Skip to content
Post Views: 15,786
அன்னையோடு பூ கட்டிக்கொண்டிருந்தாள் விஷாலினி. இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பூ அதிகம்தான். அனைத்து பூக்களையும் தொடுத்து முடிக்க ஐந்து மணியாகியிருக்க, “போய் முகம் கழுவி தலை சீவு விஷாலினி” என்றார் மேகலை.
“ப்ச் போம்மா… சலிப்பா இருக்கு” என்றாள் சோர்வோடு.
“காவ்யா பிரச்சனை நினைச்சு கவலைப்படுறியா?” என்றார் கவலையோடு.
“அதெல்லாம் இல்லைம்மா. இனி காவ்யாக்கா பத்தி கவலையில்ல, ஆனா எனக்கு அவரை பார்க்கனும்” என்றாள். சொல்லும்போதே கண்களும் கலங்கிட, “நீ என்ன சின்ன பிள்ளையா? விஷ்ணு வேலையை தெரியாதா?” என்றார் ஆறுதலாக.
Advertisement
‘ம் தெரியுதுதான்… ஆனா மனசு தேடுதே’ என மனதில் நினைத்தாலும் மகளின் முகபாவனை அப்பட்டமாய் காட்ட, மேகலைக்கு சங்கடமானது. அன்னையின் வாடிய முகம் கண்டு, “இப்போ என்ன? கொண்டை ஜடையாகனும்… அவ்வளோதான? அதுக்கேன்ம்மா சோகமாகுற?” என்று முகம் கழுவி பின்னலிட்டாள்.
படிப்பை முடித்து வந்த நாளிலிருந்து வளையல் போட வேண்டும், தினமும் பூ வைக்கனும், நெற்றிக்கு குங்கும்மிட வேண்டும் என்று மகளுக்கு சொல்லியிருந்தார் மேகலை.
விஷாலினியும் பிடித்தே அனைத்தும் செய்தாள். பின்னலிட்ட மகளுக்கு மல்லிகை சூட்டிவிட்டார்.
Advertisement
“ம்மா இவ்வளோ பூ எதுக்கு?”
Advertisement
“இன்னைக்கு வெள்ளிக்கிழமை, பூ வேணாம்னு சொல்லக்கூடாது. கொஞ்சம்தான் சேர்த்து வச்சிருக்கேன். பாரு… எவ்வளோ அழகா இருக்கு” என்று கன்னம் தொட்டு திருஷ்டி கழித்தார்.
“காவ்யாக்கா நாளைக்கு வராங்களாம்மா” என்றாள் ஆசையாக.
“ம் அண்ணி சொன்னாங்க. டீ வச்சித்தரேன், குடிச்சிட்டு உன் வீட்டுக்கு போய் அத்தை மாமாவோட பேசிட்டிரு” என்று கிச்சனுக்குள் சென்றார்.
Advertisement
விஷாலினியின் கண்கள் தன்போல் விஷ்ணு வீட்டின் ஜன்னலைப் பார்த்தது. சிறு வயதில் நான் பார்க்கிறேன் என்பதால் கோபத்தோடு வேகவேகமாக உண்ணும் கணவனை நினைத்து தற்போது சிரித்தாள்.
மேகலை டீ எடுத்து வர இருவரும் குடித்தபின்னே “நான் கொஞ்சநேரம் படுக்கறேன், நீ உன் வீட்டுக்கு போ” என்றார்.
விஷாலினி வர, “வாடா… பூ கட்டி முடிச்சாச்சா?” என்றார் கோபாலன்.
“முடிச்சாச்சு மாமா, டீ குடிச்சிட்டிங்களா?”
“ம் குடிச்சாச்சு” என்க, பிரபாவதி “அழகா இருக்க, தினமும்தான் இப்படி வச்சா என்ன?” என்றார்.
“வெள்ளிக்கிழமை பூ வேணாம்னு சொல்லக்கூடாதுனு அம்மா கம்ப்பல் பண்ணி இவ்வளோ பூ வச்சி விட்டுட்டாங்க” என்று இன்முகமாக சொல்லி, “இன்னைக்கு நைட் என்ன சமைக்கலாம்த்த?” என்றாள்.
“மணி ஆறுதான ஆகுது? எட்டு மணிக்கு மேல யோசிப்போம்” என்றார்.
படிப்பை முடித்து வந்தபின்னே தினமும் பிரபாவதி சமைக்கும்போது உடன் இருந்து உதவி செய்வாள். பிரபாவதி மறுத்தாலும், ‘உங்க சமையல் ரொம்ப நல்லாயிருக்கு, இதே மாதிரி நானும் சமைச்சு கத்துக்கனும்லத்த? சொல்லிதாங்க’ என்று சமையல் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறாள்.
பூ கட்டும் நேரம் அன்னையோடிருப்பவள் மற்ற நேரம் இங்குதான் இருப்பாள். மருமகன் எந்த நேரமும் வீட்டிற்கு வரக்கூடும், ஒருவேளை இரவு நேரத்தில் வந்தால் அங்கு விஷாலினி இல்லாமல் மருமகனுக்கு ஏமாற்றம் ஆகிடக்கூடாது, என்பதற்காக மேகலை பிடிவாதம் செய்து மகளை இப்படி பழக்க ஆரம்பிக்க, விஷாலினிக்கு இதுவே வழக்கமாகிப்போனது.
பிரபாவதி முகத்தில் நிறைய வேதனை. நீதிமன்றம் செல்ல இன்னும் ஐந்து நாள்களே இருந்தபோதும் திவாகர் வீட்டிலிருந்து சமாதானம் பேச வராதது பிரபாவதிக்கு பெரும் மனஉளைச்சலை உண்டாக்கியிருந்தது.
தன்னிடம் சிரித்து பேசினாலும் அத்தை மனதின் வேதனை அறிந்து “கவலைப்படாதிங்க அத்த, காவ்யாக்காக்கு பிடிச்ச வாழ்க்கைத்தான் வாழுவாங்க” என்றாள் தேறுதலாக.
“ம்… உன் மாமாவும் இதைத்தான் சொல்றார். கடவுள் மேல பாரத்தை போட்டுருக்கேன். பார்ப்போம்” என்று இயல்பாய் பேச முயற்சித்தார் பிரபாவதி.
மாலை ஏழு மணியாகிருக்க, “அம்மா என்ன சமைக்கிறாங்கனு பார்த்துட்டு வரேன்த்த” என்று தனது வீட்டிற்கு சென்றாள் விஷாலினி.
கோபாலனும் பிரபாவதியும் மகள் வாழ்க்கை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். விஷ்ணுவர்தன் வரவே, மகன் வருகையில் மகிழ்ந்து “வரேனு சொல்லவே இல்ல” என கோபித்தார் பிரபாவதி.
“இரண்டு மாசமா ரெஸ்ட்டே இல்லம்மா, சண்டை போடலாம் என்கிட்ட தெம்பில்ல” என்றான் பாவமாக.
அசுரனின் சத்தத்தில் தனது வீட்டின் கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்த விஷாலினி விஷ்ணு வீட்டினைப் பார்க்க, அப்பொழுதான் உள்ளே வந்தான் விஷ்ணுவர்தன்.
கணவனை கண்டதும் கண்கள் பெரிதானது. உள்ளே வந்த விஷ்ணுவின் கண்களும் விஷாலினி வீட்டின் ஜன்னலை நோட்டமிட, கண்களுக்கு குளிர்ச்சியாய் மனைவியின் தரிசனம். “இப்போவும் ஜன்னல்லயிருந்துதான் பார்ப்பியா?” என்று சிரிக்க, விஷாலினி மறைந்தாள்.
“மருமகன் வந்திருக்கார் போல, போ விஷாலினி” என்று மேகலை துரத்த, அவளுக்கும் கால்கள் பரபரத்ததுதான். வீட்டிற்கு வந்ததிலிருந்து எப்பொழுது விஷ்ணு வருவான் என எதிர்பார்த்திருந்தாள்தான். இனம் புரியாத தயக்கம் உண்டாகிட அங்கேயே நின்றிருந்தாள்.
“ப்ச்… சொல்றேன்ல? கிளம்பு” என்று மேகலை அதட்ட, “விஷாலினி…” என்று பெரும் குரல் கொடுத்தார் பிரபாவதி.
“இதோ வரேன்த்த” என்று தனது வீட்டிற்கு வந்தாள். “விஷ்ணு வந்திருக்கான்” என்று சொல்ல, இன்ப அவஸ்த்தையோடு அறைக்குள் சென்றாள்.
விஷ்ணு குளியலறையில் இருந்தான். ஐந்து நிமிடம் வரை காத்திருந்தவள், வெளியே வந்து “டீ குடிச்சாராத்த?” என்றாள்.
“இல்ல விஷாலினி, போட்டு வச்சிருக்கேன் எடுத்துட்டு போ” என்க, டீயோடு அறைக்குள் வந்தாள். விஷாலினியின் விழிகள் விஷ்ணுவை பார்க்க நாணியது. ‘ப்ச்’ என்ன இது? என்று தன்னைத்தானே கடிந்தவள், தனது கூச்சம் தவிர்க்க, “விழுப்புரம் வரேனு சொன்னதுக்கு வேண்டாம்னுட்டிங்க” என்று குறைபட்டாள்.
கதவை தாழிட்டு “அதை என்னைப் பார்த்து கேளுடீ” என்று சிரிப்போடு அருகில் வந்தவன், டீ வாங்கி பருகிக்கொண்டு “அன்னைக்கு துண்டோட நின்னப்போ என் கண்ணைப் பார்த்து சண்டை போட்ட. இன்னைக்கு என்ன ஆச்சு? ஷார்ட்ஸ் டீசர்ட் போட்டுருந்தா பார்க்கமாட்டியோ? கழட்டிட்டு துண்டு கட்டிக்கட்டுமா?” என்றான் புன்னகையோடு.
விஷாலினி முகம் சிவக்க, தன்மீதான ஆசை, அச்சம் தவிர்த்து காதலோடு கூடிய நாணம் என்று விஷ்ணு முன்பு எதிர்பார்த்த அனைத்தும் தற்போது தெரிந்தது மனைவி முகத்தில்.
விஷாலினியின் இந்த பரிணாமம் விஷ்ணுவை நிலையிழக்க செய்ய, நெருங்கி அமர்ந்து இடையோடு அணைத்தவன் “எதோ கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்ன? நேர்ல வந்துட்டேனே… தரியா?” என்றான் கிசுகிசுப்பாக.
“இப்போ அத்தை சாப்பிட கூப்பிடுவாங்களே, சாப்பிட்டு வந்த பின்ன” என்றாள் தவிப்போடு.
“லைட் ஆஃப் பண்ணிட்டேன்ல? அம்மா புரிஞ்சிப்பாங்க” என்று கட்டிலில் அமர்ந்தவன் அவளின் இதழை வருடினான். வழக்கமாய் அணியும் பேண்ட் சர்ட் வகையிலான இரவு உடைதான் அணிந்திருந்தாள். விஷ்ணுவின் மற்றொரு கை விஷாலினியின் மேலுடையினுள் நுழைய தாளமுடியாமல் சாய்ந்தாள் விஷ்ணுவர்தன் தோள்மீது.
சேர்த்தணைத்தபடி கட்டிலில் சரிந்தான். தன்மேல் படுத்திருந்தவளின் இதழை ஆக்ரமித்தான். விஷ்ணுவின் முத்தம் விஷாலினியின் இதழோடு சேர்த்து படபடக்கும் இதயத்தையும் அணைத்து ஆசுவாசப்படுத்தியது.
ஆசுவாசமெல்லாம் சற்று நேரம்தான். அதன் பின்னே விஷ்ணுவின் எல்லை மீறிய தீண்டல்களும், முரண் முத்தங்களும் விஷாலினியின் இளமை உணர்வுகளை விழிக்கச் செய்ய, தன்னை கட்டுப்படுத்தும் வழியறியாமல் விஷ்ணுவையே அணைத்தாள் நாணம் உடைத்து.
மனைவியின் அணைப்பில் மயங்கிய விஷ்ணுவர்தன், பெரும் போராட்டத்திற்கு பிறகு மேனியை தழுவியிருந்த ஆடைகளை களைய, இதுவரை காணாத காட்சிகளை கண்டது விஷ்ணுவின் கண்கள். இதுவரை அறியாத ஸ்பரிசத்தை அறிந்தது விஷ்ணுவின் கைகளும், விஷாலினியின் தேகமும்.
அதன்பின்னே விஷ்ணுவின் செயல்களை தடுக்கும் திராணியற்றவளானாள் விஷாலினி. எதிர்வினையாற்றாமல் கண்மூடியிருந்த மனைவியின் கன்னம் தட்டி “என்ன?” என்றான் தவிப்பாக.
சோபையாய் புன்னகைத்து மீண்டும் கண்மூடினாள் சிலிர்த்து சிவந்த முகத்தோடு. இருவருள்ளும் ஆசையும் மோகமும் மட்டுமே மேலோங்கியிருக்க, அச்சமும் நாணமும் விடைபெற்று, தவிப்புகள் மோட்சம் பெற்றது.
உடை களைய பெரிதாய் ஆர்பாட்டம் செய்தவள், தற்போது உணர்வுகளின் பிடியில் சிக்கியதால் தன்னிலை மறந்து ஆளவிட்டாள் கணவனை. அழகை அணுவணுவாய் ரசித்து ஆராதித்து ஆட்சி செய்தான் விஷ்ணுவர்தன்.
கூடிக்களித்த பின்னும் விஷாலினியை விலகவில்லை விஷ்ணுவர்தன். பின்னிருந்து அணைத்தவாறு படுத்திருந்தான். சில மணித்துளிகளுக்குப் பிறகு, பின் கழுத்தில் முத்தமிட்டு “இன்னைக்கென்ன இவ்வளோ பூ?” என்றான் ஆழ்ந்து சுவாசித்தபடி.
“அம்மாதான் வெள்ளிக்கிழமைனு கம்ப்பல் பண்ணி வச்சுவிட்டாங்க”
மேகலையை மனதில் பாராட்டி, “மணி ஒன்பதாகிடுச்சு, சாப்பிடலாம், எழுந்துக்கோ” என்றான் அணைப்பை தளர்த்தாமல்.
“ஒன்பதா? போச்சு போங்க… ஏழு மணிக்கு உள்ள வந்தேன், அத்த என்ன நினைப்பாங்க? இப்போ எப்படி வெளில போறது?” என்றாள் கோபமாக.
“கொஞ்சம் ஆட்டமா காட்டின? ஒவ்வொன்னையும் கழட்டுறதுக்குள்ள எத்தனை ஆர்பாட்டம்? உன்னாலதான் லேட்” என்றான் தானும் கோபமாக.
விஷாலினியின் முகம் குப்பென சிவந்திட, சிரித்தவன், எழுந்து உடையணிந்து, “நான் போய் அம்மாகிட்ட டிபன் வாங்கி வரேன், சாப்பிட ரெடியாகு” என்று வெளியேற, கேட், வீட்டின் முன்கதவு என அனைத்தும் பூட்டி, விளக்கணைத்து பிரபாவதி படுக்க சென்றிருந்தார்.
எப்பொழுதும் ஹாலில் படுத்திருக்கும் கோபாலனும்… மகன் உணவெடுக்க வெளியே வரும்போது தன்னை பார்த்தால் சங்கடம் கொள்வான் என்று மனைவியறைக்கு உறங்கச் சென்றிருந்தார். டைனிங் டேபிளை பார்க்க, இவர்களுக்கான உணவும், பழங்களும் பாத்திரத்தில் தயாராய் இருந்தது.
அன்னை தங்களை புரிந்துகெண்டு எடுத்துவைத்திருக்கிறார் என்று புரிய, புன்னகை புரிந்தான் சிறு வெக்கத்தோடு. பிறகு உணவு, பழங்களை எடுத்துக்கொண்டு உள்ளே வர, இவள் கவிழ்ந்து படுத்திருந்தாள். ஆனால் உடையணிந்திருக்கவே, “இதுல மட்டும் சுறுசுறுப்பு” என்று சிரித்து, “எழுந்துக்கோ, டிபன் எடுத்து வந்திருக்கேன்” என்றான்.
“எனக்கு பசிக்கல, நீங்க சாப்பிடுங்க”
“எனக்கு யாரு பறிமாறுவா?”
“நீங்களே போட்டுக்கோங்க”
“ப்ச், எழுந்துக்கோ விஷாலினி, எனக்கு பசிக்குது” என இவன் கடிய, “ப்ச் என்னால முடியாது. சாப்பிடுங்க” என்றாள் கெஞ்சலாக.
அவள் முன்னே சென்றவன், “எழுந்துக்க முடியலையா?” என்றான் தவிப்பாக.
“ஈஸ்வரா…” என தலைமேல் தட்டிக்கொண்டவள், “உங்களை பார்க்க கூச்சமா இருக்கு. போதுங்களா? எனக்கு பசியே இல்ல. போய் சாப்பிடுங்க” என்று போர்வையால் தன்னை மூடினாள்.
“ம்… இப்போ ஒத்துக்கிறேன். இது வெக்கம்தான்” என்று சிரித்தவன், ஆப்பிளை சிறு துண்டுகளாக்கியபடி “உன் அத்தைக்கு நம்மளை புரிஞ்சிருக்கு. பதினொரு மணி வரைக்கும் தூங்காதவங்களுக்கு இன்னைக்கு ஒன்பதுக்கே தூக்கம் வந்துருக்குனா பாரேன்.
எனக்கு சப்பாத்தி குருமாவோட, உனக்கு ஆப்பிள் வச்சிட்டு போயிருக்காங்க” என்று பெருமையாய் சொல்லி, “இதையாவது சாப்பிடு” என்று படுத்திருந்தவள் முன்னை ஆப்பிளை நீட்டினான்.
விஷ்ணுவிற்கு ஆப்பிள் பிடிக்காது என்று அவளின் அத்தை சொல்லியிருக்கிறார் ஆதலால் தனக்காகத்தான் எடுத்து வைத்திருக்கிறார் என்று புரிய, வெக்கம் தாளமுடியவில்லை. “எவ்வளோ நேரம் நீட்டுறது? பிடிடீ” என்றான் சலிப்பாக.
“நான்தான் எனக்கு பசிக்கலனு சொல்றேன்ல?” என்றாள் சிணுங்களாக.
“சரி அப்போ எனக்கும் பசிக்கல” என்று இவன் கோபமாக சொல்ல, கணவனுக்காக ஆப்பிளை உண்டாள். விஷ்ணுவும் உண்டு முடித்தவன், “எனக்கும் பசிக்கலனு சொன்னதும் நம்பிட்டியா? நீ சாப்பிடலனாலும் நான் சாப்பிட்டிருப்பேன். ஆனா என்னை சமாளிக்க உனக்கு தெம்பு வேணும்ல? அதுக்குத்தான் ஆப்பிளை கொடுத்தேன்” என்றான் குறும்போடு.
இவள் அதிர்வாய் பார்க்க. “என்னடீ இப்படி முழிக்கிற? உனக்கு கஷ்டமா இருக்குமோனு பயந்து பயந்து ஒரு ஃபுல் ஃபீலே கிடைக்கல. எதோ ட்ரையல் பார்த்த மாதிரி இருந்துச்சு. இனிதான்” என்றவன் அடுத்து சொன்ன வார்த்தையை கிரகிக்க முடியாமல் வெக்கித்திரும்பினாள் விஷாலினி. சொல்லை செயலாக்க ஆயத்தமானான் விஷ்ணுவர்தன்.
தனது செயலால் மனைவியின் நாணம் அச்சம் உடைத்து தன்னை தேட வைத்து, உணர வைத்து என உணர்வுகளின் உன்னதம் உணர்ந்தனர் இருவரும்.
நள்ளிரவு வரை உலகத்தை மறந்திருந்தவன், “என்னடீ அதுக்குள்ள டையர்டாகிட்ட? இதெல்லாம் ஆகுறதில்ல, இனி சப்பை சோறு திங்காம கறியும் மீனும் திண்ணு உடம்பை தேத்தனும் புரியுதா? இப்போ பாரு பாதி நைட் வேஸ்டா போச்சு.
ஹம்… கல்யாணம் ஆகி ஆறேழு மாசம் கழிச்சு இன்னைக்குத்தான் ஆரம்பிச்சேன், ஆனா விடியும் முன்னவே தூங்கற துர்பாக்கிய நிலைமை. எல்லாம் என் விதி. இதுல வாழ்க்கை வீணா போச்சுனு சொன்னா மட்டும் கோபம் வந்திடும்” என்றான் சிரிப்போடே.
தூக்கம் கண்களை சுழற்றியபோதும், தன்னை வம்பிற்க்கிளுக்கவே பேசுகிறான் என “ஆறேழு மாசமா நானா உங்களை வெய்ட் பண்ண சொன்னேன்? எப்போப்பாரு குறை சொல்லிட்டேயிருக்கிங்க” என பதில்கொடுத்தே கண்மூடினாள்.
சிரித்தபடியே மனைவியை தன்மேல் அள்ளிக் போட்டுக்கொள்ள, கண்மூடிய நிலையிலேயே விஷாலினி புருவம் சுருக்க, “ஹே… பதறாத, தூங்கு” என காதலோடு அணைத்து தானும் கண்மூடினான்.
error: Content is protected !!