Skip to content
Post Views: 7,136
அத்தியாயம் 9:
அன்று மாலை வயலுக்கு வந்த ஆதியிடம் “மச்சான். கவர்ன்மெண்ட் வேலைக்காக நா எக்ஸாம் எழுதலாம்ன்னுட்டு இருக்கேன். அதுக்கு கோச்சிங் கிளாஸ் சேரோணும். கிளாஸ் டைம்ல வயல் வேலையெல்லாம் பாக்க வேற நல்ல ஆள் போடோணும்” என்ற வசந்தை ஆச்சரியம் ப்ளஸ் மகிழ்ச்சி கலந்து பார்த்தான் ஆதி.
“டேய். இதைத்தான நா அஞ்சு வருசமா சொல்றேன். நீ வயலுக்கே வரவேண்டாம். என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. பஸ்ட் டைமே பாஸ் பண்ற” என்று சந்தோசமாக வசந்த்தை கட்டி கொண்டான் ஆதி.
அவனை விடுவித்துவிட்டு “ஆமா. நா இவ்ளோ நாள் சொல்லி கேக்காதவன், இப்ப எப்படி திடீர்னு முடிவு பண்ண” என்று தாடையை தடவி யோசித்தவன் “மதியம் உன்ன பாக்க அந்த மஞ்ச மொளகாய் வந்திருந்தாளாமே. அவ பண்ண வேலையா இது” என்று கேட்டான்.
Advertisement
“ஹா ஹா மஞ்ச மொளகாயா. என்ன மச்சான் என்ர தங்கச்சிக்கு இப்படி பேரு வச்சு போட்ட”
“நீ சொல்லு. அவ சொல்லித்தான் நீ இந்த முடிவெடுத்தியா”
“உண்மையா சொல்லோணும்ன்னா ஆமா மச்சான்”
Advertisement
சிறிது நேரம் அமைதியாயிருந்த ஆதி “பரவால்ல. அப்பப்ப சேட்டை பண்ணாலும் எல்லாருக்கும் நல்லதுதான் பண்றா” என்றான்.
Advertisement
“சேட்டை பண்ணாளா. உன்ன என்ன மச்சான் பண்ணா என்ர தங்கச்சி”
“என்னட்டையெல்லாம் எதாவது பண்ண முடியுமா. போ போ. போய் படிக்கிற வழிய பாரு” என்று நழுவி விட்டான் ஆதி.
ஒரு வாரம் சென்று ஒரு சனிக்கிழமை சந்தியாக்கு மட்டும் கிளாஸ் இருந்ததால் கௌரி இல்லாமல் அவள் மட்டும் காலேஜ் சென்றிருந்தாள்.
Advertisement
மாலை திரும்பி வரும்போது வழியில் யாரும் இல்லாத இடத்தில் அவள் ஸ்கூட்டி நின்று விட்டது. திரும்ப திரும்ப ஸ்டார்ட் செய்து பார்த்தும் கிளம்பவில்லை. இது என்னடா சோதனை, இப்பொழுது எப்படி வீட்டுக்கு செல்வது என்று கடுப்பாகி நின்றாள் சந்தியா. அவளின் தந்தை ஸ்விப்ட் கார் வைத்திருக்கிறார். அப்பாவையே வந்து கூட்டிகொண்டு போக சொல்லுவோம் என்று மொபைலை எடுத்தாள் .
அப்பொழுது அவளை தாண்டி ஒரு க்ரெ கலர் ஸ்கோடா சென்று நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கி அவளிடம் வந்தான்.
நல்ல சிவந்த நிறத்தில் மீசையில்லாமல் பார்மல் பேன்ட் சர்ட்டில் ஆள் அட்டகாசமாக இருந்தான். யார்டா இது இந்த ஊர்ல இப்படி ஒருத்தன், என்று அவனை ஆச்சரியமாக பார்த்தாள் சந்தியா.
வந்தவன் “ஹாய் சந்தியா . நா அரவிந்த். நானும் அணைக்குடிதான். என்ன பிரச்சனை இங்க நிக்கிறீங்க” என்றான்.
“ஹலோ சார் . ப்ராப்லம் எனக்கு இல்ல. வண்டிக்குதான். என்ன எப்படி தெரியும் உங்களுக்கு”
“ஊருக்குள்ள ஒரு அழகான பொண்ணு வந்துருக்குன்னா தெரியாம இருக்குமா”
“இத நா எப்படி எடுத்துக்கணும்”
“ஒரு காம்ப்ளிமெண்டா எடுத்துக்குங்க. வாங்க என் கார்ல டிராப் பண்றேன்”
“நீங்க யார்னே எனக்கு தெரியாது?”
“ம்… எப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்திக்கிறது?” என்று வெளிப்படையாக யோசித்தவன் “ம் உங்க ரிலேட்டிவ் ஆதித்யன் இருக்கான்ல. அவனோட எதிரின்னு இன்ரோ பண்ணிக்கிட்டா கரரெக்டா இருக்கும்” என்றான்.
“ம் இன்டெரெஸ்ட்டிங். எதிரின்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்புறம் எப்படி எனக்கு ஹெல்ப் பண்றீங்க”
“எதிரியா இருந்தாலும் பொண்ணுன்னா, அதும் அழகான பொண்ணுன்னா ஹெல்ப் பண்ணிட வேண்டியதுதான்” என்று ஒரு மயக்கும் சிரிப்பை உதிர்த்தான்.
உறுதியற்ற நெஞ்சம் கொண்ட பெண்கள் பார்த்தார்கள் என்றால் கட்டாயம் மயங்கிவிடுவார்கள் அந்த சிரிப்பில்.
கைகட்டிக்கொண்டு அவனை ஆராய்ச்சியாக பார்த்தவள் “ம்கூம் கண்டிப்பா காம்ப்ளிமெண்டா எடுத்துக்க மாட்டேன். என்னட்ட வழியிரிங்க. என்ன ரீசன். எதிரிய பழி வாங்க என்ன யூஸ் பண்ணிக்கலாம்ன்னா. ம்..ரொம்ப சினிமாட்டிக்கா இருக்கோ. வேற என்ன ரீசன்” என்று அவள் சத்தமாக யோசித்ததை கேட்டு வாய்விட்டு சிரித்தான் அரவிந்த்.
“உங்கள மயக்குறதுக்காக பேசுனதா எடுத்துக்க கூடாதா” என்றான் அரவிந்த்.
“என்ன பாத்தா இந்த பேச்சுக்கெல்லாம் மயங்குற மாதிரியா தெரியுது”
“கண்டிப்பா இல்ல. அதும் இப்ப பேசி பாத்ததுக்கப்றம் உறுதியா தெரிஞ்சிடுச்சி” என்றவன் “எவ்ளோ நேரம் இப்படி நிக்க போறீங்க”
“இல்ல. அப்பாக்கு கால் பண்ணா கார் எடுத்துட்டு வருவாங்க”
“ஒரே ஊருக்குத்தான் போறோம். எதுக்கு அனாவசியமா அவர டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. என்ன பாத்தா அவ்ளோ பயமாவா இருக்கு” என்று அவளை பார்த்து கிண்டலாக அவன் கேட்டதும், அதற்கு மேல் மறுக்காமல் பேகை எடுத்து கொண்டு கிளம்பினாள் சந்தியா அவனோடு காரில் செல்வதற்கு.
அப்பொழுது பின்பக்கம் புல்லட் சவுண்ட் கேட்டதும் ஆர்வமாக திரும்பினாள். அவளை ஏமாற்றாமல் ஆதிதான் அவள் பக்கத்தில் வந்து வண்டியை நிறுத்தினான்.
அவனை பார்த்ததும் அரவிந்த் கடுப்பாக நடந்து காரின் அருகே சென்று நின்று கொண்டான். அவனுக்கு கொஞ்சமும் குறையாத கடுப்பில் ஆதியும் சந்தியாவை அதட்டினான்.
“இங்க எதுக்கு தனியா நிக்கிற. கௌரி எங்க”
“இன்னைக்கு எனக்கு மட்டும்தான் காலேஜ் பாஸ். வண்டி ரிப்பேர். அவர் கார்ல லிப்ட் தரேன்னு சொன்னார்”
“அவன் கார்ல எதுக்கு போற. உங்க அப்பாக்கு கால் பண்ணி வந்து கூட்டிட்டு போக சொல்லு. அது வரைக்கும் நா கூட நிக்கிறேன்”
“அதெல்லாம் முடியாது பாஸ். அப்பாக்கே கொஞ்சம் உடம்பு முடியல. அவர அலைய வைக்க முடியாது. வேணுன்னா நீங்க உங்க புல்லட்ல கூட்டிட்டு போங்க”
“அதெல்லாம் முடியாது. என் வண்டில இதுவரை எந்த பொண்ணையும் ஏத்துனதில்ல. கௌரி கூட வந்ததுல்ல”
“நோ ப்ராப்லம் பாஸ். அப்ப நா அவர் கார்லயே போறேன்”
“இரு நா ஆட்டோக்கு கால் பண்றேன்”
“ம்ஹும் என்னால வெய்ட் பண்ண முடியாது. ஒன்னு நீங்க அழைச்சுட்டு போங்க. இல்ல அவர் கார்ல போறேன்” என்று கிளம்பியவளை “வந்து என் வண்டில ஏறு” என்று அதட்டினான்.
குதியாட்டம் போட்ட மனதை வெளியில் காட்டாமல் மறுத்தவள் அரவிந்திடம் சென்று “சாரி சார். உங்க எதிரி, உங்க கூட வர என்ன அலௌவ் பண்ணல. எனக்கு உதவி பண்ண நினைச்சதுக்கு ரொம்ப நன்றி சார்” என்று கூறியவளிடம் “இட்ஸ் ஓகே சந்தியா. ஆனா என்ன அரவிந்த்ன்னு கூப்பிடுங்க” என்றதும் தயக்கமில்லாமல் “ஓகே அரவிந்த் பை” என்று சொல்லிவிட்டு ஆதியின் புல்லட்டில் சென்று ஏறிக்கொண்டு அவன் தோளை பிடித்து கொண்டாள் .
ஆதி “எதுக்கு தோள பிடிக்கிற. சைட்ல கம்பிய பிடிச்சிக்க வேண்டியது தான” என்றான்.
சந்தியா “என்ன பாஸ். நீங்க ரொம்ப பண்றீங்க. அங்கேயெல்லாம் பிடிச்சா நா விழுந்துடுவேன். வேணுன்னா டபுள் சைட் கால் போட்டு உக்காந்துக்கவா. எனக்கு கம்பார்ட்டபிளா இருக்கும்” என்றதும் வாயை மூடி கொண்டு வண்டியை கிளப்பினான் ஆதி.
அவன் பெண்களை புல்லட்டில் இதுவரை ஏற்றியதில்லை என்பதை அரவிந்தும் அறிந்திருந்தான். இப்பொழுது சந்தியாவை ஏற்றிக்கொண்டு போவதை யோசனையாக பார்த்தான்.
சந்தியா முகத்தில் பல்ப் போட்டது போல் சிரித்து கொண்டு , உலகத்தையே வென்ற எபக்ட்டில் ஆதியின் புல்லட்டில் அமர்ந்திருந்தாள். அவளை சைட் மிர்ரர் வழியாக பார்த்தவன் “அவன இதுக்கு முன்னாடியே தெரியுமா உனக்கு” என்று கேட்டான்.
“நோ பாஸ். இன்னைக்குத்தான் பஸ்ட் டைம் பார்த்தேன்”
“அவன் யாருன்னு உனக்கு தெரியுமா”
“தெரியாது பாஸ். ஆனா உங்க எதிரின்னு அவரே சொன்னாரு”
“ஓ எதிரியா இருந்துக்கிட்டு என்னோட ரிலேட்டிவான உனக்கு எப்படி ஹெல்ப் பண்ண வந்தானாம்”
“அதையும் கேட்டேனே. அதுக்கு நா அழகா இருக்கேனாம். அதனால எதிரின்னுல்லாம் பாக்க கூடாதாம்” என்றவளை மிர்ரர் வழியாக பார்த்தான் ஆதி.
அவன் பார்ப்பதை சந்தியா பார்க்காமல் பயணத்தை ரசித்து கொண்டு சாதாரணமாக அவன் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள்.
“நீ அழகா இருக்கன்னு அவனே சொல்லிருக்கான், அப்ப கூட அவனோட கார்ல போக போற”
“ஏன் இதில்லென்ன இருக்கு. சாதாரணமா எல்லா பொண்ணுங்கட்டயும் பசங்க இப்படி பேசறது தான”
“கார்ல ஏறினதுக்கு அப்புறம் உன்னட்ட அவன் தப்பா நடந்துக்கிட்டான்னா என்ன பண்ணுவ” என்று அவன் கேட்டதும்தான் சந்தியா சீரியஸ் மோட்க்கு திரும்பினாள்.
“பாஸ் ஒரு பையன் தப்பா நடந்துக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டான்னா கார்லதான் பண்ணனும்ன்னு இல்ல. அவர் ரோட்ல டென் மினிட்ஸ் என்னட்ட பேசிட்டு இருந்தாரு. அதும் தப்பான மோட்டிவ் இருக்கவரு நா ஆதியோட எதிரின்னு சொல்லிட்டு இருக்க மாட்டாரு. உங்களோட எதிரியா இருக்கவும் ஒரு தகுதி வேணும் பாஸ். அது அவர்ட்ட இருக்க மாதிரிதான் எனக்கு தெரியுது” என்றதும் சடன் ப்ரேக்கிட்டு வண்டியை நிறுத்திவிட்டு மிர்ரர் வழியாகவே அவள் கண்களை பார்த்தான்.
அவளும் அவன் கண்களோடு பார்வையை கலக்க விட்டாள். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக மெயின்ரோட்டில் இருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும் குறுக்கு ரோடு என்பதால் யாரும் இல்லை.
தூரத்தில் எதோ வண்டியிலிருந்து ஒலித்த ஹார்ன் ஒலியை கேட்டு திடுக்கிட்டு கண்களை விலக்கினான் ஆதி
“இருந்தாலும் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நாம நினைக்காத கோணத்திலிருந்து நடிச்சு நம்மள ஏமாத்தறவங்க நிறைய பேர் இருக்காங்க” என்று அவன் கூறியதை கேட்டு அமைதியானாள் சந்தியா. அவளுக்கே அந்த அனுபவம் இருந்ததே.
அவள் அமைதியானதை பார்த்தவன் “அவன் சொன்னது உண்மைதான். நீ ரொம்பவே அழகான பொண்ணுதான். இந்த ஊருக்கு ஒட்டாம தெரியற. அதனால ஜாக்கிரதையா இரு” என்றதும் சந்தியா
“ஓ நா அழகா இருக்கேன்னு தெரியிற அளவுக்கு என்ன சைட் அடிச்சிருக்கீங்க”
“ஏன் உன்னட்ட பேசும்போது உன்ன பாத்துதான பேசறேன். அப்படி பாத்தாலே தெரியாதா. நீ அழகான பொண்ணுன்னு”
ம்கூம் அதான பாத்தேன் . இவரு சைட் அடிச்சிட்டாலும் என்று முணுமுணுத்தாள் சந்தியா.
“என்ன முனகுற”
“சும்மா பேசிட்ருந்தேன் பாஸ். உங்களுக்கும் அந்த அரவிந்துக்கும் என்ன பிரச்சனை. பாக்க ஆள் சூப்பரா இருக்காரு. அவரு என்ன நார்த் இண்டியனா ”
“என்ன பெருசா சூப்பரா இருக்கான்” என்று பட்டென்று கேட்டான் ஆதி . கேள்வியில் பொறாமை இருந்ததோ என்று ஆராய்ந்த சந்தியா “என்ன பாஸ் இப்படி கேட்டுட்டிங்க. நல்ல கலரா, மீசையில்லாம சாக்லேட் பாய் மாதிரி இருக்காரு” என்றதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை ஆதி.
சந்தியாதான் தொடர்ந்து பேசினாள் “நல்ல வசதியும் போல அவர். ஸ்கோடா கார் வச்சுருக்காரே. நீங்க ஏன் பாஸ் ஒரு கார் வச்சுக்க கூடாது. உங்க வீட்ல இன்னோவா கார் இருந்தாலும் அது பேமிலி வெஹிகிள். உங்களுக்கு, இப்ப வந்துருக்கே தார் கார். ஜீப் மாடல்ல. அது வாங்குங்க. உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பரா இருக்கும். பாருங்க புல்லட்ல அலைஞ்சுதான் ரொம்ப கருப்பா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்”
“கொஞ்சம் வாய மூட்றியா. உன்ன யார் என்னோட வர சொன்னது. கலரா இருக்க அவன் கார்லயே போயிருக்க வேண்டியதுதான” என்று ஒரு உறுமு உறுமினான்.
சந்தியா இதற்க்கெல்லாம் பயப்படாமல் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.
இவ்வளவு பேச்சு வார்த்தையிலும் ஊர் வந்துவிட்டது. இவர்களை ஊரில் நிறைய பேர் ஆச்சரியமாக பார்த்தார்கள். அதில் மல்லிகாவும் அவளுடன் இருந்த இரண்டு தோழிகளும் அடக்கம்.
அவர்களில் ஒருத்தி “கடவுள் கரெக்டாதேன் ஜோடி சேக்கறார். ஆதி அண்ணா கம்பீரத்துக்கு பொருத்தமா அழகா ஒருத்தி வந்து போட்டா பாரு. அண்ணாவும் யாரையும் பைக்ல ஏத்த மாட்டாங். இப்ப அவள கூட்டிட்டு போறதிலிருந்தே விஷயம் எதோ இருக்குன்னு தெரியுதில்லோ” என்றதும் மல்லிகா உட்சபட்ச கொதிநிலைக்கு சென்றாள்.
சந்தியா வீட்டு வாசல் வந்ததும் இறங்கியவள், “உள்ள வாங்க பாஸ். எங்கம்மா சூடா ஸ்னாக்ஸ் செஞ்சு வச்சிருப்பாங்க. சாப்டுட்டு போகலாம்” என்றாள்.
இறுக்கமாக முகத்தை வைத்து அவளை பார்த்தவன் “முரளின்னு ஒருத்தன் வருவான். அவன்கிட்ட உன் ஸ்கூட்டி சாவிய குடு. அவனே ரிப்பேர் பண்ணி எடுத்து வந்து குடுத்துருவான்” என்று சொல்லிவிட்டு கிளம்ப போனவனிடம் சந்தியா
“என்னதான் அரவிந்த் கலரா அழகா இருந்தாலும், எனக்கு கருப்பா, பெரிய மீசையோட, வெள்ளை வேட்டி சட்டை போட்ருக்கவங்களைத்தான் பிடிக்குது பாஸ்” என்றுவிட்டு அவன் யோசிக்க ஆரம்பித்ததுமே உள்ளே ஓடிவிட்டாள் சந்தியா.
என்னவென்று வரையறுக்க முடியாத மனநிலையுடன் கிளம்பி சென்றான் ஆதி.
error: Content is protected !!