Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

 

HAI READERS I REALLY FEEL SORRY FOR NOT GIVING THE EPISODES REGULARLY.PLEASE BEAR WITH ME FOR THAT FAULT. IHAVE POSTED 2 UDS TODAY N KINDLY LET ME KNOW UR FEEDBACKS. THANK U ALL FOR UR GENUINE SUPPORT.

 

8



Advertisement

 

அன்று காலை ரம்யா அலுவலகம் செல்ல ஆயத்தம் செய்து  கொண்டிருந்த பொழுது ,தீபா பரபரப்புடன் ஓடி வந்தாள்.

ரம்யா இந்த வார பிலிமாலயா பார்த்தாயா? உன் போட்டோ வந்திருக்கு.

Advertisement

வாட் நான்சென்ஸ். பிலிமாலயாவில் என் போட்டோ வர நான் என்ன சினிமா நடிகையா?

Advertisement

அதென்னவோ நீயே பாரு……..

பார்த்தாள் .அவள் போட்டோ தான். சென்ற மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ப்ரீவ்யூ தியேட்டரில்  ப்ரேம் அவளைச் சீண்டியபொழுது அவள், அவனை தற்செயலாகத் தலையில் தட்டியபொழுது  எடுக்கப்பட்டிருந்தது.

 

Advertisement

ப்ரேம்குமார் திருமணத்திற்கு முன்பே தன் வருங்கால மனைவியால் குட்டப்படுகிறார். ரம்யா  கல்லூரியில் அவருடன் சேர்ந்து படித்தவர். கல்லூரிக்காதல் கல்யாணத்தில் முடியுமா?

புஃல் ஷிட்….

ரம்யா எரிச்சலுடன் பத்திரிக்கையைத் தூக்கி எறிந்தாள். நகம் கடித்து யோசித்தாள்

ஒரு வேளை இது ப்ரேமின் விஷமமாக இருக்குமோ?அன்று கூட தியேட்டரில்  வினோத்தைப் பார்த்து கண் சிமிட்டினானே. இந்த ஸ்டில் எடுக்கத் தானா? பத்திரிக்கையில் பெயர் வந்தால் அவள் பயந்து அவன் ஆசைக்கு சரி சொல்லிவிடுவாள் என்று  எதிர்பார்க்கிறானா? முட்டாள்…….

சுர்ரென்று தலைக்கு ஏறிய கோபத்தீக்கு அம்மாவின் புலம்பல் வேறு எண்ணெய் ஊற்றியது.

பத்திரிக்கையை தூக்கிப் போட்டுட்டா எல்லாம் சரியாயிடுமா? கல்யாணப் பத்திரிக்கையில்  வரவேண்டிய பேரு இப்படிக் கண்ட பத்திரிக்கையிலும் வந்தால் நம்ம குடும்ப மானம்  மரியாதை எல்லாம் என்ன ஆகறது? அப்பவே அடிச்சுக்கிட்டேன். இந்த ரிப்போர்ட்டர்  வேலை எல்லாம் வேண்டாம்னு. அப்பாவும் பெண்ணும் கேட்டிங்களா? இல்லையே.

இப்போ அனுபவிக்கிறோம்…..

ரம்யாவிற்கு இப்பொழுது தீபாவின் மீது கோபம் வந்தது.

சட்  அசட்டுப் பெண் நான் தனியாக இருக்கும் பொழுது அந்தப் பத்திரிக்கையைக் கொண்டு  வந்து காட்டியிருக்க் கூடாதா? அம்மாவும் இருக்கும் பொழுதா காட்ட வேண்டும்?

வாஸ்தவத்தில் அம்மாவின் புலம்பல் நியாயமானது தான் என்று ரம்யாவிற்கே தெரியும்.  ஆனால் என்ன சொல்லி அம்மாவைச் சமாதானப்படுத்துவது என்று தான் புரியவில்லை.

ப்ரேமிடம் விளக்கம் கேட்க எண்ணி அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

ப்ரேம்…….திஸ் இஸ் ரம்யா. இந்த வார பிலிமாலயால, உங்களையும் என்னையும்  இணைத்து ந்யூஸ் வந்திருக்கே. உங்க வேலையா அது?

ரம்யா பகிரங்கமாகவே கேட்டு விட்டாள். மறு முனையில் சற்று நேரம் பேச்சேயில்லை.

பின் மெதுவாகச் சொன்னான் ப்ரேம். சாரி ரம்யா என்று.

ரம்யாவின் ஊகம் என்றுமே தப்பானதில்லை. இந்த முறையும் அது நிரூபணமானதில்  ஏற்பட்ட வருத்தம் ரம்யாவின் வார்த்தைகளில் அனலாக அடித்தது.

இது உங்களுக்கே அநாகரிகமான செயலாத் தெரியலையா ப்ரேம்? சத்தியமா நான் இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. உங்க காதலை மட்டும் தான் நான் இதுவரை  தவிர்க்க நினைத்தேன். ஆனால் இப்போ உங்களுடைய நட்பு கூட அநாவசியமோன்னு  மனசிலே தோணிடுச்சு. சாரி டூ ஸே திஸ். இனிமேல் என்னை சந்திக்க முயற்சி  பண்ணாதிங்க. குட்பை……

அவனை அறைவதாக எண்ணி ரிஸீவரை அறைந்து அதனிடத்தில் வைத்தாள் ரம்யா.

 

 

மழை சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது. கான்வென்ட் சீருடையில்  மழையில் நனைந்து கொண்டே ஒடிய சிறுமிகளைப் பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தாள் ரம்யா. மேனியோடு ஒட்டிக் கொண்ட ஈர உடை பலரின் கவனத்தை ஈர்ப்பதைக் கண்டு உடல் அவமானத்தில் கூசியது.

காலையில் வெகு நிர்மலமாக இருந்த வானம் எட்டே மணி நேரத்தில்

தன் துக்கத்தைக் காட்டும் என்று முன்பே தெரிந்திருந்தால் குடையாவது எடுத்து வந்திருக்கலாம்.

ஸ்கூட்டியும் இன்றைக்குப் பார்த்து மக்கர் செய்ய வேண்டுமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது சரியாகத் தான் இருக்கிறது.

யோசனையாக நடந்ததில் பஸ் நிறுத்தத்தைக் கடந்து வந்துவிட்டது புரிய, திரும்ப நினைத்த பொழுது சன்னமாகத் தூறிய வானம் இப்பொழுது கோபமாகக் கொட்டத் தொடங்கியது.

ரம்யா ஒதுங்க இடம் தேடினாள். மழையின் காரணமாக ஆறு மணிக்கே இருள் சூழ்ந்து ஆலமர விழுதுகள் கரிய நிழல்களாக அச்சுறுத்தின. ஆட்டொ டாக்ஸி என்று அன்று பார்த்து அனைத்தும் அஸ்தமனமாகி இருந்தன.. மழையும் இருளும் ஏற்படுத்திய பயத்தில் ரம்யா  யாரிடமாவது லிஃப்ட் கேட்கத் தீர்மானித்தாள்.

அடுத்த நிமிடமே அவ்வழியில் வந்த கார்  ரம்யாவின் கத்தல் கேட்கத்தாலோ என்னவோ நிற்காமலேயே சென்றது. ஆலமர நிழலில்

இருந்து வெளிப்பட்ட ரம்யா சாலைக்கே சென்று கட்டை விரலை உயர்த்தி கத்த, அடுத்து வந்த புண்ணியவான், நல்லவேளையாக சில அடிகள் கடந்து சென்று காரை நிறுத்தினார்.

ரம்யா அருகே ஓடினாள்.

சார்……ப்ளீஸ், தெரியாமல் இந்த மழையில் வந்து மாட்டிக்கிட்டேன். சாந்தோம் வரை லிஃப்ட் தர முடியுமா?………

.கெஞ்சலாகப் பேசியவாறு விழிகளை உயர்த்தியவள் திடுக்கிட்டாள். ஏனெனில் ட்ரைவிங் சீட்டில் சலனமேயின்றி அமர்ந்திருந்தவன் ராஜ்குமார். சட்டெனப் பின்வாங்கினாள்  ரம்யா .

சாரி பார் த டிஸ்டர்பென்ஸ்……….

மெதுவாக முணுமுணுத்தவளைக் கூர்ந்து நோக்கிய ராஜ்குமார்  முன் கதவைத் திறந்து கெட் இன் என்றான்.

நோ, தாங்க்ஸ் நான் தெரியாமல் கூப்பிட்டதற்கு மன்னியுங்கள். உங்கள் உதவிக்கு வந்தனம்.

வேகமாகப் பேசிவிட்டு திரும்ப முற்பட்டவளைக் கையைப் பற்றி சரேலென உள்ளே  இழுத்தான் ராஜ்குமார். தடுமாறி சீட்டில் விழுந்தவளை லட்சியமே செய்யாமல் கதவை  அறைந்து மூடிவிட்டு காரைக் கிளப்பினான்.

யூ….யூ….ரோக்….எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை…..என்னை

கோபத்தில் வார்த்தை வராமல் தவித்த ரம்யாவைத் திரும்பிப் பார்த்தவன் சட்டென்று   விழிகளை விலக்கிக் கொண்டான். அதன் காரணம் புரிந்த பொழுது ரம்யாவால் அவன்  கண்ணியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை

வலக்கையால் டாஷ்போர்டைத்  திறந்தவன் ஒரு டர்க்கி டவலை எடுத்து நீட்ட, அதைத் தயக்கத்துடன் வாங்கிய ரம்யா  தோளைச் சுற்றிப் போர்த்திக் கொண்டாள். மௌனமாக அமர்ந்திருந்தவளை உசுப்பி  விட்டது அவன் குரல்.

சாந்தோம்ல எங்கே?

ரோசரி மெட்ரிக் பக்கத்தில் லேக் ஏரியா.

ஆமா, அன்னிக்கு டி.வி பேட்டியில் ஏன் என் பெயரைச் சொல்லாமல் விட்டே பயமா?

அந்தக் கேள்வியில் இருந்த அலட்சியம் அகம்பாவம் திமிர்……..

கடவுளே……சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லை என்பது மெத்தச் சரியே.  ரம்யா வெகுண்டாள்

அப்படி பயப்படற ஜாதிப் பெண்ணாயிருந்தால், இந்த மழையிருட்டில் முன்பின்  தெரியாதவனிடம் லிஃப்ட் கேட்டிருக்க மாட்டேன்.

எனக்குத் தெரியும்………. அவன் மெலிதாகச் சிரித்தான்.

என்ன தெரியும்?…….மீண்டும் கோபப்பட்டாள் ரம்யா.

நீ ஒரு துணிஞ்ச கட்டைனு தெரியும்.

இப்பொழுது ரம்யாவிற்கு கோபம் வரவில்லை. மாறாக அழுகை வந்தது, இந்த மூர்க்கனின்  பேச்சை நாம் ஏன்  பொருட்படுத்த வேண்டும் என்று மூளை அறிவுறுத்தினாலும் இதயம்  அதை ஏற்க மறுத்தது.

என்ன பதிலையே காணும்?

மீண்டும் அவன் சீண்டினான்.

பயம் இல்லேனா வேறு என்ன  காரணம்?

கடவுளே இவன் இதை விடமாட்டானா?அவளுக்கே பதில் தெரியாத பொழுது என்னத்தை  சொல்லி சமாளிப்பாள்?

மனம் நொந்த போதிலும் ரம்யா சமாளித்தாள்.   .

உங்க அளவு சின்ன புத்திக்காரி நான் இல்லேன்றது வேணா காரணமாயிருக்கலாம்.

லிப்ட் கொடுத்ததுக்கு நீ தர்ற பதில் மரியாதையா இது? மழையிருட்டில் தன்னந்தனியாக  தவித்தாயேன்னு பரிதாபப்பட்டு மனசு கேட்காமல் லிஃப்ட் கொடுத்தால் சின்னபுத்திக்காரன்கிறியே

மனசுன்னு ஒண்ணு இருக்கா உங்களுக்கு?

சும்மா சும்மா வாயைப் பிடுங்கினாயே. இந்தா நன்றாக வாங்கிக் கொள் என்ற எண்ணத்தில் தான் ரம்யா அப்படிப் பேசினாள். ஆனால் அது அவனை எங்கோ ஆழத்தில் தாக்கியிருக்க  வேண்டும் அந்த இருட்டிலும் அவன் பார்வையில் ஜொலித்த கோபக்கனலை அவளால்  பார்க்க முடிந்தது. உடல் லேசாக நடுங்கியது.

தெருமுனையில் இறங்கிக் கொண்டு நன்றி சொன்ன பொழுது குரலும் நடுங்கியது. கூடவே எதையோ பறி கொடுத்த உணர்வு.

அவன் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றபின் ஏக்கப் பெருமூச்சொன்று நாசியிலிருந்து  கிளம்ப, சட்டென்று ரம்யாவிற்கு தன் உள் மனசு பிடிபட்டது.

யாருக்காகவும் எதற்காகவும் பயப்படாதவள் அவனுடைய வார்த்தை அம்புகளில் மட்டும்  வாடிப் போவானேன்? அவன் அருகில் இருக்கும்பொழுது வரும்  தயக்கமும் பயமும் அவன் விலகிய  பின்னர் ஏக்கமாக மாறி அவளைக் கொல்வானேன்?

இந்த இனம் புரியாத உணர்ச்சிக்குப் பெயர் தான் காதலா? அவளையே எண்ணி எண்ணி உருகும் ப்ரேமிடம் வராத காதல் அவளை விஷமாய் வெறுக்கும் ராஜ்குமாரிடமா வர வேண்டும்? கடவுளே காதலுக்கு கண்ணில்லை என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

தோளைச் சுற்றி போர்த்தியிருந்த டவலில் வெளிப்பட்ட இன்டிமெட்டின் இனிய மணம் அவன் வாசனையை உணர்த்த ஒரு சுகமான மயக்கத்தில் நடந்த ரம்யாவின் காலில் ஏதோ  தட்டுப்பட்டது. சாலையோரப் பிச்சைக்காரி தூங்குவதாக எண்ணி திரும்பியவள் கண நேர  சந்தேகத்தில் நின்று குனிந்து உற்றுப் பார்த்தாள்.

பின் தீபா என்று அவள் அலறிய அலறலில் அன்று அந்தத் தெருவே விழித்துக்  கொண்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!