அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்- 8
அத்தியாயம் 8:
பண்ணையார்வூட்டினர்கள் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. வீடு மற்றும் அல்லியூரில் உள்ள கோவிலை தவிர எங்கும் செல்லாத ஜெயம்மாள் அனைவரையும் விரட்டிவிரட்டி வேலை வாங்கி கொண்டு இருந்தார். அவரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
Advertisement
இதைபார்த்த சகுந்தலா, “அக்கா!”… பாவம் அக்கா நம்ம வீட்டுல வேலை செய்யறவங்க. இரண்டு நாளா பெண்டநிமித்தீட்டிங்க. இதுக்கே அவங்க ஒரு வாரம் விடுமுறை எடுக்கனும்போல் இருக்கு… எதுக்குக்கா இத்தனை அயிட்டம் என்றவரிடம்…
Advertisement
Advertisement
“நீ சும்மா இருடீ”… புள்ளைய பரிசோதனை செஞ்ச டாக்டர் வேற ஒரு வாரம் பெட்ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க. வயித்துபுள்ளகாரிக்கு சத்தானதா ஆகாரம் கொடுக்க வேண்டாமா சகு? புள்ளக்கு முதல் பிரசவத்திலையே ரொம்ப சிரமமாக போச்சு, நம்ம வர்ஷா குட்டி கூட சத்து இல்லாம இல்ல பிறந்தா. ஆனா இந்த முறை அப்படி ஆகாம தாயும் சேயும் நல்லபடியா வந்தா போதும் சகு. நம்ம சங்கிலி கரும்புக்கு முப்பூசை போடறதா வேண்டிகிட்டேன் சகு என்றவரிடம்… “அக்கா நீங்க ஆசைபட்டமாதிரியே பண்ணுங்க நான் எதுவும் சொல்லவில்லை என புன்சிப்புடனே கூறினார் சகுந்தலா”.
Advertisement
நாச்சியார், “நீ என்ன வேண்டிக்கிட்டையோ அதை அப்படியே செஞ்சிடலாம் ஜெயா” முதலில் வாங்க கிளம்பலாம்… நல்ல நேரம் முடியங்காட்டியும் புறப்படனும் எனக்கூறி வெளியே சென்றுவிட்டார்.
சாரதாவோ, “உங்க ரெண்டு பேருல யாரு இந்த பிள்ளைக்கு அம்மானு தெரியல சகுந்தலா” என சிரிப்புடனே கூறினார்.
அதற்கு காயத்திரி, “அத்தை நம்ம வீட்டுல என்னைக்கு இந்த மாதிரி என்பிள்ளைங்க உம்பிள்ளைங்கனு இருந்து இருக்கோம்… இப்ப இருக்க, இங்க எல்லாரும் ஒன்றுதான் அத்தை” எனக்கூறிய காயத்திரி, நாயகியோடு வெளியே சென்றுவிட்டார். அவரின் வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.
“எங்ககாலத்திலும் உங்ககாலத்திலும் இருந்த ஒற்றுமை, உங்க பையனுங்க காலத்திலும் இருந்தா போதும் எனக்கு” இதைத்தவிர வேறு எதுவும் வேண்டாம் எனக்கூறயவரின் கையை பற்றிய சகுந்தலா, “நாம வாழ்ந்ததைவிட பசங்க இன்னும் ஒற்றுமையா இருப்பானுங்க அத்தை”… அதை எல்லாம் நாம கண்டிப்பா பார்க்கத்தான் போறோம் அத்தை. “ஆமாம் அத்தை”… “சகு சொன்னமாதிரி தான் இந்த பசங்க வாழ்க்கை அமையும் எனக்கூறினார் ஜெயம்மாள்”.
சகுந்தலாவோ மனதில் ‘நீங்க பெத்த பிள்ளையவிட, நான் பெத்த பிள்ளைங்களை மேல அத்தனை பாசம் வச்சி இருக்கீங்களே இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போறேனு தெரியலே அக்கா… ஆனா என்னால முடிந்தது, என் கடைசி மூச்சு இருக்க வரை உங்களுக்கு துணையாக இருப்பேன் அக்கா’ என யோசனையில் இருந்தவரை கலைத்தது உமாவின் குரல்.
உலாவும் மல்லிகாவும் இங்கு வேலைக்கு சோ்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
அடிபட்டதில் ஒரு வாரம் வீட்டில் ரெஸ்ட் எடுத்தவள், அடுத்த வாரமே பண்ணையாரின் வீட்டில் வேலைக்கு சோ்ந்துவிட்டாள்.
“அடிபட்ட அன்று இரவு உமா நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்ணனிடமும் மல்லியிடமும் கூறிவிட்டாள். கண்ணனின் முகத்தில் ஈ ஆடவில்லை.
கண்ணனுக்கு வெகுவாக பயம்பிடித்துக்கொண்டது. இருக்கமாக உமாவையும் கட்டிக்கொண்டான்… அவனின் கைகால் எல்லாம் நடுக்கம் எடுத்துவிட்டது”…எங்கே அக்காவையும் இழந்துவிடுவோமோ என்று.
குட்டிக்கு ஒன்று புரியவில்லை… “ஆனால் உமாவிற்கு ஏற்பட்ட காயம், அம்முவிற்கு ஏற்பட்ட அடி மற்றும் கண்ணனின் அழுகை எல்லாத்தையும் பார்த்ததும் அவனும் அழுதுவிட்டான்”.
“இந்த பரமனின் வருகை மற்றும் உமா, அம்முவிற்கு ஏற்பட்ட ஆபத்து, கண்ணனின் இந்த நடுக்கம் எல்லா பார்த்ததும் அவளுக்கும் பயம் ஆரம்பித்துவிட்டது”. அந்த பயத்தை போக்க தீர்வையும் கண்டுவிட்டாள் மல்லி. உமா பற்றிய அத்தனை இரகசியமும் அறிந்தே மல்லி அல்லவா?. பரமன் பற்றியும் மல்லிக்கு தெரியும்.
[the_ad id=”6605″]
“தன் அப்பா வந்தவுடன் அதை கூறி, அதற்கான வேலையையும் முடித்துவிடவேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டாள் மல்லி”.
பின் கண்ணன், குட்டி இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற உமாவின் சமாதானம் எதுவும் செல்லுபடி ஆகவில்லை. பொருத்துபொருத்து பார்த்த மல்லி, “கண்ணா நீ இப்படி இருந்தா எப்படி? அக்கா சாப்பிட்டுவிட்டு மாத்திரை போடவேண்டாமா? ஏற்கனவே அம்மு வேற சாப்பிடாம படுத்துவிட்டா … மாத்திரை போட்டாதான அவ சீக்கிரமா குணமாகமுடியும்”…
குட்டி இங்க பாருடா… உன் அக்கா எவ்வளவு தைரியமா சண்டை போட்டு மீண்டுவந்தா… அதை நினைத்து பொருமைபடனும் இல்லயா குட்டி என்ற மல்லியிடம்….
“ஆமாம் மல்லிகா!”… அக்கா வச்சி இருக்க கத்தி எவ்வளவு கூர்மையா இருக்கும் தெரியுமா? அதை பார்த்தா பயமா இருக்கும் தெரியுமா? அக்கா எப்பவுமே தைரியமாதான் இருப்பாங்க என்றவனிடம்…
“பார்த்தியா குட்டி நீயும் பயந்துட்ட இல்லையா? அதே மாதிரி தான் அந்த ஆளும் பயந்துட்டான். அது மட்டுமல்ல குட்டி, அந்த ஆளை நம்ம பண்ணையார், பஞ்சாயத்து தலைவர் மகன்கள் எல்லாம் சேர்ந்து அடிச்சி போலீஸ் கிட்ட புடிச்சி குறித்துவிட்டாங்க… அதனால இனி அந்த பயம் இல்லாம நிம்மதியாக இருக்கலாம் குட்டி”… அங்க அக்கா பாரு அவ ரொம்ப வலியில இருக்கா பாரு. உமாக்கு சாப்பாடு குடுத்து படுக்கவைக்கலாம் வா எனக்கூறி அழைத்து சென்றுவிட்டாள் மல்லி.
அவர்கள் சென்றவுடன் கண்ணன் உமாவின் கையை பிடித்துக்கொண்டான்… “அது அவனுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தா இல்லை அவளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்ததா என தெரியவில்லை.
இருந்தாலும் அந்த பிடி உமாவிற்கு ஆயிரம் மடங்கு தைரியத்தை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் அவளுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்துகொள்ளலாம் என்ற உறுதியையும் கொடுத்தது”.
அந்த உறுதியானது தனக்கு பக்கபலமாக ஒரு தோள் கிடைத்தது என்றும், தனக்கென இவர்கள் இருக்கிறார்கள் என்றும் நினைப்பு போதுமானதாக இருந்தது அவளுக்கு.
உமாவின் மனமே, ‘இவர்களின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பு. இவர்களின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு. இவர்களின் சந்தோசத்திற்கும் நான் பொறுப்பு என நினைத்துக்கொண்டாள். அந்த நினைப்பு எத்தனை கஷ்டம் வந்தாலும் எதிர்த்து போறாடலாம் என்ற உறுதியை கொடுத்தது’.
சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணன், “அக்கா வாங்க… வந்து புடவை மாதிக்குங்க. புடவை எல்லாம் இரத்தம் இருக்கு எதாவது கிருமிதொற்று வந்திடபோகுது”.
“இல்லடா கண்ணா”… நான் குளித்துவிட்டு வந்துவிடறேன்டா. இந்த இரத்தம் எல்லாம் ஒருமாதிரி இருக்கு கண்ணா.
அவளின் புடவையில் இருந்த இரத்தத்தை பார்த்த கண்ணன், “சரிக்கா… நீ போய் குளித்துவிட்டு வா… கட்டு நனையாம பாரத்து குளித்துவிட்டு வாங்க” எனக்கூறி சென்றுவிட்டான்.
குளித்துவிட்டு வந்த உமா அம்முவை எழுப்பி குளிக்க சொல்லி அனுப்பி வைத்துவிட்டு வந்தவள் அப்படியே அமர்ந்து விட்டாள்.
சமையலறையில் குட்டியும் மல்லியின் சேர்ந்து சாப்பாட்டை சூடு செய்து கொண்டு இருந்தனர். அம்மு வந்தவுடன் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்… சாப்பிட்டவுடன் அம்மு அப்படியே தூங்கிவிட்டாள். பின் அனைத்து பாத்திரங்களையும் கண்ணன் மற்றும் குட்டியும் சேர்ந்து கழுவிவைத்தனர்.
மல்லி வீட்டு கூட்டியவள், அனைவருக்கும் பாயைவிரித்து படுக்கையை தயார் செய்தாள்.
அனைத்து வேலையையும் முடித்துவிட்டு அனைவரும் படுத்துவிட்டனர்.
*********************//**************************×*****×********************************
குடோனுக்கு சென்று வேலையை முடித்து விட்டு வந்த வெற்றியின் முகம் அத்தனை இருக்கமாக இருந்தது.
அதை உணர்ந்த விஷ்ணு, “டேய் வெற்றி… என்னடா ஆச்சி… ஒரு மாதிரியா இருக்க என்றவனிடம்… அது எல்லாம் ஒன்னும் இல்லடா விஷ்ணு”.
அருண், “உமாகாக நீ ஏண்டா அண்ணா இவ்வளவு ரியாக்ட் பண்ற? அவங்க யாரோ? நாம யாரோ? என்ன விஷயம்டா?” என்றவனிடம்…
வெற்றி, “அவ தான்டா நம்ம வீட்டுக்கு மூத்த மருமகள். அவ மட்டும்தான் இந்த வெற்றிக்கு காதல் மனைவியாக முடியும். அவளால் மட்டும்தான் நம்ம வீட்டை உயிர்போடு வச்சிக்கமுடியும். அவ மட்டும்தான் உங்களுக்கு அண்ணியா வரமுடியும்” என்றவனை இளையவர்களும் இருவரும் இமைக்காமல் பார்த்தனர்.
விஷ்ணு, “டேய் எப்படிடா!”… அவங்க இதுக்கு ஒத்துக்குவாங்களா வெற்றி? என்றவனிடம்… “கண்டிப்பா ஒத்துக்கமாட்டா… உமாவிற்கு தங்கை, தம்பதிகளுக்கு பிறகு தான்டா எல்லாம். என்னமட்டுமல்ல, யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா… “அவ்வளவு ஏன்?” நிச்சியமா அவ கல்யாணம் பண்ணிக்க நினைச்சு கூட பார்த்து இருக்கமாட்டா” என உமாவின் மனதை தெளிவாக கூறினான் வெற்றி.
நீ சொல்றத பாத்தா அவங்க தம்பி, தங்கை பசங்களை வளர்த்துகிட்டு இருந்துடுவாங்கனு சொல்லுவ போல் இருக்கே வெற்றி என்ற அருணிடம்… “கண்டிப்பா என் மகாம்மா அப்படித்தான் சொல்லுவா அருண்”. அவ நிறைய கஷ்டங்கள், வலிகள் பட்டு இருக்கானு தோனுதுடா என்றவனிடம்…
விஷ்ணு, “அப்படி எதாவது இருந்தா அதை நாம பார்த்துக்கலாம் வெற்றி”. .. கண்டிப்பா எந்த ஒரு பிரச்சினையும் அவளை அண்டாம பார்த்துபேன்டா. பார்த்துப்பேன் இல்லடா வெற்றி… பார்த்துப்போம் சொல்லுடா என்ற அருணை பார்த்து புன்னகைத்தான் வெற்றி. அதையே ஆமோதித்தான் விஷ்ணு.
இப்படியாக பேசிக்கொண்டே வீடுவந்துடுச்சி சேர்ந்தனர் இந்த இளைஞர்கள்.
வீட்டிற்கு வந்தவர்களை மொத்த குடும்பமும் வரவேற்றது.
வீட்டிற்கு வந்தவுடன் அருண் ஜெயாவின் மடியில் படுத்துக்கொண்டான். இதை பார்த்த சந்திரன், “டேய் நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதடா? உன் பெரியம்மா மட்டும் தான் தெரியுமா” என்றவரிடம்…
அதற்கு நாச்சியார், “அவன் அப்படித்தானு உனக்கு தெரியாதா? அவனுக்கு பெரியம்மாக்கு அப்புறம்தான் எல்லாரும் இங்க இருக்கவீங்க எல்லாருக்கும் தெரியுமேடா”. அவனை வம்பிளுக்காம வந்து எல்லாரும் சாப்பிடுங்க என அழைத்தார்.
வெற்றியும் விஷ்ணுவும் இவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே குளித்து வந்துவிட்டனர். வந்தவர்கள் கழுத்தைபிடித்து தல்லாத குறையாக அருணை அனுப்பிய பிறகு தான் அருணும் சென்று குளித்துவிட்டு வந்தான். அதற்குள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அனைவரிடமும் சொல்லிவிட்டான் வெற்றி.
தர்மன், “என்ன வெற்றி சொல்லுற? நம்ம ஊருக்குள்ள வந்து ஒரு பெண்ணுட்ட தப்பா நடந்து இருக்கிறானுங்க… நீ அமைதியாவா இருந்த வெற்றி? அவனை எல்லாம் வெட்டி போடனும்” என ஆவேசமாக கூறியவரிடனம் விஷ்ணு, அந்த பெண்ணு கொடுத்து அடியிலயும், போட்டு வெட்டுகாயத்துலையும் அவன் எழுந்திருக்க எப்படியும் ஒரு ஆறு மாதம் ஆகும்பா… என்னா அடி… எவ்வளவு காயம் தெரியுமா என்றவனிடம்…
ஜெயா, “நம்வூரு பெண்ணுங்க எல்லாம் இந்த உமா புள்ள மாதிரி தைரியமா இருந்தா நித்தமும் புருசங்கிட்ட வாங்கர அடி மிச்சம். நித்தமும் குடிச்சிபுட்டு வந்து மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கறானுங்க… குடிச்சுபோட்டு வரவனுங்கள ரெண்டு சாத்துனா இவனுங்க இப்படி பண்ணுவாங்கலா? பெண்டாட்டி சாப்பாடு போட மாட்டா, அடிப்பானு பயம் இருக்கும்.
என்னா அடிச்சாலும் பொண்டாட்டி திருப்பி அடிக்கமாட்டாங்கிற தைரியம் தான், இவனுங்களை இப்படி பண்ண வைக்குது என்று பொருமியவரை…
வெற்றி, “அம்மா இந்த நிலையும் மாறும்மா”… அதற்கான முயற்சியை சீக்கிரமா நாங்க எடுக்கறோம் ம்மா. நீங்க நினைச்சமாதிரி நம்ம ஊரை மாத்திடலாம். அது உடனடியா நடக்குனுமுன்னு நான் உத்திரவாதம் தரமுடியாது. ஆனா என்னால முடிந்த அளவுக்கு சீக்கிரமா இந்த நிலைமையை மாத்த முயற்சி பண்றோம் அம்மா.
அதற்கு காயத்திரி, “வெற்றி கண்ணா இந்த ஊர் ஆம்பளைங்களுக்கு உன்னைகண்டா கொஞ்சம் பயம் இருக்குடா”… அதுலயும் நீ வெளிநாடு போறதுக்கு முன்ன ஒருவனை அடிச்சையே அப்ப இருந்து பயத்தோடதான் இருக்காங்க… நீ முயற்சி பண்ணுனா எல்லாம் முடியும் வெற்றி என்றவரிடம்… சரிங்க சித்தி இதனால உங்களுக்கு சந்தோசம்னா கண்டிப்பா செய்கிறேன் என்றவன்…
சித்தி அந்த ஆளு புள்ளதாச்சி பெண்ணை போய் மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சா யாருக்கு தான் கோபம் வராது சித்தி? இன்னும் கொஞ்சம் வேகமா அவன் தள்ளிவிட்டு இருந்தா அந்த பெண்ணு அப்பயே செத்துபோய் இருக்கும். அதுதான் வந்த கோபத்தில அடிச்சிடேன் என்ற வெற்றியிடம்…
சந்திரன், “நீ விட்ட அடிச்ச அடியில் அவன் ஒரு மாசமா படுக்கையில் இல்ல இருந்தான். அதை பார்த்து பயந்துதான் நம்ம ஊர் ஆம்பளைங்களுக்கு உம்மேல கொஞ்சம் பயம் வெற்றி”.
சகுந்தலா, “ஆமாம் வெற்றி!”… நீ வரது தெரிஞ்சதுமே அவங்க எல்லாம் முதல் நாளே குடிக்கரதவிட்டுவிட்டு பொட்டிபாம்பா அடங்கி ஒடுங்கி வேலைக்கு போனாங்கலாமா வெற்றி. அதனால நீ இன்னும் கொஞ்சம் வெறப்பா வெளிய இருடா, அதுதான் நம்ம ஊர் பொம்பளைங்களும் நிம்மதியா இருப்பாங்கடா என்றவர்களை…
விஷ்ணு, “இப்படியே அவனை எல்லாம் கொஞ்சுங்க அவன் ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி வரட்டும். நல்ல குடும்பம்டா சாமி” என்றவனை பார்த்து சாரதா முறைத்த முறைப்பில் அமைதியா ஜெயாவின் பக்கத்து சென்று அமர்ந்து கொண்டான். “அவன் எப்பொழுதும் அப்படிதான் அடி, திட்டுகளில் இருந்து தப்பிக்க ஜெயாவின் பின் ஒழிந்து கொள்வான்… அவர் அவனை யாரும் அடிக்கவிடாமல் அரவணைத்து கொள்வார்கள்”.
அப்பொழுது நாச்சியார், பேசுனது போதும் வந்து சாப்பிட்டு படுங்க எனக்கூறி அனைவரையும் சாப்பிடவைத்தார்.
சாப்பிட்டு முடித்ததும் மீனா, “வெற்றி அண்ணா எனக்கு அக்காவ பாக்கனும்போல் இருக்கு. நாம்ப ஊருக்கு போய்ட்டு வந்துடலாம்மா அண்ணா”..
போலாம் குட்டிமா… “ஆனா எனக்கு ஒரு ஒரு வாரம் டைம் தா, அப்புறமா போலாம்டா” என்றவனிடம்… “போங்க அண்ணா… நீங்க இப்படி தான் சொல்லுவீங்க, அப்புறமா கூட்டிகிட்டு போகமாட்டிங்க எனக்கு நல்லா தெரியும் போங்க”.
“மீனு குட்டி விடுடா சித்தப்பா உன்ன கூட்டிக்கிட்டு போறேன்டா. அடுத்தவாரம் சித்தப்பாக்கு மூணாறில் ஒரு வேலை இருக்கு உன்ன அங்கவிட்டுவிட்டு வேலைய முடிஞ்சுதும் சித்தப்பா வரும்போது உன்னைய கூட்டிக்கிட்டு வந்துடறேன் மீனு” என்றவரிடம்…
“சரிங்க சித்தப்பா”… அதுக்குள்ள நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, நம்ம வர்ஷா குட்டிக்கும் அக்கா, மாமாக்கும் துணி, பாப்பாக்கு பொம்மை எல்லாம் வாங்கனும் சித்தப்பா. இப்போது நான் படுக்கிறேன், அப்போதான் நாளைக்கு நேரமா எழுந்து கடைத்தொருவுக்கு போகனும், அதனால நான் தூங்கிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்.
அவள் செல்வதை பார்த்த அருண், “ஏய் மீனு!”… நாளைக்கு கடைக்கு போக இப்ப போய் தூங்கறேனு போறயே பாப்பா… வாடா அண்ணா நாளைக்கு கூட்டிகிட்டு போய் உமக்கு தேவையான எல்லாதையும் கூட இருந்து வாங்கிதறேன்டா குட்டிமா. நீ போய் இப்ப ரிலாக்ஸா தூங்கு என்றவனிடம்… “சரிண்ணா”… Goodnight எனக்கூறி சென்றுவிட்டாள் அந்த வளர்ந்த குழந்தை.
அவள் போது பார்த்த வெற்றி யோசனையில் ஆழ்ந்துவிட்டான். அதை பார்த்த சகுந்தலா, “என்ன வெற்றி யோசனையா இருக்க? வேற ஒன்னும் இல்ல சித்தி… எல்லாம் நம்ம மீனுவ நினைத்துதான். ஜெயந்திக்கு மதன் மாதிரி, இவளுக்கும் சரியான வாழ்க்கை துணை அமைந்த போதும் சித்தி”.
அதற்கு சகுந்தலா, “நம்ம மீனு மனசுக்கு அவ வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருப்பா வெற்றி. அதை எல்லாம் பார்த்து நாம்பளும் சந்தோசம் படத்தான் போறோம்” என்றவரிடம்…
நாச்சியார், “என் வீட்டு இளவரசி தாங்க தான் என் பேரன் கார்த்தி இருக்கானே… நம்ம மீனுமேல உயிரையே வச்சி இருக்கான். அதுமட்டமா? என்மவ விசா எப்ப மீனவ அவ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு பேசலானு தவம்கிடக்கிறா. நீங்க என்னடானா இப்படி யோசனையில இருக்கீங்க?” என்றவர்….
சந்திரனிடம் நாச்சியார், “சந்திரா இன்னைக்கு வாக்கு கேட்டதுல பூசாரி அவங்களே வருவாங்க, கல்யாணம் நல்லா சிறப்பா நடக்கும்னு சொன்னாங்க… நம்ம மாரியம்மன் கோயிலு நோம்பிபோடங்காட்டியும் நிச்சியம் முடிந்துவிட்ட பரவாயில்லை நினைக்கிறேன்”.
சந்திரன், “அம்மா பூசாரி சொல்லிட்டார் இல்ல கண்டிப்பா நல்லது நடக்கும் ம்மா”… சரிசரி எல்லாரும் போய்படுங்க எனக்கூறி அனுப்பிவைத்தார்.
அங்கு கார்த்திக் மீனாவின் புகைபடத்துடன் பேசிக்கொண்டு இருந்தான்.
“மீனு குட்டி சீக்கிரமா இந்த மாமா வந்து உன்னைய கூட்டிக்கிட்டு வந்துடறேன்டா”…
“இந்த பெருசுங்க எல்லாம் சேர்ந்து நமக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறமாதிரி தெரியல. நானே நாளைக்கு இதுக்கு ஒரு முடிவு பண்றேன்டா மீனுகுட்டி”.
உன்ன நினைச்சாளே இந்த பாட்டு தான் தோனுதுடா மீனுகுட்டி என்றவன் தன் மொபைலில் பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டான்…
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி….
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட
மங்கையரில் மகராணி ….
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட
மங்கையரில் மகராணி…..
அப்பொழுது தான் மீனு அவனுக்கு அழைத்தாள்.
உடனே எடுத்தவன் மீனாவிடம், “என்னடா மீனுகுட்டி போன் எல்லாம் பண்ணி இருக்க!”… “என்ன விசயம்”… மீனா, “அத்தான் உங்களை பாக்கனும்போல் இருக்கு… எப்ப ஊருக்கு வருவீங்க? நீங்க வரும்போது அத்தை, மாமாவையும் கூட்டிகிட்டு வாங்க” என்றவளிடம்…
கார்த்திக் சீக்கிரமா வறேன்டா… வரும்போது உனக்கு ஒரு subrise ஓடவறேன் மீனு என்றவனிடம்… “சரிங்க அத்தான்”… என்ன ரகசியம் அது சொல்லுங்க. அது முடியாது மீனு குட்டி. “போங்க அத்தான்… நான் உங்க மேல கோவமா இருக்கேன்” என்றவளிடம்…
கார்த்திக், “என் மீனுகுட்டி எப்படி சமாதானம் பண்ணனும் எனக்கு தெரியும்மே என்றவன்… உனக்கு பிடிச்ச பாட்ட அத்தான் பாடப்போறேன் அதகேட்டு மீனுகுட்டி சமாதானம் ஆகிடுவாளாம்”.
அப்படியா அத்தான்… “என்ன பாடபோறீங்களா அத்தான்!”… அதுவும் எனக்கு பிடித்த பாட்டா? அப்படி என்ன பாட்டு… சீக்கிரமா பாடுங்க பாக்கலாம் அத்தான்.
இருபாடறேன்…
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி சொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி சொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
“கார்த்திக் உணர்வு பூர்வமாக பாடிக்கொண்டு இருக்க, மீனா ஆழ்ந்ததூக்கத்தில் இருந்தாள். அவள் தூக்கத்தில் இருப்பதை உணர்ந்தவன் தனக்கள்ளே சிரித்துக்கொண்டே போனை ஆப் செய்துவிட்டான்”.
இதுதான் வழக்கமாக இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வு, அவளின் கல்லம்கபடம் இல்லாத குணத்தால் தான் மீனுவின் மீது கார்த்திக் காதல் வந்தது. அவளுக்காக தான், “மீனா விருப்பப்பட்டு கேட்பதற்காக தான் அவன் பாட்டு கத்துக்கொண்டான். அவளுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டான் இந்த அன்புக்காதலன்”.
பின் அவன் தன்னவளுடைய நினைவுகளை சுமந்துகொண்டே தூங்கிவிட்டான்.
***************×************************************×*********
அடுத்தநாள் காலையில் ஊரில் இருந்து வந்த சுந்தரம் நேராக உமாவின் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை விசாரித்து விட்டு, மல்லியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
வீட்டிற்குள் வந்ததும் மல்லி சுந்தரத்திடம், “அப்பா நீங்க பண்ணையார்வூட்டினர்கிட்ட கேட்டு அங்கேயே ஒரு வேலையை எங்க ரெண்டுபேருக்கும் வாங்கி தாங்க… இனி வெளியே வேலைக்கு போது உமாவுக்கு நல்லது இல்லை அப்பா” என்றவளிடம்…
சுந்தரம், “சரிம்மா”… நான் பெரியம்மாகிட்ட கேட்டு சொல்லறேன் எனக்கூறி குளிக்க சென்றுவிட்டார். அவர் சென்றதும் ‘மல்லி தன் அறைக்கு சென்று அங்கு உள்ள ஒரு பழைய பெட்டியை திறந்து அதில் உள்ள புகைப்படத்தை பார்த்து மானசீகமாக பேசிக்கொண்டு இருந்தாள்’… “எட்டுவருசமா உன்கிட்ட என்மனசுல இருக்கிறது சொல்லனும்னு தவிக்கிறேன்டா… “ஆனா!” உனக்கு நான் இருக்கிறது கூட தெரியுமா இல்ல தெரியாதானு எனக்கு தெரியலடா?… என் காதல் கைசேருமானு தெரியல?… ஆனா என் உயிர் இருக்க வரை நீ மட்டும் தான் என்மனசுல இப்ப மச்சி. உனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து, நீ பேரம்பேத்தி எடுத்தா கூட உம்மேல இருக்க காதல் மறையாது மச்சி”…
நான் உன்னை காதலிக்கிறது உமாவையும் தவிர வேற யாருக்கும் தெரியாது மச்சி. நான் ஒடஞ்சி போய் இருக்கும்போது எல்லாம் தேத்தி சரிபண்ணுவா மச்சி. “உமா என்ன சொன்ன தெரியுமா மச்சி? கண்டிப்பா நீயா தேடிவந்து என்னைய கட்டிக்குவியாம் மச்சி. அந்த நாளுக்காக நான் என் ஆயுள் முழுவதும் கூட காத்துகிட்டு இருப்பேன் மச்சி… அதுக்காக என்னைய ரொம்ப காக்கவைக்காம சீக்கிரமா வந்துடுமச்சி” எனக்கூறியவள்… தந்தை வரும் அரவம் கேட்டு புகைபடத்தை பெட்டியுனுள் வைத்துவிட்டு வைத்துவிட்டு குளிக்க சென்றுவிட்டாள் மல்லி.
அங்கே உமாவிட்டில் “குட்டி, கண்ணன் அனைவருகமாக சேர்ந்து உமா சொல்லசொல்ல அனைத்து வேலையையும் முடித்துவிட்டு, அவர்கள் குளித்துவிட்டு வந்த பின் உமாவையும் அம்முவையும் குளிக்க அனுப்பினர்”… அவர்கள் வந்தவுடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
இப்படியாக ஒரு வாரம் சென்றது… மயிலு பாட்டியின் வைத்தியம் மற்றும் மருந்தின் வீரியத்தாளும் விரைவாக குணமாகிவிட்டாள் உமா.
அடுத்த வாரமே சுந்தரத்தின் சிபாரிசால் பண்ணையாரின் வீட்டில் வேலைக்கு சென்றனர் மல்லியும் உமாவும். அவர் சென்றதும் மரியாதை உடனே அழைத்துக்கொண்டார் நாச்சியார்.
அவர்களுக்கு அங்கு சமையல் வேலை கொடுத்தனர். இவர் அனைவரும் பேசி கொண்டு இருந்த போது தான் நாச்சியாருக்கு போன் வந்தது. அதில் அந்தபக்கம் இருப்பவர் சொன்ன செய்தியில் நாச்சியாரின் முகம் பிரகாசமாக மாறிவிட்டது.
அன்பு தொடரும்…
