Skip to content
Post Views: 4,172
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் – 13
Advertisement
( pre final)
Advertisement
இனியன் இனியாவின் ரூம் கதவை வேகமாக தட்ட.
Advertisement
பிரகா தான் கதவை திறந்தான். என்ன இனியன் பதட்டமா இருக்க.
Advertisement
இனியா , இனியா என்று இனியன் கூற.
என்னாச்சு என்று இனியா வெளியில் வந்து கேட்க.
பாட்டி , பாட்டி கீழே விழுந்துட்டாங்க.
அனைவரும் மீனாட்சி அரை நோக்கி ஓடினர்.
அங்கே நிர்மலாவும், விமல்ராஜும் பாட்டிக்கு முதல் உதவி செய்து கொண்டு இருந்தனர்.
விமல்ராஜ் மீனாட்சியின் நெஞ்சின் மேலே கைவைத்து அழுத்தி கொண்டே வாயில் ஊத. மீனாட்சி சுய நினைவு இல்லாமல் இருந்தார்.
நிர்மலா பல்ஸ் சுத்தாம இல்ல.
ஹாஸ்பெட்டல் போலமா என்று கேட்க.
விமல்ராஜ் வேண்டாம் என்றார்.
ஏன் ,ஏன் என்ற இனியா மீனாட்சியை தொட்டு பார்க்க. அவர் உடல் சில்லிட்டு இருக்க.தரையில் மடிந்து அமர்ந்தாள்.
பிரகா அப்பா என்ன ஆச்சு பாட்டிக்கு. தெரியலடா நிர்மலா சத்தம் கேட்டுதான் வந்தேன் . வந்து. பார்த்த பாட்டி கீழே விழுந்து இருந்தாங்க. உங்க அம்மாவால தூக்க முடியல நான் தான் தூக்கி மேல படுக்க வச்சேன்.பாத்ரூம் பக்கத்தில் விழுந்து இருக்காங்க தலையில் அடி. இரத்தம் வரல.
பாட்டி இறந்துட்டாங்க.
நிர்மலா தன் அம்மாவை பார்த்து அம்மா , அம்மா என்று அழ விமல்ராஜ் தாங்கி கொண்டார் நிர்மலாவை.
ஆக வேண்டியதை பாரு என்று விமல்ராஜ் சொல்ல. அனைவருக்கும் தகவல் சொல்ல பட்டது .
முதலில் வந்தது குமரன் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து கேட்டு செய்தான்.
இனியாவோ அவள் முதலில் அமர்ந்த இடத்திலே அமர்ந்து இருக்க கண்ணில் இருந்து கண்ணீர் வடித்து கொண்டே இருந்தது. பாட்டியின் முகத்தை மட்டும் பார்த்து இருந்தாள்.
பிரகாவிற்கு பயமாக இருந்தது. அவள் கத்தி அழுதாள் கூட பரவாயில்லை.
திருச்செல்வனின் குடும்பம் கடைசியாக மீனாட்சியை பார்க்க பொள்ளாட்சி வீட்டுக்கு வந்தனர்.
மீனாட்சியின் உடல் ஹாலில் வைத்து இருக்க எல்லோரம்
கடைசியாக மீனாட்சியை பார்த்து சென்றனர்.
திருச்செல்வன் மீனாட்சியின் உடலை பார்த்து அம்மா என்று அழ. கோமதி , மகிழ் அனைவரும் அழும் சத்தம் கேட்டும் கூட இனியா பாட்டியின் ரூம் விட்டு வர வில்லை.
பிரகாவிடம் திருச்செல்வன் இனியா எங்கே என்று கேட்க. பாட்டியின் அரையை காண்பித்தான்.
திருச்செல்வன் இனியாவை காண செல்ல.
இனியா பாட்டியின் கட்டிலை பார்த்தவாரு அமர்ந்து இருந்தாள்.
அருகில் சென்றவர். இனியாவை என்று அழைக்க. அவளோ பாட்டியின் கட்டிலையே பார்த்து கொண்டு இருந்தாள்..
என்ன இனியா வெளியில் வாடாம்மா என்று அழைக்க.
அவளோ கட்டிலை காட்டி பாட்டி , பாட்டி என்று சொல்ல.
இனியாவை அணைத்து கொண்டவர். வெளியில் வாம்மா பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல நம்மலை விட்டு போகிறுவாங்க. அது வரைக்கும் அவங்கல பக்கத்தில் இருந்து பாத்துகோ என்று சொல்லி அழைத்து சென்றார்.
திருச்செல்வன் மீனாட்சியின் பக்கத்தில் இனியாவை அமர வைக்க.
மீனாட்சியின் முகம் மட்டுமே தெரிய. மாலைகள் மீனாட்சியின் உடல் முழுவதும் மறைத்து இருந்தது.
தேவேந்திரன் சமாதி பக்கத்தில் மீனாட்சியின் உடலை வைக்க திட்ட மிட்டு மீனாட்சியின் உடலை தூக்கி சென்றனர்.
கடைசியா ஒருமுறை எல்லாரும் முகத்தை பார்த்துக்கோங்க என்று ஒருவர் சொல்ல.
அனைவரும் ஓ என்று அழத வண்ணம் மீனாட்சியின் முகத்தை பார்த்தனர்.
பிரகா இனியாவை அழைத்து கடைசியா பாட்டியை பாரு இனியா ,பாட்டிக்கு வாயில் அரிசி போடு என்று சொல்ல.
அவன் சொல்வதை செய்த இனியா. மனதில் என்னை விட்டு போற இல்ல . மீனுக்குட்டி இனிமே நான் யார மீனுக்குட்டின்னு கூப்பிடுவேன். உனக்கு என்ன அவசரம் பாட்டி .என் பிள்ளையை எல்லாம் உனக்கு பாக்க வேண்டாமா. உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்.
எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நீ கிளம்பிட்ட இல்ல. தாத்தா கூட டுயட் பாட போறீயா போயிட்டு வா. தாத்தாவை கேட்டேன்னு சொல்லு. பாய் பாட்டி. பாய் மீனுகுட்டி என்று மீனாட்சியின் நெற்றியில் முத்தம் கொடுத்தவள். ஒரு முறை அணைத்து விட்டு மிஸ் யூ மீனுக்குட்டி என்று கண்களை துடைத்தவள். தேவேந்திரன் சமாதிக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இனியா கத்தி அழுவாள். என்னை விட்டு போகதே பாட்டி என்று சொல்வாள் என்று நினைக்க. இனியாவோ பாட்டியிடம் ஏதோ பேசுவதும் . பின்பு முத்தம் கொடுத்துவிட்டு சென்றதை பார்த்தவர். என்ன பொண்ணுட இவ என்று பார்க்க.
இனியன் இனியாவின் அருகில் ப்பிரித்தம்மை கொடுத்துவிட்டு. பாட்டிக்கு செய்ய வேண்டியதை செய்தான்.
அனைவரும் மீனாட்சிக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு. வீடு நோக்கி சென்றனர்.
16 நாள் விசேசம் முடிந்து அனைவரும் அவர் , அவர் வேலையை நோக்கி செல்ல.
பொள்ளாட்சி வீட்டில் இனியா பிரகா . ப்பிரித்தம் மற்றும் திருச்செல்வன் இருக்க.
திருச்செல்வன் மகள் கூடவே இருந்து விட்டார். நான் இங்கு அனைத்தும் பார்த்து கொள்கிறேன். நீ பிரகாவோடு கிளம்பு என்று சொல்ல அவளோ.
நான் பொள்ளாட்டசியில் தான் இருப்பேன்.
இல்லம்மா நீ கிளம்பு பிரகாவுக்கு வேலை இருக்குமுள்ள.
அப்பா உங்கள தனியா விட்டு நான் எப்படி போக.
திருச்செல்வன் , கோமதியும் மகிழும் நாளைக்கு வந்துருவாங்க . நாங்க இங்க பாத்துகிறோம்.நீ பிரகா வோடு போமா . இங்கே எனக்கு எதுவும் தெரியலன்னா உன்க்கிட்ட போன் பண்ணி கேட்டுக்கிறேன். என்று சொல்ல.
மாடியில் இருந்து பிரகா இனியாவை கூப்பிட.
இனியா தந்தையிடம் அப்பா அத்தான் கூப்பிடுறாரு. என்னன்னு கேட்டு வர்ரேன் . அவளின் ரூம் செல்ல.
பிரகா தன்னுடைய துணிகளை மடிந்து வைத்து கொண்டு இருந்தான்.
இனியா பிரகாவிடம் என்ன அத்தான் எதாவது வேலையா என்று கேட்க.
ஆமாம் இனியா . ஒரு பெரிய பிராஜெக்ட் கனடா போறோம்.
வர ஆறு மாதம் ஆகும்.
இனியா இப்போ கிளம்புறீங்களா.
கிளம்புறீங்கலா இல்ல கிளம்புறோம் . என்ன சொல்லுறீங்க அத்தான் .
ஏன் மாமா உன்க்கிட்ட சொல்லலியா . நீ நான் ப்பிரித்தம் எல்லோரும் போறோம் . இப்போ கிளம்பி பெங்களுர் போயிட்டு நாளைக்கு நைட் கனடா போறோம்.
என்ன விளையாடுறீங்களா , நான். வல்ல ப்பிரித்தம்மும் வர மாட்டான்.
நீங்க வேணா போயிட்டு வாங்க. என்னால பொள்ளாட்சியை விட்டு வரமுடியாது.
பிரகா இனியாவிடம் மாமா தான் எல்லாத்தையும் பாத்துகிறதா சொல்லுறாரு இல்ல. நீ என் கூட வா.
அத்தான் நான் உங்க கிட்ட சொல்லி தான கல்யாணம் பண்ணேன் . பொள்ளாட்சியை விட்டு வரமாட்டேன் என்று.
இப்போ எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பறம் இப்படி சொன்னா எப்படி? என்னால வர முடியாது.
பிரகா இனியாவிடம் என்னால உன்னைவிட்டு இனி மேல் தனியா எல்லாம் இருக்க முடியாது.
அதுதான் உங்க வேலை முடிஞ்சது இல்ல. அப்பறம் என்ன .
என்ன வேலை முடிஞ்சது.
அது தான் பத்து நாளா உங்க பொண்டாட்டியா வாழ்ந்துட்டு தானே இருக்கேன் .
என்ன பேசற இனியா . அதுக்கு மட்டும் தான் உன்னை நான் தேடுவேனா. நீ என் பொண்டாட்டி உன்ன கூப்பிடமா வேற யார கூப்பிட. நீ கிளம்பு , உன் டிரெஸ் எடுத்து வை. ப்பிரித்தம் எங்கே என்று ஏதோ சொல்லி கொண்டே போக.
இனியா போதும் நிறுத்துங்க. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க கிளம்ப சொன்னா என்ன அர்த்தம்.
நீ கிளம்பி வான்னு அர்த்தம்.
இனியா பிரகாவிடம் அப்பாவை நம்பி எல்லாம் விட்டுட்டு வர முடியாது.
பிரகாவுக்கு கோபம் வர. என்ன டாக்டர் வாய்சு ரொம்ப கூடுது. நீ இங்கு என்ன செஞ்சு பொள்ளாட்சியை தூக்கி நிறுத்த போற. நீ பாக்குறத உன் அப்பா பாத்துக்க மாட்டாறா. முடியலன்ணா வேலைக்கு ஆல் சேர்க்க. சொல்லு. நீ உன் அப்பா கிட்ட வீடியோ கால் பேசு சொல்லி குடு அத விட்டுட்டு. பெரிய இவ இல்லனா இங்கே ஒன்றும் நடக்காத மாதிரி பேசாத கிளம்பி வா.
பிரகா அத்தான் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க அப்பாவும் இங்கே உள்ள வேலை பத்தி தெரியாது.
என்ன தெரியாது. குமரனிடம் சொல்லி குடுக்க சொல்லு.
அவனுக்கே. நான் தான் இத செய் அத பண்ணுன்னு சொல்லனும். எங்க அப்பாவுக்கு இங்கே நாங்க என்ன பண்ணுறோமுன்னு தெரியாது. எங்கே என்ன பேக்டரி இருக்கு என்ன வேலை நடக்குது. அடுத்து என்ன செய்யனும். எல்லோருக்கும் சம்பளம் எவ்வளவு குடுக்கனும். என்ன வரவு எவ்வளவு செலவு. இது மட்டும் இல்ல ஹாஸ்பெட்டல் இருக்கு எல்லாத்தையும் அப்பாவால பாத்துக்க முடியாது. இனியன் இங்கே இருந்தாலும் ஓகே அவன் சென்னை கடைய பாத்துகிறான்.
பிரகா இப்போ நீ என்ன சொல்ல வர்ற. என் கூட வரமாட்டியா?
நான் வரலன்னு சொல்லல்ல இப்போ வரமுடியாது. அப்பாவுக்கு எல்லாம் சொல்லி குடுத்துட்டு வர கொஞ்சம் மாதம் இல்ல வருஷம் கூட ஆகலாம்.
அப்போ உன் வேலையெல்லாம் முடிச்சுட்டு வர வரைக்கும் . உனக்காக நான் காத்துட்டு இருக்கனும் தானே.
நான் அப்படி சொல்லல்ல அத்தான் . தேவேந்திரன் தாத்தா இறந்தது அப்பறம் இந்த ஊரில் உள்ள சில பேர் என் கிட்ட நீ தான் டாக்டர் உனக்கு எதற்கு தென்னாந்தோப்பு. விவசாயம் எல்லாத்தை எங்க கிட்ட வித்துறு உனக்கு ஒன்னும் தெரியாது . ஹாஸ்பெட்டல மட்டும் பாரு. எனக்கு ரொம்ப தொந்தரவு குடுத்தாங்க தெரியுமா. தினம் ஒரு பிரச்சனை வரும் . உன்னால முடியாது எடத்த குடு . மாட்டுபண்ணைய குடு. இந்த ஊருல நம்ம கிட்ட எத்தன விதமான நாட்டு மாடு இருக்கு தெரியுமா? எல்லோர் கிட்டையும் சில வகையான மாடு இல்ல. தாத்தா மாடுகள் மேல உயிரே வச்சு இருந்தாரு. எல்லாம் நான் எப்போ இந்த ஊரு விட்டு போவேன்னு சில பேர் காத்துட்டு இருக்காங்க. நான் இப்போ உங்க கூட வந்த நான் இவ்வளவு நாள் பாத்துகிட்டது ஒன்னும் இல்லமா போகிறும் .பாட்டி இப்போ தான் இறந்தாங்க. அப்பாவுக்கு சூது. வாது தெரியாது. சொல்லுரத அப்படியே நம்புவாரு. இந்த ஊரில் நிறைய பேர் நம்ம சொத்த வாங்க ஆசை படுறாங்க. அவங்களுக்கு அந்த வாய்ப்ப நம்ம குடுக்க கூடாது.
பிரகா அப்போ எப்ப வருவ. நான் கிழவன் ஆனாதும் வருவீயா.
விரு விரு வென்று கீழே சென்று விட்டாள் இனியா. கீழே சென்றவள் , மீனாட்சியின் போட்டோவை பார்த்து இப்போ உனக்கு சத்தோஷமா. நான் உனக்கிட்ட சொன்னேன்லா . உன் பேரன் வேலை வேற . என் வேலை வேறன்னு கேட்டியா இப்போ பாரு உன் பேரன் அவர் வேலை முடிஞ்சதும். அவரு வேலையை காட்டுறாரு.
பிரகா இனியாவின் பின் இருந்து. என்னடி உன் கிட்ட வேலையை காட்டுனேன்.
நான் என்ன சொல்லி உங்கள் கல்யாணம் பண்ணிணினேன். அப்போ தலையை ஆட்டிட்டு இப்போ என் கூட வான்னா எப்படி வரமுடியும்.
என் கூட வரமுடியுமா . வரமுடியாத சொல்லு.
வருவேன் இப்போ வரமுடியாது.
சரி எப்போ வருவ.
அத சொல்ல முடியாது.
ஓ புருஷன் கூட எப்போ வர முடியும் என்று சொல்ல கூட உன்னால முடியல. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லி மேலே செல்ல.
என்ன சொன்னார். பெரிய தப்பா என்னை கல்யாணம் பண்ணுனது பெரிய தப்பா என்று அவன் பின்னாடி சென்றவள் . என்ன தப்பு என்ன கல்யாணம் பண்ணுனதா .அப்படி ஒன்னும் என் கூட நீங்க இருக்க வேண்டாம்.
உன் கூட இல்லாம . யாரு கூட .
நீங்க தானே சொன்னீங்க. ஏதோ தப்பு பண்ணீட்டேன்னு.அது தான் சொன்னேன்.
அதுக்கு இப்போ நீ என்ன சொன்ன.
நீங்க யார் கூட வேணாலும் என்று சொல்லி முடிக்கும்.
இனியாவை அறைந்து இருந்தான் பிரகா. வாய் உனக்கு ரொம்ப கூடி போச்சு கொன்னுடுவேன் பாத்து பேசு. வாழ்க்கைல ஒரு முறை தான் கல்யாணம். நீ ஒருத்தி தான் எனக்கு பொண்டாட்டி. என் பிள்ள ப்பிரித்தம் அவ்வளவு தான்.
கன்னத்தில் கை வைத்து பிரகாவை முறைத்து பார்த்தவளை.
கோபத்துல அடிச்சுட்டேன் சாரி இனியா என்று பக்கத்தில் வந்து அணைக்க.
அவனை தள்ளி விட்டவள் போங்க என்று சொல்ல.
மீண்டும் வந்து அணைத்து கொண்டவன் புரிஞ்சுக்கோ. இனியா . என்னை விட்டு தனியா இருந்துப்பியா என்ன மிஸ் பண்ணலயா.
நான் அப்படி சொல்லல்ல எனக்கு உங்க கூட வர இஷ்டம் தான் . இப்போ வர முடியாது. மே பீ சீக்கிரம் வர ட்ரை பண்ணுறேன்.
ஓகே இனியா இங்க உனக்கு நிறைய வேலை இருக்கும். அதனால நான் ப்பிரித்தம்மை அம்மா கிட்ட விட்டுட்டு போறேன்.
இனியா அது எல்லாம் முடியாது ப்பிரித்தம் என் கூட தான் இருக்கணும்.
என்ன இனியா உனக்கு தான் ஆயிரம் வேலை இருக்குமே. எதுக்கு உனக்கு இது ஒரு வேலை அதனால நானும் ப்பிரித்தம் கிளம்புறோம்.
இனியாவுக்கு என்ன செய்வது
என்று தெரியாமல் . உனக்கு வேணும் என்று தன்னை தானே கன்னத்தில் அடித்து கொண்டாள்.
பிரகா என்ன பண்ணுற இனியா.
உங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாது என்னால . புரியலண்ணா புரிய வைக்கலாம், ஆன புரியாத மாதிரி நடிக்குறவங்க கிட்ட என்ன சொல்ல முடியும். நீங்க என்னை டார்ச்சர் பண்றீங்க . பைத்தியம் தான் எனக்கு பிடிக்க போகுது.
ஏய் நிறுத்து என்ற பிரகா. என் கூட வான்னு கூப்பிட்ட . உனக்கு பைத்தியம் பிடிக்க. நான் வைக்குறேனா. இனிமே என்கிட்ட பேசாத. என் மூஞ்சுயில் நீ முழிக்க கூடாது. குட் பாய் என்று. கனடா கிளம்பி விட்டான்……
error: Content is protected !!