்டு அந்த அறையை பூட்டிவிட்டு தோட்டத்து வீட்டுக்கு சென்றுவிட்டான்… தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டான்…..
ஒருவாரம் அவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை… நன்றாக யோசித்தான்… அவன் சுபாவை திருமணம் செய்தால் அவளை சந்தோசமாக பார்த்துக்கொள்ள முடியுமா… தேவியின் நியபாகத்தால அவளை காயப்படுத்தி விடுவேனா.. என்று எல்லா பக்கமும் யோசித்தான்….
ஒருவாரத்தில் நல்ல முடிவை எடுத்துவிட்டு சுபா வீட்டிற்கு சென்றான்.. அங்கு அவன் முதலில் கண்டது அங்கு அமர்ந்து சிவனேஸை பார்த்து கொண்டு இருந்த சுபாவை தான்…
அவனை கண்டதும் அவளின் கண்ணில் கண்ட காதலை பார்த்து இத்தனை நாள் இவளின் காதலை எவ்வாறு நான் கவனிக்காமல் விட்டேன் என தன்னையே நொந்துகொண்டான்…
அவள் அவனை வரவேற்று விட்டு வீட்டில் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர் என்று கூறினாள்…
சரி என கூறிவிட்டு அவர்களிடம் எங்கே இருக்கின்றனர் கேட்டு அங்கு சென்றுவிட்டான் சுபாவிடம் இருந்து விடைபெற்று கொண்டு….
அங்கு மூவரையும் அழைத்து கொண்டு மருதாயி பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டான்.. ஜனனியும் அவளின் பெற்றோரையும் அங்கு வர சொல்லிவிட்டான்…
அங்கு அனைவரிடமும் தன் முடிவை கூறிவிட்டு வர்ணன் ஜனனி இருவரிடமும் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடக்கும்…. முதலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் அடுத்து நாங்கள் செய்துகொள்கிறோம் என கூறிவிட்டான்…
முதலில் மறுத்தவர்கள் பின் அர்ஜுனன் வற்புறுத்தலில் திருமணத்திற்கு சம்மதம் கூறினர்..
அதன்பிறகு திருமண வேலை ஜோராய் நடைபெற்றது அன்றிலிருந்து அடுத்த மாதத்தில் திருமணம் குறிக்கப்பட்டது…
ஒரு மாதம் காற்றாய் சென்று வர்ணன் ஜனனி திருமணமும் எந்த குறையும் இல்லாமல் கோலாகலமாக நடைபெற்றது…
அவர்கள் திருமணமும் முடிந்து ஐந்து மாதம் ஆகி இருந்தது… அர்ஜுனன் அந்த ஐந்து மாதத்தில் இன்னும் தெளிந்து இருந்தான்… அவன் மனதில் ஓரத்தில் தேவி இருந்தாலும் சுபத்திரா இந்த ஐந்து மாதத்தில் அவன் மனதில் இடம்பெற்று இருந்தாள்…
அவர்களின் திருமணத்தையும் அடுத்த மாதம் வீட்டினர் குறித்து இருந்தனர்… சுபாவிற்கு அளவுகடந்த சந்தோஷம்… அர்ஜுனனும் முழு மனதுடன் சம்மதம் கூறி இருந்தான்…
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன் தேவியின் பரிசுகள் இருந்த மூட்டையை சென்று எங்கேயோ வீசிவிட்டு வந்து இருந்தான்….
அந்த அறையில் தான் சுபாவின் ரிப்போர்ட் இருந்தது… அதனால் தான் கல்யாணத்திற்கு பின் அந்த அறைக்கு அவளை விடவில்லை….
திருமணம் இருவரின் முழு விருப்பதுடன் கோலாகலமாக நடைபெற்றது…
ஒரு வருடம் இருவரும் காதலில் திளைத்து அதன்பிறகு தான் ஆரவ் பிறந்தான்…
இருவரும் வெளியே கேட்ட சத்தத்தில் தான் நிகழ் காலத்திற்கு வந்து இருந்தனர்….
error: Content is protected !!