Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 25

கடந்த காலத்தை நினைத்து கொண்டு இருந்த சுபாவை கண்மணி கதவை திறந்து கொண்டு வந்து நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாள்… கண்மணி அவளிடம் “குட் மார்னிங் சுபிம்மா.. போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா… கஞ்சி குடிக்கலாம்” என்று கூறினாள்…

சுபாவும் “குட்மார்னிங் கண்மணி” என கூறி அவளுக்கு ஒரு சிரிப்பை தந்துவிட்டு குளியறை சென்று பல் தேய்த்துவிட்டு முகம் கழுவிவிட்டு வெளியே வந்தாள்… வந்தவளை அங்கிருக்கும் சோபாவில் உட்காரவைத்து விட்டு அவளிடம் கஞ்சியை நீட்டினாள்….

சுபா அதில் பாதி அளவை மட்டும் குடித்துவிட்டு போதும் என கூறினாள்.. அவளை செல்லமாக முறைத்துவிட்டு “ஒழுங்கா குடி சுபிம்மா… இன்னும் கொஞ்சம் மட்டும் சாப்பிடு” என்று கூறினாள்…

சுபா சிணுங்கிக்கொண்டே குடித்தாள்… கொஞ்சம் குடித்துவிட்டு “இதுக்கு மேல என்னால முடியாது கண்மணி… போதும்” என கூறினாள்… அவளும் சரி என கூறிவிட்டு அதை எடுத்து கொண்டு சமையல் அறையில் வைத்துவிட்டு மீண்டும் அவளிடம் வந்து அமர்ந்தாள்….

அவளை பார்த்தவாறு கண்மணி அமர்ந்து இருந்தாள்…. “என்ன பெல்(மணி) என்னைய அப்படி பாக்குறஅழகா இருக்கேனா நான்என்று கண்ணை சிமிட்டியவாறு கேட்டாள்….



Advertisement

 

இதுதான் சுபா முன்னாடி நாள் நடந்த விஷயத்தை மறந்துவிடுவாள்அடுத்த நாள் எதுவும் நடவாதாவாறு நடந்துகொள்வாள்… உள்ளுக்குள் அந்த பிரச்சனை பற்றி யோசித்துக்கொண்டு தான் இருப்பாள்ஆனால் வெளியில் காண்பித்து கொள்ளமாட்டாள்அவளின் நெருங்கியவர்கள் மேல் கோவம் இருந்தால் அவர்களிடம் பேசுவதை நிறுத்திக்கொள்வாள்…. 

 

Advertisement

கண்மணியோ எதுவும் இல்லை என தலை ஆட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்…

Advertisement

 

முகுந்தனும் அந்த அறைக்கு வந்துவிட்டான்… அவனும் வரும் போதே “குட் மார்னிங் சுபிம்மா” என்று கூறிவாரு வந்தான்… சுபாவும் “குட் மார்னிங் ண்ணா” என்று கூறினாள்…

 

Advertisement

“பீவர் எதோ இருக்கா கண்மணி” என்று கேட்டான்… 

 

“இல்ல மாமா பீவர் இல்ல… ஆனா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்…” என்று முகுந்தனிடம் கூறிவிட்டு சுபாவிடம் திரும்பி “ரெடியாகு சுபிம்மா ஹாஸ்பிடல் போட்டியி வரலாம்” என்று கூறி அவளை குளிக்க அனுப்பி வைத்தாள்…

 

கண்மணி முகுந்தனிடம் திரும்பி “மாமா போய் நீங்களும் ரெடியாகுங்க…  போயிட்டு வந்துடலாம்… பிபி அதிகமா இருக்க வாய்ப்பு இருக்கு… அவளுக்கு சாதாரணமாவே பிபி ரைஸ் ஆகும்.. அதுனால போயிட்டு வந்துடலாம்.. “என்று கூறி அனுப்பி வைதாள்…..

 

அவளும் சென்று குளித்துவிட்டு வந்துவிட்டாள்… பின் காலை உணவு முடித்துவிட்டு சுபாவை அழைத்து கொண்டு முகுந்தன் கண்மணி இருவரும் மருத்துவமனை அழைத்து சென்றனர்….

 

அங்கு டாக்டர் அவளை செக் செய்து விட்டு கண்மணி நினைத்தவாறே பிபி அதிகமாக உள்ளது என கூறிவிட்டார்… அது மட்டும் இல்லாமல் சுபாவிடம் “சுபா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க… அப்புறம் டெலிவரில ப்ரோப்லம் ஆகிடும்…” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்…. 

 

மூவரும் எதுவும் பேசாமல் காரில் பயணமானார்கள்…. வழியில் ஜூஸ் கடையில் நிறுத்தி சுபாவிற்கு ஜூஸ் வாங்கி குடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தான்….

 

அவர்கள் மருத்துவமனை கிளம்பியதே காலை பதினொன்று மணி ஆகியதால் வீட்டிற்கு வர மதியம் ஆகியது….

 

சுபா இறங்கிய போது கண்டது கவலை தேய்ந்த முகத்துடன் ஆரவை தூக்கி நின்று கொண்டு இருந்த அர்ஜுனனை தான்….

 

ஓர் இரவில் ஒருவன் இவ்வளவு சோர்ந்து போவானா என்று தெரியாது… ஆனால் அர்ஜுனன் அந்த அளவு சோர்ந்து போய் இருந்தான்….

 

அர்ஜுனன் சுபா சென்ற பின் அறைக்குள் சென்றவன் வெளியில் வரவே இல்லைஅவன் தூங்கியதும் ஒரு மணி நேரம் தான்அதுவும் அவன் அசந்து உறங்கியதுஅவனை யாரும் தொந்தரவு செய்யவில்லை…. ஆனால் ஆரவ் காலை எழுந்ததில் இருந்து தாய் தந்தை இருவரையும் காணாமல் அழுக ஆரம்பித்து விட்டான்

 

எழுந்தவுடன் இருவரையும் காணாமல் இருந்தாலும் அவன் எழுந்தது பத்து நிமிடத்தில் இருவரில் யாரையாவது ஒருவரை பார்த்து விடுவான்ஆனால் அவன் எழுந்து மூன்று மணி நேரம் ஆகியும் இருவரையும் காணாமல் அழுக ஆரம்பித்துவிட்டான்….

 

அவனை யாராலும் சமாதானம் செய்யமுடியவில்லைஅதன் பின் தான் அர்ஜுனன் இருந்த அறையின் கதவினை தட்டினர்…. சிறிது நேர காத்திருப்பிற்கு பின் தான் கதவினை திறந்தான்

 

அவன் கதவினை திறந்த நொடிஅப்பா…” என்று கூறி அவனிடம் தாவி இருந்தான்…. ஆரவின் அழுகையில் சுயம் வந்த அர்ஜுனன் தன்னை மீட்டுக்கொண்டு ஆரவை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தி இருந்தான்….

 

பின் மற்றவர்களிடம் ஆரவை விட்டுவிட்டு அவன் சென்று குளித்து வந்தான்இருந்தும் அவன் கண்ணில் சோகம் அப்பியிருந்தது…. அதன்பிறகு தான் அனைவரும் கிளம்பி முகுந்தன் வீட்டிற்கு வந்தது….

 

இங்கு வந்தும் சுபாவை தேடி அழுத ஆரவை அர்ஜுனன் வெளியில் தூக்கி வந்து சமாதானம் செய்யும் போது தான் சுபா வந்த கார் வீட்டிற்குள் நுழைந்தது

 

ஆரவ் சுபாவை கண்டதும் அம்மா….. என கத்திக்கொண்டு அர்ஜுனனிடம் இருந்து இறங்கி ஓடிப்போய் சுபாவின் கால்களை கட்டி கொண்டான்…

 

சுபாவும் அவனை தூக்க முற்பட்ட போது ஆரவே “ம்மா நோ பாப்பா உள்ள.. வலிக்கும் பாப்பாக்கு உனக்கு… தம்பி நிக்குறேன்” என்று கூறி மீண்டும் அவளின் கால்களை கட்டி கொண்டான்…

 

அவனுக்கு நெற்றி முத்தமிட்டு அர்ஜுனனை பாராமல் ஆரவை அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்… 

 

அங்கு பட்டு பாட்டி பாலா கிரிஜா தவிர அனைவரும் இருந்தனர்… யாரையும் காணாமல் அவள் செண்பகம் அம்மாவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்….

 

அவள் வந்தவுடன் சுப்ரியா அவளுக்கு சூப் கொண்டு வந்து தந்தாள்…. அவள் எதுவும் பேசாமல் ஆரவை தன் மடிமேல் அமர்த்தி கொண்டு அவனுக்கும் புகட்டி கொண்டு தானும் குடித்து முடித்தாள்

 

அவள் வந்து இறங்கிய நொடி முதல் அர்ஜுனன்  அவளை தவிர்த்து பார்வையை வேறு எங்கும் திருப்பவில்லைசுபாவிற்கு அது தெரிந்தும் அவன் பக்கம் திரும்பவே இல்லைஅதே போல் தான் அவளின் தமையன்களும் அவள் உள்ளே நுழைந்தது முதல் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தனர்….

 

பின் மாரியப்பனே சுபாவை பார்த்துசுபா ம்மா இங்க வா…” என்று அழைத்தார்…. அவளும் எந்த மறுப்பும் கூறாமல் அவர் அருகில் வந்து அமர்ந்தாள்

 

ஆனால் அவர் பேச ஆரம்பிக்கும் போது அதை தடுத்து நிறுத்திவிட்டுமாமா நீங்க என்ன பேச போறீங்கனு எனக்கு தெரியும் மாமாஎவ்வளவு பெரிய விஷயத்தை மறச்சு இருக்கீங்க எல்லாரும்கல்யாணம் ஆனவுடனே சொல்லாம இருந்துது சரி ஆனா கொஞ்ச நாள் கழிச்சு சொல்லி இருக்கலாம் ஏன் யாருமே சொல்லல….

 

அவர் காதலிச்சது எல்லாம் சரி தான்ஆனா என்கிட்ட சொல்லி இருக்கலாம் அப்போவேஅவரு எல்லாத்தையும் மறந்து என்னை கல்யாணம் பண்ணி இருந்தாலும் எனக்கு உண்மை தெரிஞ்ச வாட்டி இந்த இதயத்துக்காக தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்காருனு நான் நினைக்க மாட்டேன்னா

 

அவரு அப்படி இல்லனு எனக்கு தெரியும் ஆனா என்னால அதை ஏத்துக்க முடியலையே…. இனிமே ஒவ்வொரு முறையும் அவர் என்கிட்ட வரும்போது இந்த இதயத்துக்காக தான் கிட்ட வராரோனு தோணாதா…. ஏன் எனக்கிட்ட மறச்சிங்கஎன்று கண்ணில் கண்ணீருடன் கேட்டாள் சுபா

 

அவளின் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல இயலவில்லைஅனைவரும் மௌனமாக நின்று இருந்தனர்….

 

 

பின் அவளே தொடர்ந்தாள்தேவியின் பெற்றோரை பார்த்து  “ஏன் இப்படி பண்ணீங்கதேவி அக்காவை எத்தனை முறை திட்டி இருக்கேன் தெரியுமாஎப்படி அப்பா அம்மா வேணான்னு போக முடிஞ்சது இவங்களாலனுஆனா அவங்க இதயத்தை நானே வெச்சிக்கிட்டு அவங்களை திட்டி இருக்கேன்…. ஒருவகை அவங்க இறப்பும் என்னால தான்

 

நான் அவங்களை அன்னிக்கு பாக்கவே வந்து இருக்க கூடாதுவந்து இருந்தாலும் நான் நீங்க பேசுனதை பார்த்து இருக்க கூடாது…. அப்டி பார்த்து இருந்தாலும் உள்ள உங்ககிட்ட வந்து பேசி இருக்கனும்எல்லாம் என் தப்பு தான்” என்று கூறி அழுதாள்

 

அவளை யாராலும் சமாதானம் படுத்த இயலவில்லை…. பின் அவளே ஒருவாறு தெளிந்து அனைவரையும் பார்த்துஇல்ல ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியலஎனக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ணது என்கிட்ட யாரும் சொல்லலஎல்லாரும் ஒரு விஷயத்தை எப்படி மறந்திங்க

 

ஆபரேஷன் பண்ண தழும்பை பார்த்தா எனக்கு தெரியாதாஎன்னை அவ்வளவு முட்டாள்னு நினைச்சீங்களா…. நீங்களா சொல்லுவீங்கனு நினைப்பேன்ஆனா ஒரு தடவை கூட என்கிட்ட சொல்லவே இல்லை….

 

யாரோட இதயம்னு தெரிஞ்சிக்க நான் டாக்டர்கிட் கூட கேட்டேன்பட் அவங்க சொல்லல…. ஆபரேஷன் பண்ணது பத்தி சொல்லிட்டாங்கஆனா இது தேவி அக்கா இதயம்னு என்னால ஏத்துக்க முடியல

 

எப்பயும் அவரு என்னோட ஹார்ட் பீட் கேட்கவே மாட்டாருவேற ஒருத்தரோட ஹார்ட் பீட் அவரு கேட்க விரும்பலனு விட்டுட்டேன்….. ஆனா இப்போ இப்போ உண்மை என்னனு தெரிஞ்சவாட்டி என்னால முடியல” என்று கூறி கதறி விட்டாள்….

 

அர்ஜுனன் வேகமாக அவன் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து சுபாவின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்துடேய் அம்மு எல்லா பிரச்சனையும் என்னால் தான்டா எனக்கு எந்த தண்டனை வேணா குடுடா…. ஆனா நீ…. நீ மட்டும் அழாத அம்முஎன்னால தாங்க முடியலடா…. எத்தனை அடி வேணா அடிச்சிக்கோ தாரும்மாதயவு செஞ்சி அழ மட்டும் செய்யாதடா…. ” என்று கூறினான்

 

ஆனால் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை…. அழுகையினால் அவளுக்கு மூச்சு வாங்குவதில் பிரச்சனை ஆகியதுஅனைவரும் அவளின் நிலையை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யும் போது திடீரென்று வலிப்பு ஏற்பட்டுவிட்டது

 

அர்ஜுனனால் தாங்க முடியவில்லை…. அவனால் அவளை தூக்க கூட முடியவில்லைகைகள் நடுங்குவது அனைவருக்கும் தெரிந்ததுவாணன் வர்ணன் இருவருக்கும் அவ்வாறு தான்

 

முகுந்தன் வேகமாக சுபாவை தூக்கிக்கொள்ள சசி வேகமாக சென்று காரை எடுத்து இருந்தான்சுபாவுடன் கண்மணி அந்த காரில் ஏறிக்கொள்ள மற்றவர்கள் அவரவர் காரில் ஏறினர்….

 

அர்ஜுனன் வாணன் வர்ணன் இருந்த காரை கர்ணன் தான் எடுத்தான்அவர்கள் மூவருக்கும் கைகளில் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை.. அர்ஜுனன் கண்ணில் இருந்து கண்ணீர் வலிந்து ஓடியதுதேவியின் இறப்பின் போது அழுததுஅதன்பின் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வரவே இல்லைஆனால் அவளின் மனையாளோ நேற்று முதல் அவனை கண்ணீர் தான் அவனின் உலகம் போல் ஆக்கிவிட்டாள்….

 

வீட்டில் மருதாயி பாட்டி அவருடன் ஜனனியின் பெற்றோரும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள தங்கிவிட்டனர்மற்றவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றனர்

 

சுபாவிற்கு வந்த வலிப்பினால் அவளுக்கும் குழந்தைக்கும் ஏதேனும் ஆபத்து வருமா?!?!?!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!