சித்திரமே மொழி தொலைத்தாயோ?!! – 2
சித்திரமே மொழி தொலைத்தாயோ?!! – 2
அறையில் சாமி பாட்டு ஓடிக் கொண்டிருக்க, உத்ரா கண்களை மூடி தியானத்தில் இருந்தாள்.. மூச்சை நன்கு உள்ளே இழுத்து, வெளியே விட்டாள்.. கடந்த அரை மணி நேரமாக இதையே செய்து கொண்டிருந்தவள் மனம் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டு கொண்டிருந்தது..
ஆனால் அவள் பின்னாடி அமர்ந்து இருந்த சுமார் 35 குழந்தைகள் ஒவ்வொன்றும் தலையை சொரிந்தவாறும், தூங்கி வழிந்தவாறும், கிளுகிளுத்து சிரித்தவாறும் இருந்தது..
உத்ரா தியானத்தை முடித்துவிட்டு கண்ணை திறந்து பின்னாடி திரும்பி பார்த்தாள்.. எல்லா பிள்ளைகளும் கண்ணை மூடுவது போன்ற பாவனையை செய்தனர்..
Advertisement
அவள் உதடு சிரிப்பில் துடித்தாலும், அதை அடக்கிக் கொண்டவள் அவர்களை கோபமாக பார்த்து,
“ஒரு அரை மணி நேரம் மனதையும், தூக்கத்தையும் பக்குவமாக ஒருமுகப்படுத்த முடியாதா?” என்றாள்..
அப்பொழுது அங்கே வந்த மயூரி ஒரு சின்ன சிறுவனை தூக்கி,
Advertisement
“உத்ரா, உனக்கே இது அநியாயமா தெரியல? அஞ்சு மணிக்கு எல்லாம் இந்த அஞ்சு வயது சிறுவனை எழுந்து சாமி கும்மிட சொன்னால் அவனால் என்ன பண்ண முடியும் சொல்லு? சின்ன சிறுசுகள் தானே.. விடு.”
Advertisement
உத்ரா : “அக்கா.. ஒழுக்கம் எப்போதிருந்து வரும்? சின்ன வயதில் இருந்து தானே வரவழைக்க முடியும்? அப்படி வரலை என்றால், நாம் தானே திணிக்கணும்?”
மயூரி: “எதையுமே திணிப்பது நல்லது இல்லை. தானாக வருவது தான் நிலையாக நிற்கவும் செய்யும்..”
உத்ரா தலையை ஆட்டி மறுத்தாள்..
Advertisement
“அக்கா .. என் வழி இது தான்.. என் method கொஞ்சம் கரடுமுரடா தான் இருக்கும். நீ அவங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குற. அவங்களை கெடுக்காத.”
மயூரி: “அதில்ல உத்ரா.. கொஞ்சம் பொறுமையா கையாளுனு தான் சொல்றேன்டா.”
உத்ரா வெடுக்கென்று,
“எவ்வளவு பொறுமை? நீ காட்டின அந்த பொறுமையா? அதெல்லாம் என்னால முடியாதுக்கா.”
மயூரிக்கு கண்கள் கலங்கி போனது.. உதட்டை கடித்து அடக்கியவள் மெதுவாய் சிறுவனை கீழே இறக்கிவிட்டு, அவள் அறை பக்கம் செல்ல..
உத்ரா மனதில் நொந்து கொண்டாள்..
சிறுவர்களை பார்த்து,
“இப்போ உங்க ரூமுக்கு போய் குளிச்சு, கொஞ்ச நேரம் பாடத்தை படிங்க.”
எல்லோரும் எழுந்து போனதுக்கு பிறகு இவள் மயூரி அறைக்கு சென்றாள்..
அங்கே மயூரி துணியை மடித்து வைத்து கொண்டிருந்தாள்.. அவள் முகம் வாடி கிடந்தது..
உத்ரா: “அக்கா.. என்னை மன்னிச்சிரு. சாரி ஏதோ டென்ஷன்.. ஆனா உண்மையிலேயே சின்னவங்க முன்னாடி அப்படி பேசியிருக்க கூடாது.. மன்னிச்சுடு.” என்று பேசியவள் குரல் நலிந்தது..
மயூரி வேகமாய் அவள் முகத்தை பற்றி கண்களை ஆராய்ந்தாள்..
“ஏய் அழுகுறீயா? ச்சே. என் தைரியசாலி சிங்கம் அழுகலாமா?”
உத்ரா: “உன் மனசை கஷ்டப்படுத்தி நோகடிச்சுக்கிட்டே இருக்கேன் நான்.. என் மேல உனக்கு கோவமே வரலையா?”
மயூரி: “நீ தான் என் எனெர்ஜி ட்ரிங்க்.. என்னை என்ன வேணும்னாலும் சொல்ல, உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு.. நீ என் செல்ல தங்கச்சி டீ..” என்று சொல்ல..
அடுத்த நிமிடம் உத்ரா குழந்தை என மாறி அக்காவின் மடியில் புதைந்து அழுக ஆரம்பிக்க.. மயூரி அவளை தலையை தடவினாள்..
“ஷ்.. பாடம் சொல்லி கொடுக்குற டீச்சர் நீயே அழுதா? அப்புறம் எப்படி பசங்க எல்லோரும் உன் பேச்சை கேப்பாங்க? எந்திரி.. கண்ணை துடை.. போ முதல்ல பால் குவாலிட்டி சரியில்லனு சொல்லிட்டு இருந்தீயே? அதை பத்தி கம்பளைண்ட் பண்ணிட்டு, வேற நல்ல இடமா பாரு. போ போ வேலையை பார்.”
வேகமாய் எழுந்த உத்ரா, “சரிக்கா.. ” என்று புறப்பட்டாள்..
இரவு 2 மணி இருக்கும்.. சூசை விடாமல் கதவை தட்டிக் கொண்டு இருந்தான்..
“அடேய், கதவை ஏன்டா பூட்டி வச்சீங்க? குளிர் தாங்கல. திறங்கடா.”
உள்ளே இருந்த ஆட்கள்,
“பாஸ் உனக்கு கதவை திறக்க கூடாதுனு சொல்லிருக்கார்.. அதுனால இன்னைக்கு வெளியேவே படு.” என்றனர்.
சூசை விடாமல் கதவை தட்ட.. அரை போதையில் தள்ளாடி கொண்டே வந்த பவன் கதவை திறந்து,
“என்னடா என்ன வேணும்?” என்றான்.
சூசை: “பாஸ் வெளியே குளிருது.. முடியல.நான் பண்ணது தப்பு தான் மன்னிச்சிடுங்க பாஸ்.” என்று காலில் விழுந்தான்..
பவன்: “ச்சே ச்சே எந்திரிடா.. ஏன்டா அதுக்கு கால்ல எல்லாம் விழுற? நீ யாருடா? என் கூட்டாளிடா.. வாடா செல்லம்..” என்று சூசை தோளில் கையை போட்டு உள்ளே அழைத்து சென்றான்..
சூசை உணர்ச்சிவசப்பட்டு,
“ரொம்ப தேங்க்ஸ் பாஸ்.” என்றான்..
பவன்: “எமோஷனா? ரொம்ப பொங்காம போய் தூங்கு.” என்று கூறி அப்படியே மல்லாக்க கவிழ்ந்தான் அவனின் ஆட்களோடு..
வழக்கம் போல் அடுத்த நாள் வேகமாய் எழுந்து அவனின் வீட்டுக்குள் சென்றவன் குளித்துவிட்டு சாப்பிட கீழே வந்தான்..
அவனின் அம்மா கீதை: “பவன்.. குளிச்சுட்டீயா?”
அவன்: “ஓ எஸ்.. ” என்று கூறி கைகளை தேய்த்துக் கொண்டே,
“இன்னைக்கு என்னம்மா சமையல்?” என்றான்.
அவர்: “உனக்கு மசால் தோசை. லாவண்யாவுக்கு இடியாப்பம் தேங்காய் பால் டா.”
பவன்: “என் டாடிக்கு?”
அவர் சிரித்துக் கொண்டே, “செஞ்சுருக்கேன்டா. அவருக்கும், சரவணனுக்கும் இட்லி, சாம்பார், சட்னி..”
அபி: “ஏன் பவன் நேத்து ராத்திரியும் குடிச்சியா?” என்று கேட்டு முறைக்க..
இவன் வேகமாக, “ஷ் ஷ்.. டாடி வர நேரம்.. ஷ் நாம அப்புறம் பேசுவோம்.” என்றான்.
அவர்: “என்னமோ நீ பண்றது சரியில்ல.” என்று சலித்து கொண்டே புறப்பட்டார்.
பவன் : “ஏன்ம்மா உனக்கு என்ன செஞ்ச?”
கீதை: “அதான் இத்தனை வகை இருக்கே? இதுக்கு மேல என்ன செய்ய எனக்குனு?”
அவன்: “ஹ்ம் ஆனா இத்தனை சாப்பாடு வகையில் உனக்கு பிடிச்சது இல்லையே? இனிமேல் உனக்கு ஒரு கண்டிஷன். ஒரு நாள் உனக்கு பிடிச்சதும் இங்கே இருக்கணும். மாத்தி மாத்தி அப்படி பிளான் பண்ணிக்கலாம்.”
அவனின் தலையை கோதிவிட்டவர்,
“சரிப்பா. அப்படியே பண்ணலாம்.”
அபிராமி: “எங்கே என் பசங்களை இன்னும் காணோம்? இருங்க, நான் மேலே ரூம்ல பார்த்துட்டு வரேன்” என்று கூறி அவர் அறைக்கு சென்றார்.
அவர் மேலே சென்ற சற்று நிமிடத்தில் தொபு தொபு என அவர் பிள்ளைகள் கீழே இறங்கி ஓடி வந்தன..
கீதை ஓடி வந்த பிள்ளைகளை பார்த்து சிரித்தார். இவ்வளவு வேகத்தோடு வருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களை அம்மா அவர்களை அடித்து இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்.
கீதை: “அம்மா எங்கேடா?” என்றார் அபிராமியை காணவில்லையே என..
அதற்கு முதல் பையன் செந்தில் :”நான் டீவி பார்த்துட்டு இருந்தோமா, அம்மா அடிக்க வந்தாங்களா, நாங்க அம்மாவை மேலே ரூம்ல பூட்டி வச்சுட்டு கீழே வந்துட்டோம்.” என்று கூறி சிரிக்க..
கீதை: “அச்சச்சோ.. டேய் போய் திறந்து விட்டுட்டு வாங்க. போங்க.”
செந்தில் தம்பி மாறன், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அத்தை. கொஞ்ச நேரம் உள்ளேயே இருக்கட்டும். ”
கீதை பவனிடம், “பவன் நீ போயி திறந்து விட்டுட்டு வா.”
அவன் கூலாக, “அம்மா, சின்ன பிள்ளைல என்னையும் அடிச்சு இருக்காங்க. அதுக்கு பழிவாங்க எனக்கு இன்னைக்கு ஒரு சான்ஸ் கிடைச்சு இருக்கு. அதை கெடுக்க வேணாமே ப்ளீஸ்.” என்று கூறி கண் சிமிட்டான்.
சக்கரைப்பாணி அங்கே வந்தார்.. உடனே எல்லோரும் அமைதியாகி விட்டனர்.. அமைதியாக உண்டனர்..
பவன் : “குட் மார்னிங் டாடி” என்றான்.
அவர்: “ஹ்ம்.. இன்னைக்கு கட்சி மீட்டிங்கு நீ வர போறீயா? இல்ல உருப்படாத உன் ஆளுங்களோட சுத்திட்டு இருக்க போறீயா?”
அவன்: “டாடி of course நான் வருவேன். எனக்கும் பொறுப்பு இருக்கே.”
அவர்: “அந்த பொறுப்பை இதுவரை நான் பாக்கல. எந்த வேலை கொடுத்தாலும் அதை முழுசா எங்கே முடிக்கிற? அரைகுறையா பண்ணிட்டு மீதியை என்னை செய்ய்ய வைக்குற.. சரியா 10 மணிக்கு வந்து சேரு.”
லாவண்யா யூனிபார்ம் அணிந்து அங்கே வந்தாள்..
“ஹை ஹை..” என்று கூறியவள் அவசரமாக உண்டாள்..
கீதை: “மெதுவா சாப்பிடும்மா.. ” என்றார்..
சக்கரைப்பாணி: “லாவண்யா.. போன மாசத்தோட செலவு கணக்கை நீ இன்னும் ஏன் என்கிட்டே கொடுக்கல? மத்தவங்க எல்லோரும் கொடுத்துட்டாங்க தெரியுமா?”
அவள் முழித்தாள்..
“அது அது.. அப்பா நான் சில பில்லை எங்கே வச்சேன்னு தெரியல. அதான்.. நான் இரண்டு நாள்ல தந்துடுறேன் அப்பா..”
அவர்: “ஹ்ம். அதை நீ என்கிட்டே கொடுத்ததுக்கு அப்புறம் தான் இந்த மாசத்தோட allowance உனக்கு.” என்று கூறி கை கழுவ சென்றார்.
லாவண்யா முகத்தை சுளித்தாள்..
கீதை சக்கரைப்பாணி பின்னாடியே சென்றார்..
அவர் கைத்துண்டில் கையை துடைத்து கொண்டிருக்க, கீதையை பார்த்து,
“என்னம்மா? என்ன ஆச்சு?” என்று பரிவாக கேட்டார்.
கீதை: “அது அந்த கோயில் பத்தி சொன்னேனே? ஒரு தடவை போயிட்டு வருவோமா சரவணனுக்காக? ”
மன்றாடும் குரலில் கேட்ட தன் மனைவியின் கன்னத்தை தடவியவர்,
“இல்லம்மா அது சரிப்பட்டு வராது. அவனுக்கு புத்திக்கு ஒண்ணுமில்ல டீ.. மனசுக்கு தான் பிரச்சனை.. இதை பத்தி காலையில பேச வேணாமே தங்கம் ப்ளீஸ்.” என்று கூறி வெளியே புறப்பட்டவரின் நெஞ்சு கொஞ்சம் கலங்கியது.. மனம் அவர் செய்த குற்றம் ஒன்றால், வெட்கப்பட்டது..
பவன் சாப்பிட்டு முடித்து அவன் அறைக்கு சென்று வழக்கம் போல வெள்ளை வெட்டி, பிங்க் சட்டை என அணிந்து வந்தான்..
அவன் படியில் இருந்து கீழே இறங்கி வர, சரியாக லாவண்யா பள்ளிக்கூட பையை எடுத்து கொண்டு புறப்பட்டு கொண்டிருந்தாள்..
அவனை பார்த்தவள், “வேக்..” என்றாள் வாந்தி எடுப்பது போல..
பின்பு, “அம்மா அம்மா” என்று கத்தினாள்..
கீதை: “என்னடீ இந்த கத்து கத்துற?”
அவள்: “அம்மா தயவு செய்து இவனை வேறு வீட்டுக்கு தத்து கொடுத்திடு. நம்ம வீட்லயே கேவலமா படு குப்பையா ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இவனுக்கு தான் இருக்கு. கண்ணு கூசுதும்மா. சீ..”
பவன்: “ஹேய்.. என்னோட இந்த ட்ரெஸ்-கு எத்தனை fans இருக்காங்க தெரியுமா? அருமை தெரியாதவ நீ.”
லாவண்யா: “சீ.. இந்த பஞ்சுமிட்டாய் கலரை எல்லாம் எல்லோரும் ban பண்ணிட்டாங்க.. உனக்கு மட்டும் எப்படிடா இப்படி ஒரு டேஸ்ட்? என் ஸ்கூல் பக்கம் எல்லாம் வந்திடாத. ”
கீதை: “அவ கிடக்குறா.. மன்மதன் கணக்கா இருக்கடா.. சரி அண்ணன் நல்லா சாப்பிட்டானா?”
பவன்: “சாப்பிட்டான் மம்மி.. ஆனா இப்போ எல்லாம் என்னை பார்த்தா கூட சிரிக்க மாட்டிங்குறான்.. கொஞ்சம் தான் பேசினான் இன்னைக்கு.. அதுனால நான் அவன்கிட்டே டூ போட்டு வந்துட்டேன்.. வந்து அவனை டீல் பண்ணிக்கிறேன். ஓகே பை மம்மி.. ரெஸ்ட் எடுங்க.. ஓகே?” என்று சென்றவன் மீண்டும் அவரிடம் வந்து,
“மம்மி, உங்களுக்கு அந்த கோயில் போகணும்னா சொல்லுங்க.. டாடி அடுத்த வாரம் ஊர்ல இல்லாதப்ப, நாம அண்ணனை கூட்டிட்டு போய் வரலாம்.. சரியா?” என்றான்.
அவர் : “நீ மாட்டும் தான் கண்ணா நான் சொல்லாமயே எல்லாத்தையும் புரிஞ்சுக்குற.. பாக்கலாம். சரி கிளம்பு. வெயில்ல ரொம்ப அலையாதேப்பா.” என்றார்.
உத்ரா வயது 24. சொந்தமாக ஒரு சின்ன பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறாள்.. பத்தாம் வகுப்பு வரை இருக்கிறது.. பீஸ் இருப்பவர் கொடுக்கிறார்கள். இல்லாதவர்களிடம் கேட்பதில்லை அவள்.. ஸ்கூல் பக்கத்திலேயே ஹாஸ்டல் சுமார் 40 பிள்ளைகள் தங்கி படிக்கின்றனர்.. அந்த 40 பிள்ளைகளுக்கும் பெற்றோர் இல்லை.. சாலையில் தென்படும் பிள்ளைகளை லீகல் ஸ்டெப்ஸ் எடுத்து இங்கே வந்து சேர்த்து அவர்களை படிக்க வைக்கிறாள்..
அவளும் அவள் அக்கா மயூரி தான் இந்த பள்ளிக்கூடத்தின் தூணே..
உத்ரா மாலை நேரத்தில் பார்ட் டைம் வேலை செய்கிறாள்.. மயூரி தையல் வேலை செய்கிறாள்.. பெரிதாக அவர்கள் லாபம் பார்க்கவில்லை என்றாலும், நஷ்டம் என்றும் சொல்ல முடியாது.. இப்படியே சென்றால் கூட போதும் என்ற எண்ணமே..
தெளிந்த நீரோடையாக எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது..
ஆனால் அதில் கல் எறிந்த கதையாக பவன் உத்ரா வாழ்க்கையில் குறுக்கிட்டு அவளை கோபப்படுத்தினான்..
தொடரும்..
