Skip to content
Post Views: 8,024
“மது.. நீ இப்பல்லாம் எனக்காக பாட்டு பாடறதே இல்லே! பெரியப்பாவுக்கும் பாடுறது இல்ல போல! ரித்துவ தூங்க வைக்க மட்டும் தான் பாடுற!”
“ஆமா இல்லை! பெரிய மாமா தான் இப்ப நிறைய பாடுறார் ரித்துவுக்கு! நான் பாடுறத காட்டிலும் அதிகமா!”
இன்று அவர்கள் ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளியே சென்று வந்திருந்தார்கள்!
Advertisement
கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும், ஜீன்ஸ் குர்தியில் ரொம்ப அழகாக இருந்தாள் மது!
வரும் போதே ரித்து காரிலேயே தூங்கி விட்டான்.
அவனை மெல்ல தொட்டிலில் போட்டவள், உடை மாற்ற ரெஸ்ட் ரூம் நோக்கி செல்ல, அவளைத் தூக்கிக்கொண்டு போய் ரெக்லைனர் சோபாவில் அவளை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.
Advertisement
“நீ இப்ப எனக்காக பாடணும்! பாடு!”
Advertisement
“ம்ம். இம்சைங்க உங்களோட.. இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? நான் பெரிய பாடகின்னு உங்களுக்கு நினைப்பு!”
“ம். ச் அதெல்லாம் விடு, நீ இப்ப பாடுற!”
“ரித்து முழிச்சுக்குவான்”
Advertisement
“மெல்லமா பாடு, எனக்கு மட்டும் கேட்டா போதும்!”
மது மெல்லியதான குரலில் பாடினாள்.
“காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்.
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா!”
அதற்குள் அந்த நிஜ சினிமாவில் வருவது போலவே, இங்கு ரித்துவும் லேசாக முண்டினான்.
மது பாட்டை நிறுத்தாமல், அவனது அழுகை ஆரம்பிக்கும் முன் ரகுவிடம் இருந்து எழுந்து சென்று, குழந்தையை தூக்கி வந்தவள் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள் அவனை மடியில் போட்டுக் கொண்டு!
பீட் (feed) பண்ண பார்த்தால், இன்னும் அவள் அந்த குர்தியை மாற்ற வில்லையே!
“பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது!
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது!”
“பாட்டை முடிக்கிறது இருக்கட்டும், முதலில் டோரை மூடிட்டு உங்க ரொமான்ஸ கண்டினியு பண்ணுங்௧” ரூமுக்கு வெளியில் வைஷு சிரித்தபடி பத்திரம் காட்டி சொல்லிவிட்டு சென்றாள்.
தன் ரூமுக்குள் வந்த வைஷுவுக்கு அப்படி ஒரு மன நிறைவு!
ரகுவும் மதுவும் இப்படி இனிய இல்லறம் நடத்துவதை பார்க்கும் போது!
இனி அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை! வரவும் வராது!
அவர்கள் வாழ்க்கையில் இனி தொல்லை கொடுக்க, பார்த்தி தான் இப்போது உயிருடனே இல்லையே!
….
அன்று மதுவின் பிரசவ நாள்.
பார்த்தி சொல்லிக் கொடுத்தபடி மதுவின் காதில் விழும்படி பேசி, அவளின் BPஐ தாறுமாறாக ஏற்றி விட்டு, அவளின் டெலிவரியை கிரிட்டிகல் ஆக்கி விட்டு, உதட்டோரம் ஒரு குரூர வெற்றிப் புன்னகையுடன், நேரே அந்த ஹாஸ்பிட்டல் ஹெட் நர்சிடம் வந்து,
“சிஸ்டர் என் அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்கன்னு போன் வந்தது.
ப்ளீஸ் எனக்கு உடனே வீட்டுக்கு போகனும் , ப்ளீஸ் பர்மிசன் தாங்க சிஸ்டர்!” கேட்டாள் கலையரசி!
“என்ன விளையாடுறியா, இன்னிக்கு தான் மது மேடம் டெலிவரி! நீ தான் அங்க டூட்டியில் இருக்க இப்ப போய் கேக்குற?”
“இல்ல சிஸ்டர் அங்க வைஷு மேடம், அப்புறம் இன்னும் நாலு சிஸ்டர் டூட்டி முடிஞ்சும் மது மேடமுக்காகன்னு அவங்களாவே கூட இருக்காங்க.
அங்க நிறைய ஆள் இருக்காங்க சிஸ்டர், எங்க அம்மாக்கு தான் அங்க தூக்கி விடக் கூட ஆள் இல்ல, ப்ளீஸ்” என்று பலதையும் சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்!
அவளுக்கு வெளியே காத்திருக்கும் பார்த்தியிடம் வெற்றி செய்தியை உடனே சொல்லியாக வேண்டும்!
நேரில் தான் சொல்லணும் போனில் முடியாது அங்கிருந்து பேசினால் மாட்டிக் கொள்வாள்! எனவே வேகமாக வெளியே வந்தாள்.
அது சென்னைக்கு செல்லும் புறநகர் நால்வழி சாலை.
ரோட்டின் இந்த புறம் இவள் இருக்க, அந்த புறம் ஒரு டீக்கடையில் அவளுக்காக காத்திருக்கும் பார்த்தி! இவர்கள் நடுவே சென்டர் மீடியன்!
இங்கிருந்தே கட்டை விரலை உயர்த்திக் காட்டி “சக்சஸ்!” என்றவள், டக்கென்று அந்த ரோடை கிராஸ் செய்து அந்தபுறம் செல்ல, சென்டர் மீடியனில் ஏறி நின்றாள்.
இவள் நிற்பதை வேகமாக சென்ற ஒரு மினி வேன் மறைத்துக் கொள்ள, அந்த பக்கம் பார்த்தியும் ரோடை க்ராஸ் செய்தான்.
அப்போது டீக்கடையின் பக்கத்தில் புதிதாக திறந்து இருந்த கடைக்காரர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் உடைத்து போட்டிருந்த பூசணிக்காயில் சறுக்கி தனது டூ வீலரை பார்த்தியின் மேல் விட்டு, அவனைத் தள்ளி விட்டு, ஓரமாக போய் விழுந்தான் அந்த பக்கமாக பைக் ஓட்டிவந்த ஒருவன்!
பார்த்தி நடு ரோட்டில் விழ அப்போது பின்னால் புல் லோட் ஏற்றி வந்த டாரஸ் வகை பெரிய லாரி அப்படியே அவன் மேல் ஏறி இறங்கியது!
இந்த பக்கம் பார்த்தி கீழே விழுவதைப் பார்த்து அவனைத் தூக்கி விட சென்டர் மீடியனில் இருந்து கீழே குதித்த கலையரசியும் தடுக்கி விழ அவள் மேல் அந்த லாரியின் இன்னொரு சைடாக வந்த இன்னொரு பைக்காரன் அவள் மீது மோதி கீழே விழுந்தான்!
பார்த்தி ஸ்பாட் அவுட்!
கலையரசிக்கு முகத்தில் நிறைய அடி! கன்னத்து சதை கிழிந்து, முன் பற்கள் உடைந்து, ஒரு கையில் சரியான பிராக்சர்!
108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டாள்!
பார்த்தி அநாதை பிணமாக , மருத்துவமனை மார்ச்சுவரியில் கொஞ்ச நாள் வைக்கப்பட்டு பின், பின் கலையரசியால் அடையாளம் காட்டப்பட்டு அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
கலையரசிக்கோ அன்பே சிவம் கமல் மாதிரி முகம் முழுக்க இப்போது தையல் தழும்புகள்! முன்னே செயற்கை பற்கள் கட்டிக் கொண்டு இருக்கிறாள்.
இப்போது கல்யாணம் என்பது எல்லாம் அவளுக்கு எட்டாக் கனி தான்!
குறைந்த பட்சம் அவளை வேலைக்கு சேர்த்துக் கொண்டாலே போதும். இப்போது அதற்கே வழியில்லை.
இவை அனைத்தும், வைஷு, கமலா ஆண்ட்டியுடன் கலையரசியை விசாரிக்க சென்றபோது அவள் அறிந்தது!
மதுவின் பிரசவம் முடிந்த பின் தான், வைஷுவிற்கு கொஞ்சம் டவுட் வந்தது.
தாம் அத்தனை தூரம் மதுவை மனதளவில் தேற்றி கவுன்சிலிங்க் கொடுத்து வைத்தும் அன்னிக்கு அவளுக்கு ஏன் அப்படி அந்த அளவு BP ஏறியது?
கொஞ்சம் முன்னாடி வரை கூட அவள் அந்த அளவு பேனிக்கா இல்லையே!
என்ன நடந்தது என்று கலையரசியோடு டூட்டி பார்த்த அந்த இன்னொரு நர்சை விசாரித்தாள்.
அவள் தனக்கு அன்று ஒரு ராங்கால் வந்து கொஞ்சம் வெளியே போய் விட்டதை சொன்னாள்.
அவள் கால் ஹிஸ்டரியில் அந்த நம்பரை வாங்கிப் பார்த்தால் அது பார்த்தியின் நம்பர்!
உடனே சம்திங் ராங்! என்று மூளை உணர்த்த, “ஆமா கூட இருந்த கலையரசி எங்கே?” விசாரித்ததில் அன்று அவள் அவசரமாய் பர்மிசனில் சென்றது தெரியவந்தது!
அவள் ப்ரோபைல் எடுத்து செக் பண்ணினாள் வைஷு.
டாக்டர் ரகுநந்தன் ரெபரன்ஸ் கேண்டிடேட் என்று குறிப்பு இருக்க, மெல்ல ரகுவிடம் எதையும் சொல்லாமல் கலையரசிக்கு ரெக்கமன்ட் செய்தது யார் என்று கேட்க அவன் கொஞ்சம் தயங்கி விட்டு “பார்த்தி” என்றான்.
இப்போது அவளுக்கு எல்லாம் விளங்கி விட்டது.
இந்த பார்த்தி தான், கலையரசி மூலம் மதுவை சைக்லாஜிக்கலா அட்டாக் பண்ணி, அவளின் டெலிவரியை காம்ப்ளிகேட் ஆக்கி விட்டுருக்கான்!
“அடப்பாவி பார்த்தி, நீயும் ஒரு அம்மாக்கு புள்ளைதானே! என்ன தான் காசு வேணுமின்னாலும் இந்த அளவுக்கா போவ?”
அவள் கமலா ஆண்ட்டியோடு அந்த கலையரசி வீட்டுக்கே போனாள்.
அங்கு அவள் கண்டது விகாரமான முகத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கலையரசியை!
“ச்சே, எப்படி நீ ஒரு நர்சா இருந்துட்டு, இப்படி ஒரு நோபிள் ப்ரோபசன்ல இருந்துட்டு இந்த கேடு கேட்ட காரியத்தை பண்ணியிருக்க?”
“நீ ஒர்க்ல எவ்வளவு கெட்டிகாரி!
இன்பாக்ட் நானே உன் கல்யாண செலவு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் செய்து வைக்க இருந்தேன்! ஆனா நீ?”
“இனிமே என் கண் முன்னே வந்துடாதே! போனா போவுதுன்னு உன் மேல லீகல் ஆக்சன் எதுவும் எடுக்கல!
என் முன்னாடி திரும்பவும் வந்து என்னை அதைப் பண்ண வச்சுராதே!” வார்ன் செய்து விட்டு வந்தாள்.
பின் கமலா ஆன்ட்டியிடம், “இது மதுவுக்கோ ரகுவுக்கோ தெரிய வேண்டாம்” என்று ரிக்வெஸ்ட் செய்தாள்.
“என்ன மேடம் நீங்க, நான் விஜி மேடம் கையால எததனை முறை சாப்பிட்டுருக்கேன், அந்த நன்றி எனக்கு இருக்கு! அவங்க குடும்பத்துக்கு நான் எப்போதும் நல்லது தான் செய்வேன் என்னை நீங்க நம்பலாம்” என்றார்.
வைஷு ராகவனிடம் நடந்ததை எல்லாம் சொல்ல, “அவனும் நீ செஞ்சது கரைக்ட் தான் வைஷு! கமலா ஆண்டியும் சொல்ல மாட்டாங்க” என்றான்.
ரகுவையும் மதுவையும் பார்த்து கிண்டல் செய்து விட்டு வந்து, பார்த்தியை பற்றி நினைத்துக்கொண்டு இருந்த வைஷுவிற்கு, மதுவின் அத்தை மகேஸ்வரியின் நிலையும் அவள் அம்மாவின் நிலையும் கூட நினைவிற்கு வந்தது.
ஆமாம், மதுவின் குழந்தையைப் பார்க்க வந்திருந்த அவள் தாய் மாமா, மகேஸ்வரியின் அம்மா அந்த நாகா பாட்டிக்கு கிட்னி பெயிலியர் ஆகி விட்டதால், டயாலிஸிஸ் செய்து வருகிறார்கள் என்று சொன்னார்.
சின்னப் பெண் என்று கூட பார்க்காமல் மானுவிற்கு சானிடரி நாப்கினை கூட ஒளித்து வைத்தவர் தானே அவர்!
அதே போல் மகேஸ்வரிக்கும் சொரியாசிஸ் வந்து விட்டதாம். அவர் மருமகள் அவர் மகன் சபரியைக் கூட்டிக்கொண்டு தனியே போய் விட்டாளாம்.
மதுவிற்கு கஷ்டம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் செய்த பாவத்திற்கான தண்டனை, அவரவர் செய்த பாவத்திற்கு தக்கபடி கிடைத்தே விட்டது!
எல்லோருக்கும் நல்லது நினைத்து, நல்லதையே செய்த மது நன்றாகவே இருப்பாள் என்றென்றும்!
இப்போது வைஷுவின் நினைவிற்கு வந்தது சிறு வயதில் படித்த
“தீதும் நன்றும் பிறர் தர வாரா!”
error: Content is protected !!