மாலை வேளையிலே இலக்கியா அன்று சற்று நேரமாகவே வீட்டிற்கு வந்திருந்தாள். அர்ஜுனும் மருத்துவமனையில் இல்லாததால் வேலை அதிகம் இல்லை.
இல்லாத வேலையை இழுத்து போட்டு செய்கிறேன் என மருத்துவமனையை கட்டியே அழுதவளை விரட்டி அனுப்பிவைத்தனர் அங்கிருந்த செவிலியர்கள்.
வீட்டிற்கு வந்தும் நிறைவான மனதோடு இருக்க முடியவில்லை, யாரோவாய் தொடங்கிய உறவு இன்று யாதுமாகி நிற்கிறது. பின்விளைவுகளை சிந்திக்காமல் அவனோடு பிணைந்து வாழ்வேன் என மனது சபதமெடுக்க, இருமனங்களின் உரசலில் சபதமெங்கே நிற்பது?
பேசியே காலம் மொத்தமும் சடுதியில் கழித்துவிட்டு அடுத்த ஜென்மத்தை கூட உடனே ஆரமித்துவிடலாம் காதலர்களாய் என எண்ணியது கனவாகவே போகி, நாள் ஆமை போல் நகர்கின்றது.
Advertisement
இன்னும் அவன் வரவில்லை. எப்படி வருவான்? தன் முகம் பார்க்க பிடித்தம் இலாதததால் தானே அவளை காணச் சென்றது!
போனால் போகட்டும் போடா என்று விட முடியவில்லை. வாழவே ஆரமிக்காமல் அந்த உறவில் பிழை தான் உள்ளதென அவனை போலவே கூறி செல்ல மனம் வரவில்லை அவளுக்கு.
காதலாயிற்றே! அவனுக்கு எப்படியோ, அவளுக்கு அவன் மேல் பித்து. தன்னுடைய வாழ்க்கையையே வீணாகும் அளவிற்கு பித்து.
Advertisement
மௌனமாய் தூசியே இல்லாத சோபாவை தட்டிவிட்டு சிந்தனையை சிறகடிக்க தூண்டினாலும் கரையின்றி தத்தளிக்கும் கட்டுமரம் போல் தவித்தது பெண்ணின் மனம்.
Advertisement
‘க்ளிக்’ சத்தம் கேட்டு நகரவில்லை இலக்கியா.
பூ பூத்தது போல் அவன் வருகை மனதிற்கு பூக்க, கதவின் பக்கம் திரும்பாமல் சயமலறைக்குள் இலக்கியா சென்றுவிட்டாள்.
செல்லும் அவளையே பாத்தவன் சோபாவில் அமர்ந்தும் அவளையே பார்க்க துவங்கினான். கையில் இருந்த சிறிய ஃபைல் பாறையாய் கனத்தது அவனுக்கு.
Advertisement
இலக்கியாவின் முகத்தை பார்த்து அஞ்சுஸ்ரீயிடம் பேச முடியவில்லை. அனைத்தையும் முழுதாய் இன்றோடு முடித்து வர வேண்டும் என முடிவோடு இருந்தான்.
அதனால் காலை சென்னை பட்டினம் வந்தவன் கையேடு அவளிடம் மன்னிப்பு கேட்க நிற்க அர்ஜுனிடம் கண்ணீர் வடித்து அவனை மேலும் குற்ற உணர்ச்சிக்குளாக்கினாள்.
“எப்படி அர்ஜுன் நீ அவ கூட இருப்ப? எனக்கு கூட ஒண்ணுமில்ல, நாளைக்கே என் வீட்டுல வேற ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணிடுவாங்க, நான் போய்டுவேன். ஆனா உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத ஒருத்திய கல்யாணம் பண்ணி காலம் எல்லாம் அவகூட இருக்க போற” கண்களில் கரிசனத்தை தேக்கி வைத்து அவனிடம் வினவினாள்.
அதுவரை அமைதியாக கேட்டவன் தன்னுடைய வாழ்க்கையில் அவள் தலையீட்டை கேட்டதும் விருட்டென எழுந்து நின்று, “உனக்கு ஆசை காட்டிட்டேன்னு தான் பேச வந்தேன். என் வாழ்க்கைல வந்து எனக்கு அட்வைஸ் பண்ண இல்ல” என்றபடி கோவமாக எழுந்து சென்றவன் தன்னுடைய நண்பன் ரகு சுப்பிரமணியம் இருக்கும் இடத்தை தான் அடைந்தான்.
அந்த நகரிலே பெரிய கிரிமினல் லாயர் என்னும் பெயரை பெற்றவன் இடம் அர்ஜுன் நினைத்ததை விட கூட்டமாக தான் இருந்தது. சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவன் அதற்கு மேலும் பொறுமை இல்லாமல் நண்பனின் அலுவலக அறைக்குள் நுழைந்துவிட்டான்.
இரு வாடிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தவன் அர்ஜுனை பார்த்து தீயாய் முறைக்க, “அவசரம்டா” என்றான் அர்ஜுன்.
“பரவால்ல வெளிய நில்லு” கடினமாக ரகு பேசவும் வெளியே செல்லாமல் அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்த்துவிட்டான் அர்ஜுன். நண்பனை முறைத்தவன் தான் விட்ட வேலையை முடித்த பிறகே அர்ஜுனிடம் வந்தான்.
அங்கிருந்த இரண்டு வாடிக்கையாளர்கள் சென்றதும், “என்ன பிரச்சனை?” என்றான் பார்வையை கைகளில் இருந்த காகிதங்களிலிருந்து திருப்பாமல்.
“டிவோர்ஸ் வேணும்” என்றான் அர்ஜுன்.
ஒரு நொடி வேலையை நிறுத்து கண்களை மட்டும் உயர்த்தி நண்பனை பார்த்து மீண்டும் வேலையில் கவனம் செலுத்தினான்.
“எத்தனை மாசம் ஆகுது கல்யாணம் ஆகி?” என்றான் ரகு.
அர்ஜுன், “ஒரு வாரம்”
ரகு, “என்ட்ரி டோர் தான் எக்ஸிட்க்கும்” அதே கனல் அவன் கண்ணில்.
“சுப்ரமணியா விஷ ஊசி போட தயங்க மாட்டேன் பாத்துக்கோ” மிரட்டலை கையில் எடுத்தான்.
அதற்கெல்லாம் அசரவில்லை அந்த வழக்கறிஞன், “யார் அந்த பொண்ணு?” என்றான்.
“என்கிட்ட வேலை பாத்த நர்ஸ்” என்றான் அர்ஜுன்.
“ஓ நர்ஸா இருந்தா கூட வாழ கூடாதா?” இவன் பிரச்னையை ஒரே வரியில் கண்டுக்கொண்டு கேள்வி கேட்டான் ரகு.
“ஏன்டா நீ லாயரா இருந்தா கேள்வி மட்டும் தான் கேட்டுட்டே இருப்பியா?” நண்பன் கேட்ட கேள்வி ஊசியாய் மனதை குத்த அதை ஏற்காமல் காண்டான அர்ஜுன் எகிறினான் நண்பனிடம்.
“சிவில் கேஸ் எல்லாம் நான் எடுக்க மாட்டேன். வேற அட்ரஸ் தர்றேன் போய்க்கோ” என்றான் ரகு ஒரு கார்டை நீட்டியபடி.
“நான் எல்லாம் போக மாட்டேன், நியூஸ் வெளிய தெரிய வேணாம்னு தான் உன்கிட்ட வந்தேன்” என்றான் அர்ஜுன்.
அவனை ஒரு நொடி பார்த்தவன் ஒரு நோட்டை அவன் முன்னாள் போட்டான், “டீடெயில்ஸ் எழுது, அரை மணி நேரத்துல வாங்கி தர்றேன். ஆனா அந்த பொண்ண பத்தி விசாரிக்காம எந்த லாயரையும் ஆஜர் ஆக விடமாட்டேன்” என்றான் உடன்படிக்கை ஒன்றை வைத்து.
“விசாரிச்சுக்கோ, பண பேய், பொய் மூட்டைனு நியூஸ் வரும். நீயே கூட்டிட்டு போய் வாங்கி குடுப்ப” தகவல் எல்லாம் எழுதிக்கொண்டே கூறினான் அர்ஜுன்.
நண்பன் முகத்தில் இருந்த வெறுப்பை படித்த ரகு, மனைவி என எழுதி அதற்கு நேர் இலக்கியா என்னும் பெயரை எழுத பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
“நானே நினைச்சாலும் ஒரு வருஷம் டிவோர்ஸ் கிடைக்காது ஹியரிங் வேணா வரும், சரி கெளம்புறியா?” என்றான் அமைதியை வேண்டி.
“அரை மணி நேரம் தான் டைம்” என எச்சரிக்கையோடு வெளியில் அமர்ந்திருக்க இருபத்தி மூன்று நிமிடத்தில் அர்ஜுன் கேட்ட விவாகரத்து பத்திரம் கைக்கு வர அதை கைகளில் ஏந்தியவன் உள்ளம் நிம்மதியில்லாமல் தவித்தது.
‘இதற்காக தானே காலில் சக்கரம் கட்டி நின்றாய் இப்பொழுதென்ன? நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியில் அவள் முகத்தில் முன் நீட்டு’ என கத்திய ஒலியை கேட்டு வீட்டிற்கு விரைந்தவன் இங்கு அவள் முகம் பார்த்தவாறே அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தான்.
ஒரு ட்ரேயில் இரண்டு கப்கள் எடுத்து வந்து அவன் முன் இருந்த டீபாயில் வைத்தாள்.
“இஞ்சி இல்ல, மசாலா டீ, நார்மல் டீ வச்சிருக்கேன்” எதை வேண்டுமானாலும் குடி என கூறியது அந்த வாக்கியம்.
அவள் வைத்த அதே டீ பாயில் மேல் அர்ஜுன் மறைத்து வைத்திருந்த பேப்பர் அது எதற்கு என காட்டவில்லை என்றாலும், அவளுக்கு தெரியுமே. அந்த நேரம் அவள் மனம் கேட்ட கேள்விகளை வைத்து ஒரு புத்தகமே வெளியிட்டுவிடலாம்.
“ஹாஸ்பிடல்ல இன்னைக்கு எதுவும் ஆபரேஷன் நடந்ததா?” பேச்சை எடுத்தான் அர்ஜுன்.
“ஹாஸ்பிடல்ல மட்டும் தான் நான் உங்களுக்கு பி.எ மாதிரி. இங்க இல்லை” தைரியமாக எதிர்வாதம் பேசும் இவள் தைரியம் எங்கிருந்து வந்தது என அர்ஜுன் யோசித்திருக்க அதற்குள் அடுத்த கேள்வி வைத்தாள் இலக்கியா.
“காலைல வீட்டுக்கு கூட வராம அஞ்சு டாக்டர பாக்க போனீங்களா?” நேரடியாக தன்னை பார்த்து அவள் கேட்ட கேள்வியை கிரகிக்கவே அர்ஜுனுக்கு சில நொடிகள் தேவைப்பட,
அவனின் உலகத்தில் அவளில்லாமல் போகலாம், ஆனால் அவள் விசாலமே அவன் தானே. ஒருதலை காதல் எந்த அளவிற்கு சுகமோ அதே அளவிற்கு வேதனையானதும் கூட. எளிமையாக சொல்லிவிட்டான், அதன் தாக்கம் அவளிடம் அதிகமிருந்தது.
“போங்க, அவங்க தான் வேணும்னா நான் இந்த வீட்டுல இருக்கப்போ ஏன் அவங்கள பாக்க போகணும்? நான் வேணாம்னு முடிவு பண்ணி தானே அவங்கள பாக்க மனசு ஆசைப்படுத்து. அப்போ கைல வச்சிருக்க டிவோர்ஸ் குடுத்துட்டு தாராளமா அவங்க கூடயே போய்டுங்க”
மங்காத வான்நிலாவாய் காதலை மீட்டு அதில் ஓய்வெடுக்க எண்ணியிருக்க இங்கு தானே சூரியனை உதிக்க செய்து நிலவினை விரட்ட முனைகிறாள்.
அந்தி தென்றலில் பூத்த மந்தார பூவை போல் காட்சி தருபவளின் வதனத்திலிருந்து விழுந்தெழுந்தவன் இவள் என் மேல் ஏதேனும் கேமரா வைத்துளாளா என்ற அளவிற்கு யோசித்தான்.
அதுவும் விவாகரத்து பற்றி அவளுக்கு எப்படி? பொதுவாகவே எவருடைய வார்த்தையையும் கேட்டு நடப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. அதில் தனக்கு காலையில் அஞ்சு கொடுத்த அறிவுரை எல்லாம் கேட்டு இலக்கியா மேல் தான் கோவம்.
தன்னிடம் பேசவே தயங்கியவள் இன்று தனக்கு அறிவுரை தந்து, ஆலோசனையும் கூறும் பொழுது… ஏற்கமுடியவில்லை அவனால்.
இப்பொழுது மனைவியும் அவனுக்கு ஆணையிட, பதறாமல் தேநீரை குடித்து அடுத்த கப்பை எடுத்தான். இரண்டிலும் ருசி அபாரமாக இருந்தது. அவளின் கை வண்ணமாயிற்றே ருசிக்கா பஞ்சம்!
பதில் கேளாமல் அதுவே முடிவென யோசித்தவன் மறக்காமல் டீ பாயின் மேல் இருந்த காதிதத்தை எடுத்து அறைக்குள் செல்ல, சில நிமிடங்களாக இருந்த பாரம் இப்பொழுது இல்லை.
சந்திக்கும் தருணமெல்லாம் ஒரு காரணம் வைத்து சீண்டும் அவளின் காதலின் வாஞ்சைக்கு வசீகரம் அதிகம் போல். எது நடக்கவே கூடாதென உள்ளம் விருப்பப்பட்டதோ அதுவே நடந்தது.
அவன் அவளை அவன் வாழ்விலிருந்து நீக்க வில்லை. தாற்காலிகமாகவே ஆனாலும் அதில் ஒரு நிம்மதி அவளுக்கு.